19/09/2018
பாஜக எம்.பியின் காலை கழுவி தண்ணீரை குடித்த தொண்டர்.. குவியும் கண்டனங்கள்...
ஜார்க்கண்ட் மாநிலம் கோட்டா தொகுதி பாஜக எம்.பி.யாக இருப்பவர் நிஷிகாந்த் துபே. அவர் தொகுதி நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது அங்கு வந்த கட்சி தொண்டர் ஒருவர் நிஷிகாந்த் துபேயின் காலை தண்ணீரால் கழுவி, துடைத்தார். பிறகு அந்த நீரை தீர்த்தமாக குடித்தார்.
இதற்கு பல்வேறு தரப்பிலும் கண்டனங்கள் எழுந்து வருகின்றன. மேலும் காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி உள்ளிட்டவை கண்டனம் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் குறித்து விளக்கம் அளித்த நிஷிகாந்த், ஜார்கண்டில் விருந்தினர்களை கவுரவிப்பதற்காக அவர்கள் கால்களை கழுவது சாதாரணமாக நடப்பது.
மகாபாரதத்தில் கிருஷ்ணரே சுதாமாவின் காலை கழுவி விட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். தாம் செய்த தவறை மறைப்பதற்காக இதுபோன்று நியாயப்படுத்தி எம்.பி. நிஷிகாந்த் துபே பேசியுள்ளார்...
கன்னட ஈ.வே.ரா எனும் பெரியாரை மட்டும் படித்தால் போதாது...
பெரியாரின் முன்னோர்களான வந்தேறி ஆதிக்க நாயக்கர் மன்னர்களின் வரலாற்றையும் சேர்த்துப் படித்தால் தான் சாதி, சனாதன இந்து மதம் யாரால் கொண்டு வரப்பட்டது என்றும்..
தமிழ்ச் சமூகத்தில் சாதி எப்படி திணிக்கப்பட்டது என்பது தெரியும்.
இதையெல்லாம் பெரியாரு சொல்லையே ஏன்?
இஸ்லாமிய மன்னர்களிடம் இருந்து காப்பதாகச் சொல்லி, அதாவது அன்று அந்த சிறுபான்மை மதத்தவர்களிடம் இருந்து பெரும்பானமை இந்து மதத்தைக் காப்பதாகத்தான் இந்த வந்தேறிகள் கதையளந்து தமிழனை ஏய்த்து அதிகாரம் பண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
பெரியாரின் முன்னோர்களின் அட்டூளியத்தை மட்டும் அல்வா மாதிரி மறைப்பது ஏன்.?
கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கரின் புரட்சிகள்...
72 வயது பெரியார் 26 வயது மணியம்மை திருமணம்...
பெண் விடுதலைக்காக போராடிய ஈவேராவின் புரட்சி....
பெரியாருக்குப் பின்னர் அவருடைய சொத்துகளின் மரபு வழி உரிமையாளராக அவர்தம் அண்ணன் மகனான ஈ. வெ. கி. சம்பத்து திகழ்வாரெனக் கருதப்பட்டது.
ஆனால் அவர், பெரியாரின் விருப்பத்திற்கு மாறாகச் சுலோசனாவை மணந்ததார்.
ஈரோடு வீட்டை விட்டு வெளியேறிச் சென்னையில் குடியேறினார்.
பெரியாரோடு கருத்து வேறுபாடு கொண்டு விலகியிருந்த கா. ந. அண்ணாதுரையோடு நெருக்கமாக இருந்தார்.
இதனால் அவர்மீது நம்பிக்கை இழந்த பெரியார் தன்னுடைய சொந்த சொத்துகளையும் தன்னால் பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட நன்கொடைகளையும் தன் வாரிசாக இருந்து கவனித்துக் கொள்ள சட்டப்படியான ஏற்பாடுகளைச் செய்ய விரும்பினார்.
எனவே 1949ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 9ஆம் நாள் பெரியார் ஈ. வெ. இராமசாமி நாயக்கர் தான் தத்தெடுத்து வளர்த்த மகள் மணியம்மையை திருமணம் செய்துக் கொண்டார்...
மனம்...
இந்த உலகத்தில் உடல் தோற்று விக்கப்படுகிறது..
பிறகு நீங்கள் உங்கள் மனதைத் தோற்று வித்துக் கொள்கின்றீர்கள்..
ஆனால்..
உங்கள் உயிர்த்தன்மை என்பது தோற்று ஆவிக்கப் படாதது..
அது எங்கும் நிறைந்தது
எதிலும் நிறைந்தது
எப்பொழுதும்
நிறைந்துள்ளது
அதற்கு தோற்றம் என்று
எதுவும் இல்லை
ஆகவே
அதற்கு மாத்திரம் இறப்பு
என்பது இல்லை
இறப்பு என்பது உடலுக்கும்
மனதுக்கும்தான்
உயிர்த்தன்மைக்கு இறப்பு
என்பது இல்லை
ஆனால்
ஆன்மாவுக்கு அழிவு உண்டு
ஆன்மா என்றால்
மனதோடு
அதாவது ஆசைகளோடு
கலந்த உயிர்த் தன்மை
இந்த கலப்பட உயிர்த் தன்மை
பூமியில் ஆசைகள் எங்கே இருக்கிறதோ
அங்கே பிறந்து
தனது ஆசைகளை
நிறைவேற்றிக் கொள்ளும்
அப்பொழுதுதான்
கலப்பட உயிர்த்தன்மை
அதாவது ஆசைகள் நிறைந்த ஆன்மா
சுத்த உயிர்த்தன்மையாகி சுத்த
ஆன்மாவாகி பிறவியை அறுக்கும்
அது மீண்டும் பிறக்க வேண்டிய
தேவை இல்லாமல்
இந்த பிரபஞ்ச உயிர்த் தன்மையோடு கலந்து விடும்
நீங்கள் இந்த உலகத்தில் அடைந்த வெளிச் செல்வங்களான..
பணம், பதவி, புகழ், அடையாளம்
எல்லாவற்றையும் இறப்பு எடுத்து விடும்..
ஆனால்..
உட்செல்வங்களான அன்பு,
கருணை, அமைதி, தியான உணர்வு,
இவை அனைத்தும் உங்களோடு கூட வரும்..
இந்த நிலையில் தான் நீங்கள் இறப்பைக் கடந்து விடுகிறீர்கள்...
பண்டைய சீனாவின் மஞ்சள் பேரரசர் "ஹுவாங் டி"...
எழுத்து மற்றும் மருந்தை அறிமுகப்படுத்துதல் போன்ற பல சம்பவங்களைக் கொண்ட புகழ்பெற்ற ஹீரோ ஆவார்.
பண்டைய சீன நூல்கள் அவர் தொலைதூர நட்சத்திரமான லியோ தொகுதி நட்சத்திர அமைப்பிலிருந்து வந்தவர் என தெரிவிக்கின்றது..
மஞ்சள் பேரரசர் (ஹுவாங் டி)
கி.மு.3000ல் வசித்து வந்தவர், மேலும் அவரது ஆட்சி பாரம்பரியமாக 100 ஆண்டுகளுக்கும் மேலாக உயர்த்தப்பட்டதாக கூறப்படுகிறது. மரங்கள், வில் மற்றும் அம்பு, வண்டிகள் மற்றும் படகுகள், சீன மருத்துவம் மற்றும் எழுத்து ஆகியவற்றை அறிமுகப்படுத்துதல் உட்பட பல கண்டுபிடிப்புகள் அவரது அறிவாற்றலுக்கு காரணமாக அமைந்தன.
ஞானம் மற்றும் புரிந்துணர்வின் ஒரு சுருக்கமான, ஹுவாங் டி, எஸொட்டரிக் கலைகளின் புரவலர் ஆவார், மேலும் அவர் ஒரு அண்ட பேரரசர் என்று கருதப்படுகிறார். அவருடைய ஆட்சி ஒரு பொற்காலமாக இருந்தது, அவர் மேம்பட்ட வானியல் அறிவைக் கொண்டிருந்தார், மேலும் ஒரு டிராகனின் உதவியை பெற்றுக் கொண்டிருந்தார் எனக் கூறப்படுகிறது.
சில நேரங்களில், இந்த டிராகன் உலோக அளவீடுகளைக் கொண்டதாக விவரிக்கப்படுகிறது மற்றும் மஞ்சள் சக்கரவர்த்தி, குவானாவுன் எனப்படும் ஒரு நட்சத்திரத்தில் ஒரு ஒளியை சுட்டிக்காட்டி அதை அழைப்பாராம். இந்த ஒளி நட்சத்திரம் லியோ விண்மீன் கூட்டத்தில், 79 ஒளி ஆண்டுகள் நிறைந்த ஆல்ஃபா லியோனிஸ் என்று நட்சத்திரத்தை அடையாளம் காட்டுகிறது.
மஞ்சள் சக்கரவர்த்திக்குச் சொந்தமான இன்னுமொரு புதிரான பொருள் அவருடைய மந்திர தேரர், சாங்குவானு என்று அழைக்கப்பட்டது. அவர் தனது சாம்ராஜ்யத்தின் அனைத்து மூலைகளிலும் விரைவாக பயணிக்கப் பயன்படுத்தினார்.
பல நூற்றுக்கணக்கான ஆண்டுகள் முடிவடைந்த பிறகு, மஞ்சள் பேரரசர் மெட்டல் 'டிராகன்' என்று பறக்கும் தட்டில் அவரது சொந்த நட்சத்திர அமைப்புக்கு திரும்பி சென்றார் என கூறப்படுகிறது.
சீன நாகரிகத்தினை துவக்கி இருப்பது வேற்றுகிரகவாசியான ஹுவாங் டி என்ற மஞ்சள் பேரரசராகதான் இருந்திருக்க வேண்டும், வரலாற்றில் பண்டைய சீன மக்கள் ஒருபோதும் கேள்விப்பட்டிராத அயல்கிரக மேம்பட்ட தொழில்நுட்பங்களை வெற்றிகரமாக அறிமுகப்படுத்தினார், மேலும் மேம்பட்ட,விண்வெளி-நாகரீகங்களின் தொழில்நுட்பங்களையும் சொந்தமாகக் கொண்டு செயல்பட்டார்.
ஜுவானுவான் நட்சத்திரத்திலிருந்து உலோக டிராகன் என்னும் பறக்கும்தட்டிலிருந்து சீன வனத்தில் இருந்து புராண மனிதர்களிடத்தில் பிரதிநிதித்துவத்திற்கான புத்திசாலித்தனமான வேற்றுகிரக பொறுப்பாளியாக ஹுவாங் டி இருந்திருக்க வேண்டும்..
ஹுவாங் டி வந்த Xuanyuan நட்சத்திரம் பண்டைய சீன மக்களால் உயர்வாக கருதப்படுவதாக கூறப்படுகிறது. மனிதகுலத்தின் பல நாகரிக வீரர்களின் தோற்றம், கில்கமேஷசில் இருந்து குவெட்ஸால்கோவால்ட் வரைக்கும், வைரோகாச்சாவில் இருந்து ஒசைரிஸ் வரைக்கும் இந்த நட்சத்திர தொகுதியின் பங்களிப்பு முக்கியமாக கருதப்படுகிறது...
Subscribe to:
Posts (Atom)









