11/10/2018

பூசணிக்காயின் மருத்துவ குணங்கள்...


பூசணிக்காய்க்கு வெண்பூசணி, கல்யாணப்பூசணி என்ற பெயரும் உள்ளது..

காய்கறி வகைகளில் ஒன்றான, இதைச் சமைத்துச் சாப்பிட்டால் நரம்பைப் பற்றிய நோய்கள், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுப்புண் மேகவெட்டை, பிரமேக நோய் ஆகியவை உள்ளவர்களுக்கு நோயின் தீவிரம் குறையும். உடல் சூட்டைத் தணிக்கும். சிறுநீர் வியாதிகளை நீங்கும்.

சதா காலமும் உடல் வலி இருப்பவர்கள் பூசணிக்காயை அடிக்கடி சமைத்துச் சாப்பிட்டால் உடல்வலி தீரும்.

புத்தி சுவாதீனம் இல்லாதவர்களுக்கு சிகிச்சையளிக்கும்போது தினசரி பூசணிக்காய் சேர்த்து சமைத்த உணவைக் கொடுக்க புத்தி சுவாதீனம் படிப்படியாக மாறி நல்ல நிலைமைக்குத் திரும்பும்.

மருத்துவத்தில் பூசணிக்காயின் கதுப்பு, நீர்விதை ஆகியவை பயன்படுத்தப் படுகின்றன. நுரையீரல் நோய், இருமல், ஜலதோஷம், நெஞ்சுச்சளி, நீரிழிவு, தீராத தாகம், வாந்தி, தலைசுற்றல் நீக்கப் பயன்படுகிறது.

ரத்த சுத்திக்கும், ரத்தக்கசிவு நீங்கவும், வலிப்பு நோய் சீராகவும், குடலில் உள்ள நாடாப்புழுக்கள் வெளியேறவும் சிறுநீரக நோய்கள், ரத்தம் கலந்த சிறுநீர் வெளியேறுதல், பெண்களின் வெள்ளைப் போக்கு நீக்கவும் வெண்பூசணி பயன்படுத்தப்படுகிறது.

வெண்பூசணிக்காயின் சாறு 30 மில்லியளவு எடுத்து ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்துச் சாப்பிட்டால் இதய பலவீனம் நீங்கும். ரத்தசுத்தியாகும்.

பூசணிக்காய் சாற்றைத் தயாரித்து தினசரி 30 மில்லியளவு சாப்பிட்டு வந்தால் தொடர்ந்த இருமல், நெஞ்சுச்சளி குணமாகும். நீரிழிவு நோய் கட்டுப்படும். அதிகத் தாகத்தைக் குறைக்கும். உடம்பின் எந்தப் பாகத்திலாவது ரத்தக்கசிவு ஏற்பட்டால் ரத்தக்கசிவை நிறுத்திவிடும்.

பூசணிக்காய் சாறு 30 மில்லியளவு சர்க்கரை சேர்த்து காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வலிப்பு நோயின் தீவிரம் குறைந்துவிடும்.

பூசணிக்காய் சாறு 120 மில்லியளவு தயாரித்து ஒரு தேக்கரண்டி தேனும், தேவையான அளவு சர்க்கரையும் கலந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகத்தில் ஏற்படும் நோய்கள் நிவர்த்தியாகும். சிறுநீரில் ஏற்படும் ரத்தம், சீழ் கலந்த சிறுநீர் வெளியேறுதல் நின்றுவிடும்.

பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டும் (தோல், பஞ்சுப் பகுதி நீக்கி) சிறுசிறு துண்டுகளாக நறுக்கி வேகவைக்க வேண்டும். வெந்தபின் இதை எடுத்து சாற்றைப் பிழிந்து நீரைச் சேகரித்து 60 மில்லியளவு தயாரித்து இதில் சிறிது கற்கண்டு சேர்த்து தினம் 2_3 வேளை சாப்பிட்டு வந்தால் கல்லீரல் பாதிப்பால் ஏற்பட்டு வரும் மஞ்சள் காமாலை நோய் குணமாகும். தடையில்லாமல் சிறுநீர் வெளியேறும்.

பூசணிக்காயின் விதைகளைச் சேகரித்து நன்கு காய வைத்துப் பொடியாகச் செய்து வைத்துக்கொண்டு ஒரு தேக்கரண்டியளவு பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் தேக புஷ்டி உண்டாகும். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தாது விருத்தி மிகுதியாக உண்டாகும். உடல் சூட்டைத் தணிக்கும். பித்த நோயைக் கண்டிக்கும். பித்த வாந்தியை நிறுத்தும்.

வெண்பூசணி லேகியம்...

நன்கு முற்றிய பூசணிக்காயின் கதுப்புப் பகுதியை மட்டிலும் தேவையான அளவு எடுத்துக்கொண்டு இதில் 3.500 கிராம் எடுத்து சிறுசிறு துண்டுகளாக வெட்டி சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக வேகவைத்து எடுத்து மிக்சியில் நன்றாக மசியும்படி அரைத்துக்கொண்டு வடிகட்டி, நீரையும் கதுப்பையும் தனித்தனியாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். வடித்து எடுக்கப்பட்ட பூசணிச் சக்கையை 500 கிராம் நெய்யில் மொற மொறப்பாகும்படி வறுத்து எடுத்து, நெய்வேறு, பொறிக்கப்பட்ட சக்கை வேறாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பூசணிக்காய் பிழிந்த சாற்றில் கல்கண்டு சேர்த்து பாகுபதம் வரும்வரை காய்ச்சி, இந்த பாகில் வறுத்த பூசணிக்காய்த் தூளைக் கொட்டிக் கிளற வேண்டும்.

திப்பிலி, சுக்கு, சீரகம் இவற்றின் பொடிகள் தலா 70 கிராம், லவங்கப்பட்டை, ஏலரிசி, பச்சிலை, தனியா, மிளகு இவற்றின் பொடிகள் தலா 20 கிராம். இவைகளை மேற்கண்ட மருந்துடன் கலந்து, வடித்து வைத்துள்ள நெய்யையும் சேர்த்து, நன்றாக எல்லா மருந்துகளும் ஒன்று சேர கிளறி வைத்துக்கொண்டு வேளைக்கு 10 கிராம் அளவில் தினசரி 2_4 வேளை சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா குணமாகும். சுவாச உறுப்புக்கள் பலப்படும். இருதய பலவீனம் நீங்கி பலப்படும். நல்ல பசியுண்டாகும். மலச்சிக்கல் இருக்காது. பொதுவாக உடல் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாக்கும். ஈசனோபைல் நிவர்த்தியாகும். டான்சில்ஸ் தொல்லைக்குச் சிறந்தது.

பூசணிக்காயைச் சாறு எடுத்து 30 மில்லி முதல் 60 மில்லி வரை வைத்துக் கொண்டு இதில் தேன் ஒரு தேக்கரண்டி சேர்த்து தினசரி கொடுத்து வந்தால், ஒல்லியான சிறுவர்களுக்கு சதைப்பிடிப்பு ஏற்படும். அழகான தோற்றத்திற்கும், எடை அதிகரிப்பதற்கும் நோய் எதிர்ப்புச் சக்தி கூடி ஆரோக்கியமான உடல் தேறவும் நல்ல பலனைக் கொடுக்கும்.

சிறுநீரகச் செயல்பாடு குறைந்தவர்களுக்கு பூசணிக்காயில் 25 கிராம் அளவிற்கு வெட்டி எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து மிக்சியில் நன்றாக அரைத்து வடிகட்டி தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், சிறுநீரகச் செயல்பாடு சீராக அமையும்.

சிறுநீரகம் சம்பந்தமான நோய் உள்ளவர்கள் பூசணிக்காய்ச் சாறு 120 மில்லியில் ஒரு தேக்கரண்டி சர்க்கரையும், இரண்டு தேக்கரண்டி தேனும் கலந்து சாப்பிட்டு வந்தால், நோய்கள் முழுமையாக நிவர்த்தியாகும்.

பூசணிக்காயில் மருத்துவக் குணங்கள் அதிகம் இருப்பதால் சித்தா மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல மருந்துகள் தயாரிக்கப்பட்டு விற்பனைக்குக் கிடைக்கிறது. தனிப்பட்டவர்கள் மருந்து தயாரிக்க முடியாத நிலையில் தயாரிக்கப்பட்ட மருந்துகளைப் பயன்படுத்திப் பயன்பெறலாம்.

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டு வந்தால், ரத்தபித்தம், சயம், இளைப்பு, பலவீனம், இதய நோய், இருமல் உள்ளவர்கள் நல்ல நோய் நிவாரணம் கிடைப்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

வெண்பூசணி லேகியம்...

இந்த லேகியத்தை வாங்கிச் சாப்பிட்டால் காமாலை நோய், இரத்த சோகை,
எலும்புருக்கி நோய், அஸ்தி வெட்டை, பிரமேகத்தால் ஏற்பட்ட வெள்ளை நோய் தீரும். உடல் வலிமை பெறும். தாது விருத்தி ஏற்பட்டு காம இச்சை மிகுதியாகும். வெண்பூசணி நெய் அல்லது கூழ்பாண்ட கிருதம் என்ற இந்தப் பூசணி நெய்யைச் சாப்பிட்டு வந்தால் சூலை நோய்கள் நிவர்த்தியாகும். தோல் நோய்கள், பெண்குறிப்புற்று முதலியன நீங்கும். உடல் சூடு, சூட்டுடன் எரிச்சல், நீர்க்கட்டு, நீர்க்குத்து முதலியன ஆண்களுக்கும், பெண்களுக்கும் நிவர்த்தியாகும். அஸ்திவெட்டை, கிராணிக்கழிச்சல், எலும்புருக்கி (T.B.) முதலிய கொடிய நோய்கள் நிவர்த்தியாகும்...

பீட்சா உண்மைகள்...


சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்...


1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.

2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.

3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.

4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.

5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.

6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.

7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.

8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.

9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.

10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறை
க்கும்.

11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.

12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்...

பாஜக அடிமை அதிமுக எனும் வக்கற்ற அரசு...


கண்ணடிக்கலாம் வாங்க...


தலைப்பை படித்தவுடன் உங்கள் அனைவருக்கும் சின்னதாக ""ஷாக்'' அடித்தது போன்ற உணர்வு ஏற்படலாம்.

இது ஏதோ இளைஞர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்காக இந்தக் கட்டுரையில் எதுவோ சொல்லப் போகிறோம் என யாரும் எண்ணிக் கொள்ள வேண்டாம்.

இது எல்லா தரப்பினருக்கும், எல்லா வயதினருக்கும் உரிய ஒரு பொதுவானது.

அந்த விசயத்தைப் பற்றிதான் பார்க்கப் போகிறோம்.

கண்ணடிப்பது என்பது மிகச்சிறந்த ஒரு தியானம்.

கண்ணடிப்பதால் நமது உடலுக்கு, மனதிற்கு, புத்திக்கு, கண்களுக்கு என அனைத்திற்கும் பலவிதத்தில் நன்மைகள் உண்டாகிறது.

ஒரு நிமிடம் தொடர்ந்து கண்ணடிப்பது என்பது ஒரு மணிநேரம் தொடர்ந்து தூங்குவதற்கு சமமாகிறது.

கண்ணடிப்பது என்பது கம்ப்யூட்டரில் ரீஃப்ரஷ் என்ற ஒன்றைப் பயன்படுத்துவது போலாகும்.

அதாவது (Refresh) என்ற பட்டனை அழுத்தி கம்ப்யூட்டரை ரீஃப்ரஷ் செய்து கொள்வது போல நமக்கு இந்த கண்ணடித்தல் பயன்படுகிறது.

தினசரி யாரெல்லாம் இந்தக் கண்ணடித்தலை அதிக நேரம் செய்கிறார்களோ அவர்கள் மனதிற்குப் பிடித்தது போல வாழ்பவர்கள் என்று கொள்ளலாம்.

தினசரி யாரெல்லாம் குறைவான நேரம் கண்களை இமைத்து வாழ்கிறார்களோ அவர்களெல்லாம் புத்திக்குப் பிடித்தது மாதிரி வாழ்பவர்கள் எனக் கொள்ளலாம்.

பெண்களின் கண்களை வேடிக்கைப் பார்த்திருந்தால் உங்களுக்கு ஒரு விசயம் புரிந்திருக்கும். அதிகமுறைகள் ஒரு நாளில் கண்சிமிட்டுபவர்களாக அவர்கள் இருப்பதைப் பார்க்கமுடியும்.

ஆண்கள் எப்பொழுதுமே குறைவாகத்தான் கண்களை சிமிட்டுவார்கள். சில நுட்பமான வேலைகளில் ஈடுபடும் பொழுது இயல்பாகவே கண்களை சிமிட்டுவது குறைந்து போய்விடும் அது என்னென்ன வேலைகள் தெரியுமா ?

கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள். சாப்ஃட்வேர் இன்ஜினியர்கள். பெரிய நிறுவனங்களின் முதலாளிகள் புத்திக்கு அதிக வேலை கொடுக்கக்கூடிய துறையில் வேலை செய்பவர்கள் தொழில் நுட்பக்கலைஞர்கள், கம்ப்யூட்டர் முன் அமர்ந்து நீண்டநேரம் வேலை செய்பவர்கள் போன்றோரை உதாரணமாக சொல்லலாம்.

சுருக்கமாக புத்திக்கு அதிகம் வேலைதரக் கூடியவற்றைச் செய்பவர்களுக்கு கண் சிமிட்டுதல் என்பது குறைவாக இருக்கும்.

இவ்வாறு கண்சிமிட்டுதல் குறையும் பொழுது டென்சன், கோபம், பயம், தூக்கமின்மை குழப்பம் ஆகியவை வருவதற்கு வாய்ப்புள்ளது.

எனவே நாம் இப்பொழுது கண்சிமிட்டும் பயிற்சியை அறிமுகப்படுத்த போகிறோம்.

ஒரு நிமிடம் தொடர்ந்து கண்சிமிட்டுவது ஒரு மணிநேரம் தூங்குவதற்கு சமமாக இருக்கிறது.

தூக்கம் தான் நமது உடல், மனம், புத்தி ஆகிய மூன்றிற்கும் புத்துணர்வு ஊட்டக் கூடியதாக இருக்கிறது. அதனால் நமது கண்களைப் பாதுகாப்பதற்கு தூங்காமல் தூங்குவதற்கு ஒரு பயிற்சியைச் செய்ய இருக்கிறோம்.

ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டும் பயிற்சி தான் இது.

ஒரு நிமிடம் தொடர்ந்து கண்களைச் சிமிட்ட வேண்டும். கண்களைச் சிமிட்டும் பொழுது வேகமாக சிமிட்டக் கூடாது. அதே சமயத்தில் மிக மெதுவாகவும் சிமிட்டக் கூடாது.

ஒரே சீரான அளவில் கண்களைச் சிமிட்ட வேண்டும். குறைந்தது ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டும் பயிற்சியைச் செய்யலாம். அதிகபட்சமாக மூன்று முதல் ஐந்து நிமிடங்கள் வரை செய்யலாம்.

ஆனால் ஒரு நிமிடம் கண்களைச் சிமிட்டினால் போதுமானது.

கண்களைச் சிமிட்டும் பொழுது முழுக் கவனத்தையும் கண்களின் மீது வைக்க வேண்டும். கண்களுக்கு முன்னால் தெரியும் காட்சி மறைந்து மறைந்து தெரிவதை பார்க்க வேண்டும்.

ஒரு கண் சிமிட்டலுக்கும், அடுத்த கண்சிமிட்டலுக்கும் இடையே போதுமான கால அவகாசம் இருக்க வேண்டும். அவசர அவசரமாக செய்வதால் எந்த பலனும் கிடைக்காது.

இவ்வாறு ஒருநாளில் ஒரு முறை முதல் ஐந்து அல்லது பத்து முறை வரை கண்களை சிமிட்டலாம்.

இதனால் நமக்குக் கிடைக்கும் பலன்கள் என்ன?

தூக்கமின்மை என்ற வியாதி குணமாகிறது. தூங்கும் நேரம் மிகவும் குறைவாக இருக்கிறது என எண்ணுபவர்களுக்கு இந்தப்பயிற்சி உதவி செய்கிறது.

தூக்க மாத்திரை பயன்படுத்தி தூங்குவோர் இனிமேல் இந்த கண்சிமிட்டலைச் செய்து வருவதால் ஒவ்வொரு மாதமும் தூக்க மாத்திரைகளின் அளவைக் குறைத்துக் கொண்டே வந்து பின்னர் ஆறுமாதங்களில் முற்றிலும் நிறுத்திவிடலாம்.

டென்சன், பயம், கோபம், கவலை போன்றவைகள் குறைகிறது. கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள், சாப்ஃட்வேர் இன்ஜினியர்கள் மூளைக்கு அதிகமாக வேலை கொடுப்பவர்கள் என அனைவரும் இதன் மூலம் தங்கள் வேலைகளை சிறப்பாக இப்பயிற்சி மூலம் செய்யமுடியும்.

இதனால் கண்களுக்கு கீழள்ள கருவளையங்கள் மறைகிறது. நாம் மனதிற்கு பிடித்தது போல வாழ்வதற்கு ஆரம்பித்து விடுவோம்.

எனவே கண்சிமிட்டுதல் என்பது ஒரு நல்லபயிற்சி என்பதைப் புரிந்து கொண்டு ஒருநாளில் இரண்டு மூன்று முறைகளாவது ஒரு நிமிட அளவிற்கு கண்களைச் சிமிட்டுவதை இனிமேல் வழக்கமாகச் செய்வோம்.

நாம் ஆரோக்கியமாக நிம்மதியாக வாழ்வோம்.

குறிப்பு : கண்களைச் சிமிட்டும் பொழுது தயவுசெய்து மற்றவர்களைப் பார்த்து சிமிட்டிவிடாதீர்கள். இதனால் வரும் பின்விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல.

எனவே யாரும் இல்லாத இடத்தைத் தேர்ந்தெடுத்து கண்களைச் சிமிட்டுங்கள்.

கண்களைச் சிமிட்டுவோம்...
ஆரோக்கியமாக வாழ்வோம்...
கண்ணடிக்கலாம் வாங்க...
ஆரோக்கியமாக வாழலாம் வாங்க...
வாழ்க வையகம்...

தமிழின விரோதி பாஜக பொன். ராதா வின் அலறல்...


வெண் குஷ்டம் என்ற வெண்புள்ளி நோய்க்கு வெற்றிகரமான நிருபிக்கப் பட்ட வீட்டு வைத்தியம்...


உள் மருந்தாக...

காலையில் வெறும் வயிற்றில் ஒரு கைப்பிடி கறிவேப்பிலை கொழுந்து,
சம அளவு கீழாநெல்லி கொழுந்துடன்
சேர்த்து மெதுவாக மென்று விழுங்க வேண்டும்..

நீர் அதிகமாக அருந்த வேண்டும்...

உணவை குறைத்து பழங்கள் அதிக அளவு எடுக்கவும்...

வெளி மருந்து (மேற் பூச்சு மருந்து)...

௧) வேப்பம் கொழுந்து
௨)கஸ்துரி மஞ்சள்
௩) நாட்டுப் பசு மோர் (வீட்டில் தயாரித்தது)

வேப்பம் கொழுந்து மற்றும் கஸ்தூரி மஞ்சள் சம அளவு எடுத்து கொண்டு
தேவையான அளவு வீட்டில் தயார் செய்த நாட்டுப் பசு மோர் மோர் விட்டு
அம்மி கல்லில் நன்றாக மை போல அரைத்து காலை பொழுது (6 முதல் 8 க்குள்) பாதிப்பு உள்ள இடங்களிலும், விருப்பம் இருந்தால் மற்ற இடங்களிலும் தடவி இளம் சூரிய ஒளியில் இருக்க வேண்டும்.

இது போல 90 நாட்கள் செய்தால்
வெண்புள்ளிகள் மறைந்து
இயல்பு நிலைக்கு உடலின் நிறம் வந்துவிடும்.

பாதிப்புகள் அதிகமாக இருந்தால்
சற்று கால தாமதம் ஏற்படும் ஆனால் நிச்சயமாக குணமாகிவிடும்.

உள் பிரயோகம் மற்றும் வெளிபிரயோகம் இரண்டையும் சேர்த்தும் செய்யலாம்..

தக்காளி, புளி, வெங்காயம், வாழைப்பழம், ஆப்பிள் பிரெட், கார்ன் புட்ஸ், வைட்டமின் “C” உள்ள பொருள்கள்,

கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள உணவு,

அசைவம், வெள்ளை சர்க்கரை , ஊறுகாய், மைதா மற்றும் மைதாவில் செய்த உணவு பொருள்களை சேர்க்க கூடாது.

வெள்ளை சர்க்கரை கண்டிப்பாக பயன் படுத்தக் கூடாது..

எந்தவித side-effect வும் ஏற்ப்படுத்தாது...

பாஜக மோடியின் டிஜிட்டல் இந்தியா...


கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த 15 படகுகளில் சென்ற 514 மீனவர்களை இதுவரை தொடர்பு கொள்ள முடியவில்லை. அவர்கள் இருக்கும் இடங்கள் கணிக்கப்பட்டுள்ளன .

கடலுக்கு சென்று திரும்பாத 132 படகுகளில் 86 படகுகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.-ஆர்.பி.உதயக்குமார்...

2030 இல் உலகம் மிகப்பெரிய பேரழிவை சந்திக்கும்...


மழையும் நம் முன்னோர்களும்...


தூக்கணாங்குருவி கூடு வாசல் தெற்கு நோக்கினால் மழை. வடக்கு நோக்கினால் வறட்சி.

மரத்தின் உள்பக்கம் காகம் கூடு கட்டினால் பெருமழை. வெளிப்பக்கம் கட்டினால் அதிக மழை பெய்யாது....

RedAlert பொய்த்தாலும் நம் முன்னோர் கணித்த மழை அறிகுறிகள் ஒருபோதும் பொய்த்ததில்லை...