11/10/2018

பாஜக வின் ஏமாற்று வேலைகள்...


நாங்கள் ஆட்சிக்கு வரமாட்டோம் என்று நினைத்தோம் அதனால் பெரிய வாக்குறுதிகளை அளித்தோம். ஆச்சரியமாக ஆட்சிக்கு வந்துவிட்டோம்.

இன்று மக்கள் எங்களை நம்பி அந்த வாக்குறுதிகளை நிறைவேற்ற சொல்கிறார்கள். எங்களுக்கு சிரிப்பு தான் வருகிறது.

மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் : நிதின் கத்காரி...

இலுமினாட்டிகளும் ஹிட்லரும்...


ஆந்திராவில் மனைவியின் தகாத உறவால் மனம் வெறுத்துப் போன கணவர், இரண்டு குழந்தைகளை கொலை செய்து தற்கொலைக்கு முயற்சி...


ஆந்திர மாநிலம் ஜூப்பாடு பங்களா கிராமத்தை சேர்ந்தவர் தானுஜ் ராவ். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு ஜான்சி  என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தானுஜ் ராவிற்கு 7 வயதில் மகளும், 4 வயது மகனும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஜான்சி பாய் வேறு ஒரு ஒருவருடன் தகாத உறவு வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தானுஜ் ராவ், தன் மனைவியை பல முறை கண்டித்தும், தொடர்ந்து தகாத உறவு மேற்கொண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தானுஜ் ராவ், தன் மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். எனினும். தொடர்ந்து ஒழுங்கீனமாக செயல்பட்டதால் மன வருத்தத்தில் இருந்த தானுஜ் ராவ், தன் குழந்தைகளை முதலில் கொன்று அருகே உள்ள குளத்தில் வீசி தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் காவல் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்தார். இதனையடுத்து குளத்தில் வீசப்பட்ட குழந்தைகளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்...

சர்க்கரை நோயின் ரகசியம்...


தமிழை சிதைப்பது சரியா?


நம்மில் பலர் தெரிந்தோ தெரியாமலோ தமிழை சிதைக்கின்றோம். பிற மொழி சொற்களை தமிழில் ஏற்பதில் எந்த தவறும் இல்லை. ஆனால் பிற மொழி எழுத்துக்களை தமிழில் ஏற்பது என்பது தமிழை சிதைக்கும் செயலாகும்.

பிற மொழி வார்த்தைகளை  தமிழில் எழுதும் பொழுது நாம்  'ஸ', 'ஜ', 'க்ஷ', 'ஷ' ,'ஸ்ரீ', 'ஹ'  என்ற கிரந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம்.

சமசுகிருத, பிராகிருத வார்த்தைகளுக்கு ஏற்ற ஒலியோசை கிடைக்க நாம் அந்த எழுத்துக்களை பயன்படுத்துகிறோம். இது அவசியம் அற்றது.

நீங்கள் ஆங்கிலத்தை எடுத்துக் கொள்ளுங்கள் பிற மொழி எழுத்துக்களை அவர்கள் ஏற்பதில்லை.

நாம்  கிரந்த எழுத்துக்களை எழுதி தமிழை சிதைக்க வேண்டாம் என்று அனைவரையும்  கேட்டுக் கொள்கிறேன்.

சமஸ்கிருதம்  என்று எழுதாமல் சமசுகிருதம்  என்றே எழுதலாம்..

மஹாத்மா என்று எழுதாமல்
மகாத்மா என்றே எழுதலாம்..

ஜப்பான் என்று எழுதாமல்
சப்பான் என்றே எழுதலாம்..

ஸ்ரீ ரங்கம் என்று எழுதாமல்
திருவரங்கம் என்றே எழுதலாம்..

பக்ஷி என்று எழுதாமல்
பட்சி என்றே எழுதலாம்..

ஹரி என்று எழுதாமல்
அரி  என்றே எழுதலாம்..

ஆயிஷா என்று எழுதாமல்
ஆயிசா என்றே எழுதலாம்...

மார்பகம் - பெண்களின் உடம்பில் உள்ள இயற்கையான பகுதி,அதை கவர்ச்சியாக நினைக்காதே நண்பா..


ஓர் உயிரை ஊட்டி வளர்க்க பெண்மைக்கு கடவுள் தந்த கொடை மார்பகம்.

அதை கவர்ச்சி உறுப்பு ஆக்கப்பட்டதே பாலியல் வறட்சியின் ஆரம்பம்.

பெண்களின் மார்பகம் என்பது, குழந்தைக்கான உயிர்ப்பால் சுரக்கும் இடம். ஆனால், எல்லாக் காலங்களிலும் அது வெறும் காமத்துக்கான தசைக் குவியலாக மட்டுமே பார்க்கப்பட்டு வருகிறது.

மார்பகம் என்பது குழந்தைக்கு உயிர் ஊட்டும் உறுப்பு என்பதை  ஆண்கள் நினைத்தால் அது கவர்ச்சிபொருள் ஆகாது, அதை பெண்கள் நினைத்தால் காட்சிபொருள் ஆகாது.

பிறந்த குழந்தைக்கும், தாய்க்குமான உறவு மார்பகம், தொப்புள்.

அதை ஆபாசமாக்கியது, நாகரீக வளர்ச்சி என்னும் உடை கலாச்சாரம்...

தற்சாற்பு வாழ்வியல் பாகம் -1...


ஒரு மருத்துவ ரீதியான அலசல்...

வெயில் காலத்தில் உடல் தன்னை குளிர்ச்சி செய்து கொள்ள வியர்வையை உண்டாக்கி உடலில் உள்ள சூட்டை வெளியே தள்ளும்... (தண்ணீர் குடித்தவுடன் சிலருக்கு வியர்வை வரும் - அப்படி என்றால், அவர்களது உடல் புற தட்ப வெட்பத்திற்கு ஏற்ப தன்னை சீர் செய்து கொள்கிறது என்று பொருள்படும்).

மழை காலத்தில் புற சூழல் முழுவதும் குளிர்ச்சி யாக இருப்பதால், உடல், சூட்டை ஏற்படுத்துகிறது... (அதனால் தான் மழைக்காலத்தில் உடலில் சூடு மிதமாக இருந்து கொண்டே இருக்கும் & பல் உயிர் பெருக்கமும் நிகழும்).

மண் ணால் கட்டப்பட்ட குடிசை வீடுகளில் வாழ்ந்து இருக்கிறீர்களா...

வாழ்ந்தவர்களுக்கும் வாழ்பவர்களுக்கும் நன்கு புரியும், வெயில் காலத்தில்... குடிசை வீட்டில் வெயிலின் தாக்கம் குறைவாக இருக்கும்... (கூறையில் நாம் எதை கொண்டு மேய்கிறோமோ, அதன் தன்மையை பொருத்து சிரிதளவு குளிர்ச்சியும் இருக்கும்).

அதே மழை காலத்தில், குடிசை வீடுகளில் கதகதப்பாக இருக்கும்...

நாகரீக வளர்ச்சியின் அடையாளங்களில் ஒன்றான சிமெண்ட்டு, டைல்ஸ் .... ஆன வீடுகளில், புற சூழல் எப்படி இருக்கிறதோ இந்த வீடுகளிலும் அதே சூழல் தான் தென்படும்... அது வெயிலாக இருந்தாலும் சரி குளிராக இருந்தாலும் சரி...

மருத்துவ ரீதியாக இதை அனுகினால், நம் உடல் தன்னை புற தட்ப வெட்பத்திற்கு நேர் மாராக தயார் செய்வதற்கு, நம் முன்னோர்களின் மண் வீடு உதவுகிறது... இதனால், உடலுக்கு அதிக சிரமம் இல்லாமல், நன்றாக இயங்க முடிகிறது...

நாகரீக வீடுகளில் வீட்டிற்கு வெளியேவும் உள்ளேயும் ஒரு மாதிரியான, தட்ப வெட்பம் நிலவுவதால், உடல் தன்னை தற்காத்துக் கொள்ள தினறுகிறது...
இதனால் பல வியாதிகள் உண்டாகிறது...

அண்டத்தில் உள்ளது தான் பிண்டத்தில் உள்ளது என்பதை உணர்ந்து இயற்கையோடு இணைந்து  வாழ்ந்தார்கள்...

அதனால் ஆரோக்கியமாக பல்லாண்டு வாழ்ந்தார்கள்...

(நம் முன்னோர்களின் வீடுகளைப் பற்றி எழுத துவங்கினால் அவ்வளவு அதிசயங்கள் காத்திருக்கிறது... அதை எல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக அடுத்த பாகங்களில் காண்போம்...).

தற்சார்பு வாழ்க்கையை நோக்கி நகர்வோம் வாருங்கள்...

முனைவர்.பா.ஜெயப்ரசாத்...

வாயால் வடைசுட்டு திசை திருப்பும் பாஜக கூஜா நீதிமன்றம்...


விஷமாக மாறிவரும் இட்லி தோசை மாவு.. உஷார் மக்களே...


கடந்த சில ஆண்டுகளாக இட்லி,தோசை மாவை கடைகளில் வாங்கும் பழக்கம் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. அதனால் ஏற்படப்போகும் பின்விளைவுகளை அறியாமல் மக்கள் இதை வாங்கிக் கொண்டிருக்கின்றனர். முன்பெல்லாம் பெண்கள் வேளைக்கு போகாமல் வீட்டில் இருப்பார்கள். அதனால் அவர்களால் வீட்டு வேலைகளை எளிதாக செய்யமுடிந்தது. அனால் இப்போது சென்னை போன்ற பெருநகரங்களில் ஒரு சம்பளத்தை வைத்து குடும்பம் நடத்துவதென்பது பெரும் கஷ்டம் என்பதால் பெண்களும் வேளைக்கு சென்று குடும்ப பாரத்தை சுமக்கின்றனர்..

இதன் விளைவு, சாதாரண இட்லி தோசைக்கான மாவை அரைப்பதற்கு கூட நேரம் இல்லை. கடைகளில் விற்கப்படும் மாவில் கலக்கப்படும் உளுந்து, அரிசி, அரைக்கப்படும் கிரைண்டர், பயன்படுத்தும் தண்ணீர் என அனைத்தும் சுகாதாரமான முறையில் தயாரிக்கப்பட வேண்டும் என்பது நிபந்தனை. அனால் உண்மையில் மாவு சுகாதாரமாக தான் தயாரிக்கப்படுகிறதா?

மாவை வெள்ளை நிறமாக காட்ட அதில் பிளீச்சிங் பவுடர் கலப்பதில் இருந்து, அதில் புளிப்பு வாசனை வராமல் இருக்க பலவித கெமிக்கல்கள் கலக்கப்படுவதோடு அதில் ஆமணக்கு விதை, ஆப்ப சோடா, ஈஸ்ட், படிகாரம் போன்றவையும் கலக்கப்படுகின்றன என அவ்வவ்போது குற்றசாட்டுகள் எழுதவண்ணமே உள்ளன..

அதே போல் மாவை அரைக்க பயன்படுத்தும் தண்ணீர் சுத்தனமானதா என்பதும் ஒரு பெரிய கேள்விக்குறி தான். சுத்தமான தண்ணீரை கொண்டு மாவரைக்க வேண்டுமானால் ஒரு நாளைக்கே பல நூறு லிட்டர் தண்ணீர் தேவைப்படும். அனால் தண்ணீர் பஞ்சம் தலைவிரித்தாடும் சமயங்களில் கூட மாவிற்கு தட்டுப்பாடு வருவதில்லை.

அப்படியானால் இவர்களுக்கு மட்டும் சுத்தமான தண்ணீர் எங்கிருந்து கிடைக்கிறது என்பதும் கேள்விக்குறியே..
சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்படும் மாவை உட்கொள்வதால், சிறு குழந்தைகள் முதல், பெரியவர்கள் வரை பலருக்கும் தண்ணீரால் பரவும் நோய்கள், வயிற்று வலி உட்பட பல்வேறு பாதிப்புகள் வருகின்றன என டாக்டர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் நீங்கள் வாங்கும் மாவின் தரம் குறித்து அறிவது மிகவும் முக்கியம்..

அடுத்த தலைமுறை பிள்ளைகள் ஆரோக்கியமாக வாழ்வதும் நோய்வாய்ப்பட்டு போவதும் பெற்றோர்கள் கையில் தான் உள்ளது. ஆகையால் முடிந்தவரை பாக்கெட்களில் விற்கப்படும் பொருட்களை வாங்குவதை தவிர்த்து. மிளகாய் தூளில் இருந்து மாவு வரை அனைத்தையும் நாமாக அரைத்துக் கொள்வதே சிறந்தது...

தமிழகம் மற்றும் இந்தியாவிற்கு வர இருக்கும் பேராபத்து...


மழைநீரை சேமிப்பதற்கு விரைவில் தடை... உண்மையை உடைக்கும் தமிழன்...

https://youtu.be/6RqrZMnIL4w