11/12/2018
தமிழ் பிராமி...
ஆதி தமிழ் நாட்டில் எழுத்து வடிவங்களை எழுதுவதற்கு பயன் படுத்தப் பட்ட தமிழ் பிராமி எழுத்துக்களின் பரிமாண வளர்ச்சி தான் பல்வ வட்டேழுத்து என்றும் கூறுவார்கள்..
முன்பு இந்த வரிவடிவங்கள் சேர நாட்டில் தமிழ் எழுத்துக்கள் எழுதுவதற்கும் இன்றைய கேரள நாட்டில் பழைய மலையாளமும் இன்றைய நவின மலையாளமும் இந்த வரிவடிவங்களில் தான் இருந்துள்ளது...
மனித மூளையும் அதன் செயல்திறனும்...
1. மூளையில் 100,000,000,000 (100 பில்லியன்) நியூரான் செல்கள் உள்ளன. நரம்பு மண்டலத்தில் உள்ள நியூரான்கள் உடலின் உணரும் செய்தியை மூளைக்கு கெமிக்கல் சிக்னல் மூலம் கொண்டு செல்லும். மது (அல்கஹால்) நியூரானின் இணைப்பைத்தான் வலுவிழக்க செய்யும்.
2. நாம் சுவாசம் மூலம் பெறும் ஆச்சிஜனில் 20 சதவிதம் மூளை மட்டுமே பயன்படுத்தும். மீதி தான் மாற்ற உறுப்புகள் பயன்படுத்தும். அதாவது நமது உடலில் 2 சதவீதமே உள்ள மூளை 20 சதவீதம் ஆக்சிஜனை பயன்படுத்துகிறது. 5 முதல் 10 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லையெனில் மூளை செல்கள் இறக்க துவங்கிவிடும்.
3. நாம் 11 வயதை அடையும் போதுதான் நம் மூளை முழுவளர்ச்சி அடைகிறது. இருந்த போதிலும் நாம் இருபது வயதை அடையும் போதுதான் முழுமையாக சிந்திக்க உதவுகிறது. நாம் 35 வயதை தாண்டும் போது ஒரு நாளைக்கு நம் மூளையில் உள்ள 7000 மூளை செல்கள் அழிந்துவிடுகின்றன மீண்டும் அந்த செல்கள் உருவாவதில்லை.
4. நம்மை நாமே கிச்சு மூச்சு மூட்ட முடியாது. நம் மூளையின் ஒரு பகுதியான செரிபெல்லம் மூளையின் மாற்ற பகுதிக்கு எச்சரிக்கை செய்யும் நாமே நம்மை கிச்சு மூச்சு ஊட்டுவதாக. அதனால் மூளையின் மாற்ற பகுதிகள் கிச்சு மூச்சு மூட்டுவதை கண்டுகொள்ளாது.
5. மூளை 80 சதவீதம் நீரால் (water) ஆனது.
6. மூளை பகல் நேரத்தை விட இரவு நேரத்தில் அதிக சுறுசுறுப்பாகவும், சிந்தனை செய்யும் திறன் அதிகமாகவும் இருக்கும்.
7. அதிக stress மூளையின் நியாபக திறனையும் கற்றுகொள்ளும் திறனையும் குறைத்து விடும்
8. நம் உடலில் உள்ள மொத்த இரத்தத்தில் 20 சதவீதம் மூளைக்கு மட்டுமே தேவையானதாகும்.
9. மூளைக்கு மூளையின் வலியை உணரமுடியாது. மூளையின் வலியை உணர மூளைக்கு அந்த இணைப்பே கிடையாது. எனவே தான் மூளை அறுவை சிகிட்சை செய்யும் போது நோயாளி முழித்து கொண்டே இருப்பார்கள்.
10. மூளை மிகவும் மெதுவானதாகும் (soft). பட்டர் வெட்டும் கத்தியை கொண்டே மூளையை வெட்டலாம்.
11. மூளையில் இருந்து வரும் செய்திகள் நியூரான்களுக்கு இடையே செல்லும் வேகம் ஒரு வினாடியில் ஆயிரத்தில் ஒரு பங்கு.
12. ஒவ்வெரு முறையும் நாம் நியாபக படுத்த நினைக்கும் செய்திகள் அல்லது சிந்தனை செய்யும் நிகழ்வுகளை 2 அல்லது அதற்க்கு மேற்பட்ட மூளை செல்கள் ஒன்றிணைந்து சேமித்து கொள்ளும்
13. நாம் விழித்துகொண்டிக்கும் பொழுது நமது மூளை உருவாகும் மின்சாரத்தின் அளவு 25 வாட்ஸ், இதன் மூலம் ஒரு பல்ப்பை எரியவைக்கமுடியும்.
14. ரோலர் கோஸ்டர்ஸில் விளையாடும் போது மூளையில் இரத்தம் கட்டிக்கொள்ள (Blood clot) வாய்ப்புகள் அதிகம்...
மெக்சிக்கோவில் கண்டுபிடிக்கப்பட்ட இறக்கை உடைய உயிரினம்...
ஒரு சிறிய மனித போன்ற பறக்கக் கூடிய மர்மமான உயிரினம் மெக்சிகோவில் உள்ள ஒரு நெடுஞ்சாலை வழியாக கண்டு பிடிக்கப்பட்டது. உயிரினம் 80% தீ காயங்களுடன் இறந்துகிடந்ததாகவும் கூறுகிறார்கள் .
அந்த உயிரினத்தை டி.என்.ஏ சோதனைக்கு உட்படுத்திய போது, அது மனிதர்களைப் போலவே இருப்பதாக, உயிரினத்தின் டி.என்.ஏ மூலக்கூறு நிபுணரான ரிக்கார்டோ ரேங்கல் கூறுகிறார். 98.5% சதவீதம் மனிதர்களைப் போலவே இருப்பதாகவும், X- கதிர்கள் உயிரினத்தின் அனைத்து பாகங்களிலும் ஊடுருவி, ஒரு முழு மனிதனை ஒத்த எலும்புக்கூடு அமைப்பு இருப்பதை உறுதிசெய்தது,
மேலும், எக்ஸ்ரேகள் அந்த உயிரினத்தின் கால்கள் ஒரு முறை உடைந்து சிகிச்சை பெற்றது என்பதைக் காட்டியது. எக்ஸ்ரேயில் பல குழப்பமான வெள்ளை புள்ளிகள் காணப்படுவதாகவும், எனினும், அவைகள் சமச்சீரற்றதாக இருப்பதாகவும் இது மேலும் குழப்பத்தை உண்டாகுவதாக கூறுகிறார்.
விஞ்ஞானம் தற்போது அறிந்த எந்தவொரு விலங்குக்கும் எந்த ஒற்றுமையையும் தாங்கிக் கொள்ளாத இந்த விந்தையான உயிரினம் என்ன என்றும்?
அது ஒரு தேவதையா? வேற்றுகிரக உயிரா? அல்லது வெளிப்படுத்துதல் 9-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ளபடி அது "வெட்டுக்கிளியாக" இருக்கலாமா?
வெட்டுக்கிளிகளின் வடிவம் போருக்கு தயாரான குதிரைகளைப் போலிருந்தது. தங்களுடைய தலைகளில் பொன்னாலான கிரீடத்தைப்போல் இருந்தது, அவர்களுடைய முகங்கள் மனுஷரின் முகங்களைப்போல இருந்தது.
ஸ்திரீகளின் முடியைப்போல முடிகள் இருந்தது, அவைகளின் பற்கள் சிங்கங்களின் பற்கள்போல இருந்தது. அவை இரும்பின் மார்புகளைப்போல் மார்பகங்களைக் கொண்டிருந்தன, அவற்றின் இறகுகள் ஒலிக்கு ஓடுகிற பல குதிரைகளுடன் இருந்த இரதங்களின் ஒலி போல் இருந்தது.
அவர்கள் தேள்களிலும் வால்களிலும் வால்களிலும் வாள்கள் இருந்தது. அவர்களது அதிகாரம் ஐந்து மாதங்களுக்கு ஆண்களை காயப்படுத்துவதாக இருந்தது.
அவர்கள் எபிரெயு பாபிலோன் என்னும் அபேகோன் என்னும் பெயருடைய மேகஸ்தம்பத்தை அவர்கள்மேல் ராஜாவாக வைத்திருந்தார்கள்; கிரேக்க நாட்டிலே அவருடைய பெயர் அபோகான்.
--வெளிப்படுத்துதல் 9-ம் அதிகாரம்.
இந்த மர்மமான உயிரினம்,
வெளிப்படுத்துதல் 9-ம் அதிகாரத்தில் விவரிக்கப்பட்டுள்ள "வெட்டுக்கிளிகள்" என்ற மர்மமான சிருஷ்டிக்கு சில ஒற்றுமைகள் இருப்பதாக அநேகர் சுட்டிக்காட்டியிருக்கிறார்கள்:
இது மிகவும் ஒத்துப்போகிறது. ஒருவேளை, அது மற்றொரு சாம்ராஜ்யத்திலிருந்து வந்திருக்க வேண்டும். இல்லை, நாம் சோதனையைத் தொடர வேண்டும், மேலும் சிலவற்றை சோதிக்க வேண்டும்.
மற்ற ஆராய்ச்சியாளர்களும் இதை சோதிக்க முடியும் என்று நம்புகிறேன். மீண்டும் மீண்டும் முடிகிறது.
ஒரு நாள், அதற்கு ஒரு நிரூபிக்கக்கூடிய விஞ்ஞான ரீதியான நியாயத்தை கண்டுபிடித்துவிடலாம், மேலும் நம் சோதனை முடிந்தவரை முற்றிலும் கடுமையானதாக இருப்பதை மக்களுக்கு நிரூபிக்க வேண்டும். என்று டாக்டர். ரிக்கார்டோ ரேங்கல் கூறுகிறார்...
மூலிகைகளும், தீரும் நோய்களும்...
1. அருகம்புல்: மூலச்சூடு, விஷங்கள், அல்சர், ஆஸ்துமா சர்க்கரை நோய் ரத்தத்தில் கெடுதல்கள் நீங்கும்.
2. ஓரிதழ் தாமரை: வெள்ளை, வெட்டு, நீர்ச்சுருக்கு, தாது பலவீனம்.
3. ஆடா தோடை: இருமல், சளி, ஆஸ்துமா, பினிசம், இருமலில் ரத்த கசிவு.
4. தூதுவளை: சளி, இருமல், ஆஸ்துமா, ஈஸினோபீலியா, பீனிசனம் வாதக்கடுப்பு.
5. நில ஆவாரை: மலச்சிக்கல், மூலம், வாதம், உடல் உஷ்ணம்.
6. நில வேம்பு: சுரம், நீர்க்கோவை, பித்த மயக்கம்
7. முடக்கத்தான்: மூட்டுப் பிடிப்புகள், சகல வாதங்கள், கரப்பான் மூலம்.
8. வல்லாரை: ஞாபக சக்தி அதிகரிக்கும், காமாலை மலச்சிக்கல்.
9. அஸ்வகந்தி: கரப்பான், வெட்டான், மயக்கம், தாது நஷ்டம்.
10. வில்வம்: பித்தம், ஆஸ்துமா, காசம், தோல் நோய்கள்.
11. நெல்லிக்காய்: பித்தம், சளி, மூலம், சர்க்கரை வியாதி நீங்கும்.
12. நாவல் கொட்டை: சர்க்கரை வியாதி, கரப்பான், தோல் நோய்கள் நீங்கும்.
13. சுக்கு: வயிற்றில் வாயு, வலி, பொறுமல் அஜீரணம்.
14. மிளகு: கபம், மூலவாயு, பித்தம், வாதம், அஜீரணம்.
15. திப்பிலி: சளி, காசம், பீனிசம், வாயு.
16. அதிமதுரம்: இருமல், கபம், பீனிசம், தொண்டையில் கரகரப்பு புண்.
17. சித்தரத்தை: இருமல், சளி, பீனிசம், கோழைக்கட்டு.
18. ஜாதிக்காய்: விந்து நீர்த்தல், இரைப்பை, ஈரல் நோய்கள்.
19. வெந்தயம்: பித்தம், உடல் சூடு, சர்க்கரை நோய், மேகம், காசம்.
20. வசம்பு: வயிற்று வலி, ரத்த பித்தம், மலக்கிருமி நோய்கள்.
21. ஆவாரம்பூ: அதிதாகம், சர்க்கரை நோய், உடல் உஷ்ணம்.
22. செம்பரத்தம்பூ: தலை, கண், இருதயம், ஈரல் ஆகியவற்றின் நோய்கள்.
23. ரோஜாபூ: இருதயம், ஈரல், நுரையீரல் கிட்னி நோய்கள் நீங்கும்.
24. முல்தானி மட்டி: முக பருக்கள், தேமல்கள், கரும்புள்ளிகள் (வெளி உபயோகம்).
25. திருபலாசூரணம்: வாய்ப்புண், மலச்சிக்கல், கண் நோய்கள்.
26. திரி கடுகு சூரணம்: பசியின்மை, அஜீரணக் கோளாறுகள் காய்ச்சல் தீரும்.
27. வசம்பு: வயிற்றுவலி, ரத்தப் பித்தம், மலக்கிருமி நோய்கள்.
28. கரிசலாங்கண்ணி: மஞ்சள் காமாலை, சோகை, ஈரல் கோளாறுகள் வாதம்.
29. கண்டங்கத்திரி: சளி, இருமல், ஆஸ்துமா, ஈசினோபீலியா, பீனிசம்.
30. கருந்துளசி: இரைப்பு, இருமல், நீர்க்கோவை, தாது பலவீனம்.
31. கறிவேப்பிலை: பித்தம், பசி, மந்தம், தலைமுடி நிறம் கருமையாகும்.
32. காசினி கீரை: ஈரல்களில் சகல தோஷங்கள், உடல் வீக்கம்.
33. கீழாவெல்லி: மஞ்சள் காமாலை, அல்சர், வயிற்றுக் கோளாறுகள்...
Subscribe to:
Posts (Atom)









