07/01/2019

அழிந்து வரும் கொடுக்காப்புளி மரங்கள்...


கொடுக்காப்புளி என்றால் என்வென்றே தெரியாமல் போகும் நம் சந்ததிகளுக்கு விவசாய நிலங்களில் வரப்பு ஓரங்களிலும் முக்கியமாகக் கிணற்று மேட்டிலும் இதை வளர்ப்பார்கள். இதற்குப் பாசனம் தேவை இல்லை. ஆனால் பாசன வாய்க்கால் ஓரங்களில் இருப்பவை நன்கு செழித்து வளரும்.

இந்த மரம் குட்டையான முட்கள் நிறைந்ததாக இருப்பதால் வேலிக்காகவும் அந்தக்காலத்தில் நடுவதுண்டு. இதன் இலை வெள்ளாடுகளுக்குத் தீவனமாகப் பயன்படும்.

ஐம்பது வருடங்களுக்கு முன்பெல்லாம் பாசனக் கிணறுகளில் மாடுகளைக் கொண்டு நீர் இறைக்கப்பட்டபோது வாரியில் நிழலுக்காக இந்தமரங்கள் நட்டு வளர்க்கப்படும்.

வேலிகளில் சிறியதாக வளரும் இது விட்டுவைத்தால் வேம்பு அல்லது புளியமரம்போல் பெரியதாக வளரும் இயல்படையது. நன்கு வளர்ந்து முற்றிய மரங்கள் பல்வகை மரத் தளபாடங்கள் செய்யயப் பயன்படும்.

எல்லாவற்றுக்கும் மேலாக அக்காலக் கிராமச் சிறுவர்களுடன் இது நெருங்கிய தொடர்புடையது. இதன் சுருள் சுருளான பசுமையான சிவப்பான அழகான காயும் பழங்களும் உண்ணப் பயன்படும். சிலரகங்கள் துவர்ப்புத் தன்மை மேலோங்கியும் சிலரகங்கள் தித்திக்கும் சுவையுடனும் பழங்களைக் கொண்டிருக்கும். வெடித்த பழங்கள் நல்ல சுவையாக இருக்கும். மருத்துவப் பயன்களும் உண்டு.

இதன் முற்றிய அடிமரத்தில் முட்கள் இருக்காது. அதனால் எட்டியவரை சல்லைகளால் காய் பறித்துவிட்டு எட்டாத உயரத்தில் இருப்பதை முள்ளில்லாத அடிமரத்தில் ஏறி பாதிமரத்தில் இருந்து மீண்டும் கொக்கைத்தடிகளால் காய் பறிப்பார்கள்.

எப்படி இருந்தாலும் நீளமான கொக்கைத்தடிகளுடன் சிறுவர்கள் இந்த மரம் இருக்கும் இடங்களைத் தேடி அலைவதும் கண்டும் காணாமலும் இதன் பழங்ளைப் பறித்துக்கொண்டு யாரேனும வந்துவிட்டால் ஓட்டம் பிடிப்பதும் வேடிக்கையான அனுபவங்கள். சிலநேரங்களில் இரக்கமற்ற ஆட்களிடம் மாட்டிக்கொண்டு கொக்கைத்தடிகளை இழப்பதும் உண்டு.

சிறுவர்கள் மேல் பாசம் கொண்டு பறித்துத் தருபவர்கள் கொஞ்சம் பேர். சிறுவர்களின் ஓயாத தொல்லைக்குப் பயந்துகொண்டு மரத்தையே வெட்டியவர்களும் உண்டு.

காக்கைகள் பறித்துச் சென்று வீடுகளின் கூரைமேல் வைத்துத் தின்னும். அப்போது அது கொடுக்காப்புளிப் பழத்தை கீழே வைப்பதைப் பார்த்துக்கொண்டே இருந்து திடீரெனப் பலமான சப்தம் கொடுத்து காக்கையை விரட்டிவிட்டு பழத்தை வீட்டின்மேல் ஏறி எடுத்துக் கொள்வார்கள். காக்கைகள் கொண்டுவரும் பழம் மிகவும் சுவையாக இருக்கும்.

எப்படியோ எந்தப் பாசனமும் தேவைப்டாமல் எந்த வறட்சிக்காலத்திலும் உயிர் வாழ்வதுமட்டுமல்ல கனிகளையம் கொடுக்கக்கூடிய கொடுக்காப்புளி மரமும் பழக்கத்தில் இருந்து ஒழிக்கப்பட்டுவிட்டது. இப்போது சிலபகுதிகளில் மட்டும் காணலாம்.

வர்த்தக ரீதியில் லாபம் தராத எதையும் ஒழிப்பது என்ற மனித விதியின்படி இதுவும் ஒரு நாள் காணாமல் போகக்கூடும்...

பிளாஸ்டிக் தடையை தொடர்ந்து வாழை இலை தேவை அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி... விவசாயத்தின் முதல் வெற்றி...


ஒரே மாதத்தில் 6.5 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்த வோடஃபோன் ஐடியா...


கடந்த நவம்பர் மாதத்தில் மட்டும் வோடஃபோன் ஐடியா நிறுவனம் 6.5 மில்லியன் வாடிக்கையாளர்களை இழந்துள்ளதாக இந்திய செல்லுலார் ஆபரேட்டர்கள் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் மாத கணக்கின்படி இந்தியாவில் மொத்தம் 1.02 பில்லியன் மொபைல் போன் பயன்பாட்டாளர்கள் இருப்பதாக இந்த அறிக்கை குறிப்பிட்டுள்ளது. இதில் 421.08 மில்லியன் வாடிக்கையாளர்களோடு வோடஃபோன் ஐடியா நிறுவனம் முதலிடத்திலும், 314.76 மில்லியன் வாடிக்கையாளர்களோடு ஏர்டெல் இரண்டாம் இடத்திலும், 262.75 மில்லியன் பயனாளர்களோடு ஜியோ மூன்றாவது இடத்திலும் இருக்கிறது...

பாஜக நிர்மலா சீதாராமன் கலாட்டா...


உடலுக்கு தேவை நடை பயிற்சி...


நம் உடலில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகளுக்கு நடைபயிற்சி தான் நல்ல தீர்வைத் தருகிறது. சர்க்கரை, ரத்த அழுத்தம், இருதய நோய் போன்ற முக்கிய பிரச்னைகளுக்கு மருத்துவர்கள் முதலில் பரிந்துரை செய்வது நடைபயிற்சி போங்க என்பதாக தான் இருக்கும்.

ஒரு மணி நேரம் தொடர்ந்து நடந்தால் தான் முழுமையான பலன் கிடைக்கும். படிப்படியாக தூரத்தை அதிகரிக்க வேண்டும். முதலில், தினசரி இரண்டு கி.மீ நடக்க ஆரம்பித்து நிமிடத்துக்கு சுமார் 100 அடி எடுத்து வைத்து நடக்கலாம்.

இது ஆண்களுக்கு 92 முதல் 102 பாத அடியாகவும் பெண்களுக்கு 91 முதல் 115 பாத அடியாகவும் இருக்க வேண்டும். பெண்களின் பாத அளவு, கால்களின் உயரம் குறைவாக இருப்பதால், அவர்கள் அதிக அடி எடுத்து வைத்து நடந்தால் தான் ஆண்களுக்கு இணையாக நடக்க முடியும். நடைப்பயிற்சியின் போது வியர்வையை உறிஞ்சக்கூடிய தளர்வான பருத்தி ஆடையை அணிந்து கொள்வது நல்லது.

மூச்சு வாங்கும் அளவுக்கு வேக நடை கூடாது. அருகில் நடப்பவர் வேகமாக நடக்கிறார் என்று நம் வேகத்தைக் கூட்டுவது ஆபத்தில் கொண்டு போய்விடும். நேராக நிமிர்ந்து நடக்க வேண்டும். தோள் பட்டையை தளர்த்தி கைகளை நன்றாக வீசி நடக்க வேண்டும். அடிவயிறு சற்று எக்கியபடி நடப்பது நல்லது.

சாலைகளில் நடப்பதைவிட பூங்காக்கள், கடற்கரை, விளையாட்டு மைதானத்தில் நடப்பது உடல் ஆரோக்கியத்துக்கு நல்லது. நாற்பது வயதுக்கு மேலுள்ளவர்கள் இருதய நிபுணரின் ஆலோசனைப்படி நடப்பது நல்லது.

தசை, மூட்டு தொந்தரவு இருந்தால் அதற்கு சிகிச்சை பெற்று பிறகு நடைப்பயிற்சி மேற்கொள்ளலாம். காலுக்கு பொருத்தமான வியர்வையை உறிஞ்சக்கூடிய பருத்தி காலுறைகள் (shocks), செருப்பு அணிந்து நடப்பது அவசியம். காலணியின் அடிப்பாகம் பாதத்துக்கு பாதிப்பு ஏற்படுத்தாத வகையில் மேடு பள்ளம் இல்லாமல் மென்மையாக இருக்க வேண்டும்...

திருட்டு திராவிட மதிமாறன் கலாட்டா...


மகளுக்கு அமெரிக்காவில் படிப்பு கோவையில் சொகுசு பங்களா எங்கிருந்து வருகிறது பணம் பியூஸ் மனுஷ் க்கு.?


சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் காடுகளை பாதுகாக்கும் சமூக ஆர்வலர் தமிழ்நாட்டை சேர்ந்தவராக இல்லாவிட்டாலும் அவரது செயல்பாடுகள் தமிழக இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே நல்லவரவேற்பை பெற்றது காடு வளர்ப்பில் அவர்காட்டிய அக்கறையே இதற்கு காரணம்.

வழி மாறிய பயணம்...

சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷிற்கு இருந்த நற்பெயர் என்று அவர் போத்திஸ் நிறுவனத்திடம் இருந்து 7 லட்சம் மதிப்புள்ள செக்’கை வாங்கினாரோ அன்றே சுக்கு நூறாக போய்விட்டது, அன்று முதல் அவரை பற்றிய பல்வேறு தகவல்கள் வந்தவண்ணம் உள்ளன.

எப்படி வருகிறது பணம்..

தற்போது பியூஸ் மனுஷ் உடன் பணியாற்றிய அவரது நெருங்கிய உறவினர்கள் டேவிட் ஹெலோம் மற்றும் அந்தரி மனுஷ் சொல்லிய தகவல்கள் பலருக்கும் அதிர்ச்சி அளிக்கின்றன பியூஸ் மனுஷ் குடும்பம் அமெரிக்காவில் குடியேற இருப்பதாகவும், அதற்கு முன்னோட்டமாக தனது மகளை மாதம் 10 லட்சரூபாய் செலவில் அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற பள்ளியில் சேர்க்க இருப்பதாகவும் கூறினர்.

சொகுசு பங்களா...

அவர்கள் கூறிய மற்றொரு தகவல் பல தமிழக மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை அளித்தது அதற்கு காரணம் மனுஷ் வாங்கிய சொகுசு பங்களா சுமார் 10 கோடி மதிப்புள்ள சொகுசு பங்களாவை தனது மாமியார் பெயரில் வாங்கி இருப்பதாகவும் தெரிவித்தனர்.

தற்போது பியூஸ் மனுஷ் என்ன தொழில் செய்கிறார், அவருக்கு எங்கிருந்து குடும்பத்தை வசதியாக நடத்துவதற்கு பணம் வருகிறது, ஏன் தனது சொந்த மாநில மக்களுக்கு உதவாமல் தமிழ் நாட்டில் இருக்க என்ன காரணம் போன்ற கேள்விகள் மக்கள் மனதில் எழுந்த வண்ணம் உள்ளன...

கேரளாவில் பாஜக & ஆர்.எஸ்.எஸ் சை கதற விட்ட காவல்துறை...


தொட்டாற்சிணுங்கி இய‌ற்கை வைத்தியம்...


தாவரங்களுக்கும் உணர்வு உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய தாவரம் தொட்டாற்சிணுங்கி. விரல் பட்டதும் சட்டெனத் தன்னை உள்ளிழுத்துக் கொள்ளும் இந்தத் தாவரத்தை எல்லோரும் பார்த்திருப்போம். உணர்வு மட்டும் அல்ல... உன்னதமான மருத்துவக் குணங்களும் இந்த மூலிகைச் செடிக்கு உண்டு.

தொட்டாற்சுருங்கி, தொட்டால் வாடி, இலச்சகி, நமஸ்காரி, காமவர்த்தினி என இந்தத் தாவரத்துக்கு நிறைய பெயர்கள்.

சர்க்கரைக்கு சர்க்கரைக்கு சரியான தீர்வு...

தொட்டாற்சிணுங்கி வேரை நன்கு அலசி வெயிலில் உலர்த்தி இடித்துச் சூரணமாக்கிக்கொள்ள வேண்டும். இதேபோல், தொட்டாற்சிணுங்கி இலைகளையும் இடித்துச் சூரணமாக்கி இரண்டையும் சம அளவுக்கு கலந்து கொள்ளவும்.

இந்தக் கலவையை ஒரு கரண்டி அளவு எடுத்துத் தண்ணீரில் கலந்து தினமும் மூன்று வேளை உட்கொண்டால், சர்க்கரை நோயில் இருந்து மீள முடியும். இதே சூரணக் கலவையைத் தினமும் மூன்று வேளை ஒரு கரண்டி அளவு எடுத்து, காய்ச்சியப் பசும்பாலுடன் கலந்து சாப்பிட்டுவந்தால், மூலம், பவுத்திரம் போன்ற நோய்களும் குணமாகும்.

சிறுநீர் சிக்கல் தீர...

சுத்தம் செய்த தொட்டாற்சிணுங்கி வேரை ஒரு கைப்பிடி அளவு எடுத்து நன்றாக நசுக்கிக்கொள்ள வேண்டும். பின்னர் இந்த வேரை மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்த்து ஒரு பங்கு ஆகும் அளவுக்கு சுண்டக் காய்ச்சி வடிகட்ட வேண்டும்.

வடிகட்டிய இந்த நீரை கால் அவுன்சு(ஸ்) அல்லது அரை அவுன்சு வரை நாள் ஒன்றுக்கு மூன்று வேளை சாப்பிட்டு வந்தால், சிறுநீரகம் சம்பந்தமான நீர் அடைப்பு, கல் அடைப்பு ஆகியவை குணப்படும்.

தளர்ச்சி நீங்க... மலர்ச்சி ஓங்க...

தொட்டாற்சிணுங்கி வேரை சுத்தம் செய்து 40 கிராம் அளவு எடுத்து, மண் சட்டியில் இட்டு மூன்று பங்கு தண்ணீர் சேர்க்க வேண்டும். நீர் ஒரு பங்கு ஆகும் வரையிலும் நன்றாகச் சுண்டக் காய்ச்சிக் கசாயமாக்க வேண்டும்.

சூடு தணிந்த பின் கசாயத்தை வடிகட்டி, அரை அவுன்சு வீதம் தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், தளர்ச்சி நீங்கி உடல் தேறுவதோடு சுக்கில (விந்தணு) இழப்பும் நீங்கும். இதனால்தான் தொட்டாற்சிணுங்கி வேர் 'காமவர்த்தினி’ என்றும் அழைக்கப்படுகிறது...

எங்கே ஓடுகிறான் மனிதன்.. எல்லை அவனுக்கு தெரியாது...


தெரிந்தால் அவன் ஓடவும் மாட்டான் ஒளியவும் மாட்டான்..

ஓடுங்கள் ஓடுங்கள் வட்டத்தில் உள்ளயே ஓடுங்கள்...

கவனியுங்கள்... ஓடுவது நிற்கும்..
நடப்பது தொடங்கும்..
நடந்தால்.. நடிப்பது குறையும்..
நடிப்பது குறைந்தால் நீ நீயாக இருப்பாய்...