06/03/2019
உலக முடிவும் 13 ஆம் இராசியும் – நாஸ்ட்ரடாமஸ்...
நாஸ்ட்ரடாமஸ்… தனது அனைத்து கணிப்புகளையும் வான சாஸ்திரத்தை அடிப்படையாக வைத்தே கணித்தார்.
வழமையாக வான சாஸ்திர நூல்களோ… வான சாஸிதிரிகளோ.. 12 ராசிகளைக் கொண்டே கணித்தார்கள்.
ஆனால் நாஸ்ட்ரடாமஸ் இவற்றிலிருந்து விதி விலக்காக 13 ராசி வட்டத்தையும் உருவாக்கி அதைக்கொண்டே தனது கணிப்புக்களை கணித்திருந்தார்.
அந்த 13 ஆவது ராசியில் இருக்கும் ஒரு நட்சத்திரமே ஃப்பீக்கஸ் நட்சத்திரமாகும்.
அது இதுவரை வானில் தோன்றியதில்லை. அது வானில் முதல் முதலாக தோன்றும் போது பூமியில் மிகப்பெரிய மாறுதல்கள் நிகழும் என அவர் எதிர்வு கூறியுள்ளார்.
இவ் நட்சத்திரம் 2012 ஆம் ஆண்டு தோன்றும் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் தோன்றவில்லை.
நட்சத்திரம் புதிதாக வாணில் தோன்றும் போது பூமியில் பாரிய மாற்றங்கள் நடைபெறும் எனும் அவரது கூற்று உண்மையாகவே இருக்கும்..
காரணம்… நமது கண்ணிற்கு புலப்படும் அனைத்து நட்சத்திரங்களின் ஈர்ப்பு பாதிப்பும் நமது சூரிய குடும்பத்திற்கு உண்டு. ஆகவே புதிதாக ஒரு நட்சத்திரத்தின் ஈர்ப்பு பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்..
இங்கு இன்னொரு விடையம்… கி.மு 2000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மாயன்களின் இராஜ்ஜிய படிவுகளிலும் இந்த புதிய நட்சத்திரம் பற்றி கூறப்பட்டுள்ளதாம்.
எகிப்திய பிரமிட் சுவர்களிலும் வான வெளியை கீறி ஏதேதோ குறிப்பிட்டுள்ளார்கள்… அவை என்ன என சரியாக இனங்கானப்படவில்லை.
அடுத்து… நாஸ்ட்ராடாமஸின் கூற்றுக்களின் படி 7 உலக யுத்தங்கள் நடைபெறும்.
ஏற்கனவே 2 முடிவுற்று விட்டது… இனி வரப்போவது 3 ஆவது… அது 2012 -19 ( சிலர் 2032 இக்குள் என்கிறார்கள்.) ல் வரும் என்று ஒரு ஊகமும் இருக்கிறது.
ஆனால், அத்தோடு உலகம் அழிந்து விடும் என்று சொல்ல முடியாது.
அப்படி இருக்குமானால், அவரின் குறிப்புக்களில் 7 உலக யுத்தங்களைப் பற்றியும் தெளிவாக கூறியிருக்கத் தேவை இல்லை.
3750 ம் ஆண்டலவிலேயே இந்த 7 ம் உலக யுத்தம் நடை பெறுமாம். அதற்குப்பிறகு பூமி மனிதன் வாழத் தகுதியற்றதாகி விடும் என குறிப்பிட்டுள்ளாராம்.
மொத்தத்தில் உலக அழிவு பற்றி நாஸ்ட்ரடாமஸ் என்ன சொல்லி இருக்கார் என்று பார்ப்போம்…
40 ( அல்லது 400 குறிப்பு சரியாக இனங்காணப்படவில்லை.) வருடங்களுக்கு பூமியில் ஒரு சொட்டு மழை கூட பெய்யாது… பனிப்பொழிவு நின்றுவிடும்… உலகம் எங்கும் கடுமையான வெப்பம் நிலவும்… அதனால், மரங்கள் தாவரங்கள் என்பன முற்றாக அழிந்து போகும்… மனித இனமும் இக்காலப் பகுதியில் முற்றாக அழிந்துவுடும்.
அதற்குப்பிறகு… 40 ( / 400)வருடங்கள் தொடர்ச்சியாக மழை பெய்யும்.. ஆனால், அதை அனுபவிப்பதற்கு பூமியில் ஒரு உயிரினமும் இருக்காது…
40 (/ 400) வருட கால மழையைத் தொடர்ந்து பூமி குளிர்ச்சியடைந்து மீண்டும் தாவரங்கள் உருவாகி… உயிரினம் தோன்றும்…
உலகம் புதுப்பிக்கப்படும்…
இந்தக்கூற்று கிறிஸ்தவ மதத்திலிள்ள நோவாவின் கதையோடு ஒத்துப்போக கூடியது… அது பற்றி இங்கு பெரிதாக எழுத வில்லை….
ஆனால், லெமூரியா பதிவில்… நோவாவின் கதைக்கும்…. இந்துக்களின் வேத நூல்களில் கூறப்பட்டுள்ள கதைக்கும் இருக்கும் ஒற்றுமையை நிகழ்கால வரலாற்றுடனும்… லெமூரிய வரலாற்றுடனும் ஒப்பிட்டு பார்த்துள்ளோம்….
இயன்றவரையில் வேறு மதங்களில் இது போன்ற ஒற்றுமைகளை கண்டறிந்து எழுத முற்சிக்கிறோம்...
பண்டையத் தமிழர்கள் வீடுகளில் தண்ணீரை செம்பு குடங்களில் பிடித்து வைத்ததன் காரணம் என்ன?
மைசூரில் இருக்கும் அஜய் நினைவு குடிநீர் நிறுவனத்தைச் சேர்ந்தவர்கள், செம்புப் பாத்திரத்தில் தண்ணீரை வைத்து ஒரு ஆராய்ச்சி நடத்தினார்கள். அதன் முடிவில், 'செம்புப் பாத்திரத்தில் 24-மணி நேரம் குடிநீரை வைத்திருந்து பரிசோதித்துப் பார்த்ததில், மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் நுண்ணுயிரிகள் எதுவும் அந்த நீரில் இல்லை' என்று அந்த நிறுவனம் சொல்லியிருகிறார்கள்....
இந்தத் தகவல் தெரிஞ்சதிலிருந்து செம்புக் குடத்தில் வெச்சிருந்துதான் தண்ணியைக் குடிக்கின்றார்கள். கிணத்துல கிடைக்கின்றத் தண்ணி, செம்புக் குடத்துக்குப் போனதும் மினரல் வாட்டர் மாதிரி அருமையாக மாறிவிடுகிறது...
செம்பு குடம் இல்லனாலும் பரவாயில்லை. ஒரு கையளவு செப்பு தகட்டை குடத்துக்குள்ள போட்டு வெச்சா கூட உங்க வீட்டுத் தண்ணி தரமானதா மாறிடும். மூணு நாளைக்கு ஒரு தரம் செம்பு தகட்டை எடுத்துப் பார்த்தா பாசி புடிச்ச மாதிரி இருக்கும். அதெல்லாம் பாக்டீரியாக்கள்தான்...
தகட்டைச் சுத்தமா கழுவிவிட்டு திரும்பவும் குடத்துக்குள்ள போட்டு வைக்கலாம். அந்தக் காலத்துல பல வீடுகள்ல செம்புக்குடம்தான். இன்னிக்கும் சில கிராமங்கள்ல செம்பு குடத்துலதான் தண்ணி குடிக்கறாங்க...
கேன் வாட்டர், மினரல் வாட்டர் என்று பணத்தைத் தண்ணீராக செலவு செய்யும் காலமிது. ஆனால், ''வீட்டுக்கு ஒரு செம்புத் தகடு இருந்தாலே போதும், அருமையான மினரல் வாட்டர் கிடைத்துவிடும். மாசம் நூற்றுகனகான ரூபாய் மிச்சமாகும்...
என்னதான் விஞ்ஞானம் வளர்ந்தாலும் நம் முன்னோர்கள், முன்னோர்கள் தான்...
ஆந்திராவில் தமிழ் சட்டமன்ற தொகுதிகள்...
ஆந்திராவில் தெலுங்கரை விட தமிழர்கள் கூடுதலாக உள்ள சட்டமன்ற தொகுதிகள்.
(கருப்பு வெளிக்கோடு கொண்டு வரையப்பட்டவை)
1) குப்பம்
2) பல்லவநேரி
3) பூதாளப்பட்டு
4) சித்தூர்
5) கங்காதரநல்லூர்
6) நகரி
7) சத்தியவேடு
8) திருக்காளகத்தி
9) திருப்பதி
10) சந்திரகிரி
11) புங்கனூர்
12) வேங்கடகிரி
13) உதயகிரி
14) சூலூர்பேட்டை
15) கூடூர்
16) சர்வபள்ளி
17) நெல்லூர்.
மேலும் 13 தொகுதிகளில் தமிழர்கள் ஏறத்தாழ தெலுங்கு பேசுவோராக மாறிவிட்டனர்.
(மஞ்சள் நிறம் மட்டும் கொண்டு குறிக்கப்பட்டவை).
1) கோவூர்
2) மதனபள்ளி
3) பில்லேறு
4) தம்பலாப்பள்ளி
5) தர்மாவரம்
6) கதிரி
7) பொதட்டூர்
8) புலிவெண்டளை
9) கொடூர்
10) நெல்லூர் ஊரகம்
11) ஆத்மாகூர்
12) கவாலி
13) சிங்கனமலை
பறிபோனது மண் மட்டும் அல்ல.
அதில் வாழும் மக்களும் அவர்களின் வாக்குகளும் அதன் மூலம் கிடைக்கும் அரசியல் அதிகாரமும் தான்...
வேற்றுக்கிரகவாசி உண்மைகள்...
ஸ்பெயினின் கடற்கரைக் கிராமமான, கொன்னிலில் (Conil de la Frontera) தோன்றும் மர்மமான விளக்குகள். அங்கு வசிக்கும் மக்களிடம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி வந்தது. ஒவ்வொரு நள்ளிரவிலும் இந்த மர்மமான ஒளியின் நிகழ்வு அங்கு ஏற்படுகிறது. இந்த நிகழ்வை ஆராய்வதற்க்கு சென்ற ஒரு ஐந்து இளைஞர்கள் குழுவின் ஆய்விற்க்கு பிறகு இந்த நிகழ்வு நிறுத்தப்பட்டது என்று தெரிகிறது. அந்த ஆய்வு குழுவினரின் ஆய்வு தரவுகளே இந்த பதிவு.
1989 ஆம் ஆண்டு செப்டம்பர் 29 நாள் இரவு 8:45 மணி அளவில். இந்த குழுவினர் ஒரு தலைகீழ் பறக்கும் பொருளை கவனிக்கிறார்கள். பொருள் அதன் வெளிப்புறத்தில் சிவப்பு விளக்குகளுடன் அரை நிலவு வடிவத்தில் உள்ளது. பொருள் அவர்களை விட்டு மெதுவாக நகர்ந்து கொன்னில் கிராமத்திற்குச் செல்கிறது. ஒரு சில நிமிடங்கள் கழித்து கடற்கரை தரையிறங்கிய அவற்றில் ஒருவித ஒளி ஒன்று தோன்றுகிறது. அந்த ஒளி ஒரு ஒளி சமிக்ஞையாக தொடங்குகிறது. அதே நேரத்தில் அவர்கள் அருகிலுள்ள துறைமுகத்தில் அதே வழியில் பதில் ஒளி ஒன்று வெளிப்படுகிறது.
கடற்கரையிலிருந்து சுமார் 50 மீட்டர் தூரத்திலுள்ள குழு கடற்கரையில் அமர்ந்து கொண்டிருக்கும் போது இது நடக்கிறது. நள்ளிரவில் அவர்கள் ஒரு இரட்டை தொலைநோக்கி மூலம் பகுதியை கண்காணிக்க. அவர் நம்பமுடியாத ஒன்றை கவனிக்கிறார்; அவர்கள் தண்ணீரிலிருந்து கடற்கரையை நோக்கி நகரும் இரண்டு நபர்களைக் காண்கிறார். இரு மனித உருவங்களும் இரண்டு மீட்டர் உயரத்தில் நிற்கிறது; தங்கள் கைகளை முழுவதும் மறைத்த மஞ்சள் அங்கியை அணிந்துள்ளனர். அவர்களின் தலைகள் வெள்ளையாகவும் வழுக்கை மற்றும் முகமற்றும் காணப்படுகிறது.
இந்த நிகழ்வை கண்ட குழுவினர் அஞ்சத் தொடங்குகிறார்கள். அவர்கள் இப்போது சுமார் 30 மீட்டர் தூரத்தில் உள்ளனர். குழுவினர் தங்கள் முதுகெலும்புகளை சற்று திருப்புவதன் மூலம் அருகில் உள்ள துறைமுகத்தில் இருக்கும் மற்றொரு சிவப்பு, நீல மற்றும் வெள்ளை ஒளியுடன் ஒளிரும் பந்து அந்த மனிதர்களை நோக்கி செல்வதை காணமுடிகிறது. அவர்களை அடைவதற்கு சில நிமிடங்கள் முன்னதாக, ஒரு புதிய உருவம் அவர்களுடன் இணைகிறது.
அந்த புதிய மூன்றாவது உருவம். இரு கால்களில் நின்று பார்க்கிறது. இந்த உருவம் மூன்று மீட்டர் உயரத்துடனும், ஒரு இறுக்கமான கருப்பு சீருடை அணிந்துள்ளது. அதன் தலை ஒரு தலைகீழ் பெரிப்பழத்தின் வடிவத்தில் உள்ளது. குழுவினர் மீண்டும் பார்க்கும் போது, அந்த மூன்றாவது உருவம். இரு நபர்களிடம் ஒருசில ஒளி சமிக்ஞை முடிந்தவுடன் காணாமல் போய்விடுகிறது. மற்ற இரு உருவங்களும் அங்கேயே நிற்கின்றன.
பின்னர் அந்த இரு உருவங்கள் வெளிப்படையாக சாதாரண மனிதர்களாக மாறிவிட்டனர்; ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் போன்ற தற்காலிக துணிகளில் அணிவகுத்த அந்த ஜோடிகள், கொன்னில் கடற்கரை கிராமத்திற்குச் செல்லத் தொடங்குகிறது. கிராமத்திலுள்ள தெருக்களில் அவர்கள் போவதைக் காண்கிறது குழு.
இவை அனைத்திற்க்கும் முடிவாக, அவர்கள் இப்பொழுது கடலுக்கு மேல் கடந்து செல்லும் மேகம் போன்ற ஒன்றைக் கவனிக்கிறார்கள். மேலும் தங்களை அந்த கறுப்பு உருவம் கண்டதாக உணர்கிறார்கள். குழுவினரை அதை நோக்கி நிற்பதை நிறுத்திவிட்டு, தரையில் பதுங்கிக்கொண்டிருந்தனர். ஒரு சில நிகழ்வுகளுக்குப் பிறகு மேகமானது ஒளியின் வேகத்தில் நகர்த்தப்பட்டது.
பின்னர் குழுவினர் இரு நண்பர்களை கடற்கரையில் நிறுத்திவிட்டு, மற்றவர்கள் கொன்னில் கிராமத்திற்குச் திரும்பிச் சென்ற இரு உருவங்களை பின் தொடர்கின்றனர். அந்த இரு உருவங்கள் இப்போது 60 மீட்டர் தூரத்திலிருப்பதை கவனித்த குழு, அவர்களை நெருங்க. திடீரென இருள் சூழ்ந்துகொண்டு அந்த இரு உருவங்களும் மறைந்துவிடுகிறது.
இந்த ஆய்வு குழுவினர் சம்பவத்தால் மர்ம ஒளி நிகழ்வு சில நாட்களில் நிறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. கிடைக்கும் சாட்சியங்களைத் தொடர்ந்து. அந்த ஐந்து இளைஞர்கள் குழுவினர், குடும்பத்தினருடன் சில வாரங்களில் அரசாங்கத்தால் இடமாற்றங்கள் செய்யப்பட்டதாகவும். பின்னர் அவர்களை பற்றிய எந்தவித தகவலும் அறியவில்லை என்கின்றனர்...
திருக்குறள் மாநாட்டை கன்னட ஈ.வெ.ரா. நடத்தவில்லை...
இன்றைய இதயம் நல்லெண்ணெய் நிறுவனரும் அவர் நண்பர் வெள்ளைச்சாமி நாடாரும் ஒழுங்கு செய்த திருக்குறள் மாநாட்டில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டவர் ஈ.வே.ரா.
எப்படி 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பதினொராவது ஆளாக ஈ.வெ.ரா. கலந்து பின் அவர் தான் முன்னெடுத்த மாதிரி கோயபல்சு பானியில் பரப்பினரோ , அதேபோல் தான் இந்த திருக்குறள் மாநாட்டு கதையும்...
Subscribe to:
Posts (Atom)









