31/03/2019

பேய்கள் ஜாக்கிரதை...


நாம் வாழும் இந்த பிரபஞ்சத்துல பல விதமான விதிகள் இருக்கின்றன.

ஒவ்வொரு அணுவும் ஒவ்வொரு சக்தி நிலையில் இயங்குகின்றது.

ஆற்றல் அலைகளாக மாற்றபட்டு அணுக்களின் வழியே பயணிக்கிறது.

ஒவ்வொரு அலையும் அணுவை அடைந்தவுடன் அது தான் இருக்கும் சக்தி நிலையில் இருந்து தூண்டபடும் சக்தி நிலைக்கு உயர்கிறது.

இவ்வாறு தான் அலைகள் பிரபஞ்சத்தில் பயணிக்கிறது.

பிரபஞ்சத்தில் உள்ள அனைத்தும் ஒளியை உமிழ்கிறது.

அதை நம் கண்கள் கிரகித்து காட்சியாக தெரிகிறது.

ஆனால் அனைத்தையும் நம்மால் காண முடிவதில்லை.

உதாரணம் பூமி முப்பரிமாண அமைப்பை உடையது.

நாம் காண்பது ஒரு பரிமாணம் மட்டுமே.

அதே போல் நம் உடலும் இரண்டு பரிமாண தோற்றங்களை கொண்டது.

நமக்கு தெரிவது ஸ்தூல உடல் மட்டுமே. சூட்சம உடல் தெரிவதில்லை.

ஸ்தூல உடல் அணுக்கள் உமிழும் ஒளியே சூட்சம உடல்.

மரணத்திற்கு பின்பு ஸ்தூல உடல் மட்டுமே அழிகிறது. சூட்சம உடல் அழியாமல் குறிப்பிட்ட காலத்திற்கு பழக்கபட்ட விதத்தில் சுற்றித் திரிகிறது.

பிறகு பிரபஞ்ச அணுக்களின் இடையூரினால் ஆற்றல் இழப்பு ஏற்பட்டு கரைந்துவிடுகிறது.

ஒளி உடல் இருக்கும் வரை எண்ண பதிவின் தொடர்பு இருக்கும்.

தீராத ஆசையிலேயும் தீராத பாசத்திலேயும் தீராத கோபத்திலேயும் செத்தவன் ஆவியாக அலைவான்.

ஆவியை அடிக்கடி நினைத்து பயம் கொள்ளும் மனித மூளை அதன் அலைவரிசையில் தற்செயலாக தொடர்பு கொண்டு விடுகிறது.

பிறகு அவர்களுக்கு அமானூசிய அனுபவம் ஏற்படுகிறது.

உயிர் பிரிந்த பின்னும் அது உடலையே சுற்றி சுற்றி வந்து மீண்டும் உடலில் புக முயற்சிக்கிறது.

அந்த ஆவி மற்றவர்களை இடையூறு செய்கிறது.

வேறு உடலில் புகுந்து அந்த உடலை தன் கட்டுபாட்டிற்கு கொண்டு வருகிறது.

அதனால் மந்திரவாதிகளால் பல்வேறு சடங்குகள் செய்து உடலில் இருந்து விரப்படுகிறது.

அந்த ஆவி மிகவும் பயந்து அலைகிறது.

பிறகு மெல்ல மெல்ல உலக வாசனைகள் அற்று மோன நிலையில் ஆழ்ந்த உறக்க நிலையை அடைகிறது.

ஐம்புலன்கள் இல்லாமலேயே ஆவி நிலையில் நம்மால் பார்க்கவோ கேட்கவோ முடியும்.

சூட்சம உடலால் ஒளி வேகத்தில் பயணிக்க முடியும்.

ஆவிகளை தொடர்பு கொண்டு சாதாரணமாக பேசும் கருவிகளை கண்டு பிடிக்கும் காலம் விரைவில் வரலாம்...

வாரிசு அரசியல் கூத்து ரிசலட் வரை உயிரோடு இருக்க மாட்டேன் என் மகனை ஜெயிக்க வையுங்க அப்பாக்கள் கெஞ்சல்...


https://youtu.be/FZCyhPhBGR4

Subscribe The Channel For More News...

கணவர் அடிச்சதுல மூக்கு உடைஞ்சுடுச்சுனு போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் செய்த மனைவி...


கணவர் வேற யாருமில்ல, திண்டுக்கல் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மன்சூரலிகான் தான்...

பழிக்குபழி, ரவுடி கொலை....


திருவொற்றியூர் சுனாமி குடியிருப்பை சேர்ந்தவர் கிச்சா என்ற கிருஷ்ணமூர்த்தி(வயது 39). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. நேற்று முன்தினம் காலை கிருஷ்ணமூர்த்தி தனது லோடு ஆட்டோவில் தண்ணீர் கேன்களை ஏற்றிக்கொண்டு அரும்பாக்கம் பெருமாள்கோவில் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது மோட்டார்சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட மர்மகும்பல், கிருஷ்ணமூர்த்தியை வழிமறித்து சரமாரியாக வெட்டிக்கொலை செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டது.

இதுகுறித்து அண்ணாநகர் உதவி கமிஷனர் குணசேகரன் தலைமையில் அரும்பாக்கம் போலீசார் 2 தனிப்படை அமைத்து கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனர்.

இந்தநிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக அரும்பாக்கம் மற்றும் கோயம்பேடு பகுதியை சேர்ந்த சங்கர்(29), கார்த்திக்(23), கவிராஜ்(24), அஜீத்குமார்(24), பாபு(24) ஆகிய 5 பேரை அரும்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை செய்தனர்.

கைதானவர்களிடம் இருந்து கத்தி, மோட்டார்சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான சங்கர், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

அரும்பாக்கத்தில் கடந்த 2011-ம் ஆண்டு எனது சித்தப்பாவும், பா.ம.க. பிரமுகருமான நாகராஜ் கொலை செய்யப்பட்டார். அதற்கு முன்பு அவரது சகோதரர் சரவணன் என்பவரும் கொலை செய்யப்பட்டார்.

இந்த 2 கொலைக்கும் மூல காரணமாக ‘ஸ்கெட்ச்’ போட்டு கொடுத்து செயல்பட்டவர் ரவுடி கிருஷ்ணமூர்த்தி என்பது தெரிந்தது. தந்தை இல்லாத என்னை வளர்த்து ஆளாக்கிய 2 சித்தப்பாக்களின் கொலைக்கு காரணமான கிருஷ்ணமூர்த்தியை பழிதீர்க்க முடிவு செய்தேன்.

இதற்காக தக்க சமயம் பார்த்துக்கொண்டிருந்த நான், நேற்று முன்தினம் அரும்பாக்கத்துக்கு லோடு ஆட்டோவில் கிருஷ்ணமூர்த்தி வருவதை தெரிந்துகொண்டு 8 ஆண்டுகளுக்கு பிறகு எனது சித்தப்பாக்களின் கொலைக்கு பழிக்குப்பழியாக ரவுடி கிருஷ்ணமூர்த்தியை எனது நண்பர்களுடன் சேர்ந்து வெட்டிக்கொலை செய்தேன்.

இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
இந்த கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலும் ஒருவரை போலீசார் தேடி வருகின்றனர்...

தமிழர் வரலாறு - பகுதி 7 / ஐயா ஒரிசா பாலு...


https://youtu.be/LLvm4P62m0w

Subscribe The Channel For More News...

காலப் போக்கில் அழிந்து போன எழுத்துக்கள்...


ஏற்கனவே சுமேரியர்களின் ஆப்பெழுத்து முறைகள் என்ற ஒன்றை பற்றி பதிவுபதிந்து இருந்தேன் அல்லவா..

அதே கட்டத்தில் அதற்கும் முன்பு அதாவது இயேசு பிறப்பதற்கு ஏறக்குறைய 8,000 வருடங்களுக்கு முன்பாக இருந்ததாக நம்பப்படும் ஒரு எழுத்து தான் Anatolian hieroglyphs என்ற எழுத்து முறை..

இது எழுத்தாக எழுதப்படாமல் பொருளாகவே இருந்தது [அதாவது மரத்தை செதுக்கி  வடிவமாக ஆக்கி அதை  எழுத்தாக உருவாக்குவது].

இதுவரைக்கும் 500 குறியீடுகளை கண்டு பிடித்துள்ளனர்.

எகிப்தின் படவரியுருக்கள் உலக பிரசித்தி பெற்றதாக ஆகிறது.

இந்த படம் என்ன சொல்கிறது. இது விமானத்தின் முன்னறிவிப்பு என்றெல்லாம் சொல்ல கூடிய நாம் கூட இந்த அனத்தோலியப் படவரியுருக்களை கண்டு கொள்வதே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்..

இது உருவான இடம் இன்றைய துருக்கி பகுதி என்று சொன்னாலும் சிரியாவில் கூட உருவாகி இருக்கலாம் என்றும் கருதுகின்றனர்..

Bronze Age என்று சொல்லக்கூடிய வெண்கல கால பகுதியில் பேசி இருக்க வேண்டும் என்று அனுமானமாக சொல்லுகிறார்கள்..

இந்த கால கட்டம் கி,மு 14 அல்லது 15 ம் நூற்றாண்டில் பேசி இருக்கலாம் என்று கருதப்படுகிறது..

புகைப்படத்தில் உள்ள ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு எழுத்தை குறிக்க கூடியது.

நமக்கு வெரும் படமாக இருந்தாலும் அவர்களுக்கு இது ஒவ்வொன்றும் ஒரு எழுத்து...

திமுக வேட்பாளர் சாராய வியாபாரி ஜெகத்ரட்சகன்-க்கு வந்த சோதனை....


சிறுவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் முதியவர் படுகொலை...


கோவை மாவட்டம் சூலூரை அடுத்த தென்னம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (வயது 41). அதே பகுதியில் கணினி பழுதுபார்க்கும் மையம் நடத்தி வருகிறார். இவருக்கு கல்பனா (31) என்ற மனைவியும், சஷாந்த் (7) என்ற மகனும் உள்ளனர். இவர்களது பக்கத்து வீட்டில் வசிப்பவர் எட்வின் (48), கட்டிட மேஸ்திரி. இவருக்கு பிரபாகரன் (27), தமிழ் பிரபு (15), தமிழ்ச்செல்வன் (11), ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தென்னம்பாளையம் பகுதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் சஷாந்த் மற்றும் தமிழ்ச்செல்வன் ஆகியோர் சாமி கும்பிட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது சஷாந்தின் கால் எதிர்பாராதவிதமாக தமிழ்ச்செல்வன் மீது பட்டதாக தெரிகிறது. இதில் இருவருக்கும் இடையே சண்டை ஏற்பட்டு ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் தடுத்து அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து சஷாந்த் தனது தாய் கல்பனாவிடம் கூறினார். இந்த நிலையில் நேற்று கல்பனா தனது தந்தை நாகராஜனுடன் (60) சேர்ந்து எட்வின் வீட்டுக்கு சென்று குழந்தைகள் இடையே ஏற்பட்ட பிரச்சினை குறித்து கேட்டனர். இதில் இரு தரப்புக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரம் அடைந்த எட்வின் உருட்டு கட்டையை எடுத்து நாகராஜன் தலையில் தாக்கி உள்ளார்.

இதில் தலையில் பலத்த காயம் அடைந்த நாகராஜன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து விட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த எட்வின் தனது மோட்டார் சைக்கிளை எடுத்து கொண்டு தப்பி சென்றுவிட்டார். இது குறித்த தகவலின் பேரில் சூலூர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தப்பிச் சென்ற எட்வினை பிடிக்க போலீசார் தீவிரமாக தேடினர்.

எட்வினின் மூத்த மகனான பிரபாகரனிடம் போலீசார் விசாரணை செய்தனர். அப்போது சூலூரை அடுத்த கருமத்தம்பட்டியில் எட்வின் மறைந்து இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை பிடித்து போலீசார் சூலூர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் நாகராஜனை கட்டையால் தாக்கி கொலை செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுவர்கள் இடையே ஏற்பட்ட தகராறில் முதியவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

நாடக கம்பெனி பாஜக...


கள்ளக்காதலனை கொன்று செப்டிக் டேங்கில் வீசிய பெண்.. போலீசில் பிடிபட்டார்...


நாகை மாவட்டம் மயிலாடுதுறையை அடுத்த தமுக்காணி முட்டம் பகுதியை சேர்ந்தவர் பூராசாமி(வயது 46). இவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இதனையடுத்து அய்யாபிள்ளை என்பவரும், பரிமளா என்ற பெண்ணும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.

கடந்த 13-ம் தேதி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது கோபத்தின் காரணமாக தள்ளிவிட்டதில் கீழே விழுந்த அய்யாப்பிள்ளை, தலையில் அடிப்பட்டு மயங்கியுள்ளார். அவர் உயிரிழந்துவிட்டதாக எண்ணிய பரிமளா, உடலை வீட்டின் கழிவுநீர் தொட்டியில் போட்டு மூடியுள்ளார்.


இதனையடுத்து அய்யா பிள்ளையின் சகோதரர் தனது சகோதரர் காணவில்லை என வடலூர் காவல்நிலயத்தில் புகார் அளித்துள்ளார். போலீசாரின் விசாரணையின் போது முன்னுக்கு பின் முரணான தகவலை அளித்தார்.

இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். அதில் அய்யாப்பிள்ளையை கொலை செய்ததை பரிமளா ஒப்புக்கொண்டார்.

இதனையடுத்து அய்யாப்பிள்ளையின் உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக குறிஞ்சிப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பரிமளாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்...