03/04/2019

தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான்...


முக்கடலும் முத்தமிழும் மூவேந்தர் பரம்பரையும் கோட்டையிலே வில், புலி, மீன் கொடிகள் நாட்டி செந்தமிழ் தாய் சீரிமை திறம் விளங்க சங்கம் வைத்து தமிழ் வளர்த்த பாண்டியனும் அவன் அமைத்த தமிழ் சங்கத்திலே எழுத்தாணி ஏந்தி தலைமைப்புலவனாய் தமிழாய்ந்த புலவர்களில் ஒருவர் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் ஆவார்.

அதன்கோட்டின் அமைவிடம்:
தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்கள் வாழ்ந்த வரலாற்று சிறப்புமிக்க இடம்தான் அதங்கோடு. இவ்விடம் குமரி மாவட்டத்தின் மேற்கு திசையில் வள்ளுவன்கோடு என அழைக்கப்பட்டு பின்னர் விளவங்கோடு என மருவிய விளவங்கோடு தாலுக்காவில் முன்சிறை ஊராட்சி ஒன்றியத்தில் மெதுகும்மல் ஊராட்சியில் அமைந்துள்ளது.

அதன்கோட்டில் சூரியமுக்கு என்னும் இடமுண்டு. இவ்விடத்தின் அருகில் "பக்றுளி ஆறு" என்று சங்ககாலத்தில் அழைக்கப்பட்ட குழித்துறை தாமிரபரணி ஆறு செல்கிறது. தொன்றுதொட்டே அதங்கோடு ஒரு ஆற்றங்கரை நாகரீகப் பகுதியாக இருந்து வந்துள்ளது. இந்த ஆற்றில் அடிக்கடி வெள்ளப்பெருக்கு ஏற்படுவது வழக்கம்.

அதங்கோடு சூரியமுக்கில் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் அவர்களால் நடத்தப்பட்டு வந்த தமிழ் சங்கம் தண்ணீர் பெருக்கால் அழிக்கப்பட்ட காரணத்தினால் அவரும் அவரோடு சார்ந்த தமிழ்ப்புலவர்களும் பாண்டிய மன்னர்களால் ஆட்சி செய்யப்பட்டு வந்த 'கபாடபுரத்தில்' நடந்த தமிழ் சங்கத்தில் இணைந்தார்கள். கபாடபுர தமிழ்ச்சங்கத்தை கும்பவம்பக்குறுமுனி என்று அழைக்கப்பட்ட "அகத்தியர்" தலைமைதாங்கி நடத்தி வந்தார். அவருடன் கீழ்க்கண்ட பன்னிரு பெரும் சீடர்களாயினர்.

தொல்காப்பியர்
அதங்கோட்டாசான்
துராளிங்கன்
செம்புத்செய்
வையாபிகன்
வாய்ப்பியன்
பணம்பாரன்
கலாரம்பன்
அவினயன்
காக்கை பாடினியன்
நட்டதன்
வாமணன்

இவர்களை அகத்தியரின் "பன்னிருமாணாக்கர்" என அழைக்கிறோம். 'கபாடபுரத்தில் ',"அகத்தியர்" தலைமையில் நடந்து வந்த தமிழ் சங்கத்திற்கு,முதல் தமிழ் இலக்கண நூலாக இருந்தது "அகத்தியம்" என்னும் இலக்கண நூல் ஆகும்."அகத்தியம்" கால வெள்ளத்தால் அழிந்த காரணத்தால் அதற்கு வழி நூலக ஒரு இலக்கண நூலை இயற்ற தனது தலை மாணாக்கரான தொல்காப்பியரை அழைத்துச்சொன்னார் அகத்தியர்.

இந்நிலையில் தொல்காப்பியர் தொல்காப்பியத்தை இயற்றினார்.மதுரை தமிழ்ச்சங்கத்தில் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியம் தமிழ் பெரும்புலவர் அதங்கோட்டாசான் தலைமையில் அரங்கேற்றப்பட்டது என்பது வரலாறு.

தொல்காப்பியரால் இயற்றப்பட்ட தொல்காப்பியத்தில் எழுத்து, சொல், பொருள் ஆகிய மூன்று அதிகாரங்களிலும் எக்குற்றமும் இல்லை என அறுதி இட்டு கூறினார் அதங்கோட்டாசான்.

பணம்பாரரின் கருத்து:

தொல்கபியப் பாயிரத்திற்கு உரை எழுதிய பணம்பாரன் என்னும் தமிழ்ப் புலவர் தனது சிறப்புப் பாயிரத்தில்

"நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து
அரங்கரை நாவின் நான்மறை முற்றிய
அதன்கோட்டாசாற்கு அகில் தபத்தெரிந்து"

இதன் விளக்கம் யாதெனில் ,
மாற்றானது நிலத்தை தன் கீழ் வாழ்வார்க்கு கொண்டு கொடுக்கும் மன்னன் மாகீர்த்தியது அவையின் கண் நான்கு மறைகளையும் அதாவது ரிக், யஜூர் , சாம,அதர்வண எனும் நான்கு வேதங்களையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என விரிவாக எழுதிஉள்ளார்.

இளம்பூரணரின் கருத்து:

தொல்காப்பியம் எழுத்ததிகாரத்திற்கு உரைப்பாயிரம் எழுதிய இளம்பூரணம் என்னும் தமிழ்ப்புலவர் நான்கு மறைகளையும் முற்றும் உணர்ந்த "அதங்கோடு" என்கின்ற ஊரின் ஆசான் அதங்கோட்டாசான் தலைமையில் தொல்காப்பியம் அரங்கேற்றப்பட்டது என்று எழுதிஉள்ளார்.

அடைமொழி இன்றி தனிமொழியாக "அதங்கோடு" என்கிற ஊர் திகழ்கிறது. அதனால் தொல்காப்பியர் இயற்றிய தொல்காப்பியத்தை அரங்கேற்றியவர் அதன்கோட்டில் பிறந்து தமிழ் ஆய்ந்த இடம் "அதங்கோடு" என உறுதி செய்யப்பட்டுள்ளது...

துப்பாக்கிகள், பீரங்கிகள் இருந்த பொழுதும் தமிழனின் வளரியை கண்டு அஞ்சிய ஆங்கிலேய படைகள்...


மருத்துவ குறிப்புகளைத் தாங்கி வந்த தமிழர் பழமொழிகள்...


தமிழர்களால் வழிவழியாகச் சொல்லப்பட்டு வரும் பழமொழிகளால், முந்தைய தமிழ் மக்களின் பண்பாட்டையும், பழக்க வழக்கங்களையும், சமுதாயப் பின்னணியையும் அறிந்து கொள்ள முடிகின்றது.

இத்தகைய பழமொழிகளில் மருத்துவச் செய்திகளும், நோய் ஏற்படாமல் இருக்கக் கடைப்பிடிக்க வேண்டிய ஆரோக்கிய வழிமுறைகளும், மற்றும் உணவு மற்றும்  மருந்துப் பொருட்களின் மருத்துவ தன்மைகளும், அதனால் குணமடையக்கூடிய நோய்கள் பற்றிய விபரங்களும் காணக்கிடைக்கின்றன.

 இத்தகைய மருத்துவப் பழமொழிகள் பெரும்பாலும், மக்களால் சாதாரணமாகப் பேசப்படுவதில்லை. நோய் உண்டான போதும், கேலியாகப் பேசும் போதும் மட்டுமே வெளி வருகின்றன. மக்களின் அனுபவங்களே பழமொழிகள். அரிய மருத்துவச் செய்திகள் அடங்கிய பழமொழிகள் சிலவற்றைக் காண்போம்...

1. ”இளைத்தவனுக்கு எள்ளைக்கொடு;
கொளுத்தவனுக்குக் கொள்ளைக் கொடு”

எள், கொள்ளு என்பவை இரண்டும் உணவு வகைகள். எள் என்பது நல்ல சத்துள்ள உணவாகும். மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள் எள்ளைத் தின்றால் நன்கு உடல் பெருக்கும் என்றும், பருமனான உடலைக் கொண்டவர்கள் கொள்ளைத் தின்றால், உடல் மெலிந்து போதுமான அளவோடு இருக்கும் என்றும் இப்பழமொழி கூறுகிறது.

2. ”ஆற்றுநீர் வாதம் போக்கும்; அருவி நீர் பித்தம் போக்கும்; சோற்று நீர் இரண்டையும் போக்கும்“

மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும். இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும் நோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது. ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும். மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக்கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன. இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது. இத்தகைய மருத்துவகுணம் கருதியே நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

3.”வேலம் பட்டை பித்தத்தைப் போக்கும்; ஆலம்பட்டை மேகத்தைப் போக்கும்”

வேலம்பட்டையை இடித்து ஒரு குவளை நீர்விட்டுக் காய்ச்சி வடிகட்டி அரைக் குவளையாக்கித் தினமும் காலை வேளை மட்டும் குடித்துவர பித்த நோய்களான, வயிற்றுப்புண், பித்தமயக்கம், கைகால் குடைச்சல் குணமாகும். ஆலமரத்தின் பட்டையைக் குடிநீராக்கி குடித்து வர வாய்ப்புண், வாய்நாற்றம், சிரங்கு, கரப்பான்படை ஆகியன விலகும் என்கிறது பழமொழி.

4. ”மாதா ஊட்டாத அன்னத்தை மாங்காய் ஊட்டும்”

மாங்காய் என்பது மாங்காய் ஊறுகாயைக் குறிக்கும், மாங்காய் ஊறுகாய் பசியைத் தூண்டுகிறது. எனவே உணவில் மாங்காய் ஊறுகாயைச் சேர்த்துக் கொள்வதால் ஜீரண சக்தி அதிகரிக்கும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.

5. ”ஒரு போது உண்பான் யோகி; இருபோது உண்பான் போகி; முப்போது உண்பான் துரோகி”

ஒரு வேளை உணவை உட்கொண்டு ஆழ்ந்த யோகப் பயிற்சி மேற்கொள்வதால், மூளையின் அடிப்பகுதியில் ஹைப்போதாலமஸ் என்னும் அமைப்பிற்குக் கீழே உள்ள சுரப்பியானது நரை திரை நோய்களை அணுக விடாது. இருவேளை உணவை உட்கொள்வதால் வாழ்வு நோயற்று இன்பமுடையதாக இருக்கும். மூன்றுவேளை உணவு கொள்பவர்கள் நோயாளிகளாகவே இருப்பர். அஜீரணம், மலச்சிக்கல், குடல்நோய் போன்றவற்றால் இவர்கள் பாதிக்கப்பட்டு, எந்நேரமும் நோயுடன் போராடி வாழும் நிலையை உண்டாக்கும்.

6. ”அழுத பிள்ளை சிரித்ததாம் கழுதைப் பாலைக் குடித்ததாம்”

சில குழந்தைகள் பிறக்கும்போதே நோய்களின் அறிகுறியுடன் பிறக்கின்றன. உள்ளங்கை, உள்ளங்கால் பகுதிகள் நீல நிறமாக இருப்பின் குழந்தை செவ்வாப்பு என்னும் நோயால் தாக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் கருதுகின்றனர். இதற்குரிய மருந்தாகக் கழுதைப் பால் புகட்டப்படுகிறது என்பதனை இப்பழமொழி குறிக்கிறது.

7. ”இருப்பவன் இரும்பைத் தின்பான், போறவன் பொன்னைத் தின்பான்“

உடல் இயங்குவதற்கு இரும்புச் சத்து இன்றியமையாதது. இதன் குறைவால் இரத்தச் சோகை என்னும் நோய் ஏற்படுகிறது. எனவே இரும்புச்சத்து அதிகமுள்ள காய் கறி உள்ளிட்ட உணவுப் பொருளை உட்கொள்ளுதல் வேண்டும். போக இச்சையை விரும்புபவர்கள் பொன்னைப் பஸ்பமாக்கி உண்பார்கள். இதனால் நரம்புக் கோளாறு, சிறுநீரகக் கோளாறு போன்றவை ஏற்படும்.  இதனைக் குறிக்க, போறவன் பொன்னைத் தின்பான் என்றார்கள்.

8. ”ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன்”

இதனைக் கிராமப்புற மக்கள் ஆயிரம் பேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்று வழங்குகின்றனர். ஆயிரம் வேரைக் கொன்றவன் அரை வைத்தியன் என்பதுவே இதன் பொருளாகும். நாட்டுப்புற மருந்துகளில் மூலிகைச் செடிகளும் அவற்றின் வேர்கள் மற்றும் பட்டைகளும் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றுள் குறைந்தது ஆயிரம் வேர்களின் பயன்பாடு பற்றி ஒருவன் தெரிந்திருந்தால் மட்டுமே அவன் அரை வைத்தியன் என்ற நிலையைப் பெற இயலும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

9. ”அரசனை நம்பிப் புருஷனைக் கைவிட்டாளாம்”

அரச மரத்தைச் சுற்றிவந்தால் குழந்தைப் பாக்கியம் ஏற்படும் என்று யாரோ கூறக்கேட்ட ஒருத்தி, கணவனுடன் சேராமல், அரசமரத்தை மட்டுமே சுற்றி வந்தாளாம். அரசமரமும், வேம்பும் இணைந்த மரத்தினைச் சுற்றிவர காற்றானது கருப்பையில் உள்ள நச்சுக் கிருமிகளை அழிக்கும் தன்மை வாய்ந்தது என்பதை அறிந்தே நம் முன்னோர்கள் பிள்ளையார் சிலையை இந்த மரத்தின் கீழ் வைத்தனர். குழந்தைப் பாக்கியமற்ற பெண்கள் கும்பிடுவதற்கு இதுவே முக்கிய காரணம் ஆகும்.

10. ”ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி”

ஆலும் என்பது ஆலமரத்தின் விழுதினையும், வேலமரம் என்பது வேப்ப மரத்தின் குச்சியையும், நாலும் என்பது நாலடியாரையும் இரண்டு என்பது திருக்குறளையும் குறிக்கும். இது பொதுமக்கள் அனைவராலும் சாதாரணமாகப் பயன்படுத்தப்படும் பழமொழியாகும்.

ஆலமரத்தின் விழுதினையும், கருவேல மரத்தின் மரக்குச்சிகளையும் நன்கு மென்று பல்விளக்க, பல் நன்கு பளபளப்புடனும், பல் ஈறுகள் நல்ல பலத்துடனும் காணப்படும் என்னும் செய்தி இப்பழமொழியில் விளக்கம் பெறுகிறது.

11. ”பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்”

மருத்துவக் குணம் கொண்ட மிளகு நம் உணவில் பயன்படுத்தப்படும் பொருள்களுள் ஒன்றாகும். இந்த மிளகு நஞ்சு நீக்கும் தன்மையுடையது. பகைவர்களின் வீட்டில் உண்ணும் உணவில் விஷம் கலந்திருந்தாலும், பாம்பின் விஷம் தாக்கியவர்களுக்கு விஷத்தின் தன்மையைக் கண்டறிவதற்கும் மிளகு பயன்படுகிறது. பாம்பால் கடியுண்டவருக்கு மிளகின் எரிப்புச் சுவை தெரியாவிட்டால் உடம்பில் விஷம் தாக்கி விட்டதாகக் கூறுகின்றனர்.

12. ”விருந்தும் மருந்தும் மூன்று நாள்”
சொந்தக்காரர்கள் வீட்டிற்கு விருந்துக்குச் சென்றால் மூன்று நாள் மட்டுமே இருக்க வேண்டும். நீண்ட நாட்கள் இருப்பின் பகையுண்டாகும். மருத்துவரிடம் மருந்து உட்கொள்ளும்போது, ஒரு மருந்தின் ஆற்றல் மூன்று நாட்களுக்குள்ளாக தெரிந்துவிடும். இல்லையேல் மருந்தை மாற்ற வேண்டும் என்கிறது இப்பழமொழி.

13. ”ஆவாரைப் பூத்திருக்கச் சாவோரைக் கண்டதுண்டோ”

ஆவாரைப் பூ இதழ்களைச் சேகரித்து, நிழலில் உலர்த்திக் காய வைத்து, இடித்து வைத்துக் கொண்டு தேநீர்,   கோப்பித்தூள் இவைகளுக்குப் பதிலாக உபயோகித்து வர உடல் வறட்சி, உடல் நாற்றம், நீரிழிவு நோய், தோல் நோய் ஆகிய நோய்களைக் குணமாக்குவதால், ஆவாரைப் பூவின் மகத்துவத்தைக் குறிக்க வந்த பழமொழியாகும்.

இதுபோன்று ஏராளமான பழமொழிகள் மருத்துவக் குறிப்புகளை உணர்த்தும் நோக்கில் சொல்லப்பட்டுள்ளன. உலகில் வேறெந்த இனத்தாரும் இப்படிச் சொன்னதில்லை என்பது தமிழர்களுக்கு பெருமையான விடயம..

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்...

திருட்டு இரயில் ஏறி வந்த திமுக குடும்பத்தில் ஒரு நபருக்கே இம்பூட்டு சொத்து என்றால்...


எகிப்த்தை ஆண்ட தமிழன்...


எகிப்திய அரசுகளில் பதினெட்டாம் அரசாட்சியின் பத்தாவது அரசர் ஆக்கியநாதன் (Akyyanatan) (1352 BC). இவர் தன்னை சூரிய வம்சத்தை சார்ந்தவர் எனக் கூறிக் கொண்டார் .

அதுவரையில் பல்வேறு குழப்பத்துடன் இருந்த எகிப்த்திய சமயத்தை இவர் ஆட்சிக் காலத்தில் முற்றிலுமாக மாற்றினார். அதாவது சூரியனையே ஒரே கடவுளாக இவர் அரிவித்துள்ளார்.

இவர்காலத்தில் தான் ஆதன் (Athen) அதாவது சூரியனையே முழுமையான கடவளாக எகிப்த்தியர்கள் வளிபட்டார்கள். ஆனால் இவர் ஒரு எகிப்த்தியர் இல்லை.. மற்றும் இவர் கடவுள்கள் வாழும் இடத்தில் இருந்து வந்தார் என்று எகிப்திய மக்களால் நம்பப்படுகிறது. இவர் தான் அமோர்னா என்ற நகரத்தை தோற்றி வைத்தவர். இவரின் மகன் தான் தொட்டகாமன் (tutunhaman)..

இவர்கள் தமிழர்களாக இருப்பதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளது..

எடுத்துக்காட்டாக சோழர்கள் தங்களை சூரிய வம்சத்தவர்கள் என்றும் பாண்டியர்கள் சந்திரன் வம்சத்தவர்கள் என்றும் கூறிக்கொண்டார் .

உண்மையான தமிழர் வரலாறு மீட்க்கப்படும் வறையில்… ஆக்கியநாதன் ஒரு என்சியன்ட் ஏலியன்...

02/04/2019

தங்கள் சொந்த மண்ணிலேயே மக்களின் போக்குவரத்துக்குத் தடை..


இப்படித் தடை போட்டு சுங்கச்சாவடிகள் மூலம் கட்டணம் வசூலிப்பது மனித உரிமை மறுப்பு மற்றும் பறிப்பே..

வழிப்பறிகொள்ளைக்கூடங்களாய்த் திகழும் இந்தச் சுங்கச்சாவடிகள் வருடாந்தோறும் கட்டணத்தையும் உயர்த்திக்கொள்வதற்கு கண்டனம் தெரிவிகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

தமிழகத்தில் மொத்தம் 42 சுங்கச்சாவடிகள் இருந்தன. இப்போது 45 ஆக உயர்ந்துள்ளதாகத் தெரிகிறது. அதில் 22 சுங்கச்சாவடிகளில் இன்று ஏப்ரல் 1ந் தேதி முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. ஆண்டுதோறும் சுழற்சிமுறையில் செப்டம்பர் மற்றும் ஏப்ரல் மாதங்களில் கட்டணம் உயர்த்தப்படும். அந்தவகையில் இன்று முதல் கட்டண உயர்ந்திருக்கிறது.
இந்தக் கட்டண உயர்வு இவ்வளவுதான் என்று கூறப்படாமல், 10 விழுக்காடு வரை  இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த ஆண்டு கட்டண உயர்வு 10 விழுக்காடு முதல் 20 விழுக்காடு வரை என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் வசூலுக்கப்படும் கட்டணத்திற்கும் அதற்கும் சம்பந்தமில்லை. 40 விழுக்காடு வரைகூட சில சுங்கச்சாவடிகளில் வசூலிக்கப்பட்டது. இப்போது திட்டவட்டமாக அறிவிக்கப்படாமல் 10 விழுக்காடு வரை இருக்கும் என பொத்தாம்பொதுவாக அறிவிக்கப்பட்டிருப்பதால் வசூல் கடுமையாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

இப்படி வரைமுறையற்ற கட்டண வசூலாக இருப்பதால்தான் சுங்கச்சாவடிகளை வழிப்பறி கொள்ளைக்கூடங்கள் என்கிறோம். நாம் சொல்வதற்கிணங்கவே அவை நடந்துகொள்கின்றன. அப்பாவி பொதுமக்களின் வண்டியை மறித்து குடும்பத்தோடு வருபவர்களையும் தாக்குவது, கட்டணம் செலுத்திய பிறகும் கஞ்சா, அபின், டாஸ்மாக் சரக்கு போன்றவற்றுக்காக மிரட்டிப் பணம் பறிப்பது என சுங்கச்சாவடிகளில் நடக்கும் அக்கிரமங்களுக்கு அளவே இல்லை. புகார் கொடுத்தாலும் உரிய நடவடிக்கை இல்லை. காவல்துறை வாகனங்கள், தனியார் செக்யூரிட்டி (குண்டர்கள்) வாகனங்கள் உள்ளிட்டவை எந்நேரமும் சுங்கச்சாவடிகளுக்குப் பாதுகாப்பாக நிறுத்தப்பட்டுள்ளன. 99 விழுக்காடு வட இந்தியர்களையே ஊழியர்களாக வைத்துக்கொண்டு, அவர்களோடு உள்ளூர் ரவுடிகள், தாதாக்கள், கொலைக்குற்றவாளிகள் போன்றோரையும் இணைத்துக்கொண்டு இந்த அடாவடி அக்கிரமங்களைச் செய்துகொண்டிருக்கின்றன இந்தச் சுங்கச்சாவடிகள்.

தனியார் கையில் உள்ள 15 சுங்கச்சாவடிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள 7 சுங்கச்சாவடிகள் என 22 சுங்கச்சாவடிகளில் இன்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. தனியார் கையில் என்பது கார்ப்பொரேட்டுகள் கையில் என்பதே. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள 7 சுங்கச்சாவடிகள் என்பது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. ஏனெனில் அவையும் கார்ப்பொரேட்டுகளின் சுங்கச்சாவடிகள் போல்தான் செயல்படுகின்றன. பரனூர், வானகரம், சூரப்பட்டு, கிருஷ்ணகிரி, கப்பலூர், நாங்குநேரி, எட்டூர் வட்டம், பாலைபுத்தூர், பூதக்குடி, சிட்டம்பட்டி, பள்ளிகொண்டா, வாணியம்பாடி, திருப்பெரும்புதூர், வாலாஜா, வாகைகுளம், ஆத்தூர், பட்டறைப்பெரும்புதூர், எஸ்.வி.புரம், லட்சுமணப்பட்டி, லெம்பலாக்குடி, தனியூர் ஆகியவைதான் கட்டணம் உயர்த்தப்பட்ட இந்தச் சுங்கச்சாவடிகள். இவற்றில் சாலைகளின் தூரம், தரம், வசதி ஆகியவற்றிற்கேற்ப கட்டண விழுக்காடு மாறிமாறி இருக்கும் என்று சொல்லப்படுகிறது.

சாலைகளைப் பராமரிக்கவே ஆண்டுதோறும் 10 விழுக்காடு வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்கிறார்கள். ஆனால் அப்படி சாலைகள் பராமரிக்கப்படுவதில்லை. உதாரணத்திற்கு, பள்ளிகொண்டாவிலும் வாணியம்பாடியிலும் 4 வழிச்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்படும் என்று 2009இல் அறிவித்து, அதற்கேற்ப அதிக கட்டணம் வசூலித்துவருகிறார்களே தவிர, இன்றுவரை அந்த சாலைப் பணி கூட தொடங்கப்படவில்லை.
சுங்கச்சாவடிகளில் ஆம்புலன்ஸ் எந்நேரமும் தயாராக இருக்க வேண்டும். ஆனால் அது நம் கண்ணில் பட்டதேயில்லை. குடிநீர், கழிப்பறை மற்றும் போதிய அளவில் சர்வீஸ் சாலைகள், மின்விளக்குகளும் இருக்க வேண்டும். ஆனால் அப்படி எங்கும் கானப்படவில்லை.

சுங்கக் கட்டண உயர்வால், வாகனங்கள் ஏற்றிச்செல்லும் சரக்குகளின் விலை உயரும்; இந்த விலைவாசி உயர்வு வரி என்ற பெயரில் மக்கள் தலையில் இடியாக இறங்கும்! நாட்டின் பொருளாதாரமும் மக்களின் வாழ்வாதாரமும் அதலபாதாளத்திற்குச் செல்லும். இதனால்தான் சுங்கச்சாவடிகளை அகற்றியாக வேண்டும் என்பதை சிறப்புக் கொள்கையாகவே கொண்டு போராடிவருகிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. அதனால் பொய்வழக்ககுகளையும் எதிர்கொண்டுவருகிறோம்.
சென்னை உயர் நீதிமன்றம் பல முறை சுங்கச்சாவடிகளின் நடைமுறைகளைக் கண்டித்திருக்கிறது; திருத்திக்கொள்ள உத்தரவிட்டிருக்கிறது. மேலும் 30 செகண்டுகளுக்கு மேல் வாகனங்கள் வரிசையில் நிற்கக்கூடாதென்றும் சொல்லியிருக்கிறது. ஆனால், பல சாவடிகளில் மணிக்கணக்காக, பல கி.மீட்டர்கள் தொலைவுக்கு வாகனங்கள் காத்துக்கிடக்கின்றன. இதில் நீதியரசர்கள், ஆம்புலன்ஸ், காவல் கண்கணிப்பாளர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர்கள்,
பத்திரிகையாளர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள் போன்ற விஐபிக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்காமல், அவர்களுக்கென்று சுங்கச்சாவடிகளில் தனி வழி ஏற்படுத்தப்பட வேண்டுமென்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆனால் அப்படி ஒரு தனி வழி இதுவரை எந்தச் சுங்கச்சாவடியிலும் அமைக்கப்படவில்லை.

அப்படியென்றால் நீதிமன்றத் தீர்ப்பையே மதிக்காமல் லஞ்சம் ஊழலையே மூலதனமாக வைத்து சுங்கச்சாவடிகளை நடத்தும் கார்ப்பொரேட்டுகள் மத்திய, மாநில ஆட்சியாளர்களின் துணையில் தனி அக்கிரம சாம்ராஜ்யமே நடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்பதுதானே என்றுதானே அர்த்தம்?

இதைத் தன்னந்தனியாக நின்று தட்டிக்கேட்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி. ஆனால் எங்கள் மேல் தேச துரோகம் உள்ளிட்ட பொய் வழக்குகளைப் போடுகிறார்கள் மத்திய, மாநில ஆட்சியாளர்கள்.

இந்தக் கொடூரத்தையும் பயங்கரவாதத்தையும் எதிர்கொண்டு தான் சுங்கச்சாவடிகளை அகற்றியே தீர வேண்டுமென்று போராடிக் கொண்டிருக்கிறது தமிழக வாழ்வுரிமைக் கட்சி.

போராட்டத்தின்போதெல்லாம் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தை அணுகி எங்கள் கோரிக்கையை சாத்வீக முறையிலேயே முறையீடாக அளிக்கிறோம். ஆனால் மத்திய, மாநில அரசுகள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. ஆனால் நாங்கள் சோஎர்ந்துவிடமாட்டோம். மக்களுக்காக, அம்மக்களின் பேராதரவுடணேயே இதனைச் செய்து முடிப்போம்.

தங்கள் சொந்த மண்ணிலேயே மக்களின் போக்குவரத்துக்குத் தடை என்பதுதான் இந்தச் சுங்கச்சாவடிகள்!
இவற்றில் கட்டணம் வசூலிப்பது மனித உரிமை மறுப்பு மற்றும் பறிப்பே!
வழிப்பறிகொள்ளை செய்வது மட்டுமல்லாமல் ஆண்டுதோறும் கட்டணத்தையும் இவை உயர்த்துவது கண்டனத்துக்குரியது...

தலைமை தேர்தல் அதிகாரி அதிரடி முடிவு.. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து ஆகுமா.?


https://youtu.be/mDzqJL0saVg

Subscribe The Channel For More News...

வான்கோழி வளர்ப்பு முறைகள்...


ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சிகளுக்கு அடுத்தப்படியாக அசைவப் பிரியர்களின் உணவாக இருப்பது வான்கோழி ஆகும். இதன் சுவையும் அனைவருக்கும் பிடிக்கும். தற்போது கோழி வளர்ப்பவர்களின் அனைவரது கவனமும் வான்கோழி வளர்ப்பில் அதிகரித்துக் கொண்டு வருகிறது. தற்போது வான்கோழி வளர்ப்பு முறையை பற்றி பார்போம்.

இடம் தேர்வு செய்யும் முறை :

வான்கோழி வளர்க்க அதிக இடவசதியோ, முதலீடோ தேவையில்லை. வான்கோழி வளர்க்க விரும்புபவர்கள் 200 முதல் 250 சதுர அடி இடத்தில் 100 வான்கோழி குஞ்சுகளை வளர்க்கலாம்.

வான்கோழி இனங்கள் :

அகன்ற மார்புடைய வெண்கல இனம், அகன்ற மார்புடைய வெள்ளை இனம்(கரி-விரட்), பெல்ட்ஸ்வில்லி சிறிய வெள்ளை இனம், நந்தனம் வான்கோழி ஆகிய வான்கோழி இனங்கள் ஆகும். இதில் நந்தனம் வான்கோழி இனமானது நமது பகுதிகளுக்கு வளர்க்க ஏற்றதாகும்.

வான்கோழி கொட்டகை அமைக்கும் முறை :

வான்கோழி வளர்ப்புக்கு புறக்கடையில் அதிக செலவு செய்து கொட்டகை அமைக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக பழைய டைமண்ட் லிங்க் வேலிகளை வாங்கி தடுப்பு அமைத்துக்கொள்ளலாம். வான்கோழி வளர்க்கும் போது கொட்டகைக்குள் மழை மற்றும் வெயில் பாதிக்காத அளவுக்கு மூங்கில், தென்னங்கீற்று ஆகியவற்றை கொண்டு கொட்டகை அமைக்க வேண்டும்.

கொட்டகையின் தரை பகுதியில் நான்கு அங்குல உயரத்துக்கு கடலைப்பொட்டு பரப்பிவிட வேண்டும். கடலைப்பொட்டுக்கு பதிலாக தேங்காய் நார்க்கழிவுகள், நெல் உமி ஆகியவற்றையும் பயன்படுத்தலாம். அதன் பிறகு ஒன்றரை மாத அளவிலான கோழிக்குஞ்சுகளை வாங்கி விடலாம்.

கொட்டகையின் சுவர்ப்பகுதியில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறை சுண்ணாம்புத் தூளை தூவி விட வேண்டும். அதே போல் 15 நாட்களுக்கு ஒரு முறை கடலைப்பொட்டை மாற்ற வேண்டும். பகல் வேலையில் கோழிகளை திறந்த வெளியில் மேய்ச்சலுக்கு செல்வதற்கு திறந்து விட வேண்டும்.

தீவனம் அளிக்கும் முறை :

வான்கோழி வளர்ப்புக்கு கடைகளில் விற்கும் தீவனங்களை வாங்கினால் கட்டுபடியாகாது. இதற்கு பதிலாக பச்சை புற்களை அதிக அளவில் கொடுக்க வேண்டும். நம் வயல்களில் உள்ள புற்கள், கீரைகளையும் தீவனமாக கொடுக்கலாம்.

மேலும் 60 சதவீதம் புற்கள், 20 சதவீதம் தவிடு, 20 சதவீதம் முட்டைக்கோழி தீவனங்களை சரியான விகிதத்தில் கலந்து கொடுத்தால் தீவனச் செலவை அதிக அளவில் குறைக்க முடியும்.

நோய் மேலாண்மை :

வான்கோழிகளை அம்மை மற்றும் சளி போன்ற நோய்கள் தாக்கும். இதற்கு சீரகம், மிளகு, வெந்தயம், மஞ்சள் தூள், கசகசா, கடுகு போன்றவற்றை தலா 2 தேக்கரண்டி, பூண்டு 5, வெங்காயம் 4 ஆகியவற்றை சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வாரம் ஒரு முறை தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால் நோய்கள் தாக்காது.

அதன் பிறகு மாதம் ஒரு முறை 20 லிட்டர் தண்ணீரில் 200 கிராம் மஞ்சள் தூளைக் கலந்து, வான்கோழியின் தலையை தவிர்த்து, உடல் முழுவதும் முக்கி எடுக்க வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் கோழிகளுக்கு தோல் நோய் தாக்காது.

வான்கோழியின் மூலம் லாபம் :

வான்கோழிகளை குஞ்சுகளாக வாங்கி வளர்க்கும் போது அடுத்த ஆறு மாதத்தில் முட்டை வைக்க தொடங்கும். 100 கோழிகளுக்கு 20 சேவல்கள் வேண்டும். இதன் மூலம் தினமும் 25 முட்டைகள் வரை கிடைக்கும்.

வான்கோழிகள் 36 மணி நேரத்திற்கு ஒரு முறைதான் முட்டை வைக்கும். இதன் மூலம் தினமும் வருவாயாக 500 ரூபாய் வரை லாபம் பார்க்கலாம். ஒரு வான்கோழியானது ஒன்றரை ஆண்டு வரை முட்டை இடும். வான்கோழிகளை தினமும் மற்றும் பண்டிகை காலங்களில் விற்பனை செய்தால் அதிகளவில் லாபம் பெற முடியும்...

பாரத் சேனா எனும் அமைப்பை சார்ந்தவனால் அந்த துடியலூர் சிறுமி தன்யாஸ்ரீ கற்பழிக்கப்பட்டு இருக்கிறாள்....


இந்த பக்தாள் கூட்டம் கொலை செய்யவும் கற்பழிக்கவுமே கற்றுக் கொடுக்கப்பட்டு களத்தில் இறக்கி விடப்பட்டவர்கள்...

பிடில் / வயலின்...


இது மேல்நாட்டு இசைக்கருவி. இது தமிழ்நாட்டு மிடற்றிசைவாணருக்கு உதவி இசைக்கருவியாகக் கொண்டுவரப் பெற்று நீண்ட காலம் ஆகவில்லை. பாடுவதைப்போல் இசைக்கருவியில் வாசிக்கக் கூடும். எனினும் அது அத்துணை எளிதான காரியமன்று.

கேள்வியின் பயனாய் மிகவும் சாமான்னியமானவர் பாடிவரும் தெருப்பாட்டுகளில் அழகு விளங்குவது போல இக்கருவியில் இசைக்க இயலாது. இது மேல்நாட்டு இசைக்கருவியாயினும் இசை இயக்கம் பெறுவதில் மிகக்கடினமாயினும் ஏனைய இசைக்கருவிகளைவிட இதில் வாய்ப்பாட்டு நன்றாய் அனுசரிக்க கூடுமென்பதை உறுதியாகக் கூறலாம்.

இவ்வாறு செய்வதற்கு முதலில் இக்கருவியைத் தேர்ந்தெடுத்தல் வேண்டும். பிறகு தந்திகள் அதற்குத்தக எடுத்தல் வேண்டும். அதன்பிறகு பயிற்சிமுறைகள் எல்லாம் அனுகூலமாய் இருத்தலும், இதை இசைப்போர் பல மாதிரியான மிடற்றிசையின் ஏற்றத்தாழ்வுகளையும், பற்பல இசையமைப்புகளையும் நன்றாய் அறிந்திருக்க வேண்டும்.

அப்பொழுது தான் மிடற்றிசையிலிருந்து எழும் பாட்டை அனுசரித்து வாசிக்கக்கூடும். மிடற்றிசையைப் பிடில் கருவியில் அனுசரிக்கும் அறிவை அடைந்த ஒருவன், இலக்கண சேர்க்கைப் பெற்ற   மிடற்றிசை இவ்வாறானது என்பதைப் பிறருக்கு விளக்கிவரவும் எடுத்துக்கூறவும் முடியும். அக்காலத்தில் பாடுவோருக்கு யாழ்க்கருவியும், சாரந்தா என்ற கருவியுமே துணைக்கருவியாக இருந்தன.

பிடில் கருவியின் சுருதியின் தந்திகளைச் சுருதி செய்வதில் இரண்டு வகைகளுள்ளன. ஒன்று இந்திய முறையார் செய்வது, மற்றொன்று ஆங்கில முறையாற் செய்வது.

இந்திய முறையாற் சுருதி செய்வதில் இடமிருந்து வலமாக ‘4, 3, 2, 1’ ஆகிய தந்திகளின் முறையே மெலியுதானத்துக் குரல், அதாவது மந்தரஸ்தாயி ஸ, மெலியுத்தானத்து இளி, அதாவது மந்திரஸ்தாயி ப, சமன்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ஸ, சமந்தானத்துக் குரல், அதாவது மத்தியஸ்தாயி ப என்ற முறையில் சேர்க்கப் பெற்ற ‘ஸ-ப, ஸ-ப’ என்ற ஒலிக்கும், அதாவது மூன்றாவது தந்தியானது நாலாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும், இரண்டாவது தந்தி மூன்றாவது தந்தியின் நான்காவது சுரத்தை ஒலிப்பதாயும், முதலாவது தந்தியானது இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரத்தை ஒலிப்பதாயும் இருக்கும்.

ஆங்கில முறையாற் சுருதி கூட்டுவதில் நான்காவது தந்தியின் ஐந்தாவது சுரம் மூன்றாவது தந்தியிலும், மூன்றாவது தந்தியின்  ஐந்தாவது சுரம் இரண்டாவது தந்தியிலும், இரண்டாவது தந்தியின் ஐந்தாவது சுரம் முதல் தந்தியிலும் ஒலிப்பதாய் சுருதியில் சேர்த்துக் கொள்வர். நான்காவது தந்தி பெரும்பாலும் (G) ஜி சுரத்திலேயே அதாவது மெலிவுத்தானத்து ப- என்ற சுர ஒலியே வரப்படுவதாய் வைத்துக் கொள்ளப் பெறுவதால், ‘4-3-2-1’ என்ற தந்திகள் முறையே ‘ப-ரீ-த-கா’ தந்திகள் என்ற பெயர்களில் வழங்கி வருகின்றன...