04/04/2019

தமிழர்களும்... பருவக் காற்றும்..


தமிழர்கள் கடல் வாணிபத்தில் சிறந்தவர்கள். இதற்கான சான்றுகள் உலகெங்கிலும் கிடைக்கின்றன. மலேசியாவில் தமிழ்க் கல்வெட்டு, தாய்லாந்தில் சங்க கால நாணயங்கள், கம்போடியக் கல்வெட்டில் தமிழ் மன்னனின் பெயர், சாதவாகன மன்னர் நாணயத்தில் கப்பல்படம், ஜாவாவில் கப்பல்சிற்பம், சங்க இலக்கியத் தில் யவனர் பற்றிய குறிப்புகள், ரோமானிய மன்னர் அகஸ்டஸ் அவையில் பாண்டிய மன்னனின் தூதன், தமிழ்நாட்டில் கிடைக்கும் ஆயிரக் கணக்கான ரோமானிய நாணயங்கள், டாலமி, பிளினி போன்ற வெளி நாட்டு யாத்திரீகர்களின் பயணக் குறிப்புகள், யுவான் சுவாங் பாஹ’யான் முதலிய சீன யாத்திரிகர் குறிப்புகள் - இப்படிச் சான்றுகளின் பட்டியலை நீட்டிக் கொண்டே போகலாம்.

தமிழர்களின் கடல் வாணிகத்திற்குப் பெரும் உறுதுணையாக அமைந்தது பருவக் காற்றாகும். ஒரு குறிப்பிட்ட பருவத்தில், ஒரு குறிப்பிட்ட திசையில் வீசும் கடற் காற்றுக்குப் பருவக் காற்று என்று பெயர். டீசலினால் இயங்கும் ராட்சதக் கப்பல்களும், நீராவியால் ஓடும் பெரிய கப்பல்களும் கண்டு பிடிப்பதற்கு முன்னர் மனிதர்கள் கண்டு பிடித்த கப்பல் காற்றினாலேயே இயங்கின. காற்றின் இரகசி யத்தை அறிந்தவர்கள் குறிப்பிட்ட நாளில் புறப்பட்டு,குறிப்பிட்ட இடத்தை அடைவது எளிதாக இருந்தது. இதற்காக அவர்கள் பிர மாண்டமான பாய்மரக் கப்பல்களைக் கட்டினர்.

பருவக் காற்றின் இரகசியத்தை அறிந்து வைத்திருந்த யவனர்களும், அராபியர்களும் அதை வெளி நாட்டவர்களுக்குக் கற்றுத்தர வில்லை என்றும் தமிழர்கள் நடத்திய கப்பல் போக்குவரத்து கடற்கரையையொட்டி நடைபெற்ற கப்பல் போக்குவரத்துத் தான் என்றும் ஒரு கருத்து நிலவுகிறது.

பருவக் காற்றின் சக்தியை முதன் முதலில் கண்டு பிடித்தவர் ஹ’ப்பாலஸ் என்ற கிரேக்க நாட்டு அறிஞரென்றும், கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னன் காலத்தில் தான் பருவக் காற்றைப் பயன்படுத்திக் கப்பல் விடுவது அதிகரித்த தென்றும், மேலைநாட்டு அறிஞர்கள் எழுதி வைத்துள்ளனர். ஆனால் புறநானூறு முதலிய சங்க கால நூல்களைப் படிப்போர்க்கு இந்தக் கூற்றில் பசையில்லை என்பதும், மேலை நாட்டாரின் வாதம் பொய் என்பதும், உள்ளங்கை நெல்லிக்கனியென விளங்கும்.

வெண்ணிக் குயத்தியார் என்ற பெண் புலவர் கரிகால் பெருவளத் தானைப் புகழ்ந்து பாடிய புறநானூற்றுப் பாடல் காற்றின் சக்தியால் தமிழர்கள் கலம் (கப்பல்) செலுத்தியதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது. அந்தப் பாடல் வரிகள் கரிகாலன் ஆண்ட காலத்தைப் பற்றிக் கூடப் பேசவில்லை. அவனுடைய முன்னோர் களின் காலத்தில் காற்றின் விசையால் கப்பல்கள் விடப்பட்டதைப் புகழ்ந்து பேசுகிறது. அந்த வரிகள்,

''நளியிரு முன்னீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் கண்ட உரவோன் மருக!
களிஇயல் யானைக் கரிகால் வளவ!
- (புறநானூறு - பாடல் 66)

வளவனே! உனது முன்னோர்கள் காற்று இயக்கும் திசையை அறிந்தே அதற்கான பொறிமுறைகளைப் பொருத்திக் கப்பல் செல்லுமாறு செய்த அறிவாற்றல் உடையவர்கள். மதயானை மிகுந்த படைகளை உடைய கரிகால் வளவ! என்று உரையாசிரியர்கள் பொருள் எழுதி வைத்துள்ளனர் இப்பாடல் வரிகளுக்கு.

இப்பொழுது ஒரு கேள்வி எழும். கரிகால் வளவனின் காலம் என்ன? கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ’ன் காலம் என்ன? யார் முதலில் வாழ்ந்தவர்?

கிரேக்க அறிஞர் ஹ’ப்பாலஸ் இன்றைய இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர். ஆனால் கரிகால் சோழனோ அதற்கு முன்னர் குறைந்தது இருநூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக வரலாற்றுச் சான்றுகள் கூறுகின்றன. அதாவது இன்றைக்கு இரண்டாயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவர் (கி.மு. 2ம் நூற்றாண்டு). மேலும் இப்பாடல் கரிகாலன் முன்னோர்களே காற்றின் விசையைப் பயன்படுத்திக் கப்பல் விட்டதாகக் கூறுகிறது. (முக்கியச் சொற்களின் பொருள்: - வளி - காற்று, முந்நீர் - கடல், நாவாய் - கப்பல்)

கிளாடியஸ் என்ற ரோமானிய மன்னர் காலத்தில் இந்த வழக்கம் பெரிதும் அதிகரித்த தென்று முன்னர் கண்டோம்.அவன் இயேசு கிறிஸ்துவுக்குச் சம காலத்தில் ஆட்சி புரிந்த மன்னன். ஆகவே கிரேக்கர்களுக்கு முன்னரே பருவக் காற்றைப் பயன் படுத்திக் கப்பல் விட்டது தமிழன் தான் என்று அடித்துக் கூறலாம்.

பழந்தமிழ் இலக்கியத்தில் மேலும் பல இடங்களில் இதே போன்ற குறிப்புகள் வருகின்றனயவனர்கள் பற்றிய பலகுறிப்புகளும் உள்ளன.

''கப்பல்'' என்ற தமிழ்ச் சொல் கூட உலகெங்கிலும் வெவ்வேறு வகையில உருமாறி வழங்குகிறது கப்பல் - skip - ship

ஜெர்மானிய மொழியில் ''ஸ்கிப்''என்றும் ஆங்கிலத்தில் ''ஷ’ப்'' என்றும் உருமாறி விட்டது தமிழ்ச் சொல் கப்பல்.

''கட்டமரான்'' (catamaran) என்ற சொல்லை மத்திய அமெரிக்க நாடான மெக்ஸ’கோவில் பயன்படுத்துகின்றனர். மெக்ஸ’கோவில் மாயா, இன்கா, அஸ்டெக் போன்ற பழம் பெரும் நாகரீகச் சின்னங்களை இன்றும் காணலாம்.

''நாவாய்'' (படகு, கப்பல்) என்ற சொல்லும் தமிழ் அல்லது வட மொழியில் இருந்து உலகம் முழுதும் சென்றது.

நாவாய் - NavY - Navy

இலங்கையின் வரலாற்றைக் கூறும் மகாவம்சம், ''எல்லாளன்'' என்ற சோழ மன்னனின் அறநெறி ஆட்சியைப் பெரிதும் புகழ்ந்து பேசுகிறது. இது ''ஏழாரன்'' (ஏழு மன்னர்களை வென்று ஏழு ஆரம் அல்லது ஏழு மணி முடிகளை அணிந்தவன்) என்ற சொல்லின் திரிபாக இருக்கலாம். சிலர் இந்தச் சோழ மன்னனைக் கரிகாலனாக இருக்கலாம் என்று கருதுகின்றனர். ஏனெனில் இருவரின் காலமும் ஏறத்தாழ ஒன்று தான். எல்லாள மன்னனின் கதை மனுநீதிச் சோழன் கதை போலவே உள்ளது. ஒரு பசுவின் கன்றைக் கொன்ற தன் மகனையே தேரின் சக்கரத்தில் வைத்துக் கொன்றான் மனுநீதிச் சோழன் என்று சிலப்பதிகாரம், மணிமேகலை, பெரிய புராணம் ஆகியவை கூறுகின்றன. ஆனால் இருவரும் ஒருவரா என்று அறிய மேலும் ஆராய வேண்டும். சோழ மன்னர்கள் இலங்கை, மற்றும் ஜாவா, சுமத்ரா (தற்கால இந்தோனேஷ’யா) வரை கடலில் சென்று வென்றனர்.

கம்போடியா, வியட்நாம், லாவோஸ் ஆகிய நாடுகளில் 800க்கும் அதிகமான சமஸ்கிருதக் கல்வெட்டுகள் உள்ளன. இவைகளில் மிகவும் பழமையான இரண்டாம் நூற்றாண்டுக் கல்வெட்டு ''ஸ்ரீமாறன்'' என்ற பெயரைக் குறிப்பிடுகிறது. இவன் அங்கு சென்ற பாண்டிய மன்னன் அல்லது தளபதியாக இருக்கலாம். புறநானூற்றில் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் எழுதிய பாடல் ஒன்று உள்ளது. இவன் கடலில் செல்லும் போது உயிர் நீத்தவன் என்பதை அவனுடைய பெயரே கூறிவிடும்.

தமிழர்களின் கடலாட்சிக்கு ஏராளமான சான்றுகள் இருப்பினும் முதலில் பருவக் காற்றைக் கண்டு பிடித்து, பயன்படுத்தியது தமிழனே என்பதற்கு இந்தச் சான்றுகளே போதும் அல்லவா?

03/04/2019

வன்னியர் கல்வி அறக்கட்டளை: புகாரை நிரூபிக்க ஸ்டாலின் தயாரா? தவறினால் அரசியலை விட்டு விலகுவாரா? - பாமக நிறுவனர் மருத்துவர் ரராமதாஸ் அறிக்கை...


ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்பார்கள். அத்துடன் கூடுதலாக தோல்வி பயமும் கண்ணை மறைப்பதால் பாட்டாளி மக்கள் கட்சியையும், என்னையும், எனது குடும்பத்தினரையும் பற்றி அருவருக்கத் தக்க அவதூறுகளை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் பரப்பி வருகிறார். தாம் வகிக்கும் பதவிக்கு சிறிதும் தகுதியற்ற வகையில் மு.க.ஸ்டாலின் கூறியுள்ள தகவல்கள் கடுமையாக கண்டிக்கத்தக்கவை.

அரக்கோணம் மக்களவைத் தொகுதியில் நேற்று நடைபெற்ற பரப்புரைக் கூட்டத்தில் பேசிய அவர், ‘‘ வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமாக பல்வேறு இடங்களில் உள்ள சொத்துகளையெல்லாம்  டாக்டர் ராமதாஸ் அவருடைய துணைவியார் பெயருக்கு மாற்றி வைத்திருக்கிறார். தமிழக அரசு நினைத்தால் அனைத்து சொத்துகளையும் கைப்பற்றி விட முடியும் என்பதால், அதைத் தவிர்ப்பதற்காகவே அதிமுக அணியில் பா.ம.க. இணைந்துள்ளது’’ என்று கூறியுள்ளார். திமுகவினரின் மொழிநடையில் கூறினால், இது பவானி சமுக்காளத்தில் வடிகட்டிய பொய் ஆகும். வழக்கம் போலவே வாய் புளித்ததோ,  மாங்காய் புளித்ததோ என்று இந்த விஷயத்திலும் திமுக தலைவர் ஸ்டாலின் உளறிக் கொட்டியிருக்கிறார்.

மு.க.ஸ்டாலின் முதலில் ஓர் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். வன்னியர் கல்வி அறக்கட்டளை  என்பது மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கல்வி வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என்ற புனிதமான நோக்கத்துடன் உருவாக்கப்பட்ட உன்னதமான அமைப்பு ஆகும். அது திமுக அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை போன்று பினாமி சொத்துக்களை பதுக்கி வைப்பதற்காக உருவாக்கப்பட்ட அமைப்பு அல்ல என்பதை ஓர் கட்சியின் தலைவராக உள்ள ஸ்டாலின் புரிந்து கொள்ள வேண்டும்.

கல்வி மற்றும் சமூக ரீதியாக மிகவும் பின்தங்கிய நிலையில் வைக்கப்பட்டிருந்த வன்னியர்களை கல்வியால் மட்டும் தான் முன்னேற்ற முடியும் என்ற உன்னத நோக்கத்துடன் தான் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 20% தனி இட ஒதுக்கீடு கேட்டு பல ஆண்டு காலம் போராட்டம் நடத்தினேன். எண்ணற்ற இழப்புகள், ஏராளமான உயிர்த்தியாகங்களுக்குப் பிறகு வன்னியர் உள்ளிட்ட 108 சாதிகளுக்கு 20% இட ஒதுக்கீடு பெற்றுத் தந்தேன். ஆனாலும், அரசு கல்வி நிறுவனங்களில் மிகவும் குறைவான இடங்களே இருந்ததாலும், தனியார் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு இல்லாததாலும் மிகவும் பின்தங்கிய நிலையிலுள்ள குழந்தைகளின் கல்வி வாய்ப்புக்காக உருவாக்கப்பட்டது தான் வன்னியர் கல்வி அறக்கட்டளை மற்றும் அதன் மூலம் தொடங்கப்பட்டுள்ள கல்வி நிறுவனங்கள் ஆகும்.

இந்த அறக்கட்டளையை அரும்பாடுபட்டு தொடங்கியவன் என்ற அடிப்படையில் அதன் நிறுவனராக மட்டுமே நான் உள்ளேன். அதைத் தவிர வேறு எந்த நிர்வாகப் பொறுப்பிலும் நான் இல்லை. வன்னியர் கல்வி அறக்கட்டளையின் தலைவராக ஜி.கே.மணி உள்ளார். செயலாளராக மருத்துவர் அன்புமணி இராமதாஸ் இருக்கிறார். மாவீரன் குரு அறங்காவலராக இருந்தார். மருத்துவர்கள் இரா. கோவிந்தசாமி, ப. சுந்தர்ராஜன், முனைவர் ச.சிவப்பிரகாசம் ஆகியோர் அறங்காவலர்களாக உள்ளனர். இவர்களைத் தவிர வேறு யாரும் அறக்கட்டளை நிர்வாகத்தில் தலையிட முடியாது. எனது மனைவிக்கு வன்னியர் அறக்கட்டளையுடன் எந்த தொடர்பும் இல்லை. அறக்கட்டளை சார்பில் கல்லூரிகள் கட்டப்பட்ட போது,  ஏழைக்குழந்தைகள் பயிலும் கல்விக் கோயிலாக அது அமைய வேண்டும் என்ற நோக்கத்துடன் இரவு பகல் பாராமல் சுட்டெரிக்கும் வெயிலிலும், மழையிலும் கட்டுமானப் பணிகளை ஒருங்கிணைத்த  தியாகத்துக்கு சொந்தக்காரர் அவர். தியாகங்களுக்கு விலை கேட்கும் வழக்கம் அவருக்கு கிடையாது.

அறக்கட்டளை தொடங்கப்படும் போதே நான் வெளிப்படையாக ஓர் அறிவிப்பு செய்தேன். ‘‘ வன்னியர் கல்வி அறக்கட்டளை என்பது உலகம் முழுவதும் உள்ள வன்னியர்களுக்கு சொந்தமானது. நன்கொடை செலுத்தாமல் அனைவரும் கல்வி கற்கலாம் என்று நான் அறிவித்தேன். அதன்படி கடந்த 12 ஆண்டுகளாக பல்லாயிரக்கணக்கான குழந்தைகள் கல்விக் கோயிலில் கல்வி பெற்றுச் செல்கின்றனர். ஸ்டாலின் விரும்பினால், அவரது குடும்ப குழந்தைகளைக் கூட தகுதி அடிப்படையில் கல்விக் கோயிலில் சேர்க்கலாம்; எந்தவிதமான நன்கொடையுமின்றி கல்வி பயிலலாம். அதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்.

வன்னியர் கல்வி அறக்கட்டளையின் நிர்வாகம் ஒரு திறந்த புத்தகம். ஸ்டாலின் விரும்பினால் அவரது கட்சியில் உள்ள தலை சிறந்த வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்களைக் கொண்டு ஓர் ஆய்வுக்குழுவை அமைக்கட்டும். அந்தக் குழு வன்னியர் கல்வி அறக்கட்டளையின் ஆவணங்களை ஆய்வு செய்யட்டும். அவர் கூறியவாறு ஏதேனும் ஒரு சொத்து, அவ்வளவு ஏன்.... வன்னியர் கல்வி அறக்கட்டளைக்கு சொந்தமான 10 பைசா மதிப்புள்ள குண்டூசியை என் மனைவி பயன்படுத்துவதாக  ஸ்டாலின் அனுப்பும் குழு கண்டுபிடித்தால் கூட, நான் பொதுவாழ்க்கையிலிருந்து விலகிக் கொள்கிறேன்.

அதேநேரத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துகளை நான் எனது மனைவி பெயருக்கு மாற்றி எழுதியிருப்பதாக கூறப்படும் குற்றச்சாட்டை நிரூபிக்க முடியவில்லை என்றால் அரசியலிலிருந்தும், பொதுவாழ்க்கையிலிருந்தும் ஸ்டாலின் விலகத் தயாரா?

ஸ்டாலின் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் வன்னியர் கல்வி அறக்கட்டளையில் ஆய்வு செய்ய நான் அனுமதிப்பதைப் போன்று திமுக அறக்கட்டளை, முரசொலி அறக்கட்டளை ஆகியவற்றை பா.ம.கவைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் குழுவைக் கொண்டு ஆய்வு செய்ய அனுமதிக்க ஸ்டாலின் தயாரா?

வன்னியர் கல்வி அறக்கட்டளை சொத்துகள் அனைத்தும் முறைப்படி வாங்கப்பட்டவை. அதையும் ஆய்வு செய்து உறுதி செய்து கொள்ளலாம். மாறாக, பல மாவட்டங்களில் தி.மு.க அறக்கட்டளைக்காக சேர்க்கப்பட்டுள்ள சொத்துகள் வளைக்கப்பட்டவை என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டுகிறேன். அவற்றை ஆய்வு செய்ய ஸ்டாலின் அனுமதிப்பாரா?

திருச்செந்தூர், தென்காசி, குற்றாலம், விருத்தாசலம், சிதம்பரம், சென்னை ஆகிய இடங்களிலுள்ள வன்னியர் சொத்துகளும் எனது மனைவி பெயருக்கு மாற்றப்பட்டிருப்பதாகவும் மு.க.ஸ்டாலின் உளறி  உள்ளார். வாய்ப்புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என வாயில் வந்ததை எல்லாம் உளறுவது. 70 ஆண்டு கட்சியின் தலைவருக்கு அழகல்ல. ஸ்டாலின் குறிப்பிட்ட இடங்களில் மட்டுமின்றி இன்னும் ஏராளமான இடங்களிலும் வன்னியர்களுக்கு சொத்துகள் உள்ளன. அவை அனைத்தையும் ஆங்காங்கே உள்ள சமுதாயப் பெரியவர்கள் முறையான அமைப்பை வைத்து நிர்வகித்து வருகின்றனர். இத்தகைய உண்மைகளை திமுகவில் உள்ள துரைமுருகன் போன்ற விஷயம் தெரிந்த வன்னிய தலைவர்களிடம் கேட்டு அதன்பிறகு ஸ்டாலின் பேசியிருந்தால் இப்படியெல்லாம் அவமானப்பட வேண்டியிருக்காது.

ஸ்டாலினுக்கு அரசியலும் புரியாது; சமூகம் குறித்தும் தெரியாது. திமுகவின் தலைவராகிவிட்ட பிறகும், தன்னை ஒரு குழுவின் தலைவராகவே நினைத்துக் கொண்டு அரசியல் செய்து வருபவர். மக்களவைத் தேர்தல் தொடர்பாக அவர் கட்டி வைத்த கோட்டைகள் அனைத்தும் தகர்ந்து விட்டதால், ஆசை வெட்கம் அறியாது; ஆத்திரம் நேர்மை அறியாது என்பதைப் போல பாட்டாளி மக்கள் கட்சி மீது உள்ள கோபம்  காரணமாக எனது மீதும், எனது குடும்பத்தினர் மீதும் புழுதி வாரி தூற்றியிருக்கிறார்.

வன்னிய மக்களுக்காகவும், பிற மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காகவும் 40 ஆண்டுகளாக நான் போராடி, தியாகங்களை செய்து, சிறை சென்று இட ஒதுக்கீடு பெற்றுத் தந்துள்ளேன். என்னுடன் லட்சக்கணக்கான மக்கள் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்று இழப்புகளை சந்தித்துள்ளனர். இன்மும் சமூகநீதிக்காக நான் போராடிக் கொண்டிருக்கிறேன். இனியும் இறுதி மூச்சு வரை போராடுவேன். அந்த நம்பிக்கையில் தான் சமூக நீதி பெற்ற மக்கள் என்னை இன்னும் நம்புகின்றனர்; நேசிக்கின்றனர்.

ஆனால், இதுபற்றியெல்லாம் பேச ஸ்டாலின் யார்? அவருக்கும் வன்னியர்களுக்கும் என்ன தொடர்பு?  குறைந்தபட்சம் திமுகவில் உள்ள வன்னியர்களுக்காவது அவர் ஏதேனும் செய்திருப்பாரா? வடமாவட்ட வன்னியர்களால் உயிர் பெற்ற திமுகவின் தலைவராக இருந்து கொண்டு, திமுகவில் உள்ள வன்னியர்களையே அவமானப்படுத்தி அழிக்கும் செயலில் ஈடுபட்டுள்ள ஸ்டாலினுக்கு இதுபற்றியெல்லாம் பேச தகுதியில்லை.

ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுததைப் போன்று, உடம்பு முழுவதும் வன்னியர் எதிர்ப்பு ரத்தம்   ஓடும் ஸ்டாலினுக்கு திடீரென வன்னியர்கள் மீது பாசம் பொங்குகிறது.

ஸ்டாலினிடமிருந்து வெளிப்படும் பாசம் என்பது நாகப்பாம்பின் நஞ்சை விட கொடூரமானது என்பதை திமுகவில் அவரால் பழிவாங்கப்பட்ட வன்னியர்கள் உள்ளிட்ட ஒட்டுமொத்த வன்னிய சமுதாயமும் அறியும். இத்தகைய நீலிக்கண்ணீர் வடிப்பு நாடகங்கள் மூலம் பாட்டாளி மக்களிடம் உள்ள பா.ம.க. பாசத்தை சுரண்டிக்கூட பார்க்க முடியாது.

இப்போது வன்னியர் கல்வி அறக்கட்டளைக்காக முதலைக் கண்ணீர் வடிக்கும் மு.க.ஸ்டாலினும், அவர் சார்ந்த அரசியல் கட்சியும் 2006&11 ஆட்சிக்காலத்தில் வன்னியர் கல்வி அறக்கட்டளையை முடக்க  மேற்கொண்ட சதிகள் கொஞ்ச நஞ்சமல்ல. பா.ம.க. ஆதரவில் தான் மைனாரிட்டி திமுக அரசு செயல்பட்டது என்றாலும் அதை மறந்து விட்டு, அறக்கட்டளைக்கு பல்வேறு தொல்லைகளைக் கொடுத்தனர். வன்னியர் கல்வி அறக்கட்டளைக்காக அரசு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதாக ஆற்காடு வீராசாமி மூலம் சட்டப்பேரவைக்கு உள்ளேயும், வெளியேயும் திமுக அவதூறு பரப்பியது; ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்களை மீட்கப் போவதாகவும் மிரட்டல் விடுத்தது. அதற்கு பதிலளித்த நான், ‘‘ ஓர் அங்குல நிலம் கூட ஆக்கிரமிக்கப்படவில்லை; அவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டிருந்தால் தாராளமாக கையகப்படுத்திக் கொள்ளலாம்’’ என்று சவால் விடுத்தேன். சட்டப்பேரவையில் இதுகுறித்த விவாதத்திற்கு பதிலளித்த  பா.ம.க. தலைவர் ஜி.கே.மணியும்  இதே அறைகூவலை முன்வைத்தார். அதைக்கேட்டதும் திமுக அரசு எந்த பதிலும் பேசாமல் இந்த விஷயத்தைக் கைவிட்டது. இது தான் திமுகவின் வீரம் ஆகும்.

வன்னியர் கல்வி அறக்கட்டளை சார்பில் சட்டக்கல்லூரி தொடங்க உலகத்தரம் கொண்ட கட்டமைப்பு வசதிகளுடன் கட்டிடம் கட்டப்பட்டது. தகுதி வாய்ந்த பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டதுடன், தேவைக்கும் அதிகமாகவே சட்ட நூல்களும் வாங்கப்பட்டன. ஆனால், பா.ம.க.வின் ஆதரவில் செயல்பட்டாலும் இந்த சட்டக்கல்லூரிக்கு திமுக அரசு அனுமதி அளிக்கவில்லை. இதை எதிர்த்து அறக்கட்டளை சார்பில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சட்டக்கல்லூரிக்கு அனுமதி வழங்கும் படி மொத்தம் 3 முறை திமுக அரசுக்கு ஆணையிட்டது. அப்போதைய முதல்வர் கலைஞரும்  அனுமதி வழங்க வாய்மொழியாக உத்தரவிட்டார். ஆனால், அப்போது துணை முதலமைச்சராக இருந்த ஸ்டாலினும், அவரது துதிபாடிகள் கூட்டமும் சேர்ந்து கொண்டு அனுமதி வழங்காமல் இழுத்தடித்தனர்.

மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களைச் சேர்ந்த மக்கள் சட்டக்கல்வி பெற வேண்டும் என்பதற்காக  ஏற்படுத்தப்பட்ட சட்டக்கல்லூரியை தொடங்கவிடாமல் தடுத்த ஸ்டாலின் தான் இப்போது வன்னிய மக்களுக்காக நீலிக்கண்னீர் வடிக்கிறார். திமுகவின் தூண்களாக இருந்த வீரபாண்டி ஆறுமுகம், மதுராந்தகம் ஆறுமுகம், நெல்லிக்குப்பம் கிருஷ்ணமூர்த்தி, செஞ்சி ராமச்சந்திரன், ஏ.ஜி. சம்பத் உள்ளிட்ட வன்னிய சமுதாய தலைவர்கள் ஸ்டாலின் மற்றும் அவரது துதிபாடிகளால் எப்படியெல்லாம் அவமதிக்கப் பட்டார்கள்; எப்படி எல்லாம் குமுறினார்கள் என்ற வரலாறு திமுகவில் உள்ள வன்னியர்களுக்கு தெரியும். இப்போதும் திமுகவில் உள்ள எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், வீரபாண்டி ராஜா ஆகியோர் தொடர்ந்து அவமதிக்கப்படும் போதிலும், அவற்றை சகித்துக் கொண்டிருக்கின்றனர்,  திமுக பொருளாளர் துரைமுருகன் இப்போதும் எப்படி முதுகில் குத்தப்பட்டார்? என்பவை எல்லாம் ஊரறிந்த வரலாறு.

திமுகவில் உள்ள வன்னியர்களாக இருந்தாலும், பொதுவான வன்னியர்களாக இருந்தாலும் சிங்கங்களைத் தான் மதிப்பார்கள். சிறு நரிகளின் கதறல்களை கண்டு கொள்ள மாட்டார்கள். இன்னும் 15 நாட்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல்களில் திமுகவுக்கு அவர்கள் பாடம் புகட்டுவார்கள்; அனைத்து தொகுதிகளிலும் வீழ்த்துவார்கள். இது உறுதி...

திமுக vs தேமுதிக... பழிக்கு பழி தீர்த்தாரா பிரேமலதா..?


https://youtu.be/GNMmEAaqCAI

Subscribe The Channel For More News...

மனதுக்கு ஏது மருந்து ?


ஒரு துயரத்தை தாங்க முடியாமல் சமாளிக்க தவித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு துயரம் இடி போல் விழும்போது என்ன செய்ய முடியும்...

மனப்பாரத்தை துலாபாரத்தில் நிறுத்தி  இரண்டையும் எடை போடுவோம் பாருங்கள்...

அப்போது தெரியும் நம் இதயத்தின் பலம் என்ன என்று...

ஒரு துயரத்தில் இருக்கும் போது துடிக்கும் நாம்... இரு துயரத்தை  கையாளும் போது நீதிபதி ஆகிறோம்....

அப்போது ஒரு உண்மை... புத்தனாக ஞானம் பிறக்கும்.

இதுவும் கடந்து போகும்....

உயிரும் ஒரு நாள் உடலை கடந்து போகும் என்ற உண்மை உணர்வோம்...

பிரச்சினைகளை உருவாக்குவதும் நாமே....

பிரச்சினைகளை களை  எடுப்பதும் நாமே....

ஆகவே தேவையற்றதை நீக்குவோம்.

கொஞ்சம் ஆழ்ந்து யோசித்து பார்த்தால் ,
எல்லாமே தேவையற்றது என்ற உண்மை புரியும்.

நாம் யோசிக்க மறுப்பதால்தான், எல்லாமே தேவையானதாகிறது...

மாற்றங்களை நோக்கிய நமது பயணம், தோல் சுருங்கும் வரை தொடர்கிறது....

இதயம் சுருங்கி விரியும் வரை நிகழ்கிறது....

இடையே வரும் இடியும் ,மின்னலும் நமது வாழ்வில் தவிர்க்க முடியாதது...

எதையும் தாங்கும் இதயம் நம்முடன் இருப்பதை உணர்வோம்...

தமிழக விரோத திட்டங்களை கையெழுத்து போட்டு கொண்டு வந்தது திமுக ஸ்டாலின் தான் - பாமக அன்புமணி இராமதாஸ்...


https://youtu.be/CXFeZBFTNU0

Subscribe The Channel For More News...

தமிழ் போற்றும் தேசமும், தமிழ் மறந்த தேசமும்...


உலகில் உள்ள ஒவ்வொரு மக்களுக்கும் தம் மொழி, தம் வரலாறு மீது எப்போதுமே ஓர் அக்கறை உண்டு.

நமக்கும் நம் வரலாறு மொழி மீது ஓர் உயர்ந்த பற்று இருந்தது அது எதுவரை என்றால் நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று ஓர் ராணுவம் என அனைத்தும் இருந்த காலத்தில்.

இப்போது நாம் அனைத்தையும் தொலைத்துவிட்டு, சிறுக சிறுக கட்டி எழுப்பியதையும் இந்திய துரோகிகளால் இழந்துவிட்டு தவிக்கிறோம்...

ஆமாம் சோழர்கள், பாண்டியர், சேரர்  முதல் தமிழ் ஈழ விடுதலைப்  புலிகள் வரைதான்.

அன்று நமக்கென்று ஓர் தேசம், நமக்கென்று நாணயம் உலகின் வலிமையான ராணுவம் என அனைத்தும் நம்மிடம் இருந்த காலத்தில் எவனும் நம்மை கனவிலும் சீண்ட நினைத்ததில்லை, அப்படியே அவர்கள் சீன்டினாலும் அவர்களை நாம் சும்மா விட்டதில்லை.

நம்முடன் அனைத்தும் இருந்தபோது நாம் சுதந்திரமாக உலாவினோம், இந்தியப் பெருங்கடல், சேது சமுத்திரம், வங்கக் கடல் என அனைத்தும் நாம் தான் ராஜா, நம்மை ஏன் என்று கேட்க எவனும் இல்லை. அப்படியே கேட்டாலும் அவன் உயிர் அவனுக்கில்லை. அப்படி இருந்த நம் தமிழ் இனம் இன்று எப்படி எல்லாமோ ஆகி விட்டது.

நம் வரலாற்றில் நிறைய உதாரணங்களை நாம் கூறலாம், தமிழ் வணிகர்களுக்கு இடையூறு ஏற்ப்படுத்தியதற்க்கு தென் கிழக்கு ஆசியாவையே அதிர வைத்தான் நம் ராஜ ராஜன், தமிழைப் பழிப்பின் தாய் தடுப்பினும் மிதிப்பேன் என்று வட இந்தியாவையும் வெற்றி கொண்டான் அந்த தமிழ்ப்புலி.

பருவ  மழை பொய்த்த சமயத்தில் ஒரு முறை கர்நாடக மன்னன் காவிரியைத் தடுத்து விட்டான், தமிழக வயல்கள் காயும் நிலைமை சோழன் எப்படியோ கேட்டுப் பார்த்தான், பேசிப் பார்த்தான் அவன் மசியவில்லை. உடனே இவன் படையை கிளப்பிக் கொண்டு காவிரி மேல் இருந்த அணையை உடைத்துவிட்டு, அவன் தேசத்தையே நிர்மூலமாக்கிவிட்டு வந்தான் ராஜ ராஜனின் பேரன்.

தமிழிற்கும், தமிழனுக்கும்  மதிப்பளிக்க வில்லை என்று இமயம் வரை சென்று வெற்றிக் கோடி நாட்டினான் தமிழ் ஆண்ட சேர மன்னன.

இவர்கள் உடலில் ஓடியதும் தமிழ் இரத்தம் தான், நம் உடலில் ஓடுவதும் அதே இரத்தம் தான். என்ன கொஞ்சம் சூடு, சொரணை எல்லாம் காலப்போக்கில் கரைத்து விட்டோம்.

தண்ணீர், உணவு, உரிமை என அனைத்திற்கும் நாம் மற்றவனையே எதிர்பார்க்கும் நிலை ஆகிவிட்டது.

நாம் வந்தவர்களுக்கு அடைக்கலம் அளித்த காலம் போய், நாம் இன்று பலரிடம் தஞ்சம் புகும் காலமாகி விட்டது. வருத்தம் தான்.

தற்ச்செயலாக மொரிசியஸ் நாட்டு நாணயங்களை பார்க்க நேரிட்டது, அதில் உள்ள அனைத்தும் தமிழ். தமிழிற்கு அவ்வளவு முக்கியத்துவம், எண்களும் தமிழ். எழுத்தும் தமிழ்.

எனக்கு ஒரு சந்தேகம் நம்மில் எத்தனை பேருக்கு தமிழ் எங்களைத் தெரியும்.

௦,௧,௨,௩,௪,௫,௬,௭,௮,௯ நம்மில் பலர் இதனை காலம் கடந்தே அறிந்துள்ளோம். இப்படி தமிழ் எழுத்தில் என்னுருக்கள் உண்டா என்று கேட்போம்.

காலத்தின் கொடுமை...

மொரிசியசின் எந்த நோட்டுகளை எடுத்தாலும் அதில் தமிழ் இன்றி இருக்காது.

அங்கு தமிழிற்கு அவ்வளவு மதிப்பு. நாம் இங்கு ஒவ்வொன்றிக்கும் ஹிந்திக்காரனிடம் கை எந்துகிறோம், புலம் பெயர் தமிழ் உறவுகளோ நம் தமிழிற்கு மிகச் சிறந்த அருமையான அடித்தளம் அமைத்துக் கொண்டிருக்கிறார்கள். பாராட்டத் தக்கது.

பிறந்த ஆறு மாத குழந்தைக்கு A,B,C,D கற்றுக் கொடுக்கும் தேசமாகிவிட்டது நம் தமிழ் என்பது தான் பெரும் வருத்தமாக உள்ளது...

திமுக ஸ்டாலின் vs துரைமுருகன் கலாட்டா...


தஞ்சை பெரியகோயில் ஓவியத்தில் காணப்படும் அழிந்துபோன தமிழரின் அலங்கு நாய்...


தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் உள்ள சோழர் கால ஓவியங்களில் இடம்பெற்றுள்ள அலங்கு நாய்.

தமிழர்களுக்கு என இருந்த அடையாளங்களில் ஒன்றான அலங்கு இன நாய்கள்..

சோழர்களின் படைகளில் இவைகள் காவல், மற்றும் வேட்டைக்கு இருந்தது குறிப்பிடத்தக்கது….

தற்ப்பொழுது இந்த இன நாய்கள் அழிந்துவிட்டது…

நமக்கென இருக்கும் இதுபோன்ற அடையாளங்கள் காக்கப்பட வேண்டும்…

தற்ப்பொழுது உள்ள கோம்பை, சிப்பிப்பாறை போன்ற நாய்களை தமிழ்த்தேசிய மக்கள் வளர்க்க வேண்டும்…

நாம் தான் அவற்றை அழிவில் இருந்து காக்க வேண்டும்.

தஞ்சை பெரிய கோயிலின் உள்பிரகாரத்தில் கண்ணைக் கவரும் சோழர் கால ஓவியங்கள் இடம்பெற்றுள்ளன. அந்த ஓவியங்களில் காணப்படும் கம்பீரமான நாயின் உருவம், தஞ்சை மற்றும் திருச்சிப் பகுதியில் ஒரு காலத்தில் காணப்பட்ட அலங்கு நாய் இனம் எனத் தெரியவருகிறது.

உலகப் புகழ்பெற்ற விலங்கியலாளரான டெசுமாண்ட் மோரிசு எழுதிய குறிப்புகளை இப்படத்தோடு ஒப்பிட்டு நோக்கும்போது, இப்படம் அலங்கு நாய்தான் என்பது உறுதியாகிறது.

கோயிலின் உட்பிரகாரத்தில் வரையப்படும் அளவுக்கு அந்த நாய் தகுதி பெற்றிருந்தது அதன் முக்கியத்துவத்தையே நமக்கு உணர்த்துகிறது.

தமிழ்நாட்டு நாய் இனங்களில் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுவது அலங்கு..

வேட்டைக்கும் பாதுகாவலுக்கும் அலங்கை மிஞ்சிய நாய் இனம் இல்லை என்று நாய்கள் குறித்து தான் தொகுத்த அகராதியில் (Dogs-The Ultimate Dictionary of Over 1000 Dog Breeds) டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார். தி நேக்கட் ஏப் (The Naked Ape: A Zoologist’s Study of the Human Animal) என்ற பிரபலமான புத்தகத்தை எழுதியவரும் டெசுமாண்ட் மோரிசுதான்.

இன்று பேருக்குக் கூட ஒரு அலங்கு கிடையாது. வெளிநாட்டு நாய்களின் மோகத்தில், தமிழர்களின் நாய் இனங்களை உதாசீனம் செய்ததால் நம் நாட்டைச் சேர்ந்த நாய் இனங்களே மெதுவாக அழிந்து போயின. அவற்றில் முக்கியமானது அலங்கு. அந்த இனத்தைப் பார்த்த வெகுசிலரே உள்ளனர்.

ஏற்கெனவே வரையப்பட்டிருந்த சோழர் கால ஓவியங்களின் மேல் வடுக வந்தேறிகளான நாயக்கர் காலத்தில் வேறு ஓவியங்களைத் தீட்டிவிட்டார்கள்.

தமிழரின் வரலாறு திட்டமிட்டு தமிழனிடமிருந்து மறைக்கப்பட்டு தமிழர்களை அழித்தனர்.

இந்த வகை நாயின் உடலமைப்பு குறித்து விளக்கும் டெசுமாண்ட் மோரிசு, இது 27 அங்குலம் உயரம் கொண்டது என்றும் நல்ல கட்டுமசுதான, சதைப்பிடிப்பு கொண்ட கால்களை உடையது மற்றும் இதன் காதுகள் எப்போதுமே நிமிர்ந்து நிற்கும் தன்மையைக் கொண்டவை என்றும் குறிப்பிடுகிறார்.

இந்த ஓவியத்தில் காணப்படும் அலங்கு நாயின் காதுகள் நன்றாக நிமிர்ந்து நிற்கின்றன. கூடவே அது தனது நெஞ்சை நிமிர்த்தியபடியும் நிற்கிறது.

அலங்கு வகை நாயின் முதுகு நீண்டும், வால் நன்றாக வளைந்தும் காணப்படும். நடக்கும்போது நீட்டித் தனது எட்டுகளை எடுத்துவைத்து நடக்கும்.

இதன் உடல் செவலை, கருப்பு மற்றும் நன்றாக வெளிறிய மஞ்சள் நிறங்களில் காணப்படும். சில நாய்களின் மார்புப் பகுதியில் வெள்ளை நிறப் புள்ளிகள் கூட இருக்கும். பெரும்பாலான நாய்களின் முகம் கருப்பாக இருக்கும். எந்த நிறமாக இருந்தாலும் முடியே இல்லாதது போல் உடல் பளபளவென்று இருக்கும் என்று இந்த நாயை நேரில் பார்த்திருக்கும் சிலர் கூறுகின்றனர்.

தமிழகத்துக்கே உரித்தான இன்னொரு வகை நாய் கோம்பை. ராசபாளையம், சிப்பிப்பாறை, கோம்பை ஆகிய மூன்று நாய் இனங்களும் அழிவில் இருந்து தப்பிப் பிழைத்தாலும், அலங்கு வகை நாயினம் முற்றிலும் அழிந்தே போனது. அதே போல் செங்கோட்டை நாய் என்ற இனம் குறித்தும் டெசுமாண்ட் மோரிசு எழுதியுள்ளார்.

இரண்டு செங்கோட்டை நாய்கள் சேர்ந்து ஒரு புலியை வேட்டையாட வல்லவை. இப்படி வேட்டையாடும் போது, அவை தங்கள் உயிரை இழப்பதும் உண்டு. செங்கோட்டை நாய்களின் தூரத்து உறவினராகக் கோம்பை நாய் இனத்தைக் குறிப்பிடலாம் என்கிறார் டெசுமாண்ட் மோரிசு...

உடல் எடையை குறைக்க உதவும் தேங்காய் எண்ணெய்... வீடியோ பாருங்க...


https://youtu.be/E94bNHuPETc

Subscribe The Channel For More Tips...

தண்ணீர்...


ஜீரண சக்திக்கு, உடல் சூட்டை ஒரே சீராக வைக்க, ஹார்மோன் மாற்றத்திற்கு, சருமப் பொலிவுக்கு என உடலுக்கு தண்ணீர் அவசியம். சராசரியாக ஒன்றரை லிட்டர் தண்ணீர் குடித்தால், ஒன்றரை லிட்டர் தண்ணீர் வெளியில் போகும். இந்த நீர்ச் சத்து உடலுக்குத் தண்ணீர் மூலம் நேரடியாகவும், சாம்பார், ரசம், ஜூஸ், காய்கறிகள், பழங்கள், கார்போஹைட்ரேட், புரதம் போன்ற உணவின் மூலமாகவும் உடலில் சேர்ந்துவிடும்.

1. சராசரி மனிதனுக்கு ஒரு நாளைக்கு 1,500 மில்லி அதாவது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அவசியம். ஏழு முதல் எட்டு தம்ளர் வரை அவசியம் தேவை.

2. கோடைக் காலத்தில் சருமத்தின் மூலமாக வியர்வை வெளியேறுவதால், வறட்சி, போன்ற காரணங்களால் தண்ணீரின் தேவை இன்னும் கூடுதலாக மூன்று முதல் நான்கு லிட்டர் வரை தேவைப்படும்.

3. விளையாட்டு வீரர்கள், உடற்பயிற்சியாளர்கள், வெயிலில் அதிகம் அலைபவர்கள் தண்ணீர் அதிகமாக குடிப்பது நல்லது. வெறும் வயிற்றில் இரண்டு தம்ளர் தண்ணீர் குடியுங்கள்.

4. சாப்பிட்டவுடன், தொடர்ந்து மருந்து சாப்பிடுபவராக இருந்தால், அரை தம்ளர் முதல் ஒரு தம்ளர் வரை குடிக்கலாம்.

5. காலையில் டிபன் சாப்பிட்டதும், இரண்டு தம்ளர் தண்ணீர் குடிக்க வேண்டும்.

6. சாப்பிடுவதற்கு இரண்டு மணி நேரத்திற்கு முன்பும், சாப்பிட்ட இரண்டு மணி நேரத்திற்கு பின்பும் என தண்ணீரை குடிப்பது நல்லது.

7. உணவு உண்ணத் தொடங்கியவுடனேயே, வயிற்றில் உணவை ஜீரணிக்கச் செய்வதற்கான திரவம் சுரக்கத் தொடங்கும். வாயில் உள்ள உமிழ்நீரே உணவை உள்ளே தள்ளப் போதுமானது. கூடுதலாகத் தண்ணீரையும் நாம் சேர்த்து அருந்தும்போது, தண்ணீர் ஜீரணத் திரவத்துடன் சேர்ந்து, வயிற்றின் ஜீரணப் பணியை மந்தமாக்கும். சாப்பிடும்போது நடுநடுவே தண்ணீர் அருந்தக் கூடாது.

8. அதிக உப்பு, காரம் சேர்த்து சாப்பிடும்போது, தாகத்தைத் தூண்டி அதிக தண்ணீரை கேட்கும். தவிர்ப்பது நல்லது.

9. உணவை வேகமாக சாப்பிடும்போதும் தண்ணீரின் தேவை அதிகரிக்கும். நிதானமாக சாப்பிடப் பழகுங்கள்.

10. நமது உடலுக்குத் தண்ணீர் தேவை என்றால், அதுவே தாக உணர்வை வெளிப்படுத்திப் பெற்றுக்கொள்ளும்.

ஒவ்வொருவரின் உடல்வாகு, வசிப்பிடம், மற்றும் வெப்பநிலை நிலை பொறுத்து, தண்ணீரின் தேவை அளவு மாறும்...