06/04/2019

தமிழிசைக் கருவி - பறை (தப்பு)...


தமிழகத்தில் பன்னெடுங்காலமாக இருந்து வரும் முக்கிய இசைக்கருவி பறை. அதன் மற்றொரு பெயர் தப்பு. இது தோல் இசைக்கருவி.

எந்தக் காலத்தைச் சேர்ந்தது என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் தற்போதும் நாட்டுப்புற இசையில் இந்தக் கருவி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இக்கருவியில் மூன்று அடிப்படை பாகங்கள் உள்ளன. வட்டச் சட்டம், மாட்டுத் தோல், சட்டத்தின் உட்புறத்தில் பொருத்தப்படும் உலோகத் தட்டு. 35 செ.மீ. விட்டம் கொண்ட வட்டச்சட்டத்தில் தோல் இழுத்துக் கட்டப்பட்டு ஒட்டப்பட்டிருக்கும். சட்டம் பொதுவாக வேப்பமரத்தில் செய்யப்பட்டிருக்கும். பறையை இசைக்க நீண்ட தட்டையான ஒரு மூங்கில் குச்சி, குட்டையான, பருத்த மற்றொரு குச்சி பயன்படுத்தப்படும். கட்டைவிரல், மற்ற விரல்களுக்கு இடையில் குட்டை குச்சியை பிடித்துக் கொண்டு கீழ்புறத்தில் இருந்து அடிக்க வேண்டும். இடது கையின் கட்டைவிரல், ஆட்காட்டி விரல்களில் நீண்ட குச்சியைப் பிடித்துக் கொண்டு மேல் பகுதியில் இருந்து அடிக்க வேண்டும்.

குச்சிகளால் அடித்து ஒலியெழுப்பி இசைக்கப்படும் கருவி இது. வலது கையில் வைத்திருக்கும் குட்டைக் குச்சியால் பறையின் மத்தியில் அடிப்பது ஒரு வகை அடி. பறையைப் பிடித்துள்ள இடது கையில் வைத்துள்ள நீண்ட குச்சியால் அடிப்பது இரண்டாவது வகை அடி. இரண்டு குச்சிகளாலும் அடுத்தடுத்து அடிப்பது மூன்றாவது வகை அடி. இவைதான் அடிப்படை அடிகள். இவற்றை மாற்றி மாற்றி அடித்து புதிய மெட்டுகள், சொற்கட்டுகள் உருவாக்கப்படுகின்றன...

எச்சரிக்கை பாஜக மோடியின் திட்டம்...


கர்ம விதிகள்...


உங்கள் வாழ்க்கையை மாற்ற வல்ல மகத்தான 12  கர்ம விதிகள்...

1. மகத்தான விதி  காரணி மற்றும் விளைவு விதி Law of Cause and Effect..

எதை விதைக்கிறாயோ அதையே அறுக்கிறாய்...

நம்முடைய எண்ணங்களுக்கும் , செயல்களுக்கும் விளைவுகள் உள்ளன. அவை நல்லவையாக இருந்தாலும் சரி  கெட்டவையாக   இருந்தாலும் சரி. அமைதி, அன்பு , நல்லிணக்கம் ,வளமை ஆகியவற்றை விரும்பினால் அவையே நமக்கு கிடைக்கும்.. இந்த உலகில் நாம் இடும் ஆற்றலுக்கு (எண்ணமும், செயலும்) உடனடியாகவோ அல்லது காலம் கழித்தோ கட்டாயம்  விளைவு உண்டு .

2 படைத்தல் விதி ( Law of creation )...

வாழ்க்கையில் எதுவுமே அதுவாக நடப்பதில்லை , நாம் அதை நடக்க வைக்க வேண்டும். நாம் எதை விரும்புகிறமோ அவை நம்முடைய பங்களிப்பு மூலமாக நமக்கு வருகிறது.  நம்மை சுற்றியுள்ள அனைத்துமே யாரோ ஒருவரின் எண்ணத்தில் உதித்தது தான். நாமும் இந்த  பிரபஞ்ச சக்தியோடு ஒன்றிணைந்து இருப்பதால் படைப்பின் பரிணாம வளர்ச்சியில்  நம்முடைய நோக்கங்களும் இருக்கிறது. ஆகவே  நமக்கும் நம்மைச் சுற்றியுள்ள சமூகத்தின் விருப்பத்திற்கும்  உகந்ததாக நம்முடைய படைப்பு இருக்குமாறு பார்த்துக்கொள்வது நமது பொறுப்பாகும்..

3 பணிவு விதி ( Law of Humility )...

மிகப்பெரிய மாற்றங்கள் வருவதை நாம் மனமுவந்து ஏற்றுக்கொள்ள வேண்டும். ஏற்றுக்கொள்ளும் தன்மை என்பது பிரபஞ்ச கோட்பாடாகும். இது எல்லா அமைப்புகளிலும் உள்ள விதி. பெரிய மாற்றங்களை வேண்டினாள் நிகழ்கால சூழ்நிலைகளை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.. அதே சமயம் எதிர்மறையான விஷயங்களை மாற்ற எதிர்மறையான போக்குகளை கடைபிடித்தால் கடைசியில் அதன் விடை பூஜ்யமாகத் தான் இருக்கும்..

4 வளர்ச்சி விதி ( Law of Growth)...

நமது சுயவளர்ச்சி எப்பொழுதும் எந்த சூழ்நிலையிலும் நம் கையில் தான் உள்ளது.. நாம் கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஒரே நபர் நாம் தான்.. நாம் மாறும் பொழுது நமது வாழ்க்கையும் அதற்கேற்றாற் போல் நம்முடன் சேர்ந்து மாறுகிறது. உண்மையான வளர்ச்சி அல்லது மாற்றம் நாம் எப்பொழுது முழுமனதோடு அர்ப்பணித்து மாறுகிறோமோ அப்பொழுதான் நடக்கிறது..

5 பொறுப்பு விதி ( Law of Responsibility )...

நம் வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயங்களுக்கும் நாம் பொறுப்பேற்க வேண்டும். நம்முடைய வாழ்க்கை நாம் செய்வதில் தான் உள்ளது வேறெதினாலும் கிடையாது.. வாழ்க்கையில் ஒருவருக்கு ஒரு தடுமாற்றம் வரும் பொழுது மனதில் நிறைய தடுமாற்றங்கள் வருகின்றன. அதை மாற்ற வேண்டுமென்றால் நமது எண்ணங்களை மாற்றி பிறகு நம்மைச் சுற்றியுள்ளவற்றை மாற்ற வேண்டும் ..

6 தொடர்பு விதி ( Law of Connection )...

இந்த பிரபஞ்சத்தில் உள்ள அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்புள்ளவை. பெரியதாக இருந்தாலும் சரி , சின்னதாக இருந்தாலும் சரி. நமது கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் எல்லாமே ஒன்றுக்கொன்று தொடர்புடையபவை.  இந்த தொடர்புகளை பயன்படுத்தி நாம் விரும்பும் மாற்றத்திற்கு வழி செய்ய வேண்டும்.

7 கவன விதி ( Law of Focus )...

ஒருவனால் ஒரே நேரத்தில் பல பணிகளில் கவனத்தை செலுத்த முடியாது. ஒரே நேரத்தில் இரண்டு விஷயங்களை சிந்திக்க முடியாது. நமது ஆன்மீக வளர்ச்சியை எடுத்துக் கொண்டால் ஒரே நேரத்தில் எதிர்மறை சிந்தனை மற்றும் செயல்களை கொண்டு அதனை அடைய முடியாது. நமது முழுக்கவனத்தையும் ஒரே பணியில் இருத்தி அதனை அடைய வேண்டும்..

8 விருந்தோம்பல் மற்றும் கொடுத்தல் விதி ( Law of hospitality and giving)...

நம்முடைய பழக்க வழக்கங்கள் நமது எண்ணங்கள் மற்றும் செயல்களோடு ஒத்துப் போக வேண்டும். நமது சுயநலமற்ற தன்மையை செயல் விளக்கம் அளிப்பதே நமது உள்நோக்கமாக இருக்க வேண்டும்.. சுயநலமின்மை என்ற கோட்பாடு ஏதாவது நமக்கில்லாமல் இந்த சமுதாயத்திற்கு பண்ணும் பொழுது தான் தெரியும் அதுவே மிகப்பெரிய சந்தோசம். ஒரு சுயநலமிமையில்லாமல் ஆன்மீக வளர்ச்சி என்பது இல்லவே இல்லை..

9 மாற்றம் விதி ( Law of Change )...

மாற்றம் இல்லாவிட்டால் அதே வரலாறு திரும்ப திரும்ப வரும். மாற்றத்திற்கான மனப்பூர்வமான அர்ப்பணிப்பு மட்டுமே கடந்த காலத்தை மாற்ற வல்ல ஒரே வழி.  நேரமறையான அழுத்தங்களும் மாற்றங்களும் இல்லையென்றால் வரலாறு மாறாது..

10 இங்கே இப்பொழுதே விதி : Law of NOW and HERE...

நாம் அனைவரிடமும் இருப்பது நிகழ்காலம் மட்டுமே. வருத்தத்துடன் கடந்த காலத்தை பார்ப்பதும் , பயத்துடன் எதிர்காலத்தை பார்ப்பதும்,  நிகழ்காலத்தை கொள்ளையடித்து விடும், பழைய முறை சிந்தனைகளும் நடத்தை முறைகளும் நிகழ்காலத்தை அழித்து மாற்றங்களை வர விடாது..

11 பொறுமை மற்றும் வெகுமதி  விதி ( Law of Patience and Rewards )...

பொறுமையான மனநிலை இல்லாமல் எந்த ஒரு மகத்தானத்தையும் அடைய முடியாது. பொறுமையும் விடாமுயற்சியும் அனைத்து வெற்றிக்குமான வெகுமதியை பெற வழிகளாகும், வேறெந்த வழியுமில்லை.  வெகுமதிகள் மட்டுமே  விடையின் கடைசி அல்ல , சத்தியம் , நீடித்த சந்தோசம் மற்றும் உற்சாகம் அனைத்துமே எதை சரியாக இந்த உலக மற்றும் நமது சந்தோஷத்திற்காக  செய்ய வேண்டும் என்பதை அறிந்து செய்வதில் தான் இருக்கிறது..

12. முக்கியத்துவம் மற்றும் அகத்தூண்டுதல் விதி ( Law of Signifigance and Inspiration )...

நாம் அளித்த ஆற்றல் மற்றும் முயற்சியின் இறுதி வடிவம் தான் நமக்கு கிடைக்கும் வெற்றி. ஆகவே முழுமனது மற்றும் அகத்தூண்டலுடன் சுயநலமில்லாமல் நாம் செய்யும் அனைத்துமே மிக முக்கியத்தும் மிக்கவை. காலத்தாலும் மறக்காத காரியமாக இருக்கும்..

அடுத்த இந்திய பிரதமர் மோடியா அல்லது ராகுல் காந்தியா.? புதிய கருத்து கணிப்பு...


https://youtu.be/rtjyTNjdEq8

Subscribe The Channel For More News...

ஸ்வர தாள குறிப்புகள்...


தாளத்தின் எண்ணிக்கை ஒன்றுக்கு நான்கு (4) ஸ்வரங்களாகப் பிரித்து எழுதப்பட்டுள்ளது.

’           = இது ஒரு அட்சர காலத்தைக் குறிக்கும்.

’’          = இது இரண்டு அட்சர காலத்தைக் குறிக்கும்.

’’’         = இது மூன்று அட்சர காலத்தைக் குறிக்கும்.

 .           = இது ஸ்வரத்தின் மேல் இருந்தால் “ தாரஸ்தாயி” என்றும்.. ஸ்வரத்தின் கீழ் இருந்த்தால் “மந்திரஸ்தாயி” என்றும் குறிக்கும்.

*           = இது வர்ணத்தின் ஆரம்ப இடத்தைக் குறிக்கும்.

-            = இது ஸ்வரங்களைப் பிரித்துப் பாடும் இடத்தைக் குறிக்கும்.

 |           = இது தாளத்தின் பிரிவைக் குறிக்கும்.

||           = இது தாளத்தின் முடிவைக் குறிக்கும்.

2, 3, 4,  = இந்த நம்பர்கள் எழுத்தின் பக்கத்தில் வந்தால் அந்த எழுத்தின் சப்தத்தைக் குறிக்கும்...

திமுக வின் சாதனைகள்...


கை கால் குடைச்சல், கால் வலி, குதிங்கால் வலி, மூட்டு வலி, கண் எரிச்சல், தலை வலி, உடல் வலி – இவைகள் வருவதன் காரணம் என்ன? நீக்க என்ன செய்ய வேண்டும்?


அடுத்தவருடைய கஷ்டங்களை எல்லாம் காது கொடுத்து உற்றுக் கேட்கும் போது கேட்பவருக்குக் கை கால் குடைச்சல் வருகின்றது என்று நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்?

கஷ்டமென்று சொல்வதை அதிகக் கவனத்துடன் கேட்போம். என் பையன் அப்படிச் செய்கிறான் இப்படிச் செய்கிறான் என்பார்கள்.

அதற்குத் தகுந்த மாதிரி இன்னொரு வீட்டில் கஷ்டமாக இருந்தால் இருவரும் எங்கே உட்கார்ந்து பேசினார்களோ அங்கே தான் அமர்ந்து பேசுவார்கள்.

அங்கே உட்கார்ந்து பேச ஆரம்பித்தவுடன் இதே இராமாயணம் தான். சமையல் செய்வது போய்விடும். எல்லாம் போய்விடும். கடைசியில் என்ன உலகம்... எல்லாம் போய்விட்டது என்பார்கள்.

ஏனென்றால் எந்தக் கஷ்டமானதைக் கூர்ந்து கேட்டார்களோ இந்த உணர்வுகள் அவர்களைச் சாடிக் கொண்டே இருக்கும். அதற்குத்தான் உதவும்.

காதிலும் கேட்டோம். வீட்டிலும் பதிவு செய்து விட்டோம். வீட்டிற்கு வந்தால் நிம்மதி இல்லை. இரவில் கை கால் குடைச்சல் கண் எரிச்சல், தலை வலி எல்லாமே வந்துவிடும். கடைசியில் டாக்டரிடம் தான் போக வேண்டும்.

நாம் சந்தோஷமாகப் பேசிக் கொண்டிருக்கின்றோம். அப்பொழுது உடனே எழுந்திருந்து விடலாம்.

ஆனால் அடிக்கடி சங்கடமாக பேசிக் கொண்டிருந்தால் உடலுக்குள் அங்கங்கே அந்த விஷம் தேங்கி நிற்கும். இந்த (சங்கடப்படும்) உணர்வுகள் வேகமாகத் தடுத்து நின்றவுடன் விஷம் அங்கேயே தேங்கிவிடும்.

நாம் மூச்சு (இந்தப் பிராணவாயு) எடுப்பதெல்லாம் சுற்றிக் கொண்டு வரும். அது கலந்து நரம்புகளில் இருக்கக்கூடிய உணர்வின் தன்மைகள் துடிக்க வேண்டும்.

கொஞ்ச நேரம் சலிப்பும் சங்கடமும் வேதனையும் எடுத்திருந்தால் நம் உடலில் (கை கால் தலை இடுப்பு) மடக்கிக் கொண்டிருக்கும் இடங்களில் தடைப்பட்டால் இது போய் மோதியவுடன் அசுத்தங்கள் எல்லாம் அப்படி அப்படியே அடங்கிவிடும்.

அதைத் தான் மூட்டுக்கு மூட்டுக்கு வலி முழங்கால் வலி குதிங்கால் வலி என்றெல்லாம் சொல்வார்கள். நடக்கவே முடியாமல் கூட வரும். நாம் கவலையால் எப்படி அமர்ந்திருந்தோமோ அப்படியே அந்த வலி வரும்.

1.கால் நீட்டி அமர்ந்திருந்தால் மடக்க முடியாது.

2.மடக்கி அமர்ந்திருந்தால் நீட்ட முடியாது.

3.உட்கார்ந்திருந்தால் எழுந்திருக்க முடியாது.

4.படுத்த நிலையிலிருந்து உடனே எழ முடியாது.

5.வேலை செய்யும் போது தெரியாது படுத்தவுடன் கால் வலி பயங்கரமாக இருக்கும்.

6.இந்த மாதிரிச் சர்வ சாதாரணமாகச் சொல்லிக் கொண்டே போவார்கள்.

இதற்கெல்லாம் காரணம் நாம் கேட்டுணர்ந்த சுவாசித்த உணர்வுகள் விஷத் தன்மையாகி நம்மைப் பலவீனப்படுத்தும். உடல் உறுப்புகளுக்குள் அங்கங்கே தேங்கி விடும்.

நாம் சுவாசித்த பிராணவாயு அங்கங்கே போகும்போது அதற்குத்தக்க இவையெல்லாம் தேங்கிக் கொள்ளும். நாம் தவறு செய்தோமா…?

பிறருடைய கஷ்டங்களையும் சிரமங்களையும் கேட்டு அறிந்து கொண்டோம்.

1.அதைச் சுத்தப்படுத்துகின்றோமா...?

2.அல்லது அவர்கள் கஷ்டங்களைச் சொல்லும் பொழுது உங்கள் கஷ்டமெல்லாம் நீங்கும்.

3.இனிமேல் கஷ்டமே உங்களுக்கு வராது என்று ஏதாவது நல்லதைச் சொல்லக் கற்றிருக்கின்றோமா...?

4.சற்று சிந்தித்துப் பாருங்கள்.

கஷ்டத்தைக் கேட்டு நாம் வேதனைப்படத் தெரிந்து வைத்திருக்கின்றோம்.

என்னிடமும் நிறைய கஷ்டம் இருக்கின்றது என்று நம் கஷ்டங்களையும் பதிலுக்குச் சொல்லி கஷ்டமானவைகளைப் பேசுவதே பழக்க வழக்கமாக இருக்கின்றது.

உடல் வலி மேல் வலி எல்லாம் வந்த பிற்பாடு என் நேரம் சரியில்லை...

தெய்வம் என்னைச் சோதிக்கின்றது...  அது சரியில்லை.. இது சரியில்லை... எதை எதையோ சொல்லத் தொடங்குகின்றோம்?

நாம் நுகர்ந்த சங்கடமான உணர்வுகள் தான் இவ்வளவுக்கும் காரணம் என்று எண்ணுவதில்லை. அதைத் தூய்மைப்படுத்தாதபடி அதனால் வந்த உடல் வலியினால் வேதனையை வளர்க்கத்தான் முடிகின்றது.

இதை யார் தூய்மைப்படுத்துவது...? தெய்வம் வந்து தூய்மைப்படுத்துமா..? சாமியார் துடைப்பாரா...?

துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் நாங்கள் பெற அருள்வாய் ஈஸ்வரா என்று புருவ மத்தியில் எண்ண வேண்டும்.

அடுத்து அது என் உடல் முழுவதும் படர்ந்து உடலில் உள்ள உறுப்புகளை உருவாக்கிய அணுக்கள் அனைத்தும் அந்தத் துருவ நட்சத்திரத்தின் பேரருளும் பேரொளியும் பெற அருள்வாய் ஈஸ்வரா உடலுக்குள் செலுத்தினாலே போதும்.

1.கண்ணின் நினைவு துருவ நட்சத்திரத்தின் பால் இருக்க வேண்டும்.

2.ஈஸ்வரா என்று புருவ மத்திக்குக் கொண்டு வர வேண்டும்.

3.தலையிலிருந்து கால் வரை உடல் உறுப்புகள் முழுவதும் அந்த உணர்வலைகளைப் பாய்ச்ச வேண்டும்.
ஒரு நிமிடத்திலிருந்து ஐந்து நிமிடத்திற்குள் அப்படியே ஒரு சர்குலேசன் மாதிரி இதே போல் மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும். இது தான் ஆத்ம சுத்தி என்பது.

இதைச் செய்து வாருங்கள். உங்கள் நோய்கள் விலகிவிடும். உங்கள் மனக் கவலைகள் நீங்கும். தொழில் எந்த முன்னேற்றம் அடைய முடியுமோ அதை அடைய முடியும்.

நாளைய விஞ்ஞான அழிவுகளிலிருந்து வரக்கூடிய சில விஷத்தன்மையில் இருந்து மீட்டுக் கொள்ள உதவும்.

இவ்வளவு சுலபமாகச் சொல்வதினால் நீங்கள் அலட்சியப்படுத்தி விடாதீர்கள்...

மலர் கஸ்தூரி மஞ்சள்.. மலர் நெல்லிக்காய் பல்பொடி...


https://youtu.be/boJ-ly9deDk

Subscribe The Channel For More Tips...

கூகுள் நிறுவன தலைமை பொறுப்பில் பிரபல இந்திய நடிகை.. அவர் யார் தெரியுமா...


நடிகைகளுக்கு சினிமாவில் சில காலம் மட்டுமே வரும் அதன்பிறகு அவர்கள் வேறு தொழில் அல்லது தொழிலதிபரை திருமண செய்துகொண்டு செட்டில் ஆகிவிடுவார்கள். இதுதான் நம் நாட்டில் நடந்துவருகிறது.

ஆனால் பாலிவுட் நடிகை Mayoori Kango சினிமாவில் இருந்து விலகியபிறகு தற்போது படித்து Google India industry head ஆக பணியில் சேர்ந்துள்ளார்.

15 வயதில் நடிக்க துவங்கிய அவர் "Ghar Se Nikalte Hi, Kuch Door Chalte Hi" உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்துவந்த அவர் 2000க்கு பிறகு நடிப்பதை நிறுத்திவிட்டு NRI ஒருவரை திருமணம் செய்துகொண்டு அமெரிக்கா சென்றுவிட்டார்.

அங்கு MBA marketing and finance படித்த அவர் வேலை செய்ய துவங்கியுள்ளார்.

குழந்தை பிறந்தபிறகு இந்தியா வந்த அவர் தற்போது Google India industry headஆக பணியில் சேர்ந்துள்ளார்.

திமுக வின் ஓசி சோறு தி.க. வீரமணியை ஓட ஓட விரட்டியடித்த இந்து முன்னணியினர் இருவர் மண்டையும் உடைப்பு...


https://youtu.be/odrl7OY1VYY

Subscribe The Channel For More News...