06/04/2019

உணர்வுகளின் சக்தி...


1. ஏதோ ஒரு கணத்தில் நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது மற்ற எதையும் விட அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். ஏனெனில் , இக்கணத்தில் நீங்கள் உணரும் விதம் தான் உங்கள் வாழ்க்கையை உருவாக்கிக் கொண்டிருக்கிறது.

2. உங்கள் உணர்வுகள் தான் உங்கள் எண்ணங்கள் மற்றும் வார்த்தைகளுக்கான சக்தி. நீங்கள் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது தான் முக்கியம்.

3. அனைத்து நல்ல உணர்வுகளும் அன்பில் இருந்து தான் வருகின்றன. அனைத்து எதிர்மறையான உணர்வுகளும் அன்பின் பற்றாக்குறையில் இருந்து வருகின்றன.

4. ஒவ்வொரு நல்ல உணர்வும் அன்பின் ஆற்றலோடு மீண்டும் உங்களை இணைக்கிறது. ஏனெனில் அன்புதான் அனைத்து நல்ல உணர்வுகளுக்கான மூலம்.

5. நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பற்றி நினைப்பதன் மூலம் உங்கள் நல்ல உணர்வுகளை அதிகரித்துக் கொள்ளுங்கள். நீங்கள் தொடர்ந்து நேசித்து வரும் விசயங்களை ஒவ்வொன்றாக கணக்கிடுங்கள். நீங்கள் அற்புதமாக உணரும் வரை, நீங்கள் நேசிக்கும் அனைத்து விசயங்களையும் பட்டியலிடுங்கள்.

6. உங்கள் வாழ்வில் உள்ள ஒவ்வொரு விசயத்தைப் பற்றியும் எவ்வாறு உணர்கிறீர்கள் என்பது அந்த ஒவ்வொன்றின் மீதும் நீங்கள் எப்படிப்பட்ட உணர்வுகளை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறீர்கள் என்பதன் துல்லியமான பிரதிபலிப்பு.

7. வாழ்க்கை தானாகவே உங்களுக்கு நிகழ்ந்து கொண்டிருக்கவில்லை. அது உங்களுக்குச் செயல்விடை அளித்துக் கொண்டிருக்கிறது. உங்கள் வாழ்வின் ஒவ்வொரு விசயமும் உங்கள் அழைப்பின் பேரில் நிகழ்வது தான். நீங்கள் வெளிப்படுத்தும் உணர்வுகள் மூலம், வாழ்வில் உள்ள அனைத்து விசயங்களையும் நீங்கள் கட்டளையிட்டு அழைக்கிறீர்கள்.

8. நீங்கள் உணரக்கூடிய நல்ல உணர்வுகளுக்கு எல்லையற்ற நிலைகள் உள்ளன. அப்படியென்றால், உங்கள் வாழ்வில் நீங்கள் சென்றடையக்கூடிய சிகரங்களுக்கு முடிவே இல்லை என்று பொருள்.

9. நீங்கள் விரும்பும் அனைத்து விசயங்களும் உங்களை விரும்புகின்றன. பணம் உங்களை விரும்புகிறது. ஆரோக்கியம் உங்களை விரும்புகிறது. மகிழ்ச்சி உங்களை விரும்புகிறது.

10. உங்கள் வாழ்வின் சூழல்களை மாற்றுவதற்குப் போராடாதீர்கள். உங்கள் நல்ல உணர்வுகள் மூலம் அன்பை வெளிப்படுத்துங்கள். அப்போது நீங்கள் விரும்பும் விஷயங்கள் தோன்றும்.

11. முதலில் நீங்கள் நல்ல உணர்வுகளை கொடுக்க வேண்டும். மகிழ்ச்சியான விசயங்களைப் பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியான விசயங்களை பெறுவதற்கு, முதலில் நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும், மகிழ்ச்சியைக் கொடுக்க வேண்டும்.. உங்கள் வாழ்வில் நீங்கள் எதைப்பெற விரும்பினாலும், முதலில் நீங்கள் அதைக் கொடுக்க வேண்டும். உற்சாகம் எப்போதும் உங்களுடன் இருக்கட்டும்...

பாஜக மோடியின் 5 ஆண்டு சாதனை...


கன்னட தெலுங்கர் ஈ.வே.ரா எனும் பெரியார் என்ற பொய்யரை...


பெரியார் என்ற பொய்யரை, அவர் விதைத்த திராவிட கொள்கையை வீழ்த்துவோம். கன்னட ஈவே ரா நாயக்கரின் திராவிட சாதனையே தமிழரின் வேதனை...

இந்தியாவிலேயே சாதி ஒழிப்பு, பார்பன எதிர்ப்பு கடவுள் மறுப்பு என்று முற்போக்கு சிந்தனைகளுக்கு முன்னோடியாக உள்ள தமிழர்கள் கண்ணெதிரே தான் பல இலக்கத்தில் ஈழத் தமிழர்கள் கொல்லப்பட்ட நிகழ்வு தமிழீழத்தில் நடந்தேறியது.

போரில் மக்கள் கொல்லப்படும் முன்பும், கொல்லப்படும் போதும்,கொல்லப்பட்டு பல ஆண்டுகள் கடந்த பின்பும் மயிரிழை அளவிற்கு கூட இன்றளவும் தமிழர்களிடத்தில் எழுச்சி இல்லை..

இதற்கு காரணம் தமிழினத்திற்கு எதிராக ஈ வே ராமசாமி நாயக்கர் விதைத்த திராவிட கருத்துக்களும் அவர் வழி வந்த திராவிடர்களும், திராவிட அரசியல் செயல்பாடு களேயாகும்.

தனது தொடர் உழைப்பின் மூலம் சாதி, கடவுள், மூடநம்பிக்கை, பெண்ணடிமை, பார்பனர்களை ஒழிப்பதாக கூறிய ஈ.வே.ரா இறுதியில் இவைகளை ஒழிக்க முடியாமல், தமிழர்களின் மொழி இனப்பற்றை முழுமையாக துடைதொழித்து விட்டார். அதனால் தமிழர்களின் உயிராக இருந்த தமிழினப் பற்று அழிந்து கடை கோடியில் இருந்த சாதிப் பற்று இன்று முதன்மையாகி தமிழினத்தை அழித்து வருகிறது..

தமிழ் மொழியை கற்காதே, தமிழனாய் எண்ணாதே, பழம் பெருமையை பேசாதே., தமிழனாய் வாழாதே என்ற ஈ வே ராமசாமி நாயக்கரின் பரப்புரைக்கு அடிமையான தமிழர்கள்.. அவரின் கொள்கையான ஆங்கிலத்தை கற்றுக் கொண்டு, தமிழ் மொழியினப் பற்றை துறந்து மனிதனாக வாழ துவங்கியதன் விளைவு இன்று தாய்த் தமிழில் உரையாடுவவதையும், தமிழின சிக்கலுக்காக உரிமை குரல் எழுப்புவதையும் அதற்காக போராடுவதையும் மறந்து சாதித் தமிழனாக தன்னலம் மிகுந்த தமிழினமாக மாறியுள்ளனர்..

உடலை கொடுத்து உயிரை பறித்த கதையாக திராவிடக்கொள்கை என்ற நஞ்சுக் கருத்துக்களை விதைத்து, தமிழினப் பற்று என்ற உயிரை பறிப்பதற்காக தன் இறுதி காலம் வரை போராடிய ஈ வே ராமசாமி நாயக்கரை பெரியார் என்று கூறுவது தமிழருக்கும் தமிழ் மொழிக்கும் இழுக்கல்லவா?

இந்தியாவில் சாதி, கடவுள், மூடநம்பிக்கை, பார்ப்பனப் பற்று என அனைத்தும் கூடுதலாக ஏன் வெறியாக உள்ள மாநிலங்களில் எல்லாம் அந்த இனத்தை சார்ந்தவரே ஆள முடிகிறது.. அம் மக்களின் உரிமைக்காக ஒற்றுமையாக போராட முடிகிறதே எப்படி?

காரணம் அங்கு சாதி,மதத்தை விட இனப் பற்று மேலோங்கி இருப்பது தான்.

உலகில் எங்குமே இல்லாத வியக்கத்தக்க செயலாக இங்கு மட்டுமே 2 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட திராவிட இனம் 98 விழுக்காடு மக்கள் தொகை கொண்ட தமிழர்களை அடிமையாக இறுத்தி ஆண்டு வருகிறது .

தங்களது இருப்பை தக்க வைப்பதற்காக ஈ வே ராமசாமி நாயக்கரையும் அவரின் திராவிட கொள்கைகளையும் முன்னிறுத்தி. அதன் மூலமாக தமிழர்களின் ஒரே தலைவராக பெரியாரை நிலை நிறுத்தி வருகிறார்கள். தமிழ் மொழியினப் பற்றை அழித்து தமிழிய சிந்தனைகளை வளர விடாமல் தடுத்து பாதுகாத்து வருகிறார்கள்.

“தமிழ்நாடு தமிழருக்கே” என்று சோமசுந்தர பாரதி முழங்கிய முழக்கத்தை, அடுத்த ஒரு திங்களில் தனதாக்கி கொண்ட ஈ வே ராமசாமி நாயக்கர், அந்த கருத்தை அதன் தாக்கத்தை மழுங்கடித்து, வெறும் பேச்சளவில் கொண்டு மீண்டும் தனது இறுதி மூச்சு உள்ளவரை திராவிட கொள்கைகளை பரப்புரை செய்து தனது திராவிட பற்றை காட்டுகிறார்.

இங்குள்ள திராவிட தலைமைகள் யாரை முதன்மை யான தலைவராக போற்றி கொண்டாடுகிறார்களோ , நிலை நிறுத்துகிறார்களோ அவர்களே தமிழர்களின் எதிரிகள் என்ற எளிமையான புரிந்துணர்வு இருந்தாலே நாம் வென்று விட முடியும். ஈ வே ரா இருக்க வேண்டிய இடத்தில திருவள்ளுவரை போற்ற வேண்டும்..

தமிழ்நாடு முழுக்க இருக்கும் ஈ வே ரா சிலைகளை அகற்றி அங்கு திருவள்ளுவர் சிலையை நிறுவ வேண்டும் தமிழர்களுக்கான தலைவராக தேசியத் தலைவர் பிரபாகரனை முன்னிறுத்த வேண்டும்..

ஈ.வே.ரா விதைத்ததே திராவிடம். ஈ.வே.ரா வை அடித் தளமாக கொண்டே திராவிட அரசியல் கட்டமைக்கப்பட்டுள்ளது..

திராவிடத்தின் உயிர் நாடியாக ஈ.வே.ரா வின் தமிழின எதிர்ப்பு கருத்துக்களையும், கொள்கைகளையும் மட்டும் எடுத்துக் கொண்டு அதனைப் புகழ் பாடி, தமிழர்களை முட்டாள்களாக திராவிட அரசியல் தலைமைகள் உருவகப் படுத்துகின்றனர்.

எனவே ஈ வே ரா என்ற அடித்தளத்தை வீழ்த்தாமல் திராவிட அரசியலை வீழ்த்த முடியாது. தமிழன் ஆட்சிக் கட்டிலில் ஏறவும் முடியாது..

தமிழின ஒற்றுமையை பற்றி பேசினால் சாதியை ஒழித்து விட்டு பிறகு பேசலாம் என்று ஈ வே ரா வின் கொள்கையை முன்னிருத்துகிறார்கள். இல்லாத ஊருக்கு வழி காட்டுகிறார்கள்.

சாதியை ஒழிப்பதற்கு 50 அல்லது 100 அல்லது 500 அல்லது 5௦௦௦ ஆண்டுகள் போதுமா என்றால் அதற்கு யாரிடமும் விடை இல்லை.

சாதி ஒழிப்பு என்ற முக மூடியுடன் தமிழர்களை பிரித்து திராவிடம் நம்மை ஆண்டு நம்மினத்தை அழித்து வருகிறது.

சாதிய மேலாண்மை, சாதிய ஏற்றத் தாழ்வு, சாதிய அடிமைத் தனத்தை ஒழித்தாலே நாளடைவில் சாதி தானாக மறைந்து விடும். படிப்படியாக செல்ல வேண்டிய இடத்தில் எடுத்தவுடன் சாதியை ஒழித்து விட்டு தான் தமிழர் ஒற்றுமையை பற்றி பேச வேண்டும். சாதியால் தான் தமிழர்கள் பிரிந்து கிடக்கிறார்கள் என்பது போன்ற பொய் தோற்றத்தை உருவாக்குகிறார்கள்.

அதுவே உண்மை என்றால் .சாதிய ஏற்றத தாழ்வு அதிகமாக உள்ள அண்டைய மாநிலங்கள், மற்றும் சாதி வெறி உள்ள வட இந்திய மாநிலங்கள் எல்லாம் இனப் அடிப்படையில் ஒன்று கூடி உரிமைகளுக்காக போராட முடிகிறதே எப்படி? .ஆக நமக்கு உடனடி இலக்கு இனப்பற்றே அன்றி சாதி ஒழிப்பு அல்ல..

ஈ வே ராமசாமி நாயக்கரின் (கொள்கை) தலை மீது அமர்ந்து கொண்டு தான் திராவிடம் நம்மை ஆளுமை செய்கிறது. ஈ வே ராமசாமி நாயக்கரின் கருத்துக்களை உயர்த்தி பிடித்தே தமிழர்களை திராவிடம் அடிமை படுத்தி வருகிறது..

திராவிடத்தை வீழ்த்த வேண்டுமானால் நாம் முதலில் பெரியாரை வீழ்த்த வேண்டும். தமிழினத்தின் தலைவராக தேசியத் தலைவரை முன்னிருத்த வேண்டும். அப்பொழுதே தமிழர் நாட்டை தமிழன் ஆட்சி செய்ய முடியும்.

இந்த தலைமுறைக்குள் மீட்டெடுக்க தவறினால் வரும் தலைமுறைகள்,  திராவிடர்களின் வட இந்தியர்களின் அடிமையாக வாழ நேரிடும்..

பெரியார் என்ற பொய்யரை வீழ்த்துவோம். திராவிடம் என்ற பொய்மையை விரட்டி அடிப்போம். தமிழினம் என்ற உண்மையை அரியணை ஏற்றுவோம்...

நெகிழி ஒழிப்பு அவசியம் தான் அதே நேரத்தில் அதற்கு மாற்று என்ன என்று ஆராயாமல்,குடிசைத் தொழிலை அழித்து கார்ப்பரேடிடம் கைக்கட்டி வாய்ப்பொத்தி வாங்கி உண்கிறோம்...


திராவிடத்தின் பெயருக்கு பின்னால் ஒலிந்துக் கொண்டு தெலுங்கன் இதுவரை செய்த அட்டூழியங்களும் தமிழின அழிப்பும் போதும்...


தமிழருக்கான விடுதலையை தமிழரே பெற்றுக் கொள்வோம்..

வந்தேறிகள் எங்களுக்காக போராடுவதைப் போல நடிக்கத் தேவையில்லை..

ஈழத்தை நீங்கள் பெற்றுத் தருவதாக கூறி தமிழக மக்களையும் ஈழத்து தமிழர்களையும் ஏமாற்றியது போதும்..

உண்மையில் தமிழர்களுக்கு போராடுபவர்கள் முதலில் இங்கு அகதி முகாம்களில் உள்ள தமிழர்களை விடுதலை செய்யுங்கள். இங்குள்ள தமிழர் பிரச்சனையை போக்குங்கள்.

தமிழரின் அரசியல் அதிகாரத்தை கைப்பற்றி இருக்கும் வந்தேறிகளை அகற்றி தமிழ் சாதிகளை பதவியில் அமர வையுங்கள்.

தமிழ் மண்ணில் வாழ்ந்து, தமிழரின் நலனை பேணி தருகிறேன் என்று சொல்லி மனுவாதிகளிடம் (ஆரியனிடம்) இருந்து காத்து தருகிறேன், என சொல்லி தமிழ் மண்ணை அன்று முதல் இன்று வரை உறிஞ்சி பிழைக்கும் வந்தேறி கூட்டமே…

திராவிடம் தமிழில் இல்லாத திராவிடம் என்றாய். எலி இடம் இருந்து காப்பாற்றுகிறேன் என்று சொல்லி.. பசு தோல் போர்த்திய புலி போல தமிழரை ஏமாற்றிய எட்டப்பர்களே…

கேரளா மண்ணை மலையாளி ஆள்வான்…
கர்நாடக மண்ணை கன்னடன் ஆள்வான்…
ஆந்திராவை உங்க சண்டாள வம்ச தெலுங்கன் ஆள்வான்..

தமிழ் மண்ணை திராவிட வந்தேறி தெலுங்கன் கன்னடன் மலையாளி ஆள்வான்..

தமிழன் விரல் சூப்பி நிற்பான்…

இனி கனவு காணாதே…..

தமிழரே தமிழ் மண்ணை ஆள வழி வகை செய்வோம்...

தமிழ் தேசிய தலைவர் திரு. பிரபாகரன் வழி ஒற்றி வாழும் மானமிகு மறத்தமிழர் நாங்கள்…

மறவர்.. கள்ளர்.. மள்ளர்.. பரதவர் … நாடார்… வன்னியர்… கவுண்டர்.. இடையர்.. கோனார்… குறவர்.. மலை சாதி மக்கள் என தமிழரின் முகங்கள் அதிகம்…

உன்னை போல வந்தேரியரால் தமிழர் பிரிவு கண்டோம்…

சங்க காலத்திலும் தமிழ் ஈழத்திலும் சாதி இல்லை… இனி தமிழர்களாக ஓன்று கூடுவோம்…..

தமிழரே தமிழ் மண்ணை ஆள்வோம்… வெல்வோமடா...

திமுக ஸ்டாலின் மீது 3 பிரிவுகளில் வழக்கு பாய்ந்தது.. கோவை போலீஸ் அதிரடி...


https://youtu.be/624X_AH38H8

Subscribe The Channel For More News...

விதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன்?


காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி...

மேட்டூர் அணையிலிருந்து கடந்த 31.03.2019 முதல் “குடிநீருக்காக” என்று சொல்லி 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு முன்னர் “குடிநீருக்காக” 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டதில்லை. கடந்த காலத்தில் குடிநீர் பற்றாக்குறைக்காக அதிகபட்சமாக 2,000 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள்.

இந்த 8,000 கன அடி தண்ணீர் - காவிரிப் பாசன வரம்பிற்கு உட்படாத சாகுபடி நிலங்களுக்கு இந்தக் கோடை காலத்தில் திருப்பி விடப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் இருக்கின்ற சேமிப்புத் தண்ணீரை விதிமுறைகளுக்குப் புறம்பாக திறந்துவிட்டு காலி செய்து விட்டால், குறுவை சாகுபடிக்கு நீர் சேமிப்பு இருக்காது.

வழக்கமாக, பருவமழை காலத்தில் மேட்டூரில் தேங்கியுள்ள மிச்ச நீரை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான், கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய தண்ணீரில் ஓரளவைப் பெற்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு வந்தது. கடந்த பருவமழை அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையில் மார்ச்சு இறுதி வாக்கில் 64 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்தது.

அந்த சேமிப்பைக் காலி செய்கின்ற வகையில், 8,000 கன அடி திறந்துவிட்டதைக் கண்டித்து, கடந்த 02.04.2019 அன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சையில் தொலைக்காட்சி ஊடகத்தினரை சந்தித்து நானும், காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்களான ஐயனாபுரம் முருகேசன் அவர்களும், மணிமொழியன் அவர்களும் 8,000 கன அடி திறப்பதை நிறுத்த வேண்டும், 2,000 கன அடி திறந்துவிட்டாலே குடிநீருக்குப் போதும் என அறிக்கை கொடுத்தோம்.

அதன்பிறகு, 03.04.2019 முதல் மேட்டூரில் திறந்துவிடப்படும் அளவு 6,000 கன அடியாகக் குறைக்கப்பட்டாலும், இதுவும் அதிகமான வெளியேற்றம்தான். குறைக்கப்பட்ட அளவு போதாது! கிடுகிடுவென்று மேட்டூர் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்த விகிதத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்துவந்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இருக்குமா என்பது மட்டுமல்ல, கடும் கோடைக்காலத்தில் குடிநீருக்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை உருவாகும்.

கடந்த 2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீரைத் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு ஏன் வலியுறுத்தவில்லை?

இதில் கடமை தவறிய தமிழ்நாடு அரசு, குறைந்தளவு இருக்கின்ற மேட்டூர் நீரையும் விதிகளுக்கு முரணாகத் திறந்து விரையமாக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, வெளியேற்றும் நீரின் அளவை 2,000 கன அடிக்குள் வைக்குமாறும், மாத வாரியாக கர்நாடகத்திலிருந்து பெற வேண்டிய காவிரி நீரைத் திறந்துவிட மேலாண்மை ஆணையத்தைத் வலியுறுத்திப் பெறுமாறும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்...

தேர்தல் வந்தா போதும் திமுக பினாமி லயோலா கல்லூரிக்கு ஓசி பிரியாணி தான்...


நோய்களுக்கு எதிராக ஆழ்மன சக்தி...


மருந்துகள் இல்லாமல் நோய்களைக் குணமாக்க முடிவது பண்டைய காலத்தில் இருந்தே உலகில் பல நாடுகளிலும் பேசப்பட்டு வந்திருக்கிறது. இயேசு கிறிஸ்து போன்ற தெய்வப்பிறவிகள், மகான்கள், யோகிகள், சித்தர்கள், அபூர்வ சக்தி படைத்தவர்கள் இப்படி குணமாக்கினார்கள் என்று பண்டைய பதிவுகள் சொல்கின்றன.

பிற்காலத்திலும் பதினெட்டாம் நூற்றாண்டில் மெஸ்மர் என்ற ஜெர்மன் மருத்துவர் மருந்துகள் இல்லாமல் கும்பல் கும்பலாக ஒரு கட்டத்தில் நோயாளிகளைக் குணப்படுத்தினார் என்பதை இத்தொடரில் 18 ஆம் அத்தியாயத்தில் விவரமாகப் பார்த்தோம்.

இக்காலத்திலும் மருந்தில்லா மருத்துவ முறைகளில் ரெய்கி (Reiki), ப்ரானிக் ஹீலிங் (Pranic Healing) போன்ற சிகிச்சைகள் பல நாடுகளிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

தற்போது இந்த சிகிச்சைகள் செய்வோர் எண்ணிக்கையில் எல்லா நாடுகளிலும் ஏராளமாக இருக்கின்றனர். அவர்கள் அனைவருமே வெற்றிகரமாக நோய்களைக் குணப்படுத்துகிறார்கள் என்று சொல்ல முடியா விட்டாலும் அந்த சிகிச்சைகளைச் செய்வோரில் குறிப்பிட்ட சிலர், நோய்களைத் தீர்ப்பதில் மிகச் சிறப்பான விளைவுகளை ஏற்படுத்தி வருகிறார்கள் என்றே சொல்ல வேண்டும். எந்த சிகிச்சையிலும் இப்படி சிறப்பான விளைவுகளை ஏற்படுத்துபவர்கள் அறிந்தோ, அறியாமலோ தங்கள் ஆழ்மன சக்தியை பயன்படுத்துபவர்களாகவே இருக்கிறார்கள்.

அறுவை சிகிச்சையின் போது பயன்படுத்தப்படும் மயக்க மருந்து அனெஸ்தீஸியா கண்டு பிடிக்கப்படும் முன்பே இந்தியாவில் மேற்கு வங்கத்தில் டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே (Dr. James Esdaille) என்னும் ஸ்காட்லாந்தைச் சேர்ந்த மருத்துவர் 1843 ஆம் ஆண்டு முதல் 1846 ஆம் ஆண்டு வரை சுமார் 400 அறுவை சிகிச்சைகள் நோயாளிகளுக்கு வலி சிறிதும் தெரியாமல் செய்து சாதனை படைத்திருக்கிறார்.

இந்த அறுவை சிகிச்சைகள் கண், காது, தொண்டை போன்ற உறுப்புகளிலும், உடலில் இருந்து கட்டிகள், கான்சர் பாதிக்கப்பட்ட பகுதிகளை எடுப்பதிலும் செய்யப்பட்டு இருக்கின்றன.

இந்த சிகிச்சைகள் மருத்துவ சிகிச்சைகள் தான் என்றாலும் வலி தெரியாமல் இருக்க மயக்க மருந்து இல்லாத காலத்தில் ஆழ்மன சக்தியையே அவர் பயன்படுத்தியதாக டாக்டர் ஜேம்ஸ் எஸ்டெய்ல்லே கூறினார்.

இந்த 400 அறுவை சிகிச்சையின் போதும் ஒரு மரணம் கூட நிகழ்ந்து விடவில்லை என்பது மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்.

இந்த ஆழ்மன சக்தியைப் பயன்படுத்தி ஒருவரைக் குணப்படுத்த முடியும் என்றாலும் முதலில் நாம் நமக்குப் பயன்படுத்தி நம் நோய்களைக் குணப்படுத்துவது எப்படி என்றும் நம் ஆரோக்கியத்தை மேம்படுத்திக் கொள்வது எப்படி என்றும் பார்ப்போம்.

நம் உடல் நல்ல முறையில் இயங்குவதற்கு இயற்கையாகவே ஆழ்மனதின் ஒரு பகுதி பயன்படுத்தப்பட்டு வருகிறது. அந்த ஆழ்மனசக்தி தான் நாம் உறங்கும் போதும் மூச்சு விடுதல், இதயம் துடித்தல், ஜீரணம் நடை பெறுதல், உடலில் பாதிக்கப்பட்ட சில பகுதிகளை ரிப்பேர் செய்தல் போன்ற முக்கிய வேலைகளை நாம் அறியாமலேயே செய்து வருகிறது.

இன்னும் சொல்லப் போனால் நாம் விழித்திருக்கும் நேரத்தில் நம் கவலைகள், பயங்கள், டென்ஷன், போன்றவற்றால் நம் இதயம், நுரையீரல், வயிறு போன்றவற்றின் செயல்பாடுகளை நாம் கெடுத்துக் கொண்டாலும், நம் உறக்க நேரத்தில் ரிப்பேர் வேலைகளைச் செய்து ஆழ்மனம் முடிந்த அளவு நம்மைக் காப்பாற்றுகிறது.

இந்த வேலையை ஓய்வில்லாமல் ஆழ்மனம் செய்கிறது. உடல்நிலை சரியில்லாத காலத்தில் நாம் அதிகமாக உறங்கியபடியே இருப்பதற்குக் காரணம் கூட ஆழ்மனதின் பொறுப்பில் நம் உடலை விடுவதற்கு வழி செய்யத் தான். இயல்பாக இதைச் செய்யும் ஆழ்மனதை மேலும் முறையாகப் பயன்படுத்தினால் நோய்களை நாம் விரைவாக குணப்படுத்தலாம்.

முதலில் நாம் ஆழ்மனதை அதன் வேலையைச் செய்ய விட வேண்டும். கற்பனைக் கவலைகள் மற்றும் பயங்கள், அவசர வாழ்க்கையின் டென்ஷன் ஆகியவற்றை மேல் மனதில் இருந்து ஆழ்மனதிற்கு அனுப்பும் முட்டாள்தனத்தை உடனடியாக நிறுத்த வேண்டும். இப்படி அனுப்பிக் கொண்டே இருந்தால் ஆழ்மனம் தன் வேலையை நிறுத்தி நம் பொய்யான பிரச்னைகளின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பும். நம் ஆரோக்கியம் கவனிப்பாரில்லாமல் மேலும் பாழாகும்.

தியானம் மற்றும் உயர் உணர்வு நிலை பெற சொல்லப்பட்ட சிந்தனை மற்றும் பயிற்சிகளைத் தொடர்ந்து செய்து வந்தால் மனம் தானாக அமைதியடையும். அமைதியடைந்த மனம் ஒரு வலிமையான ஆயுதம் என்றே சொல்ல வேண்டும். அமைதியான மனநிலையை அதிகமாக தக்க வைத்துக் கொள்கின்ற போது ஆழ்மனமும் சக்தி பெற்று வழக்கத்தை விட சிறப்பாக உடல் நலத்தைப் பாதுகாக்கும்.

சரி, நமக்கு வந்து விட்ட நோயை அல்லது உடல் உபாதையை ஆழ்மன சக்தியால் நாமே குணப்படுத்திக் கொள்ளும் வழியை இனி பார்ப்போம். முதலில் தலை வலி போன்ற தற்காலிக சிறிய உபாதைகளை நீக்க பயிற்சி செய்து பழகிக் கொள்ளுங்கள். இதில் வெற்றி கண்ட பிறகு சற்று பெரிய, தொடர்ந்து வருத்தும் நோய் அல்லது உபாதைகளை நீக்க நீங்கள் முயலலாம்.

முதலில் மனதை அமைதியாக்கி தனிமையில் அமருங்கள். தலைவலி போன்ற உபாதைகள் இருக்கையில் தியானம் சுலபமல்ல என்றாலும் நீங்கள் தொடர்ந்து தியானம் செய்யும் இடத்திலேயே இதற்கென அமர்வது நல்ல பலனைக் கொடுக்கும். மூச்சுப் பயிற்சி செய்து மூச்சை சீராக்குங்கள். பின் சில வினாடிகள் உங்கள் வலி மீதே முழு சிந்தனையை வையுங்கள். பின் ‘இந்த வலி சிறிது சிறிதாகக் குறைய ஆரம்பிக்கிறது’ என்ற எண்ணத்தை உங்களுக்குள் நிதானமாக, அழுத்தமாக சில முறை சொல்லிக் கொள்ளுங்கள். பின் நீங்கள் அந்த தலைவலி இல்லாமல் முழு ஆரோக்கியமாக இருப்பது போல மனதில் காட்சியை உருவகப்படுத்திப் பாருங்கள். அப்படிப் பார்க்கையில் தலைவலி என்கிற எண்ணத்தைப் பலமிழக்க வைத்து ஆரோக்கியம் என்கிற எண்ணத்திற்கு தான் நீங்கள் சக்தி சேர்க்க வேண்டும். அந்தக் குணமாகி இருக்கும் காட்சியை மனத்திரையில் பெரிதாக்கி, வலுவாக்கி, ஒளிமயமாக்கிக் காணுங்கள். ஒருசில நிமிடங்கள் அப்படிக் கண்டு அந்தக் காட்சியை ஆழ்மனதிற்கு கட்டளை போல் அனுப்பி விட்டு எழுந்து விடுங்கள். பின் மனதை வேறு விஷயங்களுக்கு திருப்புங்கள். சில நிமிடங்கள் கழித்து உங்கள் தலைவலி பெருமளவு குறைந்து, அல்லது பூரணமாக விலகி விட்டிருப்பதை நீங்கள் காணலாம். முன்பு விளக்கி இருந்த மனதை ஒருமுகப்படுத்தும் பயிற்சியையும், மனக்கண்ணில் தத்ரூபமாகக் காட்சிகளை உருவகப்படுத்தும் பயிற்சியையும் நீங்கள் செய்து தேர்ந்திருந்தால் விளைவுகள் சிறப்பாகவும், சக்தி வாய்ந்தவையாகவும் இருக்கும்.

சற்று பெரிய உபாதையாகவோ, தொடர்ந்து கஷ்டப்படுத்தும் நோயாகவோ இருந்தால் இது போல சில நாட்கள் தொடர்ந்து நீங்கள் இந்தப் பயிற்சி செய்ய வேண்டி வரும். அப்படியிருந்தால் உறங்குகின்ற நேரத்தில் இந்தப் பயிற்சியைச் செய்து கொண்டே நீங்கள் உறங்கி விடுவது வேகமாக அதைக் குணமாக்கி விட உதவும்.  முற்றிய கான்சரின் பிடியில் இருந்த சிறுவன் இது பற்றித் தெரியாமலேயே தொடர்ந்து பயன்படுத்திய கற்பனைக் காட்சிகள் அவனை இப்படித் தான் குணமாக்கியது.

நோய்கள் நெருங்காமல் பாதுகாப்பு செய்து கொள்ளவும் ஆழ்மன சக்தி உதவும். அதைச் செய்து கொள்ள சென்ற அத்தியாயத்தில் சொல்லியிருந்தபடி உங்கள் உணர்வுத் திறனைக் கூர்மைபடுத்துவதில் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அப்படித் தேர்ச்சி பெற்றிருந்தால் நோய்க்கிருமிகள் உங்கள் உடலை நெருங்கிய அந்தக் கணத்திலேயே உங்களால் உணர முடியும். அவை உங்கள் உடலில் தங்கி அஸ்திவாரம் போட்டு பலம் பெற்ற பின் அவற்றை விரட்டுவது சற்று நீண்ட சிரமமான வேலை. அவை நெருங்கியவுடனேயே உறுதியாக, அழுத்தமாக, உணர்வு பூர்வமாக அனுமதி மறுத்து விரட்டி விடுங்கள்.

அரவிந்தாஸ்ரமத்து அன்னை இதனை விளக்குகையில் நோய்க்கிருமிகள் நெருங்குவதை உணரும் அந்த கணத்திலேயே “NO” என்று உணர்வு பூர்வமாக முழு சக்தியையும் திரட்டி மனதில் கட்டளை இடச் சொல்கிறார். இதற்கு உணரும் திறனை கூர்மையாகப் பெற்றிருப்பதும், வலிமையான மனநிலையில் இருப்பதும் மிக முக்கியம். இது வரை சொன்ன ஆழ்மனப்பயிற்சிகளை தொடர்ந்து செய்தவர்களுக்கு இந்த இரண்டையும் இயல்பாகவே அடைந்து விட்டிருப்பார்கள் என்பதால் இது எளிதில் கைகூடும்.

உங்கள் வீட்டிலோ, நீங்கள் வசிக்கும் பகுதியிலோ ஏதாவது ஒரு நோய் ஒவ்வொருவராக பாதித்துக் கொண்டு வந்தால் அந்த நோய் உங்களை நெருங்காதபடி ஆழ்மன சக்தியை உபயோகித்து ஒரு பாதுகாப்பு வளையத்தைக் கூட நீங்கள் உருவாக்கிக் கொள்ளலாம். அந்த நோயை எதிர்க்கும் அல்லது வர விடாமல் தடுக்க வல்ல பெரும் சக்தி வாய்ந்த பொன்னிற பாதுகாப்பு வளையம் உங்களைச் சுற்றி இருப்பதாக மனக்கண்ணில் உருவகப்படுத்தி தத்ரூபமாகக் காணுங்கள். ஒரு நாளில் ஓரிரு முறை இப்படி உருவகப்படுத்தி ஆழமாக உணர்ந்து இரவில் உறங்கும் போதும் சிறிது நேரம் உருவகப்படுத்துங்கள். உங்களைச் சுற்றி உள்ள அந்த பாதுகாப்பு வளையத்தை அடிக்கடி உணருங்கள். அந்த நோய் உங்களைக் கண்டிப்பாக பாதிக்காது.

ஆனால் இதெல்லாம் சாத்தியமாக பயிற்சிகள் செய்து உங்கள் ஆழ்மனதை சக்தி வாய்ந்த ஆயுதமாக நீங்கள் வைத்திருக்க வேண்டும் என்பது முக்கியம்...

தினகரன் அணிக்கு எதிராக வாக்கு எந்திரத்தில் சூழ்ச்சி.. ஆடிப்போய் கிடக்கும் அமமுக...


https://youtu.be/J5YfYd2R8Ww

Subscribe The Channel For More News...