07/04/2019
சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்...
மூலிகை மருந்துகள்...
1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில் ‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில் அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன் கசப்பான சாற்றை எடுத்துச் சற்றே அலசிப் பின் மோரில் கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர் போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில் இளமைத் தன்மை அதிகரிக்கும்.
2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள் குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில் அதிகரிப்பதுடன், முகப்பொலிவும் உண்டாகும்.
3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப் பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன் வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின் சாற்றையும் பயன் படுத்தலாம்.
4. செம்பருத்திபூவைக் காயவைத்து பொடி செய்து தலையில் சீயக்காய் போலத் தேய்த்துக் குளித்து வந்தால், பொடுகுத் தொல்லை போகும். நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும் நின்றுவிடும். மேலும் கண்களுக்கும் உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
5. தேனை தினமும் வெந்நீரிலோ, பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள் பட்ட இருமல், சளி குணமாகும்.
6. மூச்சுக்கூட விடமுடியாமல் அதிகப்படியான இருமலாலும் சளியாலும் சிரமப்படும் குழந்தைகளுக்கு, குப்பை மேனியின் சாற்றைப் பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன் அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில் வந்து விடும். ஆனால் சரியான அளவில் கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப் போக்கு ஏற்படும்.
7. ஆண்மைக்குறைவைப் போக்க விரும்புபவர்கள் முருங்கை விதையைப் பொடி செய்து, பாலில் கலந்து, இரவில் படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம் ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.
8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள் சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின் படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய் இல்லாதவர்கள் சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம், அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச் செல்லலாம்.
9. அருகம்புல்லைச் சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம் ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம் சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.
10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக இருந்தாலும் மது அருந்தும் பழக்கம் உடையவராகவோ அல்லது புகைப் பிடிப்பவராகவோ இருந்தால் அது உடலில் மருந்தின் செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.
11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்து தினமும் தோலில் தேய்த்துக் குளித்து வரக் குணமாகும்.
12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த கொதிப்பு நோய் குணமாக இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக் கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்...
தகாத உறவின் போது தகராறு.. கள்ளக்காதலனை கழுத்தை நெரித்து கொன்ற காதலி...
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த பிரம்மதேசம் என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் மஞ்சுளா. இவருக்கும் சிறுவலையத்தைச் சேர்ந்த சிட்டி பாபு என்பவருக்கும் இடையே தகாத உறவு இருந்ததாக கூறப்படுகிறது.
இவர்களிடம் இருந்து பிரிந்து சென்றுவிட்டார்களாம். இந்நிலையில் நேற்று மதியம் பிரம்மதேசத்தில் உள்ள பாலாற்றில் இருவரும் தனிமையில் சந்தித்து கொண்டனராம். அப்போது இருவருக்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
அப்போது மஞ்சுளாவை சிட்டிபாபு தாக்கினாராம். இதனால் ஆத்திரம் அடைந்த மஞ்சுளா சிட்டிபாவுவின் கழுத்தை நெறித்துக் கொலை செய்துள்ளாராம்.
இதன்பின்னர் அவரே போலீசில் சென்று சரண் அடைந்துள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
குடிப்பழக்கத்தை ஏன் நிறுத்த முடிவதில்லை?
குடிப்பழக்கம் மட்டுமல்ல வேறு எந்த பழக்கத்தையும் உடனே நிறுத்த முடியாது.
பாதிப்பு அதிகம் என்பதால், நாம் குடிப்பழக்கத்தைப் பற்றி அதிகம் பேசுகிறோம்.
மற்றபடி டீ குடிக்கும் பழக்கத்தைகூட நிறுத்துவதென்பது கடினமான ஒன்று தான்.
நாம் ஏற்படுத்திக் கொள்ளும் பழக்கங்கள் நம் நரம்பு மண்டலத்தில் சில தூண்டுதல்களை ஏற்படுத்துகிறது.
அந்த தூண்டுதல்களுக்கு பழக்கப்பட்டு விட்ட நமது நரம்பு மண்டலம். மீண்டும் மீண்டும் குறிப்பிட்ட அந்த செயலை செய்யுமாறு நம்மை தூண்டுகிறது.
எனவே சரியான ஆலோசனை மற்றும் அதற்குண்டான பயிற்சியினால் மட்டுமே ஒரு பழக்கத்தை கட்டுப்படுத்த முடியும்.
மற்றபடி ஒரு முறை குடித்துவிட்டு ச்சே இனிமேல் குடிக்கவே கூடாது என நினைப்பதெல்லாம் குற்ற உணர்வால் ஏற்படும் சிந்தனைகள்...
கன்னட தெலுங்கர் ஈ.வே. ராமசாமியின் சாதி வெறி...
முதுகுளத்தூர் கலவரத்திற்கு பிறகு - பசும்பொன் முத்துராமலிங்க தேவரை கைது செய்ய காமராசருக்கு யோசனை சொன்ன ஈ.வே. ராமசாமி நாயக்கர்...
கீழ்வெண்மணி படு கொலைகளுக்கு பிறகு கோபாலகிருஷ்ணன் நாயுடுவை கைது செய்ய சொல்லி அண்ணாதுரைக்கு ஆணையிடவில்லை.
காரணம் - நாயக்கரின் சாதி பாசம்.
நாயுடுவுக்கு நாயக்கர்வாள் உதவாமல் யார் உதவுவார்கள்.
இந்த அப்பட்டமான வடுக தெலுங்கு திராவிட சாதி வெறி கும்பல் தான், முத்துராமலிங்க தேவரை சாதி வெறியர் என்று ஏசுகிறது...
Subscribe to:
Posts (Atom)









