07/04/2019

பாஜக மோடி சாதனைகளை சொல்லி ஓட்டு கேளுங்கள்....


தமிழரல்லாதார் ஆட்சி அம்பலப்படுத்திய பாரதியார்...


1920ல் தமிழரல்லாத ஜஸ்டிஸ் கட்சி அமைச்சரவை பற்றி.. மகாகவி பாரதியார் 'சுதேசமித்திரனில்' எழுதியது...

புதிதாகச் சென்னை நிர்வாக சபையில் சேர்ந்தபிராமணரும்-பஞ்சமரும் ஐரோப்பியருமாகிய பிறருமல்லாதார் வகுப்பைச் சேர்ந்த மந்திரிகள், தமிழரும் அல்லாதார் என்றுஒருவர் என்னிடம் வந்து முறையிட்டார்.

ஹும்.. இந்த பாஷை சரிப்படாது..

நடந்த விஷயத்தை நல்ல தமிழில் சொல்லுகிறேன்...

தமிழ் வேளாளர் ஒருவர்,இப்போது மந்திரிகளாக சேர்ந்திருக்கும் ரெட்டியாரும், நாயுடுவும், ஸ்ரீ ராமராயனிங்காரும், தெலுங்கர்கள் என்றும்...

தமிழ்நாட்டிற்குப் பிரதிநிதியாக இவருள் எவருமில்லாமை வருந்தத்தக்க செய்தியென்றும் என்னிடம் வந்து முறையிட்டார்...

- பாரதி தமிழ்: பக்.403...

திருவாரூர் மாவட்டம் எருக்காட்டூர் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. எண்ணெய்க் குழாய் வெடித்து சுமார் 2 ஏக்கர் பருத்தி வயல் முற்றிலும் சேதம்...


நம் விதியும் மாறக் கூடியது...


வேண்டும் என்பதற்காகப் போராடுவதை விட..

வேண்டாம் என்பதற்குத்தான் நாம் வாழ்வில் அதிகம் போராடுகிறோம்..

கடன் வேண்டாம், நோய் வேண்டாம், மனக்கஷ்டம் வேண்டாம், பிரச்சினை வேண்டாம்... இப்படி நிறைய வேண்டாம் கள் உண்டு.

நமது அத்தனை சக்தியையும் திரட்டி எதை வேண்டாம் என்று எண்ணுகிறோமோ அதில் செலுத்துகிறோம். பிறகு சொல்கிறோம்...

எது வேணாம்னு நினைச்சோமோ அது அப்படியே நடந்தது..

வேண்டாம் என்று நினைப்பதையும் நம் மனதின் சக்தி கவர்ந்து இழுத்து வரும்..

பிரார்த்தனை என்பது உங்கள் எண்ணங்கள் தான்.

நம்பிக்கை எப்போதும் நேர்மறை சக்தி..

நம்பிக்கையுடன் ஒன்றைச் செய்தால் அது பலிக்கிறது. காரணம், நம்பிக்கை எண்ணங்களும் ஊக்க உணர்வுகளும் அதற்கான மனிதர்களையும் நிகழ்வுகளையும் அழைத்து வரும்.

அதனால் கடன் வேண்டாம் என்று எண்ணுவதைவிட செல்வம் வருகிறது என்று நம்புவது முக்கியம்.

நோய் வேண்டாம் என்று எண்ணுவதை விட ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது முக்கியம்.

சண்டை வேண்டாம் என்று எண்ணுவதை விட சமரசம் ஏற்படுகிறது என்று நம்புவது முக்கியம்.

கடன்காரன் நாளை அஞ்சு லட்சம் கேட்டு கழுத்தை நெருப்பின். எப்படி செல்வம் வரும் என நம்புவது? என்று கேட்கலாம்.

எந்த மருந்துக்கும் கட்டுப்படவில்லை, எப்படி ஆரோக்கியம் திளைக்கிறது என்று நம்புவது? என்பதும் நியாயமான கேள்வி தான்..

என்ன பேசினாலும் சண்டையில் தான் முடிகிறது என்பதும் இருக்கக்கூடும்..

உங்கள் நேற்றைய எதிர்மறை சக்தியின் விளைவு இன்றைய நிலை. அதைச் சான்றாக வைத்து இன்று நேர்மறையாக யோசிக்க மறுத்தால் இந்தச் சங்கிலி தொடரும்.

எனவே, தர்க்க சிந்தனையில் மாட்டிக் கொள்ளாமல் நம்பிக்கையோடு நல்லதை நினையுங்கள்..

எண்ணம் மாறக்கூடியது என்றால் செயலும் மாறக்கூடியது. நம் விதியும் மாறக்கூடியது.

விதியை மதியால் வெல்லலாம் என்று சொல்வது இதைத் தான்...

திமுக கனவு ஒரு போதும் பலிக்காது, பிரச்சாரத்தில் வெளிப்படையாக சொன்ன ஒபிஎஸ், கலக்கத்தில் ஸ்டாலின்...


https://youtu.be/Y8y5PBJe49o

Subscribe The Channel For More News...

கைவிட வேண்டிய பத்து விஷயங்கள்...


1. வெறுப்பை கைவிடுங்கள். நீங்கள் விரும்பவதில் கவனம் செலுத்துங்கள்.

2. கடந்த காலத்தை கைவிடுங்கள், அதில் கற்ற பாடங்களை வைத்துக் கொள்ளுங்கள்.

3. கனகச்சிதமாகத் தான் இருப்பேன் என்ற கருத்தை கைவிடுங்கள்.

4. மக்களை எப்பொழுதும் மகிழ்விப்பராக இருப்பதை கைவிடுங்கள்.

5. எதிர்மறையான சுய பேச்சை கைவிடுங்கள்.

6. வீண் பேச்சுகளையும், எடை போடுவதையும் கைவிடுங்கள்.

7. உங்களை தாழ்த்தி நடத்த்த்துபவர்களை கைவிடுங்கள்.

8. கோபத்தால் வெகுண்டெழுவதை கைவிடுங்கள்.அமைதி தான் ஆற்றல்.

9. மற்றவர்களுடன் உங்களை ஒப்பிடுவதை தவிருங்கள்.

10. வருத்தப்படுவதை கைவிடுங்கள். எல்லாமே ஒரு காரணத்துக்காகத் தான் நடக்கிறது...

அதிமுக எடப்பாடி பழனிசாமியின் தொடர் வெற்றி பின்னணி இதுதானா.. வெளியான சுவாரசியமான தகவல்...


https://youtu.be/3LagOWwNKRg

Subscribe The Channel For More News...

தமிழக மண்ணின் பாரம்பரியம் மறக்கப்பட்ட மரங்கள்...


உசில், வேங்கை, தடசு, மருதம், இலுப்பை, தோதகத்தி, வன்னி, குயில், கடுக்கை, தாண்டி இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம். இதில் எந்த மரத்தையாவது இன்றைய இளைய தலைமுறை தமிழ் மண்ணில் பார்த்திருக்குமா?

ஒரு காலத்தில் நம் மண்ணை அலங்கரித்து, இன்று அழிந்தும் மறந்தும் போன மரங்களைத் தேடினால், அனகோன்டா போல் நீண்டு கிடக்கிறது பட்டியல்...

இப்படிப்பட்ட மரங்களின் விதைகளை மீட்டெடுத்து, மீண்டும் அவற்றை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான முயற்சியைக் கண்டிப்பாக எடுக்க வேண்டும்.

தமிழனின் நாகரிகம் தாவரத்துடன் இணைந்து தான் இருந்தது. ஊரின் பெயர்களை கூட மரங்களின் பெயர்களை வைத்து தான் அழகு பார்த்தார்கள் நம் முன்னோர்கள்..
மரங்களுக்கும் மக்களுக்கும் ஒரு பாசப்பிணைப்பு இருந்தது உண்மை.

ஆனால், இன்று... அப்படி ஒரு மரம் இருந்ததா? என்று கேட்கக் கூடிய நிலையில் தான் நாம் இருக்கிறோம்..
மரங்களை இழந்தோம்; மழையையும் இழந்தோம்..

தமிழ்நாட்டில் இருந்த மரங்கள், குறுஞ்செடிகள் பற்றி ஒரு அகராதியே உண்டு. அவ்வளவு செழிப்பான மண்.. நம் தமிழ் மண். நம் பூமி...

‪உசில்‬ மரங்கள் நிறைந்து இருந்த இடம் தான் உசிலம்பட்டி..

‪இலுப்பை‬ மரங்கள் நிறைந்து இருந்த இடம் தான் இலுப்பையூர்..

‪‎விளாமரம்‬ இருந்த இடம் தான் விளாத்திகுளம்..

‪‎வாகைமரம்‬ செழித்து வளர்ந்த ஊர் தான் வாகைக்குளம்..

இன்னும் ஆலங்குளம், அத்தியூர், அரசம்பட்டி, தாண்டிக்குடி, வேப்பங்குளம், தாழையூத்து... இப்படி பல ஊர்களின் பெயரில் மரங்களின் பெயரும் மறைந்திருக்கு..

ஆனால், இன்று அந்தந்த ஊர்களிலேயே அந்த காரண மரங்களைக் காணவில்லை.

அதுக்கெல்லாம் பதிலாக... தைலமரம், சீமைக்கருவேலம், யூஃபோடிரியம், தூங்குமூஞ்சி'னு விதவிதமான வெளிநாட்டு மரங்கள் தான் இங்கே ஆக்கிரமித்திருக்கிறது.

இந்த மரங்கள் சீக்கிரம் வளர்ந்து விடும். அதிக நீரையும் உறிஞ்சும். இதனால், புல் வெளிகளுக்கு நீர் கிடைக்காமல் அழிய.. அதை நம்பி வாழ்கிற கால்நடைகளும் குறைந்து, உயிர் சுழற்சியே மொத்தமாக மாறிவிட்டது.

பார்த்தீனியம் செடிகள் நீர் நிலைகளையும் அழித்து விட்டது. இப்படி வளரும் மரங்களில் காய்கள், பழங்கள் எதுவும் வராது. அதனால் பறவைகளும் இல்லாமல் போய் விட்டது.

உசில் மரம் வறட்சியைத் தாங்கி வளரும்.
எந்த வெக்கை பூமியிலும் மனிதர்களுக்கு நல்ல நிழல் தரும்.

வேங்கை மரம் இன்று அரிதாகி விட்டது. இந்த. மரத்தில் ஒரு குவளை செய்து அதில் தண்ணீரை ஊற்றி வைத்தால் கொஞ்ச நேரத்தில் அது சிவப்பாயிடும். இந்த தண்ணியை குடித்தால் சர்க்கரை நோய் கட்டுக்குள் இருக்கும். ஆயுர்வேத மருத்துவத்தில் இன்றளவும் பயன்படுத்துகிறார்கள்.

மருத மரத்தின் பாகங்களிலிருந்து புற்றுநோயைப் தடுக்கும் மருந்து தயாரிக்கிற ஆராய்ச்சி இன்றளவும் நடந்து கொண்டிருக்கிறது.

இலுப்பை மரத்திலிருந்து எடுக்குற இலுப்பை எண்ணெய் தமிழர் கலாசாரத்தில் ரொம்ப காலமாக விளக்கேற்ற பயன்படுத்தினர். இடுப்பு வலிக்கும் ஏற்ற மருந்து இது.

தோதகத்தி மரத்தில் எந்த பொருள் செய்தாலும் அது காலத்துக்கும் அழியாது. குஜராத் பக்கம் கடலுக்குள் மூழ்கிப் போன ஒரு நகரத்தை சமீபத்தில் கண்டு பிடிச்சிருக்காங்க. அதில் தோதகத்தி மரத்துண்டு ஒண்ணு கிடைச்சிருக்கு. 4- ஆயிரம் வருடத்திற்கு முன்னாடியே இங்கிருந்து அந்த மரங்களைக் கொண்டு போயிருக்காங்க.. ஆனால், இப்போது இந்த மரம் மிகவும் அரிதாகி வரும் நிலையில்.. தமிழக அரசு இந்த மரத்தை வெட்ட தடை விதித்திருக்கிறது.

இது மாதிரி தான்... குறுஞ்செடிகளும். நம் தமிழ் மண்ணில் நாலாயிரத்திற்கும் மேற்பட்ட வகைகள் உண்டு.

இதில் ‪‎துத்தி‬ என்று ஒரு செடி, மருத்துவ குணமுள்ளது. அதை பார்த்தீனியம் வளரும் இடத்தில் வைத்தால் தொடர்ந்து பார்த்தீனியம் வளராது.

புவி வெப்பமயமாதலின் நேரடியான பிரச்சினைகளை இந்த தலைமுறையில் நாம் சந்தித்து கொண்டிருக்கிறோம். வீட்டுக்கு ஏசியைப் போட்டு நம்மை குளிர்ச்சியாக வைத்து கொள்ள நினைக்கும் நாம்.. ஏன் ஒரு பாரம்பரிய மரத்தை நட்டு இந்த பூமியை குளிர்ச்சியாக வைக்கக் கூடாது..?

இந்த பூமியை வளப்படுத்த நினைத்தால்.. இந்த மாதிரி பாரம்பரிய மரங்களை நம்பி தான் ஆக வேண்டும்..

அதற்கு.. இந்த 2018- ல் ஒரு உறுதி எடுத்துக் கொண்டு.. கண்ட கண்ட மரங்களை நடாமல்.. பாரம்பரிய மரத்தை தேர்வு செய்து... ஒரு மரமாவது நடுங்கள்.

மரங்களில் கூட ஷாம்பு உண்டு...

உசில் மரத்தின் இலையைப் பொடி செய்து தலைக்கு ஷாம்புவாக பாவிக்கலாம்.

வழுக்கைமரம் எனப்படுகிற தடசு மரத்தின் பட்டையை சுடு நீரில் போட்டால் வழுவழு ஷாம்பு ரெடி.

இந்த இரண்டு ஷாம்பூக்களுக்கும் மருத்துவ குணம் உண்டு.

மருத மரத்தின் பட்டையை காய வைத்து கஷாயம் பண்ணி அருந்த.. உடலில் உள்ள கொழுப்பு குறையும்.

தாண்டி மரத்தில் காய்க்கிற தாண்டிப்பழம் மூலத்தைக் குணப்படுத்தும்...

பணத்திற்கு ஆசைப்பட்டு காட்டிக் கொடுக்கும் உ.பி.கள்.. கட்டு கட்டாக சிக்கும் திமுக கூட்டணி பணம்...


https://youtu.be/9uBMA1WyBMs

Subscribe The Channel For More News...

திருமணத்திற்கு மறுத்த காதலி.. கத்தியால் குத்தி எரித்து கொன்ற கொடூர காதலன்...


கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்தவர் நிதிஷ்.  இவர் திருச்சூரை சேர்ந்த நீத்து என்கிற இளம் பெண்ணை சில வருடங்களாக காதலித்து வந்துள்ளார்.  இந்நிலையில் திடீரென இவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் நீத்து, நிதிஷை விட்டு விலகி வேறு ஒரு நபருடன் பழகி வந்துள்ளார்.

ஆனால் நிதிஷ் தொடர்ந்து, தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி நீத்துவை வலியுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் நேற்று அதிகாலை, நீத்துவை சமாதான படுத்துவதற்காக நிதிஷ், நீதுவின் வீட்டிற்கு நேரடியாக சென்றுள்ளார். அப்போது இருவரும் வீட்டில் அமர்ந்து சிறிது நேரம் பேசியுள்ளனர்.  திருமணம் செய்து கொள்ளுமாறு நிதிஷ் மீண்டும் வலியுறுத்தியுள்ளதாக தெரிகிறது.

ஆனால் தொடர்ந்து திருமணத்தை மறுத்து வந்த, நீத்து மீது ஆத்திரம் அடைந்த நிதிஷ் தான் கையில் வைத்திருந்த கத்தியால் அவரை சரமாரியாக தாக்கினார்.  மேலும் அருகில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்தார்.

நீத்துவின் அலறல் சத்தம் கேட்டு அவருடைய குடும்பத்தினர் ஓடி வந்து பார்க்கையில், நீத்து தீயில் கருகி கொண்டிருந்தார். உடனடியாக தீயை அணைத்து,  நிதிஷை போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் நீத்துவை காதலித்து வந்ததையும்,  நீத்து திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்காததால் அவரை கொலை செய்ததாகவும் ஒப்புக் கொண்டார்.

மேலும் தீக்காயமடைந்த நீத்து பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் கேரளாவில் மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது...