08/04/2019

மனம்...


பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே நாம் வெளியே காட்டுகிறோம். இது தான் நமக்குள் இருக்கும் திருடன்.

அந்த திருடனோடு தான் நாம் சண்டையிட வேண்டிருக்கிறது. திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

அடுத்த வீட்டில் ஒரு திருடன் பிடிபட்டால் நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம். ஏனெனில் நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான். அவனைப் பிடித்து தண்டிக்க நினைக்கிறோம். ஆனால் முடியவில்லை.

வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம். நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம். திருடனைத் தண்டிக்கத் திருடனின் இருப்பு அவசியம்.

புனித மனிதர் ஒரு திருடனை அடிக்கவே முடியாது. ஆகவே திருடர்களே எப்பொழுதும் திருடர்களை கண்டிப்பார்கள். குற்றவாளிகளே குற்றவாளிகளை குறை சொல்வர். காமவயப்பட்டவரே பாலுறவை மிகவும் கண்டிப்பர். நமக்குள் இருப்பது தான் வெளியே தோன்றும்.

ஒருவன் 'திருடன்.. திருடன்.. விடாதே பிடி என்று கத்தினால் முதலில் அவ்வாறு கத்துபவனைப் பிடிக்க வேண்டும் என்கிறார் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.

ஏனெனில் அவ்வாறு கத்துபவன் எதிர்காலத்தில் திருடுவான்.

நம் நோய்களை நமது மனநோய்களையே பிறர் மீது சுமத்துகிறோம். எனவே ஒருவரைப் பற்றிக் குறை கூறும் போது நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

பிறரைக் குறை சொல்ல அதிகம் இல்லாத போது நம்மியல்பே அங்கு வெளிப்படும். நமக்குள் நடக்கும் போராட்டமே இன்னொருத்தர் மேல் ஏற்றி உரைக்கப்படுகிறது.

ஆகவே நமக்குள் முரண்பாடு தோன்றாத போது போராட்டம் எழாத போது இன்னொருத்தர் மேல் பழிபோடுதல் என்பது முற்றிலும் நின்று போகிறது.

மனித மனம் உடைப்பட்டு கிடக்கிறது. அவனது வன்முறை இங்கு தான் பிறக்கிறது.

மனித மனம் அஹிம்ஸையாக மாறத் தொடங்கும்போது அது முழுமையாகி விடும். ஒன்றாக இருக்கும். பிளவுபடாது.

மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும் போது அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது. ஆனந்த நடனமே அமையும். மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் தொடங்குகிறது. அப்பாதையில் சென்று இறையை அடையலாம்.

முழுமை அடைந்த மனத்தால் மட்டுமே இறையை அடைய முடியும். வேறு வழியே இல்லை...

அமானுஷ்யம் : 3000 வருடமாக உறங்கியவரை எழுப்பியதால் நேர்ந்த விபரீதம்...


https://youtu.be/Rq7oxN3jmRE

Subscribe The Channel For More Videos...

திமுக ஃபிராடு கும்பலை செருப்பால் அடித்தது லயோலா: கரடியே காறித் துப்பின மொமென்ட்...



திமுக ஆதரவு கருத்துக்கணிப்புக்கும் லயோலா கல்லூரிக்கும் தொடர்பு இல்லை என மருமகன் ஃபிராடு கும்பலை செருப்பால் அடித்தது லயோலா கல்லூரி....

பாஜக மோடி அனைவரிடமும் 251 ரூபாய் ஏமாற்றி கொள்ளையடித்தை நினைவில் கொள்ளுங்கள்...


பீட்ரூட்டின் மருத்துவப் பயன்கள்...


புற்றுநோய் பரவுவதை தடுக்கும்.
மலச்சிக்கலைப் போக்கும்.
பித்தத்தைக் குறைக்கும்
அரிப்பு - எரிச்சலைத் தவிர்க்கும்.
கிட்னியில் சேர்ந்துள்ள தேவையற்றவைகளைப் போக்கிவிடும்.

அழகிய நிறமும் நிறைய சத்துக்களும் கொண்ட காய் பீட்ரூட் இதனுடைய நிறத்திற்காகவே இதனை அனைவரும் விரும்பி உண்ணுகின்றனர். பீட்ரூட்டில் உள்ள கார்போஹைட்ரேட்ஸ் சர்க்கரை துகள்களாக இருப்பதால் இது விரைவில் ஜீரணமாகி நம் ரத்தத்துடன் கலந்து விடுகிறது.

ஒரு 100 கிராம் பீட்ரூட்டில் தண்ணீர் 87.7 விழுக்காடும், புரோட்டின் 17 விழுக்காடும், கொழுப்பு 0.1 விழுக்காடும், தாதுக்கள் 0.8 விழுக்காடும், நார்ச்சத்து 0.9 விழுக்காடும், கார்போஹைட்ரேட் 8.8 விழுக்காடும் உள்ளது. மற்றும் கால்சியம் 18 மில்லி கிராமும், பாஸ்பரஸ் 5.5 மில்லிகிராமும், இருப்பு 10 மில்லிகிராமும், வைட்டசின் சி 10 மில்லிகிராமும் மற்றும் வைட்டமின் ஏ மற்றும் பி1, பி2, பி6 நியாசின் வைட்டமின் பி ஆகியவற்றுடன் சோடியம், பொட்டாசியம், சல்வர், க்ளோரின், ஐயோடின், காப்பர் போன்ற சத்துக்களும் பீட்ரூட்டில் உள்ளன.

கிட்டி, பித்தப்பை ஆகியவற்றில் சேர்ந்துள்ள தேவையற்ற அழுக்குகளை நீக்குவதுடன் பீட்ரூட் ஒரு சிறந்த கத்திரிகரிப்பானாகவும் செயல்படுகிறது. பீட்ரூட்டில் உள்ள இரும்புச்சத்து நம் உடலில், புதியதாக இரத்த அணுக்கள் உருவாக துணை புரிகிறது. பச்சைக் காய்கறிகள், கீரைகள், பழங்கள், பேரீச்சம் பழம், அத்திப்பழம் ஆகியவற்றை அதிக அளவு உண்டும், இரத்தத்தின் அளவு அதிகரிக்காமல் இருக்கும் பட்சத்தில் பீட்ரூட்டை வாரத்திற்கு நான்கு நாட்கள் உண்டால் நல்ல பலன் கிடைக்கும். சமையல் செய்து சாப்பிடுவதுடன் பச்சையாகவும் சாப்பிடலாம்.

கல்லீரல் கோளாறுகளுக்கும் பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பித்தம் அதிகமாகி அடிக்கடி பித்த வாந்தி எடுப்பவர்களுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக். பீட்ரூட் கீரையையும் மற்ற கீரைகள் போல் சமையல் செய்து சாப்பிட அல்சர், மஞ்சள் காமாலை போன்ற நோய்கள் சரியாகும்.

பல மாதங்களாக மலச்சிக்கலினால் துன்பப்படுபவர்களும், மூலக் கோளாறினால் துன்பப்படுபவர்களும் பீட்ரூட் சாறை தண்ணீருடன் கலந்து அரை டம்ளர், இரவு படுக்கைக்கு முன் அருந்த வேண்டும். பீட்ரூட்டை உணவில் அடிக்கடி சேர்த்துக் கொண்டால் கிட்னியில் கற்கள் உருவாவதைத் தடுக்கலாம்.

தோலில் ஏற்படும் அரிப்பு, எரிச்சல் போன்றவற்றிற்கு இரண்டு பங்கு பீட்ரூட் ஜூசுடன் ஒரு பங்கு தண்ணீரைக் கலந்து தடவினால் பிரச்னையிலிருந்து விடுபடலாம்.

தலையில் ஏற்படும் வெள்ளை நிற பொடுகுகளைக் களைய பீட்ரூட் ஜூஸை பொடுகு இருக்கும் இடங்களில் மசாஜ் செய்து இரண்டு மணிநேரம் கழித்து சீயக்காய் பவுடர் கொண்டு தலை குளித்தால் நாளடைவில் பொடுகுகள் சரியாவதுடன் உங்கள் தலைமுடியும் பளபளவென்று மின்னும்; தலையில் அதிக முடி முளைக்கும்.

புற்றுநோயினால் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நோயாளிகள், ஊட்டி பீட்ரூட் ஜூஸ் தினமும் 1 டம்ளர் பருகி வந்தால் புற்றுநோய் பரவுவது தடுக்கப்படும். ஆரம்ப நிலையிலுள்ள புற்றுநோயை குணமாக்கும் வல்லமை படைத்தது பீட்ரூட்.

பீட்ரூட் பலருக்குப் பிடிக்காது, சிலருக்கு மட்டுமே பிடிக்கும். குழந்தைகளில் பலருக்குப் பிடிக்கும். இது பலருக்கும் சுவை சம்பந்தப்பட்ட ஒன்றாகவே தெரிகிறது. ஆனால் இதற்கென்று பிரத்யேக மருத்துவப் பயன்கள் உண்டு.

1. பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும்.

2. பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.

3. பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

4. தீப்பட்ட இடத்தில் பீட்ரூட் சாறைத் தடவினால் தீப்புண் கொப்புளமாகாமல் விரைவில் ஆறும்.

5. பீட்ரூட் கஷாயம் மூலநோயை குணப்படுத்தும்.

6. பீட்ரூட் கூட்டு மலச்சிக்கலை நீக்கும். இரத்த சோகையை குணப்படுத்தும்.

7. பீட்ரூட் சாறு அஜீரணத்தை நீக்கி செரிமானத்தைக் கூட்டும்.

8. பீட்ரூட்டை நறுக்கி பச்சையாக எலுமிச்சை சாற்றில் தோய்த்து உண்டுவர இரத்தத்தில் சிவப்பணுக்கள் உற்பத்தியாகும்.

9. பீட்ரூட்டை வேக வைத்த நீரில் வினிகரைக் கலந்து சொறி, பொடுகு, ஆறாத புண்கள் மேல் தடவி வர அனைத்தும் குணமாகும்...

தாமதிக்கப்பட்ட நீதி குற்றவாளியை நிரபராதியாக்கவே...


தெலுங்கர் திருமலை நாயக்கர் எனும் திராவிட வரலாற்று இரகசியம்...


தெலுங்கர் திருமலை நாயக்கனின் மொத்த மனைவி 169 பேர்...

திருமலை நாயக்கன் செத்ததும் 169 மனைவியரையும் தீவைத்து எரித்து உடன் கட்டை ஏறச்செய்தனர்..

தமிழகத்தில் முதல் இனப்படு கொலையை நிகழ்த்தியவனும் திருமலை நாயக்கனே.

பாண்டிய அரசை வீழ்த்தியதும் பாண்டிய நாட்டில் உள்ள பல்லாயிரக்கணக்கான தமிழர்களை படுகொலை செய்தான்.

அதில் ஈழத்தில் படுகொலை செய்யப்பட்டது போல் பல ஆயிரம் குழந்தைகளும் பெண்களும் அடங்குவர்...

வர்ணாசிரம பிராமணியத்தை மிகக் கடுமையாக தமிழகத்தில் புகுத்தியவனும் இந்த திருமலை நாயக்கனே.

திருமலை நாயக்கன் ஆட்சியில் தான் இடக்கை வலக்கை என்னும் சாதி சண்டைகள் கொழுந்து விட்டு எரிந்தது..

பிராமாணியத்தின் மனுவை அப்படியே தமிழகத்தில் அமல்படுத்தியவனும் இந்த திருமலை நாயக்கயனே...

https://youtu.be/_fpNijYbzSE

07/04/2019

ஆதிச்சநல்லூர் சந்தேகங்கள்...


ஆதிச்சநல்லூரில் 114 ஏக்கர் பரப்பில் அமைந்த இடுகாட்டில் கிடைத்த பொருள்கள் சுமார் 100 ஆண்டுகளாக 4 கட்டங்களாக அகழப்பட்டு, ஆய்வு முடிவுகள் வெளியாகாமல் இருந்தன.

எழுத்தாளர் காமராஜ் அந்த ஆய்வு முடிவுகளை வெளியிடுமாறு வழக்குத் தொடுத்தார். நேற்று இரண்டு சாம்பிள் முடிவுகளைச் சொல்லி தமிழர் வயிற்றில் பால் வார்த்தார்கள். ஆனால்... அதன் பின்னால் பல கேள்விகள் எழுகின்றன.
ஆதிச்சநல்லூர் புதைபொருளில் ஒன்று 905 ஆண்டுகள் பழைமையானது என்பதை ஃபுளோரிடாவுக்கு அனுப்பி நிரூபித்திருக்கிறார்கள். 'பாரத நாடு பழம் பெரும் நாடு' ஆயினும் பழம்பொருளை ஆராய ஃபுளோரிடாவுக்குத்தான் போக வேண்டுமா? இது முதல் கேள்வி.

இரண்டாவது, 1920 முதல் ஆதிச்சநல்லூரில் புதைபொருள் ஆவணங்கள் திரட்டப்பட்டன. சுமார் 8,000 பொருள்கள் எடுக்கப்பட்டதாகச் சொன்னார்கள். அதில் இரண்டு பொருளை மட்டும் தேர்வு செய்து அதன் வயதைக் குறிப்பிடுவது ஏன்?

மூன்றாவது, அங்கிருந்த எழுத்துகள் சுமார் 2,300 ஆண்டுகள் பழைய பிராமி எனச் சொல்லியிருக்கிறார்கள். கீழடி, ஆதிச்சநல்லூர் எல்லா இடத்திலும் காணக்கிடைக்கும் எழுத்துக்கள் 2,300 ஆண்டுகளுக்கு முட்பட்டவை என நிறுத்திவிடுகிறார்கள்.

சமஸ்கிருத இலக்கணத்தை பாமினி 2,400 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கினார் என்பது பலகாலமாகச் சொல்லப்பட்டு வரும் செய்தி. தமிழ் எழுத்துக்கள் அதற்கு 100 வயசு கம்மி என்பதைத் தொடர்ந்து சொல்வது நோக்கம். கடந்த 30 ஆண்டுகளாக நானறிந்த செய்தியிலே... எங்கு பானை கிடைத்தாலும் 2000 ஆண்டுகளுக்கு முட்பட்ட பானை கண்டுபிடிப்பு என்றுதான் சொல்வார்கள். எங்கு கல்வெட்டு கிடைத்தாலும் அதே கதைதான். அதற்கே ஒருவர் தொல்லியல் துறை மீது கேஸ் போட்டு இவற்றைச் சொல்ல வைக்க வேண்டியிருக்கிறது.

செம்பியூர் கண்டிகையில் கிடைத்த தமிழ் எழுத்துகள் சிந்துவெளி எழுத்து வகையைச் சார்ந்தது என நிரூபிக்கப்பட்டும் சிந்துவெளியோடு தமிழர்களைத் தொடர்புபடுத்துவதைத் தவிர்க்கும் நோக்கமும் இதில் இருக்கிறது.

சிந்துவெளி நாகரிகம் கி.மு. 1500 ஆண்டுகளுக்கு முந்தையது. ஆதிச்ச நல்லூர் நாகரிகமும் அதே காலகட்டத்தில் தெற்கில் இருந்த நாகரிகம். அது நிரூபணம் ஆவது வேத மரபுக்குச் சிக்கலாகிவிடும். இந்தியாவின் தொன்மையை தமிழர் வரலாற்றில் இருந்து  ஆரம்பிக்க வேண்டியிருக்கும். இப்போது கவனமாக  கி.மு.905 ஆவணத்தை வெளியிடுகிறார்கள்.
இத்தனை கோடி பழைய ஆவணங்கள் உள்ள நாட்டில் அதை ஆய்வு செய்வதற்கான ஆராய்ச்சி மையங்களைத் தொடங்குவதில் என்ன தயக்கம்? அதைத் தொடங்கினால் தமிழர் பெருமை உலகுக்குத் தெரிந்துவிடும் என்ற தயக்கம்தான் காரணம்.

100 வருசத்துக்கு முன் தோண்டியெடுக்கப்பட்ட ஆதிச்ச நல்லூர் பானை ஒன்றுக்கு இன்றுதான் விடிவுகாலம் கிடைத்திருக்கிறது. நாம் சட்டப்படி போராட வேண்டிய விவகாரம் நிறைய இருக்கின்றன. சட்டப்படி போராடி வெல்வோம்.

-  தமிழ்மகன்...

பாமக அன்புமணிக்கு எதிர் சாவாலை விடுத்த திமுக ஸ்டாலின் மகன் உதயநிதி.. நான் ரெடி.. நீங்க ரெடியா..?


https://youtu.be/NnH-Tq1_9qQ

Subscribe The Channel For More News...

நமக்குள் இருக்கும் சக்தி...


நம் ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மகாசக்தி இருக்கிறது. அது நம்முடைய பார்வைக்குத் தெரியாவிட்டாலும் கூட நம்மால் அதனைப் பயன்படுத்திக் கொண்டு பிரமாதமான பலன்களைப் பெற முடியும்.

இந்த உலகம் பார்த்திருக்கிற புதிய கண்டுபிடிப்புகள், கலைப் படைப்புகள், மருத்துவ சிகிச்சைகள், புத்தகங்கள், இசைத் தொகுப்புகள், இன்னும் நம்மைச் சுற்றியிருக்கிற எல்லாமே இந்த ஒரு சக்தியின் துணையோடு உருவாக்கப்பட்டவை தான்.

சராசரி மனித மனதில் நல்ல சிந்தனைகள், கெட்ட சிந்தனைகள் இரண்டுமே உண்டு. அவற்றின் விகிதம் மாறலாமேதவிர, முழுக்க முழுக்க நல்லதைமட்டுமே நினைக்கிறவர் என்று யாரும் கிடையாது.

வெறுப்புச் சிந்தனைகளின் தாக்கத்தைக் குறைந்து அன்புச் சிந்தனைகளை ஊக்குவித்து வாழ்க்கையில் அமைதி, நிம்மதி, செயல்திறன், சாதனைகள் என்று படிப்படியாக மேலே அழைத்துச் செல்கிறது.

நமக்குள் இருக்கும் அந்தச் சக்தியை அடையாளம் காண்பது எப்படி? அதை வெளிக் கொண்டு வருவது எப்படி?

எதையும் சாதிக்கக்கூடிய இந்தப் ‘சக்தி’ பூட்டைத் திறப்பதற்கு மூன்று சாவிகள் உள்ளன. அவை...

1. அன்புச் சாவி
2. நன்றிச் சாவி
3. விளையாட்டுச் சாவி

1. அன்புச் சாவி...

உலகின் மிக உன்னதமான ஆற்றல், அன்புதான். அதைக் கொண்டு எந்தக் கதவையும் திறந்துவிடலாம்.

ஒரு மனிதரை, ஒரு குடும்பத்தை, ஒரு வீட்டை, ஒரு நாட்டை மட்டும் நேசித்தால் போதாது. ஒட்டுமொத்த உலகத்தையும் மானுட குலத்தையும் நேசிக்கப் பழகுங்கள். அதனால் உங்கள் தனிப்பட்ட வாழ்க்கை அழகாகும்.

நீங்கள் எதையெல்லாம், யாரையெல்லாம் நேசிக்கிறீர்கள்? மனத்துக்குள் ஒரு லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள். ஒவ்வொரு நாளும் அந்த அன்புப் பட்டியலில் உள்ளவர்கள் மத்தியிலேயே அதிக நேரம் செலவிடுங்கள்.

அதன்மூலம் ஏற்படுகிற மகிழ்ச்சியும் திருப்தியும் உங்களுடைய செயல் திறனை உயர்த்தும், உங்களை ஒரு புதிய மனிதராக மாற்றிவிடும்.

2. நன்றிச் சாவி...

வாழ்க்கை இதுவரை உங்களுக்குத் தந்திருக்கிற, தந்து கொண்டிருக்கிற, இனி தரப்போகிற எல்லா விஷயங்களுக்காகவும் மனமார நன்றி சொல்லிப் பழகுங்கள். உரக்கச் சொல்ல வேண்டாம், மனத்துக்குள் அதை உணர்ந்தாலே போதும்.

நீங்கள் சந்திக்கிற எல்லோரும் உங்களுக்கு ஏதோ ஒருவிதத்தில் உதவுகிறார்கள், ஏதாவது பாடம் சொல்லித்தருகிறார்கள். அந்த உதவி சிறியதோ, பெரியதோ, வாய் திறந்து நன்றி சொல்லுங்கள். உலகம் உங்களை இன்னும் நேசிக்கும். உங்களுடைய வளர்ச்சிக்கு அவர்கள் உதவுவார்கள்.

3. விளையாட்டுச் சாவி...

வாழ்க்கை என்பது சீரியஸான மேட்டர் அல்ல. மனம் விட்டுச் சிரியுங்கள். ஒவ்வொரு கணத்தையும் அனுபவியுங்கள். சுருக்கமாகச் சொல்வதென்றால், சும்மா பூந்து விளையாடுங்க..

சிறுவயதில் நாமெல்லாம் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருந்தவர்கள் தான். வயது ஏற ஏற, விளையாட்டை அலட்சியப்படுத்துகிறோம்.

அதனால் தான் அநாவசியப் பதற்றம், பரபரப்பு, டென்ஷன் எல்லாமே.

சின்ன வயதில் விளையாட்டாய் நிறைய கற்பனைகள் செய்வோம். ஆனால் வயது ஏறும்போது கற்பனைகளைக் குறைத்து விடுகிறோம்.

கற்பனை என்பது ஒரு மிகப் பெரிய வரம். அதை வைத்துக் கொண்டு நாம் எங்கேயும் பயணம் செய்யலாம். நம்முடைய பாதையை நாமே உருவாக்கிக் கொள்ளலாம். உங்கள் கற்பனைக் குதிரைக்கு ஓய்வே கொடுக்காதீர்கள். தொடர்ந்து ஓட விடுங்கள். அது மேலும் மேலும் புதிய இலக்குகளை கற்பனை செய்யட்டும். அதன்மீது உட்கார்ந்து சவாரி செய்யும் நீங்களும் புதுப்புது சிகரங்களைத் தொடுவீர்கள்.

நம்பிக்கை உள்ள ஒருவருக்கு எதுவும் சாத்தியம் என்கிறது பைபிள். நம் ஊரிலும் நம்பினோர் கெடுவதில்லை என்று ஒரு வாசகம் உண்டு.

மகாசக்தி எது என்று உங்களுக்கு புரியாவிட்டாலும் கூடப் பரவாயில்லை. அப்படி ஒன்று உங்களுக்குள் எங்கேயோ இருக்கிறது என்று நம்பிக்கை மட்டும் வைத்து, அன்பு, நன்றி, விளையாட்டு என்கிற மூன்று சாவிகளைப் பயன்படுத்திப் பார்க்கலாமே...