08/04/2019

ஒட்டு மொத்த திமுக காலி.. ஒரே ஒரு பகீர் தகவல் வெளியிட்ட பாமக நிறுவனர் ராமதாஸ்.. கலக்கத்தில் ஸ்டாலின்...


https://youtu.be/OsLHXPmolec

Subscribe The Channel For More News...

உன்னுள் நுழைய தியானம்...


எந்த எண்ணத்தையும் உன்னுள் நுழைய விடாமல்.. ஆச்சரியத்துடனேயே
இருப்பது தான் தியானம்...

நீ ஆச்சரியமாக இருக்கும் போது.. உன் மனதில் எண்ணம் புகுந்தால்.. நீ யோசிக்க ஆரம்பித்து விடுகிறாய்..

இந்த உலகம் முழுக்க ஆச்சரியம் நிறைந்து இருக்கிறது.. நீ ஆச்சரியத்தில் சாதாரணமாக இருக்க முடியவில்லை என்பதால் கேள்விகள் கேட்கிறாய்..

கேள்விகளுக்கும் பதில்களுக்கும் முடிவே கிடையாது..

ஒரு கேள்வி ஒரு பதிலுக்கு இட்டுச் செல்லும்..

ஒரு பதில் ஆயிரம் கேள்விகளுக்கு இட்டுச் செல்லும்..

ஆச்சரியம் அற்புதத்துக்கு இட்டுச் செல்கிறது..

அதற்கு ஓர் ஆன்மீகப் பெயர் தான் கடவுள்..

கடவுள் என்பது அறிந்து கொள்ள முடியாத ஓர் அற்புதம்..

கேள்விகள் கேட்பதை விட்டு விட்டு.. ஆச்சரியத்தின் மீது கவனம் செலுத்து..

வெகு விரைவில் ஆச்சரியம் மறைந்து போய் அற்புதம் தோன்றி விடும்..

ஆச்சரியம் என்பது ஒரு சிறு அலை..

அற்புதம் என்பது பெருங் கடல்..

நீ ஆச்சரியத்திலேயே இருக்கும் போது.. அது உன்னை அற்புதத்திற்கு இட்டுச் செல்கிறது..

அற்புதம் எல்லையற்றதற்கு இட்டுச் செல்கிறது.. அது கடவுளுக்கு இட்டுச் செல்கிறது..

ஆனால் உடனே சிந்திக்க மட்டும் ஆரம்பித்து விடாதே...

உனக்கு ஏதாவது ஆச்சரியம் தோன்று மானால்.. அதனுடனேயே தங்கி விடு..

அப்போது ஆழ்ந்த மௌனம் உன்னைச் சூழ்ந்து கொள்ளும்..

ஒரு நாள் அந்த ஆச்சரியம் அற்புதத்திற்குள் கரைந்து போகும்..

அந்த ஆச்சரியத் தோடு நீயும் கரைந்து போவாய்..

யோசிக்க ஆசை வரும்..

உன்னுடைய மனது அந்த ஆச்சரியத்தை சிந்தனையாக்கி விடும்..

அதனால் அந்த யோசிக்கும் ஆசையிலிருந்து விடுபட்டு நில்..

நீயும் ஒரு அற்புதமாகி விடுவாய்...

திமுக துரைமுருகனை அடுத்து 10 பேர் கொண்ட லிஸ்ட்.. ஐடி அதிகாரிகளிடம் மாட்ட போவது யார்.?


https://youtu.be/FtxyG1tbZyE

Subscribe The Channel For More News...

சொகுசு காரில் ஆடம்பர பிரசாரம் செய்யும் ஹேமமாலினி - சமூகவலைதளங்களில் விமர்சனம்...


பா.ஜனதா சார்பில் மதுரா தொகுதியில் பிரபல இந்தி நடிகையும் தற்போதைய எம்.பி.யுமான ஹேமமாலினி போட்டியிடுகிறார். தீவிர பிரசாரத்தில் குதித்துள்ள ஹேமமாலினி மிகவும் பந்தாவாக அந்த தொகுதியை வலம் வந்துகொண்டிருக்கிறார்.

சுமார் 75 லட்சம் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் காரை தான் பிரசாரத்துக்கு பயன்படுத்தி வருகிறார்.

காரில் இருந்து தலை மட்டும் வெளியில் தெரியுமாறு அந்த கார் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதோடு ஹேமமாலினி முன்பாகவும் கார் கதவிற்குப் பின்புறம் இருந்தும் அவர் வெயில் படாத வகையில், பணியாட்கள் குடைபிடிக்கிறார்கள். இத்தனை வசதிகள் செய்யப்பட்டும் வெயிலை பொறுக்க முடியாமல் கூலிங் கிளாசுடன் தொகுதியில் வலம் வருகிறார்

அவருடைய ஆடம்பர பிரசாரம் பற்றி தான் மதுரா மக்கள் பரபரப்பாக பேசிக்கொள்கின்றனர். இந்த படங்கள் பகிரப்பட்டு சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

இதற்கிடையே கோவர்தன் என்ற இடத்தில் விவசாயிகளிடையே டிராக்டரில் சென்று பிரசாரம் செய்வதுபோல போஸ் கொடுத்த ஹேமமாலினியை கிண்டல் செய்து காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் முதல்-அமைச்சர் உமர் அப்துல்லா தனது டுவிட்டரில் கருத்து வெளியிட்டுள்ளார்.

இதனால் ஹேமமாலினியின் பிரசார முறை மேலும் சமூக வலைதளங்களில் பரபரப்பாக மாறியுள்ளது. 2014-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் ஹேமமாலினி ராஷ்ட்ரிய லோக்தள் கட்சி வேட்பாளர் ஜெயந்தி சவுத்ரியை வீழ்த்தி வெற்றி பெற்றார்...

அமைச்சர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல்: உலக பணக்காரர்கள் பட்டியலில் முதல் 10 இடத்தில் திமுக குடும்பம்...


https://youtu.be/D5soJt45I50

Subscribe The Channel For More News...

BIMSTEC எனும் திட்டத்திற்காக தமிழினத்தை திட்டமிட்டு அழித்துக் கொண்டிருக்கின்றனர்...


2004 - 2005ஆம் ஆண்டுகளிலிருந்து திட்டமிடப்பட்டு, இன்று வரை தமிழ்நாடும், தமிழீழமும் சந்தித்துக் கொண்டுள்ள பேராபத்துகளை - சந்திக்கவுள்ள பேராபத்துகளை - எதிர்கொள்ளவுள்ள இராணுவமயமாக்கல் நடவடிக்கைகளை - சூழலியல் அழிப்புத் திட்டங்களை - தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் நாம் பெற்ற விடைகளை - அரசின் ஆவணங்களிலிருந்து கிடைத்த அதிர்ச்சித் தகவல்களை தொகுத்து நூலாக்கியுள்ளேன்.

பிம்ஸ்டேக் - பேரழிவில் தமிழர் தாயகங்கள் - நூலின் பெயர்...

பன்மை வெளி வெளியீட்டகம் வெளியிட்டுள்ள இந்த புதிய நூல்...

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் நடைபெற்று வரும் புத்தகத் திருவிழாவில், “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - சிறப்பு அரங்கம்  B (அரங்கு 42 - 43க்கு எதிரில்) விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

சூழலியல் செயல்பாட்டாளர்களும், தமிழின உணர்வாளர்களும் வாங்கிப் படித்து, நாம் இனி வரப்போகும் எதிர்காலத்தை சரிவரத் திட்டமிட்டுக் கொள்ள - செயல் திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.

நூலெழுதும் போது, கருத்துகள் கூறி - செமைப்படுத்தி - வழிநடத்திய - தமிழ்த்தேசியப் பேரியக்கம் தலைவர்  ஐயா பெ. மணியரசன், பொதுச் செயலாளர் ஐயா கி. வெங்கட்ராமன், நூலை வெளிக் கொண்டு வந்த பன்மை வெளி வெளியீட்டகம் பொறுப்பாளர் தோழர் பாலகுமரன் அறிவன் தமிழ், மெய்ப்பு திருத்தி உழைத்த தோழர் ஆனந்தன் இலக்கியன், அட்டை வடிவமைத்த பாவலர் Kavi Baskar, தகவல்கள் அளித்து உதவிய Rathish Kumaran உள்ளிட்ட அனைவருக்கும் எனது நன்றியும் நேசமும்!

தோழமையுடன்,
க. அருணபாரதி,
தலைமைச் செயற்குழு உறுப்பினர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
18.01.2018
பேச: 9841949462...

இறுதி நேரத்தில் வெளியாக இருந்த பாஜக தேர்தல் அறிக்கை (தேர்தலுக்காக சொல்லப்படும் பொய்கள்) கசிந்தது...


https://youtu.be/sGYVcAOq-yo

Subscribe The Channel For More News...

மற்றவர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றிக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள்...


ஏனென்றால் அது ஒன்று தான் நீ தற்கொலை செய்து கொள்வதிலிருந்து உன்னை காக்கிறது..

நீ இங்கே யாருடைய எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்வதற்கு பிறக்கவில்லை.

யாருடைய எதிர்ப்பார்ப்புக்கும் நீ பலி ஆகாதே.

உன் எதிர்பார்ப்பிற்கு எவரையும் பலியாக்காதே.

இதைத் தான் நான் தனித்தன்மை என்கிறேன்.

உன் தனித் தன்மையை மதி.

பிறர் தனித் தன்மையையும் மதி.

எப்போதும் எவரையும் உன் தனிப்பட்ட வாழ்வில் குறுக்கிட அனுமதியாதே.

அதே போல் எவருடைய தனிப்பட்ட வாழ்விலும் நீ குறுக்கிடாதே.

அப்போது தான் நீ ஒரு நாள் ஆன்மிகத்தில் மலரமுடியும்.

மாறாக 99 சதவீத மக்கள் வெறுமே தற்கொலை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

அவர்களுடைய மொத்த வாழ்வும் மிக மெதுவான தற்கொலையன்றி வேறில்லை.

மற்றவர்களின் எதிர்பார்ப்பை நிறைவேற்றிக் கொண்டே இருப்பது...

சில நாட்கள் அப்பாவின் எதிர்பார்ப்பு..

சில நாட்கள் அம்மாவின் எதிர்பார்ப்பு..

ஒரு நாள் மனைவி மற்றொரு நாள் கணவன், குழந்தைகள்.. அவர்களும் எதிர்பார்க்கிறார்கள்..

பின் சமூகத்தின் எதிர்பார்ப்பு.. அரசியல்வாதிகளின் எதிர்பார்ப்பு..

மத குருமார்களின் எதிர்பார்ப்பு.. சுற்றிலும் யாவரும் எதிர்பார்ப்புடனேயே உள்ளனர்..

நீயோ பாவம் எளிய மனிதன் மொத்த உலகமும் உன்னிடம் இதை செய் அதை செய் என்று எதிர்பார்க்கிறது..

உன்னால் அனைவரின் அனைத்து எதிர்பார்ப்பையும் நிறைவேற்றவே முடியாது.

அனைவரும் உன்னிடம் கோரும் எதிர்பார்ப்புகளை பார்த்து நீ பைத்தியம் அடைந்து விட்டாய்.

உன்னால் யாருடைய எதிர்ப்பார்ப்பையும் முழுதாக நிறைவேற்றவே முடிவதில்லை.

யாருமே திருப்தி அடைவதேயில்லை. யாருமே திருப்தி அடையாததால் நீ வீணானவன் தோற்றவன்.

தனக்குள் திருப்தியாக மகிழ்ச்சியாக இருக்க இயலாதவர்களால் மகிழ்ச்சியாக சந்தோசமாக இருக்க முடிவதேயில்லை.

எதை நீ செய்தாலும் மற்றவர்கள் உன்னுடன் திருப்தியடையாமல் இருப்பதற்கு வழி காண்பார்கள்.

ஏனென்றால் அவர்களால் திருப்தி அடைய முடியாது. சந்தோசமாக இருக்க முடியாது.

மகிழ்ச்சி திருப்தி என்பது ஒரு கலை. அதை ஒருவன் கற்றுக் கொள்ள வேண்டும்.

நீ எதை செய்கிறாய் எதை செய்யவில்லை என்பதை பொருத்தது அல்ல அது.

மற்றவர்களை மகிழ்விப்பதை விட... நீ மகிழ்ச்சியாக இருக்கும் கலையை கற்றுக் கொள்...

கார்ப்பரேட் வியாபாரம்...


மனம்...


பொதுவாக நமக்குள் இருக்கும் முரண்பாட்டையே நாம் வெளியே காட்டுகிறோம். இது தான் நமக்குள் இருக்கும் திருடன்.

அந்த திருடனோடு தான் நாம் சண்டையிட வேண்டிருக்கிறது. திருட வேண்டாம் என்று எச்சரிக்கிறோம்.

அடுத்த வீட்டில் ஒரு திருடன் பிடிபட்டால் நாம் அவனைப் பிடித்து நன்றாக அடிக்கிறோம். ஏனெனில் நமக்குள் ஏற்கனவே ஒரு திருடன் இருக்கிறான். அவனைப் பிடித்து தண்டிக்க நினைக்கிறோம். ஆனால் முடியவில்லை.

வெளியே ஒரு திருடன் கிடைத்ததும் உள்ளிருக்கும் திருடனை வெளிப்படுத்துகிறோம். நிச்சயமாக அவனை நாம் தண்டிப்போம். திருடனைத் தண்டிக்கத் திருடனின் இருப்பு அவசியம்.

புனித மனிதர் ஒரு திருடனை அடிக்கவே முடியாது. ஆகவே திருடர்களே எப்பொழுதும் திருடர்களை கண்டிப்பார்கள். குற்றவாளிகளே குற்றவாளிகளை குறை சொல்வர். காமவயப்பட்டவரே பாலுறவை மிகவும் கண்டிப்பர். நமக்குள் இருப்பது தான் வெளியே தோன்றும்.

ஒருவன் 'திருடன்.. திருடன்.. விடாதே பிடி என்று கத்தினால் முதலில் அவ்வாறு கத்துபவனைப் பிடிக்க வேண்டும் என்கிறார் பெர்ட்ரண்ட் ரஸ்ஸல்.

ஏனெனில் அவ்வாறு கத்துபவன் எதிர்காலத்தில் திருடுவான்.

நம் நோய்களை நமது மனநோய்களையே பிறர் மீது சுமத்துகிறோம். எனவே ஒருவரைப் பற்றிக் குறை கூறும் போது நம்மை நாமே வெளிப்படுத்திக் கொள்கிறோம்.

பிறரைக் குறை சொல்ல அதிகம் இல்லாத போது நம்மியல்பே அங்கு வெளிப்படும். நமக்குள் நடக்கும் போராட்டமே இன்னொருத்தர் மேல் ஏற்றி உரைக்கப்படுகிறது.

ஆகவே நமக்குள் முரண்பாடு தோன்றாத போது போராட்டம் எழாத போது இன்னொருத்தர் மேல் பழிபோடுதல் என்பது முற்றிலும் நின்று போகிறது.

மனித மனம் உடைப்பட்டு கிடக்கிறது. அவனது வன்முறை இங்கு தான் பிறக்கிறது.

மனித மனம் அஹிம்ஸையாக மாறத் தொடங்கும்போது அது முழுமையாகி விடும். ஒன்றாக இருக்கும். பிளவுபடாது.

மனம் ஒருமைப்பட்டு முழுமை அடையும் போது அதில் மாறுபட்ட போக்குகள் என்பதே இருக்காது. ஆனந்த நடனமே அமையும். மகிழ்ச்சியால் புல்லாங்குழல் ஒலிக்கத் தொடங்குகிறது. அப்பாதையில் சென்று இறையை அடையலாம்.

முழுமை அடைந்த மனத்தால் மட்டுமே இறையை அடைய முடியும். வேறு வழியே இல்லை...