28/04/2019

ஆகாச முத்திரை...


ஆகாச முத்திரை என்பது நடு விரலின் நுனியை கட்டை விரலின் நுனியுடன் தொட்டுக் கொண்டிருப்பது.

பலன்கள்...

இதுவும் வாதம் மூலத்துடன் தொடர்புடையது. இம்முத்திரை ஆகாயத்தை அதாவது வெளியை நம் உடலில் உண்டாக்கும்.

இது எழும்புகள் பலமாக உதவும் முத்திரை. எழும்பு தொடர்பான நோய்களுக்கு இது சிறந்தது.

மூட்டுவலி, பற்கள் பலமில்லாமல் இருப்பவர்கள், தாடை பலமில்லாமல் உள்ளவர்கள் இதை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.

இசிடிராய்டு  (steroid) போன்றவற்றால் உண்டாகும் பின் விளைவுகளை குறைக்க உதவும்.

நடக்கும் போது  இம்முத்திரையை செய்யாமல் இருத்தல் நலம்...

திமுக ஸ்டாலின், டிடிவி, கனவுகளை தவிடு பொடியாக்கிய எடப்பாடி.. 22 தொகுதியில் 4 மட்டுமே போதும்...


https://youtu.be/PZLy06OWW1I

Subscribe The Channel For More News...

2009 வரை திராவிடம் என்றால் என்ன என்ற கேள்வியே எழவில்லையே ஏன் ?


அந்த திராவிடம் என்ற வார்த்தையைப் பயன்படுத்தி, தமிழரல்லாதவர்கள் குறிப்பாக தெலுங்கர்கள் இந்த தமிழ்நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக உயர்ப் பொறுப்புக்களிலும் திட்டமிட்டு நிரப்பி வைக்கப் பட்டுள்ளார்கள் என்பதே எங்களுக்கு 2009க்கு பின்  தான் தெரிய வருகிறது.

இதுவரை இந்த தெலுங்கு கன்னட மழையால் வந்தேறிகளின் ஆட்சியில் தலைமை செயலராக ஒரு தமிழர் கூட இருந்ததில்லை என்பதே இவர்கள் எப்படி தமிழின அழிப்பை மேற்கொண்டுள்ளனர் என்பதையும், தமிழின விரோதப்போக்கை காட்டுகின்றது!

தமிழர் உரிமை, உடைமை, உயிர் சார்ந்த போராட்டங்களுக்கு உதட்டளவில் மட்டுமே குரல் கொடுக்கும் இந்த தமிழரல்லாத திராவிடர்களாலேயே, போராட்டங்களின் வீரியம் குறைகிறது, போராட்டங்களில் இலக்கு திசை மாறிச் செல்கிறது!

தமிழகமே சாராயத்தை எதிர்த்து போராடியது; தெலுங்கர் வைகோபால்சாமி நாய்டு உள்ளே நுழைந்து குட்டையை குழப்பி போராட்டத்தி திசை திருப்பினார்;

இதைத் தான் இந்த தெலுங்கு கன்னட மலையாள வந்தேறிகள் இத்தனை வருடங்களாக செய்துக் கொண்டு வருகின்றனர்!

கேரளா மலையாளிகளின் ஆளுமையின் கீழிருக்கும்..

ஆந்திராவும், தெலுங்கானாவும் தெலுங்கர்களின் ஆதிக்கத்தின் கீழிருக்கும்..

கர்நாடகா, கன்னடரின் ஆதிக்கத்தின் கீழிருக்கும்..

ஆனால், தமிழ் நாடு மட்டும் திராவிடருக்குப் பொதுவானது என்றால், எவ்வளவு பெரிய ஏமாற்று வேலை நடந்திருக்கிறது என்பதை தமிழச் சொந்தங்கள் சிந்திக்க வேண்டிய காலம் இது...

பன்னிரண்டு ராசிகளில் மர்ம ஆன்மாக்கள் கொண்ட 5 ராசிகள் எவை தெரியுமா.?


https://youtu.be/VmpBp18bvEw

Subscribe The Channel For More News...

நாம் தமிழர் கட்சியை மீண்டும் உருவாக்கிய இந்த சுபா. முத்துக்குமார் கொலை வழக்கு என்ன ஆச்சு..?



தமிழ் தேசியப் போராளி சுபா.முத்துகுமார் வாழ்க்கை குறிப்பு...

தாயார் பார்வதி, தந்தை சுந்தரம் இவர்களின் இரண்டாவது பிள்ளையாக மதுரையில் பிறந்தார். தந்தையின் கட்டிடத்தொழில் காரணமாக சிறு வயதிலேயே பழனிக்கு சென்றதால் பழனியிலேயே வளந்தார்.

பள்ளிப்படிப்பு காலம் முதலே ஈழ விடுதலைக்காக பழனியில் நடந்த பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றார்.

ஈழ விடுதலை தமிழினத்திற்கு எவ்வளவு அவசியமோ. அதே போன்று தமிழ் நாடு விடுதலையும் தேவை என்ற புரிதலுக்கு வந்தார்.

அதன் தொடர்ச்சியாக தமிழ் தேசிய மீட்சிப்படையில் தன்னை இணைத்துக்கொண்டு ஆயுத வழியில் தமிழ்நாடு விடுதலை பெற முடியும் என்ற முடிவுக்கு வந்தார்.

இந்த முடிவுக்கு வருவதற்கு ஆயுத வழியில் போராடி உயிர்நீத்த தமிழ்நாடு விடுதலைப்படையின் தோழர். தமிழரசனையே முன்னோடியாகக் கொண்டார். ஆயுதப் பயிற்சிக்காக தமிழிழத்திற்கு சென்றார். அங்கு தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் வழிகாட்டுதலின் படி சிங்களப் படைக்கு எதிராக விடுதலைப் புலிகளின் பல்வேறு வெற்றிகரமான தாக்குதல்களில் பங்கேற்றார். தேசியத் தலைவர் பிரபாகரனின் தனி பாதுகாப்பு அணிக்கு (சைபர் விங்) தேர்வு செய்யப்பட்டார் ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு தமிழகம் திரும்பினார்.

தமிழ்நாடு விடுதலைக்காக தமிழ்த்தேசிய மீட்சிப்படையை தலைமையேற்று வழி நடத்தினார். அத்துடன் தமிழிழ விடுதலைக்காக விடுதைலைப்புலிகளுக்கு    தேவையான பொருட்களை அனுப்பி வைத்தார்.

சென்னை சிறையிலிருந்து தப்பித்த போராளி ரோமியோ மற்றும் அவரது தோழர்களையும் பாதுகாப்பாக ஈழத்திற்கு அனுப்பி வைத்தார். அது போலவே உலகே வியக்கும் வண்ணம் வேலூர்  கோட்டையிலிருந்து நீண்ட நெடிய சுரங்கம் அமைத்து தப்பித்து வந்த 4  பெண் போராளிகள் உட்பட 43 விடுதலை புலிகளையும் பொறுப்பேற்று ஈழத்திற்கு அனுப்பி வைத்தார். மணமேல்குடியில் விடுதலைப் புலிகளுக்கு பொருட்களுடன் காத்திருந்த போது கைது செய்யப்பட்டு தடா சட்டத்தின் கீழ் சென்னை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இரண்டரை ஆண்டுகளுக்கு பிறகு பிணையில் விடுதலையானர்.

விடுதைலை ஆனவுடன் தலைமறைவு ஆனார். சந்தனக்காட்டில் வீரப்பனாருடன் சேர்ந்து போராட்டத்தளம் அமைத்தார். வெள்ளித்திருப்பூர் காவல் நிலையத்தை வீரப்பனாருடன் தலைமையேற்று தாக்குதல் நடத்தி ஆயுதங்களை எடுத்துச் சென்றார்.  இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் சிறைப்படுத்தப்பட்டார். கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பனார் பிடித்துக் கொண்டு விடுவிக்க தமிழர்களின் சீவாதாரப் பிரச்சினையான காவிரி நீர், பெங்களூரில் திருவள்ளுவர் சிலை திறப்பு, அதிரடிப்படையால் பாதிக்கப்பட்ட மலைவாழ் தமிழ்மக்களுக்கு தீர்வு போன்ற கோரிக்கைகளில் முத்துக்குமாரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் முன் வைத்தார்.

பிறகு சிறையிலிருந்து பிணையில் விடுவிக்கப்பட்டார்.  அய்யா பழ.நெடுமாறனுடன் அரசியலில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு வீரப்பனாருக்கு பொருட்களை கொண்டு சென்றதாக கொளத்தூர்.மணி அவர்களுடன் கூட்டு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டு கடும் சித்திரவதைக்கு ஆளாகி கன்னட சிறையில் அடைக்கப்பட்டார்.

அத்துடன் கர்நாடகத்தில் 1992-ல் நடந்த காவிரிக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக வெடிகுண்டு தாயரித்ததாக கைது செய்யப்பட்ட கன்னடத் தமிழர்களுடன் சிறைப்படுத்தப்பட்டார். நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு பிணையில் விடுதலை பெற்றார்.

மீண்டும் தமிழ்தேசிய அரசியலில் களம் புகுந்தார். மதுரையில் முள்வேலி தகர்த்தெறிவோம் மாநாட்டை சீமானுடன் மற்றும் தோழர்களுடன் வெற்றிகரமாக நடத்தினார். நாம் தமிழர் கட்டியியை தொடங்குவதற்க்கான பணியில் ஈடுபட்டார். அதே வேளையில் வடகாடு கரு.காளிமுத்து-சிவந்தியம்மாள் ஆகியோரின் மகளாகிய-மாதரசியை சாதி மறுப்பு மணம் முடித்தார்.

பிறகு ஈழத்திற்கு இரத்தப் பைகளையும் மருந்துப்பொருட்களையும் அனுப்பி வைத்ததாக கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

ஒன்றரை மாதம் கழித்து பிணையில் விடுதலை பெற்றார்.

சீமான் மற்றும் தோழர்களுடன் நாம் தமிழர் இயக்கத்தை தொடங்கி தமிழகம் முழுவதும் மாநில ஒருங்கிணைப்பாளராக சுற்றி சுழன்று பணியாற்றினார்.

சற்றேக்குறைய -  10 ஆண்டுகள் தமிழக விடுதலைக்காக சிறை வாழ்வு.

5  ஆண்டுகள் தலைமறைவு, ஆயுதப் போரட்ட வாழ்வு.
                                     
4  ஆண்டுகள் மக்களுக்காக அரசியல் வாழ்வு...

தீவிரவாதிகள் தாக்கலாம்.. உச்சகட்ட பதற்றத்தில் தமிழக போலீஸ்.. தமிழகம் உள்ளிட்ட 8 மாநிலத்தில் அல்ர்ட்...


https://youtu.be/xeMTOnBLumY

Subscribe The Channel For More News...

பழங்குடிகளை இடப்பெயர்வு செய்யக்கூடாது...


பழங்குடிகள் இல்லாமல் காடுகளை பாதுகாக்க முடியாது. ஆங்கிலேய காலனிய காலத்தில், வனத்தின் மீதிருந்த பழங்குடிகளின் உரிமைகள் பறிக்கப்பட்டன. 'சுதந்திர' இந்தியாவிலும் பழங்குடிகளின் வன உரிமை மறுக்கப்படுகிறது.

காடுகளை அழித்து கனிமவளங்களை சுரண்டி எடுக்க தனியார் நிறுவனங்களுக்கு தொடர்ச்சியாக அரசுகள் அனுமதி அளித்து வருகின்றனர். இவற்றை எதிர்க்கும் பழங்குடிகள் வனத்தில் இருந்து துரத்தப்படுகிறார்கள்.

வனப்பகுதியில் வசிக்கும் பழங்குடிகள், வன உரிமை சட்டத்தின் கீழ் தங்கள் நிலங்களுக்கு பட்டா கோரிய மனுக்கள் பெரும்பாலும் மறுக்கப்படுகின்றன.

இவ்வாறு, இந்தியா முழுவதும் வனப்பகுதியில் வசிக்கும் 1,127,446 பழங்குடிகளின் பட்டா மனுக்கள் மறுக்கப்பட்டுள்ளன.

Wildlife First என்னும் அரசு சாரா அமைப்பு பதிவு செய்துள்ள வழக்கில்,  உச்ச நீதிமன்றம் மேற்கூறிய பழங்குடிகளை வனப்பகுதியில் இருந்து வெளியேற்ற அரசு நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது.

இவ்வாறு தமிழகத்தில், 7148 குடியிருப்புகளைச் சேர்ந்த பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பழங்குடியினரை வனத்தில் இருந்து வெளியேற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதிகட்ட விசாரணையின்போது மத்திய அரசு தனது வழக்கறிஞரைக்கூட நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை என்பது உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.

பழங்குடிகளுக்கு எதிரான இந்த நடவடிக்கை வன அழிவிற்கே வழி வகுக்கும் . இதேநேரத்தில், அதிவிரைவு புல்லட் இரயில் திட்டம் போன்ற 'வளர்ச்சி' திட்டங்களுக்கான அனுமதி தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றன.

2014 - 2019 வரை இவ்வாறு நாடு முழுவதும் வனப்பகுதியில்  682 வளர்ச்சி திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதாவது வனங்களை அழித்து கனிமவளங்களை எடுக்கவும், நிறுவனங்கள், தொழிற்சாலைகள் கட்டுமானம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளன.

இப்படியான அரசு செயல்பாடுகள் தான் சின்னதம்பி போன்ற யானைகள் தம் தாய்நிலத்தை விட்டு வெளியேற காரணமாக அமைகின்றன.

காலநிலை தன்னிலை மாறி வரும் நிலையில் வனங்களை பாதுகாக்க வேண்டியது மிகவும் தேவையானது.

வனங்களை பாதுகாக்க காடுகள் குறித்த மரபு அறிவுபெற்ற பழங்குடிகளை பாதுகாக்க வேண்டியது அடிப்படையானது.

எனவே தமிழக அரசு மறுக்கப்பட்ட பழங்குடிகளின் மனுக்களை மறுபரிசீலனை செய்து அவர்களை பூர்விக வனப்பகுதியிலேயே இருக்க அனுமதிக்க வேண்டும். இதற்கு தேவையான உத்தரவுகளை உச்சநீதிமன்றத்தில் பெறவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.

-தமிழக அரசுக்கு பூவுலகின் நண்பர்கள் கோரிக்கை...

உலகமயமாக்கல் என்றால் என்ன.?


அமானுஷ்யம் - பங்கார் கோட்டை, இராஜஸ்தான், இந்தியா...


இந்தியா இராஜஸ்தானில் உள்ள பங்கார் கோட்டை பற்றி அறிந்திருப்பீர்கள்.

இந்தியாவின் முக்கிய பயங்கரமான இடமாக கருதப்படும் இது 1573ல் கட்டப்பட்டது.

ஒரு மந்திரவாதியால் சபிக்கப்பட்ட அங்கு வாழ்ந்தவர்கள் மர்மமான முறையில் இறந்ததாகவும்.. அவர்களின் ஆவி காலங்காலமாக அங்கே உலாவி வருவதாகவும் செய்திகள் பரவுகிறன்றன.

இரவு நேரத்தின் அங்கே தங்க யாருக்கும் அனுமதி கிடையாது.

கதறல் சுரங்கம், ஒந்தாரியோ, கனடா எதிர்பாரா மரணம் அடைந்த இளம் பெண்ணிலிருந்து கதை
தொடங்குகிறது.

பழங்காலத்தில் இந்த தென்பகுதி சுரங்கத்திற்கு அருகே ஒரு பண்ணை வீடு இருந்துள்ளது. ஒரு நாள் அப்பண்ணை தீக்கிரையாகிறது. அதில் சிக்கிய பெண் தீயுடன் உதவிக் கோர இறுதியில் இந்த சுரங்கத்தினுள் இறந்துள்ளாள்.

அன்று முதல், இந்த சுரங்கத்தில் இரவு நேரத்தில் தைரியமாக நுழைந்து மரக்குச்சியால் தீயேற்றுபவர்கள் இறவா நிலை அடைவர் என்ற கருத்து நிலவி வருகிறது.

ஆனால் அவ்வாறு செய்தவர்கள் கதறி கொண்டே சுரங்கத்திலிருந்து வெளி வந்துள்ளனர்.

மொன்தே கிரிஸ்தோ, ஆஸ்திரிலியா ஆஸ்திரிலியாவின் மிகவும் பயங்கரமான இடம் இது.

இவ்விடம் 1855-1948 வரை கிரவ்லி
குடும்பத்திற்குச் சொந்தமானது. அங்கிருக்கும் போது அக்குடும்பம் பல இறப்புகளைக் கண்டுள்ளது.

கிரவ்லியின் மரணத்திற்கு பின் அவரின் மனைவி மேல்தளத்திற்குச் சென்று தாழிட்டு கொண்டதாகவும் அவரின் அடுத்த 23 வருடங்களுக்கு வீட்டை விட்டு
வெளியேறவில்லை எனவும் கூறப்படுகிறது.

ஒரு தடவை மட்டுமே வெளியில்
வந்ததாகவும் கூறப்படுகிறது.

அவர் அந்த வீட்டிலேயே இறந்து விட்டதாகவும் அவரின் ஆவி இன்று வரை அங்கேயே உலாவி வருவதாகவும் அறியப்படுகிறது.

ஆவி சம்பந்தப்பட்ட காணொளிகள் இங்கே படமாக்கப்பட்ட போது விநோத வெளிச்சங்கள் தென்பட்டதாகவும் பெண்ணின் குரல் கேட்டதாகவும் அறியப்படுகிறது.

லாவாங் சேவு, இந்தோனேசியா டச்சு கிழக்கு இந்தியா ரயில்வே கம்பெனியால் 1917ல் கட்டப்பட்ட
கட்டிடம் இது.

லாவாங் சேவு என்றால்.. ஆயிரம் கதவுகள் என்று அர்த்தம்.

இரண்டாம் உலக போரின் போது இவ்விடம் ஜப்பானியர்களால் சிறையாக பயன்படுத்தப்பட்டு ஆட்கள் சித்திரவதை
செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்விடத்தில் பொந்தியானாக் எனும் இறந்த கர்ப்பிணி பெண்ணின் ஆவி சுற்றுவதாக நம்பிக்கை உண்டு.

அதோடு இங்கே தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படும் டச்சு பெண்ணின் ஆவியும் சுற்றுவதாக நம்பிக்கை உண்டு.

ஒரு படப்பிடிப்பின் போது அவரின் ஆவி படமாக்கப்பட்டுள்ளது.

பொம்மைகளின் தீவு, மெக்ஸிகோ மர்மமான முறையில் இறந்த ஏழைப் பெண்ணுக்காக அர்பணிக்கப்பட்டது இத்தீவு.

இத்தீவிற்கு அருகில் உள்ள கால்வாயில் அந்த பெண் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது.

டோன் ஜூலியன் சந்தன் அந்த பெண்ணின் ஆவியால் தாக்கப்பட்டார். ஆவியை மகிழ்ச்சிப்படுத்த பழைய பொம்மைகளை வாங்கி வந்து தீவில்
தொங்கவிட்டுள்ளார். தன் குடும்பத்தினரிடம் அந்த பெண்ணின் ஆவி வாழ்விற்குப் பின் தன்னோடு வந்து விடுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.

2001ம் ஆண்டில் அந்த பெண் இறந்த அதே இடத்தில் அவரும் இறந்து கிடந்தார்.

அங்கே செல்லும் சுற்றுப்பயணிகள் அங்கே உள்ள பொம்மைகளின் கண்கள் தங்களைத் தொடர்வதாகவும் சிரிக்கும் குரல் கேட்பதாகவும் கூறியுள்ளனர்...

மக்களிடம் கொள்ளையடிக்க சத்தமே இல்லாமல் அமலுக்கு வந்த திமுக உருவாக்கிய ஆணை...


https://youtu.be/zu1VhMAUkOc

Subscribe The Channel For More News...