27/08/2020

கொரோனா நாடகமும்.. தடுப்பூசி இரகசியமும்...



ஒரு புது உலகை நோக்கி ( New World Order)...

ஒரு அதிநவீன உலகை நோக்கி (Digital World ), நம்மை நகர்த்தி செல்கின்றனர். இவர்களின் திட்டம் முழுமை என்பது, தடுப்பூசி மூலம் வழங்கவுள்ள RFID Chip-ல்  மட்டுமே உள்ளது.

இதற்க்காக தான் இவர்களுக்கு "Corona Virus" என்ற பேராயுதம் தேவைப்பட்டது.

கொரோனா வைரஸ் என்ற ஒன்றை வைத்து தான் இங்கு பல சதிவலைகள் பின்னப்பட்டு வருகின்றனர்.

இதில் 70% திட்டங்களை நடைமுறைப்படுத்திவிட்டனர்.

மீதி இருக்கும் திட்டங்களை அரங்கேற்ற வேண்டுமானால், அது தடுப்பூசியினால் மட்டுமே சாத்தியமாகும்.

அதற்காக தான், Bill Gates மற்றும் அவரின் அடிமை கூட்டம், அடிமை அமைப்புகள், முழுவீச்சில் இறங்கியுள்ளனர்...

முன்னாடியெல்லாம் நாங்க பண்ற தப்புக்கு திமுக உ.பி.கள் முட்டு கொடுப்பாங்க...



இப்ப நாங்க பண்றது எல்லாமே, தப்பா இருக்குனு உ.பிகளே மூச்சு முட்டுற அளவுக்கு அடிக்கிறானுங்க...

ஆதாம், ஏவாள் மற்றும் நோவா ஆகியோரும் தமிழரே...


உலகில் முதல் மொழி தமிழ் என்று ஏற்காவிட்டாலும்..
உலகின் முதல் மாந்தன் தமிழன் என்று ஏற்காவிட்டாலும்..

60,000 ஆண்டுகளுக்கு முன் உலகம் அழிவைச் சந்தித்தபோது தப்பிப் பிழைத்த ஒரு மாந்தர் குடும்பம் மீண்டும் இனப்பெருக்கம் செய்து உலகம் முழுவதும் பரவியது என்றும் பரிணாம வளர்ச்சி உயிரியல் அறிஞர் டாக்டர். ஸ்பென்ஸர் வெல்ஸ் கூறியுள்ளார்.

அந்த குடும்பமும் ஒரு தமிழ்க் குடும்பம் தான். இதை அனைவரும் ஏற்றுக் கொள்ளத் தான் வேண்டும்.

ஆம். மேலும் இதுபற்றி அறிவோம்.

மனித வரலாறு காலம் பின் செல்லச் செல்ல மங்கி தெளிவில்லாமல் ஆகிவிடுகிறது.

ஆனால் எழுதும் வழக்கம் வரும் முன்னே நடந்த நிகழ்வுகளின் எச்சங்கள் செவிவழிப் பழங்கதைகளாக, புராணங்களாக, இதிகாசங்களாக, தொன்மங்களாக, நாடகமாக, இலக்கியமாக இன்றும் பல்வேறு மாய மந்திரங்களுடன் விரவப்பட்டு இன்றும் உள்ளன.

உலகில் தொன்மையான இனங்களின் புராணங்களில் ஒரு நிகழ்வு மட்டும் தவறாமல் இடம்பெருகிறது.

அது உலகம் நீரில் மூழ்குவதும் அதிலிருந்து குறிப்பிட்ட மக்கள் பிழைப்பதும் ஆகும்.

இது பைபிளில் நோவா கதையாக உள்ளது.

குரானில் நூ கதையாக உள்ளது.

தமிழ் இலக்கியத்தில் குமரிக்கண்டம் மூழ்கியபோது மக்களை காப்பாற்றிய நெடியோன் கதையாக உள்ளது.

இது தவிர பைபிள் கூறும் முதல் மனிதன் ஆதாம். இவன் தமிழனே.

தேவனாகிய கர்த்தர் மனிதனை கிழக்கே ஏதேன் என்னும் ஒரு தோட்டத்திலே…- ஆதியாகமம் (2-8)
கிறித்தவ மதம் தோன்றியது மத்திய ஆசியா.

அதற்கு கிழக்கே பழமையான குடியாக தமிழர்கள்தான் இருக்கிறோம்.

ஆதாம் என்ற பெயர் ஆதிமனிதன் என்று பொருள்படும் வகையில் உள்ளது.

ஆதி என்றால் தொடக்கம்.

ஆதாம் வாழ்ந்த இடம் இலங்கைத் தீவில் இன்றும் உள்ளது.

அதனை 'ஆதாம் சிகரம்' (Adams peak) என்று அழைக்கின்றனர்.

தமிழர்கள் இதனை 'சிவனொளிபாத மலை' என்று அழைக்கின்றனர்.

மலையின் உச்சியில் மனிதப் பாத வடிவில் ஒரு பள்ளம் காணப்படுகிறது.

மார்க்கபோலோ (சுமார் கி.பி. 1293) 'ஆதம் மலையில் நமது முதல் தந்தையான ஆதத்தின் கல்லறை இருக்கிறது' என்று குறிப்பிடுகிறார்.
(இந்த மலையின் அடிப் பகுதியில் உள்ள ஒரு குகையின் வாசலில் ‘மனித குலத்தின் தந்தை’என்று பொறிக்கப்பட்ட கல்வெட்டு ஒன்றும் இருக்கிறதாம்.

இது உறுதியாகத் தெரியவில்லை.
இதை பிற்காலத்தில் யாராவது வைத்திருக்கலாம்).

‘ஆதன்’என்பது தமிழில் வழங்கிய மிகப் பழைய பெயர்களுள் ஒன்று.

ஆதன் அவினி, ஆதன் அழிசி, ஆதனுங்கன், ஆதன் எழினி என்ற பெயர்கள் சங்க இலக்கியங்களில் காணப்படுகின்றன.

தந்தையைக் குறிக்கும் ‘அத்தன்’, ‘அத்தா’என்ற சொற்கள் 'ஆதன்’என்ற சொல்லில் இருந்து தோன்றியவையே.
கந்த புராணத்தில் "ஈன்ற ஔவையும் அத்தனும்" என்று வருகிறது.

"ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்றுப் பெயரிட்டான். ஏனெனில் அவன் உயிருல்லோருக்கெல்லாம் தாயானவள்” - ஆதியாகமம் (3 - 20 )

ஏவாள் என்றால் தாய் என்று பொருளாம்.

ஈவே (Eve) என்பது பைபிளை மொழி பெயர்க்கும் போது ஏவாள் என்று ஆக்கப்பட்டது.

பைபிள் எபிரேய மொழியில் (ஹீப்ரு) இருந்து தான் மற்ற மொழிகளுக்கு சென்றது.

ஈவே என்பதும் மொழிபெயர்ப்பு திரிபு.

முதல் பைபிள் ஏவாளை ஆயா என்று கூறிப்பிடுகிறது.
ஆயா, ஆய் என்பன தாயையோ அல்லது தாயின் தாயையோ குறிக்கும் தமிழ்ச்சொல்.

குரான் ஹவ்வா என்று குறிப்பிடுகிறது.

இது ஔவை என்பதன் திரிபு.

மூழ்கிய குமரிக்கண்டத்தின் எஞ்சிய ஒரு பகுதி குமரி மாவட்டம்.

இம்மாவட்டத்தில் ஔவைச் கோயில்கள் இருக்கின்றன.

தோவாளை வட பகுதியில் அழகிய பாண்டிபுரத்தை அடுத்துள்ள குறத்தியறையில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும்,
குறத்தியறையில் இருந்து தெற்கே தாழக்குடியில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும்,
முப்பந்தலில் ஓர் ஔவையாரம்மன் கோயிலும் அமைந்திருக்கின்றன.
குமரி மாவட்டத்து தமிழ் இசுலாமியர்கள் ‘ஆதம் பாவா’ என்ற பெயரை சூடிக்கொள்கின்றனர்.

(‘பாவா’என்றால் தந்தை என்று பொருள்).

ஆதமின் புதல்வர்கள் ஆபில் மற்றும் காபில் இவர்களின் கல்லறைகள் தமிழகத்தில் இராமேஸ்வரத்தில் உள்ளன.

அதுதான் ஆபில்காபில் தர்கா.

இதுபற்றி இதுவரை யாரும் ஆய்வு செய்யவேயில்லை என்பது பெரிய வேதனை.

ஆபில் காபில் தர்காவில் அடக்கமாகி உள்ள உடலை தோண்டி ஆராய்ந்தால் உண்மை தெரியவரும்.

ஆதாம் மற்றும் அவரது குடும்பம் வாழ்ந்த சுவடுகள் உலகில் வேறு எங்குமே இல்லை என்பதை அறிக.

பிரளயத்தில் தப்பித்த நோவாவும் அவருடைய குடும்பமும் தமிழினத்தைச் சார்ந்தவர்களே என்பதைக் காட்டும் அரிய சான்று ஐயனாரிதனார் இயற்றிய 'புறப்பொருள் வெண்பா மாலை’ நூலில் காணப்படுகிறது.

' பொய்யகல நாளும் புகழ்விளைத்தல் என்வியப்பாம்
வையகம் போர்த்த வயங்கொலிநீர் - கையகலகக் கல்தோன்றி மண்தோன்றாக்
காலத்தே வாளோடு முன்தோன்றி மூத்த குடி.’

‘பூமியைப் போர்த்தியிருந்த வெள்ளம் வடிந்த போது,
கல் அதாவது மலை நீரிலிருந்து வெளிப்பட்டு, மண் அதாவது தரை வெளிப்படாதிருந்த காலத்தில் கையில் வாளோடு முன்தோன்றிய மூத்த குடி தமிழ்க்குடி’ என்பது இதன் பொருள்.

நோவா கதையில் அவர்தான் உலகிலேயே கப்பல் கட்டிய முதல் மனிதர்.

அதேபோல உலகிலேயே முதன்முதலாகக் கப்பல் கட்டிய இனம் தமிழினம்.

நோவா என்ற பெயர் நாவாய் என்ற தமிழ்ப் பெயருடன் ஒத்துப்போகிறது.

நாவாய் என்றால் நா+வாய்.
அதாவது நாக்கின் முன்புறம்.
கப்பலின் அமைப்பை இது கூறுகிறது.

இதுதான் ஆங்கிலத்தில் Navy ஆனது.

ஐரோப்பிய மொழிகள் பலவற்றிலும் கப்பலைக் குறிக்க இச்சொல் சிறுசிறு மாற்றத்துடன் வழங்கப்படுகிறது.

உலகின் பழைய துறைமுகங்கள் அனைத்தும் தமிழ்ப் பெயரையே கொண்டுள்ளன.

உலகின் அனைத்து மொழிகளிலும் கப்பல் தொடர்பான சொற்கள் தமிழ் வடிவத்திலேயே உள்ளன.

“பூமியெங்கும் ஒரே பாஷையும், ஒரேவிதமான பேச்சும் இருந்தது.”
-ஆதியாகமம் 1.

நோவா கோபர் மரத்தில் கப்பல் செய்ததாக கூறப்பட்டுள்ளது. கோபர் என்ற சொல் மத்திய ஆசிய மொழிகளில் குறிப்பிட்ட பொருளைத் தரவில்லை.

தமிழில் காப்பெரு மரமாக இருக்கலாம்.

காப்பெரு என்றால் பெரிய காட்டுமரம் என்ற பொருள்.

நோவாவின் புதல்வர்கள் ‘ஷெம்’, ‘ஹாம்’
நோவா ‘வெள்ளம் வற்றிக் கரையேறும் வரை சுத்தபத்தமாக இருக்க வேண்டும்’ என்று ஆணையிட்டாராம்.

ஆனால் ஹாம் அவர் கட்டளையை மீறித் தன் மனைவியோடு உடலுறவு கொண்டான்.

அதனால் கோபம் கொண்ட நோவா,
காமனும் அவன் சந்ததியினரும் கருநிறம் பெறுவார்கள் என்றும், அவர்கள் வெண்ணிறம் உடைய ஷெம் சந்ததியினருக்கு அடிமைகளாக இருப்பர் என்றும் சபித்தார்.

இதில் நோவாவின் ஒரு மகன் கறுப்பாகவும் மற்றொருவர் வெண்மையாகவும் இருந்ததாக அறிகிறோம்.

திருத்தக்க தேவர் தனது சீவக சிந்தாமணியில் வெள்ளை நிறமும், கருப்பு நிறமும் உடைய இரு காளைகளை ஏரில் பூட்டும் காட்சியை வர்ணிக்கும் போது அவை ‘காமனும் சாமனும்’ (ஹாம், ஷெம்) போல இருந்ததாகக் கூறுகிறார்.

மனு எனும் அரசன் ஒரு பேசும் மீனை கண்டறிந்து வளர்ந்தானாம். அது பெரிதாக வளர்ந்துகொண்டே போனதால் கடலில் கொண்டு விட்டானாம்.

பிரளயம் வந்ததும் மனுவின் கப்பலை இழுத்துக் கொண்டு போய் வடமலையில் சேர்த்தது என்று சதபதப் பிரமாணம்
கூறுகிறது.

மகாபாரதத்தில் வைவசுத மனு வைசால வனத்தில் தவம் செய்யும்போது அருகில் இருந்த ஆற்றில் வந்த மீன் பிரளயம் பற்றி எச்சரித்துத் தோணி செய்யச் சொன்னது.

பிரளயம் வந்தபோது வைவசுத மனு ஏழு முனிவர்களோடும், பலவகை விதைகளோடும் தோணியில் ஏறியதாகவும், தோணியை மீன் இமயமலையில் சேர்த்ததாகவும் சொல்லப்படுகிறது.

தமிழ்நாட்டில் உள்ள சீர்காழி என்னும் ஊர் ‘தோணிபுரம்’ எனப்படுகிறது.

அவ்வூர்க் கோயிலில் உள்ள சிவபெருமான் ‘தோணியப்பர்’ எனப்படுகிறார்.

சிவபெருமான் பிரளயத்தின்போது ‘ஓம்’ என்னும் பிரணவத்தைத் தோணியாக்கிப் பயணம் செய்தார் என்று அருணாசலக் கவிராயர் ‘சீர்காழித் தலபுராண’த்தில் (2.15.4) கூறுகிறார்.

தமிழ் இலக்கியங்கள் நெடியோன் என்ற பாண்டிய மன்னன் குமரிக்கண்டம் மூழ்கியதும் கப்பலில் தப்பித்து வடக்கே பண்டைய தமிழகத்திற்கு வந்து தமிழ்மன்னர்களுடன் போரிட்டு தன் ஆட்சியைப் பரப்பி, மக்களைக் குடிவைத்து, பிறகு கப்பலில் சென்று தற்போதைய இந்தோனேசியாவின் சாலியூரைத் தாக்கி கைப்பற்றி விதைநெல் கொண்டுவந்தது வேளாண்மையை பெருக்கினான் என்று கூறுகின்றன.

மச்சபுராணத்திலும், பாகவத புராணத்திலும் இதே போன்ற மீன் கதை உள்ளது.

குரானிலும் நூ கதை நோவா கதையையே ஒத்துள்ளது.

(மலைமேல் நோவா விட்டுச் சென்ற கப்பல் துருக்கியில் அராரத் மலையில் கண்டெடுக்கப்பட்டதாகக் கூறினர். ஆனால் அது கப்பல் இல்லை எரிமலைப் படிவம் என்று பிறகு தெரியவந்தது)

உலகத்தின் பழைய நாகரிகங்கள் அனைத்திலும் பிரளயத் தொன்மம் காணப்படுகிறது.

‘கில்கமெஷ்’ என்ற புராதனப் பாபிலோனியக் காவியத்தில் ‘உட்னா பிஷ்டிம்’ என்பவர் தெய்விக வழிகாட்டுதலின்படி கப்பல் கட்டிப் பிரளயம் வந்த போது அதில் ஏறித் தப்பித்ததாகக் கூறப்பட்டிருக்கிறது.

மற்றொரு பாபி லோனியக் கதையில் பிரளயத்தில் கப்பல் ஏறித் தப்பித்தவர் ஸிஸோத் ராஸ் (xisouthros) என்று இருக்கிறது.

சுமேரியக் கதை யில் தப்பித்தவர் பெயர் ஸியூ சுத்ரா (Zi-u-Sud-ra) என்று குறிக்கப்பட்டிருக்கிறது. இது மேற் கண்ட பெயரோடு பெரும்பாலும் ஒன்றுபடுகிறது.

ஹுர்ரியக் கதையில் தப்பித் தவர் பெயர் ‘நாஹ்- மொலெல்’ என்றிருக்கிறது.

கண்டம் மூழ்கிய கதைகளும் உலக தொன்மங்களில் காணக்கிடைக்கின்றன.

கிரேக்கரான ஓமர் - அட்டுலாண்டிசு என்னும் கண்டம் கடலில் மூழ்கியதாக தன்னுடைய ஒடிசி என்னும் நூலில் குறிப்பிட்டு உள்ளார்.

பிளாடோ - அட்டுலாண்டிசு என்னும் ஒரு பலம் மிகுந்த கடற்ப் படையினைக் கொண்டு இருந்த கண்டம் கடலில் அழிந்ததாக கூறி இருக்கின்றார்.

நோவா கப்பலில் இருந்து இறங்கிய மக்கள் செங்கலை அறுத்து கட்டிடம் செய்ததாகக் கூறுகிறது பைபிள்.

உலகில் முதன்முதலாகச் செங்கல் கட்டிடம் காணப்படுவதும் தமிழர் நாகரீக தளமான சிந்து சமவெளியில் தான்.

ஆக உலகில் மனிதர்கள் தோன்றிய இடம் குமரிக்கண்டம். அதிலேயே மாந்த இனம் வாழ்ந்து வந்தது. அங்கே பேசப்பட்ட மொழி தமிழ்.

அக்கண்டம் மூழ்கிய பிறகு சொற்ப எண்ணிக்கையில் தப்பித்த மக்கள் உலகம் முழுவதும் பரவி குடியேறி உள்ளனர்.

வரலாறு அறிந்த முதல் மனிதன் ஆதன். அவன் பேசியமொழி தமிழ்.

மூழ்கிய கண்டம் குமரிக்கண்டம்.
அதிலிருந்து மக்களைக் காப்பாற்றியவன் நெடியோன்.

நன்றி:

1) முத்துக்குளிக்க வாரீகளா? (தொடர்) _ கவிக்கோ அப்துர் ரகுமான்..
2) ஒரு வரலாற்று ஆய்வு முயற்சி  (தொடர்) _ யாழறிவன்..
3) மற்றும் பல்வேறு வலைத்தளங்கள்..

கவலைப்படாதே அண்ணாமல... ஒனக்கு மட்டுமா மாமா.. ஊருக்கே மாமா தானேடா அவன்...


பெண்ணால் கெட்டு போகும் ஆண்கள் ஜாதகம்...



சந்திரன் கெட்டது பெண்ணாலே என்பது யாருக்குப் பொருந்தும்?

உலகத்தில் பொதுவாக எல்லோர் வாயிலும் வரக்கூடிய பழமொழி இதுவாகத்தான் இருக்கும்.

இந்திரன் கெட்டதும் பெண்ணாலே
சந்திரன் கெட்டதும் பெண்ணாலே
என்ற ஒரு பழமொழி உண்டு.

குருவுக்கு அதாவது, வியாழனுக்கு-சந்திரன், சீடர், சகல வேதங்களையும் கற்க வேண்டி, குருவிடம் குருகுல வாசம் செய்தார் சந்திரன். குரு பகவானுக்குத் தம் சீடராகிய சந்திரனை மிகவும் பிடித்து விட்டது. குருவின் மகைவி தாரா தேவி ஆவாள். அவள் சந்திரனின் அழகில் மயங்கி, சந்தரனை மன்மதக் கலையை கற்றுக் கொள்ள அழைத்தாள். சந்திரனும் அறிவு கெட்டு தாரா ஆதவியுடன் கூடி விட்டார். அதை குரு அறிந்தார். அவரது சாபத்திற்கு ஆளானார் சந்திரபகவான். அதனால் ஏற்பட்டதே மேற்கண்ட பழமொழி.

இதே பாதிப்பை ஜோதிட சாஸ்திரத்திலும் பார்க்கலாம் என்பதே விந்தையான செய்தியாகும்.

அதாவது, ஒருவர் ஜாதகத்தில் குருவும் சந்திரனும் கூடி இருந்தால் குரு சந்திரயோகம் ஏற்பட்டு அந்த ஜாதகரை உயர்வடையச் செய்யும்.

ஆனால் அதே குருவும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் மனைவி ஸ்தானமான 7-ம் இடத்தில் இருந்தால் குருவுக்கு தம் மனைவியுடன் சந்திரன் கள்ளத் தொடர்பு கொண்டது நினைவுக்கு வர, அதற்கான பாதிப்பை காட்டி விடுவான்.

ஒருவரது ஜாதகத்தில் 7-ம் இடத்தில் குருவும் சந்திரனும் இணைந்து விட்டால் அந்த ஜாதகரின் திருமணம் குளறுபடியாகும்.  குடும்பம்  பிரச்சினைக்குரியதாகும்.

இதைத்தான் புலிப்பாணி தமது பாடலில் 'பாரப்பா பால் மதியும், பரம குருவும் 7-ல் ஏற, அப்பா கோதைய வளும் விலகிடுவாள்' என்று குறிப்பிட்டுள்ளார்...

கன்னட ஈ.வே. ராமசாமி யாவது மயிராவது...


அய்யா வைகுண்டர்...



தமிழ்நாட்டுக்கு  பிச்சை எடுக்க வந்தவன் ராமசாமி நாயக்கன்...

அவன் தான் எல்லாத்தையும் புடுங்குனான்னு  சொல்லுவானுங்க ஆனால் உண்மை அது இல்லை..

அதற்கு முன்னே போராடி வெற்றி கண்டவர் அய்யா வைகுண்டர்...

பிறந்த தேதி மர்மங்கள் /நியூமராலஜி...



எண்கணித ஜோதிட ஆச்சர்யங்கள்...

பிறந்ததேதி யை வைத்துதான் பெரும்பாலும் ராசி எண் போன்றவற்றை கணிக்கிறோம், பார்க்கிறோம்... பிறந்த தேதியின் கூட்டுஎண்கள் எந்தளவு வேலை செய்கின்றன... அதன் பலன்கள் என்ன என்று பார்ப்போம்...

பிறந்ததேதி எண் ஒருவரது குணத்தையும் செயல்பாட்டையும் குறிக்கிறது. ஒருவரது பிறந்ததேதி 5 என்றால் (5,14,23)அவர் வேல்கமும், டென்சனும் நிரைந்தவர்.. நிறைய பேசுவார். நிறைய விசய ஞானமும் இருக்கும். பதட்டம் அதிகமுண்டு. ஒரு இடத்தில் ரொம்ப நேரம் இருக்க மாட்டார். புதிதாக எதையாவது செய்ய முயற்சித்துக் கொண்டே இருப்பார். மற்றவர்களை கவர முயற்சிப்பார். இவரது வரவை விட செலவுகளெ அதிகம் காணப்படும்.

இவரது பிறந்த தேதி கூட்டு எண்;1,5,6,9 போன்ற வலுவான எண்களாக இருப்பின் நிலையான வெற்றியை பெறக்கூடியவராகவும், நிறைய சம்பாதிக்க கூடியவராகவும் இருப்பார். எதிலும் வெற்றி பெறுவார். இதுவே வலுவில்லாத எண்களாக இருப்பின்,2,3,4,7,8 வாழ்வின் பிற்பகுதி மிகவும் போராட்டம் நிறைந்ததாக காணப்படும். இந்த எண் குறிக்கும் ஆண்டுகளில் மிக கஷ்டமும்,தோல்வியும் உண்டாக்கும்.

2 ஆம் என் ஆதிக்கத்தில் பிறந்து கூட்டு எண் 8,9 என வந்தால் அவர்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். பெரும்பாலும் நோயாளிகளாகவே காணப்படுகிறார்கள். வீண் வம்பு,வழக்குகளில் சிக்கி கொள்பவர்களாக இருக்கிறார்கள். குடும்ப வாழ்வு போராட்டம் மிக்கதாக இருக்கிறது.

பிறந்த தேதி 4 ம் கூட்டு எண் 2,4,7,8 என அமைந்தால் கடன் பிரச்சனை, நண்பர்களால் நஷ்டம் என ஏற்படுகிறது....

கூட்டு எண் 7 வருபவர்கள் மன்மத ராஜாக்களாக பலரை பார்த்திருக்கிறேன். கூட்டு எண் 4 ,8 பெரிய கடன் பிரச்சனைகளில் சிக்கி துன்பப்படுபவர்களை பார்த்திருக்கிறேன். கூட்டு எண் 7 கலைத்துறையில் நல்ல வெற்றி தரும். கூட்டு எண் 2 குழப்பமான வாழ்வையே தருகிறது. கூட்டு எண் 8 போராட்டம் , தடங்கல், தாமதம் என துன்புறுத்துவதாக சொல்லியிருக்கிறார்கள்.

பல்லாவரம் நகராட்சி அதிகாரிகளே இது மனித உரிமை மீறல் ஆகாதா?


குரோம்பேட்டை, அஸ்தினாபுரத்தில் அமைந்துள்ளது பாதல் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவர் 14நாட்கள் கொரோனா சிகிச்சை பெற்று இன்று மதியம் நலமுடன் வீடுதிரும்பினார்.  இன்று மாலை பல்லாவரம் நகராட்சி ஆணையரின் உத்திரவின்படி அந்த வளாகத்தில் ஒரு பகுதி வாயிலை அடைக்க வந்தார்கள்.

அப்போது குடியிருப்போரின் போராட்டத்தினால் அந்த வீட்டின் வாயிலை மட்டும் அடைத்தார்கள்.

எல்லோரும் கெஞ்சியும் கேட்காத ஊழியர்கள் யாரும் வெளியே வரமுடியாது வகையில் அடைத்து விட்டார்கள். அந்த வீட்டில் சிறிது நாட்கள் முன் தான் ஒரு முதியவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது.

இப்படி நகராட்சி இரக்கம் இன்றி நடந்தால் என்ன செய்வது.  திடீரென்று அந்த முதியவருக்கு உடம்பு சரியில்லை என்றால் எப்படி மருத்துவமனைக்கு செல்வார்கள்.

இந்த அரசாங்கம் மக்கள் நலனுக்காகவா அல்லது அவர்கள் உயிர் போக்கவா.

தமிழக அரசு உடனடியாக பல்லாவரம் நகராட்சி ஆணையாளர்
திரு. மதிவாணன் அவர்களை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்...

தந்திர - குண்டலினி யோகம்...



தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, தூய
உணர்வு நிலையானது முழு பிரபஞ்சத்தின் வெளிப்பாடு ஆகும்.

பிரபஞ்சம் வெளிப்படுத்த்தும் இந்த தூய உணர்வு நிலை, இரண்டு துருவங்கள் அல்லது அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஒன்று மற்றது இல்லாமல் இருக்க முடியும்.

ஒரு அம்சமானது சிவம் (Shiva) ஆகும், ஆண் நிலை, நிலையான, இயக்கமற்ற (Static) தன்மை கொண்டது மற்றும் வெளிக்காட்டப்படாத உணர்வு அடையாளமாக உள்ளது.

சிவம் முழுமையான ஆற்றல் கொண்டது. ஆனால் உருவாக்கவோ அல்லது மாற்றவோ முடியாதது.

மற்ற அம்சமானது சக்தி (Shakthi) ஆகும்,
பெண் நிலை, இயங்கக் கூடியது (Dynamic). சுறுசுறுப்பு, படைப்பு தன்மையுடையது.

பிரபஞ்சத்தின் மாபெரும் தாய். அவளிடம் இருந்து அனைத்து வடிவங்களும் பிறந்தன.

தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம் ஆவான்.

பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனிடமும் காணப்படும்.

பிரபஞ்சத்தில் பொருந்தும் ஏல்லாக் கொள்கைகளும் தனிப்பட்ட மனிதன் விஷயத்திலும் பொருந்தும்.

மனித உயிர்களின் மீது, சக்தியின்
பெண்மையை அம்சம் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் முதுகு தண்டு அடிப்பகுதியில் ஓய்வு பெறுவதாகக் கூறப்படுகிறது.

குண்டலினி-யோகாவின் தந்திர பயிற்சியின் நோக்கம், இந்த அண்ட ஆற்றலை மேலே எழுப்பச்செய்து முதுகெலும்பு அச்சில் உள்ள சக்கரங்கள் எனப்படும் உணர்வு திறன்கள் மையங்கள் வழியாக செலுத்துவதாகும்.

பிறகு சிவம் எனப்படும் தலையில் உள்ள கிரீடம் போன்ற தூய உணர்வு நிலை கொண்ட இடத்தில் சேர்ப்பதாகும்.

இவ்வாறாக சிவம், சக்தியை ஒன்றினைப்பதின் மூலம் நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள முடியும். உலகத்தின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறக்கூடிய நிலையை அடைய முடியும்.

நாடிகள் -  நுண் சரீரத்தில் உள்ள ஏழு சக்கரங்களை தொடர்ந்து, அவற்றிற்கு இடையே ஒரு பாதையானது அமைந்துள்ளது. அதன் பெயர்
நாடியாகும்.

சிவ சம்கிதம் என்ற தாந்திர சாஸ்திரம் 14 வகையான நாடிகள் உள்ளதாக
குறிப்பிடுகின்றன. அவற்றில்
இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை
என்பவை மிகவும் முக்கியமானதாக
கருதப்படுகின்றது.

பிங்கலை: இது நாசித் துவாரத்தின் வலது பக்க பாதை. சிகப்பு நிறமுடையது, ஆண் தன்மை கொண்டது. வெப்ப வழிப்பதை, சூரியனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. யமுனை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து வலது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

இடகலை: இது நாசித் துவாரத்தின் இடது பக்க பாதை. வெண்மை நிறமுடையது, பெண் தன்மை கொண்டது. குளிர்ச்சி வழிப்பதை, சந்திரனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. கங்கை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து இடது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.

சுழுமுனை: இது நடுவில் உள்ள பாதை,
சரஸ்வதி ஆற்றுடன் தொடர்பு கொண்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து தலையின் மேற்பக்கத்தில் கவிழ்ந்த நிலையில் உள்ள சகஸ்ரதளச் சக்கரத்தை நோக்கி ஓடுகிறது...