07/10/2020

சொந்த வாகனத்தை தானே எரித்து தீவிரவாதிகள் சதி என நாடகம் : ‘இந்து அதிரடிப்படை’ நிர்வாகி கைது...

 


தன்னை தீவிரவாதிகள் கொல்ல சதி செய்வதாக கூறி சொந்த வாகனத்தை எரித்து நாடகமாடிய இந்து அதிரடிப்படையின் பொதுச் செயலாளர் ராஜகுருவை போலிஸார் கைது செய்துள்ளனர்.

கோபி அருகே கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் ராஜகுரு. இவர் இந்து அதிரடிப்படையின் மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். சுய விளம்பரம் தேடி அரசியலில் பிரபலமடையும் இந்துத்வ கும்பலைச் சேர்ந்தவர் ராஜகுரு.

இவர் கடந்த 1ம் தேதி இரவு 4 பேர் தன்னை கொலை செய்வதற்காக கத்தியுடன் துரத்தி வந்ததாகவும், அவர்களிடம் இருந்து தப்பிக்க வாய்க்காலில் குதித்து கரையேறி தப்பி விட்டதாகவும், தன்னை கொலை செய்யமுடியாத ஆத்திரத்தில் அந்த கும்பல் தன்னுடைய இருசக்கர வாகனத்தை எரித்துவிட்டுச் சென்றதாகவும் கோபி போலிஸாரிடம் புகார் மனு அளித்தார்.

புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் இதுதொடர்பாக நடத்திய முதற்கட்ட விசாரணையில், ராஜகுருவை யாரும் துரத்திவரவில்லை என்பதையும், தன்னுடையே இருசக்கர வாகத்திற்கு தானே தீ வைத்து எரித்துவிட்டு நாடகமாடியதையும் போலிஸார் கண்டுபிடித்தனர்.

சொந்த வாகனத்தை தானே எரித்து தீவிரவாதிகள் சதி என நாடகம் : ‘இந்து அதிரடிப்படை’ நிர்வாகி கைது!

ராஜகுரு இதனையடுத்து ராஜகுருவை கைது செய்த போலிஸார், அவரிடம் விசாரணை நடத்தியதில் தான் விளம்பரத்திற்காக நாடகமாடியதாக ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இதுதொடர்பாக மாவட்ட எஸ்.பி சிவகுமார் கூறுகையில், “சம்பவம் நடைபெற்ற அன்று, ராஜகுரு தனது இருசக்கர வாகனத்தை எரித்துக் கொண்டிருந்தபோது, அவரே தனது செல்போனில் அதனைப் படம் பிடித்துள்ளார்.

அவரை மர்ம நபர்கள் துரத்தியதால் தப்பிக்க வாய்க்காலில் குதித்து தப்பியதாக போலிஸாரிடம் அவர் கூறினார். இதனையடுத்து விரைந்து சென்ற போலிஸார் ராஜகுருவை சந்தித்தபோது, அவரது ஆடைகள் நீரில் நினையாமல் இருந்ததைக் கவனித்துள்ளனர்.

மேலும் ஓடிச் சென்று வாய்க்காலில் குதித்து தப்பியதற்கான எந்த அடையாளமும் அவரிடமும் சம்பந்தப்பட்ட இடத்திலும் இல்லை. அதேபோல், ஓடும் வேகத்தில் காலணியை தாறுமாறாக சுழற்றிவிட்டுச் சென்றதாகக் கூறினார். ஆனால் அவரது காலணிகள் அங்கு ஒரே இடத்தில் தான் கழட்டி வைக்கப்பட்டதுபோல் இருந்தது.

இதனால் சந்தேகமடைந்து அவரது செல்போனை வாங்கி சோதனை செய்தபோது, இரு சக்கர வாகனம் எரிந்து கொண்டிருப்பதை 20 நிமிடங்களுக்கு மேல் படம் பிடித்து வீடியோவாக எடுத்து வைத்திருப்பது தெரியவந்தது” எனத் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் மீது கூகலூர் வி.ஏ.ஒ வெங்கடாசலத்திடம் இருந்து புகார் பெற்று ராஜகுரு மீது வழக்குப் பதிவு செய்த கோபி போலிஸார் அவரை கைது செய்தனர். தன்னை தீவிரவாதிகள் கொல்ல சதி என சொந்த வாகனத்தை எரித்து நாடகமாடிய ராஜகுருவின் செயலை அப்பகுதி மக்கள் கண்டித்துள்ளனர்...

பாஜகவினரின் அராஜகத்திற்கு மற்றொரு சான்று...

 


கொரோனா பெருந்தொற்றை கையாள்வதிலும் எடப்பாடி ஆட்சியில் அலட்சியம்...

 


ஹாத்ரஸ் கொடூரம்: இந்தியாவில் தாழ்த்தப்பட்ட பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுவது வேதனை அளிக்கிறது - ஐ.நா. கருத்து...

 


இந்தியாவில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான பாதுகாப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்துவதே தற்போதைய அவசர தேவையாக உள்ளது என ஐ.நா சபை கருத்து தெரிவித்துள்ளது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. குறிப்பாக பாஜக ஆளக்கூடிய உத்தர பிரதேச மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த பெண்கள், சிறுமிகள் தொடர்ந்து வல்லுறவுக்கு ஆளாகி வருவது தொடர்கதையாகி வருகிறது. 

அவ்வகையில், “2018ம் ஆண்டில் பெண்களுக்கு எதிராக 3,78,236 வழக்குகள் பதிவாகி இருந்தது. இதுவே, 2019ம் ஆண்டில் 4 லட்சமாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, தலித் பெண்களுக்கு எதிரான குற்றங்களை எடுத்துக் கொண்டால், 2018ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில், 2019-இல் 7.3 சதவிகிதமும், பழங்குடியினர் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 26 சதவிகிதம் வரையும் அதிகரித்துள்ளது.

தலித் பெண்களுக்கு எதிராக பதிவாகி இருக்கும் மொத்த வழக்குகளில் உத்தரப்பிரதேச மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 11,829 வழக்குகள் பதிவாகியுள்ளன என தேசிய குற்றப்பதிவு ஆவணக் காப்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ஹாத்ரஸில் பட்டியலின இளம்பெண்ணுக்கு நடந்த கொடூரம் தற்போது சர்வதேச அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக இந்தியாவுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்...

இசைக்கருவி புல்லாங்குழல்...

 


புல்லாங்குழல் மிகவும் இனிமையான இசைக்கருவி. இது இயற்கைக் கருவி என்றும் கூறலாம்.

இதில் சுரத்தான பேதங்களைக் காட்டுவதற்கு ஆறு துளைகள் உள்ளன. எல்லாத் துவாரங்களையும் திறந்தும் பிறகு அவை ஒவ்வொன்றையும் முறையே விரலினால் மூடியும் வாசித்து வரும் போது ஏழு- இசைகளும் (ஸ, ரி, க, ம, ப, த, நி) முறையே ஆரோசையாக ஒலிக்கின்றன.

இவை ஒரு தானத்தை (ஸ்தாயியை) மட்டும் குறிப்பனவல்ல, மெலிவு, சமன், வலிவு, ஆகிய மூன்று தானத்தின் நிலைகளையும் குறிக்கின்றன.

அதாவது மூன்று தானங்களிலுள்ள அந்தந்தச் சுர ஒலிகள் ஒவ்வொன்றையும் ஒவ்வொரு துவாரமும் கொடுக்கின்றது.

மாயவனாகிய கிருட்டிண பரமாத்மா இந்த புல்லாங்குழல் கருவியை இசைத்து சகல சீவன்களையும் பரவசமடையச் செய்தார் என்று நூல்கள் கூறினும், அதை வாசிப்பது எளிதன்று. அதில் சுருதி தவறுதல் இன்றி இனிமையான சுரம் பொருந்தி வருவது கடினமாகும். புல்லாங்குழலை இலக்கியமாக எடுத்துக்கொண்டு, சிலப்பதிகாரத்துள் பொதிந்துள்ள இசை முழுவதையும் நாம் நன்கு அறியலாம். புல்லாங்குழலில் ஒன்று அல்லது இரண்டு துவாரங்கள் அதிகமாகப் போட்டுக் கொள்வதுண்டு. அவை சுரங்கள் சுத்தமாய் ஒலிப்பதற்கு உதவுகின்றன என்பர்.

வீணை, பிடில் முதலிய கருவிகளில் அந்தந்த தானங்கள் வெவ்வேறு இடங்களில் பொருந்தி இருத்தல் இங்குக் குறிக்கத்தக்கது. ஒரே துவாரத்தில் ஒரே தான நிலை உள்ள இடத்தில் மூன்று தான நிலைகளும், ஒரே இடத்தில் ரி-யின் ஈரினங்களும் அதுபோல க-ஈரினங்களும், ம-ஈரினங்களும், த-ஈரினங்களும், நி-ஈரினங்களும் ஒலித்து வெளிப்படுவதே புல்லாங்குழலின் சிறப்பான இனிமைக்கு மூலகாரணம்.

மேலும் தானம் (ஸ்தாயி) என்பது வட்ட வடிவமானது என்பதைப் புல்லாங்குழல் விளக்கும். வீணை, பிடில் முதலிய கருவிகள் முதல் தானத்தின் பாதி அளவில் மூன்றாம் தானம் வருவது போலவும் காண்பிக்கும் போது, அந்த எல்லா தானங்களும் ஒரே அளவில் வட்ட வடிவமான உருவில் வருகின்றன என்பதைப் புல்லாங்குழல் எடுத்துக் கூறுகிறது...

உண்மையான தியானம்.. ஷென் கல்வி முறை...

 


ஒரு நாள் ஹோஃபுக்குவின் சீடர்களில் ஒருவனை வரவேற்ற ஜிஸோ, உன்னுடைய ஆசிரியர் என்னக் கற்றுக் கொடுத்தார்? என வினவினார்.

என்னுடைய ஆசிரியர் எந்த தீயவைகளைப் பார்க்காமல் கண்களை மூடிக் கொள்ளச் சொன்னார்.

தீயவைகளை கேட்காமல் காதை மூடிக் கொள்ளச் சொன்னார்.

தீய எண்ணங்களை மனதினில் உருவாக்கமல் பார்த்துக் கொள்ளச் சொன்னர் என்று சீடன் பதிலுரைத் தான்.

நான் உன்னுடைய கண்களை மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன் என்ற ஜிஸோ, ஆனால் நீ எதையும் பார்க்க மாட்டாய்.

உன்னுடைய காதுகளை கைகளால் மூடிக் கொள்ளச் சொல்ல மாட்டேன். ஆனால் நீ எதையும் கேட்க மாட்டாய்.

உன்னுடைய மனதின் எண்ண அலைகளை நிறுத்தச் சொல்ல மாட்டேன். ஆனால் நீ எந்த சிந்தனையையும் மனதில் ஏற்படுத்தாமல் இருப்பாய் என்றார்.

கண் காது  மூக்குகளை மூடுவதால் ஒருவரது எண்ணம் தூய்மையாகாது. எண்ணங்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதே உண்மையான தியானம் என்றார்...

மூட்டாள் தமிழர்களே விழித்துக் கொள்ளுங்கள்...

 


ட்விட்டர்ல மயிரு உதய்-னு ட்ரென்ட் பண்றானுவோண்ணே...

 


மூட்டு வலிக்கு நாட்டு மருந்து...

 


மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால் தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.

மூட்டழற்சி: இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

முடக்குவாதம்: இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

மூட்டழற்சியின் அறிகுறிகள்: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.

முடக்குவாதத்தின் அறிகுறிகள்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்: முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்...

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்...

திருட்டு திமுக தெலுங்கன் ஸ்டாலினுக்கு போட்டிக்கு வந்துட்டான்...