22/11/2020
தொழிலாளர்கள் பணி நேரத்தை 12 மணி நேரமாக மாற்ற பாஜக திட்டம்...
வேலையில்லா திண்டாட்டம் அதிகரித்த இந்த நிலையில் 2 சிப்ட் 6 மணி நேரம் 6 மணி நேரம் அனைவருக்கும் வேலை கிட்டும்...
அதைவிடுத்து தொழிலாளர் சட்டத்திற்கு எதிராக 12 மணிநேரம் கண்டிக்கத்தக்கது கடும் எதிர்ப்பை காட்ட வேண்டும்...
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவன் வயது என்ன?
ஒரு மனிதன் ஒரு நிமிடத்திற்கு 15 முறை சுவாசித்தால் அவனுக்கு விதித்த ஆண்டு 100.
{21,600/1440=15. ஒரு நாளுக்கு 1440 நிமிடங்களாகும் (60x24=1440)}
மேற்கண்டவாறு கணக்கிட்டால் ஒரு மனிதன்...
100 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சுகள் விட்டுள்ளான்,
93 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 16 மூச்சுகள் விட்டுள்ளான்,
87 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 17 மூச்சுகள் விட்டுள்ளான்,
80 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 18 மூச்சுகள் விட்டுள்ளான்,
73 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 19 மூச்சுகள் விட்டுள்ளான்,
66 ஆண்டுகள் வாழ்ந்தால், அவன் ஒரு நிமிடத்திற்கு 20 மூச்சுகள் விட்டுள்ளான்...
இவ்வாறு நிமிடத்திற்கு ஒவ்வொரு மூச்சு கூடும்போதும் நாம் நம் ஆயுளில் 7 வருடங்களை இழக்கிறோம் என்பதனை கவனத்தில் கொள்ள வேண்டும்.
2 முறை சுவாசித்தால் அவன் வயது 750 ஆண்டு..
1 முறை சுவாசித்தால் அவன் வயது 1500 ஆண்டு..
0 முறை சுவாசித்தால் முடிவேயில்லை. (இது சித்தர்களால் மட்டுமே முடியும்)...
ஆங்கிலேயன் சாதித்தது நம்மால் முடியாதா?
தமிழர்நாடு வல்லரசாகும், பேரரசாகும் என்று நாம் சொன்னால் சிரிக்கிறார்கள்.
ஆனால் தமிழகத்தை விட சிறிய நாட்டிலிருந்து வந்த ஆங்கிலேயர்தான் உலகிலேயே பெரிய பேரரசை உருவாக்கி ஆண்டனர் என்ற உண்மை தெரியுமா?
வரைபடத்தில் சிவப்பாக இருப்பது 1922ல் ஆங்கிலேயர் ஆண்ட பகுதி.
வெள்ளைப் பகுதி அவர்கள் படையெடுக்காத நாடுகள்.
பச்சை நிறம் அவர்கள் தாய்நிலம்.
உலகில் கால் பகுதி அவர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது.
உலக மக்கட்தொகையில் மூன்றில் ஒரு பங்கு ஆங்கில ஆட்சியின் கீழ் இருந்தனர்.
உலகில் ஏறத்தாழ 200 நாடுகள் உள்ளன.
இதில் ஆங்கிலேயர் படையெடுக்காத நாடு வெறும் 22 மட்டுமே.
அவை,
Andorra, Belarus, Bolivia, Burundi, Central African Republic, Chad, Congo, Republic of Guatemala, Ivory Coast, Kyrgyzstan, Liechtenstein, Luxembourg, Mali, Marshall Islands, Monaco, Mongolia, Paraguay, Sao Tome and Principe, Sweden, Tajikistan, Uzbekistan, Vatican City.
அதாவது உலகத்தில் 90% நிலப்பரப்பு அவர்களால் படையெடுக்கப்பட்டு கைப்பற்ற முயற்சி நடந்துள்ளது.
33 கோடி பேர் இருந்த பிரிட்டிஷ் இந்தியாவை (இன்றைய இந்தியாவை போல் ஒன்றரை மடங்கு) வெறும் ஒரு லட்சம் வெள்ளையர்கள் ஆண்டனர்.
ஆக தாய்நிலமோ மக்கட்தொகையோ முக்கியமில்லை.
பிற நாடுகளை அடக்கி பேரரசாக வரவேண்டிய எண்ணம் கூட நமக்கில்லை.
நம் தாய்நிலத்தை நாம் முப்படைகளுடன் எவரும் அடிபணியாமல் ஆள நினைக்கிறோம்.
இது முடியாதா?
ஆங்கிலேயர் ஒருகாலத்தில் ரோமானியப் பேரரசிடம் அடிமையாக இருந்தது போல தற்போது நாம் இருக்கிறோம்.
நம்மால் ஏன் முடியாது?









