ரசாயன உரம், தொழிற்சாலை கழிவுகளால் நஞ்சாக மாறிய நிலத்தை சரி செய்ய, அந்த நிலத்தில் வெட்டிவேர் பயிரிட்டால் போதும். நிலத்தில் படிந்துள்ள காட்மியம், பாதரசம் போன்ற கடின உலோக பாதிப்புகளை கூட வெட்டி வேர் உறிஞ்சி எடுத்து மண்ணை வளமாக்கி விடும்...
19/02/2021
அண்ணாச்சி பழத்தின் அற்புத குணங்கள்...
உடலில் போதுமான அளவு இரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாச்சி பழம் ஒரு சிறந்த சத்து பொருளாக அமைகிறது என்றால் அது மிகையாகாது.
முதலில் நன்கு பழுத்த அன்னாச்சி பழத்தை சுத்தமான தண்ணீரில் கழுவிய பிறகு அதன் மேல்புறம் உள்ள தடிமனான தோலினை செதுக்கி எடுத்துவிட்டு சின்ன சின்ன துண்டுகளாக வெட்டி தூசி படாமல் அதனை வெயிலில் நன்கு காய வைத்து உலார்ந்த நிலையில் உள்ள அன்னாச்சி பழ வற்றலை பாத்திரத்தில் வைத்து மூடிவைத்து கொள்ள வேண்டும்.
தினம்தோறும் உறங்குவதற்கு ஒரு மணி நேரம் முன்பாக ஒரு டம்ளர் பாலில் பத்து துண்டு அன்னாசி வற்றலை போட்டு ஊற வைக்க வேண்டும். பின்பு ஊறிய வற்றலை எடுத்து முதலில் சாப்பிட்டு விட்டு அதன்பிறகு பாலையும் குடித்து விடவேண்டும். இவ்வாறாக இரண்டு மாத காலத்திற்கு தினம்தோறும் சாப்பிட்டு வந்தால் உடலில் நல்ல முறையில் இரத்தம் உற்பத்தியாகும். மேலும் உடல் சக்தி பெறும்.
பித்த மயக்கம் சம்பந்தபட்ட அனைத்தும் முற்றிலுமாக நீங்கும் பொதுவாகவே அன்னாச்சிபழம் சாப்பிட்டு வருபவர்களுக்கு நாவறட்சி நீங்கி தாகம் தணியும் சுறுசுறுப்பு உண்டாகும்.
குறிப்பாக மனித உடலில் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க செய்யக்கூடிய தன்மை அனைத்தும் அன்னாச்சி பழத்திற்கு உள்ளது...
உளுந்தங்கஞ்சி...
விளையாட்டு வீரர்கள். ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.
மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.
பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.
உளுந்தங்கஞ்சி தேவையான பொருட்கள்...
1.உளுந்தம்பருப்பு ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து நல்லது).
2.பச்சரிசி அரை டம்ளர்.
3.வெந்தயம் ஒரு தேக்கரண்டி.
4.பூண்டு 20 பல்லு.
5.வெல்லம் அல்லது கருப்பட்டி இனிப்புக்கு ஏற்றது போல்.
6.தேங்காய் ஒரு மூடி.
செய்முறை...
உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.
(குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்து தான் வைக்க வேண்டும். அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம். மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்).
இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.
(சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்து விடலாம்,. செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.)...









