11/03/2021

நண்பர் ஒருவர் வீட்டுக்கு வெளியே நாய் சத்தம் கேட்டு வெளியே வந்தார்...

 


தனது வீட்டு கேட் முன் நின்று கொண்டு இருந்த உயர்சாதி நாயை அப்போது தான் கவனித்தார் அவர்.

அது நீண்ட நேரமாக நின்று கொண்டு இருப்பதாக தோன்றியது. அவரையே கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டு இருந்தது சற்று வியப்பை தந்தது.

மேலும் ஐந்து நிமிடம் கழிந்தது. மெதுவாக விசிலடித்து கூப்பிட்டார். 

உடனே அது நாலுகால் பாய்ச்சலில் உள்ளே ஓடி வந்து அவரருகே நின்றது.

வாஞ்சையுடன் அதன் கழுத்தை தடவிக்கொடுத்தார். பதிலுக்கு அதுவும் அவரது கால்களை நக்கியது. 

பின்னர் மாடிப்படிக்கு கீழே சென்று படுத்து நிமிடத்தில் சுகமாக உறங்கிப் போய் விட்டது.

இவருக்கோ குழப்பம். எதோ செல்வந்தருடைய நாய் என்பது அதன் தோற்றம், கட்டியிருந்த பெல்ட், தாட்டியான உடம்பு போன்றவற்றில் இருந்து புரிந்தது.

இங்கே எதற்காக வந்தது.?

எழுந்து குளித்து உடைமாற்றி காலை உணவு முடித்து அலுவலகம் புறப்பட்டு செல்லும் வரை அது தூங்கிக்கொண்டு இருந்தது.

வேலையாளிடம் சொல்லிவிட்டு புறப்பட்டு சென்றார்.

மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை. விசாரிக்கும் போது மதியமே சென்று விட்டதாக சொன்னார் பணியாள்.

மறுநாள் காலை. மறுபடியும் அதே நேரம். அதே நாய். 

அதே போல் உள்ளே வந்து இவரிடம் சற்று குலாவிவிட்டு அதே இடத்தில் தூங்கி விட்டது.

மாலை வந்து பார்க்கும் போது நாய் அங்கில்லை.

இந்த சம்பவம் பல நாட்கள் தொடர்ந்தது. 

வேலையாளை விட்டு பின் தொடர்ந்தும் நாய் எங்கிருந்து வந்தது என்று கண்டுபிடிக்க முடியவில்.

ஒருநாள் ஒரு துண்டு சீட்டில் விபரம் எழுதி கழுத்தில் கட்டி அனுப்பினார். 

மறுநாள் அந்த நாய் வரும்போது கழுத்தில் வேறு ஒரு துண்டு சீட்டு இருந்தது. 

படித்து விட்டு உருண்டு புரண்டு சிரிப்பதை பார்த்து வேலையாளுக்கு ஒன்றும் புரியவில்லை.

அப்படி என்ன தான் எழுதியிருந்தது?

அன்பு மிக்கவருக்கு வணக்கம். இந்த நாய் என்னுடையது தான். இது என்னுடைய மனைவியின் காட்டு கூச்சலால் விடிய விடிய தூங்காமல் கஷ்டப்பட்டு கொண்டிருந்தது. சில நாட்களாக காலை வேளைகளில் காணாமல் போய்க் கொண்டு இருந்தது. 

தங்கள் கடிதம் மூலம் தங்கள் வீட்டில் அது நிம்மதியாக உறங்கி எழுந்து வருவது அறிந்து கொண்டேன். தங்களது அன்பிற்கு மிக்க நன்றி..

பி.கு : ஒரு விண்ணப்பம். நாளை முதல் நாயுடன் நானும் வரலாமா? நானும் நன்றாக தூங்கி பல ஆண்டுகள் ஆகின்றன..

இந்த பெண்களால ஆண்கள் படும்பாடு இருக்கே வெளியே சொல்ல முடியல... 

😁😁😁

ஈரிதழ் சிட்டு...

 


வன்னியர்களுக்கான 10.5% இட ஒதுக்கீடு எதிராக திமுக தெலுங்கர்கள் போட்ட வழக்கு தள்ளுபடி...



எல்லா டிவி கார பயலுகளும் வழக்கு தள்ளுபடி ஆயிடுச்சி னு சொல்றானுவளே தவிர...

அந்த வழக்கு போட்டது யாரு னு சொல்ல மாட்றானுவோ...

திருட்டு பயலுவோ 😡

இன உணர்வு என்பது நவீன சமூகத்தின் அதாவது 19-ஆம் நூற்றாண்டின் கண்டு பிடிப்பு என்பதாவது தெரியுமா?

நாம் 21 இல் இருந்து கொண்டும்.. இன்னும் அந்ந உணர்விழந்து நிற்கிறோமே..

நமது தமிழினத்தின் வரலாற்றுச் சான்றை அறிவியல் கொண்டும் அகல்வாராய்ச்சி கொண்டும் தேடல் செய்யலாம்.. திராவிடத்துக்குள் ஏன் பதுங்கி இருக்க வேண்டும்..

இன உணர்வுருவாக்கத்தின் பின்னாவது திராவிட மாயைவிட்டு ஏன் தமிழகத் தமிழர்கள் வெளிவரவில்லை.

தமிழகத்தில் உள்ள தமிழர்களில் சில பகுதிகளில் இன்று வேற்று மாநில பூர்வீகத் தமிழ் மொழி பேசுவோரே தமிழர்களாக தங்களை இனங்காட்டி வாழ்கின்றனர். அதற்கு காரணமும்.. இந்தத் திராவிடம் தான்..

தமிழர்கள் தங்கள் தமிழ் தேசிய அடையாளங்களை சிறுகச் சிறுக அழித்து வருவதையே அல்லது மறந்து போவதையே இது காட்டுகிறது...

யோக்கியன் வரான் சொம்பை தூக்கி உள்ள வை...

 


தேர்தலுக்கு பணம் கொடுத்தால் அது லஞ்சம்...

அதுவே தேர்தல் வாக்குறுதி என கூறி வெற்றி பெற்று சட்ட திட்ட ரீதியாக பணம் கொடுத்தால் அது சலுகை ..

தேன் இஞ்சி...

 


பெரிய இஞ்சி ஒன்றை எடுத்து, அதைத் தோல் சீவி, மெல்லிய வட்டமான துண்டுகளாக நறுக்கிப் போட்டு, மேல் ஈரம் காய வெயிலில் வைத்து எடுத்து அவைகளை ஒரு சீசாவில் போட்டு, நல்ல தேனை அதன் மேல்மட்டத்திற்கு மேல் நிற்கும்படி விட்டு, நன்றாகக் குலுக்கி வெயிலில் வைத்து எடுத்து வைக்க வேண்டும்..

இதில் 2-3 துண்டுகள் எடுத்துக் காலை, மாலை சாப்பிட்டால், பித்தம், வாய்வு சம்பந்தமான வியாதிகள் குணப் படுத்தி ஜீரண சக்தியை கொடுக்கும்...

திமுக மாநாட்டுக்கு வந்த திமுக இளைஞரணி உறுப்பினர் தான் ஆர்.டி.ஓ எனக்கூறி வாகன ஓட்டிகளிடம் பணம் பறித்தால் காவல் துறையினர் அவரை கைது செய்துள்ளனர்...

 


என்ன வாழ்க்கை டா இது...

 


நேரா போய் ரைட் எடுத்தா,  ஒரு தோல்வி வரும்...

அங்கருந்து லெப்ட் போனா பெருசா ஒரு துரோகம் இருக்கும்..

கொஞ்ச தூரம் போயி ஒரு யு டேன் அடுச்சா, அங்க கடன் என்கிற ஒரு பெரிய பள்ளம் இருக்கும்..

அந்த பள்ளத்துல விழுந்து மூஞ்சி மொகர எல்லாம் பேந்து எந்திருச்சு நேரா போனா, ஏமாற்றங்கர ஒரு சிக்னல் இருக்கும்..

அதையும் தாண்டி போனா, போட்டி, பொறாமைங்கர ஸ்பீடு பிரேக்கர் வரும்..

அதையும் தாண்டி டாப் கியர் போட்டு போயிகிட்டே இருந்தால் அதுக்கடுத்த வீடு தான் நீங்க கேட்ட வெற்றியோட வீடு வரும்..

வெற்றிய தொட்ட அடுத்த கணமே திரும்பி பார்த்தால் எமன் எருமையில நம்மள விட வேகமா வருவான்..

இது தானுங்க வாழ்க்கை...

😒😔😁

தேமுதிக தெலுங்கர்கள் கலாட்டா...