31/03/2021
பிராணாயாமம்...
நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய் எதிர்ப்பு தன்மையின்றியும் இருக்கிறது..
மேலும் நாம் குடிக்கும் குடிநீர். சுவாசிக்கும் காற்று. மண் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் கெட்டுள்ளது..
இவற்றின் மூலம் நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கினால் இரத்தம் கெடுகின்றன, இரத்தம் அசுத்தம் ஆவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன..
உலகம் என்பது பரந்து விரிந்துள்ளது, நாம் உலகத்தை சுத்தம் செய்ய முடியாது, நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கை சுத்தம் செய்ய முடியும், உடல் அழுக்கானால் எப்படி சோப்பு போட்டு குளிக்கின்றோமோ அதைப் போல் நம் உடலின் உள்ளே இருக்கும் உயிர்காற்றை கொண்டு பிராணாயாமம் என்னும் பயிற்சியின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றோம்..
மேலும் பிராணாயாமப் பயிற்சியின் மூலம் இரத்தத்தின் ஓட்டமும் பிராணனுடைய இயக்கமும் உடல் முழுவதும் சரிசமமாக இயக்கப்படுவதால் அதிகப்படியான சக்தியையும். ஆற்றலையும் பெறுகின்றனர்..
இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் கூடிய துடிப்பான உடல் இயக்கமும் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் ஏற்படுகிறது..
நோய் நொடிகள் இன்றி மாத்திரை மருந்துகள் இன்றி வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்விற்கு பிராணாயாமப் பயிற்சி வழி வகுக்கிறது...
தாய்ப்பால் சுரக்க மூலிகை ரசம்...
பிறந்த குழந்தைகளின் முதல் உணவு தாய்ப்பால். தாய்பாலில் இருந்து தான் குழந்தைகளுக்கான அனைத்து விதமான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கிறது. இதனால்தான் 6 மாதங்கள் வரை குழந்தைகளுக்கு தாய்ப்பால் தரவேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். உடல்நிலை காரணமாகவும், சத்தான உணவுகளை உட்கொள்ளாததாலும் சில பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பதில் பாதிப்பு ஏற்படும்.
தாய்பால் சுரக்காத பெண்கள் வீட்டிலேயே எளிதான மருத்துவ முறைகளை கையாள்வதன் மூலம் குழந்தைகளுக்கு தேவையான அளவு தாய்பால் சுரக்கும்.
மூலிகை கசாயம்...
அதிமதுரம் பொடியை சிறிதளவு சர்க்கரை கலந்து 2 முறை பாலுடன் குடித்து வந்தால் தாய்பால் பெருகும். அருகம்புல் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் தாய்ப்பால் பெருகும்.
முருங்கை கீரை...
முருங்கை கீரையை லேசாக தண்ணீர் விட்டு வேகவைத்து அதை தாளித்து சாப்பிட்டால் தாய்பால் அதிகரிக்கும். முருங்கை இலையும் பாசிபருப்பும் சேர்த்து சாப்பிட்டால் தாய் பால் அதிகம் சுரக்கும்.
அதே போல் ஆலம் விழுதின் துளிர், விதையை அரைத்து 5கி காலையில் மட்டும் பாலில் கொடுத்துவர தாய்பால் பெருகும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வெள்ளை பூண்டை நல்லெண்ணெயில் வதக்கி அதனுடன் கருப்பட்டியுடன் கலந்து சாப்பிட கொடுத்தால் தாய்பால் அதிகம் சுரக்கும். இது உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
உடலில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றவும் வெள்ளை பூண்டு உதவுகிறது. கருப்பட்டியில் உள்ள இரும்புச்சத்து தாய்ப்பால் வழியாக குழந்தைகளுக்கு போய் சேர்கிறது. மேலும் பசும் பாலில் பூண்டு சேர்த்து அரைத்து காய்ச்சி குடித்தால் பால் அதிகம் சுரக்கும்.
தாய்ப்பால் சுரக்க கூடியவரை மீன்களை உணவில் சேர்த்தால் அதிகளவு பால் சுரக்கும். அத்துடன் ஒடியல்மாவைச் சேர்த்தாலும் அதிகளவு பால் சுரக்கும்.
அத்தோடு குழந்தையை பெற்ற பெண்களுக்கு மது (Alcohol), சாராய வகை (alcohol) குடிக்கக் கொடுக்கக் கூடாது ஏனென்றால் இதைக் குடிப்பவர்களுக்கு வழமையாகச் சுரக்கும் பாலின் அளவையே குறைத்து விடுகின்றன.
எனவே இவற்றைக் கருத்திற்கொண்டு குழந்தை பெற்ற தாய்மாரை பராமரிப்பவர்களும், குழந்தையைப் பெற்ற தாய்மார்களும் கவனத்திற் கொண்டு நடந்து கொண்டால் குழந்தைகளின் எதிர்காலம் தாய்ப்பாலிற்காக எங்க வேண்டியிருக்காது...
இதயத் துடிப்பை சீராக்கும் கிவி பழம்...
இதயத்துடிப்பின் சீரற்ற நிலையைத் தடுக்க கிவி பழம் பெரிதும் துணைபுரிகின்றது. மட்டுமின்றி இதயத்தின் துடிப்பை சீராக கட்டுப்படுத்துகின்றது..
உடலில் பொட்டாசியத்தின் அளவானது குறைந்தால், இதயத் துடிப்பில் சீரற்ற நிலை ஏற்படக்கூடும். கிவி கனியில் அதிக அளவு பொட்டாசியச் சத்து இருப்பதால், இந்த சத்தானது இதயத் துடிப்பை சீரான நிலையில் வைத்துக் கொள்ள உதவுகிறது.
மாரடைப்பிற்கு முன்னர் பல்வேறு வகையான நோயியல் நிகழ்வுகள் இதய தமணிகளில் நிகழ்வதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இவற்றில் மிகவும் முக்கியமானது இரத்தக் குழாய்களிலுள்ள இரத்தத்திலுள்ள சிவப்பணுக்கள், தட்டகங்கள் இவையாவும் ஒன்றாக சேர்ந்து, கட்டியாக அடைப்பாக மாறி, இதய தமணிகளில் ரத்தம் செல்ல இயலாமல் முழுமையாக அடைத்து மாரடைப்பிற்கு வழிவகுக்கின்றது.
இவ்வாறு இதய தமணிகளில் இரத்தக் கட்டி உருவாகாமல் தடுக்கும் ஆற்றல் கிவி பழத்திற்கு இயற்கையாக உள்ளது.
வளரும் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு ஏற்ற கனியாகும் இந்த கிவி. கிவி பழத்தில் FOLATE என்ற சத்தும், ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலமும் மற்ற கனிகளை விட மிகவும் அதிகமான அளவில் உள்ளது.
இத்தகைய சத்துக்கள் குழந்தைகளின் மூளை வளர்ச்சிக்கு உறுதுணையாக உள்ள சத்துக்களில் சிறந்ததாக உணவியல் வல்லுநர்கள் கூறுகின்றார்கள். எனவே, வளரும் குழந்தைகளுக்கு இக்கனியை அளிப்பது மூளையின் வளர்ச்சிக்கு உதவும்.
கிவி கனியில் அளவிற்கு அதிகமாக நார்ப்பகுதிகள் இயற்கையான வடிவத்தில் இருப்பதால், கிவி கனிகளை உட்கொள்வதன் மூலம் இயற்கையான மலச்சிக்கலை மிகவும் எளிதாக அகற்ற முடியும்.
விட்டமின் ஈ-யானது பெண்களின் சருமத்தை இளமைப் பொலிவுடன் வைத்திருக்க துணை புரிவதோடு அல்லாமல், பெண்கள் மிகவும் எளிதாகக் கருவுறும் தன்மையை உருவாக்குகின்றது...
நீதிபதி Vs குற்றவாளி...
நீதிபதி : கள்ள நோட்டு அடிக்கறதே குற்றம்.. இதுல என்ன திமிர் இருந்தா 2000 ரூபாய் நோட்டை தலைகீழா அடிப்பே...
குற்றவாளி : என்ன செய்யறது எஜமான்.. தண்ணியடிச்சிட்டு நோட்டு அடிச்சதால தவறுதலா "0002" ன்னு அடிச்சிட்டோம்...
என்னைய ஸ்டாலினா நினைச்சு மன்னிச்சு விட்டுங்க.. அடுத்தமுறை சரியா அடிக்குறேன் 😁








