12/04/2021
முருகு என்னும் நுட்பத்தை குறிக்ககூடியது...
மனித நினைவுகளை (சிந்தனைகளை) கட்டுபடுத்தகூடியதும் நினைவுகளாகவே மாறுதலும் இதுவே இந்த நுட்பத்தின் மறைப்பொருள்.
சிந்தனை அல்லது நினைவுகளின் பிறப்பிடமான 6 புலன்களையும் கட்டுபடுத்துவது.
உங்கள் சிந்தனை இப்போது எதை நோக்கியுள்ளது?
நீங்கள் எதற்காக எதை நோக்கி பயணித்து கொண்டுள்ளீர்கள்?
உங்கள் வாழ்நாள் முழுவதையும் எதற்காக செலவிட தயாராக இருக்கிறீர்கள்?
பணமா?அறிவியலா? வளர்ச்சியா?மதமா?அரசியலா?
இவற்றையெல்லாம் உங்களுக்கு அறிமுகபடுத்தியது யார் ?
இயற்க்கையா?
நீங்கள் எதற்காக பிறந்தீர்கள் எதற்காக இருக்கீறீர்கள் என்பதை நினைக்க வைக்காமல் உங்கள் சிந்தனையை உங்கள் இயக்கத்தை கடிவாளம் கட்டிய குதிரையாய் ஓடவைப்பதே இந்த முருகு வின் நுட்பம்.
அது எப்படி எதையுமே சிந்திகாமல் நம்புகிறோம் ? நன்கு சிந்தித்தே செயல்படுகிறோம் என்கி்ற்களா ?
உங்கள் சிந்தனையை நினைவை கட்டுபடுத்தும் யாவும் எதிர்ச்சியாக உருவாக்கப்பட்டது அல்ல அனைத்தும் கணித முறை இப்படியும் சொல்லலாம் கணித வலை.
பணம், அறிவியல், கட்டிடகலை, அரசியல், மதம், etc..
இப்படி எந்த துறையில் கவனம் செலுத்திகீற்களோ அனைத்துமே கணிதமுறை (கணிதவலை) தான்.
உங்கள் வாழ்நாள் முழுவதையும் கரைக்கும் கணிதமுறை.
அந்த கணிதமுறையின் (கணிதவலையின்) உச்சம் 9 (ஒன்பது).....
சிந்தனை தூண்டல் தொடரும்.....
நீங்க யாரையாவது காதலிக்கலாம் என்று சொன்ன நண்பன்...
காலிக்காக வழிப்பறி திருடனாக மாறிய காதலன்...
காதலி தன் பிறந்தநாளுக்கு ஐபோன் மட்டும் தான் பரிசாக வேண்டும் என்று அடம்பிடித்ததால்...
வழிப்பறி செய்த காதலன்...
சிசிடிவியில் சிக்கி தற்போது சிறையில்...
இந்த எழவுக்கு தான் நான் எல்லாம் சிங்களாவே இருக்கேன்... ஓடிடு 😡😡😡
இத்தாலிக்கு ஏற்பட்ட வரலாற்று அவமானமும், அதற்கு பழி வாங்கும் படலமும்...
1896 காலனிய விஸ்தரிப்புக்காக இத்தாலி தம் அண்டை நாடுகள் மீது படையெடுத்தது அன்றைய காலகட்டத்தில் நவீன ஆயுதங்களை வைத்து தம் அண்டை நாடுகளை அடக்கியது.
ஏறக்குறைய அனைவருமே அடங்கியும் சென்றனர்.
இந்நிலையில் ஆப்பிரிக்க கண்டத்தில் எந்த ஒரு ஐரோப்பிய வல்லரசாலும் காலனியாக்கப்படாத ஒரே நாடு எத்தியோப்பியா தான்.
இந்த பேரை உடைக்க வேண்டும் என இத்தாலி நினைத்தது.
மட்டுமின்றி எத்தியோப்பிய மக்கள் நாகரிகமற்றவர்கள்.
[பொதுவாக அன்றைய காலகட்டத்தில் கறுப்பர்கள் வாழும் நாட்டை அப்படிதான் நினைத்தது உலகம்].
அவர்களுக்கு இந்த நவீன பீரங்கிகள் ஆயுதங்கள் ஏதும் பயன்படுத்த தெரியாது எத்தியோப்பாவை இலகுவாகவே கைப்பற்றி விடலாம் என்று இத்தாலி நினைத்து இருந்தது..
இந்நிலையில் தான் 1896 இல் மார்ச் 1 தேதி இத்தாலி முதல் அறிவிப்பை பிரகணப்படுத்தியது.
எத்தியோப்பாவை நாங்கள் தாக்க போகிறோம் என்று..
எத்தியோப்பியர்கள் பயந்து நடுங்குவார்கள் என்ற கணிப்பு இத்தாலியர்களுக்கு பொய்யானது..
காரணம்.. எத்தியோப்பியா தொடுத்த பதில் அறிவிப்பு..
ஆம் வில், அம்பு, குதிரை படையுடன், நாங்கள் பதில் தாக்குதல் கொடுக்க தயாராகவே உள்ளோம் என்று அறிவித்தார் தெகுவாவி மேனாலிக்..
இவர் தான் அன்றைய எத்தியோப்பியாவில் அரசர்..
ஆரம்பித்தது Battle of Adwa என்று சொல்லக்கூடிய வரலாற்று சிறப்புமிக்க போர்.
இந்த போரில் எத்தியோப்பியாவை சார்ந்த படையினர் 3867 பேர் இத்தாலி படையினரால் கொல்லப்பட்டனர்.
8000 மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இப்போருக்கு பிறகு உலக நாடுகள் இத்தாலியர்களை மிகவும் கேவலமாக பார்க்க ஆரம்பித்தனர்.
காரணம்.. இப்போரில் வென்றது எத்தியோப்பியா தான்..
ஆம் 3867 பேர் எத்தியோப்பியார் இப்போரில் இறந்தார்கள் என்று சொன்னேன் அல்லவா..
அதே போன்று எத்தியோப்பியர்கள் இத்தாலியர்களையும் கொன்றார்கள்..
இவர்கள் கொன்ற எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ?
6394 பேர்...
எத்தியோப்பாவுடன் தோல்வி பெற்ற இத்தாலியை ஏன் உலக நாடுகள் கேவலமாக பார்த்தது என்றால்..
எத்தியோப்பிய படையினர் இத்தாலியர்களை எதிர்கொன்றது துப்பாக்கி பீரங்கி போன்ற நவீன ஆயுதங்களை..
இவர்கள் வசம் வெறும் அம்பு ,வில் ,வால் போன்றவைகள் தான்..
இதை வைத்தே இத்தாலியை ஓட வைத்தது ஐரோப்பாவில் பெரும் அதிர்வலைகள் உண்டானது..
இதற்கு பிறகு தான் எத்தியோப்பாவை உலக நாடுகள் அங்கீகரித்தது..
எத்தியோப்பியா நாகரீகமடையாத காட்டுவாசி தலைவனால் ஆளப்படுகிறது என்ற மாயையை உடைத்து..
போருக்கு பிறகு எத்தியோப்பிய அரசர் மேனிலிக் ஐரோப்பிய அரசர்களுக்கு நிகராக மதிக்கப்பட்டார்..
இத்தாலியும் தோல்விக்கு பிறகு எத்தியோப்பியாவுடன் சமாதான ஒப்பந்தம் போட்டு கொண்டது ...
கடற்கரை ஓரம் உள்ள சில பகுதிகளை மட்டுமே இப்போரில் கைப்பற்றிக் கொண்டது இத்தாலி..
பின்னாளில் இத்தாலியிடமிருந்து விலகி தனி நாடானது...
அந்த பகுதிதான் இன்றைய இரண்டு திருமணம் கட்டாயம் என்ற அறிவித்துள்ள எரித்திரியா நாடு....
இருப்பினும் ஐரோப்பிய வரலாற்றில் அவமானப்பட்ட இத்தாலி பழிவாங்க காத்திருந்தது எத்தியோப்பாவை..
இதற்கு இத்தாலி எடுத்த நடவடிக்க்கை மிகவுமே கொடூரமானது..
ஆம் முசோலினி காலத்தில் எத்தியோப்பியா ?
பேசுவோம்...
உப்பைக் குறையுங்கள் என்று எல்லா டாக்டர்களும் சொல்கிறார்கள்...
அதனால் வாழ்க்கையில் நாம் குறைக்க வேண்டி ய உப்புகள் சில...
கணவன்கள் - படபடப்பு
மனைவிகள் - நச்சரிப்பு
டீன் ஏஜ்க்கள் - பரபரப்பு
மாணவர்கள் - ஏய்ப்பு
மாமியார்கள் - சிடுசிடுப்பு
மருமகள்கள் - கடுகடுப்பு
வக்கீல்கள் - ஒத்திவைப்பு
டாக்டர்கள் - புறக்கணிப்பு
அரசியல்வாதிகள் - ஆர்ப்பரிப்பு
வயதானவர்கள் - தொணதொணப்பு
ஆனால், யாரும் குறைக்கத் தேவையில்லாத ஒரே உப்பு...
சிரிப்பு...
இது உடம்புக்கு மிகச்சிறப்பு...









