15/04/2021
சாதியை எதிர்கிறேன் ஒழிக்கிறேன் சொல்லிட்டு திரிகின்றவனை நன்றாக பாருங்கள்...
ஒன்று திராவிடனாக இருப்பான் அல்லது திராவிடத்தின் கைகூலியாக தான் இருப்பான்..
ஆனால் தமிழகத்தில் நடக்கும் 80% சாதீ சண்டைகள் திராவிடத்தால் உருவாக்கப்படுகிறது என்பதை நாம் உணராதவரை...
தமிழனை ஏமாற்றி பிழைக்கும் கூட்டம் பிழைத்துக் கொண்டுத் தான் இருக்கும்...
பொதுவாக மனிதனுக்கு ஒரு பிறவி தான், மறுபிறவி என்பது கிடையாது என்று சொல்வார்கள்...
ஆனால் அது இன்றளவும் பொய்யா அல்லது உண்மையா என்பது யாருக்கும் தெரியாமல் உள்ளது.
ஒரு மனிதன் பிறக்கும் போதே அவனுடைய இறப்பு எப்போது எப்படி நிகழும் என்பதை கடவுளால் குறிக்கப்பட்டு விடுகிறது.
ஆனால் கடவுளைத் தவிர அந்த மரணம் எப்போது எப்படி நடக்கும் என்பதை மனிதர்கள் மற்றும் பிற உயிரினங்களால் யூகிக்க முடியாத ஒன்றாகும்.
ஒருவருக்கு மரணம் ஏற்படுவதற்கு முன் என்னென்ன அறிகுறிகள் ஏற்படும் என்பதை சிவப் புராணத்தில் கூறப்பட்டுள்ளது. அதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
சிவபுராணத்தில் கூறப்படும் மனிதர்களின் மரணத்திற்கு முன்பு தோன்றும் அறிகுறிகள்...
மனிதர்களின் வாய், காது மற்றும் கண் போன்ற உடல் உறுப்புகள் செயலிழப்பு அல்லது செயலிழந்து வருகிறது எனில், ஆறு மாதங்களில் இறப்பு நேரப் போகிறது என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது..
ஒருவரது உடலில் திடீரென உடல் வெள்ளை அல்லது மஞ்சள் நிறமாக மாற்றம் ஏற்பட்டு, உடலில் ஆங்காங்கே சிவப்பு புள்ளிகள் தென்பட்டால், அவர்கள் ஆறு மாதத்தில் உயிரிழக்க நேரிடலாம்..
ஒருவருக்கு தொண்டை மற்றும் நாக்கு தொடர்ந்து விடாமல் வறட்சி நிலையை அடைந்துக் கொண்டிருந்தால், அவர்கள் மிக விரைவில் இறந்துவிடுவார் என்று அர்த்தம்..
ஒருவரின் இடது கையானது, அச்சம் அல்லது பதட்டத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டே இருக்கிறது என்றால், அந்த நபர் ஒரு மாதத்திலே இறந்து விடுவார் என்று கூறப்பட்டுள்ளது..
இரவில் நிலா மற்றும் பகலில் சூரியனை பார்க்கும் போது, கருப்பு அல்லது சிவப்பு நிறமுள்ள வட்டம் தென்பட்டால், அவர் 15 நாட்களுக்குள் இறந்து விடுவார் என்று சிவபுராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரால் நிலா மற்றும் நட்சத்திரங்களை இரவில் பார்க்க முடியவில்லை அல்லது மிகவும் மந்தமாக தெரிகிறது என்றால், அவர் மரணத்தின் விளிம்பில் இருக்கிறார் என்று அர்த்தமாகும்.
ஒருவர் திடீரென நீல நிறமுள்ள ஈக்களால் சூழப்படுகிறார் என்றால் அவர் ஒரு மாதத்தில் இறந்துவிடுவார் என்று கூறப்பட்டுள்ளது.
ஒருவரின் தலையில், கருடன், காகம், கழுகு மற்றும் புறா போன்ற பறவைகள் வந்து அமர்ந்தால், மரணத்தின் அறிகுறி என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவர் தன்னுடைய நிழலில் தனது தலைப் பகுதியை காண முடியவில்லை என்பது மற்றுமொரு மரணத்தின் சமிக்ஞை என சிவ புராணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஒருவரால் எதையும் சரியாக பார்க்க முடியாமல் போவது அல்லது நெருப்பை தெளிவாக பார்க்க முடியாமல் போவது மரணம் உங்களை எட்டிக் கொண்டிருக்கிறது என்பதை வெளிக்காட்டும் அறிகுறியாகும்.
ஒருவரால் எண்ணெய், தண்ணீர் போன்றவற்றில், அவருடைய பிரதிபலிப்பை பார்க்க முடியாவிட்டால் ஆறு மாதத்தில் அவர் இறந்துவிடுவார் என்று சிவபுராணத்தில் கூறப்பட்டுள்ளது...
தந்திர - குண்டலினி யோகம்...
தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, தூய உணர்வு நிலையானது முழு பிரபஞ்சத்தின் வெளிப்பாடு ஆகும்.
பிரபஞ்சம் வெளிப்படுத்த்தும் இந்த தூய உணர்வு நிலை, இரண்டு துருவங்கள் அல்லது அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒன்று மற்றது இல்லாமல் இருக்க முடியும்.
ஒரு அம்சமானது சிவம் (Shiva) ஆகும், ஆண் நிலை, நிலையான, இயக்கமற்ற (Static) தன்மை கொண்டது மற்றும் வெளிக்காட்டப்படாத உணர்வு அடையாளமாக உள்ளது.
சிவம் முழுமையான ஆற்றல் கொண்டது. ஆனால் உருவாக்கவோ அல்லது மாற்றவோ முடியாதது.
மற்ற அம்சமானது சக்தி (Shakthi) ஆகும், பெண் நிலை, இயங்கக் கூடியது (Dynamic). சுறுசுறுப்பு, படைப்பு தன்மையுடையது.
பிரபஞ்சத்தின் மாபெரும் தாய். அவளிடம் இருந்து அனைத்து வடிவங்களும் பிறந்தன.
தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம் ஆவான்.
பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனிடமும் காணப்படும்.
பிரபஞ்சத்தில் பொருந்தும் ஏல்லாக் கொள்கைகளும் தனிப்பட்ட மனிதன் விஷயத்திலும் பொருந்தும்.
மனித உயிர்களின் மீது, சக்தியின் பெண்மையை அம்சம் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் முதுகு தண்டு அடிப்பகுதியில் ஓய்வு பெறுவதாகக் கூறப்படுகிறது.
குண்டலினி-யோகாவின் தந்திர பயிற்சியின் நோக்கம், இந்த அண்ட ஆற்றலை மேலே எழுப்பச்செய்து முதுகெலும்பு அச்சில் உள்ள சக்கரங்கள் எனப்படும் உணர்வு திறன்கள் மையங்கள் வழியாக செலுத்துவதாகும்.
பிறகு சிவம் எனப்படும் தலையில் உள்ள கிரீடம் போன்ற தூய உணர்வு நிலை கொண்ட இடத்தில் சேர்ப்பதாகும்.
இவ்வாறாக சிவம், சக்தியை ஒன்றினைப்பதின் மூலம் நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள முடியும். உலகத்தின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறக்கூடிய நிலையை அடைய முடியும்.
நாடிகள் - நுண் சரீரத்தில் உள்ள ஏழு சக்கரங்களை தொடர்ந்து, அவற்றிற்கு இடையே ஒரு பாதையானது அமைந்துள்ளது. அதன் பெயர் நாடியாகும்.
சிவ சம்கிதம் என்ற தாந்திர சாஸ்திரம் 14 வகையான நாடிகள் உள்ளதாக குறிப்பிடுகின்றன. அவற்றில் இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை என்பவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
பிங்கலை: இது நாசித் துவாரத்தின் வலது பக்க பாதை. சிகப்பு நிறமுடையது, ஆண் தன்மை கொண்டது. வெப்ப வழிப்பதை, சூரியனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. யமுனை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து வலது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.
இடகலை: இது நாசித் துவாரத்தின் இடது பக்க பாதை. வெண்மை நிறமுடையது, பெண் தன்மை கொண்டது. குளிர்சி வழிப்பதை, சந்திரனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. கங்கை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து இடது
நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.
சுழுமுனை: இது நடுவில் உள்ள பாதை,
சரஸ்வதி ஆற்றுடன் தொடர்பு கொண்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து தலையின் மேற்பக்கத்தில் கவிழ்ந்த நிலையில் உள்ள சகஸ்ரதளச் சக்கரத்தை நோக்கி ஓடுகிறது...
என்ன வாழ்க்கை டா இது...
மாப்பிள்ளை வீட்டில் மாப்பிள்ளைக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே, பெண்ணுக்கு லேசா கொஞ்சம் முகம் வாடும்.
ஆனால்...
பெண் வீட்டில் பெண்ணுக்கு ஒரு தங்கை உண்டு என்று சொன்னவுடனே மாப்பிள்ளைக்கு ஒரு சந்தோஷம் முகத்தில் பிரகாசிக்கும் பாருங்கள்...
ஆண்களுக்கு எப்பவுமே பரந்த மனசுங்க...
இதை கூட புரிஞ்சிக்காம... மாப்பிளைய முறைப்பாங்க 😔😔









