கவிதைகளை
வாசிப்பது மட்டும் அல்ல...
நேசிப்பதும்
சுகம் தான்...
ஆம்
நான் நேசிக்கும்
அழகான கவிதை
நீ...
அன்று முதல் இன்று வரை அரசியலில் தலைவனாவது எப்படி? இது தான் அந்த இரகசியம்...
நீ ஒரு தனிமனிதன்.
உனக்கு ஆளும் விருப்பம் வந்துவிட்டது.
நீ ஆள மக்கள் வேண்டும்.
குறிப்பிட்ட மக்களைத் தேர்ந்தெடு.
அவர்கள் மதம், இனம், சாதி, ஊர், வரலாறு, பண்பாடு என அனைத்தையும் அலசு.
இதில் எது அவர்களிடம் நன்கு வேறூன்றியிருக்கிறது என்று ஆராய்.
அதைக் கையிலெடு.
அவ்வுணர்வுக்கு எதிரான பிரச்சனைகள், தடைகளை எதிர்த்துப் போராடி அவ்வுணர்வை மேலும் தூண்டு.
உன் பின்னால் ஒரு கூட்டம் வரும்.
உன் வலிமை கூடும்.
அவ்வுணர்வுள்ள மக்களுக்காக ஒருவன் போராடி மடிந்திருப்பான் அவனை அறிந்துகொள்.
அவனின் வாரிசாக மாறு.
உன் மீது விமர்சனங்கள் வரும்.
கருத்தியல் ரீதியான விமர்சனங்களை உன் தலைவனின் பிம்பத்தால் உடை.
நடைமுறை எதிர்ப்புகளை உன் வலிமையால் உடை.
பாதிவாழ்நாள் கழிந்ததும் கிடைத்த நாற்காலியில் அமர்.
கடந்த காலத்தைச் சொல்லியே சுகமாக வாழு.
பணம், புகழும், இல்லமும் தளைக்க நல்லசாவு பெறு.
பத்து தலைமுறைகளுக்கு சொத்தும்.
ஐந்து தலைமுறைக்கு உன் பெயரும் எஞ்சியிருக்கும்...
இக்கதை முழுவதும் இங்க பதிவிட்ட பிறகு..
இந்த திராவிட கூட்டம், ராமசாமியை பின்பற்றும் போலி தமிழ்தேசிய கூட்டம் தாராளமாக இங்க வந்து கதறலாம் 😁😁
இந்த கதை, போலி பெண்ணியத்தை இங்க பேசிட்டு இருக்கிற அனைத்து ராமசாமி பேரன் மற்றும் பேத்திகளுக்கு சமர்ப்பணம் 🤣🤣
கதற நினைப்பர்வர்கள், எல்லா பாகத்தையும் படிச்சுட்டு வந்து கதறவும்...
ஒருவர் சிக்கன் புரோட்டாவ பீச்சில் உட்கார்ந்து சாப்ட போனப்ப..
அங்க வந்த போலீஸ் இங்க சாப்பிட கூடாதுனு சிக்கன் புரோட்டாவை கடல்ல தூக்கி எறிய..
அவர் கோவத்தில் இனி ஒரு மாசத்துக்கு யாரும் அசைவம் சாப்பிட கூடாதுன்னு சாபம் குடுக்க...
புரோட்டா in Sea.. புரட்டாசியானது...
எப்பூடி 😁😁😁
பூனைகள் எப்போதும் குடியிருப்புகள் நிறைந்த பகுதிகளில் தான் இருக்கும்..
மன்னர்கள் காலத்தில் போருக்கு படை திரட்டிச் செல்லும் வழியில் பூனையை பார்த்தால், இந்த வழியில் குடியிருப்புகள் இருக்கிறது. அங்கே இருக்கும் ஆண்மகன்கள் அனைவரும் போர்க்களத்திற்கு சென்றிருப்பார்கள். அங்கே சிறுவர்கள், வயதானவர்கள், பெண்கள் மட்டுமே இருப்பார்கள்.
ஆகவே இந்த வழியாக சென்றால் அவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காக, அவர்கள் வந்த திசையை மாற்றி வேறு திசையில் செல்வார்களாம்.
மேலும் அக்காலத்தில் போக்குவரத்துக்கு பெரும்பாலும் குதிரையை பயன்படுத்தினர்.
பூனையைப் பார்த்தால் குடியிருப்புகள் இருக்கும் என உணர்ந்து, யாரும் அடிபட்டுவிடக் கூடாது என்பதர்க்காக குதிரையில் மெதுவாக செல்வார்களாம்.
அதனால் தான் பூனை குறுக்கே போனால் அந்த வழியாக செல்லக் கூடாது என்றார்கள்.
நம் முன்னோர்கள் சொல்லி வைத்த இது போன்ற பல விஷயங்களை காரணம் தெரியாமலேயே இன்று வரை கடை பிடிக்கிறோம்.
பல விஷயங்கள் மூட நம்பிக்கைகளாகவும் திரிக்கப்பட்டு விட்டது.
பூனை குறுக்கே போனால் அந்த வழியாகப் போகக் கூடாது என்ற விஷயத்தை கடை பிடிக்க வேண்டிய அவசியம் தற்போதைய கால கட்டத்தில் தேவை இல்லை.
இனிமேல் பூனை குறுக்கே போனால் என்ன அர்த்தம்..
பூனையும் வெளியே போகுதுன்னு அர்த்தம்...