05/11/2021
குங்குமப் பூவின் மருத்துவக் குணங்கள்...
தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகிய வியாதிகளுக்கு குங்குமப் பூ அரிய மருந்தாகும்..
குங்குமப் பூவை 1 பங்கு எடுத்து, அதை 80 பங்கு தண்ணீரில் ஊற வைத்து வடிகட்டி, அதில் 30 மிலி அளவு காலை, மாலை இருவேளை அருந்தி வர தலைவலி, மூக்கு நீர் ஒழுகுதுல், அதிக தாகம், குமட்டல், வாந்தி, உடல் எரிச்சல், சூதக அழுக்கு, ஆண்மைக் குறைவு ஆகியவை நீங்கும்.
குங்குமப் பூவுடன் தேன் கலந்து தினமும் இருவேளை உட்கொண்டு வர ஆஸ்துமா முதலிய சுவாச நோய்களை போக்கி சுவாசத்தை எளிதாக்கும்.
அம்மை நோய் கண்டவுடன் துளசி இலைகளையும், குங்குமப்பூவையும் சேர்த்து அரைத்து உட்கொள்ள கொடுக்க அம்மை நோய் குணமாகும்...
திராவிட மலையாளிகள் தமிழர்களுக்கு செய்த கொடுமை - தாலி அறுத்தான் சந்தை...
குமரி மாவட்டம் மலையாளிகள் பிடியில் இருந்தபோது தாழ்த்தப்பட்ட தமிழர்கள் மீது பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
பெண்கள் மார்பு அளவிற்கேற்ப முலைவரி வசூலிக்கப்பட்டது.
மார்பை மூடவும் அனுமதி இல்லை.
அந்நிலையில் ஒரு சந்தையில் மலையாள சண்டியர்கள் அமர்ந்து கொண்டு மார்பை மூடியுள்ள பெண்களின் முந்தானைகளை அறுத்து எறிந்து தாலியை அபராதம் என்று எடுத்துக் கொண்டு பரிகாசம் செய்துவந்தனர்.
அச்சந்தை இன்றும் தாலியறுத்தான் சந்தை என்று அழைக்கப்படுகிறது.
இந்த முலைவரி நாஞ்செலி அல்லது நங்கெலி எனும் தமிழ்ப்பெண் முலைவரி கட்டமுடியாமல் மார்பை அறுத்து கொடுத்ததால் எழுந்த பெரும் போராட்டத்திற்குப் பிறகு (தோள்சீலைக் கலகம்) விலக்கப்பட்டது.
1950 களில் நேசமணி தலைமையில் போராடி கன்னியாகுமரி மலையாள மாநிலத்தில் இருந்து தமிழகத்துடன் இணைந்தது...
தீபாவளி முன்னிட்டு மெகா ஆஃபர் மிஸ் பண்ணிடாதீங்க...
லக்ஸ்
ஒரு சோப்பின் விலை 1ரூபாய்....
லைபாய்
ஒரு சோப்பின் விலை 1ரூபாய்....
மெடிமிக்ஸ்
ஒரு சோப்பின் விலை 1ரூபாய்...
சந்தூர்
ஒரு சோப்பின் விலை 1 ரூபாய்...
இந்த ஆஃபர்
தினமும் குளிக்கிறவங்களுக்கு
மட்டும் தான்...
உங்களுக்கு இல்ல சாரி...
🤣🤣🤣🤣🤣
தீபாவளி கொண்டாடும் தமிழர்களே அசுரன் யார் என்று தெரியுமா?
அசுரர் என்பது காரணப் பெயரே...
சுரன் என்றால் சுரபானம் (மது) அருந்துபவர். அசுரன் என்றால் மது அருந்தாதவர்கள்.
ஆரியர்கள் தங்கள் வழக்கப்படி நல்லவற்றை கெட்டவை என்றும், நல்லவர்களைக் கெட்டவர்கள் என்று நிலைநிறுத்த மக்களிடம் திரும்பத் திரும்பச் சொல்லி அவை வழக்கத்திற்கே வந்துவிட்டன.
இந்த முறையில் மக்களின் மூளைக்கு விலங்கிட்டும், பல மன்னர்களின் துணையாலும் புத்தர்கள், சமணர்கள் பலரைக் கொன்றும், யாக குண்டங்களில் இட்டுக் கொளுத்தியும், கழுவேற்றியும் அழித்தனர்.
அசுரர் என்பவர் வலிமை மிக்க, கொல்லாமை விரதம் பூண்ட, நல்லெண்ணம் கொண்ட நாகரிகம் மிக்க தமிழர்களையே குறிக்கிறது.
அது தவறாகக் கொள்ளப்பட்டு, மக்களை நம்பவைத்துள்ளனர்.
இந்தப் பண்டிகைகளைக் கொண்டாடும் மக்கள் மானமும் அறிவும் இல்லாமல் தங்களைத் தாங்களே இழிவுபடுத்திக் கொள்வதாகும்.
இராவணனின் வீழ்ச்சிக்கு பிறகு சில காலம் கழித்து ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்த தமிழ் மன்னர்களில் ஒருவனே நரகாசுரன்...
நரகாசுரனும் மற்றைய பல மன்னர்களும் ஆரிய ஆக்கிரமிப்பை எதிர்த்து போர் புரிந்து வீர மரணம் அடைந்தார்கள்.
கடைசியில் தமிழினத்தை வெற்றி கொண்ட ஆரியர்கள் தமிழர்களின் வரலாற்றை திரிவுபடுத்தினார்கள்.
இன்று விடுதலைப் போராளிகளை ஆக்கிரமிப்பாளர்கள் பயங்கரவாதிகள் என்று சொல்வது போல் அன்று ஆரியர்கள் தமிழின விடுதலைக்காக போரடியவர்களை அரக்கர்கள் என்று சொன்னார்கள்.
முறிக்கிய மீசையோடு கம்பீரமாக நின்று தமிழ் மண்ணைக் காக்க இறுதிவரை போராடி தன்னுயிரை ஈந்தவர்களுக்கு கொம்புகளும் கோரமானபற்களும் முளைத்து விட்டன.
ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்...
சிங்களப் படைகள் யாழ் நகரைக் கைப்பற்றிய நாளை நாம் கொண்டாடுவோமா?
நிச்சயமாகக் கொண்டாடுவோம், சிங்களம் தமிழினத்தை முழுமையாக வெற்றி கொண்டால்.
அப்பொழுது நம் விடுதலைப் போரளிகளுக்கும் கொம்புகளும், கோரமான பற்களும் முளைக்கும். வெற்றி பெற்றவன் திணிப்பதே வரலாறு என்று ஆகின்றது. தோற்று போனவனின் வரலாறு அவனுடனேயே புதைகுழிக்குள் புதைக்கப்படுகிறது.
நமது தமிழ் மன்னர்கள் அன்று தோற்றுப் போனார்கள். அதனால் அரக்கர்கள் ஆகி விட்டார்கள்.
இப்படி அரக்கன் ஆக்கப்பட்டு விட்ட ஒரு விடுதலை வீரனின் நினைவு நாளை நாம் மகிழ்ச்சியாகக் தீபாவளி என்று கொண்டாடுகிறோம்.
ஆரியர்கள் தமிழினத்தை வென்றது மாத்திரம் அன்றி, வென்ற நாளை தமிழர்களையே கொண்டாட வைத்து விட்டார்கள்...
இதை உணர்ந்து தமிழினம் தீபாவளியை கொண்டாடுவதை நிறுத்த வேண்டும்...
தீபாவளி யும் உண்மைகளும்...
உலகநாடுகளில் பல இடங்களில் Halloween Day = Oct 31 (ஆவிகளின் திருவிழா) என்றும்...
கல்லறைத் திருவிழா = Nov 2 என்றும் கொண்டாடப்படும் திருவிழா..
இந்தியாவில் மட்டும் இறந்த முன்னோர்களை விரட்ட கூடிய நாளாக மாறியது எப்படி?
தீபாவளி = அக்டோபரின் இறுதி நாட்கள் (அ) நவம்பரின் ஆரம்ப நாட்கள் (ஐப்பசி அமாவாசை).
மற்ற இரு பண்டிகைகளிலும் (இருளை) முன்னோரின் நினைவலைகளை கொண்டாடும் போது தீபாவளி மட்டும் இருளை விலக்கச் சொல்வதில் முரண் தெரிகிறது.
ஐப்பசி - ஐ -கருப்பு பசி.
கருப்பு பசியாக இருக்கும் மாதம் அம்மாவாசை நாள்.
'ஐ' எனப்படும் இருள்சக்தி உச்சத்தில் இருக்கும் நள்ளிரவு 12.00 to 2.00 மணிக்கு கிடாய் வெட்டினால் தான் அதிகாலை 4.00 to 6.00 கறி சமைக்க முடியும்.
தீபாவளி அன்று மட்டும் அதி காலையிலேயே எழுந்து கறி சமைக்கும் வழக்கம் தமிழர்களிடையே இன்று வரை தொடர்வது முன்னோர்களுக்கு படையல் போட்டதின் நீட்சியாக இருக்கலாம்.
ஆண்டுக்கு 12 அமாவாசை இருந்தும் குறிப்பாக ஐப்பசி அமாவாசை அன்று மட்டும் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே அசைவம் சமைக்கக் கூடாது என்னும் கட்டுப்பாடு விதித்து கடுமையான கேதார கௌரி விரதம் இருக்கச் சொல்வதின் நோக்கம் என்ன? இது எவன் செய்த வேலை ?
வீதியெங்கும் விளக்கேற்றுவது தீயசக்தியை விரட்ட.
வீதியெங்கும் பட்டாசுகள் வெடிப்பது தீயசக்தியை விரட்ட.
அசைவம் சமைக்காமல் விரதம் இருப்பது தீய சக்தியை விரட்ட.
வருடத்தில் எவ்வளவோ அமாவாசை இருக்கும் போது ஏன் அன்னைக்கு மட்டும் இதையெல்லாம் செய்யச் சொல்கிறார்கள்.?
தீய சக்தி உச்சத்துல இருக்குற அன்னைக்கு தானே அதை விரட்ட வேண்டிய தேவை வருதுன்னு சொல்லாம சொல்லுறாங்க.
அந்த தீய சக்தி வேறு யாரும் இல்லைங்க. நம்மோட முன்னோர்களின் நினைவலைகள் தான். அந்தப் பண்டிகை தீபாவளி.
தீர்வு : ஐப்பசி அமாவாசை தான் தீபாவளி. இது உறுதி. தீபாவளி எப்ப வருதுன்றது முக்கியம் இல்ல. நமக்கு ஐப்பசி அமாவாசை தான் உண்மையான தீபாவளி. முன்னோர்களின் நினைவலைகளுக்கு படையல் போட வேண்டும். இதை ஒழிக்க வேண்டும் என்பதற்காகத்தான் கௌரி கேதார நோன்பு என ஒன்றை உருவாக்கி தீபாவளியன்று வைத்தான்.
அந்த விரதம் கடை பிடிக்கப்படும் நாளுக்கு முந்தைய நாளிலும். பிந்தைய நாளிலும் கட்டாயம் சைவ விரதம் இருந்தே ஆக வேண்டும். எதிரி நம் முட்டாள் மக்களுக்கு சொருகிய பெரிய ஆப்பு. புரியுதா?
ஒ.. இதற்கு பெயர் தான் காதலா...
பேரழகியாய் படைப்பதெப்படி
என்னும் புத்தகத்தை
தொலைத்துவிட்டான் பிரம்மன்...
புத்தகம் பூமியில்
உன் உருவில்...
😁😁😁