09/11/2021

இந்த அசிங்கம் தேவையா உதவி ஆய்வாளரே...

 


போலீகாரன் தப்பு செஞ்சுட்டு.. அந்த தப்ப விசாரிக்க அதே போலீஸ் ஸ்டேனனிலுள்ள இன்னோரு போலீஸ்... 

நல்ல நியாயம் வரும் 😁

அடிச்சா இனி திருப்பி அடிக்கனும்.. அப்போ தான் பொது மக்கள் மேல் கை வைக்க பயப்படுவார்கள்...

பிராடு பாஜக கன்னடன் அண்ணாமலை கலாட்டா...

 


திமுக வும் நமக்கு நாமே நாடகமும்...

கச்சத் தீவை கொடுக்கும் போது மூடிக்கிட்டு இருக்க வேண்டியது. அப்புறமா கச்சத் தீவை மீட்போம் என்று கத்த வேண்டியது.

திருமங்கலம் பார்முலா என்று ஒன்றை கண்டு பிடிச்சு ஓட்டுக்கு பணம் கொடுத்து பழக்க வேண்டியது. அப்புறமா இதை அடுத்தவன் செஞ்சா இது ஜனநாயகமா இல்ல பண நாயகமா என்று கத்த வேண்டியது.

இலவச டிவி கொடுக்க வேண்டியது. அப்புறமா இலவசத்தை கொடுத்து மக்கள பிச்சக்காரங்களா ஆக்கிட்டாங்க என்று கத்த வேண்டியது.

இனப் படுகொலை செய்யும் போது ஒரு அடிமை மற்றொரு அடிமைக்கு எப்படி உதவ முடியும் என்று சொல்லிட்டு மந்திரி பதவி கேட்டு அலைய வேண்டியது. அப்புறமா டெசோ, மயிறு, மட்டை என்று கத்த வேண்டியது.

மதுவிலக்கை ரத்து பண்ண வேண்டியது. அப்புறமா பூரண மதுவிலக்கை கொண்டு வருவோம் என்று கத்த வேண்டியது.

நாலு எலக்சனா இது தான் என் கடைசித் தேர்தல் என்று சொல்ல வேண்டியது. அப்புறமா 93 வயதல்ல 103 வயசானாலும் உங்களுக்கு உழைப்பேன் என்று உளர வேண்டியது.

ஜல்லிக் கட்டுக்கு தடை போட வேண்டியது. அப்புறமா ஜல்லிக்கட்டை நடத்துவோம் என்று கத்த வேண்டியது.

மீத்தேன் திட்டத்துக்கு கையெழுத்து போட வேண்டியது. அப்புறமா தெரியாமல் கையெழுத்து போட்டுட்டோம் என்று கத்த வேண்டியது.

இந்தி திணிப்பிற்கு கையெழுத்து போட வேண்டியது. அப்புறமா இந்தி திணிப்பை எதிர்க்கிறேன் என்று கத்த வேண்டியது..

பிராடு பாஜக மோடியின் ஊழல்கள்...

 


கார்ப்பரேட் அடிமை பாஜக மோடியே...

 


ஆந்திரா தமிழகத்தைத் திண்கிறது...

காட்பாடி அருகே உள்வாங்கிய எல்லை...

20 தமிழர்களைக் கொன்று, தமிழகக் கோவிலை ஆக்கிரமித்தது என ஆந்திராவின் அட்டூழியம் தற்போது காட்பாடி அருகே ஆந்திர எல்லை தமிழகத்திற்கு உள்ளே நீட்டிக்கும் வரை வந்துவிட்டது.

போன ஆண்டு தாளூர் எல்லையை கேரளா ஆக்கிரமித்தது.

தமிழர் எல்லையைக் காக்க ஒரு படை இல்லை.

தமிழ் மண் சுருங்கிக் கொண்டே வருகிறது...

திமுக கைகூலி அறப்போர் இயக்கமே பதில் சொல்...

 


கணவன் Vs கலாட்டா கலாட்டா...

திடீர்ன்னு ராத்திரி ரெண்டு மணிக்கு கணவனை எழுப்புறா மனைவி..

மனைவி:அரண்மனை படத்தோட ஹீரோயின் யாருங்க?

கணவன் : ஹன்சிகா மோத்வானி, லக்ஷ்மி ராய், ஆண்ட்ரியா.

மனைவி : உங்க அம்மா என்னைக்கு செத்து போனாங்க?

கணவன் : 2011வது வருஷம், திங்கட்கிழமை, அக்டோபர் 17ம் தேதி சாய்ந்திரம் மூணு மணிக்கு...

மனைவி : நம்ம வீட்டுக்கு எதிர் வீட்டுல குடி வந்திருக்காளே கவிதா, அவ எப்போ குடி வந்தா?

கணவன் : போன புதன் கிழமையோட ரெண்டு மாசம் முடிஞ்சது. ஆனாம்மா, எதுக்கு நடுராத்திரி எழுப்பி வச்சு இந்த கேள்வி எல்லாம் கேட்டுட்டு இருக்க?  

மனைவி : இன்னைக்கு என்னோட பிறந்த நாள்.

அமைதி..

குண்டூசி விழுந்தா கூட சத்தம் கேட்குற அளவு அமைதி..

இனி என்ன நடந்து இருக்கணும்ன்னு சொல்லணுமா? ஸ்டார்ட் ம்யூசிக்... செத்தாண்டா சேகரு...

😁😁😁

பிராடு பாஜக மோடி அரசின் பித்தலாட்டங்கள்...

 


இறைவன் எந்த மதத்தவன்?

 


இறைவன் இருக்கிறான் என்பதை நம்பாதவர்கள் கூட மனித சக்திக்கு மீறிய ஒரு சக்தி இருக்கிறது என்பதை ஒப்புக் கொள்கிறார்கள்..

கோடானு கோடி உயிர்கள், உலகங்கள், கிரகங்கள், நட்சத்திரங்கள் எல்லாம் நம் கற்பனைக்கும் எட்டாத அண்டவெளியில் துல்லியமாக இயங்கிக் கொண்டிருக்கிறன என்பதைப் பார்க்கும் போது அதை இயக்குகின்ற ஒரு மாபெரும் சக்தி இருக்கத்தான் வேண்டும் என்பதை நாத்திகர்களாலும் ஒப்புக் கொள்ளாமல் இருக்க முடியவில்லை.

இன்று அந்த இறைவனைத் தங்கள் மதத்தவராக பல மதத்தவரும் ஆணித்தரமாக நம்புகிறார்கள். அவன் பெயரால் தர்மங்களும் நடக்கின்றன. அதர்மங்களும் நடக்கின்றன. இறைவனின் பெயரால் யுத்தங்களும், சண்டைகளும் சர்வசகஜமாக நடப்பதை வரலாறு பதிவு செய்கிறது. கடவுளின் பெயரால் மனிதர்கள் என்னென்னவோ செய்கிறார்கள். செத்து மடிகிறார்கள்.

உண்மையில் இறைவனுக்கு என்று ஒரு மதம் இருக்கிறதா? இருந்தால் இறைவன் எந்த மதத்தவன்? பல மதங்கள் தங்களுடையவன் என்று உரிமை கொண்டாடுகின்றனவே, உண்மையில் பல மதக் கடவுள்கள் இருக்கின்றனரா?

பல மதக் கடவுள்கள் இருந்திருந்தால் இந்த உலகில் இன்று நடைபெறும் மதச்சண்டைகள் போல கடவுள்களுக்கும் யார் சிறந்தவன் என்ற போட்டி ஏற்பட்டு இருக்கும். அண்ட சராசரங்கள் ஸ்தம்பித்துப் போய் இருக்கும். அது இது வரை நிகழவில்லை, பிரபஞ்சம் சீராக இயங்கிக் கொண்டிருக்கிறது என்பதால் பல மதக் கடவுள்கள் இருக்க வாய்ப்பேயில்லை. எனவே இறைவன் ஒருவனாக அல்லது ஒரே சக்தியாகத் தான் இருக்க முடியும் என்று சுலபமாகக் கணிக்க முடிகிறது.

இருப்பது ஒரு இறைவன் என்றால் அவன் ஒரு மதத்தவனாக இருக்க முடியுமா? அப்படி ஒரு மதத்தவனாக இறைவன் இருந்திருந்தால் அந்த குறிப்பிட்ட மதத்தைச் சார்ந்தவர்கள் மட்டும் ஓஹோ என்று சுபிட்சமாகவும், சகல சௌபாக்கியங்களுடனும் இருக்க மற்ற மதத்தினர் எல்லாம் கீழான நிலைகளிலும், சொல்லொணா கஷ்டங்களுடன் இருக்க வேண்டும். அது தான் லாஜிக்காகத் தெரிகிறது.

ஆனால் இன்றைய உலகில் எல்லா மதத்திலும் சுபிட்சமாக உள்ளவர்களும் இருக்கிறார்கள், எதிர்மாறாக மிகவும் கஷ்டப்படுகிறவர்களும் இருக்கிறார்கள். இதைப் பார்க்கும் போது இறைவன் ஒரு மதத்தைச் சார்ந்தவன் என்ற நிலைபாடும் அடிபட்டுப் போகிறது.

இருப்பது ஒரு இறைவன், நாமெல்லாரும் அவன் சிருஷ்டிகள் என்றால் மதம் என்ற பெயரிலும், தங்கள் கடவுள் என்ற பெயரிலும் மனிதர்கள் சண்டை போடுவது எதற்காக?