01/12/2021
காரணம் தேவையில்லை...
மனம் என்பது மனிதனுக்கு சொந்தமானதன்று.
மனம் என்பது மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ள ஒன்று.
வெற்றிடத்தில் குவாட்ரிக் ஆற்றல் செயல்பட எந்த காரணமும் தேவை இல்லை.
பிரபஞ்சத்திற்கு வெளியே காலமோ இடமோ கடவுளோ காரணமோ இல்லை.
அனைத்தும் பிரபஞ்சத்திற்கு உள்ளேதான்.
பாழ்வெளி - பிரம்மம் - மனம் - ஆகாயம் - நெருப்பு - நீர்- நிலம் - காற்று - உயிர்கள் - மனிதன்...
மூலிகை காபி செய்முறை...
இன்றைய கால சூழ்நிலையில் காலையில் எழுந்தவுடன் காபி அல்லது டீ அருந்தினால் தான் உடலில் புத்துணர்வும் சுறுசுறுப்பும் ஏற்படும் என்ற பழக்கத்திற்கு அடிமையாகி விட்டோம். இது மேலை நாட்டு கலாச்சார பழக்கமாகும்.
காபி, டீ அருந்துவதால் நிறைய தீமைகள் உண்டு என அறிந்தும் அதன் பழக்கத்திலிருந்து விடுபட முடியாமல் உள்ளவர்களுக்கும், உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள விரும்புபவர்களுக்கும் சித்த மருத்துவ முறையில் ஒரு அருமையான மூலிகை காபி செய்முறை..
தேவையான மூலிகை பொருட்கள்...
1 - ஏலரிசி - 25-கிராம்.
2 - வால்மிளகு - 50 கிராம்.
3 - சீரகம் - 100 கிராம்.
4 - மிளகு - 200 கிராம்.
இவைகளை வெயிலில் நன்கு காயவைத்து தனித் தனியே இடித்து தூள் செய்து பிறகு ஒன்று சேர்த்து இடித்து கலந்து கொள்ளவும். இது அருகம் புல் காபிக்கு பயன்படும் பொடி ஆகும்.
நீண்ட கொடி அருகம்புல்லை வேர், தழை இல்லாமல் தண்டுப் பகுதியாக இரண்டு கைப்பிடி அளவு எடுத்து மிகச்சிறியதாக அரிந்து ஒரு பாத்திரத்தில் போட்டு 500- மிலி நீர் விட்டு அடுப்பில்வைத்து சூடு ஏறியதும் மேலே கூறிய பொடியில் 2- டீஸ்பூன் போட்டு கலந்து நன்கு கொதிக்க வைத்து 200 -மிலி அளவில் வற்றிய பிறகு வடி கட்டி எடுத்து இதனுடன் 200 -மிலி காய்ச்சிய பால் கலந்து சர்க்கரை சேர்த்து காலையில் தினமும் சாப்பிட்டு வரலாம்.
காபி ருசியும், பூஸ்ட் கலந்த ருசியும் போல் இனிமையாக இருக்கும். இதனால் நோய்கள் என்ற பயமே இல்லாமல் வாழலாம் பல விதமான நோய்கள் கட்டுப்படுகின்றன.
இந்த அருகம் புல் காபியைத் தொடர்ந்து சாப்பிட்டு வர இரத்தம் சுத்தமாகும். நீண்ட நாள் ஆங்கில மருந்துகள் உட்கொண்ட விஷத்தன்மை உடலை விட்டு நீங்குகின்றது. நரம்புத்தளர்ச்சி நீங்கும், அதிக பித்தம், பித்த மயக்கம், நெஞ்செரிச்சல் நீங்கும். குடல் சுத்தமாகும், மூளை வலுவடைந்து நினைவாற்றல் பெருகுகின்றது.
உடலின் உட்சூடு மறையும், பெண்களின் மாதவிடாய் கோளாறுகள் சீராகும், வெள்ளைப்படுதல், அடி வயிறு கனத்தல், தொடை நரம்பு இழுத்தல் யாவும் குணமாகும்.
குழந்தைகள் சாப்பிட்டு வர சுறுசுறுப்பாக இருப்பார்கள், கணை, மாந்தம் (பிரைமரி காம்ப்ளக்ஸ்) ஏற்படாது. பசி நன்கு எடுக்கும். சாப்பிடும் உணவுகளின் சத்து உடலில் சேரும்...
29/11/2021
மழை நேர உஷார் நடவடிக்கைகள்...
மழை நேரத்தில் அவசர சிகிச்சை அல்லது மருத்துவ உதவிக்கு டாக்டரை நேரில் சந்திக்க முடியாது. அதனால் முன்கூட்டியே உங்கள் குடும்பத்தினர் வழக்கமாக சிகிச்சை பெறும் மருத்துவரின் தொடர்பு எண்ணை வாங்கி வைத்துக்கொள்ளவும்.
மழை நேரங்களில் மளிகை மற்றும் காய்கறி கடைகள் வழக்கமான நேரத்தில் இயங்கும் என்பது உறுதியற்ற நிலை. எனவே தேவையான மளிகை, காய்கறி பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்துக்கொள்வது உத்தமம். காய்கறிகளில் சீக்கிரம் அழுகிவிடாத காய்கறிகள் மற்றும் கிழங்கு போன்றவற்றை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள்.
குழந்தைகளுக்கான அவசர நேர மருந்துகள் மாத்திரைகள் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்.
சிறுவர்களுக்கு ரமணன் இருக்கிறார். பெரியவர்களுக்கு வழியில்லை. அலுவலகம் சென்றுதான் தீரவேண்டும். அதனால் ஓரளவுக்கு நல்ல மழைக்கோட்டை வாங்கி பயன்படுத்துங்கள்.
கிரைண்டர், மிக்சி போன்ற மின்னணு பொருட்களின் மின் இணைப்பை வேலை நேரம் போக மற்ற நேரங்களில் துண்டித்து வைத்துவிடுங்கள். ஷாக் அடிக்காமல் பாதுகாக்க உதவும்.
மழைநேரத்தில் வீட்டின் வெளியே துணிகளை காய வைக்க முடியாது. அதனால் வீட்டின் உள்ளே காயவைப்பீர்கள். ஆனால் படுக்கும் அறையில் காயப்போடாதீர்கள். குழந்தைகளுக்கு அறையின் குளிர்ச்சியால் ஜலதோஷம் உருவாகும்.
மழை நேரம்தான் குழந்தைகளை கூடுதல் பாதுகாப்புடன் கவனிக்க வேண்டும். அதனால் எப்போதும் காய்ச்சிய நீரையே குடிக்க கொடுங்கள். நீங்களும் குடியுங்கள்.
சேட்லைட் சேனல் கனெக்ஷன் இருந்தாலும் முடிந்தால் இந்த மழை சீசன் முடியும்வரை கேபிள் இணைப்பு வாங்கி வையுங்கள். காரணம் எந்த நடிகர் விளம்பரம் செய்த டிடிஎச் ஆக இருந்தாலும் மழை இடி வெள்ள நேரங்களில் டிக்கெட் வாங்கி விடும்..
நண்பன் Vs மீ...
எப்ப பார்த்தாலும் ஆன்லைன்லயே இருக்கிறியே வெட்கமா இல்ல...
நா ஆன்லைன்ல இருக்கிறதை எப்ப பார்த்தாலும் பார்த்துக்கிட்டே இருக்கிறியே.. இது உனக்கு காவாலித்தனமா தெரியல...
அய்யோக்கிய பயலே...
🤣🤣🤣