07/01/2022
தந்திர- குண்டலினி யோகம்...
தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, தூய உணர்வு நிலையானது முழு பிரபஞ்சத்தின் வெளிப்பாடு ஆகும்.
பிரபஞ்சம் வெளிப்படுத்த்தும் இந்த தூய உணர்வு நிலை, இரண்டு துருவங்கள் அல்லது அம்சங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
இதில் ஒன்று மற்றது இல்லாமல் இருக்க முடியும்.
ஒரு அம்சமானது சிவம் (Shiva) ஆகும், ஆண் நிலை, நிலையான, இயக்கமற்ற (Static) தன்மை கொண்டது மற்றும் வெளிக்காட்டப்படாத உணர்வு அடையாளமாக உள்ளது.
சிவம் முழுமையான ஆற்றல் கொண்டது. ஆனால் உருவாக்கவோ அல்லது மாற்றவோ முடியாதது.
மற்ற அம்சமானது சக்தி (Shakthi) ஆகும், பெண் நிலை, இயங்கக் கூடியது (Dynamic). சுறுசுறுப்பு, படைப்பு தன்மையுடையது.
பிரபஞ்சத்தின் மாபெரும் தாய். அவளிடம் இருந்து அனைத்து வடிவங்களும் பிறந்தன.
தந்திர சாஸ்திரத் தத்துவத்தின் படி, மனிதன் ஒரு சிறிய பிரபஞ்சம் ஆவான்.
பிரபஞ்சத்தில் காணப்படும் அனைத்தும் ஒவ்வொரு தனி மனிதனிடமும் காணப்படும்.
பிரபஞ்சத்தில் பொருந்தும் ஏல்லாக் கொள்கைகளும் தனிப்பட்ட மனிதன் விஷயத்திலும் பொருந்தும்.
மனித உயிர்களின் மீது, சக்தியின்பெ ண்மையை அம்சம் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இந்த ஆற்றல் முதுகு தண்டு அடிப்பகுதியில் ஓய்வு பெறுவதாகக் கூறப்படுகிறது.
குண்டலினி-யோகாவின் தந்திர பயிற்சியின் நோக்கம், இந்த அண்ட ஆற்றலை மேலே எழுப்பச்செய்து முதுகெலும்பு அச்சில் உள்ள சக்கரங்கள் எனப்படும் உணர்வு திறன்கள் மையங்கள் வழியாக செலுத்துவதாகும்.
பிறகு சிவம் எனப்படும் தலையில் உள்ள கிரீடம் போன்ற தூய உணர்வு நிலை கொண்ட இடத்தில் சேர்ப்பதாகும்.
இவ்வாறாக சிவம், சக்தியை ஒன்றினைப்பதின் மூலம் நாம் பிரபஞ்சத்துடன் தொடர்பு கொள்ள முடியும். உலகத்தின் பந்தங்களிலிருந்து விடுதலை பெறக்கூடிய நிலையை அடைய முடியும்.
நாடிகள் - நுண் சரீரத்தில் உள்ள ஏழு சக்கரங்களை தொடர்ந்து, அவற்றிற்கு இடையே ஒரு பாதையானது அமைந்துள்ளது. அதன் பெயர் நாடியாகும்.
சிவ சம்கிதம் என்ற தாந்திர சாஸ்திரம் 14 வகையான நாடிகள் உள்ளதாக குறிப்பிடுகின்றன. அவற்றில் இடகலை, பிங்கலை மற்றும் சுழுமுனை என்பவை மிகவும் முக்கியமானதாக கருதப்படுகின்றது.
பிங்கலை: இது நாசித் துவாரத்தின் வலது பக்க பாதை. சிகப்பு நிறமுடையது, ஆண் தன்மை கொண்டது. வெப்ப வழிப்பதை, சூரியனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. யமுனை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து வலது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.
இடகலை: இது நாசித் துவாரத்தின் இடது பக்க பாதை. வெண்மை நிறமுடையது, பெண் தன்மை கொண்டது. குளிர்சி வழிப்பதை, சந்திரனின் பிரதிநிதியாக செயல்படுகிறது. கங்கை ஆற்றுடன் தொடர்பு கொன்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து இடது நாசித் துவாரத்தில் முடிவடைகின்றது.
சுழுமுனை: இது நடுவில் உள்ள பாதை, சரஸ்வதி ஆற்றுடன் தொடர்பு கொண்டது. மூலாதாரச் சக்கரத்தில் ஆரம்பித்து தலையின் மேற்பக்கத்தில் கவிழ்ந்த நிலையில் உள்ள சகஸ்ரதளச் சக்கரத்தை நோக்கி ஓடுகிறது...
06/01/2022
பாவிகளின் பைபிள்...
புனித பைபிள் என்று தான் நாம் கேள்விப்பட்டு இருப்போம்..
பாவிகளின் பைபிள் என்றோ.. அல்லது ஒழுக்கம் கெட்ட பைபிள் என்றோ.. நாம் சிந்தித்தது கூட இல்லை.. அப்படி தானே..
ஆனால் (THE WICKED BIBLE).. என்று ஒரு பைபிள் உலகத்தில் இருந்தது (இருக்கிறது)..
இதற்கு தமிழ் அர்த்தம் மேலே குறிப்பிட்ட வார்த்தைகள் தான்..
இப்படி ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று பெயர் வைத்தவர்கள் கிருஸ்துவ சபையினர்கள் தான்...
ஏன் இப்படி தங்களுடைய புனித வேதத்திற்கு பெயர் வைத்தார்கள் தெரியுமா?
1631 ல் லண்டனிலுள்ள ராயல் பதிப்பகம் மூலமாக இந்த பைபிள் வெளியிடப்பட்டது..
கிங் ஜேம்ஸ் வர்ஷனின் மறுபதிப்பாக இவற்றை வெளியிட்டு இருந்தார்கள்..
கிருஸ்துவர்கள் மதிக்ககூடிய பர்கரும் லூக்காவும் எழுதியுள்ளார்கள்.
பிரபலமான பத்து கட்டளையில் அதாவது (TEN COMENTMENTS)ல்.
ஏழாவது கட்டளையான விபச்சாரம் செய்யாதே என்ற வார்த்தையை மாற்றி விபச்சாரம் செய்..
என்று அச்சிட்டு வினியோகம் செய்யப்பட்டது.....
பரவலாக பரவியது இந்த பைபிள்..
பிறகு தான் இதை கண்டு பிடிக்கப்பட்டது.
உடனே அனைத்து பிரதிகளையும் இங்கிலாந்துக்கு அனுப்பி விட வேண்டும் என்று கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
இஸ்டார் சேம்பர் எனுமிடத்தில் அச்சிடப்பட்ட அனைத்து பைபிளையும் தீயிட்டு கொளுத்த பட்டது..
பதிப்பகத்தாருக்கு 300 பவுண்ட் அபராதம் விதிக்க பட்டது.
இருப்பினும் ஒரு சாரார் வேண்டுமென்று தான் இவர்கள் இப்படி பிரிண்ட் செய்தார்கள் என்று கருத்து தெரிவித்தார்கள்....
காரணம் சில வரலாற்று சம்பவங்களை அடிப்படையாக்கி வேண்டும் என்று தான் இவ்வாறு அச்சடிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்றும்.
ஒரு உலக வேதத்தில் பிழையுடன் எப்படி தெரியாமல் அச்சடித்து இருப்பார்கள் என்றும் விமர்சனம் வைக்கப்படுகிறது.
மற்றும் இந்த பைபிளில் ஏசுவை பற்றி நிறைய விஷயங்கள் இப்போது உள்ள பைபிளுக்கு மாற்றமாக இருக்கிறதாகவும் கூறப்படுகிறது. ..
இருப்பினும் இதுவே போதும் இதற்கு மேலுள்ள வாதம் பிறதி வாதத்தை பேசுவது சரியல்ல...
இப்போது விஷயம் எனனவென்றால்..
ஒழுக்கம் கெட்ட பைபிள் என்று சொல்லக் கூடிய தவறுதலாக அச்சடிக்கப்பட்ட பைபிளை முற்றுமுழுதாக அழித்து விட்டாலும் சில பிரதிகள் உலகத்தில் உள்ளது...
அதிகார பூர்வ அறிவிப்பாக டெக்சாசில் மற்றும் இங்கிலாந்திலுள்ள அருங்காட்சியகத்தில் இது பொது மக்கள் பார்வையில் படாமல் வைத்து இருந்தாலும்..
சில பிரதிகள் உலகத்தில் உள்ளதாக அறியப்படுகிறது..
இதன் சொர்ப அளவு மற்றும் பழங்கால அச்சிப்பிரதியாதளால்.. இதற்கு மவுசு அதிகம் இந்திய மதிப்பில் கோடிக் கனக்கில் இந்த பைபிளுக்கு விலையுள்ளது இன்றும் ....