03/03/2022
01/03/2022
ரெய்க்கி மருத்துவம்...
ரெய்க்கி மருத்துவம் எந்தக் தொந்தரவும் தராது..
எனவே தினமும் புது வலுவைப் பெறவும் நோய்கள் விரைந்து குணமாகவும் ரெய்க்கி என்னும் மேஜிக் மருத்துவம் கற்றுக் கொள்வது நல்லது.
ரெய்க்கி : சில சுவையான செய்திகள்..
திபெத் நாட்டில் தோன்றிய முறை இது. ஜப்பான் வழியாக – 19 ஆம் நூற்றாண்டிலிருந்து எல்லா நாடுகளிலும் இது பரவிவிட்டது.
ரெய் என்ற ஜப்பானிய வார்த்தைக்கு எங்கும் நிறைந்துள்ள எல்லாவற்றையும் உள்ளடக்கிய (யுனிவர்சல்) என்று பெயர். கி என்ற வார்த்தைக்கு சக்தி என்று பெயர். இந்த இரு ஜப்பானிய வார்த்தைகள் இணைந்து ‘ரெய்க்கி’ ஆனது. எங்கும் நிறைந்து இயற்கைச் சக்தியைப் பயன்படுத்திக் கொள்ளல் என்பது விரிவான விளக்கம்.
ரெயக்கி மருத்துவச் சிகிச்சைக்கு உபகரணங்கள் தேவை இல்லை.
ரெய்க்கி மருத்துவச் சிகிச்சைக்கு முன்பும் பின்பும் கைகளை நன்கு கழுவ வேண்டும். விதிகள் என்று ஏதுமில்லை. நீங்கள் ஓர் அலைவரிசை தான். தியானம் போல் ஒரே சிந்தனையில் இருக்க வேண்டிய அவசியமில்லை. டிவி பார்த்துக் கொண்டு கூட ரெய்க்கி செய்ய முடியும்.
ரெய்க்கி செய்யும் போது கைகளையும் கால்களையும் குறுக்கே வைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்வது அவசியம். தங்க நகைகளை அதிகம் அணியக்கூடாது.
கியோட்டா நகரத்தின் மிகாவோ உஸ்யி என்ற டாக்டரே இந்த ரெய்க்கி மருத்துவத்தை உலகம் முழுவதும் பரப்பியவர்.
ரெய்க்கி கற்றுக் கொள்ளும் வரை தினமும் காலையும் மாலையும் கால்களை நன்கு அகற்றிக் வைத்துக் கொண்டு கைகள் இரண்டையும் அகல விரித்து தூக்கிக் கொண்டு நில்லுங்கள். ஒரு நீர் வீழ்ச்சியின் கீழ் இருப்பது போல கற்பனை செய்து கொள்ளுங்கள்.
கை விரல்கள் வழியாக இயற்கை சக்திகளும் தலை வழியாக நீர் வீழ்ச்சியும் நுழைந்து உங்கள் உடலில் உள்ள நோய்களை அழித்து கால்கள் வழியாக வெளியேற்றுவதாகக் கற்பனை செய்யுங்கள்.
நீங்கள் இயற்கை சக்தியைப் பெற்று ஆரோக்கியமாகவும் புத்துணர்வாகவும் மாறி வருவதை ஒரு சில மாதங்களிலேயே கண்டு கொள்வீர்கள்...
அரசியல் என்பது என்ன?
கொள்கை
நியாயம்
தர்மம்
ராஜதந்திரம்
சமயோசிதம்.. சேர்ந்ததே..
ஆனால்...
அரசியல் கொள்கை என்பது?
தேவையான போது தைத்து
கொள்ளும் சட்டை...
நியாயம் என்பது?
தேவையில்லாத போது
கிழித்துப் போடும் சட்டை..
தர்மம் என்பது?
பிரம்மாண்டமாய் கட்டப்படும்
தக்கை கோபுரம்..
ராஜதந்திரம் என்பது?
அதிகாரத்தில் இருப்பவரின்
அராஜகத்திற்கு மறுபெயர்...
சமயோசிதம் என்பது?
செய்த கொலையை
அடுத்தவன் மீது போடுவது...
இவை தான் அன்று முதல் இன்று வரை நடந்துக் கொண்டிருக்கும் திருட்டு அரசியல்...
பிராணாயாமம்...
நாம் உண்ணும் உணவு கெமிக்கல். யூரியா போன்ற செயற்கை உரங்களினால் குறுகிய காலத்தில் உற்பத்தி செய்வதனால் சத்தற்ற உணவாகவும். நோய் எதிர்ப்பு தன்மையின்றியும் இருக்கிறது..
மேலும் நாம் குடிக்கும் குடிநீர். சுவாசிக்கும் காற்று. மண் போன்ற இயற்கை வளங்கள் அனைத்தும் கெட்டுள்ளது..
இவற்றின் மூலம் நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கினால் இரத்தம் கெடுகின்றன, இரத்தம் அசுத்தம் ஆவதால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு நோய்கள் உருவாகின்றன..
உலகம் என்பது பரந்து விரிந்துள்ளது, நாம் உலகத்தை சுத்தம் செய்ய முடியாது, நம் உடலில் தினம் சேருகின்ற அழுக்கை சுத்தம் செய்ய முடியும், உடல் அழுக்கானால் எப்படி சோப்பு போட்டு குளிக்கின்றோமோ அதைப் போல் நம் உடலின் உள்ளே இருக்கும் உயிர்காற்றை கொண்டு பிராணாயாமம் என்னும் பயிற்சியின் மூலம் இரத்தத்தை சுத்தம் செய்கின்றோம்..
மேலும் பிராணாயாமப் பயிற்சியின் மூலம் இரத்தத்தின் ஓட்டமும் பிராணனுடைய இயக்கமும் உடல் முழுவதும் சரிசமமாக இயக்கப்படுவதால் அதிகப்படியான சக்தியையும். ஆற்றலையும் பெறுகின்றனர்..
இதனால் நாள் முழுவதும் சோர்வின்றி சுறுசுறுப்புடன் கூடிய துடிப்பான உடல் இயக்கமும் இரவில் நிம்மதியான ஆழ்ந்த தூக்கமும் ஏற்படுகிறது..
நோய் நொடிகள் இன்றி மாத்திரை மருந்துகள் இன்றி வாழ்நாள் முழுவதும் ஆரோக்கிய வாழ்விற்கு பிராணாயாமப் பயிற்சி வழி வகுக்கிறது...
தேச துரோக பாஜக மோடி அரசின் திமிர் பேச்சு...
அரசின் விமானத்தை எல்லாம் மமோடி நண்பர்களுக்கு விற்று கமிஷன் பெற்று விட்டு...
மோடிக்கு ஊர் சுற்ற 8000 கோடியில் விமானம் வாங்கி விட்டு...
இந்தியர்களை காக்க விமானம் இல்லையாம்...