18/05/2017
திமுக கருணாநிதி என்ன செய்திருக்க முடியும், பதவி விலகியிருந்தால் மட்டும் ஈழத்தில் போர் நின்றுருக்குமா? என்று கேட்பவர்களே.. துரோகத்தை உணருங்கள்...
நிச்சயம் முடிந்திருக்கும். அன்று மத்திய காங் அரசை தாங்கிப் பிடித்ததே திமுக தான். ஆட்சி கவிழ்ந்திருந்தால் உலகமே கவனித்திருக்கும்..
ஆனால், கருணாநிதி செய்யவில்லை, ஏன்? ஏனென்றால் அவருக்கு எப்போதும் புலிகள் மீது வெறுப்பு 90களில் பதவிக்கு வரமுடியாமல் போனதற்கு.
அதிகாரமில்லாதவரிடம் ஏன் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன், சிவஷங்கர் மேனன் வாரமொருமுறை இவரிடம் ஆலோசனை பெற்றனர்?
ஆனால் இங்கே மைனாரிட்டி ஆட்சிக்கு காங் தயவு தேவை. பதவிக்காலம் முடியும்வரை சோனியாவின் காலில் விழுந்துகிடப்பதே பாதுகாப்பு.
பிறகு ஏன் டெசொ நடத்துனார்? உண்ணவிரதம் இருந்தாரு? ஏன் போர் நிறுத்தப்பட்டதுன்னு சொன்னாரு?
அனைத்துமே கண்துடைப்பு நாடகம்.
அதுவரை புலிகளுக்கு எதிராகவும், போர் சரியென சொல்லிவந்த ஜெயலலிதா, 26.04.2009 அன்று திடீரென தனித் தமிழ் ஈழம் தான் ஒரே தீர்வு என அறிவிக்கிறார்.
இதை சற்றும் எதிர்பார்க்காத கருணாநிதி என்னசெய்வதென தெரியாமல், எதையாவது செய்தாக வேண்டுமென 28.04.2009 அன்று மெரினாவில் உண்ணாவிரதம் இருக்கிறார்.
காலவரையற்ற உண்ணாவிரதம், சோனியா, மன்மோகன், ப.சிதம்பரம் இலங்கையில் போர் நிறுத்திற்க்கான உறுதி அளித்தாதால் மதியமே முடித்துக்கொள்ளப்படுகிறது..
போர் நிறுத்தப்பட்டதா? ஏன் நின்றதாக சொல்ல வேண்டும் ?
மழை நின்றும் தூவானம் போல,போர் முடிந்தும் அங்கங்கே குண்டு வீசப்படுகிறது என சொன்னது யார்?
மே 1, 2009 அன்று இலங்கை செல்லும் முன்பாக எம்.கே.நாராயணன், சிவஷங்கர் மேனன் குழு இவரை வந்து சந்தித்து செல்கின்றனர்.
மே 13, 2009 அன்று பாராளுமன்ற தேர்தல்.
தமிழகத்தில் ஓட்டுப்பதிவு நடக்கிறது. காங் திமுக கூட்டணி.
மே 16, 2009 அன்று வாக்கு எண்ணப்பட்டு முடிவு வெளியாகின்றது.
திமுக பங்கு பெற்ற UPA பெரும் பாண்மையில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வருகிறது.
மே 17, 2009 இலங்கை ராணுவம் மூர்கத்ததனமாக தாக்குதல் நடத்துகிறது,
முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்தேறுகிறது.
மே 18, 2009 விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும், போர் முடிவுற்றதாகவும் இலங்கை ராணுவம் அறிவிக்கின்றது.
மே 20, 2009 இலங்கையிலிருந்து திரும்பி வந்த எம்.கே.நாராயணன் இலங்கைப் போர் நிலைமையை கருணாநிதியிடம் விவரித்துச் செல்கிறார்.
மே 23, 2009 மீண்டும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் எம்.கே.நாராயணன், சிவஷங்கர் மேனன் கருணாநிதியை சந்தித்து ஆலோசனை பெறுகின்றனர்.
இந்த தேதிகளை பார்த்தாலே இது எல்லாமே திட்டமிட்டு நிகழ்தப்பட்டதென தெளிவாக தெரியும்.
ஆனாலும் கருணாநிதிக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்பர்.
தேர்தலுக்கு முன்பு இலங்கை விஷயத்தில் காங்கிரஸின் இவ்வாறான நடவடிக்கை தொடருமானால் அவர்களை கை விடுவதை தவிர வேறு வழியில்லையென சொன்ன கருணாநிதி..
தேர்தலுக்குப் பிறகு 8 அமைச்சர் பதவிக்கு பேரம். அதுவும், அணு ஆயுத ஒப்பந்தம் காரணமாக மற்ற கட்சிகள் விட்டுப் போனாலும் திமுக இருந்ததாக சொன்னார்..
முடிவாக 7 (3+4) அமைச்சர் பதவிகளை வாங்குனார். 3 காபினேட் அமைச்சர்கள் யாரு? தயாநிதி மாறன், அ.ராசா மற்றும் அழகிரி..
போரின் போதும் தேர்தலின் போதும், உண்ணாவிரதம், டெசோ, ராஜினாமா கடிதம் என தொடர்ந்து பேசிவிட்டு பதவிக்காக இந்த நேரத்தில் அலையலாமான்னு கேட்டதுக்கு..
ஒரு தெருவில் மரணம் நிகழ்ந்திருந்தாலும் மற்றொரு தெருவில் மங்கள இசை ஒலித்ததாக சங்க இலக்கியத்தில் இருப்பதாக சொன்னார் இனதுரோகி கருணாநிதி..
மாநிலத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் கூட அவர் மாறவில்லை..
17.10.2012 அன்று டி.ஆர்.பாலு, ராசா 2ஜி விவகாரதுக்காக பதவி விலக வைக்கப்படுகின்றனர்.
அதுவரை மகள் கனிமொழிக்காக 2ஜி விவகாரத்தில் போராடியவர் 19.03.2013 அன்று இலங்கை விவகாரத்துக்காக காங். கண்டித்து கூட்டணியிலிருந்து விலகுகிறார்.
திடீர் ஞானோதயம் வந்த திராவிட இனத்தலைவருக்கு 4 ஆண்டுகளுக்குப் பிறகு சொரணை வந்த தருணம். (பதவி சுகத்தை அனுபவித்து முடித்துவிட்டு)...
உலகை அதிர வைத்த போர்த்து கீசியர்கள்...
போர்த்துக்கல் பேரரசு பற்றி நம்மில் அதிகமானோருக்கு தெரிந்து இருக்க வாய்ப்பில்லை... தெரிந்து கொள்ளுங்கள்..
உலக வரலாற்றில் முதல் உலகளாவிய பேரரசு என்றால் அது போர்த்துகீசிய பேரரசு தான்.
அதிகாரபூர்வமான அறிவிப்பாக இதை உலக அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்..
முதலாம் யோன் என்ற ஆட்சியாளரின் காலத்தில் மிகப்பெரிய அடக்கி ஆளும் பேரரசாக இது இருந்தது.
1415 களில் இதன் தாக்கம் உலகத்தையே அச்சுறுத்தியது.
அதை தொடர்ந்து இவர்களது கொடுமை 1970 வரைக்கும் நடந்தது.
இவர்களது குறிக்கோள் எங்கெல்லாம் தங்கசுரங்கம் உள்ளதோ அது இவர்களது டார்கெட் , அதே போன்று விலை நிலங்கள் [விவசாயம்].
இவைகள் எங்கெல்லாம் செழித்து குலுங்கியது அங்கெல்லாம் இந்த போர்த்துக்கல் பேரரசு வந்து குவிந்து விடும்..
அப்படி இவர்களால் பாதிக்கப்பட்ட ஒரு நாடு தான் ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய கண்டத்தில் சில இடங்கள்.
இப்படி திடீரென்று இவர்கள் உள்ளே நுழைந்ததும் செய்வதிறியாமல் திகைத்த அந்த நாட்டு மக்களை இராணுவத்தை கொன்றார்கள் இப்படி இவர்கள் கொன்றவர்கள் எண்ணிக்கை ?
நீங்கள் நம்பினால் நம்புங்கள் 5 மில்லியன் மக்கள்...
கொல்வது மட்டுமின்றி அடிமைகளாக பல்லாயிரம் மக்களை பிடித்து கொண்டு போனார்கள் ஆப்பிரிக்க அடிமை நாடாக மாற காரணம் பல நாடுகளில் இவர்கள் முக்கியமானவர்கள் பாலியல் கொடுமை.
1498 இல் இந்தியாவிற்கு கடல் வழியை கண்டு பிடித்தவர்கள் இந்தியாவிற்கும் வந்தார்கள், இந்தியா இன்றைய கோவா பகுதியிலும் பல கொடுமைகளை செய்துள்ளார்கள் என்று வரலாறு சொல்லுகிறது....
அதிகபட்ச தண்டனையாக கொதிக்கும் எண்ணையில் கைகளை கால்களை கட்டி இந்தியர்களை உயிருடன் இறக்கப்பட்டார்கள் என்று வரலாறு உள்ளது...
இவர்கள் உயிருடன் பிடித்து கொண்டு போன அடிமைகளை உலக நாட்டு சபை விடுதலை செய்ய வேண்டும் என்று பலமுறை கூறியும் கேட்காதவர்களை 1970 களில் கண்டிப்பாக அந்த மக்களை விடுதலை செய்ய வேண்டும் இல்லையென்றால் போர்த்துக்கல் கடுமையான விளைவை சந்திக்க நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்த பிறகு..
எரிச்சல் அடைந்த போர்த்துகீசியர்கள் அடிமைகளாக பிடித்து கொண்டு போன அத்துணை பேரையும் நடு வீதியில் வைத்து சித்ரவதை செய்து சாகடித்தார்கள்.
குழந்தைகளின் கண்களை தோண்டி எடுப்பது.. பெண்களின் மார்புகளை அறுத்து வீசுவது.. ஆண்களின் தலைகளை சீவுவது போன்ற கொடுமைகள் நிகழ்ந்தது.. இதைத்தான்
portugal 1970 massacre என்கிறார்கள்....
காய்ச்சல்...
காய்ச்சலைக் குறைக்க வெங்காயத்தைப் பிழிந்து தண்ணீர் சேர்த்து சாறாக மாற்றி அருந்தலாம். இது கைகண்ட மருந்து.
குறிப்பாக காலராவால் பாதிக்கப்பட்டவர்கள் முப்பது கிராம் வெங்காயத்தில் ஏழு அல்லது எட்டு மிளகை வைத்து அரைத்து இந்தத் துவையலைச் சாப்பிட்டால் காலரா நோயாளியின் தாக்கமும் தணியு[ம். மனப் படபடப்பும் குறைந்து அமைதியாகத் தூங்குவர்.
காய்ச்சலின் போது திட உணவு சாப்பிடும் வகையில் நோயாளி திடகாத்திரமாக இருந்தால் உணவுப் பாதைக்கு அதிகம் சிரமம் தராத உணவு வகைகளைத் தேர்வு செய்ய வேண்டும்.
காய்ச்சிய அரிசிக் கஞ்சி, பார்லி, வெந்தயக்கீரை, காய்கறி, சூப், பால், தயிர், முட்டை, இட்லி, இளநீர், கரும்புச்சாறு முதலியவற்றைச் சாப்பிடலாம். இவை உணவுப் பாதைக்குச் சிரமம் தராதவை.
காய்ச்சல் குறைய ஆரம்பித்த இரண்டொரு நாளிலிருந்தே சாத்துக்குடிச் சாறை மட்டும் தவறாமல் அருந்த வேண்டும். இது உடலுககுப் புத்துணர்ச்சி ஊட்டும்.
எனவே இரண்டு வேளையாவது சாத்துக்குடி சாறு அருந்துவது நல்லது.
காலையில் பெட் காப்பி போல் அடுத்த சில வாரங்களுக்கு எலுமிச்சை, தேன், தண்ணீர் சேர்ந்த சர்பத்தை அருந்தி வரவேண்டும்.
எல்லாவற்றையும் விட முக்கியமானது, படுக்கையில் முழு ஓய்வு எடுப்பது...
வாழை இலையின் பயன்கள்....
1. வாழை இலையில் சாப்பிடுவதால் இளநரை வராமல், நீண்ட நாட்களுக்கு முடி கருப்பாக இருக்கும்.
2. தீக்காயம் ஏற்பட்டவர்கள் வாழை இலை மீது தான் படுக்க வைக்க வேண்டும் அப்பொழுதுதான் சூட்டின் தாக்கம் குறையும்.
3. சாப்பாடு வாழை இலையில் பேக்கிங் செய்தால் சாப்பாடு கெடாமலும், மனமாகவும் இருக்கும்.
4. பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணெய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டி யையும் இலையில் இருந்து பெறப்படும் குளுமையும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.
5. காயம், தோல் புண்களுக்கு தேங்காய் எண்ணெய்யை துணியில் நனைத்து புண்மேல் தடவு வாழை இலையை மேலே கட்டு மாதிரி கட்டி வந்தால் புண் குணமாகும்.
6. சின்ன அம்மை, படுக்கைப் புண்ணுக்கு வாழை இலையில் தேன் தடவி தினமும் சில மணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும்.
7. சோரியாசிஸ், தோல் அழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும்.
தலை வாழை இலை என்றதும் அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்து தான்.
அது சைவ உணவாக இருந்தாலும் அசைவ உணவாக இருந்தாலும் இலையில் தான் நிச்சயம் இருக்கும். இன்றைய வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது அதுவும் நகர் புறங்களில் தட்டு அல்லது பாலீதின் பேப்பரில் தான் இங்கு இருக்கும் ஓட்டல்களில் உணவு கிடைக்கிறது.
இது காலமாற்றத்தினால் ஏற்பட்ட மாற்றம் நகர்புறத்தில் இருப்பவர்கள் சாப்பிட்டுத்தான் ஆகவேண்டும்.
ஆனால் நம்மில் பலர் தனது சொந்த கிராமத்திற்கு விடுமுறை நாட்களில் செல்லும் போது தட்டிலேயே வாடிக்கையாக உணவு அருந்துகின்றனர், அதை மாற்ற முயற்ச்சிக்கலாம்.
இலையில் சாப்பிடும் போது ஏற்படும் நன்மைகளை அறியும் போது ஏன் நம் முன்னோர்கள் இலையில் சாப்பிட்டார்கள் என நமக்கு தெரியவரும்.
நம் முன்னோர்களின் வாழ்க்கை முறையில் எத்தனை சிறப்பு அம்சங்கள் அவர்கள் வகுத்துள்ள முறைப்படி நாம் உணவு உண்டு வேலை செய்தாலே நிச்சயம் நோயின்றி வாழலாம் அதற்கு வாழை இலையில் சாப்பிடுவதும் ஓர் உதாரணமே...
Subscribe to:
Posts (Atom)









