இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் பதியப்படவில்லை...
29/06/2017
யார் இந்த நாடார் சமுதாயம்...? ஏன் அவர்களுக்கு ஒரு தனி முக்கியத்துவம்..?
இது யாருடைய மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் பதியப்படவில்லை...
வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும்...
சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று
வேம்பு சிறப்பிக்கப்படுகிறது...
இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள்
அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக்
கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள்
கண்டறியப்பட்டுள்ளன.
இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக்
கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie
போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப
எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.
லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும்
வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.
வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.
வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக்
கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப
எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.
எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர்.
சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று
விடுவதையும் கண்டுள்ளனர்.
நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின்
வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம்
பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக
சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது.
காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.
வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.
வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும்மேற்பட்ட
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
வேறு பெயர்கள்...
அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.
மருத்துவப் பண்புகள்
இலை:
1)புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
2)வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.
3)வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.
4)வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
பூ.. பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.
காய் + பழம்.. தோல் நோய் தீரும்.
விதை...
1)மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.
2)விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.
நெய்
1)துஷ்ட புண்கள் தீரும்.
2)ஆராத இரணங்கள் தீரும்.
வேப்பம் பட்டை
1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.
2)கஷாயம் குட்டம் தீரும்.
அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
பிசின்...
1)மேக நோயைப் போக்கும்.
குறிப்புகள்...
பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.
100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில்
சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.
பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல்
பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.
வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில்
கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து
வளரும்.
வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை
உடையதாகும். விந்து கட்டும்
வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப்
பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.
நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம்.
என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல்
உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது...
திமுக கருணாநிதி ஈழத் தமிழர்களுக்காக பதவியை ராஜினாமா செய்தாரா..?
திமுக கருணாநிதி பதவி தேவை இல்லை என்று ராஜினாமா செய்யும் அவ்வளவுக்கு நல்லவரா என்று யோசிக்கும் புதியதலைமுறை அரசியல் நோக்காளர்களுக்கு...
1969 ஆம் ஆண்டு அண்ணாதுரை இறந்த பின் கருணாநிதி முதல்வராக பொறுப்பேற்றார்.. ஆட்சிகாலம் முடிவதற்கு ஓராண்டுக்கு முன்னரே தேர்தல் வந்துவிட்டதால் 1971 யில் மீண்டும் தேர்தல் வந்தது. கருணாநிதி சைதாபேட்டையிலும் எம்ஜியார் பரங்கிமலையிலும் வெற்றிபெற்றனர்.
இதற்கு முன்னர் 1967 யில் திமுக முதல் முறை ஆட்சி அமைத்த பொழுதே அமைச்சருக்கு இணையான பதவியில் இருந்த எம்ஜியார் 1971 தேர்தலில் வெற்றியில் தன பங்கும் இருக்கிறது என்ற எண்ணத்தில் அதற்கும் சற்றே பெரிய பதவியை எதிர்பார்த்து அமைச்சர் பதவி கேட்கிறார்.
கருணாநிதிக்கு எப்பொழுதும் இருக்கும் வஞ்சக எண்ணத்தில் அதை தர மறுக்க, எம்ஜியார் அதிர்ப்தியில் தி.மு.கவின் பொருளாளராக இருந்தமையால் கணக்கு வழக்கு கேட்க 1972ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தி.மு.கவிலிருந்து தற்காலிகமாக நீக்கினார் கருணாநிதி. அடுத்த நாலு நாட்களில் நிரந்தரமாக நீக்கப்பட்டார்.
அடுத்த மூன்று நாளில் அக்டோபர் 17 அன்று அண்ணா திமுகவை ஆரம்பித்தார் எம்ஜியார்.
மதியழகன் தான் அப்போதைய சபாநாயகர். கடந்த (1969 - 1971 ) ஆட்சியில் பதவியை துஷ்ப்ரயோகம் செய்ததாக கருணாநிதி மதியழகனை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கி இருந்தார், அதில் அதிர்ப்தியாய் இருந்த மதியழகன் எம்ஜியார் பக்கம் சாய்ந்தார்.
சபாநாயகரை கைக்குள் வைத்து கொண்டு எம்ஜியார் விளையாடியதை கருணாநிதி அவரை நீக்கி கூச்சல் குழப்பம் செய்து அடித்துடைத்தார்.
எம்ஜியார் இனி சட்டசபைக்கே வரமாட்டேன் என்று சபதம் செய்து வெளியேறினார்.
கருணாநிதியை எதிலாவது தோற்க்கடிக்க வேண்டும் என்று இருந்த எம்ஜியாருக்கு வகையாக வந்து சிக்கியது 1973 திண்டுக்கல் பாராளுமன்ற தொகுதிக்கான இடைதேர்தல். எம்ஜியார் கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து திண்டுக்கலில் மாயதேவரை ஒருலட்சம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற செய்தார். திமுக மூன்றாம் இடம் தான் பெற முடிந்தது.
அடுத்து வந்த பாண்டிச்சேரி சட்டமன்ற தேர்தலிலும் அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று காங்கிரஸ் தயவில் ஆட்சி அமைத்தது (சில நாட்களில் அந்த ஆட்சியை இந்திரா காந்தி கவிழ்த்தார்). தொடர்ந்து எம்ஜியார் சட்டபைக்கு செல்வதை புறக்கணித்து திமுக அரசை எதிர்த்து அரசியல் செய்து வந்தார்.
திமுக ஊழல் கட்சியாக முழுவதுமாக உருவெடுத்தது இந்தகாலகட்டத்தில் தான்.
எமர்ஜன்சி காரணமாக 1971 க்கு பிறகு 1977 யில் தான் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடந்தது. அத்தேர்தலில் பாண்டிச்சேரியில் துரோகம் செய்த இந்திரா காங்கிரசின் உறவை முறித்துக்கொண்டு தனியாக நின்று எம்ஜியார் 130 இடங்கள் பெற்று அமோக வெற்றி முதல்வரானார்.
1979 ஆண்டு காங்கிரசிற்கு எதிராக கட்சிகளை திரட்டும் முயற்சியின் முகமாக திமுகவையும் அதிமுகவையும் இணைக்க ஜனதா கட்சியின் பிஜுபட்நாயக் தலைமையில் முயற்சி நடந்தது. முதல் நாள் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டு விட்டு அன்று இரவே டெல்லி சென்று எம்ஜியாரை பழிவாங்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்தில் எந்த கட்சிக்கு எதிராக திமுக தொடங்கப்பட்டதோ, எந்த கட்சி எம்ஜர்ஜன்சி சமயத்தில் திமுகவை ஒடுக்கியதோ அந்த கட்சியோடு கூட்டணி அமைத்தார் கருணாநிதி.
அதிமுக ஆட்சிக்கு வந்து மூன்றாண்டுகளே ஆனநிலையில் கருணாநிதி தூண்டுதலில் இந்திரா காந்தியால் ஆட்சி கலைக்கப்படடது.
அதன் பின் மே 28 1980 அன்று நடைபெற்ற தேர்தலில் நேருவின் மகளே வருக நிலையான ஆட்சி தருக என்று முழங்கி காங்கிரசோடு கைகோர்த்து நின்றார் கருணாநிதி.
கம்யூனிஸ்ட்களோடு கூட்டணி அமைத்து நின்றார் எம்ஜியார்.மக்களிடம் இருந்த அபரீதமான செல்வாக்கால் 38.75 சதவீத வாக்கு பெற்று மீண்டும் எம்ஜியார் முதல்வரானார்.
கடந்த தேர்தலை விட 11 தொகுதி குறைவாக பெற்றது கருணாநிதிக்கு விழுந்த பெரிய அடி, அத்தோடு காங்கிரசும் கருணாநிதியை கழட்டி விட்டது.
அத்தேர்தலில் அண்ணா நகர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட கருணாநிதி காங்கிரசும் எம்ஜியார் பக்கம் சாய்ந்த நிலையில் எம்ஜியாரை எதிர்த்து அரசியல் செய்ய வேற வழி இல்லாமல் தமிழீழ பிரச்சினையை கையில் எடுத்து 1983 ஆகஸ்ட் 10-ல் இந்திய, தமிழ்நாடு அரசுகளின் நிலைப்பாட்டைக் கண்டித்து அன்பழகனை கூட்டிக்கொண்டு ராஜினாமா செய்தார்.
ஆனால் சட்டமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்த சிறிது காலத்தில் சட்டமன்ற மேலவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் கருணாநிதி.
இந்த பதவியை ராஜினமா செய்வது போல செய்துவிட்டு அந்த பதவியில் சென்று அமர்ந்து கொண்டார் கருணாநிதி. இது தான் அவரின் "ஈழ தியாகம்"..
இதை தான் இன்றைய திமுகவினர் தங்கள் தலைவரின் இணையற்ற தியாகம் என்று சொல்லி வருகின்றனர்.
இதில் ஒன்னொரு விசயமும் இருக்கிறது. கருணாநிதி ராஜினாமா நாடகம் என்று தெரிந்ததால் தான் என்னவோ மக்கள் அதன் பின் 1984 டிசம்பர் மாதம் நடந்த தேர்தலில் மீண்டும் திமுகவை அசிங்கமாக தோற்கடித்தனர்.
கருணாநிதி தேர்தலில் நிற்காமல் சுழன்று சுழன்று பிரச்சாரம் செய்த பொழுதும் கடந்த தேர்தலை விட 13 தொகுதிகள் குறைவாக பெற்றது திமுக..
தயவு செய்து இனியும் கருணாநிதி ஈழதமிழர்களுக்காக பதவியை தூக்கி எறிந்தார் என்று உடன்பிறப்புகள் சொன்னால் அவர்கள் மீது கையில் கிடப்பதை தூக்கி எறியுங்கள்.. அது காலில் கிடப்பதாக இருந்தாலும் சரி...
வீரப்பனார் எனும் எல்லைக் காவல் தெய்வம்...
சுள்ளி பொறுக்க காட்டிற்குள் சென்று வழி தெரியாமல் போய்விட்ட பெண்களை பார்த்தால்...
நீ ஏம்மா இங்க எல்லாம் வர? பொலிசுகாரனுங்க கண்ணுல பட்டுட போற...
ஏதாவது ஆடு வளத்து பொழச்சிக்கோ
என்று கையில் இருக்கும் காசை கொடுத்து காட்டு எல்லை வரை வந்து விட்டு விட்டு போவாராம் வீரப்பன்..
வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்...
1. காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவுகூற வேண்டும்.
2.வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆகியோருக்குநஷ்டஈடு தரவேண்டும்.
3. தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கானசட்டம் இயற்ற வேண்டும்..
4. பெங்களூரில் மூடப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும்.
5.தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும்.
6.தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்...
துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் மட்டுமே தமிழர்களை வீழ்த்தினீர்கள் என்று வரலாறு காட்டுகிறது திருட்டு திராவிடர்களே...
மீத்தேன் திட்டத்திற்கு திமுக ஆட்சியில் ஒப்புதல் அளித்தது உண்மைதான்.. அதன் பாதிப்புகள் தெரியாமல் ஒப்புதல் அளித்துவிட்டோம் - திமுக ஸ்டாலின் திருவாரூரில்...
இன்னன்ன மந்திரி பதவிகளை குடும்பத்தினருக்குத் தந்தாள் தான் அமைச்சரவையில் சேருவோம் என்று இங்கிருந்து சக்கர நாற்காலியை டெல்லி வரை உறுதிச் சென்று அடம் பிடித்து அலசி ஆராய்ந்து வாங்கத் தெரியும் ...
பேரனின் நிறுவனமாக இருந்தாலும், கறாராக பேசி பங்கு பிரித்து காசை வாங்கிக் கொள்ளத் தெரியும் ...
75 ஆண்டு அரசியல் அனுபவம் கொண்டவர் என்று ஊர் ஊராகச் சென்று சுய தம்பட்டம் அடித்துக் கொண்டும், செய்கின்ற போக்கிரித் தனத்திற்கு எல்லாம் ராசதந்திரம் என்று பெயர் சூட்டி தற்பெருமை ஜம்பமடித்துக் கொள்ளத் தெரியும்...
ஆனால் அப்பாவி மக்களின் நிலத்திற்கு, நீர் வளத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதை மட்டும் தெரிந்துக் கொள்ளாமல் ஒப்புதல் கொடுத்தார்களாம் ....
இந்த அசிங்கங்கள் ஒழிந்தால் தான் தமிழக அரசியலுக்கே விடிவுகாலம்...
ஆரியமும் திராவிடமும் ஒன்று இதை அறியாதவர்கள் வாழ்கையே மன்னு....
அன்பென்று கொட்டு முரசே — மக்கள்
அத்தனை பேரும் நிகராம்.
இன்பங்கள் யாவும் பெருகும் — இங்கு
யாவரும் ஒன்று என்று கொண்டால் ’ (பாரதி)..
வெளிநாட்டு ‘அறிஞர்களும், உள்நாட்டு அரசியல்வாதிகளும் செய்துவரும் பொய், பித்தலாட்ட, சூது, வாதுகளை அம்பலப்படுத்தவே இதை எழுதுகிறேன்.
ஆரிய-திராவிட வாதத்தை ஹரிஜன தலைவர் அம்பேத்கர், மஹாத்மா காந்தி, சுவாமி விவேகாநந்தர் போன்ற பெரியோர்கள் உடைத்துத் தகர்த்து எறிந்த பின்னரும் சிலர் உடும்புப் பிடியாகப் பிடித்திருக்கின்றனர் என்பதை நாம் அறிவோம்.
திராவிடர்கள் பிராமணர்களே.. பிராமணர்கள் திராவிடர்களே..
திராவிடர்கள் யார்?
தமிழ் நூல்களும் சம்ஸ்கிருத நூல்களும் வியப்பான பல தகவல்களைத் தருகின்றன..
ஆதி சங்கரர் என்ற உலகம் வியக்கும் தத்துவ வித்தகரைப் பற்றித் தமிழ் அறிஞர்களும் வடமொழி அறிஞர்களும் ஒரு கருத்தை தயங்காமல் ஒத்துக் கொள்கின்றனர். அவர் காலத்தைக் கணிக்க முக்கியச் சான்றாகவும் அதைக் கருதுவர். அவர் எழுதிய சௌந்தர்ய லஹரி (அழகின் பேரலைகள்) என்னும் சம்ஸ்கிருதக் கவிதையில்/ துதிப்பாடலில் ஒரு இடத்தில் “திராவிட சிசு” என்ற ஒரு குறிப்பு வருகிறது. யார் இந்த திராவிடக் குழந்தை (சிசு)?
சிலர் இதை திருஞான சம்பந்தர் பற்றி ஆதிசங்கரர் குறிப்பிட்டது என்று சொல்லுவர். இதனால் ஆதி சங்கரரை சம்பந்தருக்குப் பின்னாலுள்ள காலத்தில் வைப்பர். இது உண்மையானால் “திராவிட” என்பது ஒரு பார்ப்பனச் சிறுவனைக் குறிக்கிறது. அதாவது சம்பந்தரை. ஆக, திராவிட என்பது பிராமணரைக் குறிக்கும்..
நான் ஆதி சங்கரர் பற்றி எழுதிய கட்டுரையில் இது பின்னால் வந்த அபினவ சங்கரர் என்பவர், அவருக்கு மிகவும் முந்திய ஆதி சங்கரரைப் பற்றிக் குறிப்பிட்டதாக இருக்கலாம் என்று எழுதினேன். அல்லது ஞான சம்பந்தர் எல்லா இடங்களிலும் தன்னையே குறிப்பிடுவது போல ஆதி சங்கரரே தன்னை இப்படி “திராவிட சிசு” என்று குறிப்பிட்டிருக்கலாம் என்றும் எழுதினேன். இந்த மூன்று விளக்கங்களில் எது சரியானாலும் திராவிட என்பது ஒரு பிராமணச் சிறுவனைக் குறிக்க பயன்படுத்தப் பட்டதே. சங்கரனும் சம்பந்தரும் பிராமணர்களே..
கிரிக்கெட் ஆடும் திராவிடன்..
கிரிக்கெட் விளையாட்டு வீரர் ராகுல் திராவிட் ஒரு மராட்டிய பிராமணர். இவருக்கு ஏன் திராவிட அடைமொழி வந்தது?
ஏனெனில் இவர் ஒரு தெற்கத்திய பிராமணர்.
கர்நாடகம் முதல் மத்தியப்பிரதேசம் வரை குடியேறிய தெற்கத்திய பிராமணர்களை இப்படி அழைப்பர் (மேல் விவரங்களை விக்கி பீடியாவில் காண்க) இதே போல பாண்டிய நாட்டிலிருந்து குடியேறிய பிராமணர்களை குஜராத்தில் பாண்டியா என்று அழைப்பர். சோழ நாட்டுப் பிராமணர்களை சோழியர் என்று அழைப்பர். இதில் ஒரு முக்கிய விஷயமும் அடங்கி இருக்கிறது. பிராமணர்கள் வடக்கிலிருந்து வரவில்லை. தெற்கிலிருந்து நேபாள காத்மண்டு கோவில் வரை சென்று அர்ச்சகர் பதவியை ஏற்றனர். இலங்கை மகாவம்சம், இலங்கைப் பார்ப்பனர் பற்றிப் பேசும்.
இதைச் சொல்வதற்கு காரணம் என்னவென்றால், உண்மை இப்படி இருக்க, கடந்த நூறு ஆண்டுகளில் மதத்தைப் பரப்ப வந்தவர்களும், ஆட்சியைப் பிடிக்க வந்தவர்களும், ஆங்கிலேய ஆட்சிக்கு நிரந்தர சிம்மாசனம் கொடுக்கவேண்டும் என்று கட்சி நடத்தியவர்களும் “திராவிட “ என்ற சொல்லில் எவ்வளவு “விஷத்தைக்” கலந்து அர்த்தத்தை அனர்த்தமாக்கி விட்டார்கள் என்பதைக் காட்டத்தான்.
உண்மையில் ஆரிய என்ற சொல் பாண்பாடுமிக்க கனவான் என்றும் திராவிட என்பது தெற்கிலிருந்து வந்தவன் என்ற பொருளிலும் மட்டுமே பயன்படுத்தப்பட்டன. அதில் விஷத்தைக் கலந்து திராவிடன் ஒரு சப்பை மூக்கன், குட்டையன், சுருட்டை முடியன், ஆண்குறியை (லிங்கம்) வழிபடுபவன், சிந்துவெளியிலிருந்து ஓடிவந்த கோழை என்றெல்லாம் சிந்து சமவெளி ஆராய்ச்சிக்காரர்களும் வெள்ளைக்காரர்களும் எழுதி வைத்து விட்டார்கள்..
இன்னும் சிலர் அகத்தியர் பெயரில் கதை அடித்துள்ளனர். அகத்தியர்தான் பிராமணர்களை தெற்கே அழைத்துவந்தவர் என்றும்.. அது சரியல்ல.
உண்மையில் புறநானூற்றுக்கு உரை எழுதியோர் 18 குடி வேளிரை, அவர் தெற்கே அழைத்துவந்ததாக எழுதியுள்ளனர். கோயபெல்ஸ் என்பவன் ஒரு பொய்யை பத்து முறை சொன்னால் உண்மை என்று நம்பிவிடுவார்கள் என்று சொல்லி ஹிட்லருக்கு பக்க பலமாக நின்றான். இங்கோ வெளி நாட்டு, உள்நாட்டு தேச விரோதிகளும் மத விரோதிகளும் தமிழ் ,சம்ஸ்கிருத நூல்களில் இல்லாத விஷயங்களை உண்மைபோல நூறு முறை எழுதியுள்ளனர்.
திராவிடாசாரியா..
அ.சிங்காரவேலு முதலியாரின் அருமையான நூல் ‘’அபிதான சிந்தாமணி’’, இன்னும் பல செய்திகளத் தரும்..
பஞ்ச திராவிட என்ற சொற்றொடருக்கு சிங்காரவேலு முதலியார் தரும் விளக்கம்: கன்னடம், தெலுங்கு, மகாராஷ்டிரம், கர்நாடகம், கூர்ஜரம் என்னும் தேசத்துப் பிராமணர். கன்னடம், மைசூர் முதல் கோகொண்டா வரை; தெலுங்கு, காளத்தி முதல் கஞ்சம் வரை; மகராஷ்டிரம், கோல்கொண்டா முதல் மேற்குக் கடல் வரை; கர்நாடகம் (தமிழ்), கன்யாகுமரி முதல் காளத்தி வரை; கூர்ச்சரம், குசராத், முதல் டில்லி வரையிலுள்ள தேசங்களாம்.
(இந்த அற்புதமான விளக்கம், பஞ்ச திராவிடர் என்பது பிராமணரை மட்டுமே குறிக்கும் என்பதைக் கட்டுகிறது. கர்நாடக சங்கீதத்தை ஏன் கர்நாடக என்று சொல்கிறோம் என்பதையும் விளக்குகிறது).
அபிதான சிந்தாமணி வழங்கும் மேலும் பல விளக்கங்கள் இதோ..
திராவிடாசாரி என்பவர் வேதாந்த சூத்திரத்துக்குப் பாஷ்யம் செய்தவர். இவர் ஆதி சங்கரருக்கும் முன்னதாக அத்வைத கொள்கையைப் பரப்பியவர். இவரும் பிராமணரே.
திராவிடபூபதி என்பவன் அகத்தியர் கால திராவிட அரசன்.
திரவிடன் என்பவன் சூர்ய வம்சத்தரசன்.
திவ்யப் ப்ரபந்தத்தை திராவிட வேதம் என்பர்.
நான் ஏற்கனவே எழுதிய கட்டுரையில் கி.மு 1320ல் ஆண்ட திராவிட ராணி குறித்து எழுதி இருக்கிறேன்.
தெலுங்கு பிராமணர்களில் ஒரு பிரிவினருக்கு திராவிட என்ற ஜாதிப் பெயர் உண்டு. ஆக திராவிட என்பது பூகோளப் பெயரே அன்றே இனப் பெயர் அல்ல. தெற்கே பேசிய பாஷையை — திராவிட பாஷை என்று அழைத்தனர். அது தமிழாகவும் இருக்கலாம், தெலுங்காகவும் இருக்கலாம்.
தென் இந்தியாவில் இருந்து வடக்கே போன எல்லோரையும் ”மதறாசி” ( மெட்ராஸ்காரன் ) என்று வடக்கத்தியர் சொல்லுவர். ஆனால் அவர்களில் பலர் தெலுங்கர், மலையாளிகள், கன்னடக்காரரகள்!!இதுபோலத்தான் திராவிடன் என்பதும்.
தமிழ் நாடு — திராவிடநாடு அல்ல..
இதைவிட வியப்பான மற்றொரு செய்தியும் நமது இலக்கியங்களில் உள்ளது. ஆதி காலத்தில் திராவிடத்துக்கும் தமிழ் நாட்டுக்கும் சம்பந்தமே இல்லை..
இந்தச் சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் எங்கும் இல்லை.
இந்தியாவில் இருந்த 56 தேசங்களில் சேர, சோழ, பாண்டிய, கேரள, கொங்கண தேசங்களுக்குப் பின்னர் திராவிட என்றும் ஒரு தேசம் குறிப்பிடப்படுகிறது. ஆக இது தமிழ்நாட்டின் பகுதி அல்ல. பழங்கால தேசப்பட புத்தகங்களிலும் தமிழ் நாட்டுக்கு வெளியேதான் திராவிடம் காட்டப்பட்டிருக்கிறது. தெலுங்கு தேசத்தில் ஒரு சிறிய பகுதிக்கு இப்படி பெயர் இருந்ததோ என்று எண்ணத் தோன்றுகிறது. இன்னும் தோண்டத் தோண்ட செய்திகள் வந்து கொண்டே இருக்கிறது.
நம்முடைய தெலுங்கு, கன்னட, மலையாள அரசியல்வாதிகள் (மேனன்கள், நாயக்கர்கள்) தமிழ் நாட்டில் உட்கார்ந்துகொண்டு “திராவிட” என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லோரையும் ஏமாற்றுகையில் அழுவதா, சிரிப்பதா? என்று தெரியவில்லை.
ஏமாளிகள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருக்கத்தானே செய்வார்கள்?
தமிழ் என்பதே திராவிடம் என்று மாறியது..
(தமிழ்=த்ரமிள=த்ரவிட=த்ராவிட) என்றும் இல்லை, இல்லை, த்ராவிடம் (த்ராவிட=த்ரவிட= த்ரமிள = தமிழ் ) என்பதிலிருந்தே தமிழ் வந்தது என்றும் முட்டி மோதிக் கொள்ளும் ஆராய்ச்சியாளர்களும் உளர்..
தில்லான் என்னும் வடக்கத்திய பெயர் பற்றி காஞ்சி பரமாசார்ய சுவாமிகள் அருமையான விளக்கத்தைக் கூறியுள்ளார்: த்ரிலிங்க தேசம் (தெலுங்கு) என்னும் இடத்திலிருந்து வடக்கே சென்றவர்கள் தில்லான் (த்ரிலிங்கன்) என்று அழைக்கப்பட்டனர் என்பார்.இதே போல தெற்கிலிருந்து சென்ற பிராமணர்களுக்கு திராவிட் — என்று பெயர்.
திராவிட என்ற சொல் பழந்தமிழ் இலக்கியத்தில் கிடையாது. ஆனால் ஆரிய என்ற சொல் சங்கத் தமிழ் நூல்களிலேயே ஏழு இடங்களில் வருகிறது. இனத்தைக் குறிக்கும் பொருள் யாங்கனும் இல்லை. பிராமணர்கள் மட்டுமே திராவிடர்கள் என்று சொல்லவில்லை. திராவிட என்பது தெற்குத் திசையை மட்டுமே குறிக்கும் சொல் ஒரு இனத்தைக் குறிக்கவந்த சொல் இல்லை, இல்லவே இல்லை என்று சொல்லவே இவ்வளவும் எழுதினேன்...
Subscribe to:
Posts (Atom)









