06/07/2017

காவிரிப் படுகையில் எண்ணெய் எரிவாவு எடுப்பு பணியில் மக்கள் நலன் புறக்கணிப்பும் ஒ என் ஜி சி-உயர்நிலை ஆய்வுக்குழுவின் விதிமுறை மீறல்களும்...




மீத்தேன் எடுப்புத் திட்டமோ,கனிம சுரங்கப் பணி திட்டமோ அல்லது அணை கட்டுகிற திட்டமோ இந்த திட்டங்களை மேற்கொள்வதற்கு முன்பாக அப்பகுதியின் சூழலியல் பாதிப்பு நிலைமை குறித்து ஆய்வு செய்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அறிக்கை தாக்கல் செய்து, பாதிப்பு ஏதும் இல்லை என்ற அனுமதி பெற வேண்டும்.

அதன் பின்னர்தான் அப்பகுதியில் எந்த திட்டமென்றாலும் நடைமுறைப் படுத்த வேண்டும் என இந்திய முதலாளித்துவ அரசியல் சாசனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் 1986இல் திருத்தம் மேற்கொண்டு 2006 ஆம் ஆண்டுமுதல் இந்த விதி நடைமுறையில் உள்ளது.

காவிரிப்படுகையில் அதுவரை இஷ்டம்போல வேண்டிய இடத்தில துளை போட்டு எண்ணெய் எரிவாவு எடுத்து வந்த ஒ என்ஜி நிறுவனத்திற்கு இந்த விதி எரிச்சலை ஏற்படுத்தும் என்பதில் வியப்பொன்றுமில்லை.

எந்த இடத்தில் பணி தொடங்க வேண்டுமென்றாலும்,அது குறித்த Environment Impact Accessment அறிக்கையை மத்திய சுற்றுச்சூழல் துறைக்கோ அல்லது மாநில சுற்றுச்சூழல் கண்காணிப்பு துறைக்கோ அனுப்பி ,திட்டம் தொடங்குவதற்கு முன் அனுமதி வாங்க வேண்டும்.இவ்வாறு தயாரிக்கப்பட்ட ஆவணத்தை மக்கள் பார்வைக்காக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்தும் , மக்களிடம் கருத்து கேட்ப்பு கூட்டம் நடத்தியும், இந்த கூட்ட முடிவுகளை பதிவு செய்ய வேண்டும்.

இந்த ஆவணங்களை பின்னர் உயர்நிலை ஆய்வு குழுவு (Expert Appraisal Comittee)
ஆய்வு செய்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தனது பரிந்துரைகளை வழங்கும் , இந்த பரிந்துரைகளின் பேரில், அமைச்சகம் இத்திட்டத்தை மேற்கொள்ள அனுமதி வழங்கும்.

இந்த நடைமுறைகளை முறையாக மேற்கொள்ள வக்கற்ற ஒ என் ஜி சி நிறுவனமானது,புதிதாக குழாய் பதிப்பதற்கு அனுமதி வழங்கக்கோருகிற விண்ணப்பத்தில்,. தவறான தகவல்களை உயர்நிலை ஆய்வு குழுவிற்கு அனுப்பி வைத்து, முறைகேடான வகையில் அனுமதி வாங்க முயற்சித்து வருகிறது.





தஞ்சை மாவட்டத்தில் 10-7-14 அன்று மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற கருத்துக் கேட்ப்பிற்கு பிறகு எந்தவொரு கருத்து கேட்பு கூட்டமும் நாகை,திருவாரூர் மாவட்டங்களில் நடைபெறவில்லை.

தஞ்சையில் நடைபெற்ற அந்த ஒரே கருத்துக் கேட்ப்பு கூட்டமும் மக்களின் கடும் எதிர்ப்பின் காரணமாக பாதியில் முடிக்கப்பட்டது..இந்த கூட் மணித்துளியில்,மாவட்ட ஆட்சியரே இதை குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் ஒ என் ஜி சி நிறுவனமோ ,புதிய குழாய் பதிப்பிற்கு எந்த எதிர்ப்பும் இல்லை எனவும் , மக்கள் கருத்து கேட்ப்பு அவசியமில்லை எனவும் பொய்யாகவும் முறைகாடாகவும் உயர்நிலை ஆய்வு குழுவிற்கு அறிக்கை அளித்துள்ளது.

தஞ்சையில் நடைபெற்ற கருத்து கேட்பு கூட்ட முடிவை முற்றிலும் மறைத்து இந்த மோசடி வேலைகளை இந்திய பொதுத்துறை நிறுவனம் மேற்கொண்டுள்ளது.

எந்த எதிர்ப்பும் இல்லை Notary, Tamilnadu government உம் பிரமாணப் பத்திரம் வழங்கியுள்ளது.

இதை ஏற்றுகொண்ட உயர்நிலை ஆயுவ்குழுவும், புதிதாக குழாய் அமைக்க, சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு பரிந்துரை வழங்கியுள்ளது.

இது முழுக்க முழுக்க அதன் சொந்த அரசியல் சாசனத்தையே மீறுகிற முறைகேடான வழிமுறையாகும்.இது குறித்து மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளரான பேராசிரியர் ஜெயராமன் அவர்கள் விரிவான வகையில் தமிழக முதலமைச்சருக்கும், தஞ்சை , திருவாருர், நாகை மாவட்ட ஆட்சியாளர்களுக்கும் கடிதம் எழுதியுள்ளார். ஆனால் அதன் மீது எந்த நடவடிக்கையும் பதிலும் இல்லை , மாறாக, பேராசியர் ஜெயராமன் உள்ளிட போராட்ட குழுவினரை சிறைக்கு அனுப்பியுள்ளது.

எடுபிடி அரசு..அரசும் அதன் சட்ட திட்டங்களும் முதலாளிய வர்க்க நலனுக்குத்தான் என்பது அரசின் ஒவ்வொரு ஒடுக்குமுறையின் பொது வெட்ட வெளிச்சமாகி வருகிறது.

இணைப்பு:பேராசிரியர் ஜெயராமன், அனுப்பிய கடிதங்கள்...

கான்ஸ்பரசியை பற்றி இவர்கள் ஒன்றும் சொல்லப் போவதில்லை...


அருணகிரிநாதர் வாழ்க்கை வரலாறு பல திருப்பு முனைகளைக் கொண்டது...


இவரது பாடல்களில் மிகுந்த கவிதை இன்பங்கள் நிறைய உண்டு. அதில் ஒன்று ‘முத்தைத் திரு பத்தித் திருநகை’ எனத் தொடங்கும் பாடல், அருமையான பொருள் கொண்ட தமிழ்ப் பாடல்.

அவர் இயற்றிய திருப்புகழ், கந்தரனுபூதி, கந்தரலங்காரம் ஆகியவை அவரின் தமிழ்ப் புலமைக்குச் சான்று. இவர் தமிழ்க் கடவுள் முருகனின் சீரிய பக்தர்.

இலங்கைத் தலங்களான யாழ்ப்பாணம், கதிர்காமம், திருகோணமலை, கந்தவனம் ஆகிய தலங்களைப் பற்றிப் பாடியுள்ளார்.

இவரது முற்பிறவிகள் குறித்த தகவல்கள் மிக சுவாரஸ்யமானவை. அகத்திய முனிவர், நாயொன்றை வளர்த்து வந்தாராம். அந்நாய் தேவேந்திரனாக முதல் பிறவி எடுத்ததாம். பின்னர் அர்ச்சுனன், கண்ணப்ப நாயனார், நக்கீரர், அருணகிரிநாதர் என்ற வரிசையில் அந்நாய்க்குப் பிறப்புகள் உண்டானதாகத் தண்டபாணி சுவாமிகள் இயற்றிய அருணகிரி புராணத்தில் காணக் கிடைக்கிறது.

இதனைக் கட்டுக்கதை என்று மறுத்துக் கூறுபவர்களும் உண்டு.

அருணகிரிநாதர், இளம்வயதில் மது, மாது என்று மனம் விட்டார் என்றும், நாத்திகனாக இருந்தார் என்றும் கூறுவர். ஆனால் பின்னாளில் இல்லறத்தை நல்லறமாக நடத்தியவர்.

உடல் நலமின்மையைத் தாங்க முடியாத அவர், திருவண்ணாமலையில் உள்ள அண்ணாமலையார் கோயிலில் உள்ள கோபுரம் ஒன்றின் உச்சியில் இருந்து குதித்துத் தற்கொலைக்கு முயன்றபோது, முருகப் பெருமான் இவரைத் தம் திருக்கரங்களால் தாங்கி, உயிரைக் காத்தார் என்கிறது தலபுராணம்.

மேலும் சக்தி அளித்த வேலால் அருணகிரியார் நாவில் எழுதப் பிறந்தது கவிதைப் பிரவாகம்.

இவருக்கு முருகனின் தலங்களான வயலூர், விராலிமலை, சிதம்பரம், திருச்செந்தூர் ஆகிய தலங்களில் முருகன் காட்சி அளித்ததாகப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளார்.

இவரது வேண்டுகோளுக்கு இணங்கக் கம்பத்தில் அதாவது தூணில் முருகப் பெருமான் காட்சி அளித்ததாக ஐதீகம்.

அம்முருகப் பெருமான் கம்பத்து இளையனார் என்ற சிறப்பு பெயர் கொண்டு இன்றும் அத்தூணில் சிலாரூபமாகக் காட்சி அளிக்கிறார்.

கிளி உருவம் கொண்ட அருணகிரியார் விண்ணுலகம் சென்று அமிருத மலரான கற்பக மலர் கொய்து முருகனுக்கு அர்ச்சித்தார் என்பர்.

அவர் கிளி உருவமாக இருந்தபோதுதான், முருகனின் சிலாரூபத்தில் தோளில் அமர்ந்து கந்தர் அனுபூதி பாடியதாகச் செவிவழிச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இதனை மெய்ப்பிப்பது போலக் கூவி அழைத்தால் குரல் கொடுப்பான் பரம் குன்றம் ஏறி நின்று திருக்குமரா… என்கிறது கந்தரனுபூதிப் பாடல் வரிகள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்த அருங்கவியின் படத்தை மத்திய அரசு அஞ்சல் தலையாகவும் வெளியிட்டுள்ளது...

சென்னை மடிப்பாக்கம் நாராயணபுரம் ஏரியை சுத்தம் செய்த இளைஞர்கள்...


சென்னையில் உள்ள இளைஞர்கள் ஒன்று சேர்ந்து வாரா வாரம் ஞாயிறு அன்று ஏரி குலங்களை சுத்தம் செய்து வருகின்றனர்.

இந்த வாரம் மடிப்பாக்கத்தில் உள்ள ஏரியை சுத்தம் செய்துள்ளனர்.

இளைஞர்கள் முயற்சி செய்து இதில் பங்கு பெறும் தன்னார்வ இளைஞர்களுக்கு உணவு, ஓய்வு எடுக்கும் இடம் மற்றும் மருத்துவ உதவி போன்ற ஏற்பாடுகளையும் செய்து கொடுக்கின்றனர்...

கதிராமங்கலத்தில் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்த தஞ்சாவூர் நீதிமன்றம்...


அரசு தரப்பில், தாக்கப்பட்ட போலிசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர், இவர்களை விடுவித்தால் பதட்டம் இன்னும் அதிகரிக்கும் எனவே இவர்களுக்கு ஜாமின் வழங்கக் கூடாது என கூறப்பட்டதை தொடர்ந்து வழக்கை விசாரித்த நீதிபதி நக்கீரன் கைது செய்யப்பட்டவர்களின் ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார்...

தமிழக ஊழல் டெட்பாடி சொல்லியே காவல்துறை தடியடி நடத்தியுள்ளது என்பது அனைவரும் அறந்த விடயம்...

கதிராமங்கலம்...


பாஜக வும் டூபாக்கூர் வேலையும்...


புதுச்சேரியில் புதிதாக பதவியேற்ற பாஜக தேசபக்தர்களுக்கு மக்கள் பாராட்டு விழா...


இந்து மதத்தை உண்டாக்கியது, வெள்ளைக்காரன் - ஆதாரம்...


அவன் (வெள்ளைக்காரன்) மட்டும் இந்து என்று பெயர் வைத்திருக்கா விட்டால் ஒவ்வொரு ஊரிலும் சைவர், வைணவர், சாக்தர், முருக பக்தர், எல்லை அம்மனைக் கும்பிடுபவர் என்று நம்மைப் பிரித்துக் கொண்டு தனித்தனி மதமாக நினைத்துக் கொண்டிருப்போம்.

சைவர்களுக்கும் வைணவர்களுக்கும் ஒரே சாமி இருக்கிறாரா? இல்லை.

வைணவர்களுக்கு சிவன் சாமியே அல்ல; சைவர்களுக்கு, ‘விஷ்ணு சாமியே அல்ல;

விஷ்ணு சிவனுக்குப் பக்தன் என்று சொல்லுகிறார்கள்.

இவர்கள் இரண்டு பேரையும் எப்படி ஒரு மதம் என்று சொல்வது?

வெள்ளைக்காரன் நமக்கு இந்துக்கள் என்று பொதுப்பெயர் வைத்தானோ, நாம் பிழைத்தோம். அவன் வைத்த பெயர் நம்மைக் காப்பாற்றியது...

நூல்: தெய்வத்தின் குரல் - பாகம் 1 - பக்.266...

பெருகும் ஆதரவு.. கதிராமங்கலத்திற்கு கை கொடுக்கும் மாணவர்கள்...



கதிராமங்கலத்திற்கு ஆதரவு தெரிவித்து சிதம்பரம் அண்ணாமலை பல்கலை கழக மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து அற வழியில் போராட்டம்...