03/08/2017

மின்சாரத்தை (மித்ரவருனசக்தி) கண்டு பிடித்தது ஒரு தமிழனே...


மின்கலத்தை கண்டுபிடித்தவர் வோல்ரா என்று நினைத்து கொண்டிருக்கும் தமிழரே சற்று விழியுங்கள்… மின்சாரத்தை கண்டு பிடித்தது ஒரு தமிழனே…..

கிறிஸ்து வருவதற்கு முன் பல ஆயிரம் வருடங்களுக்கு முன் தமிழன் மின்கலத்தை கண்டு பிடித்து விட்டான்…. வியப்பாக உள்ளதா? கீழே படியுங்கள்….

சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இந்தியர்கள் கண்ட விமான அறிவியல், வானவியல் சாஸ்திரம் என்ற வரிசையில் இப்போது சுமார் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழன் அறிந்து வைத்திருந்து ஒரு அரிய தொழில் நுட்பத்தைப் பற்றி விவரிப்பது தான் இந்த பதிவு.

“சன்ஸ்தப்ய ம்ரின்மாய பத்ரே
தாம்ரப்பத்ரம் சுசான்ஸ்க்ரிதம்
சாட்யெச்சிகிக்ரிவன் சர்த்ரர்ப்ஹி
கஷ்த்பம்சுப்ஹி
தஸ்தலொஷ்தோ நிததவ்யாஹ்
பர்தச்சடிதஸ்த்ஹா
சன்யோகஜ்ய்தே தேஜோ
மித்ரவருனசங்கியதம்”

புரியவில்லை என்றால் விடுங்க‌…, நீங்கள் இப்போது படித்த வரிகள் பைந்தமிழ் முனிவர் அகத்தியர் எழுதிய அகத்திய சம்கிதம் என்ற அறிவியல் பொக்கிடத்தின் ஒரு பகுதி.

இதற்கான விளக்கத்தை இப்போது பார்க்கலாம்..

ஒரு மண் குடுவையை எடுத்து அதனுள்ளே தாமிர தகடை செலுத்தி சிறிதளவு சிகிக்ரிவம் நிறப்ப வேண்டும். பின்னே அதை ஈரமான மரத்தூள், பாதரசம் மற்றும் துத்தநாகத்தைக் கொண்டு பூசி, இரண்டு கம்பிகளை இணைத்தால் மித்ரவருனசக்தியைப் பெறலாம்.

மித்ரவருனசக்தியா அப்படினா என்ன? என்று யோசிக்கிறீர்களா?

மித்ரவருனசக்தி என்றால் மின்சாரம் என்பது தாங்க பொருள்.

வெள்ளைக்காரன் Electric current என்றதை அலுப்பே இல்லாம மின்சாரம் என்று பெயர் மாற்றி பயன்படுத்தி வருகிறோமே அதற்கு நம் பாட்டன் இட்ட பெயர் மித்ரவருண சக்தி.

இந்த மித்ரவருண சக்தி என்ற பெயருக்கும் கூட விளக்கமுண்டு. வருணன் என்றால் தண்ணீர் என்பது நாம் அறிந்ததே, மிதரன் என்றால் சூரியன் என்று பொருள். ஆனால் இங்கே ஹைட்ரஜன் என்ற பொருளைக் கொள்ளும். ஏனெனில் சூரியனின் சக்தி ஹைட்ரஜனில் தான் உள்ளது. அதனால் இங்கே ஹைட்ரஜனைக் குறிக்க மித்ரா என்று குறிப்பிடுகிறார். தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனைப் பிறித்து எடுத்தால் மாபெரும் சக்தியை நாம் பெறலாம். எனவே அவ்வாறு பெறப்பட்ட சக்தியையே மித்ரவருண சக்தி என்கிறார் அகத்தியர்.

என்னப்பா இது அந்த காலத்துல மின்சாரமா என்று கேட்கிறீர்களா? தேடுங்கள் கூகுள் தளத்தில், பாக்தாத் பேட்டரி [Baghdad Battery] என்று ஆங்கிலத்தில். அது மட்டும் அல்ல ஹிஸ்டரி சேனலின் தி ஏன்ஸியண்ட் ஏலியன்ஸ் தொடரைப் பார்த்தவர்களுக்கு இது தெரிந்திருக்கக் கூடும்.

இருங்க இருங்க.., நம்ம பாட்டன் இதோட நிருத்திவிடவில்லை.. இன்னும் கொஞ்சம் தகவல் மட்டும் சுருக்கமாய் சொல்லி முடித்து விடுகிறோம்..

அவர் மேலும் கூறுவது, இது போல 100 கலன்களை செய்து தண்ணீரைப் பயன்படுத்தினால் அது பிராண வாயுவாகவும் ஹைட்ரஜனாகவும் பிரியும் என்கிறார்.

இந்த ஹைட்ரஜன் மிதக்கும் தன்மையுடையது எனவும் இதை ஒரு பையில் அடைத்தால் பறக்கப் பயன்படுத்தலாம் எனவும் தெரிவிக்கிறார்.

அது மட்டுமல்லாமல் இதே அகஸ்திய சம்ஹிதாவில் நமது நவீன கால electroplating என்று சொல்லக் கூடிய அதே முறையை தெள்ளத் தெளிவாக விவரித்து செயற்கையாக தங்கத்திற்கு சாயம் பூசுவது எப்படி என்றும் குறிப்பிட்டுள்ளார்.

1891 ஆம் ஆண்டு Rao Saheb Krishnaji Vajhe புனேவில் தமது பொறியியல் படிப்பை முடித்துவிட்டு, வேறு சில மேதாவிகளுடன் சேர்ந்து இதனை செய்து பார்த்தனர். அடுத்த சில மணி நேரங்களில் மின் கலமும் தயாரானது. அந்த மின் கலத்தை ஒரு மல்டி மீட்டரை வைத்து ஆராய்ந்த போது 1.38 Open Circuit Voltage மற்றும் 23 milliampere Short Circuit Current. கிடைக்கப்பெற்றது. ஆமாம்.

எப்படி இருக்கிறது தமிழனின் அறிவியல்?

குறிப்பு : அகத்தியர் வாழ்ந்த காலகட்டம் குறித்த தெளிவான புள்ளி விவரம் கிடைக்கப் பெறவில்லை. சுமார் 9000 ஆண்டுகளுக்கு முன் இருந்து 3500 ஆண்டுகளுக்கு முன் வரை வெவ்வேறு காலகட்டங்களில் அவர் வாழ்ந்ததைப் பற்றிய குறிப்புகள் உள்ளது. அதனால் இந்த அறிவியல் பொக்கிஷம் நிச்சயம் குறைந்தது 3500 முதல் 4000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு தமிழனால் கண்டு பிடிக்கப்பட்டது என்று கூறலாம்.

அகத்தியர் தமிழன் என்கிறீர்கள் ஆனால் அவர் ஏன் சமஸ்கிருதத்தில் எழுதினார் என்பது இங்கு பலரது கேள்வி. உங்களுக்கும் கூட இது எழலாம். அதை முழுவதுமாய் இங்கு விலக்க முடியாது ஆனால் சுருக்கமாக நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமானால் தமிழும் சமஸ்கிருதமும் பாரதம் முழுவதும் பரவி இருந்த மொழிகள் என்பதை நாம் உணர வேண்டும்.

அதே நேரம் படத்தில் இருப்பது அகத்தியர் தயாரித்த மின்கலம் ஏன்று இந்த கட்டுரையில் எந்த இடத்திலும் நாங்கள் சொல்லவில்லை. இந்த பதிவில் உள்ள ஸ்லோகம் மட்டுமே அவருக்கு சொந்தமானது. இருந்தாலும் இந்த அறிவியல் உண்மையாய் இல்லாவிட்டால் ஒரு வெளிநாட்டு தனியார் தொலைகாட்சி நிறுவனம் இதை அங்கீகரித்து இருக்காது என்பதையும் நாம் உணர வேண்டும்...

அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கரின் சமையல்காரர் பெயரில் இருந்த ஆவணங்கள் பறிமுதல்: வருமானவரி புலனாய்வு பிரிவு...


கோவை மருத்துவமனையில் 32 பேருக்கு டெங்கு...


இலுமினாட்டி லுசிபெரியனிசக் கொள்கையானது...


பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு பெயர்களுடைய இயக்கங்களாக வேறுபட்ட செயல்பாடுகளுடன் இயங்கி வந்துள்ளது.

ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு இயக்கம் ஆட்சி (dominant) செய்துள்ளது. ஒரே கால கட்டத்திலும் இக்கொள்கை வேறுபட்ட பெயர்களிலும் இயங்கி வந்துள்ளது.

freemasontry என்பதை இதன் பொதுப் பெயராகக் கொள்ளலாம்.

ஈசா நபி உயர்த்தப்பட்டதில் இருந்து முஹம்மது நபியின் காலம் வரை 2 இயக்கங்கள் அதிகம் செயல்பட்டது.

1. ஜெசுவிஸ்ட். Jesuit - இப்போது இது வத்திக்கானை ஆட்சி செய்யும் கூட்டமாக மட்டும் சுருங்கி விட்டது.

2. ப்ரியோரி டி சியோன் (Prieuré de Sion or Priory of Sion).

இவை இரண்டும் ஈசா நபி கொண்டு வந்த உண்மையான மார்க்கத்தை அழிப்பதற்காக பாடுபட்ட இயக்கங்களாகும்.

ஈசா நபி பிறந்த மண்ணில் இருந்து சம்பந்தமே இல்லாத இத்தாலியில் உள்ள வத்திக்கானுக்கு கிறித்தவ தலைமையை மாற்றி அமைத்தது இவர்களின் வெற்றிக்கு சான்றாகும். ( இதன் முழு வரலாறு பின்னர் விளக்கப்படும்).

முகம்மது நபிக்குப் பிறகு சிலுவை யுத்தக் காலப் பகுதியில் ஆட்சி செய்த இயக்கம் தான் நைட் டேம்ப்லேர்ஸ்.

இன்றைய காலத்தில் பெயர்பெற்று விளங்கும் இயக்கம்தான் இலுமினாட்டி.

இஸ்ரவேல் சமுதாய மக்கள் வாழ்ந்த பிரதேசம் கானான், ஜெரூசலம் என்ற பெயர்களால் அழைக்கப்படும். வரலாற்று ஆசிரியர்களால் kingdom of israel என அழைக்கப்படும் பிரதேசம் இதுவே.

ஈசா நபி உலகத்தில் இருந்த காலத்தில் இன்ஜீல் பெரிய அளவு வளரவில்லை. அவர்கள் உயர்த்தப்பட்டவுடன் இன்ஜீலின் வளர்ச்சி பெருகத் தொடங்கியது. ஆனாலும் ஈசா நபியைக் கொல்ல முயன்ற யூதர்களின் கை தான் அப்பிரதேசத்தில் ஓங்கி இருந்தது.

ஈசா நபி உயர்த்தப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பின்னர் ஜெருசலத்தை ரோமர்கள் (இத்தாலியர்கள்) கைப்பற்றினர்.

இவர்கள் பல கடவுள் வழிபாடு செய்வதால் இவர்கள் pagans என அழைக்கப்பட்டனர்.

இவர்கள் யூதர்களுக்கு அதிக அளவில் அட்டூழியம் செய்தனர்.

குறிப்பாக ஒரு கடவுள் கொள்கையைச் சொல்லும் இன்ஜீலை உடைய யூதர்களுக்கு அதிகம் அநியாயம் செய்தனர். ஏன் எனில் இன்ஜீல் ரோமர்களின் மதத்தை அழிக்கும் என்று பயந்தனர்.

அநியாயம் செய்யச் செய்ய, எதிர்க்க எதிர்க்க இன்ஜீலின் வளர்ச்சி இன்னும் அதிகமாகியது. சத்தியம் இப்படித்தான் வரலாறு நெடுகிலும் வளர்ந்தது.

எந்த அளவுக்கு என்றால் 300 ஆண்டுகளில் இன்ஜீல் ரோமப் பேரரசு வரை பரவியது. பல கடவுள் கொள்கைக்கும் ஒரு கடவுள் கொள்கைக்கும் நிலவிய இந்தப் போராட்டத்தை நிறுத்தி இன்ஜீலை அழிக்க எந்த ரோம அரசராலும் முடியவில்லை. இந்தக் காலக் கட்டத்தில் தான் கான்ஸ்டடீன் (constantine the great ) ரோமர்களின் அரசராக வருகிறார் (கிபி 306).

இவர் ஒரு விடயத்தை தெளிவாக விளங்கிவிட்டார். இன்ஜீல் என்பது அடித்து ஒழிக்க முடியுமான மார்க்கம் அல்ல. மாறாக அணைத்து ஒழிக்க வேண்டிய மார்க்கம்.

இவர் இன்ஜீல் உடையவர்களை எந்த அளவு அணைத்தார் என்றால் அவர் கிபி 312 இல் இன்ஜீல் மார்க்கத்தை தழுவியே விட்டார். கிபி 313 இல் கிறித்தவர்களுக்கு இழைக்கப்படும் அநியாயத்தை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்குடன் மிலான் ஆணையை ( Edict of Milan) ஏற்படுத்தி அவர்களுக்கு மதச்சுதந்திரம் அளித்தார்.

துருக்கியின் இன்றைய இஸ்தம்பூலை கேந்திர நகரமாக மாற்றி அதற்கு தனது பெயரான கொன்ஸ்தாந்து நோபிள் என்று பெயர் வைத்தவரும் இவர்தான்.

இந்தக் காலக் கட்டத்தில் உண்மையான இன்ஜீலோடு ஏராளமான பித்அத்களும் கலக்க ஆரம்பித்துவிட்டது. இதன் பின்னர் இவர் ரோமர்களையும், இன்ஜீலை உடையவர்களையும் பல சந்தர்ப்பங்களில் கலந்துரையாட ஏற்பாடு செய்தார்.

இதன் முதல் சந்திப்புக்குப் பெயர் council of nicea என அழைக்கப்படும். இதில் முதன்மையாகப் பேசப்பட்ட விடயம் தான் எமக்கிடையே ஒற்றுமை முக்கியம் என்பது. ஒற்றுமைக்காக நாம் இரண்டு தரப்பாரும் சில மார்க்க விடயங்களை விட்டுத் தர வேண்டும் என்று பேசப்பட்டது.

இதில் முக்கியமாக சொல்லப்பட்ட விடயம் இன்ஜீலில் சொல்லப்பட்ட ஓரிறைக் கொள்கை முடிந்த அளவு அஜெஸ் பண்ண வேண்டும் என்பது. தவ்ராத்தின் (அவர்கள் மொழியில் 10 commandments ) சில பகுதிகள் நீக்கப்பட்டன. சிலை வழிபாடு புகுத்தப்பட்டது. உத்தியோகபூர்வமாக இன்ஜீல் modify பண்ணப்பட்ட கிறித்தவமாக மாற்றப்பட்டது இந்த ஒப்பந்தத்தில் தான்.

இதற்கு nicene creed (கிபி 325) என்று பெயர்.
இதன்போது அங்கிருந்த மிகச்சில இன்ஜீல் வேதத்தை ஓரளவு பிடிப்போடு பின்பற்றியவர்கள் கடுமையாக எதிர்த்தனர். அவர்களின் வாதம் எடுபடாமல் போகவே கடைசியில் அவர்கள் வெளிநடப்பு செய்து கலப்படம் கலந்த இன்ஜீலை தனித்தனியாக பிரச்சாரம் செய்யத் தொடங்கினர்.

(இவர்களின் வரலாறு தனியாக பேசப்பட வேண்டியது. குறைந்த தகவலே உண்டு. )

இவ்வாறு மாற்றப்பட்டதற்கு ஆதாரமாக இன்று கூட கிரித்தவ ஆலயங்களின் கட்டடக் கலை, சிலைகள் போன்றவை யூத கலாச்சாரம் அல்லாது ரோமக் கலாச்சாரமாகக் காணப்படுகிறது.

ரோமன் கத்தோலிக்கம் என்ற பெயர்கூட இதற்கு மிகப்பெரிய சான்றாகும்.

அந்த ஒப்பந்தத்தை ஒத்துக்கொண்ட இன்ஜீலை உடைய மக்களையும், ரோமர்களையும் வைத்து ரோம அரசாங்கம் கிறித்துவத்தை நிறுவியது.

இதுதான் ஈசா நபி கொண்டு வந்த இன்ஜீல் என்று உலகத்துக்கு அறிவித்தது.

இவர்களிடம் ஆட்சி இருந்ததால் உண்மையான ஓரிறைக் கொள்கையாளர்களை விட இலகுவாக தமது பிரச்சாரத்தைப் பரப்ப இலகுவாக இருந்தது.

இதுதான் அரசியல் ரீதியாக இன்ஜீல் ரோமன் கத்தோலிக்கமாக மாறிய சுருக்கமான வரலாறு...

பாஜக ஏழைகளின் சொத்துகளை மேலும் பல மடங்குகள் உயர்த்தவும்...


அத்தாணி, அம்பாணி போன்ற பண முதலைகளுக்கு வரி ஏயிப்பு செய்யும்...

மக்களின் ரேஷன் கார்டுகள் பிடுங்கப்பட்டதாம்...

பாமக அன்புமணி அவர்களின் காவிரி விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு கிடைத்த வெற்றி...


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிக்கு ரயிலில் அளித்த உணவில் முடி...



பெங்களுரில் இருந்து சென்னைக்கு சதாப்தி ரயில் வந்துள்ளார் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி, ரயில் கேண்டீனில் சமைத்த உணவை வாங்கியள்ளார். அதில் அவருக்கு அளித்த வடையில் முடி இருந்துள்ளது.

இதை புகைப்படம் எடுத்து வைத்துக் கொண்ட நீதிபதி, ரயில் பயணிகளுக்கான கருத்து படிவத்தில் உணவு தரம் மோசம் என தனது கருத்தை பதிவு செய்து கொடுத்துள்ளார்.

அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது...

அடேய் இது யார் பார்த்த வேலை டா...


ஆமா ஆமா எங்களுக்கு குமாரசாமி தான் வேணும்....


சென்னை கிண்டி சாலையில், சிக்னலை மறைக்கும் அரசியல் கட்சி பேனர், சிக்னலையே ஆஃப் செய்த பரிதாபம் , அவதிப்படும் வாகன ஓட்டிகள்...


எப்பொழுது போடப்படும் சிக்னல் லைட் என்று வாகன ஓட்டிகள் கேள்வி...