22/09/2017

தமிழ் இலக்கியங்களில் அறிவியல்...


உயிர்களின் பாகுபாடு குறித்த சிந்தனை காலந்தோறும் இருந்து வந்துள்ளது.

அறிவியல், ஆன்மீகம் என இருநிலைகளில் நம் சிந்தனை வளர்ச்சிப் பெற்றுள்ளது.

எனினும் இன்னும் நம் கொள்கைகள் தெளிவுடையனவாக இல்லை. இதனை உணர்ந்துதான் இன்றைய அறிவியலாளர்கள் பூமிக்குக் கீழே அணுச்சோதடனை நடத்தி உயிரிகளின் தோற்றம் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர்.

இன்றைய அறிவியல் கொள்கைகள் தொல்காப்பியரின் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது.

இதனைத் தொல்காப்பித்தின் மரபியல் வழி அறிய முடிகிறது.

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு இன்றைய அறிவியல் கொள்கைகளோடு இயைபு பெற்று அமைவதை இயம்புவதாக இக்கட்டுரை அமைகிறது.

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாடு..
 
தொல்காப்பியர் உயிர்களை வகைப்பாடு செய்யும் போது..

“ஒன்றறி வதுவே உற்றறி வதுவே

இரண்டறி வதுவே அதனோடு நாவே

மூன்றறி வதுவே அவற்றோடு மூக்கே

நான்கறி வதுவே அவற்றோடு கண்ணே

ஐந்தறி வதுவே அவற்றோடு செவியே

ஆறறி வதுவே அவற்றோடு மனனே”
(தொல்-1526)

என இயம்பியுள்ளார்.

இதில் மெய், வாய், மூக்கு, கண், செவி என ஐம்புலன்களின் படிநிலை வளர்ச்சியையும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இவ்வுயரிய சிந்தனை தம் காலத்துக்கு முன்பே இருந்தது என்பதை,

‘நேரிதின் உணர்ந்தோர் நெறிப்படுத்தினரே’
(தொல்-1526)

என வெளிப்படுத்தியுள்ளார்.

 ஓர் அறிவுடையன

புல், மரம், செடி, கொடி ஆகிய தாவர இனங்கள் மெய்யால் உற்றறியும் இயல்புடையன என்பதை,

‘புல்லும் மரனும் ஓரறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’
(தொல்-1527)

இந்நூற்பா சுட்டுகிறது.

ஈர் அறிவுடையன
 
நத்தை,மீன்,சிப்பி போன்ற உயிரினங்கள் உற்றறிதலோடு,நாவால் உணரும் இயல்பும் உடையன.இதனை,

‘நந்தும் முரளும் ஈர் அறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1528)

என்ற நூற்பா இயம்புகிறது.

 மூன்று அறிவுடையன

கரையான்,எறும்பு போன்ற உயிரினங்கள் உற்றறிந்து, சுவையுணர்ந்து, மூக்கால் நுகரும் பண்பும் கொண்டவை என்பதை,

‘சிதலும் எறும்பும் மூவறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1529)

என்னும் நூற்பா வழியாக அறியமுடிகிறது.

 நால் அறிவுடையன

‘நண்டு தும்பி வண்டு ஆகியனவும் இதன் இனமும் உற்றறிந்து, சுவையுணர்ந்து, மூக்கால் நுகரும் தன்மையோடு பார்த்தல் என்னும் பண்பும் கொண்டிருந்ததை,

‘நண்டும் தும்பியும் நான்கறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1530)

என்ற நூற்பா உணர்த்தும்.

 ஐந்து அறிவுடையன

விலங்கினங்கள் அனைத்தும், விலங்கின் இயல்புடையோரும் ஐந்து அறிவுடையன என்று,

‘மாவும் மாக்களும் ஐயறிவினவே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’

(தொல்-1531)

இந்நூற்பா இயம்புகிறது.

 ஆறு அறிவுடையன

மன அறிவுடைய மனிதர்கள் ஆறு அறிவுடையவர்களாவர். இவர்களுக்கு ஐம்புலனறிவோடு மனம் எனும் சிந்திக்கும் ஆற்றலும் இருக்கும் என்பதை,

மக்கள் தாமே ஆறறிவுயிரே

பிறவும் உளவே அக்கிளைப் பிறப்பே’
(தொல்-1532)

என்ற நூற்பா சுட்டுகிறது.

உருமலர்ச்சிக் கொள்கை (Theory of Evolution)
 
Big Bang எனப்படும் மாவெடிப்பு நிகழ்ந்த பின் பூமியில் ஏற்பட்ட பல்வேறு மாற்றங்களுள் உயிர்க்கூறுகளின் தோற்றம் குறிப்பிடத்தக்கது. பூமியில் முதலில் எளிய உயிர்க் கூறுகள் தோன்றின. அவை பல்லாண்டுகால உருமலர்ச்சிக்குப் பின்னர் இன்றைய நிலையை அடைந்தன. முதலில் உருமலர்ச்சிக் கொள்கையை வெளியிட்டவர் சார்லஸ் டார்வின் ஆவர். இவருடைய கருத்துக்கு இன்று வரை அறிவியல் அடிப்படையிலான மறுப்பு தெரிவிக்கப்படவில்லை. இவ்வுருமலர்ச்சிக் கொள்கையையே தொல்காப்பியரும் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையாக வெளிப்படுத்தியுள்ளார;

 ஒருசெல் உயரி (புரோட்டோசோவா)

உயிர்களின் முதல் நிலை ‘செல்’ஆகும்.உயிர்த்துடிப்புள்ள உயிரணு செல் ஆகிறது. பூமியில் தோன்றிய முதல் தாவரமாக அமீபா என்னும் நீர்வாழ்த் தாவரத்தைக் குறிப்பிடுகிறோம். இது ஒருசெல் உயிரியாகும். இது புரோட்டோசோவா என்னும் வகை சார்ந்தது. தொல்காப்பியர் சுட்டும் ஓரறறிவுயிரி புல்லும்,மரமும் தாவர வகையே இவை உற்றறியும் தன்மையுடையன என்பது குறிப்பிடத்தக்கது.

செல்பிரிதல்..

ஒரு செல்லானது பிரிதலின் போது பல்கிப்பெருகிப் பல செல்கள் உருவாகின்றன. பலசெல் உயிர்களின் ஒவ்வொரு செல் தொகுப்பும் ஒவ்வொரு வேலையைச் செய்கின்றன.அதனால் உயிர்களின் பண்பு மாறுபடுகிறது. இதனால் உருமலர்ச்சி ஏற்பட்டது. செல் பிரிதலின் போது அமீபா இரு துண்டுகளாகப் பிளந்த போது பாக்டீரியா என்னும் நுண்ணுயிரிகள் தோற்றம் பெற்றன.

பல செல் உயிரி..

ஒருசெல் உயிரியைப் புரோட்டோசோவா என அழைப்பது போல, பல செல் உயிரியை மெட்டோசோவா என அழைப்பர். பல செல் உயிரிகளை இரு வகைப்படுத்தலாம்.

1.முதுகுத்தண்டற்றவை, 2.முதுகுத்தண்டுள்ளவை.

முதுகுத்தண்டற்றவை..

கடற்பஞ்சு, புழுவினங்கள், நண்டு, சிலந்தி, நத்தை, நட்சத்திர மீன்கள் போன்ற உயிரனங்கள் முதுகுத் தண்டற்றவை ஆகும். தொல்காப்பிர் சுட்டும் கடல்வாழ் உயிரினங்களாக நத்தை, மீன் ஆகியன இவ்வகை சார்ந்தவையாக உள்ளன. இவை உற்றறிதலோடு, நாவால் உணரும் சுவையுணர்வும் கொண்டவையாக விளங்குகின்றன.

முதுகுத் தண்டுள்ளவை..

கார்டேட்டா எனப்படும் வகை சார்ந்த இவற்றை நீர் வாழ்வன, நிலத்தில் வாழ்வன நீர்நில வாழ்வன என வகைப்படுத்த இயலும்.

நில வாழ்; உயிரிகளை ஊர்வன, பறப்பன, பாலூட்டிகள் எனப்பகுக்கலாம்.

 ஊர்வன..

கரையான், எறும்பு ஆகியன மூன்று அறிவுடையன என்பர் தொல்காப்பியர். இவை உற்றறிதல், சுவையுணர்வு, நுகர்ச்சி என்னும் மூன்று பண்புகளைக் கொண்டுள்ளன.

 பறப்பன..

வண்டு, தும்பி போன்றன நாலறிவுடையன இவை உற்றறிதலோடு, சுவை, நுகர்ச்சி, பார்வை என்னும் பண்புகளைக் கொண்டவையாகும். உருமலர்ச்சிக் கொள்கையின்படி இரு பெரும் பாகுபாடு கொண்டவையாக அறிவியலாளர்கள் பாகுபாடு செய்துள்ளனர். அவை ஒரு செல் உயிரி,பல செல் உயிரி என்பதாகும்.

பல செல் உயிர்களின் உருமலர்ச்சி நிலையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்தன. அதன் அடிப்படையில் அவ்வுயிர்கள் பாகுபடுத்தப்பட்டன.

பாலூட்டிகள்..

விலங்கினங்களும் விலங்கின் இயல்புடைய மக்களும் ஐந்தறிவுடையன எனத் தொல்காப்பியர் சுட்டுவர். அறிவியல் அடிப்படையில் இது பாலூட்டி வகையில் அடங்குவதாகவுள்ளது.

 மனித நிலை..

உயிர்களின் வளர்ச்சி நிலையில் மனிதன் என்னும் நிலையே உயரிய வளர்ச்சி நிலையாகும். ‘மனதை’ உடையவன் மனிதன் எனப்படுகிறான். ஆறாவது அறிவான ‘மனம்’ மனிதனை உயிர்களிடமிருந்து வேறுபடுத்திக்காட்டுகிறது. இதனையே தொல்காப்பியரும் இயம்புகிறார்.

முடிவுரை..

தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டின்படி உயிர்கள் உருமலர்ச்சி பெற்றன என்பதை அறியமுடிகிறது.

செல் பிரிதலின் மூலம் உயிர்கள் உருமலர்ச்சி பெறுகின்றன.

செல் தொகுப்புகளின் செயல்பாட்டின் அடிப்படையில் உயிர்களின் பண்பு அமைகிறது என்ற உருமலர்ச்சிக் கொள்கை தொல்காப்பியரின் உயிர்ப்பாகுபாட்டுச் சிந்தனையோடு இயைபுற்று அமைகிறது.

அறிவியல் உயிர்களை ஒரு செல் உயிரி, பல செல் உயிரி என இரு வகைப்படுத்துகிறது. இவ்வகைப்பாட்டின்படி ஓரறறிவுயிர்கள் ஒருசெல் உயிரிகளாகவும் ஏனைய பலசெல் கொண்டதாகவும் கொள்ள இயலும்.

தொல்காப்பியரின் உயிரியல் கோட்பாடு அவர் காலத்துக்கு முன்பே தமிழரிடம் தெளிவாக இருந்தது. இது தமிழ் மொழியும் தமிழர் தம் சிந்தனையும் பழங்காலந்தொட்டே செம்மையுற்று இருந்தமை உணர்த்துவதாக உள்ளது...

எழுவகைப் பிறப்புக்களாவன யாவை?
தேவர், மனிதர், விலங்கு, பறவை, ஊர்வன, நீர் வாழ்வன, தாவரம் என்பவைகளாகும். இவ்வெழுவகையினுள்ளும், முன் நின்ற ஆறும் இயங்கியற் பொருள்கள்; இறுதியில் நின்ற தாவரங்கள் நிலையியற் பொருள்கள். இயங்கியற் பொருளின் பெயர் சங்கமம், சரம்; நிலையியற் பொருளின் பெயர் தாவரம், அசரம்.

எழுபிறப்பு - நிற்பன, நெளிவன, தத்துவன, தவழ்வன, நடப்பன, கிடப்பன, பறப்பன என்பனவாம்
எழுபிறப்பும் தீயவை தீண்டா பழிபிறங்காப்
பண்புடை மக்கட் பெறின்.  – (குறள் – 0062)...

இடவொதுக்கீடு கன்னட ஈ.வெ. ராமசாமி நாயக்கர் பெற்றுத் தந்ததா?


1871ல் சென்னை மாகாண அரசு கணக்கெடுப்பு நடத்தி பிராமணரல்லாதார் ஒடுக்கப்படுவதாக அறிவித்தது.

ஈ.வே.ரா அப்போது பிறக்கவேயில்லை..

அவர் காங்கிரசிலிருந்து விலகி பிராமணரல்லாதார் கொள்கையை கையிலெடுத்தது இதற்கு 53 ஆண்டு கழித்துதான் (1924ல்).

1893 ல் ஆங்கிலேய ஆட்சி சென்னை மாகாணத்தில் 49 பின்தங்கிய சாதிகளைத் தேர்ந்தெடுத்து கல்வி வழங்குவதில் கவனம் செலுத்தியது.

ஈ.வே.ரா.வுக்கு அப்போது 13 வயது.

ஈ.வே.ரா கல்வியிலும் வேலையிலும் பிராமணரல்லாதார் முன்னுரிமைக்காக பேசியது இதற்கு 32 ஆண்டுகள் கழித்துதான்  (1925ல்).

1927லேயே சென்னை மாகாணம் முழுவதும் அரசு வேலைகளில் சாதி வாரியாக முன்னுரிமை வழங்கப்பட்டது.

அப்போது ஈ.வே.ரா காங்கிரசிலிருந்து விலகி தனியாக சுயமரியாதை இயக்கம் தொடங்கி இரண்டாண்டுகள் கூட ஆகியிருக்கவில்லை.

அதுவரை ஈ.வே.ரா இடவொதுக்கீட்டிற்காக எந்த போராட்டத்தையும் நடத்தியிருக்கவில்லை.

1943 ல் அம்பேத்கரின் முயற்சியால் ஆங்கில அரசு அனைத்து துறைகளிலும் பட்டியல் சாதியினருக்கான 8.33% இட ஒதுக்கீடு நடைமுறைக்கு கொண்டுவந்தது.

இதற்கு ஓராண்டு பிறகுதான் ஈ.வே.ரா திராவிடர் கழகம் தொடங்கினார்.

இட ஒதுக்கீடு தொடர்பாக அவர் போராட்டம் நடத்தியது இதற்கு ஏழாண்டுகள் பிறகுதான் (1950ல்).

அதாவது ஈ.வே.ரா பிறக்கும் முன்னரே பிராமணர் ஆதிக்கம் உணரப்பட்டு அவர் செல்வாக்கு பெறும் முன்பே இடவொதுக்கீடும் கிடைத்துவிட்டது.

ஆங்கிலேயர் வெளியேறிய பின் புதிய சட்டம் 1950 ல் நடைமுறைக்கு வந்தது.

சாதி ரீதியான இடவொதுக்கீடு பிராமணர்கள் வழக்கு தொடுத்ததால் நீக்கப்பட்டது.

அப்போது மக்களைத் திரட்டி போராடிய பலரில் ஈ.வே.ராவும் ஒருவர்.

ஆக கல்வியிலும் வேலையிலும் சாதிரீதியான ஒதுக்கீடு பல ஆண்டுகளாக பல்வேறு தலைவர்கள் மக்களைத் திரட்டிப் போராடியதால் கிடைத்தது.

ஈ.வே.ரா கடைசி நேரத்தில் ஒரே ஒரு போராட்டம் நடத்திவிட்டார் என்பதற்காக இடவொதுக்கீடே அவர்தான் வாங்கித் தந்தார் என்றவாறெல்லாம் திராவிடவாதிகள் எழுதுகின்றனர்.

ஈ.வே.ரா போராடியது 'வகுப்புவாரி இடவொதுக்கீடு' அதாவது பிராமணரல்லாதார் இடவொதுக்கீடு.

அவருக்கு தாழ்த்தப்பட்ட சாதியாரைப் பற்றி எந்த கவலையும் இல்லை.

அவரது நோக்கம் 3% பிராமணர்கள் அரசு வேலையிலும் 3% ற்கு மேல் இருக்கக்கூடாது என்பதே.

ஆனால் 'சாதிவாரி இடவொதுக்கீடு' தாழ்த்தப்பட்ட மக்களுக்காக போராடிப் பெறப்பட்டது.

தாழ்த்தப்பட்ட மக்கள் கல்வியிலும் வேலையிலும் இடம் பெறுவதற்காகக் கோரப்பட்டது.
அதை 1943ல் சாதித்து காட்டியவர்தான் அம்பேத்கர்.

சாதிரீதியான இடவொதுக்கீட்டை பிராமணர்கள் எதிர்த்து வழக்குப் போடும்வரை ஈ.வே.ரா அதில் ஆர்வம் காட்டவில்லை.

பிராமணர்கள் வெற்றி பெற்றதும் அது பொறுக்க முடியாமல் போராட்டத்தை அறிவித்தார்.

தாழ்த்தப் பட்டோருக்காக ஈ.வே.ரா என்றும் எங்கேயும் போராடியதோ பேசியதோ கிடையாது.

அவர் தாழ்த்தப்பட்டவர்களையும் இசுலாயமியரையும் பிராமணரல்லாதாரின் எதிரிகளாகவே கடைசி வரைக்கும் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசி வரைக்கும் பறையர்களை கேவலமாகப் பேசியும் எழுதியும் வந்தார்.

கடைசி போராட்டத்தையும் 'வகுப்புரிமை நாளாக'த்தான் அறிவத்து போராட அழைத்தார்.

திராவிடம் இதேபோல கடைசி நேரத்தில் புகுந்து முழு போராட்ட வரலாறையும் ஆட்டையைப் போடுவது தொடர்ந்து நடந்துவருகிறது.

சிலர் 1927 ல் திராவிட கட்சியான ஜஸ்டிஸ் இடவொதுக்கீடை அமல்படுத்தியதைப் பெருமையாகக் கூறுவார்கள்.

ஆனால் இதற்கு 25 ஆண்டுகள் முன்பே கொல்ஹாப்பூர் அரசர் சத்ரபதி ஸாஹுஜி மகராஜ் 50% பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்.

(பிறகு பதினெட்டாண்டுகள் கழித்து 90% இடவொதுக்கீடு பிராமணரல்லாதோருக்கு ஒதுக்கினார்)

இதற்கு ஏழாண்டுகள் கழித்துதான் நீதிக்கட்சி இடவொதுக்கீட்டை கொண்டு வருகிறது.

அதாவது அக்கட்சி ஆட்சியில் அமர்ந்து 8 ஆண்டுகள் கழித்து.

அதாவது திராவிடம் ஆட்சிக்கு வருமுன்பே கொல்ஹாப்பூரில் 90% பிராமணரில்லாதோர் பதவி பெற்று விட்டனர்.

ஆக இடவொதுக்கீட்டுக்கு முன்னோடி திராவிட கட்சி இல்லை, ஒரு மராத்திய மன்னர்தான்.

நன்றி : Reservation policy in Tamilnadu - Wikipedia..

இது எல்லாமே தொடங்கியது ஆங்கிலேயரின் பிரித்தாளும் மூளையில் தான்.

முதலில் எல்லா உயர் பதவிகளிலும் ஆங்கிலேயரே இருந்தனர்.
இந்தியர்களுக்கும் பதவி வேண்டும் என்பதற்காக காங்கிரஸ் தொடங்கப்பட்டது.

1900களில் மிண்டோ - மார்லி சீர்திருத்தம், மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் கொண்டுவரப்பட்டு இந்தியர்களுக்கும் பதவிகள் வழங்கப்படுகின்றன.

இப்பதவிகளில் ஆங்கிலக் கல்வி கற்று பிராமணர்கள் நிறைகின்றனர். குறிப்பாக தமிழ்ப் பார்ப்பனர்கள்.

தமிழர்கள் பதவி பெறுவதைக் கண்டு வயிறெரிந்தனர் வேற்றின ஆதிக்க சாதிகள்.

(எப்படி தமிழர்களான யாழ்ப்பாண வெள்ளாளர்கள் ஆங்கிலேயருக்கு அடுத்த பதவிகளில்  நிறைந்திருந்தது சிங்களவர் கண்களை உறுத்தியதோ அதேபோல)

வேற்றினத்தாரின் இந்த 'தமிழின வெறுப்பை'த் தனது பிரித்தாளும் அரசியலுக்காகப் பயன்படுத்திக் கொண்டனர் ஆங்கிலேயர்.

திராவிட கட்சியை ஒரு தெலுங்கரையும் மலையாளியையும் வைத்து  உருவாக்கியதும் ஆங்கிலேயரே.

அதனால் தான் முதல் திராவிட கட்சி தோன்றியதும் அதன் முதல் அறிக்கை 'ஆங்கிலேயரிடம் சுதந்திரம் கேட்கக் கூடாது' என்று கூறியது.

திராவிடம் கடைசி வரை ஆங்கிலேயரை எதிர்த்து ஒரு வார்த்தைகூட பேசாமல் கடைசிவரை ஆங்கிலேயர்களுக்கு விசுவாசகமாக வாலை ஆட்டியது.

ஆங்கிலேயருக்கு முன் தமிழகத்தை ஆண்ட தெலுங்கு வம்சாவளிகள் பேராதவு திராவிடத்திற்குக் கிடைத்தது.

வேற்றின ஆட்சியில் தமிழர்களின் நிலத்தை பிடுங்கி நிலவுடைமையாளர்களாக தமிழகம் முழுக்க நிறைந்து கிடந்த அத்தனை வந்தேறிகளும் ஆதரித்தனர்.

திராவிடத்துக்கு பணம் வந்து குவிந்தது..

ஆங்கிலேயருக்கு அடுத்து அரியணை ஏறப்போகும் வடவரை சமாளிக்க தமிழரும் ஆதரித்தனர்.

திராவிடம் என்ற பெயரில் வேற்றினம் அரியணை ஏறியது. அது இன்றுவரை தொடர்கிறது.

திராவிடவாதிகளுக்கு இடவொதுக்கீடு பற்றி உண்மையில் அக்கறை இருந்தால் (மற்ற மாநிலங்களைப் போல) தமிழ்-சாதிகளைத் தவிர மற்ற சாதிகளை மாநில சலுகையிலிருந்து நீக்கும் நடவடிக்கை ஏன் செய்யவில்லை?

சட்டநாதன் பரிந்துரையை ஏன் நிறைவேற்றவில்லை?

சாதி சாதியாகப் பிரிந்து ஒரு இனத்துக்குள் வேற்றினம் ஊடுருவும் வழியே இது.

திராவிடம் என்பது உருமாற்றி ஏமாற்றும் அரசியல் நாடகம்.

அதன் ஒரு காட்சி தான் இடவொதுக்கீடு சாதனை.

இனியாவது உண்மையை உணருங்கள்...

பேரறிவாளனின் பரோலை மேலும் ஒரு மாத காலத்திற்கு நீட்டிப்பது குறித்து தமிழக அரசு பரிசீலனை...


மாட்டிறைச்சி விவகாரத்தில் மூன்று பேர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உத்திர பிரதேசத்தில் கைது...


மாட்டிறைச்சிக்கும் தேசிய பாதுகாப்புக்கு என்ன சம்மந்தம்?

நம் உச்சநீதிமன்ற நீதியரசர்கள் செய்தி தாள்களை வாசிப்பதே இல்லையா?

 இந்த அரசின் முட்டால் தனங்களை , மக்கள் விரோத போக்குகளை தானாக வழக்கு பதிவு செய்து தடுக்கும் அதிகாரம் தான் அவர்களுக்கு இல்லையா? அவர்களை தவிர வேறு யாருக்கு அரசின் தவறுகளை சுட்டி காட்டி மக்களை காக்கும் அதிகாரம்  உள்ளது?

வழக்கு போட்டு 6 மாதம் காத்திருந்த பின் இவர்கள் மீது போடபட்ட தேச பாதுகாப்பு சட்டம் செல்லாது என நீங்கள் விடுவித்து என்ன பயன் ?

இந்த பீஜபி ஆட்சியில் நாடு  பின்னோக்கி நகர்கிறது. பிற்போக்கு தனம் அதிகரித்துள்ளது.

தட்டி கேட்க வேண்டிய எதிர்கட்சிகளின் செயல்பாடுகளும் சொல்லிக்கொள்ளும் படி இல்லை.

பக்கத்து வீட்டில் எரியும் தீ நம் வீட்டுக்கு பரவும் முன் இந்த தீய சக்திகளை அரசியலிலிருந்து அப்புற படுத்தப்பட வேண்டியது நமது கடமை...

தினகரன் ஆதரவு தென்காசி எம்.பி., வசந்தி முருகேசன் முதல்வர் பழனிசாமிக்கு திடீர் ஆதரவு...


நீட் தேர்வுக்கு எதிராக பதிவிட்டவர் கைதாம் - அடடா நல்ல ஜனநாயகம்...


இரட்டை இலை சின்னம் . வழக்கை விரைந்து நடத்தும் தேர்தல் ஆணையம். அக்டோபர் 5 ல் விசாரனை என அறிவிப்பு...



இன்றைய நாளை மறக்க முடியுமா...



தமிழன் என்ன கண்டு பிடிச்சான் என்று பலரும் கேட்டு கொண்டிருக்கும் நேரத்தில் தமிழனின் சாதனை பட்டியல்கள்....


நமது வரலாறு நமக்கு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்....

பதாகைக்கு வரலாறு தேடவேண்டிய நிலைமை பிறர்க்கு,
வரலாற்றுக்கு புத்தகமே போடும் நிலைமை தமிழர்களுக்கு.....

கல்லணை : உலகிலுள்ள அணைகளுக்கு முன்னோடியான கல்லணை கட்டப்பட்டு ஈராயிரம் ஆண்டுகள் முடியப் போகும் நிலையிலும், நொடிக்கு இரண்டு இலக்கம் கன அடி நீர் செல்லும் காவேரியை, கரைபுரண்டோடும் காட்டாற்றை தடுத்து கரிகாலன் அணை கட்டிய தொழில் நுட்பத்தை , இன்றைய ஆங்கில அறிவியலாளர்களால் கண்டறிய இயலவில்லை. கரிகாலன் என்ன ஆங்கில அறிவை பெற்றா கல்லணையை கட்டினான் ?

மாமல்லபுரம் : கடற் சீற்றத்திற்கு இடையே, கடற்கரையோரமாக 1400 ஆண்டுகளுக்கு முன் பெரும் பாறை ஒன்றின் முகப்பை மட்டும் பட்டையாகச் செதுக்கி, அதன் பின் உள்நோக்கி குடைந்த வகையில் உருவாக்கப்பட்டவையே மாமல்லபுரம் குடைவரைக் கோயில்கள். மாமல்லபுரத்தின் உச்சி கோபுரம் மட்டும் 60 அடி. கோபுரத்தை தாங்கும் வகையில் முதலில் தூண்கள் செதுக்கப்பட்டன. மாமல்லபுரத்தை உலக வழி தோன்றல் சின்னமாக யுனேசுகா அறிவித்துள்ளது. நரசிம்ம பல்லவன் என்ன ஆங்கிலம் பயின்றனா ?

அங்கோர்வாட் கோயில் : உலகின் மிகப் பெரிய கோயிலை இரண்டாம் சூரிய வர்மன் என்ற தமிழ் மன்னன் கம்போடியாவை கைப்பற்றிய போது அங்கு உள்ள அங்கோர்வாட் என்ற இடத்தில் இக்கோயிலை கட்டியுள்ளான். இன்று வரை உலகில் கட்டப்பட்ட வழிபாட்டுத் தலங்களிலேயே இது தான் மிகப் பெரியது.

திரும்பிய திசை எல்லாம் சிற்பங்கள். இந்த கோயிலின் நான்கு பக்க சுற்று சுவர்களும் முறையே 3.6 கிலோ மீட்டர்கள் நீளமுடையவை. 40 ஆண்டுகளில் இது கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இருக்ககூடிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி கட்டினால் கூட 300 ஆண்டுகள் ஆகும்.

இக்கோயிலின் முழு உருவத்தை காண வானத்தில் 1000 அடிக்கு மேல் சென்று அங்கிருந்து பார்த்தால் மட்டுமே இதை முழுமையாக காண முடியும். இதை முழுமையாக ஒளிப்படம் எடுக்க முடியும் .இதன் முழு கட்டிடமும் அப்போது தான் பதிவாகும்.

திருநள்ளாறு காரி ஈசன் கோயில் : எந்த ஒரு செயற்கைகோளும் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு கரி ஈசன் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் போது 3வினாடிகள் செயலிழந்து விடுகிறது. அதே நேரத்தில் செயற்கை கோள்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படுவதில்லை. இதை பற்றி நாசா அறிவியலாளர்கள் ஆராய்ந்தனர். முடிவு வியப்பை தந்தது.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்து கொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது இந்த கருநீலகதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும். விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும் போது செயலிழந்துவிடுகிறது. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை.

இன்றைய ஆங்கில அறிவியல் தொழில் நுட்ப செயற்கை கோள்களால் கண்டறியயப்படும் காரியின் கதிர்வீச்சை , கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டுபிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி, கதிர்வீசுகள் மிகுதியாக விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான நாளை சனி பெயர்ச்சி என்று அறிவிக்கும் தமிழர்களின் அறிவியல் திறமையை, என்ன வென்று சொல்வது. தமிழ் வழி கல்வி பயின்ற தமிழர்கள் செய்த செயலை ஆங்கில அறிவியல் தொழில் நுட்பத்தால் இன்றளவும் செய்யவும் முடியவில்லை கண்டறியவும் இயலவில்லை.

கடல் நடுவே ராமேசுவரம் : கடலுக்கு நடுவே உள்ள ராமேசுவரம் தீவில் மலைகளோ பாறைகளோ கிடையாது. ராமேசுவரம் கோயில் 1500 ஆண்டு பழமையானது . 1212 மிகப் பெரிய தூண்கள், 590 அடி நீளம் 435 அடி அகலம் கொண்ட உலகின் மிகப் பெரிய நடை மண்டபம், மற்றும் கற்கோயிலை எவ்வாறு உருவாகியிருக்க முடியும். பெரும் பாறைகளை பாம்பனிலிருந்து கடற் கடந்து எவ்வாறு ராமேசுவரம் கொண்டு சென்றிருக்க முடியும் என்பதை ஆங்கிலம் பயின்ற அறிவாளிகள் கண்டறிந்து சொல்லட்டும்.

தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயில்: கற்களே கிடைக்காத காவேரி சமவெளி பகுதியில் 66 மீட்டர் உயரம், 15 தளங்கள் கொண்ட தஞ்சாவூர் பெருவுடையார் கற்கோயிலை இராஜ இராஜ சோழன் எவ்வாறு கட்டினான் என்பது புரியாத புதிர். கோயிலின் கடை கால் வெறும் 5 அடி ஆழத்தில் அமைக்கப்பட்டுள்ளது. புவி ஈர்ப்பு மையத்தை கண்டறிந்து அதற்கேற்ப வெற்றிட அமைப்பில் கட்டப்பட்ட அறிவியல் நுட்பம் கொண்டது. சுமார் 80 ஆயிரம் கிலோ எடை கொண்ட ஒற்றை கல்லை எவ்வாறு கோயிலின் உச்சியில் நிறுவியிருக்க முடியும். பாறையின் மேல் வரும் அழுத்தம் குறித்த சோதனைகளை ஆயிரம் ஆண்டுக்கும் முன்பே தமிழர்கள் கண்டறிந்துள்ளனர்...

தமிழகத்தை ஏன் தமிழன் மட்டுமே ஆள வேண்டும் என்று சொல்கிறோம் என்று புரிகிறதா...