29/10/2017

நீரிழிவை கட்டுப்படுத்தும் கொய்யா இலை...


நீரிழிவுநோயால் அவதிபடுபவர்கள் அனைவருக்கும் சிறந்த மருந்தாகப் பயன்படுகிறது கொய்யா இலை...

கொய்யாஇலை நீரிழிவுக்கு மட்டும் பயன்படுவது அல்ல. பல அற்புதமான குணாதிசயங்களை கொண்டுள்ளது.

காயங்கள், பல் வலி ஈறு வீக்கம் வயிற்றுபோக்கு, மற்றும் வலி நிவாரணியாகவும் பயன்படுகிறது. கொய்யாஇலை கிருமிகளை அழித்து உடலை கட்டுக்குள்கொண்டு வந்துவிடும் சிறந்த உணவாகும்.

இதயநோய், புற்றுநோய், அல்சைமர்நோய், கீல்வாதம், தசைபிடிப்பு போன்ற நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

தேவையான கொய்யா இலைகளை சேகரித்து தண்ணீரில் கழுவி ஒரு பாத்திரத்தில் போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

பின்னர் இறக்கி குளிரவைக்கவும். இதை வாய் கொப்பளிக்க பயன்படுத்தலாம்.

நீரிழிவை கட்டுப்படுத்தும்:

கொய்யாஇலை ஆரோக்கியம் தரும் சிறந்த உணவு என்று ஜப்பான் நாடு உறுதிப்படுத்தியுள்ளது.

இது நிழிவுநோயை தடுக்க உதவுகிறது. கொய்யா இலையில் தயாரிக்கப்படும் தேநீரில் சுக்ரோஸ் மற்றும் மேல்டோஸ் ஆகிய இரண்டு விதமான சர்க்கரையை உறிஞ்சம் தன்மை கொண்டது.

மேலும் சாப்பிட்ட பிறகு ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. இந்த விளைவை பற்றி நியூட்ரீஷன்- மேட்டாபாலீஷம் ஆகிய இரண்டு ஆய்வுகளும் விரிவுபடுத்தியுள்ளது.

குறுகிய கால பயன்கள்: வெள்ளை சாதத்தை உட்கொண்ட பின் கொய்யாஇலை தேநீரை பருகினால் ரத்தத்தில் அதிகமாகக்கூடிய சர்க்கரை அளவு 30, 90 மற்றும் 120 நிமிடத்தில் குறைக்கக்கூடியதட தன்மையை கொண்டுள்ளது.

நீண்ட கால பயன்கள்..

இந்த கொய்யாஇலை தேநீரை நாம் தொடர்ந்து 12 வாரங்கள் பருகினால் தொடங்கும் போது இருந்த இரத்தத்தில் கலந்துள்ள சர்க்கரையின் அளவு வெகுவாக குறைந்திருக்கும்.

குறிப்பாக கர்ப்பிணி பெண்கள் கொய்யா இலை தேநீரை பருகக்கூடாது...

மூல நோய்க்கு ஏற்ற பாட்டி வைத்தியம்...


கோவைக்காய் - 5
சின்ன வெங்காயம் - 5
சீரகம் - 1/2 தேக்கரண்டி
சோம்பு - 1/2 தேக்கரண்டி
மணத்தக்காளி கீரை - 1 கைப்பிடி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
கறிவேப்பிலை - சிறிதளவு

முதலில் கோவைக்காயை அவிச்சி, அதோட மத்த பொருட்களையும் சேத்து சூப் செஞ்சி ஒரு  நாளைக்கு இரண்டு வேளைன்னு பத்து  நாளைக்குத் தொடந்து சாப்பிட்டுக்கிட்டு வாருங்கள்.

மூலத்தோட வேகம் குறைஞ்சு, படிப்படியா குணமாயிடும்.

அதே மாதிரி கோவக்காய அடிக்கடி சாப்பாட்டுல சேத்துக்கிட்டு வந்தால் மூலம் இனிமேல் உங்களுக்கு வரவே வராது...

நீண்ட ஒரு கல்லறையா சீனப் பெருஞ்சுவர்?


சந்தேகமில்லாமல் சீனப் பெருஞ்சுவர் ஒரு உலக அதிசயம் தான். ஒவ்வொரு வருடமும் இதை பார்ப்பதற்கென்றே 40 லட்சம் பயணிகள் வருகிறார்கள்.

சீனாவின் கிழக்கு மேற்காக 9000 கிலோ மீட்டர் நீள்கிறது.

இவை தவிர சீனப் பெருஞ்சுவருக்கு வேறு ஒரு முகமும் உண்டு.

அது அந்த சுவரில் புதையுண்டு இருக்கும் ரகசியங்கள்.

கி.மு.2014ல் கின்(qin) சக்கரவர்த்தி சீனாவை இணைத்த போது இந்தச் சுவரை எழுப்ப உத்தரவிட்டார்.

அந்தப் பகுதியின் பண்டைய இனத்தவர்கள் தனது எல்லைகள் ஆக்கிரமிப்பதைத் தொடரக் கூடாது என்பது தான் இதற்கு முக்கிய காரணம்.

சீனப் பெருஞ்சுவர் எப்படி காலத்தையும் தாண்டியும் நிற்கிறது?

இந்தக் கேள்விக்குக் கிடைக்கும் பதிலும் உலகத்தையே திகைக்க வைக்கும் ஒருவித அரிசிக் கஞ்சியை எலுமிச்சை கலவையில் கலந்து தான் சுவரின் கற்களை இணைத்துள்ளனர்.

முழுச் சுவரும் ஒரே சமயத்தில் கட்டப்பட்டது அல்ல.

அடுத்தடுத்து வந்த சாம்ராஜ்ய மன்னர்கள் ஆளாளுக்கு கொஞ்சமாக சுவரை நீட்டித்தனர்.

சுவரை எழுப்புகையில் 10லட்சம் பேர் இறந்தனர். (இதன் காரணமாகவே உலகின் நீளமான சுடுகாடு என்றும் சீனப் பெருஞ்சுவர் அழைக்கப்படுகிறது).

நிலவிலிருந்து பார்த்தால் உலகில் சீனப் பெருஞ்சுவர் தெரியும் என்பது பரவலாகப் பரவியுள்ள தவறான நம்பிக்கை.

சீனப் பெருஞ்சுவரை எழுப்ப பல உழைப்பாளிகள் கட்டாயப் படுத்தப்பட்டனர்.

அந்த பகுதியில் ஒரு நந்தவனமும் இருந்தது.

அந்த நந்தவனத்தின் உரிமையாளரின் மகள் மெங் ஜியாங் என்பவர்.

அந்த பெண்ணைத் திருமணம் செய்து கொண்டான் இளைஞன் பான் குயிலியாங் என்பவன்.

காதல் வாழ்க்கை சந்தோஷமாகத்தான் போய்க் கொண்டிருந்தது. ஆனால்  அதில் நேர்ந்தது ஒரு சோகமான திருப்பம்.
சீனப் பெருஞ்சுவரை எழுப்புவதற்காக கட்டாயப்படுத்தி அழைத்துச் செல்லப்பட்டான் அந்த இளைஞன்.

அவன் வருவான் என்று காத்திருந்தாள் காதல் மனைவி. கணவன் வருவதாக தெரியவில்லை பொறுமையிழந்த அந்த இளம் மனைவி சீனப் பெருஞ்சுவரின் கட்டுமானப் பணி நடக்கும் இடைத்தை அடைந்தாள்.

ஆனால் அங்கு எவ்வளவு தேடிப் பார்த்தும் அவள் கணவன் கிடைக்கவில்லை.

அப்போது சில கட்டுமான கலைஞர்கள் அவரை அணுகினார்கள். யாரைத் தோடுகிறாய் பெண்ணே என்று கேட்டார்கள். என் கணவன் பான் குயிலியாகைத் தேடுகிறேன் என்றாள்.

சுற்றுமுற்றும் பாார்த்தபடி ரகசியமான குரலில் உன் கணவன் இறந்து விட்டான். இரவு, பகல் என்று தொடர்ந்து அவனை வேலை வாங்கியதில் இதயம் வெடித்தே இறந்து விட்டான் என்றார்கள். மெங் ஜியாங் கதறினாள்.

வெகு நேரம் அழுதபின் என் கணவரின் உடல் எங்கே என்று கேட்டாள்.

அவன் உடலை இந்த பெருஞ்சுவருக்கு நடுவே புதைத்து கட்டிவிட்டார்கள் என்றபடி மெல்ல நகர்ந்தனர்.

இதுபோன்ற துயர சம்பவங்களை நேரில் பார்த்து பார்த்து அவர்கள் மனம் இறுகியிருந்தது.

இளம் மனைவி நாள் கணக்கில் அழுது தீர்த்தாள்.

பெருஞ்சுவரை ஆங்காங்கே ரகசியமாக தோண்டிப் பார்த்தாள். ஆங்காங்கே பல உடல் எலும்புகள் தெரிந்தன.

தன் கைகளை சுவரில் மோதினாள் அந்த ரத்தம் சற்று தள்ளியிருந்த ஒரு குறிப்பிட்ட எலும்பின் மீது பட்டது அதுவே தன் கணவணின் எலும்பு என்பதை உணர்ந்து கொண்டாள்.

இந்த நிகழ்வு திரைப்படமாக எடுக்கப்பட்டு புகழ் பெற்றது.

இனி சீனப் பெருஞ்சுவர் குறித்துக் கேள்விப்படும் போதெல்லாம் வியப்போடு கொஞ்சம் வேதனையும் எழும் அல்லவா?

ஆலயங்களில் கோபுரத்தில் புதைந்துள்ள அறிவியல் உண்மை...


முற்காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்தது. என்ன காரணம்?

கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள்.

அதன் பின் ஒளிந்திருக்கும் ஆன்மிக உண்மை தெரியவில்லை.

ஆனால் அதன் பின் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போதுதான் தெரிகிறது.

கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி செம்பு (அ) ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.

இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின் காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியை கலசங்களுக்குக் கொடுக்கின்றன.

நெல், உப்பு, கேழ்வரகு, தினை, வரகு, சோளம், மக்கா சோளம், சலமை, எள் ஆகியவற்றைக் கொட்டினார்கள்.

குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாகக் கொட்டினார்கள்.

காரணத்தைத் தேடிப் பார்த்தால் ஆச்சர்யமாக இருக்கிறது..

வரகு மின்னலைத் தாங்கும் அதிக ஆற்றலைப் பெற்றிருப்பது என இப்போதைய அறிவியல் கூறுகிறது.

இவ்வளவுதானா? இல்லை, பன்னிரெண்டு வருடங்களுக்கு ஒரு முறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் கலசங்களில் இருக்கும் பழைய தானியங்கள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பப்படுகிறது.

அதை இன்றைக்கு சம்பிரதாயமாகவே மட்டும் கடை பிடிக்கிறார்கள்.

காரணத்தைத் தேடினால், அந்த தானியங்களுக்குப் பன்னிரெண்டு வருடங்களுக்குத்தான் அந்த சக்தி இருக்கிறது. அதன் பின் அது செயல் இழந்து விடுகிறது.

இதை எப்படி அப்போது அறிந்திருந்தார்கள்..? ஆச்சர்யம் தான்.

அவ்வளவுதானா? அதுவும் இல்லை.

இன்றைக்குப் பெய்வதைப் போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது.

ஒரு வேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்துப் பயிர் செய்வது?

இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பில்லை. இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே. ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அதுதான் முதலில் ‘எர்த்’ ஆகும். மேலும் அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.

உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் வரைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்களை இடி தாக்காமல் காக்கப்படுவார்கள்.

அதாவது சுமார் 75008 மீட்டர் பரப்பளவிலிருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.

சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன. அது நாலாபுறமும் 75000சதுர மீட்டர் பரப்பளவைக் காத்து நிற்கிறது.

இது ஒரு தோராயமான கணக்கு தான்.

இதைவிட உயரமான கோபுரங்கள் இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றன.

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்ற பழமொழி நினைவுக்கு வருகிறது...

பாஜக தமிழிசை கலாட்டா...


பல நோய்களுக்கான ஒரு மருந்து...


வெந்தயம்.    -  250gm
ஓமம்               -  100gm
கருஞ்சீரகம்  -  50gm

மேலே உள்ள 3 பொருட்களையும்  சுத்தம் செய்து அதை தனியாக கருகாமல் வறுத்து,  தூள் செய்து ஒன்றாக கலந்து ஒரு கண்ணாடி குடுவையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இக் கலவையை ஒரு ஸ்பூன் அளவு   இரவு நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் உட்கொள்ள வேண்டும்.

இதை சாப்பிட்ட பின்பு எந்த உணவும் சாப்பிடக் கூடாது.

தினசரி இந்த கலவையை சாப்பிடுவதால் நம் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து நச்சு கழிவுகளும்  மலம், சிறுநீர் மற்றும் வியர்வை மூலம் வெளியேற்றப்படுகிறது.

தேவையான கொழுப்பு எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்பு  நீக்கப்படுகிறது.

இரத்தம் சுத்திகரிக்கப்பட்டு சீரான இரத்த ஓட்டத்தை  ஏற்படுத்துகிறது.

இரத்த குழாய்களில் உள்ள அடைப்புகள் நீக்கப்படுகிறது.

இருதயம் சீராக இயங்கும்.

சருமத்தில் உள்ள சுருக்கங்கள்  நீக்கப்படுகிறது.

உடலில் உறுதியும், தேக மினுமினுப்பும்,  சுறுசுறுப்பும் உண்டாகிறது.

எலும்புகள் உறுதியடைந்து எலும்பு தேய்மானம் நீங்குகிறது.

ஈறுகளில் உள்ள பிரச்சனைகள் நீக்கப்பட்டு பற்கள்  வலுவடைகிறது.

கண் பார்வை தெளிவடைகிறது.

நல்ல முடி வளர்ச்சி உண்டாகிறது.

மலச்சிக்கல்  நீங்குகிறது.

நினைவாற்றல் மேம்படுகிறது.

கேட்கும் திறன் அதிகரிக்கிறது.

பெண்கள் சம்மந்தப்பட்ட நோய்கள் நீங்குகிறது.

மருந்துகளின் பக்க விளைவுகள் நீக்கப்படுகிறது.

ஆண், பெண் சம்மந்தமான பாலியல் பலவீனங்கள் நீக்கப்படுகிறது.

 நீரிழிவு நோய் பராமரிக்கப்படுகிறது.

இந்த கலவையை  2-3 மாதங்கள் தொடர்ந்து சாப்பிடும் போது நாட்பட்ட வியாதிகள் அனைத்தும் குறைகிறது...

பாஜக மோடியின் மூன்றாண்டு ஆட்சி சாதனைகள்...


மூன்றாண்டு என்ன செய்தீர்கள்? என்று கேட்ட எதிர்கட்சிகளுக்கு இதோ எங்கள் சாதனை பட்டியல் - பாஜக...

பெட்ரோல் / டீசல் வரி 200% உயர்வு.

மருந்து பொருள் விலை உயர்வு.

ரயில் கட்டண விலை உயர்வு.

கேஸ் விலை உயர்வு.

புதிய வரிகள்.

பெரு முதலாளிகளின் வாராக்கடன் தள்ளுபடி.

வெளிநாட்டு கருப்பு பண முதலீட்டாளர்கள் பெயர் வெளியிட மறுத்தல்.

ரூ.500/1000 தடை மற்றும் வேலை இழப்புகள்.

ரூபாயின் மதிப்பு சரிவு.

மோடி வெளிநாட்டு பயணங்கள்.

வெளியுறவு கொள்கை.

ராணுவ வீரர் ஓய்வூதிய திட்ட தாமதம்.

உதய் மின்திட்டம்.

தமிழ்நாடு வறட்சி நிவாரணம்.

தபால் துறை வழியாக கங்கை நீர் விநியோகம்.

காஷ்மீர் தேர்தல் 8% வாக்குப்பதிவு.

அருணாசல பிரதேச ஆட்சி கலைப்பு.

ராணுவத்திற்காண உணவில் முறைகேடு.

சீனபட்டாசிற்கு எதிரான தேர்தல் நேர பேச்சு.

பலுசிஸ்தான் தலையீடு.

இட ஒதுக்கீடு நீக்கம் பற்றிய பேச்சுகள்.

பென்சன் வட்டி விகிதம் குறைப்பு
 மற்றும் விதிமுறை மாற்றங்கள்.

மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பல ஆயிரம் கோடி ஊதியம் தாமதம்.

ஜி.டி.பி குளறுபடி.

புதிய வங்கி கட்டணங்கள்,

ஆதார் அட்டை கட்டாயம்.

அந்நிய நேரடி முதலீடு.

தூய்மை இந்தியா திட்டம்.

மேக் இன் இந்தியா.

டிஜிட்டல் இந்திய திட்டம்.

அணு உலை.

புல்லட் ரயில்.

நில கையகப்படுத்தும் மசோத.

ஸ்மார்ட் சிட்டி.

ஹிந்தி திணிப்பு.

காவேரி நீர்மேலாண்மை ஆணையம் மறுப்பு.

நீதிபதிகள் நியமனம் தாமதம்.

ஜி.எஸ்.டி.

சரிந்து வரும் வேலை வாய்ப்புகள்.

IT ஊழியர்கள் பணி நீக்கம்.

காஷ்மீர் தொடர் கிளர்ச்சி - பெல்லட் குண்டு.

கல்புர்கி கொலை.

ரோஹித் வெமுலா.

ஜவாஹர்லால் பல்கலைக்கழகம் சர்ச்சைகள்.

வருண் காந்தி - ராணுவ ரகசியங்கள் கசியவிட்டது.

ரகுராம் ராஜன் மாற்றம்.

ஜல்லிக்கட்டு போராட்டம்.

உத்திரகாண்ட் சீனா ஊடுருவல் 15 கிமீ
எல்லை தாண்டிய தாக்குதல். உண்மையா பொய்யா ? தொடர் ராணுவ வீரர்கள் பலி.

ஜியோ சிம் விளம்பரம்.

லலித் மோடி எஸ்கேப்.

வியாபம் மெகா ஊழல்.

கிரண் ரிஜ்ஜு 450 கோடி ஊழல்.

சுரங்க ஊழல் - மகாராஷ்டிரா & கர்நாடகா.

தனி விமானம் 2000 கோடி.

பிரான்ஸ் - பழைய போர் விமானம் அதிக விலை.

15 லட்சம் மோடி ஆடை.

பாகிஸ்தான் திடீர் வருகை & அதானி தொழில் வாய்ப்புகள்.

பள்ளி பாட புத்தகங்கள் வரலாறு திரிப்பு.

முக்கிய பிரச்சனைகளில் மௌனம்.

பல்வேறு பா.ஜ.க உறுப்பினர்களின் வெடி தயாரிப்பு செயல்பாடுகள்.

ஓரினச்சேர்க்கை, பலாத்காரம், பெண் பற்றி கலாச்சாரத்திற்கு முரணான கருத்துக்கள்.

சஹாரா நிறுவன லஞ்சம் - மோடி முதலமைச்சராக இருந்த போது.

தனியார் நிறுவன விளம்பரம் - JIO & PAYTM.

குஜராத் தொழிலதிபர் மகேஷ் ஷா வாக்குமூலம்.

பதில் இல்லாத தகவல் அறியும் சட்டம் - மோடி கல்வி தகுதி.

மத்திய மந்திரி நடிகையுமான ஸ்மிருதி இராணியின் கல்வி தகுதி சர்ச்சை.

தேச பக்தி நாடகங்கள்.

மேகாலயா கவர்னர் காம லீலை.

ஜக்கி ஈஷா யோகா நிகழ்ச்சி.

பாபா ராம்தேவ் - நில ஒதுக்கீடு.

சமஸ்கிருதம் திணிப்பு.

புதிய கல்வி கொள்கை.

பொது சிவில் சட்டம்.

கங்கை சுத்தப்படுத்தும் திட்டம் - 20,000 கோடி வீண்.

ஓராண்டில் 600க்கும் மேற்பட்ட மதகலவரங்கள்.

மாட்டு கறி தடை.

மாட்டு கறி கொலைகள் - அக்லாக், உனா (குஜராத்).

மதவெறி பேச்சு.

ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் மாநாடு - பசுமை தீர்ப்பாயம் அபராதம்.

அயோத்தி ராமர் கோவில்.

அமைச்சர்களின் வெறுப்பு பேச்சு.

கட்டாய சூரிய வணக்கம் / யோகா.

காவிரி நதி நீர் மேலாண்மை வாரியம், தீர்ப்பு & வன்முறை.

டெல்லி விவசாயிகள் நிர்வான போராட்டம்.

அதானிக்கு மட்டும் 72,000 கோடி கடன்.

SBI மினிமம் பேலன்ஸ் 5000.

மாட்டு அரசியல்.

நீட் தேர்வு.

ரேஷன் மானியம் நிறுத்தம்.

இது முடிவல்ல ஆரம்பம் இன்னும் தொடரும் இந்திய மக்களுக்கு சூடு சொரனை வரும் வரையில்...

மோடி ஆட்சியின் மூன்றாண்டு  சாதனைகளை அறிந்த கொண்டவர்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களித்து வெற்றி பெறச் செய்துவிட்டு சுடுகாட்டில் போய் படுத்து கொள்ளும்படி கேட்டு கொள்கிறோம்...

முகப்பரு, கரும்புள்ளிகள் மற்றும் தழும்புகள் நீங்க சித்தர் மருத்துவம்...


ஆழ்மனதின் அற்புத சக்திகள் - 44...


பகிராத எண்ணத்தை உணர முடியுமா?

தியானத்தைப் பற்றி இது வரை சற்று விரிவாகவே விளக்கியதற்கு முக்கிய காரணம் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல நம்மை நாம் முழுமையாக அறிய தியானம் மிகவும் உதவுகிறது என்பது தான். எத்தனையோ சக்திகள் இருந்தும் வாழ்நாள் முழுவதும் அதை அறியாமல், அறியாத காரணத்தால் அதைப் பயன்படுத்தாமல் மனிதர்கள் பலவீனர்களாய் வாழ்ந்து மடியும் அவலம் இன்று அதிகம் இருக்கிறது.

நாம் உண்மையை அறிய ஐம்புலன்களையே நம்புகிறோம். ஐம்புலன்களின் உதவி இல்லாமலேயே அவற்றால் அறிய முடிந்தவற்றைக் காட்டிலும் அதிகமாக, நுட்பமாக, துல்லியமாக சிலவற்றை அறிய முடியும் என்று சொன்னால் நம்புவதில் நாம் பெரும் சிரமத்தை உணர்கிறோம். காரணம் அதை எளிதில் விளக்கவோ, விளங்கிக் கொள்வதற்கோ முடிவதில்லை.

ஆனால் தாவரங்கள், விலங்குகள் கூட அசாத்தியமான, எப்படி முடிகிறது என்று விளக்க முடியாத பல அபூர்வசக்திகளைப் பெற்றுள்ளன என்பதற்கு நிறைய ஆதாரங்கள் உள்ளன. இதில் சிலவற்றை முன்பே சிறிது சொல்லி இருந்தாலும் கூடுதல் தகவல்கள் அறிந்து கொள்வது இந்த இடத்தில் பொருத்தமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

1960களில் க்ளீவ் பாக்ஸ்டர் Cleve Baxter என்ற விஞ்ஞானி தாவரங்களை வைத்து சில பரிசோதனைகள் செய்தார். தாவரங்களில் polygraph electrodesஐ
இணைத்து செய்த பரிசோதனைகளில் தாவரங்கள் மனித எண்ணங்களை அறிந்து கொண்டு அதன்படி செயல்படுகின்றன என்பதைக் கண்டுபிடித்தார். அந்தச் செடிகளுக்குத் தண்ணீர் ஊற்ற அவர் தயாரானபோதே அந்த செடி இலைகளில் அதற்கேற்ற ஒரு மாற்றம் உருவானதைக் கருவிகள் அடையாளம் காண்பித்தது அவருக்கு ஆச்சரியத்தை ஏற்ப்படுத்தியது.

அவர் அதற்கு தீங்கு விளவிப்பது போல மனதில் கற்பனை செய்தால் ஏதாவது மாற்றம் தெரிகிறதா என்று ஆராய, மனதில் அதன் இலைகளைத் தீப்பற்ற வைப்பது போல் மனதில் கற்பனை செய்தால் அதன் இலைகள் அதை உணருமா என்பதை அறிய முயற்சித்தார். ஆனால் அவர் கற்பனைக்கு வடிவம் தரும் முன்னேயே, அவருக்கு எண்ணம் எழுந்தவுடனேயே அந்தத் தாவர இலைகளில் அதற்கேற்றாற்போல் மாற்றம் பதிவானது அவருடைய ஆச்சரியத்தை மேலும் அதிகப்படுத்தியது. அவருடைய தொடர்ந்த ஆராய்ச்சிகளில் தாவரங்கள் தங்களை அழிக்க வருபவர்கள் அருகில் வரும் போதும், தங்களை வளர்ப்பவர்கள் மற்றும் நேசிப்பவர்கள் அருகில் வரும் போதும் அதற்கேற்றாற்போல் வேறு வேறு விதமாக உணர்கின்றன என்பதைக் கண்டுபிடித்தார். மனித எண்ணங்களை எப்படி தாவரங்கள் அறிகின்றன என்பதற்கு இன்னமும் சரியான விஞ்ஞான விளக்கமில்லை.

அதே போல் விலங்குகளில் நாய் மற்றும் குதிரை தங்கள் எஜமானர்களின் எண்ணங்களை உணர வல்லவை என்று கண்டுபிடித்திருக்கிறார்கள். அவர்களுடைய மனநிலைகளுக்குத் தகுந்தபடி நடந்து கொள்கின்றன என்று சொல்கிறார்கள். நாய்களை மிகவும் நேசித்து வளர்த்துபவர்கள் வீட்டிற்குச் சென்றால் அவர்களுடைய நாய்கள் எந்த அளவு புரிந்து கொண்டு நடக்கின்றன என்பதைக் கதை கதையாய் சொல்வார்கள்.

அதே போல் வேட்டைக்குச் செல்பவர்களும் விலங்குகளின் சில விசேஷ நடவடிக்கைகளைப் பதிவு செய்திருக்கிறார்கள். காடுகளில் விலங்குகளை வேட்டையாட அவர்கள் மறைந்து பதுங்கி இருக்கும் போது மோப்பத்தினால் கூட அவை அறிய முடியாத தூரத்தில் வரும் போதே ஏதோ ஒரு விதத்தில் அபாயத்தை உணர்கின்றன என்பதை அனுபவபூர்வமாகச் சொல்கிறார்கள். பார்க்க முடியாதபடி மறைந்திருந்தாலும், மோப்பம் பிடிக்க முடியாத தூரத்தில் இருந்தாலும் அவை ஒரு கணம் ஸ்தம்பித்து நின்று விட்டு, பின் சிலிர்த்துக் கொண்டு அந்த வழியே வராமல் வேறு வழியாகப் பயணிப்பதைத் தெரிவிக்கிறார்கள். ஒரு சில விலங்குகள் அபாயத்தை எதிர்கொள்ளும் போது எழுப்பும் ஒலியை அந்த சமயங்களில் எழுப்பி விட்டுச் செல்வதாகவும் சொல்கிறார்கள். இது போன்ற அபாயத்தை உணரும் அபூர்வ சக்திகளை காட்டு விலங்குகள் அதிகம் பெற்றிருப்பதாகவும் வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் காலப்போக்கில் அந்த சக்திகளை இழக்க ஆரம்பித்து விடுவதாகவும் விலங்கின ஆராய்ச்சியாளர்கள் சொல்கிறார்கள்.

ஒரு தாவரமோ விலங்கோ கூட மனிதனின் நோக்கத்தையும், எண்ணத்தையும் அறிவிக்காமலேயே அறிந்து கொள்கின்றன என்றால் மனிதன் இன்னொரு மனிதனின் எண்ணங்களையும், நோக்கங்களையும் சொல்லாமலேயே தெரிந்து கொள்வதில் ஆச்சரியம் என்ன இருக்கின்றது. இன்னும் சொல்லப் போனால் இயற்கையோடு இயற்கையாக வாழ்ந்து கொண்டிருந்த ஆதிமனிதன் இன்றைய மனிதனைக் காட்டிலும் இது போன்ற அபூர்வ சக்திகளை அதிகம் பெற்றிருந்தான் பயன்படுத்தினான் என்றே சொல்லலாம்.

சிட்னி பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரான டாக்டர் ஏ.பி.எல்கின் Dr. A.P. Elkin என்பவர் ஆஸ்திரேலிய நாட்டின் பழங்குடி மனிதர்களான புதர்மனிதர்கள் எனப்படுபவர்கள் குறித்து நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறார். அந்த புதர்மனிதர்கள் காணாமல் போன பொருட்களையும், வழிதவறிப் போன ஆடுமாடுகளையும், திருடர்களையும் அனாயாசமாகக் கண்டு பிடிப்பதில் வல்லவர்களாக இருப்பதை ஆய்வில் கண்டுபிடித்திருக்கிறார்.

அவர் எழுதிய Aboriginal Men of High Degree என்ற புத்தகத்தில் அந்தப் புதர்மனிதர்களை ஆராய்ச்சி செய்ய ட்ரெக்கிங் சென்ற போது அவர் வருகையையும், வரும் நோக்கத்தையும் அவர்கள் முன் கூட்டியே அறிந்து வைத்திருந்தனர் என்று கூறுகின்றார். பல்வேறு பகுதிகளில் வசித்து வந்த அவர்கள் மற்ற பகுதிகளில் வசிக்கும் அவர்களது வேண்டப்பட்டவர்களின் மரணத்தையோ, உறவினர்கள் வீட்டில் குழந்தை பிறப்பதையோ உடனடியாக அறிந்தார்கள் என்றும் கூறுகிறார். அவரிடம் அந்த புதர்மனிதர்கள் “எண்ணங்கள் பார்க்க முடியாதவையாக இருந்தாலும் அவற்றைக் காற்று வெளியில் அனுப்புவதும் பெறுவதும் எளிது” என்று தெரிவித்தார்களாம்.

அவருடைய புத்தகத்தால் கவரப்பட்டு லிண்டன் ரோஸ் Lyndon Rose என்ற மனவியல் நிபுணர் அந்த புதர்மனிதர்களை வைத்து மேலும் பல பரிசோதனைகள் செய்தார். மூடிய பெட்டிகளில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்கும் ஆய்வுகளில் கிட்டத்தட்ட ஐம்பது சதவீத விடைகளை அவர்கள் சரியாகச் சொன்னார்கள். சரியாகச் சொல்லாத பொருட்கள் கூட பெரும்பாலும் இதுவரை அந்தப் பழங்குடியினர் கண்டிராத பொருட்களாக இருந்தன.

ஒரு காலத்தில் பக்கம் பக்கமாக எண்களைக் கையாலேயே கூட்டி கணக்கிடும் பழக்கம் இருந்தது. சில வயதான கணக்குப் பிள்ளைகள் இப்போதும் ஒரு முறை கூட்டும் போதே சிறு பிழை கூட இல்லாமல் கூட்டி கணக்கிடுவதை நம்மில் பலரும் பார்த்திருக்கலாம். ஆனால் கால்குலேட்டர் உபயோகப்படுத்தப்படும் இக்காலத்தில் அந்தக் கணக்கிடும் திறனை இழந்து விட்டிருக்கிறோம். மிக எளிய இரண்டு எண்களைக் கூட்டக் கூட நமக்கு கால்குலேட்டரே தேவைப்படுகிறது. அதே போலத் தான் எந்தத் திறமையும், சக்தியும், நாம் உபயோகிக்காமல் விட்டு விட்டால் காலப்போக்கில் அந்தத் திறனை முழுமையாக இழந்து விடுகிறோம். அப்படித்தான் எத்தனையோ இயல்பான ஆழ்மன சக்திகளை மனித சமுதாயம் இழந்து விட்டிருக்கிறதோ? சிந்தியுங்கள்.

புலன்கள் வழியே மட்டும் பலவற்றையும் அறியத் துவங்கிய மனிதர்கள் அனைவரும் ஒரே ஒரு கட்டத்தில் புலன்கள் துணையில்லாமலேயே எல்லாவற்றையும் அறிகிறார்கள். அது எப்போது தெரியுமா?

மேலும் பயணிப்போம்....

இந்தியாவில் அதிக நன்கொடை பெறும் மாநில கட்சி திமுக தான் ஆய்வில் தகவல்...