14/11/2017

எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் மாயம், ரூ.200-க்கு ஆசைப்பட்டு சென்ற கணவரை தேடும் மனைவி...


200 ரூபாய்க்கு ஆசைப்பட்டு, இன்று கண்ணீரும் கடிதமுமாக போலீஸ் ஸ்டேஷன், எஸ்.பி ஆபீஸ், கலெக்டர் ஆபீஸ் என்று நடையாக நடந்து கொண்டிருந்த வசந்தாவுக்கு, என்னதான் பிரச்னை? அவரிடமே பேசினோம்.

'தருமபுரியை அடுத்துள்ள குண்டல்பட்டி தான் எங்க கிராமம். எனக்கு பிரபாகரன், ஜெயகுமார்னு ரெண்டு மகன்கள் உள்ளனர், என் கணவர் செல்வத்துக்கு 60 வயது ஆகிறது. தினமும் கட்டட வேலைக்குப் போனாதான் எங்க குடும்பத்துக்கு வருமானம்.

2017அக்டோபர் 7-ந் தேதி, தருமபுரியில் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நடந்தது. விழாவுக்கு வர்ற ஆண்களுக்கு 200 ரூபாயும், பெண்களுக்கு 150 ரூபாயும் தந்து அழைச்சுக்கிட்டுப் போக டெம்போ வர்றதா அ.தி.மு.க-வை சேர்ந்த ராஜா சொன்னார். சரி, வீட்டுல சும்மாதானே இருக்குகோம் போயிட்டுவந்தா 350 ரூபா கிடைக்கும்னு 7-ம் தேதி மதியம் 2 மணிக்கு நானும் அவரும் தனித் தனி டெம்போவுல விழாவுக்குப் போனோம்.

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா முடிஞ்சதும் நான் வீடு திரும்பிட்டேன். ஆனா, என் கணவர் செல்வம் மட்டும் வீடு திரும்பல. கடந்த 36 நாளா தேடி வர்றோம்.

இன்னிக்கு வரை வீடு திரும்பல. அவருக்கு என்ன ஆச்சு ஏது ஆச்சுன்னு தெரியல. அவருக்கு உடல்நிலை சரியில்லை., தினமும் மாத்திரை எடுத்துக்கணும். சரியா பேசக்கூட வராது அவருக்கு'' என்று கண்ணீர் வடித்தார் வசந்தா.

ஆளும் கட்சியைச் சேர்ந்த ராஜா ஒரு முறை, போலீஸ் ஸ்டேஷன் கூட்டிட்டுப் போனார். ஆனா, அவர் மட்டுமே போலீஸ் அதிகாரிகள்கிட்ட பேசினார். எனக்கு எந்த விவரமும் சொல்லலை. பிறகு, யாரோ செத்துப்போயிட்டாங்கன்னு அவங்களோட போட்டோவைக் காட்டி, இவரா?

என்று கேட்டாங்க போலீஸ். அவர் இல்லைனு சொல்லிட்டோம். எப்படியாவது என் கணவரை கண்டு பிடிச்சிக் கொடுக்க ஏற்பாடு செய்யுங்க என்று பரிதாபமாகக் கண்ணீர் விட்டு அழுதார் வசந்தா.

தருமபுரி பி1 காவல் நிலைய ஆய்வாளர் ரத்தினகுமாரிடம் வந்தாவின் புகார் குறித்துக் கேட்டோம்., ''ஆமாங்க, காணாமல் போனதாகப் புகார் கொடுத்துள்ளார்கள்.

மேன் மிஸ்சிங் கேஸ் போட்டு தேடி வருகிறோம். அவருக்கு சரியாகப் பேச வராதுன்னும் சொல்றாங்க நாங்க மட்டும் என்ன செய்ய முடியும்'' என்றார்.

விழாவுக்கு அழைத்துச் சென்ற அ.தி.மு.க நிர்வாகிகள், வசந்தாவின் கண்ணீருக்கு என்ன பதில் சொல்லப்போகின்றார்கள் என்ற கேள்விக்கு இன்றுவரை பதில் இல்லை.

 - K7 news

முகத்தில் கரும்புள்ளிகளைப் போக்கும் மாஸ்க் மருத்துவம்...


மூக்கின் ஓரங்களில் தங்கியுள்ள கரும்புள்ளிகளை தேய்த்து தேய்த்து சோர்ந்து விட்டீர்களா? அப்படியெனில், அதனைப் போக்க வேறு என்ன வழி உள்ளது என்று யோசிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம்.

சரி, இந்த கரும்புள்ளிகள் எப்படி வரு கிறதென்று தெரியுமா?

சருமத்துளைகளானது எண்ணெய், அழுக்குகள் மற்றும் இறந்த செல்களால் அடைக்கப்படுகிறதோ, அப் போது தான் கரும்புள்ளிகள் உருவாகின்றன. பொதுவாக இந்த கரும்புள்ளிகள் மூக்கு, தாடை, நெற்றி மற்றும் கன்னங்களில் அதிகம் காணப்படும்.

ஏனெனில் அந்த இடங்களில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பிகள் இருப்பதால், அந்த பகுதிகளில் அதிகம் ஏற்படுகிறது. எனவே தான் முகத்திற்கு அவ்வப்போது மாஸ்க், ஸ்கரப் போன்றவற்றை மேற்கொள்வது இன்றியமையாததாக உள்ளது.

அதற்காக கடைகளில் விற்கப்படும் கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி ஸ்கரப் செய்ய வேண்டாம். வீட்டில் இருக்கும் சில எளிய பொருட்களைக் கொண்டு, அருமையான முறையில் கரும் புள்ளிகளை போக்கலாம். இப்போது முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்குவதற்கு எப்படியெல்லாம் ஃபேஸ் மாஸ்க் போட வேண்டும் என்று பார்ப்போம்.

ஓட்ஸ் :

ஓட்ஸ் பவுடரை பாலில் கலந்து, முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால், கரும் புள்ளிகளானது எளிதில் நீங்குவதோடு, சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் மற்றும் அழுக்குகள் நீங்கிவிடும்.

தயிர் :

தயிரில் தேன் மற்றம் கடலை மாவு சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தில் தடவி மசாஜ் செய்து, 5 நிமிடம் ஊற வைத்து, நன்கு காய வைத்து, தண்ணீர் ஊற்றி மீண்டும் ஸ்கரப் செய்ய வேண்டும்.

எலுமிச்சை :

எலுமிச்சையில் ப்ளீச்சிங் தன்மை அதிகம் இருப்பதால், அதனைக் கொண்டு முகத்தை சிறிது நேரம் மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள், அதிகப்படியான எண்ணெய் பசையுடன், கரும்புள்ளிகளும் நீங்கிவிடும். மேலும் முகமும் வெள்ளையாகும்.

ஆரஞ்சு தோல் :

ஆரஞ்சு தோலை நன்கு உலர வைத்து, பொடி செய்து, அதனை பால் மற்றும் தேனுடன் சேர்த்து கெட்டியான பேஸ்ட் போல் கலந்து, முகத்தை ஸ்கரப் செய்து, உலர விட்டு கழுவினால், முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைந்து விடும்.

பேக்கிங் சோடா :

பேக்கிங் சோடாவும் ஒரு சூப்பரான கரும்புள்ளியைப் போக்கும் பொருள் தான். அதற்கு பேக்கிங் சோடாவை நீரில் கலந்து, ஈரமான முகத்தில் அதனைக் கொண்டு மசாஜ் செய்தால், கரும்புள்ளிகளுடன் முகப்பருக்களும் நீங்கி விடும்...

மெல்லோட்டம் செய்வதால் கிடைக்கும் பயன்கள்...


மெல்லோட்டத்தை ஆங்கிலத்தில் ஜாகிங் (Jogging) என்பார்கள்.

விரைவான நடைக்கும், வேகமான ஓட்டத்திற்கும் இடைப்பட்ட சீரான ஓட்டமாகும்.

இந்த மெல்லோட்டத்தை ஆண், பெண் இருபாலரும் மேற்கொள்ளலாம். மெல்லோட்டம் செய்ய காலை நேரமே சிறந்தது.

மெல்லோட்டம் பயிற்சியில் ஈடுபடும் முன் பருத்தியினாலான இறுக்கமில்லாத ஆடைகளை அணிந்துகெள்ள வேண்டும். ஆரம்பத்தில் 1/2 கிலோ மீட்டருக்கு மேல் ஓடக்கூடாது. அதுபோல் 50 வயதைக் கடந்தவர்கள் 5 கிலோமீட்டருக்கு மேல் ஓடக்கூடாது.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள், நீரிழிவு நோயாளிகள் மருத்துவரின் ஆலோசனை பெற்று ஓடலாம். தினமும் செய்யாமல் ஒருநாள் விட்டு ஒருநாள் செய்யலாம்.

மெல்லோட்டத்தால் ஏற்படும் நன்மைகள்..

மன அழுத்தம், மன எரிச்சல் நீங்குகிறது.

நுரையீரலுக்கு போதுமான ஆக்ஸிஜனைப் பெற்று இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது.

இரத்தத்தில் உள்ள கொழுப்புகளை கரைக்கிறது.

உடலின் எடை சீராக வைக்கப்படுகிறது.

இதயத் தசைகள் வலுவாக்குகிறது. இதயம் சுருங்கி விரியும் போது இரத்தத்தின் அளவு அதிகரிக்கிறது.

உடலின் தசைகள் வலுப்பெறுகிறது.

எலும்புகளில் உள்ள சுண்ணாம்புச்சத்து குறைவைத் தடுத்து எலும்புகளை பலப்படுத்துகிறது.

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கிறது.

என்றும் இளமைப் பொலிவோடு இருக்க உதவி செய்கிறது.

முதுமையைத் தள்ளிப்போட வைக்கிறது.

மெல்லோட்டம் சிறந்த உடற்பயிற்சியாகும். இதனை கடைப்பிடித்தால் ஆரோக்கியமாக நீண்ட நாள் வாழலாம்...

நான் படித்த உளவியலில் இருந்து உங்களுக்காக சில தகவல்கள்...


1. அதிகம் சிரிப்பவர்கள் அதிகம் தனிமையில் வாடுபவர்கள்..

2. அதிகம் தூங்குபவர்கள், சோகத்தில் இருப்பவர்கள்..

3. வேகமாக அதே நேரம் குறைவாக பேசுபவர்கள், அதிகமாக ரகசியங்களை வைத்திருப்பவர்கள்..

4. அழுகையை அடக்குபவர்கள் மனதால் பலவீனமானவர்கள்..

5. முரட்டுத்தனமாக உண்பவர்கள் மன அழுத்தத்தில் இருப்பவர்கள்..

6. சின்ன சின்ன விஷயங்களுக்கும் அழுபவர்கள் அப்பாவிகள். மனத்தால் மென்மையானவர்கள்..

7. சின்ன சின்ன விஷயங்களுக்கும் கோபப்படுபவர்கள் அன்புக்காக ஏங்குபவர்கள்..

தமிழா விழித்துக் கொள்...


தமிழினத்தின் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் சிந்தனை துளி...


சுதந்திரத்தை வென்றெடுக்காது போனால் நாம் அடிமைகளாக வாழ வேண்டும்...

தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழ வேண்டும்.

பயந்து பயந்து பதற்றத்துடன் வாழ வேண்டும்.

படிப்படியாக அழிந்து போக வேண்டும்..

ஆகவே, சுதந்திரத்திற்காகப் போராடுவதை தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை...

– எம் தேசிய தலைவர் மேதகு வே.பிரபாகரன் ..

நெல்லிக்காயும், நோய் எதிர்ப்புத் திறனும்...


நெல்லிக்காயில் உயிர்ச்சத்து – சி (Vitamin C) அதிகமாக உள்ளது.

உயிர்ச்சத்து – சி செல்களின் இனப் பெருக்கத்தில் (Cells Reproduction) முக்கிய பங்கு வகிக்கிறது.

மேலும் உயிர்ச்சத்து – சியில் ஆண்டி – ஆக்சிடன்ட் (Anti – Oxidant) தன்மை அதிகமாக உள்ளதால் நோய் வராமல் தடுக்கிறது.

எனவே கற்ப மூலிகையாக கருதப்படுகிறது...

இறப்பிற்கு 50% காரணமான கொசுக்கள் பற்றி தெரிந்ததும் தெரியாததும்...


உலகத்திலேயே மிக ஆபத்தான பூச்சி எது என்று பார்த்தால்… நாம் நினைப்பது போன்று அமேசான் காடுகளிலோ அல்லது ஆப்பிரிக்க காடுகளிலோ இருக்கும் ஒரு இனம் தெரியாத ஜந்து அல்ல…

நம்மை சுற்றி இருக்கும் நாம் அறிந்த  நுளம்பு/கொசு தான்... உலகிலேயே மிக ஆபத்தான பூச்சியாகும்!

மலேரியா, டெங்கு, மஞ்சள் காமாலை காய்ச்சல், மேற்கு நைல் வைரஸ் போன்ற எண்ணிலடங்காத நோய்கள் பரவுவதற்கு இந்த கொசுக்கள் காரணமாக அமைகின்றது.

வருடா வருடம் லட்சக்கணக்கான மக்களின் இறப்பிற்கு இந்த கொசுக்கள் காரணமாக இருக்கின்றன.

கற்காலம் முதல் இன்றுவரை உலகில் வாழ்ந்த மனிதர்களில் 50% இறப்பிற்கு கொசுக்கள் காரணம் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

இனி கொசுக்களை பற்றி தெரிந்த, தெரியாத சுவாரஷ்யங்களைப் பார்ப்போம்…

1. பெண் கொசுக்கள் மாத்திரமே மனிதரையும் விலங்குகளையும் கடிக்கும். ஆண் கொசுக்கள் பூக்களில் இருந்து உணவைப் பெற்றுக்கொள்ளும்.

2. இது அனைவருக்கும் தெரிந்த விசயம். ஆனால், பெண் கொசுக்கள் மனிதரை தாக்குவதற்கான காரணம் தமது இனப்பெருக்க முட்டைக்குத் தேவையான புரதத்தை (protein ) பெற்றுக் கொள்வதற்காகவே.

3. சில இடங்களில் இருக்கும் கொசுக்கள் மனிதரை கடிப்பதே இல்லை (பெண் கொசுவாக இருந்தாலும்) அவை விலங்குகள் மற்றும் பறவைகளை மட்டுமே கடிக்கின்றன.

4. கொசுக்கள் மணிக்கு 1.5 – 2 கிலோமீட்டர் வேகத்தில் பறக்கும்.

5. இது ஏனைய பூச்சிவகைகளுடன் ஒப்பிட்டால் மிகவும் மந்தமானது. போட்டி வைத்தால் கொசுக்கள் கடைசியாகவே வரும்.

6. ஒரு செக்கனிற்கு 300-600 தடவைகள் தமது இறக்கைகளை அடிக்கும்.

7. இதன் விளைவாகவே உங்கள் தலைப்பகுதியை கொசு அண்டும் போது ஒரு வித ஒலி ஏற்படுகின்றது.

8. பொதுவாக வீடுகளை அண்டியே கொசுக்கள் வாழும். ஆனால் சிலவகை கொசுக்கள் 160 கிலோமீட்டர் தூரத்தில் கூட தமது இனப்பெருக்கத்தை நடத்தும். (நீரிலேயே தமது குஞ்சுகளை இடும்.)

9. டைனோசர் காலத்தில் இருந்தே கொசுக்கள் இருந்து வந்துள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகின்றார்கள். தென் ஆபிரிக்க கண்டத்தில் உருவாகி உலகம் முழுவதும் பரந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.

10. கொசுக்கள் கடித்து இரத்தத்தை உறிஞ்ச முதல் சிறிய அளவில் சிறு நீரை கழிக்கின்றன. சில வேளைகளில் கடித்த இடத்தை சுற்றி ஈரமாக இருப்பதை உணர முடியும்.

11. கொசுக்கள் ஆண்களை விட பெண்களையே அதிகம் கடிப்பதற்கு ஆர்வம் காட்டுகின்றன.

12. பண்டைய கொசுக்கள் தற்போது இருக்கும் கொசுக்களை விட 3 மடங்கு உருவில் பெரியது.

13. 75 அடி தூரத்தில் இருக்கும் ஒரு மனிதரை சரியாக இனங்கண்டு கடிக்கும் மோப்ப சக்தி கொசுக்களுக்கு உண்டு.

14. ஒரு கொசு 5-6 மாத காலம் வரை வாழும் தகுதியுள்ளது.

15. கொசுக்கள் 6 கால்களை உடையன.

16. ஒரு கொசுவின் சாதாரண நீளம் 16 மில்லிமீட்டர்களாக இருக்கும்.

17. 2700 – 3500 வகையான கொசுக்கள் உலகம் பூராவும் இருக்கின்றன.

18. mosquito என்பது biting fly என்பதையே குறிக்கின்றது...

நோபல் பரிசு உருவான கதை - ஆல்ஃப்ரெட் நோபல்...


ஒவ்வொரு தேசத்திலும் ஒவ்வொரு துறைக்கும் உயரிய விருது அல்லது அங்கீகாரம் என்று ஒன்று இருக்கும். தேசத்திற்கு தேசம் அது மாறுபடும்.

ஆனால் ஒட்டுமொத்த உலகுக்குமே ஓர் உயரிய விருது அல்லது அங்கீகாரம் பொருந்துமென்றால் அது நோபல் பரிசாகத்தான் இருக்க முடியும்.

நோபல் பரிசு ஒன்று தான் தேச மொழி எல்லைகளை கடந்து ஆறு வெவ்வேறு துறைகளில் சிறந்த பங்களிப்பினை செய்தவர்களை ஆண்டு தோறும் கவுரவுக்கிறது.

நோபல் பரிசை மிஞ்சும் அளவுக்கு வேறு எந்த பரிசும் கிடையாது என்று சொல்லுமளவுக்கு கடந்த 100 ஆண்டுகளில் அது நிலை பெற்றிருக்கிறது.

இன்று பலரை ஆக்க வழியில் சிந்திக்க தூண்டும் அந்த நோபல் பரிசு உருவானதற்கு ஓர் அழிவுசக்தி காரணமாக இருந்தது என்பது உங்களுக்கு தெரியுமா?

அழிவுசக்தியை உருவாக்கி அதனால் மனம் நொந்து போன ஒரு விஞ்ஞானி தனக்கு ஏற்படப் போகும் களங்கத்தை துடைத்துக் கொள்ள உருவாக்கியதுதான் நோபல் பரிசு.

அந்த அழிவு சக்தி டைனமைட் எனப்படும் வெடிமருந்து..

அந்த விஞ்ஞானி ஆல்ஃப்ரெட் நோபல். 1833 ஆம் ஆண்டு அக்டோபர் 21 ந்தேதி ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்கொமில் பிறந்தார் ஆல்ஃப்ரெட் நோபல், நோபலின் தந்தை மேனுவல் நோபல் ஒரு புகழ் பெற்ற பொறியாளராகவும் கண்டு பிடிப்பாளராகவும் இருந்தவர்.

கட்டடங்கள் பாலங்கள் கட்டுவதிலும் வெவ்வேறு வழிகளை கற்களை வெடித்து உடைப்பதிலும் அவர் வல்லவர்.

ஆனால் ஆல்பர்ட் நோபல் பிறந்த சமயம் தந்தையின் நிறுவனம் நொடித்துப் போனது. பின்னர் ரஷ்யாவுக்கு சென்று தொழில் செய்து பணம் சேர்த்தார் தந்தை, தனது குடும்பத்தையும் அங்கு அழைத்துக் கொண்டார்.

தனது நான்கு பிள்ளைகளுக்கும் சிறந்த கல்வி கிடைக்க வேண்டுமென்பதற்காக அவர்களுக்கு தனியாக பாடங்கள் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார்.

ஆல்ஃப்ரெட் நோபலுக்கு 17 வயதான போது ஸ்விடிஸ், ரஷ்யன், ப்ரெஞ்சு, ஜெர்மன் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரியும்.

நோபலை வேதியல் பொறியாளராக ஆக்க வேண்டும் என விரும்பிய தந்தை அவரை மேல் படிப்புக்காக பாரிஸ்க்கு அனுப்பி வைத்தார். பாரிஸில் நோபலுடன் படித்த அஸ்ட்ரானியோ ஸ்ப்ராரோ என்ற இத்தாலியர் நைட்ரோ கிளிசரின் என்ற ரசாயனத்தை கண்டு பிடித்திருந்தார்.

அது வெடிக்கும் தன்மை கொண்டதாலும் ஆபத்தானது என்பதாலும் அதை அப்படியே விட்டுவிட்டார்.

ஆனால் நோபல் அதைப்பற்றி மேலும் ஆராய விரும்பினார். படிப்பு முடிந்து ரஷ்யா திரும்பியதும் தன் தந்தையுடன் இணைந்து எப்படி நைட்ரோ கிளிசரினை கட்டுமான துறைக்கு பயன்படுத்தலாம் என ஆராயத் தொடங்கினார்.

கிரைனியன் போர் காரணமாக அவர்களது தொழில் மீண்டும் நொடித்துப் போனது எனவே அவர்கள் மீண்டும் ஸ்விடனுக்கு திரும்பினர்.

ஸ்வீடன் வந்த பிறகு நைட்ரோ கிளிசரினை வெடி மருந்தாக உருவாக்குவதில் ஆராய்ட்சி செய்தார் நோபல் அது அபாயமான பொருள் என்று தெரிந்தும் அதனை பாதுகாப்பானதாக ஆக்கினால் நல்ல காரியங்களுக்காக பயன்படுத்த முடியும் என்று நம்பினார்.

ஆனால் அதற்கு அவர் செலுத்திய விலை அதிகமாக இருந்தது.

அவரது சோதனைகளின் பொது சிலமுறை பயங்கர வெடிப்புகள் ஏற்பட்டு அவரது தொழிற்சாலைகள் தரைமட்டமாயின. பணியாளர்கள் சிலர் உயிரழந்தனர். அவர்களுள் ஒருவர் நோபலின் இளைய சகோதரர் இமில். உயிர் பலிக்கு பிறகும் ஆராட்சிகளை தொடர்ந்தார் நோபல்.

ஆனால் ஸ்வீடன் அரசாங்கம் அதற்கு தடை விதித்தது. மனம் தளராத நோபல் நைட்ரோ கிளிசரினுடன் பல்வேறு பொருட்களை கலந்து சோதனை செய்து பார்த்தார்.

கிஸல்கள் என்ற ஒரு வகை களிமண்ணுடன் சேர்த்து பிசைந்தால் பாதுகாப்பான வெடிமருந்து கிடைக்கும் என்பதனை கண்டு பிடித்தார்.

அந்த தனது கண்டு பிடிப்புக்கு டைனமைட் என்று பெயரிட்டார்.

டைனமைட் கண்டு பிடிக்கப்பட்ட ஆண்டு 1866. கிரேக்க மொழியில் டைனமைட் என்றால் சக்தி என்று பொருள். அவரது அந்த கண்டு பிடிப்பு பல தொழில்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்தது.

உதாரணத்திற்கு காடு மேடுகளை அழிக்கவும், நிலத்தை சமப்படுத்தவும், மலைகளை குடைந்து பாதைகள் அமைக்கவும், பழைய கட்டடங்களை சில நிமிடங்கில் தகர்க்கவும் முடிந்தது.

ஆல்ப்ஸ் மலையை குடைந்து செயின்ட் கடாட் குகைப்பாதை அமைக்க நோபலின் டைனமைட் தான் பேருதவி புரிந்தது.

அவரது கண்டு பிடிப்புக்கு அமோக வரவேற்பு கிடைத்ததால் இருபதுக்கும் மேற்பட்ட நாடுகளில் அவர் 90 டைனமைட் தொழிற்சாலைகளை உருவாக்கினார் பெருமளவில் செல்வம் சேரத் தொடங்கியது.

ஆனால் ஆக்க சக்தியாக தான் உருவாக்கியதை அழிவு சக்தியாக சிலர் பயன்படுத்தத் தொடங்கியதை கண்டு மனம் பதைத்தார் நோபல்.

1888 ஆம் ஆண்டு நோபலின் சகோதரர் லுட்விக் காலமானார். ஆனால் நோபல் தான் இறந்து விட்டார் என நினைத்த பத்திரிகைகள் அழிவு சக்தியை உருவாக்கி கோடிஸ்வரரான ஆல்ஃப்ரெட் நோபல் காலமானார் என்று செய்தி வெளியிட்டன.

அதனை படித்து அதிர்ந்து போன நோபல் தனது உண்மையான மரணத்துக்கு பின் உலகம் தன்னை பழிக்கப் போகிறது என்று கலங்கினார்.

அந்த களங்கத்தை அகற்ற ஒரே வழி தனது செல்வத்தை எல்லாம் உலக நன்மைக்காகவும் மனுகுல மேன்மைக்காகவும் பாடுபடுபவர்களுக்கு பரிசாக வழங்குவது தான் என்று முடிவு செய்தார்.

உலகம் முழுவதிலும் இருந்த 90 க்கும் மேற்பட்ட டைனமைட் தொழிற் சாலைகளிலிருந்தும், ரஷ்யாவில் எண்ணெய் கிணறு அபிவிருத்தியிலிருந்தும் கிடைத்த பெரும் செல்வத்தை கொண்டு ஓர் அறக்கட்டளையை நிறுவினார்.

1890 ஆம் ஆண்டு தான் எழுதிய உயிலில் 9 மில்லியன் டாலரை நோபல் அறக்கட்டளைக்கு எழுதி வைத்தார்.

அந்தத் தொகையிலிருந்து கிடைக்கும் வட்டியைக் கொண்டு ஆண்டுதோறும் 5 வெவ்வேறு மிகச்சிறந்த மனுகுல சேவை ஆற்றுவோருக்கு பரிசு வழங்க முடிவு செய்தார்.

இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த ஆல்ஃப்ரெட் நோபல் 1896 ஆம் ஆண்டு டிசம்பர் 10 ந்தேதி தனது 63 ஆவது வயதில் இத்தாலியில் காலமானார்.

ஆல்ஃப்ரெட் நோபல் மறைந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 1901 ஆம் ஆண்டு முதல் அவர் விருப்பப்படியே நோபல் பரிசுகள் வழங்கப்பட தொடங்கின.

ஐந்து துறைகளுக்கு கொடுக்கப்பட்டு வந்த நோபல் பரிசு 1969 ஆண்டிலிருந்து பொருளாதாரம் என்ற புதிய பிரிவையும் சேர்த்துக் கொண்டது.

இன்று வரை 770 பேருக்கு மேல் நோபல் பரிசை வென்றிருக்கின்றனர்.

தன்னை அழிவு சக்தியை கண்டு பிடித்த நோபல் என்றில்லாமல் அறிவாளிகளை கவுரவிக்கும் நோபல் என்று உலகம் நினைவில் வைத்திருக்க வேண்டும் என விரும்பினார் ஆல்ஃப்ரெட் நோபல்.

அவரது எண்ணம் வீண்போகவில்லை ஆண்டு தோறும் நோபல் பரிசின் பெயர் உச்சரிக்கப்படும் போதேல்லாம் அந்த உன்னத மனிதனைத்தான் உலகம் நினைவு கூறுகிறது.

உண்மையில் அவர் அழிவு சக்தியை கண்டு பிடிக்கவில்லை. ஆக்க சக்தியாக நோபல் கண்டு பிடித்ததை உலகம் தான் அழிவு சக்திக்கு பயன்படுத்தியது இன்றும் பயன்படுத்துகிறது.

இருப்பினும் டைனமைட்டை கண்டு பிடித்ததிலும் பின்னர் நோபல் பரிசை அறிமுகம் செய்ததிலும் ஆல்ஃப்ரெட் நோபலின் நோக்கமும் சிந்தனையும் உயரியதாக இருந்தன.

அதனால் தான் இன்றும் அவரது பெயர் வானம் வரை உயர்ந்து நிற்கிறது...

பாஜக எச்ச. ராஜா சர்மா கலாட்டா...


நமக்கெல்லாம் ஒரு நாள் என்பது 24 மணி நேரம்..

கோமாளி எச்.ராஜாவுக்கும் கோமாளி சங்க தலைவர் மோடிக்கும் மட்டும் 23 மணி நேரம்..

எப்போ பாரு காமெடி பண்றதே வேலையா போச்சு...