16/04/2018

ஸ்டெர்லைட் ஆலை இரகசிய உண்மைகள்...


இவர் பெயர் முகேஷ் (30வயது) 
ஸ்டெர்லைட் ஆலையில் கந்தக அமில பிரிவு (SAP) பொறியாளராக பணியாற்றியவர் இவர் கடந்த சில வருடங்களுக்கு முன்பாக புற்றுநோயால் இறந்தார். இப்போது இவர் மனைவியும் கைக்குழந்தையும் தெருவிலே ஆனால்  சில எச்சைகள் தங்கள் வருமானத்திற்காகவும் சுயலாபத்திற்காகவும் ஆதரவு என்னும் மனநிலையில் ஆதாரம் இருக்கிறதானு கேட்டுகிட்டு அழையுதுங்க....

உண்மைய சொல்லுரேன் இவர் ஆன்மா உங்கள சும்மா விடாது.

இவர் மட்டுமல்ல ஷாம்ஜெயக்குமார் (Safety Dpt) புற்றுநோயால் சில மாதங்களுக்கு முன்பாக இறந்தார்.

மேலும்  மறைக்கப்பட்ட ஆதாரங்கள் எத்தனையோ?

மெரினாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் அனுமதி...


பீர்க்கங்காய் நன்மைகள் மற்றும் யார் யார் இதை உண்பதை தவிர்க்க வேண்டும்...


பீர்க்கங்காய் உடலுக்கு குளிர்ச்சி என்று நாம் அனைவரும் அறிந்ததே..

பீர்க்கங்காய் கொடி இனத்தை சார்ந்தது. அதாவது இக்காய் சுரைக்காய், பாவக்காய், புடலங்காய் போன்றது.

மேலும் சில தகவல்கள்...

1. பீர்க்கங்காய் நீர்ச்சத்தும், தாது உப்புகளும் கொண்டது.

2. பீர்க்கங்காய் சிறுநீரை பெருக்கும். உடலுக்கு உரம் ஏற்றும்.

3. இந்தக் காய் உடம்பை குளுமைப்படுத்தி தண்ணீரை அதிகரிக்கச் செய்யும்.

4. வயிற்று தொந்தரவுகளை நீக்குவதுடன், எளிதில் ஜீரணமாகி வீரிய விருத்தியை உண்டாக்கும்.

5. பீர்க்கு இலைச் சாறு பித்தத்துக்கு கை கண்ட மருந்து. இது ரத்தத்தில் உள்ள அசுத்தத்தைப் போக்கும்.

6. பெரியவர்கள் ஒரு வேளைக்கு அரை அவுன்சும், குழந்தைகள் கால் அவுன்சும் உட்கொள்ளலாம். பீர்க்கு இலைக் கஷாயத்தைக் கூட இதுபோன்று பயன்படுத்தலாம்.

7. உடலுக்கு குளிர்ச்சியைத் தரும்.

8. ரத்த சோகை நோய் உள்வர்கள் இரும்புச் சத்து நிறைந்த காய்கறிகளை உண்ண வேண்டும்.

9. அவரைக்காய், வெண்டைக்காய், புடலங்காய், பூசணிக்காய், பீர்க்கங்காய், பீட்ரூட், முட்டைகோஸ், முருங்கைக்காய், காலி·பிளவர் போன்ற காய்கறிகளிலும், எல்லா வகை கீரைகளிலும், எலுமிச்சை, நெல்லிக்காய், கொய்யா, திராட்சை போன்ற பழங்களில் இரும்புச்சத்து நிறைந்து உள்ளது.

யார் யார் இதை தவிர்கனும்...

10. சளி, இருமல், தலைவலி உள்ளவர்கள் எப்போதும் சாப்பிடக்கூடாது. தலையில் நீர்க் கோத்துக் கொள்ளும்...

சாதாரண பி.எஸ்சி பட்டத்திற்க்கே இந்த நிலமை என்றால்... பொறியியல், மருத்துவம், பி.எச்டி பட்டங்களுக்கு என்ன கதியோ...?


திருந்துங்கள் இல்லையென்றால்  திருத்தப்படுவீர்கள்...

ஆறுகளில் கலக்கும் கழிவு நீர் துர்நாற்றம் வீசுவதால் பொதுமக்கள் கடும் அவதி...


காவிரி நீரைக்கொண்டு காவிரி டெல்டா பகுதியில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். ஆனால் கடந்த 6 ஆண்டுகளாக குறுவை சாகுபடி நடைபெறவில்லை. சம்பா சாகுபடியும் கடந்த 2 ஆண்டுகளாக சரிவர நடைபெறவில்லை.

டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணையில் இருந்து வழக்கமாக ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படும். இந்த தண்ணீர் கல்லணையை வந்தடைந்து பின்னர் அங்கிருந்து காவிரி, வெண்ணாறு, கல்லணைக்கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகள் மூலம் பாசனத்துக்கு தண்ணீர் பகிர்ந்தளிக்கப்படும்.

இதில் கல்லணைக்கால்வாய் எனப்படும் புது ஆறு தஞ்சை நகர் வழியாக செல்கிறது. இதே போல் வெண்ணாற்றில் இருந்து பிரிந்து செல்லும் வடவாறு தஞ்சை கரந்தை வழியாக செல்கிறது. கடந்த சில மாதங்களாக ஆறுகளில் தண்ணீர் வராததால் ஆறுகள் காய்ந்து கிடக்கின்றன. ஆனால் தஞ்சை நகர் பகுதிகளில் மட்டும் இந்த ஆறுகளில் தண்ணீர் தேங்கி காணப்படுகின்றன. அதுவும் வடவாற்றில் தஞ்சை நகரில் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் கழிவுநீர் கலக்கிறது. இதனால் ஆறுகளில் தேங்கி உள்ள சாக்கடை நீரால் துர்நாற்றம் வீசுகிறது. மேலும் இந்த ஆற்றில் பாலிதீன் பைகள், குப்பைகள் போன்றவையும் தேங்கி கிடக்கின்றன.

இதேபோல் தஞ்சை நகரில் உள்ள கல்லணைக்கால்வாயிலும் சாக்கடை நீர் தேங்கி காணப்படுகின்றன. பல்வேறு இடங்களில் வீடுகளில் இருந்து சாக்கடை நீர், புது ஆற்றில் கலந்த வண்ணம் உள்ளன. இதனால் புது ஆற்றிலும் தண்ணீர் தேங்கி மிகவும் மோசமான நிலையில் காட்சி அளிக்கிறது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது.

இவ்வாறு சாக்கடை நீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் நிலையில் உள்ளது. தண்ணீர் வரும் காலகட்டத்தில் சாக்கடை நீரும் கலப்பதால் அதை உபயோகிப்பதால் நோய் பரவும் அபாயமும் உள்ளது. தஞ்சை மாநகரில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதையும் மீறி சாக்கடை கழிவுநீர் ஆறுகளில் கலந்து துர்நாற்றம் வீசுவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆறுகளில் கழிவுநீர் கலந்து தேங்கி நிற்பதால் தொற்றுநோய் பரவும் அபாயம் உள்ளது. மேலும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தஞ்சை மாநகரம் ஸ்மார்ட் சிட்டியாக அறிவிக்கப்பட்டு பணிகள் தொடங்கப்பட உள்ளன.

எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை கண்காணித்து ஆறுகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்...

ஜனநாயக மாயையின் 4வது பொய் தூண் விபச்சார ஊடகம்...


சித்தர் ஆவது எப்படி ? -3...


சித்தத்தை சீர் செய்யும் முதல் படி - கனல் தன்மை அறிதல்...

சித்தத்தை சீர் செய்தல் மூலம் சித்தர் ஆவது எளிமையாகிறது.. மற்ற பூதங்கள் திறன் பட செயல் பட மாறுபட்ட முரண் பாடுகளை உடைய சித்தத்தை சீர் செய்ய அவசியமாகிறது.. சித்தத்தை சீர் செய்வதின் மூலம் ஆன்மீகம் முன்னேற்றம் மிக எளிதாகிறது..

சித்தத்தை சீர் செய்வது என்பது ஆன்மீக பணியில் 100 ல் 95 பங்கு செய்து முடித்தது போல... அதனால் தான் சித்தத்தை சீர் செய்து ஆன்மீகத்தில் உச்சத்திற்கு சென்றவர்களை சித்தர்கள் என்கிறோம்...

இப்பொழுது சித்தத்தை சீர் செய்யும் வழியினை ஆராய்வோம்..

இயல்பாக சித்தம், எண்ணக் குவியலால் ஆனது என்று முன்பே அறிந்தோம்.... பல ஜென்மங்களின் அனுபவங்கள் சூட்சும பதிவுகளாக சித்தத்தில் புதைந்துள்ளன...

அதற்கு முன்னால் அனுபவம் என்னவென்று பார்ப்பது அவசியமாகிறது..

ஓர் அனுபவம் என்பது பஞ்சபூதங்களால் கூட்டாக அனுபவப் படுவது.. இதில் நிலம் நீர் பூதங்கள் உருவமாக திடமாக இருப்பதால், அவைகள் வெளிச்சத்தின் உதவியால் இயங்குவதால் அனுப்ப படும் பொருளின் உருவ தோற்றத்தை நுகருகிறது..

காற்றும் ஆகாயமும் அருவமாக உருவமற்ற நிலையில் இருப்பதால் அவற்றை உணர்வாக நுகருகிறது...

மனம் என்ற பூதம், சித்தத்திலிருந்து தன்னை வந்து அடைந்த எண்ணத்தை நுகரும் போது அதை வெளிச்சமாகவும் உணர்வாகவும் பிரித்து வெளிச்சத்தை நீர் மண் பூதத்திற்கும், உணர்வை காற்று ஆகாய பூதத்திற்கும் அனுப்புகிறது...

ஆகையால் தான் மனம் என்ற பூதத்தை நெருப்பின் அம்சமாக கூறுகின்றனர்..

அதாவது நெருப்பிற்கு வெளிச்சத்தை தரும் சுடரும், சூடு என்ற உணர்வை தரும் கனலும், இருப்பதால், மனத்திற்கு நெருப்பை உதாரணமாக வைத்தார்கள்...

முக்கியமாக அறிய வேண்டியது என்ன வென்றால் பிரபஞ்ச பேராற்றல் வருகின்ற பொழுது, அந்த ஆற்றலை உணர்வாக எடுத்துக் கொண்டால், அது தேக ஆற்றலாக மாறிக்கொள்கிறது..

அதே வெளிச்சமாக மாறும் பொழுது பொறி புலங்கள் வழியாக உலக தொடர்பு கொண்டு விரையமாகிறது..

ஆனால் எண்ணம் பெரும்பாலும் வெளிச்சமாகவும், குறைந்த அளவாய் உணர்வாகவும் இருக்கும்.. அதனால் தான் எண்ணங்களில் வெளிச்சம் அதிகமாக இருக்கும்..

ஆனால் காமம் கோபம் இரண்டில் உள்ள எண்ணங்களில் உணர்வு சற்று அதிகமாக இருக்கும்.. ஆனாலும் அது வெளிச்சத்தை விட குறைவாகவே இருக்கும்...

சித்தத்தில் வெளிவரும் எண்ணங்கள் மனதை சாரும் போது, வெளிச்சமாகவும் கனலாகவும் பிரிக்கின்ற ஒரு செயலை பார்த்தோம்..

அதே நேரத்தில் கனலானது வெளிச்சமாகி மாறி வெளி சார்புகளை நோக்கி சென்று விரமாகக் கூடிய செயலும் நடக்கிறது...

இங்கே முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்று என்னவென்றால் நம்முடைய தேக அமைப்பில் உள்ள பொறி புலன்கள் வெளியே உள்ள சார்புகளில் பொருள்களில் இயல்பாகவே ஈர்க்கப்பட்டு வெளிச்சமாகி மாறி விடுகிறது..

இதன் காரணமாக தான் பகல் நேரங்களில் பொறி புலன்கள் அதிகமாக வேலை செய்து தேக கனல் பெரும்பாலும் வெளிச்சமாக மாறி நம் ஆற்றல் குறைய தொடங்குகிறது...

ஆற்றல் குறைவால் உறக்கம் வர தொடங்குகிறது..

உறக்கத்தில் பொறி புலன்கள் செயல்பாடு மிக மிக குறைவாக உள்ளதால், கனல் பெருகி தேகம் புத்துணர்ச்சி பெறுகிறது...

இந்த கனலை பற்றி சற்று அறிந்து கொள்வோம்..

எப்படி சூரிய ஒளி அலைவரிசை பூமியில் பட்டு பூமி சூட்டை, வெப்பத்தை பெறுகிறதோ அதே போல் பேரண்ட பேராற்றலின் அலைவரிசை தான், உயிர் ஆற்றல் பெறுவதற்கு மூல ஆதாரமாக உள்ளது.. இதை சில யோகிகள் காந்த அலை சக்தி என்று சொல்லிகிறார்கள்.... அதைதான் தேக கனலாக இங்கே நாம் புரிந்து கொள்கிறோம்..

தேகத்தில் இந்த கனல் ஒரு குறிபிட்ட அளவிற்கு கீழே குறைந்தால் தேகம் வலு இழந்து மரணம் அடைகிறது..

சித்தர்களிடம் இந்த கனலை தேகம் பூரணமாக பெற்றக் கொண்டபின் அந்த கனலை சூட்சம, நுண்ணிய தேகமாக மாறுகிறது.. அந்த சூட்சம தேகம் அளவற்ற கனலை பெறக்கூடிய ஆற்றல் உள்ளது..

ஆனால் சூட்சும தேகத்தை பழகி கொண்ட மனிதன் அளவற்ற ஆற்றல் அடைவதற்கு எல்லையே இல்லை.. ஒரு குறிபிட்ட ஆற்றலை பெறும் தகுதி உடைய தூல தேகத்தில் வாழும் மனிதன் தன் சூட்சும தேகத்தின் மூலம் அளவற்ற பிரபஞ்ச ஆற்றலான கனலை பெறும் தகுதி உடையவன் ஆகிறான்..

இந்த தூல தேகம் தன் சூட்சும தேகத்தின் உதவியால் பல பிரமிக்க வைக்கும் செயல்களை செய்யும் திறனை பெறுகிறது...

இந்த ஒரு இரகசியத்திலே சித்தர் ஆகும் பாதையில் இந்த பிரபஞ்ச கனல் மிக முக்கியமாக உள்ளதால், நம் தேக கனலை தக்க வைக்கவும் தேக கனலை பெருக்கவும் உகந்த உளவுகளை இனி வரும் பகுதிகளில் பார்ப்போமாக....

ஆண்டாளை இழிவாக பேசிய வைரமுத்துவை எதிர்த்த ஹிந்துக்கள், ஏன் கோவில் கருவறையை களங்கப்படுத்திய கயவர்களை எதிர்த்து போராடவில்லை?


வசம்பு...


விஷம் குடித்தவருக்குகூட இதை கொடுத்தால் பிழைத்துவிடுவார்கள்… கட்டாயம் வீட்ல வாங்கி வைங்க…

நம்முடைய முன்னோர்கள் வீட்டில் கட்டாயம் வசம்பு வைத்திருப்பார்கள். குறிப்பாக பிறந்த கைக்குழந்தைக்கு தினமும் வசம்பு உரசி வாயில் வைப்பதுண்டு. காரணம் குழந்தை சாப்பிடும் உணவாலோ அல்லது அலர்ஜியோ விஷத்தன்மையோ குழந்தைக்கு பரவக் கூடாது என்பதற்காக கொடுக்கப்படும்.

அதனால் நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம் வசம்பு என்பது குழந்தைகளுக்குக் கொடுக்கப்படும் ஒன்று என்று. ஆனால் அது அப்படியல்ல. வசம்பு பிறந்த குழந்தை முதல் முதியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

வசம்பு எப்பேர்ப்பட்ட கொடிய விஷத்தன்மையையும் போக்கக்கூடியது. அதனால் கட்டாயம் வீட்டில் வசம்பு வைத்திருக்க வேண்டியது அவசியம்.

வசம்பை தூள் செய்து இரண்டு டீஸ்பூன் அளவு எடுத்து தேனில் கலந்து
சாப்பிட்டால் எல்லா வகையான தொற்று நோய்களும் நீங்கி விடும். இது எல்லா
நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும்.

வசம்பை விஷம்அருந்தியவர்களுக்கு உடனேயே இரண்டு, மூன்று டீஸ்பூன் கொடுத்தால் உள்ளிருக்கும் விஷம் முழுக்க வெளியே வந்து விடும்.

கால்நடைகளுக்கு தொற்று நோய்கள் பரவாமல் இருக்கவும் பயன்படுகிறது.

பசியைத் தூண்டி சோம்பலைத் தீர்க்கும்.

அகோரஸ் காலமஸ் (Acorus Calamus) என்ற அறிவியல் பெயர் கொண்ட இது
ஆங்கிலத்தில் ஸ்வீட் ஃப்ளாக் (Sweet Flag) என்று அழைக்கப்படுகிறது.

பாட்டி வைத்தியம் என்று நம் முதியோர்கள் அடிக்கடி வீட்டு வைத்தியத்தில் சேர்ப்பது இந்த வசம்பைத் தான். கிராமத்தில் உள்ளவர்கள் இன்றளவிலும் சரி
காய்ந்த வசம்பை சூடுபடுத்தி பாலில் கலந்து குழந்தைகளுக்கு கொடுப்பார்கள்.

இதனால் குழந்தைகளுக்கு பசியின்மையோ, சின்ன சின்ன தொற்றுநோய்களோ வராமல் தடுக்கப்படுகிறது. இதனாலேயே இது பிள்ளை வளர்ப்பான் என்று கூறப்படுகிறது.

சுடு தண்ணீர், கருவேப்பிலை, மஞ்சள் தூள் ஆகியவற்றுடன் வசம்பை கலந்து
கிருமிநாசினியாகவும் பயன்படுத்தலாம்...

பாஜக ஒட்டு மொத்த இந்தியாவில் இருந்தே அடித்து துரத்தப்பட வேண்டியக் கட்சி...