28/04/2018
அமானுஷ்யம் - பங்கார் கோட்டை, இராஜஸ்தான், இந்தியா...
இந்தியா இராஜஸ்தானில் உள்ள பங்கார் கோட்டை பற்றி அறிந்திருப்பீர்கள்.
இந்தியாவின் முக்கிய பயங்கரமான இடமாக கருதப்படும் இது 1573ல் கட்டப்பட்டது.
ஒரு மந்திரவாதியால் சபிக்கப்பட்ட அங்கு வாழ்ந்தவர்கள் மர்மமான முறையில் இறந்ததாகவும்.. அவர்களின் ஆவி காலங்காலமாக அங்கே உலாவி வருவதாகவும் செய்திகள் பரவுகிறன்றன.
இரவு நேரத்தின் அங்கே தங்க யாருக்கும் அனுமதி கிடையாது.
கதறல் சுரங்கம், ஒந்தாரியோ, கனடா எதிர்பாரா மரணம் அடைந்த இளம் பெண்ணிலிருந்து கதை
தொடங்குகிறது.
பழங்காலத்தில் இந்த தென்பகுதி சுரங்கத்திற்கு அருகே ஒரு பண்ணை வீடு இருந்துள்ளது. ஒரு நாள் அப்பண்ணை தீக்கிரையாகிறது. அதில் சிக்கிய பெண் தீயுடன் உதவிக் கோர இறுதியில் இந்த சுரங்கத்தினுள் இறந்துள்ளாள்.
அன்று முதல், இந்த சுரங்கத்தில் இரவு நேரத்தில் தைரியமாக நுழைந்து மரக்குச்சியால் தீயேற்றுபவர்கள் இறவா நிலை அடைவர் என்ற கருத்து நிலவி வருகிறது.
ஆனால் அவ்வாறு செய்தவர்கள் கதறி கொண்டே சுரங்கத்திலிருந்து வெளி வந்துள்ளனர்.
மொன்தே கிரிஸ்தோ, ஆஸ்திரிலியா ஆஸ்திரிலியாவின் மிகவும் பயங்கரமான இடம் இது.
இவ்விடம் 1855-1948 வரை கிரவ்லி
குடும்பத்திற்குச் சொந்தமானது. அங்கிருக்கும் போது அக்குடும்பம் பல இறப்புகளைக் கண்டுள்ளது.
கிரவ்லியின் மரணத்திற்கு பின் அவரின் மனைவி மேல்தளத்திற்குச் சென்று தாழிட்டு கொண்டதாகவும் அவரின் அடுத்த 23 வருடங்களுக்கு வீட்டை விட்டு
வெளியேறவில்லை எனவும் கூறப்படுகிறது.
ஒரு தடவை மட்டுமே வெளியில்
வந்ததாகவும் கூறப்படுகிறது.
அவர் அந்த வீட்டிலேயே இறந்து விட்டதாகவும் அவரின் ஆவி இன்று வரை அங்கேயே உலாவி வருவதாகவும் அறியப்படுகிறது.
ஆவி சம்பந்தப்பட்ட காணொளிகள் இங்கே படமாக்கப்பட்ட போது விநோத வெளிச்சங்கள் தென்பட்டதாகவும் பெண்ணின் குரல் கேட்டதாகவும் அறியப்படுகிறது.
லாவாங் சேவு, இந்தோனேசியா டச்சு கிழக்கு இந்தியா ரயில்வே கம்பெனியால் 1917ல் கட்டப்பட்ட
கட்டிடம் இது.
லாவாங் சேவு என்றால்.. ஆயிரம் கதவுகள் என்று அர்த்தம்.
இரண்டாம் உலக போரின் போது இவ்விடம் ஜப்பானியர்களால் சிறையாக பயன்படுத்தப்பட்டு ஆட்கள் சித்திரவதை
செய்யப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.
இவ்விடத்தில் பொந்தியானாக் எனும் இறந்த கர்ப்பிணி பெண்ணின் ஆவி சுற்றுவதாக நம்பிக்கை உண்டு.
அதோடு இங்கே தற்கொலை செய்து கொண்டதாக நம்பப்படும் டச்சு பெண்ணின் ஆவியும் சுற்றுவதாக நம்பிக்கை உண்டு.
ஒரு படப்பிடிப்பின் போது அவரின் ஆவி படமாக்கப்பட்டுள்ளது.
பொம்மைகளின் தீவு, மெக்ஸிகோ மர்மமான முறையில் இறந்த ஏழைப் பெண்ணுக்காக அர்பணிக்கப்பட்டது இத்தீவு.
இத்தீவிற்கு அருகில் உள்ள கால்வாயில் அந்த பெண் மூழ்கி இறந்ததாக நம்பப்படுகிறது.
டோன் ஜூலியன் சந்தன் அந்த பெண்ணின் ஆவியால் தாக்கப்பட்டார். ஆவியை மகிழ்ச்சிப்படுத்த பழைய பொம்மைகளை வாங்கி வந்து தீவில்
தொங்கவிட்டுள்ளார். தன் குடும்பத்தினரிடம் அந்த பெண்ணின் ஆவி வாழ்விற்குப் பின் தன்னோடு வந்து விடுமாறு கூறியதாக தெரிவித்துள்ளார்.
2001ம் ஆண்டில் அந்த பெண் இறந்த அதே இடத்தில் அவரும் இறந்து கிடந்தார்.
அங்கே செல்லும் சுற்றுப்பயணிகள் அங்கே உள்ள பொம்மைகளின் கண்கள் தங்களைத் தொடர்வதாகவும் சிரிக்கும் குரல் கேட்பதாகவும் கூறியுள்ளனர்...
ஆளி (யாளி) - தமிழர் பழமைக்குச் சான்று...
இதை கோவில் தூண்களில் நீங்கள் பார்த்திருக்கலாம். எல்லா கோவில் தூண்களிலும் இருக்கும்.
(தமிழகத்தைத் தவிர வேறு எங்கும் இல்லை)...
யானையை விட பெரிய உருவம், சிங்கத்தைப் போன்ற முகமும் உடலும்,
அதோடு துதிக்கையும் தந்தமும் இருக்கும் அதிசய விலங்கு யாளி.
இந்த யாளி யானையைக் கொன்ற குறிப்புகள் இலக்கியங்களில் வருகின்றன.
ஆளி நன்மான் அணங்குடை யொருத்தல்
மீளி வேழத்து நெடுந்தகை புலம்ப
ஏந்தல் வெண்கோடு வாங்கிக் குருகு அருந்தும்
அஞ்சுவரத் தகுந ஆங்கண்
ஆளியாகிய நல்ல விலங்கினது வருத்துதலையுடைய ஏறு, வலியுடைய யானையின் தலைவனான களிறு வருந்த,
அதன் நிமிர்ந்த வெள்ளிய கோட்டினைப் (தந்தம்) பறித்து,
குருத்தினைத் தின்னும் அச்சம் தரும் அச்சுரத்திடத்தே.
- மதுரை இளங்கெளசிகனார் (அகநானூறு 381: 1-4)..
மூரித்தாள் ஆளி யானைத் தலை
நிலம் புரள வேண்டுகோடு
உண்டதே போன்று
யானையின் தலை நிலத்தில் புரள (அதைக் கீழே தள்ளி) அதன் தந்தத்தைப் பறித்து யாளி உண்ணும்.
-(சீவகசிந்தாமணி 2554 :1-2)...
மீளி முன்பின் ஆளி போல,
உள்ளம் உள் அவிந்து அடங்காது, வெள்ளென
நோவாதோன்வயின் திரங்கி,
வாயா வன் கனிக்கு உலமருவோரே.
யானையை வேட்டையாட எண்ணிய ஆளி யானை கிடைக்கவில்லை என்று எலியை வேட்டையாடக் குறி பார்க்காது.
நான் பாடிய பாடல் இளவெளிமான் செவியில் ஏறிவிட்டது.
பலன் கிடைக்கப்போகிறது என எண்ணியிருந்தேன்.
ஆனால் சோறு சமைத்த பானை நெருப்பைத் தருவது போல் இவன் தருகிறான்.
ஆறு போல் பாய்ந்து வேறு இடத்தில் பரிசில் பெற்றுக்கொள்ளலாம்.
- பெருஞ்சித்திரனார் (புறநானூறு 207 : 8)...
வந்து ஆளி
உயர் நுதல் யானைப் புகர் முகத்து ஒற்றி வெண்கோடு புய்க்கும்
ஆளியானது (யாளி) பாய்ந்து வந்து உயர்ந்த நெற்றியினையுடைய யானையின் புள்ளி பொருந்திய முகத்தைத் தாக்கி, அதன் வெண்ணிறத் தந்தத்தினைப் பறித்தெடுக்கும்.
– நக்கண்ணையார், (அகநானூறு 252 : 1-4)...
இரத்தச் சேறெழ தேர்பரி யாளிகள்
கெடுத்திட் டேகடல் சூர்கிரி தூள்பட கண்டவேலா
இரத்த சேற்றில் தேர்ப்படை, குதிரைப்படை, யாளிப்படை மூன்றையும் ஒழித்து கடல்சூழ்ந்த சூரமலையை தூளாக்கிய வேலன்..
- (திருப்புகழ் 477)...
கரிபு ராரி காமாரி திரிபு ராரி தீயாடி
கயிலை யாளி காபாலி கழையோனி
யானையைக் கொன்று அதன் உடுத்திய கயிலை மலை (அதாவது கைலாசமலையின்) யாளி என்று சிவனைக் கூறுகிறது.
-(திருப்புகழ் 577)..
இதே போல யானையையே விழுங்கும் மாசுணம் (அல்லது அசுணமா) என்ற பாம்பு (அல்லது விலங்கு) பற்றியும் குறிப்புகள் உள்ளன.
அனகோன்டா என்ற சொல்லானது 'யானைகொன்றான்' என்ற (ஈழத்)தமிழ்ச் சொல்லை ஆங்கிலேயர் எடுத்துக்கொண்டது.
(ஆனகொன்டான் என்றே உச்சரிப்பர்)
சான்று...
Ophidia Taprobanica or the Snakes of Ceylon, Wall, Frank (1921).
The deriviation of "Anaconda", Ferguson, Donald (1897)...
வழக்கமாக ஒரு திட்டம் என்றால் சாலை என்றாலோ, கட்டடம் என்றாலோ அதுபற்றிய திட்ட வரைபடத்தை அரசே வெளியிடும்...
அந்தத் திட்டம் நிகழும் இடங்கள் அரசால் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பு, பொதுமக்கள் கருத்துக் கேட்பு, இழப்பீடு அறிவிப்பு என்றெல்லாம் நடக்கும்.
ஆனால், இப்போது பசுமை வழிச் சாலை பற்றிய வரைபடத்தை ரகசியமாக வைத்திருக்கிறது அரசாங்கம்.
ஆதாரமாகத் திட்ட வரைபடம் வேண்டுமே என்று நாம் தேடித் தேடி துருவியதில் கடுமையான முயற்சிக்குப் பின் நம் கையில் கிடைத்தது...
Subscribe to:
Posts (Atom)









