11/06/2018

பாலைப்பழம்....


பாலைப்பழம் என்பது மிகவும் இனிப்பான ஒருவகைப் பழமாகும். இது இலங்கையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் காடுகளில் வளரும் பாலை மரத்தில் காய்க்கும் பழமாகும்.

பாலைப்பழம் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும். பாலைப்பழம் காய்க்கும் காலத்தில் பாலைப்பழம் பருவம் என்றும் அழைப்பர்.

பாலைப்பழம் மிகவும் தித்திக்கும் இனிப்பு சுவைக்கொண்டது. அத்துடன் பாலைப்பழங்களை சாப்பிடும் போது அதனுள் இருக்கும் பிசின்போன்ற பால் பசைப்போல் வாயில் ஒட்டிக்கொள்ளும்.

பாலைப்பழம் உருவில் மிகவும் சிறியது. அதனை ஒன்று இரண்டு என்று விற்பனை செய்வதில்லை. ஒரு சுண்டு, இரண்டு சுண்டு என, அளவை களாகவே விற்பனை செய்வர்...

அரசியலை புரிந்துக் கொள்...


ஆந்திரப் பிரதேசம் மாநிலம் விஜயவாடாவில் 14 வயது சிறுவனுக்கு 45 வயது பெண் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாக பெண் கைது...


விஜயவாடாவில் உள்ள வேம்பே காலணியை சேர்ந்த 14 வயதுடைய ராகுல் என்கிற சிறுவன் கோடை விடுமுறைக்காக தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளான்.

விடுமுறை முடிந்த பிறகு அவனது பெற்றோர் வீட்டிற்கு அழைத்தனர் ஆனால் சிறுவன் ராகுல் வர மறுத்துள்ளான். அவனது பெற்றோர் தீர விசாரித்ததில் அந்த வீட்டிற்கு எதிர் வீட்டில் 45 வயது மதிப்புடைய பெண் அவனுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அதை யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியதாக  தெரிவித்தான்.

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரித்தனர் அதில் அந்த பெண்ணிற்கு கணவன் இல்லை. 2 மகள்களையும் திருமணம் செய்து வைத்தால் தனிமையில் வாடி வந்தாக தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து அந்த பெண்ணின் மீது குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

இது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

ஜி7 மாநாடும் உலக அரசியலும்...


இன்றைய மனிதர்கள் “Homo sapiens” (வாழும் மனித இனம்) நம் முன்னோர்களான “நியான்டர்தால்” மனிதனுடன் உடலுறவு கொண்டார்களா?


அதாவது, நமக்கு முந்தைய (இன்றைய உலகில் இல்லாத/முற்றிலும் அழிந்து போன) மனிதர்கள்/முன்னோர்களான “நியான்டர்தால்” மனிதனும் ஹோமோ சேப்பியன்ஸ் எனும் நிகழ்கால மனிதனும் உடலுறவு கொண்டு இனப்பெருக்கம் செய்தார்களா?

அல்லது நியான்டர்தால் மனிதனின் குணாதிசியங்கள் நம்முள் இன்னும் இருக்கிறதா?

அப்படிங்கிற கேள்விக்கு இன்னும் பதில் தெரியல..

பாஜக மோடியின் நீட் தேர்வும் ஏமாற்று வேலைகளும்...


தொடர்ந்து நெய் சாப்பிடுவதால் இத்தனை பலன்களா?


பெரும்பாலான மக்கள், நெய் வெறும் கொழுப்பு மட்டும் நிறைந்த, ரத்தக் கொழுப்பை உயர்த்தும் குணம் உடையது என்ற தவறான எண்ணத்துடன் உணவில் நெய்யை அறவே சேர்ப்பது இல்லை.

ஆனால் ஆயுர்வேதத்தில், நெய்யினை உணவில் தினந்தோறும் எடுத்துக் கொள்ளுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. நெய் ஒரு மிகச் சிறந்த போஷாக்கான மருத்துவ குணம் வாய்ந்த பொருள். வாயு மற்றும் பித்த சம்பந்தமான நோய்களுக்கு நெய் மிக முக்கியமான மருந்து.

நெய் எளிதில் ஜீரணமாகி விடும். சாப்பிட்டவுடன் அவை கொழுப்பாக உடலில் தங்கப்படுவதில்லை. மாறாக எனர்ஜியாக எரிக்கப்படுவதால் உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்காது.

மாலைக்கண் மற்றும் கிட்டப் பார்வை, தூரப்பார்வை என பார்வை குறைபாடு இருப்பவர்கள் கட்டாயம் நெய்யை சேர்த்துக் கொள்வதால் கண் பார்வை தெளிவடையும்.

பால், தயிர் போன்றவற்றில் ஒவ்வாமை இருப்பவர்கள் தாராளமாக நெய் சேர்த்துக் கொள்ளலாம். அவற்றிலுள்ள லாக்டோஸ் இல்லையே தவிர அவற்றின் பண்புகள் ஒத்திருக்கும்.

நெய்யில் நிறைய நேர்மறையான குணங்கள் இருப்பதால் அதனை சாப்பிடுவதால் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும் என ஆயுர்வேதம் கூறுகின்றது.

மருந்துக்கள் கெடாமல் பாதுகாக்க நெய்யே சிறந்த பொருளாகும். நெய்யை ரசாயனம் என்று ஆயுர்வேத மருந்தாளர்களால் அழைக்கப்படுகிறது. ஏன் என்றால் முழு உடல் நலம் கொடுத்து நீண்ட ஆரோக்கியத்தைக் கொடுக்கும் குணம் நெய்க்கு உண்டு. அவை மருந்துக்களின் குணங்களை செல்களின் சுவருக்குள் ஊடுருவச் செய்கிறது.

மலச்சிக்கலைப் போக்கும். வாத, பித்த, கபத்தின் சீற்றங்களைக் குறைத்து அதனதன் நிலையில் நிறுத்தி நோய்களின் தாக்கத்தைத் தடுக்கும்.

சிலர் எப்போதும் சோர்வுடன் உடல் வலுவில்லாமல் காணப்படுவார்கள். சிறிது தூரம் நடந்தால்கூட அவர்களுக்கு மேல் மூச்சு வாங்கும். உடனே அமர்ந்து விடுவார்கள். கால்கள் அதிகமாக வலிப்பதாகக் கூறுவார்கள். இதற்கு காரணம் உடலில் சத்தின்மையே.

இவர்கள் தினமும் மதிய உணவில் நெய்யை சேர்த்து வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்...

இந்திய அதிகாரிகளை நம்பாதீர்கள்...


திருப்திக்கே கோவிந்தா வா - மத்திய அரசு மீது குமுறும் சந்திரபாபு நாயுடு...


திருப்பதி ஏழுமலையான் கோயிலை தனது கட்டுப்பாட்டில் கொண்டு வர மத்திய அரசு முயற்சி செய்து வருவதாக ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டி உள்ளார்.

முன்னதாக,ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்ட பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், திருப்பதி கோயிலை தாரைவார்ப்பதற்காக மத்திய அரசுடன் ஜெகன்மோகன் ரெட்டி கை கோர்த்துள்ளார் என்று குற்றஞ்சாட்டினார். ஆனால் ஏழுமலையான் கோயிலை கைப்பற்ற நினைக்கும் மத்திய அரசின் சதித் திட்டம் ஒரு போதும் நிறைவேறாது என்றும், அதற்கு தாம் எப்போதும் துணை நிற்க மாட்டேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய அவர், ஏழுமலையான் கோயிலை விட்டுத் தர நாங்கள் தயாராக இல்லை. ஆந்திராவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதாக உறுதி அளித்த மோடி, அதனை நிறைவேற்ற தவறி விட்டார் என்றும் . திருப்பதி கோயிலை தொல்லியல் துறை எடுத்துக் கொள்வது குறித்து கருத்து தெரிவிக்குமாறு தேவஸ்தான நிர்வாகத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ் அனுப்பி இருந்தது. ஆனால் எதிர்ப்புக்கள் எழுந்ததை அடுத்து அந்த நோட்டீஸ் திரும்பப் பெறப்பட்டது என்றும்  சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

 பல கோடி ரூபாய் சொத்துகள் உள்ள கோயில்களில் பிரதானமானது திருப்பதி ஏழுமலையான் கோயிலாகும். சமீபகாலமாக மத்திய அரசு சார்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டு இந்த கோயிலை தொல்லியல்துறைக்கு கீழ் கொண்டு வர முயற்சி நடைபெற்று வருவதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது....

என்ன நடக்கப் போகிறது... காத்திருப்போம்...