01/07/2018
30/06/2018
யாரிடமும் சொல்லக்கூடாது.. மிரட்டி மிரட்டியே பெண் போலீஸ் மகளை 5 மாதமாக பலாத்காரம் செய்த துணை கமிஷனர்...
மகாராஷ்டிராவில் பெண் போலீஸ் ஒருவரின் மகளை துணை கமிஷனரே மிரட்டி மிரட்டி 5 மாதங்களாக மீண்டும் மீண்டும் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் நாள் அதிகரித்து வருகிறது. சிறுமிகள், இளம் பெண்கள், மூதாட்டிகள் என்ற பாகுபாடின்றி பாலியல் வன்கொடுமைகள் அரங்கேறி வருகின்றன.
உலகில் பெண்களுக்கு சற்றும் பாதுகாப்பு இல்லாத நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்தை பெற்றுள்ளது. இதனை மத்திய அரசு மறுத்துள்ளபோதும் காவல்துறையில் பணியாற்றுபவரின் குழந்தைகளுக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் ஏற்பட்டுள்ளது. துணை கமிஷனர்மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத்தில் துணை கமிஷனராக பணியாற்றி வருபவர் ராகுல் ஸ்ரீராம். இவருக்கு பெண் போலீஸ் ஒருவர் பழக்கமானார். சகஜமாக பழகிய பெண்இந்நிலையில் மகளின் வேலை தொடர்பாக ராகுல் ஸ்ரீராமிடம் பேசிய அந்த பெண் போலீஸ் தனது 23 வயது மகளை அவருக்கு அறிமுகம் செய்துள்ளார். அம்மாவுக்கு தெரிந்தவர்தானே என துணை கமிஷனருடன் சகஜமாக பழகியுள்ளார் அந்த 23 வயது போலீஸின் மகளை அடைய திட்டமிட்ட துணை கமிஷனர் உனக்கு வேலை வாங்கி தருகிறேன் என உறுதியளித்துள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும் அவருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். மிரட்டி பலாத்காரம்தனது ஆசையை நிறைவேற்ற எண்ணிய துணை கமிஷனர் ராகுல் ஸ்ரீராம், கடந்த பிப்ரவரி மாதம் அந்த பெண்ணை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். தனது அம்மா உட்பட வேறு யாரிடமுடம் இதுகுறித்து மூச்சுவிடக்கூடாது என மிரட்டியுள்ளார்.
மிரட்டி மிரட்டியே...
இதனால் மிரண்டு போன அந்த பெண்ணும் யாரிடமும் சொல்லாமல் உள்ளுக்குள்ளேயே நொந்துள்ளார். இதனை பயன்படுத்திக்கொண்ட ராகுல் ஸ்ரீராம் தேவைபடும் போதெல்லாம் அந்த பெண்ணை மிரட்டி மிரட்டியே தொடர்ந்து பலாத்காரம் செய்துள்ளார். ஒரு கட்டத்தில் கதறிய மகள்கடந்த 21ஆம் தேதியும் துணை கமிஷனர் ராகுல் ஸ்ரீராம் தனது காம வேட்டையை அரங்கேற்றியுள்ளார். ஒரு கட்டத்துக்கு மேல் இந்த வேதனையை தாங்க முடியாத மகள் இதுகுறித்து தனது தாயாரிடம் கூறி கதறியுள்ளார். துணை கமிஷனர் மீது வழக்குப்பதிவு இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண் போலீஸ் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதையடுத்து போலீசாரும் துணை கமிஷனர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். லீவில் எஸ்கேப் இதனையறிந்த ராகுல் ஸ்ரீராம் விடுப்பு எடுத்துக்கொண்டு தலைமறைவாகி விட்டார். இதைத்தொடர்ந்து போலீசார் இந்த புகார் குறித்து தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்...
பிரமிப்பூட்டும் பழந்தமிழர்களின் விஞ்ஞானம்...
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும் இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்?
தேடிப் பார்ப்போம் வாருங்கள். கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும் பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத் தெரியாது.
ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும்.
இக்கலசங்களிலும் அதில் கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை (earth) கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு, சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள்.
குறிப்பாக வரகு தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை.
இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு வருடங்கள் தான் சக்தி இருக்கிறது.
அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!! இதை எப்படி ஆராய்ந்தார்கள்.
அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று?
தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது, ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை, இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே.
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில் "புவிக்குஇணை" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப் பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள்.
உதாரணமாக கோபுரத்தின் உயரம் ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர் இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500 சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள்.
சில கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர் பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது.
இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்றது!! பிரம்மிப்பு...
அதெப்படி என்று கேட்கிறவர்கள் படத்தைப் பார்க்கவும். இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான் நினைவுக்கு வருகின்றது. சும்மாவா சொன்னார்கள் பெரியவர்கள்...
திமுக சொம்பு சுப.வீ யும் சாதி ஒழிப்பும்...
சாத்தான் வேதம் ஓதுகிறது...
சுபவீ என அன்போடு அழைக்கப்படும் வீரபாண்டிய கட்டபொம்மன் செட்டியார், தன்னை ஜெயலலிதா சிறைக்கு அனுப்பிய காழ்ப்பிலும், வெளியே எடுக்க கருணாநிதி உதவிய செஞ்சோற்றுக் கடனுக்காகவும், கருணாநிதிக்கு ஜால்ரா போட ஆரம்பித்தார்...
அப்போதைய ஜால்ரா சத்தம் எதுவரை போனது என்றால், தலைவர் பிரபாகரனின் அன்னை பார்வதி அம்மாள் சிகிச்சைக்காக தமிழகம் வந்தபோது, அவரை சிகிச்சை பெற விடாமல் இந்திய அரசும், கருணாநிதியும் திருப்பி அனுப்பினார்கள்... அப்போது, புலம் பெயர் தமிழர்கள் சிலர் இவரிடம் தொலைபேசியில் கருணாநிதியின் மூலம் பார்வதி அம்மாவுக்கு உதவி செய்யுங்கள் எனக் கேட்டபோது, இப்போது தான் என்னை கண் தெரிகிறதா எனக் காட்டமாகக் கேட்டாராம்..
இதே புலம்பெயர் தமிழர்கள், உன்னை ஈழ ஆதரவாளன் என்று நம்பி வெளிநாடுகளுக்கு சுற்றுப் பயணம் அழைக்கவில்லையா? அவர்கள் வீட்டுச் சோற்றை நீ தின்றதில்லையா? அப்போது இனித்ததா? இப்போது மட்டும் கசக்கிறதா சுபவீ?
தனிப்பட்ட பிரச்சனைகளையும் இன நலனுக்கான பிரச்சனைகளையும் பிரித்தறிந்து பார்க்கத் தெரியாத சுயநலமி சுபவீ. இனநலன் குறித்தும் சாதி ஒழிப்பு குறித்தும் ஒயாமல் ஓதிக்கொண்டிருக்கிறது.
வேட்டியோடு என்ன விரோதம்?
நந்தன் வழி இதழில் இவர் ஆசிரியராக இருந்த போது. தான் ஏன் வேட்டி கட்டுவதில்லை? ஏன் மீசை வைத்துக் கொள்கிறேன்? என்பதற்கு விளக்கம் கொடுத்தார்.
அதாவது, வேட்டி கட்டிக் கொள்வதும், மீசை மழித்து இருப்பதும், இவர் சாதியான நாட்டுக்கோட்டை செட்டியாருக்கான அடையாளங்களாம்.
அதனால் சாதி ஒழிப்பு போராளியான இவர் அடங்க மறுத்து. மீசை வைத்துக் கொண்டும். பேண்ட் போட்டுக்கொண்டும் இவர் சாதி ஒழிப்பை காட்டுவாராம்.
சுபவீயின் சாதி ஒழிப்பு வீரம் மீசை மயிரோடு நின்று விட்டது.
ஒரு தாழ்த்தப்பட்ட சாதியினருக்கு தன் பெண்ணை கொடுத்தோ, பெண் எடுத்தோ காட்ட முடியாத சாதி ஒழிப்பு போராளி சுபவீ..
அடுத்தவன் வீட்டுப் பெண்களை மட்டும் கொடுக்கச்சொல்லும் புரோக்கர் வேலைகளை இனி விட்டுவிட வேண்டும்...
வீரப்பனார் எனும் எல்லைக் காவல் தெய்வம்...
சுள்ளி பொறுக்க காட்டிற்குள் சென்று வழி தெரியாமல் போய்விட்ட பெண்களை பார்த்தால்...
நீ ஏம்மா இங்க எல்லாம் வர? பொலிசுகாரனுங்க கண்ணுல பட்டுட போற...
ஏதாவது ஆடு வளத்து பொழச்சிக்கோ
என்று கையில் இருக்கும் காசை கொடுத்து காட்டு எல்லை வரை வந்து விட்டு விட்டு போவாராம் வீரப்பன்..
வீரப்பன் அவர்கள் அரசுக்கு வைத்த கோரிக்கைகள்...
1. காவிரிப் பிரச்சினையை சர்வதேச நீதிமன்றம் விசாரித்து முடிவுகூற வேண்டும்.
2.வாச்சாத்தி, சின்னாம்பதி கற்பழிப்புச் சம்பவங்களில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ஆகியோருக்குநஷ்டஈடு தரவேண்டும்.
3. தமிழகத்தில் 10-ம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியைக் கட்டாயமாக்க வேண்டும். அதற்கானசட்டம் இயற்ற வேண்டும்..
4. பெங்களூரில் மூடப்பட்டுக் கிடக்கும் திருவள்ளுவர் சிலையைத் திறக்க வேண்டும்.
5.தடா சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அப்பாவித் தமிழர்களை விடுவிக்க வேண்டும். அவர்களுக்கு உறுதியளித்தபடி நிவாரணம் வழங்க வேண்டும்.
6.தமிழக சிறைகளில் உள்ள தமிழ் தேசிய விடுதலைப் படை, தமிழ் விடுதலைப் படை ஆகியவற்றைச் சேர்ந்த 5 பேரை தமிழக அரசு உடனே விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்...
துரோகங்களாலும் சூழ்ச்சிகளாலும் மட்டுமே தமிழர்களை வீழ்த்தினீர்கள் என்று வரலாறு காட்டுகிறது திருட்டு திராவிடர்களே...
வேம்பு தமிழர்களின் பண்பாட்டோடும், பழக்க வழக்கங்களோடும், வாழ்வோடும், வழிபாட்டோடும் பின்னிப் பிணைந்து விட்ட ஒன்றாகும்...
சங்க இலக்கியங்களிலேயே “தெய்வம் சார்ந்த பராரை வேம்பு” என்று
வேம்பு சிறப்பிக்கப்படுகிறது...
இப்படிப்பட்ட வேம்பு மருந்தாகித்த தப்பா மரம் என்பதை சித்தர்கள் அறிந்தனர். அவர்கள் சொன்னவற்றை இன்றைய விஞ்ஞானிகளும் ஏற்றுக்
கொள்கின்றனர். இன்று வரை 30-க்கும் மேற்பட்ட தாவர இரசாயனங்கள்
கண்டறியப்பட்டுள்ளன.
இலை, பட்டை, விதையிலுள் தைலம் பலவகையான பாக்டீரியாக்களைக்
கட்டுப்படுத்தும் திறன் உள்ளது என கண்டறியப்பட்டுள்ளது.Streptomycinie
போன்ற மருந்துக்கும் கட்டுப்படாத காசநோய் கிருமிகள் வேப்ப
எண்ணெய்க்கு கட்டுப்படுவதாக ஆய்வு அறிக்கைகள் சொல்லுகின்றன.
லக்னோவிலுள்ள King George மருத்துவக் கல்லூரியில் செய்த ஆய்வின் மூலம் வேப்பிலை மோசமான தோல் நோய்களையும் கட்டுப்படுத்தும், மேலும் குடல் புழுக்களையும் அகற்றும் ஆற்றல் உள்ளது என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.
மேகாலாயவில் உள்ள பழங்குடி மக்கள் இதய நோய்க்கும், காச நோய்க்கும்
வேப்பம் பழங்களையும், இலைகளையும் பயன்படுத்துகிறார்கள்.
வேப்பெண்ணெய்க்கு விந்துவிலுள்ள உயிர் அணுக்களைச் செயல் இழக்கச் செய்யும் ஆற்றல் உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் கண்டறிந்துள்ளது.
வேப்பிலையிலுள்ள குயிர் சிடின் என்னும் சத்து Bacteria-க்களைக்
கட்டுப்படுத்தும் தன்மை உள்ளது என்று கண்டறியப்பட்டுள்ளது.வேப்ப
எண்ணெய்யை சிதைத்து வடித்துப் பெறும் பைரோனிமின் மூலம் Rocketகான உந்துவிசை மாற்று எரிப்பொருளைப் பெறலாம் என்கின்றனர்.
எலிகளுக்கு வேப்பிலை சாற்றைக் கொடுத்து ஆராய்ந்ததில் அது கருத்தரிக்கும் ஆற்றலை 11-வது வாரத்தில் முற்றிலும் இழந்து விட்டதை அறிந்தனர்.
சாறு கொடுப்பதை நிறுத்தி விட்டால் மீண்டும் கருத்தரிக்கும் ஆற்றல் பெற்று
விடுவதையும் கண்டுள்ளனர்.
நிலத்தின் அமிலத் தன்மையை நிலப்படுத்தும் தன்மையிலும், காற்றின்
வேகத்தைக் கட்டுப்படுத்துவதிலும் வேம்பு தன்னிகரற்றது.வேப்பம்
பூவிலிருந்து அடுத்த சத்து 3 வகையான நுண்புழுக்களைக் கட்டுப்படுத்துவதாக
சித்திக் ஆலம் என்னும் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.
சுற்றுச் சூழலை பாதுகாத்து நிலைப்படுத்தும் ஆற்றல் வேம்பிற்கு உள்ளது.
காற்றில் கலந்துள்ள தூசியை வடிகட்டும் திறனும், Anthro cyanine என்னும் நச்சு வாயுக்களை ஈர்த்துக் கொள்ளும் பண்பும் வேம்பிற்கு இருப்பதாக ஆய்வுகள் நிரூபிக்கின்றனர்.
வேம்பு வெளியிடும் பிராகிபிடின் என்னும் வேதிப்பொருள் காற்றில் கலந்து மனிதனையும் தாவரங்களையும் தாக்கும் கிருமிகளை இயங்க விடாமல் தடுத்து அழிக்கிறது என்று Dr.சக்சேனா கண்டறிந்துள்ளனர்.
வேப்பம் விதைக்கும், எண்ணெய்க்கும் பிண்ணாக்கிற்கும்-123க்கும்மேற்பட்ட
பூச்சிகளைக் கட்டுப்படுத்தும் ஆற்றல் உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளது. வேம்பு Meliazia தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது.
வேறு பெயர்கள்...
அரிட்டம், துத்தை, நிம்பம், பாரிபத்திரம், பிசுமந்தம், வாதாளி.
மருத்துவப் பண்புகள்
இலை:
1)புழு, பூச்சிகளால் நேரிடும் துன்பங்களை ஒழிக்கும்.
2)வேப்பங்கொழுந்தும், எள்ளும் சேர்த்து அரைத்துப் பூசிவர ஆறாத நாட்பட்ட புண்கள் ஆறும்.
3)வேப்பிலையை கற்ப முறைப்படி சாப்பிட்டு வர எந்த நோயும் அணுகாது.
4)வேப்பிலைச் சாறு + பழச்சாறு கலந்து படுக்கபோகும் முன் அருந்த ஆழ்ந்த உறக்கம் உண்டாகும்.
பூ.. பூவை குடிநீரிட்டு குடிக்க குன்ம நோய் தீரும்.
காய் + பழம்.. தோல் நோய் தீரும்.
விதை...
1)மூலம், தோல் நோய், சூதக சன்னி, குடல் கிருமி, நரம்புப் பிரிவு நீங்கும்.
2)விதை + கசகசா + தேங்காய் பால் சொறி, சிரங்கு, நமைச்சல், தேமல் தீரும்.
நெய்
1)துஷ்ட புண்கள் தீரும்.
2)ஆராத இரணங்கள் தீரும்.
வேப்பம் பட்டை
1)வேப்பம் பட்டை + திப்பிலி குடிநீர் இடுப்பு வாதம், கீல் வாதம் தீரும்.
2)கஷாயம் குட்டம் தீரும்.
அதிகமான மருந்துகளைப் பயன்படுத்தினால், மரபியல் குணங்களை நிர்ணயிக்கும் Chromosomes சிதைவுறுவதாக தற்கால ஆராய்ச்சியின் மூலம் தெரிய வந்துள்ளது. வேம்பு Chromosome களை பாதிக்காமல் நோய்க் கிருமிகளை மட்டும் அழிக்கும் ஆற்றல் பெற்றுள்ளது.
பிசின்...
1)மேக நோயைப் போக்கும்.
குறிப்புகள்...
பூவைத் தலையில் வைக்க ஈறும் பேணும் தீரும்.
100 வயதான வேப்பமரப் பட்டையை நிழலில் உலர்த்திச் சூரணித்து பாலில்
சாப்பிட்டு வர நரம்புத் தளர்ச்சி நீங்கும். நோய் அணுகாது.
பூச்சாறு + நெல்லிக்காய் சாறு கலந்து தர எந்த நோயும் அணுகாது, தோல்
பளபளக்கும், இரத்தம் சுத்தமாகும்.
வேப்பமுத்து, மிளகு, கருஞ்சீரகம் மூன்றையும் அரைத்து எண்ணெய்யில்
கலந்து தலைக்குத் தேய்த்து முழுகி வரப் புழுவெட்டு மாறும். முடி செழித்து
வளரும்.
வேப்பம்பட்டைத் + தூள் கரிசாலை + மல்லிச் சாறு 7 முறை பாவனை செய்து 1மண்டலம் தேனில் உண்ண உடல் கருங்காலி மரம் போல் வலிமை
உடையதாகும். விந்து கட்டும்
வேப்பம்பூ + வேப்ப எண்ணெய் கலந்து காய்ச்சி காதுக்குச் சொட்டு மருந்தாகப்
பயன்படுத்தக் காதில் உள்ள பூச்சிகள் வெளிப்படும். காது வலி, காது சீழ் மாறும்.
நம் வீடுகளில் வேம்பு வளர்ப்பது ஐதீகமாகக் கருதப்பட்டாலும், அதன் தத்துவம்.
என்னவென்றால் வேம்பை சுற்றி 10 ஆநவசந நோய் எதிர்ப்பு ஆற்றல்
உள்ளதென்றும், காற்றானது தூய்மையுறும் என்றும் சொல்லப்பட்டுள்ளது...
Subscribe to:
Posts (Atom)












