09/10/2018

அரசியலில் ஒரு சில நிகழ்வுகள் சத்தமே இல்லாமல் நடக்கும்…… சில நேரம் சத்தமாக…


5-10-18 : EPS - பன்வாரி சந்திப்பு அடுத்து, EPS-பொன்னார் சந்திப்பு TTV யோடு நீங்கள் இணைய வேண்டும் என Pressure கொடுத்ததாக தகவல்..

6-10-2018 : துணை வேந்தர்கள் நியமனத்தில் முறைகேடும் ஊழலும் நடந்துள்ளது - பன்வாரி லால் ஆட்சி கலைப்புக்கு முதல் படி இதுதான் என்று பேச்சு தமிழகம் முழுவதும் எழுந்தது.

கவர்னர் மிரட்டலுக்கு பயந்து கிட்டத்தட்ட மேற்கண்ட திட்டத்திற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே narendramodi சந்திக்க வாய்ப்புள்ளதாக பேச்சு எழுந்தது.

8-10-2018 : EPS - MODI சந்திப்பு …சந்தோஷமாக வெளியே வந்த EPS..

9-10-18 8 மணி : நக்கீரன், ஏப்ரல் மாதம் எழுதிய கட்டுரை-க்கு இன்று நக்கீரன் கோபாலை கைது செய்தது காவல் துறை.

10 மணி : அரசியல் தலைவர்களும், பத்திரிக்கையாளர்களும் கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை. 

NakkeeranGopal செய்தியாளர்கள் மற்றும் வைகோ தர்ணா போராட்டம்.

12 மணி : கைதை வரவேற்று TTV பேட்டி.

1 மணி : பன்வாரிலால் Sex Scandal புகார் இந்தியா முழுமைக்கும் எதிரொலிக்க துவங்கியது. நக்கீரன், ஜெ. வரை எதிர்த்து நின்ற செயல்பாடுகள் விவாதமாக மாறத் துவங்கின.  ட்ரெண்டில் புரோகித் பெயர்.

புரோகித் பெயர் ஏறத் தயார் ஆகிறது.

2 மணி : தான் பல்கலைக்கழக துணை வேந்தர்கள் நியமனம் குறித்து கூறிய கருத்து தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், சில துணைவேந்தர்கள் மீதான புகாரும் கைதுகளும் தன்னை கவலை கொள்ளச் செய்துள்ளதாகவும்.., அதையே தான் கூறியதாகவும் மற்ற ஏதும் இல்லை என்றும் ஆளுநர் மாளிகை விளக்கம்.

(இப்போ திரும்ப மேல இருந்து படிங்க)

இப்போ இதுல Game Player யாருன்னு கண்டு பிடிச்சிட்டா……

நீங்க தான் சரியான அரசியல் சுவாசிப்பாளன்...

சேகுவேரா வின் நினைவு தினம் இன்று...


புரட்சியின் புனை பெயர் 
நீ இல்லாமல் போய்விட்டாய் 
இருந்திருந்தால் 
உனக்கும் முடிவு 
முள்ளி வாய்க்காளில் தான்..

நீ பொலிவிய காடுகளில் 
கோழையைப் போல் சுடப்பட்டாய் 
அன்று..

உன் தம்பிகள் முள்ளிவாயக்காளில் 
அம்மனமாய் புதைக்கப்பட்டார்கள் 
இன்று..

சே புரட்சியின் புனை பெயர் 
உன்னை போல தான் 
எங்கள் விடுதலையையும் 
அழிக்க முடியாது...

இளம் பெண்ணை படுக்கைக்கு அழைத்த வைரமுத்து...


காதலித்து பார் கருவக்காட்டுக்குள் அழைத்துசெல்வாய் காதலித்து பார்.

காதலித்து பார், கைரேகைகள் அழகாகும், கம்மாய்கரைகள் சொர்க்கமாகும் காதலித்து பார்.

காதலித்து பார், மசாஜ் செண்டர்கள் மறந்துபோகும், காண்டம்கள் கிழிந்துபோகும் காதலித்து பார்.

கை அருகே "பிட்டு சிடி" இருந்தும் பட்டினி கடந்து பழகுவாய்.

நேரங்கள் நிமிடங்களாகும், நிமிடங்கள் வருடங்களாகும் கடைசியாக காவல்துறைகள் கைதுசெய்யும் அதுவும் கடந்துபோகும் காதலித்து பார்.
                                     
- டோழர் வைரமுத்து டைரி குறிப்பிலிருந்து...

நக்கீரன் கோபால் மீதான 124 பிரிவை நீதிமன்றம் ரத்து செய்தது...


நக்கீரன் கோபால் கைதுக்கு காரணமான பத்திரிகையின் அட்டைப்படம்...


நக்கீரன் கோபால் மீது தேசத்துரோக வழக்கு போடப்பட்டிருப்பது கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் அரசப்பயங்கரவாதம் -சீமான் கடும் கண்டனம்...


நக்கீரன் கோபால் கைது அடக்கு முறையின் உச்சம்: உடனடியாக விடுவிக்க வேண்டும் - பாமக அறிக்கை...


நக்கீரன் குழும இதழ்களின் ஆசிரியர் நக்கீரன் கோபால் சென்னையில் இன்று திடீரென கைது செய்யப்பட்டிருக்கிறார். சென்னையிலிருந்து புனே செல்லவிருந்த அவரை சென்னை மாநகரக் காவல் துறையினர் விமான நிலையத்தில் வழிமறித்து கைது செய்துள்ளனர். இது கண்டிக்கத்தக்கது ஆகும்.

தமிழக ஆளுனரின் பணிகளில் தலையிட்டதாக நக்கீரன் கோபால் மீது ஆளுனர் மாளிகையிலிருந்து புகார் அளிக்கப்பட்டதாகவும், அதன் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. ஆளுனரின் பணியில் ஒரு பத்திரிகையாளர் எவ்வாறு குறுக்கிட முடியும்? நக்கீரன் கோபால் எவ்வாறு குறுக்கிட்டார் என்பது தெரியவில்லை. அருப்புக்கோட்டை அரசு உதவி பெறும் கல்லூரி மாணவிகளை  சில பெரிய மனிதர்களின் பாலியல் தேவைகளை நிறைவேற்றக் கட்டாயப் படுத்தியது தொடர்பான வழக்கில் உதவிப் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டது குறித்து  நக்கீரன் இதழ்களில்  தொடர்ந்து எழுதப்பட்டு வந்தது தான் கைதுக்கு காரணம் என்று ஊடகத்துறையினர் கூறுகின்றனர்.

இது உண்மை என்றால் இந்திய ஜனநாயகத்தின் நான்காவது தூண் மீது இதைவிட மோசமானத் தாக்குதலையும், அச்சுறுத்தலையும் கட்டவிழ்த்து விட முடியாது. ஒருவேளை ஆளுனர் குறித்து எழுதப் பட்ட தகவல்கள் தவறானதாக இருக்குமானால் அதற்காக அவதூறு வழக்கு தொடரலாம். அதற்கு மாறாக ஊடக ஆசிரியரை கைது செய்வது ஜனநாயகத்தை படுகொலை செய்யக்கூடிய, கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நெறிக்கக்கூடிய செயலாகவே அமையும். இதை அனுமதிக்க முடியாது.

எனவே, நக்கீரன் கோபால் மீது பதிவு செய்யப்பட்டுள்ள பொய் வழக்கை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். கைது செய்யப்பட்டுள்ள நக்கீரன் கோபாலை உடனே விடுதலை செய்ய வேண்டும்...

நிர்மலாதேவி வழக்கில், ஆளுநரை பற்றி அவதூறு கட்டுரை எழுதியதாக நக்கீரன் கோபால் கைது...


சலீம் - எனக்கு பிடித்த பாடல்...


நவீன கொத்தடிமையாய் நடத்தும் தொழிற்சாலை நிர்வாகங்களைக் கண்டித்து அறவழியில் போராடி வரும் என்பீல்டு, யமஹா தொழிலாளர்களின் சிக்கலில் அரசு தலையிட்டு உடனடித் தீர்வைப் பெற்றுத் தர வேண்டும் – சீமான் வலியுறுத்தல்...


காஞ்சிபுரம் மாவட்டம், திருப்பெரும்புதூரிலுள்ள சிறப்புப்பொருளாதார மண்டலத்திற்குள் அமைக்கப்பட்டுள்ள யமஹா, என்பீல்டு போன்ற பன்னாட்டு நிறுவனங்கள் அங்கு பணிசெய்யும் தொழிலாளர்களின் உரிமைகளைப் பறித்து அவர்களை நவீனக் கொத்தடிமைகளாய் நடத்தும் போக்கினைக் கண்டித்தத் தொழிலாளர்களின் அறவழிப் போராட்டத்தை நாம் தமிழர் கட்சி முழுமையாக ஆதரிக்கிறது. அவர்களது போராட்ட நோக்கங்களும், அவர்கள் எழுப்புகிற கோரிக்கை முழக்கங்களும் மிகத் தார்மீகமானவை. மண்ணின் மக்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளித் தருவதாகக் கூறி அமைக்கப்பட்டு இந்நாட்டின் வரிச்சலுகைகளையும், இன்னபிற வசதிகளையும் மிக எளிதாகவும், மலிவாகவும் பெற்றுக் கொண்டு பெரும் இலாபத்தை ஈட்டிவரும் பன்னாட்டு தொழிற்சாலை நிர்வாகங்கள் அங்கு பணிபுரியும் தொழிலாளர்களுக்கு அடிப்படை உரிமைகளையே மறுத்து அவர்களை கொத்தடிமையாய் நடத்தி வருவது வன்மையானக் கண்டனத்திற்குரியது.

ஜப்பானைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் யமஹா மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்தியா யமஹா மோட்டார்ஸ் 150 கோடி முதலீட்டில் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.  4,500க்கும் மேற்பட்டத் தொழிலாளர்களைக் கொண்டு இயங்கும் இந்நிறுவனத்தில் பணியாற்றும் நிரந்தரப் பணியாளர்கள் எண்ணிக்கை என்பது வெறும் 807 மட்டும்தான். மற்றத் தொழிலாளர்கள் யாவரையும் ஒப்பந்த மற்றும் பயிற்சித் தொழிலாளர்களாக வைத்து இதுநாள்வரை காலங்கடத்திக் கொண்டு வருகிறது. இரு ஆண்டுகளில் பணி நிரந்தரம் செய்து விடுவதாகக் கூறி அவர்களை வேலைக்கு நியமித்த நிர்வாகம், மூன்று ஆண்டுகளைக் கடந்தும் தான் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவும் முன்வரவில்லை. எந்தவித ஊதிய உயர்வையும் அளித்திடவுமில்லை. அவ்வூதிய உயர்வும் ஆண்டுக்கு 7,00 ரூபாய் உயர்த்திக் கொடுத்தாலே பெரிய காரியம் என்கிற அளவில்தான் இருக்கிறது. விலைவாசி உயர்வு விண்ணைமுட்டி, பணவீக்கம் நாட்டின் பொருளாதாரத்தையே முடக்கிப்போடுகிற தற்காலச் சூழலில் இந்த 700 ரூபாய் ஊதிய உயர்வு எந்தவகையில் தொழிலாளர்களுக்குப் பயன்படும் என்பது ஆலை நிர்வாகத்திற்கே வெளிச்சம். இவ்வாறு தொழிலாளர் நல உரிமைகள் நசுக்கப்படுவது மட்டுமல்லாமல் தொடர் அடக்குமுறைகள் தொழிலாளர்கள் மீது ஏவப்பட்டு மனித உரிமை மீறல்களும் நடக்கின்றன. இவற்றிற்கெதிராகத்தான் அவ்வாலைத் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி முதல் தொடர்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

என்பீல்டு தொழிற்சாலையில் 15 மாதங்களுக்கு மேலாகப் பணியாற்றிய 100க்கும் மேற்பட்ட ஒப்பந்தத் தொழிலாளர்களை பணிநிரந்தரம் செய்ய மறுத்ததோடு, அவர்களை பணிநீக்கமும் செய்துள்ளது. மேலும், தொழிற்சங்கம் அமைத்ததற்காக இரு நிரந்தரப் பணியாளர்களை நீக்கம்செய்து உத்தரவிட்டிருக்கிறது. இதற்கெதிராக அணிதிரண்டு 6,000க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் கடந்த செப்டம்பர் 24ஆம் தேதி உள்ளிருப்புப் போராட்டத்தினைச் செய்துவருகின்றனர். ஆனால், இதுவரை எந்த தீர்வையும் முன்னெடுக்க ஆலை நிர்வாகம் முன்வரவில்லை.

தொழிலாளர்கள் மீதான சுரண்டலுக்கெதிராக இதேபோன்று 10,000 க்கும் மேற்பட்டத் தொழிலாளர்கள் அங்கு போராடிக் கொண்டிருக்கின்றனர். மண்ணின் மைந்தர்களுக்கு வேலைவாய்ப்பினை அளித்து, அவர்களின் வாழ்க்கைத்தரத்தினை உயர்த்துவோம் எனக் கூறி கால்பதிக்கும் பன்னாட்டு நிறுவனங்கள் தொழிலாளர்களின் உழைப்பை சுரண்டிக் கொழுக்கிற அட்டைப்பூச்சிகளாக இருக்கின்றன. வரம்பற்ற மனித உழைப்பைப் பெற்றுக்கொள்ளும் நிர்வாகங்கள், உழைப்பாளர்களுக்குரிய அடிப்படை வசதிகளையோ, தார்மீக உரிமைகளையோ தர மறுத்து கொத்தடிமைகளாய் வைத்து அவர்களது இரத்தத்தை உறிஞ்சுகின்றன. அப்பன்னாட்டு நிறுவனங்கள் இந்திய தொழிலாளர் நலச்சட்டங்களையோ, விதிகளையோ துளியளவும் மதிப்பதில்லை. தங்களது கொள்ளை இலாபத்திற்காக எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக உள்ள அந்நிறுவனங்கள், மண்ணின் மக்களை இன்னொரு காலனிய ஆதிக்கத்தின் கீழ் வாழ்கிற நிலைக்கு இட்டுச் செல்கின்றன.

ஆகவே, திருப்பெரும்புதூர் சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்குள் போராடிக் கொண்டிருக்கும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டத் தொழிலாளர்களின் உரிமைக்கும், உணர்வுக்கும் மதிப்பளித்து அவர்களின் வாழ்வாதாரத்தை நிலைப்படுத்த இவ்விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு உடனடித் தீர்வைக் காண வழிவகைகளை செய்ய வேண்டும் என நாம் தமிழர் கட்சி சார்பாகத் தமிழக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

சீமான்,
தலைமை ஒருங்கிணைப்பாளர்,
நாம் தமிழர் கட்சி