25/01/2019

ஔவையாரின் ஆத்திசூடியை உலகறிய செய்வோம்...


1. விரும்பு / 1. Lea to love virtue.
2. ஆறுவது சினம் / 2. Control anger.
3. இயல்வது கரவேல் / 3. Don't forget Charity.
4. ஈவது விலக்கேல் / 4. Don't prevent philanthropy.
5. உடையது விளம்பேல் / 5. Don't betray confidence.
6. ஊக்கமது கைவிடேல் / 6. Don't forsake motivation.
7. எண் எழுத்து இகழேல் / 7. Don't despise leaing.
8. ஏற்பது இகழ்ச்சி / 8. Don't freeload.
9. ஐயம் இட்டு உண் / 9. Feed the hungry and then feast.
10. ஒப்புரவு ஒழுகு / 10. Emulate the great.
11. ஓதுவது ஒழியேல் / 11. Disce the good and lea.
12. ஒளவியம் பேசேல் / 12. Speak no envy.
13. அகம் சுருக்கேல் / 13. Don't shortchange.
14. கண்டொன்று சொல்லேல் / 14. Don't flip-flop.
15. ஙப் போல் வளை / 15. Bend to befriend.
16. சனி நீராடு / 16. Shower regularly.
17. ஞயம்பட உரை / 17. Sweeten your speech.
18. இடம்பட வீடு எடேல் / 18. Judiciously space your home.
19. இணக்கம் அறிந்து இணங்கு / 19. Befriend the best.
20. தந்தை தாய்ப் பேண் / 20. Protect your parents.
21. நன்றி மறவேல் / 21. Don't forget gratitude.
22. பருவத்தே பயிர் செய் / 22. Husbandry has its season.
23. மண் பறித்து உண்ணேல் / 23. Don't land-grab.
24. இயல்பு அலாதன செய்யேல் / 24. Desist demeaning deeds.
25. அரவம் ஆட்டேல் / 25. Don't play with snakes.
26. இலவம் பஞ்சில் துயில் / 26. Cotton bed better for comfort.
27. வஞ்சகம் பேசேல் / 27. Don't sugar-coat words.
28. அழகு அலாதன செய்யேல் / 28. Detest the disorderly.
29. இளமையில் கல் / 29. Lea when young.
30. அரனை மறவேல் / 30. Cherish charity.
31. அனந்தல் ஆடேல் / 31. Over sleeping is obnoxious.
32. கடிவது மற / 32. Constant anger is corrosive.
33. காப்பது விரதம் / 33. Saving lives superior to fasting.
34. கிழமைப்பட வாழ் / 34. Make wealth beneficial.
35. கீழ்மை அகற்று / 35. Distance from the wicked.
36. குணமது கைவிடேல் / 36. Keep all that are useful.
37. கூடிப் பிரியேல் / 37. Don't forsake friends.
38. கெடுப்பது ஒழி / 38. Abandon animosity.
39. கேள்வி முயல் / 39. Lea from the leaed.
40. கைவினை கரவேல் / 40. Don't hide knowledge.
41. கொள்ளை விரும்பேல் / 41. Don't swindle.
42. கோதாட்டு ஒழி / 42. Ban all illegal games.
43. கெளவை அகற்று / 43. Don't vilify.
44. சக்கர நெறி நில் / 44. Honor your Lands Constitution.
45. சான்றோர் இனத்து இரு / 45. Associate with the noble.
46. சித்திரம் பேசேல் / 46. Stop being paradoxical.
47. சீர்மை மறவேல் / 47. Remember to be righteous.
48. சுளிக்கச் சொல்லேல் / 48. Don't hurt others feelings.
49. சூது விரும்பேல் / 49. Don't gamble.
50. செய்வன திருந்தச் செய் / 50. Action with perfection.
51. சேரிடம் அறிந்து சேர் / 51. Seek out good friends.
52. சையெனத் திரியேல் / 52. Avoid being insulted.
53. சொற் சோர்வு படேல் / 53. Don't show fatigue in conversation.
54. சோம்பித் திரியேல் / 54. Don't be a lazybones.
55. தக்கோன் எனத் திரி / 55. Be trustworthy.
56. தானமது விரும்பு / 56. Be kind to the unfortunate.
57. திருமாலுக்கு அடிமை செய் / 57. Serve the protector.
58. தீவினை அகற்று / 58. Don't sin.
59. துன்பத்திற்கு இடம் கொடேல் / 59. Don't attract suffering.
60. தூக்கி வினை செய் / 60. Deliberate every action.
61. தெய்வம் இகழேல் / 61. Don't defame the divine.
62. தேசத்தோடு ஒட்டி வாழ் / 62. Live in unison with your countrymen.
63. தையல் சொல் கேளேல் / 63. Don't listen to the designing.
64. தொன்மை மறவேல் / 64. Don't forget your past glory.
65. தோற்பன தொடரேல் / 65. Don't compete if sure of defeat.
66. நன்மை கடைப்பிடி / 66. Adhere to the beneficial.
67. நாடு ஒப்பன செய் / 67. Do nationally agreeables.
68. நிலையில் பிரியேல் / 68. Don't depart from good standing.
69. நீர் விளையாடேல் / 69. Don't jump into a watery grave.
70. நுண்மை நுகரேல் / 70. Don't over snack.
71. நூல் பல கல் / 71. Read variety of materials.
72. நெற்பயிர் விளைவு செய் / 72. Grow your own staple.
73. நேர்பட ஒழுகு / 73. Exhibit good manners always.
74. நைவினை நணுகேல் / 74. Don't involve in destruction.
75. நொய்ய உரையேல் / 75. Don't dabble in sleaze.
76. நோய்க்கு இடம் கொடேல் / 76. Avoid unhealthy lifestyle.
77. பழிப்பன பகரேல் / 77. Speak no vulgarity.
78. பாம்பொடு பழகேல் / 78. Keep away from the vicious.
79. பிழைபடச் சொல்லேல் / 79. Watch out for self incrimination.
80. பீடு பெற நில் / 80. Follow path of honor.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ் / 81. Protect your benefactor.
82. பூமி திருத்தி உண் / 82. Cultivate the land and feed.
83. பெரியாரைத் துணைக் கொள் / 83. Seek help from the old and wise.
84. பேதைமை அகற்று / 84. Eradicate ignorance.
85. பையலோடு இணங்கேல் / 85. Don't comply with idiots.
86. பொருள்தனைப் போற்றி வாழ் / 86. Protect and enhance your wealth.
87. போர்த் தொழில் புரியேல் / 87. Don't encourage war.
88. மனம் தடுமாறேல் / 88. Don't vacillate.
89. மாற்றானுக்கு இடம் கொடேல் / 89. Don't accommodate your enemy.
90. மிகைபடச் சொல்லேல் / 90. Don't over dramatize.
91. மீதூண் விரும்பேல் / 91. Don't be a glutton.
92. முனைமுகத்து நில்லேல் / 92. Don't join an unjust fight.
93. மூர்க்கரோடு இணங்கேல் / 93. Don't agree with the stubbo.
94. மெல்லி நல்லாள் தோள்சேர் / 94. Stick with your exemplary wife.
95. மேன்மக்கள் சொல் கேள் / 95. Listen to men of quality.
96. மை விழியார் மனை அகல் / 96. Dissociate from the jealous.
97. மொழிவது அற மொழி / 97. Speak with clarity.
98. மோகத்தை முனி / 98. Hate any desire for lust.
99. வல்லமை பேசேல் / 99. Don't self praise.
100. வாது முற்கூறேல் / 100. Don't gossip or spread rumor.
101. வித்தை விரும்பு / 101. Long to lea.
102. வீடு பெற நில் / 102. Work for a peaceful life.
103. உத்தமனாய் இரு / 103. Lead exemplary life.
104. ஊருடன் கூடி வாழ் / 104. Live amicably.
105. வெட்டெனப் பேசேல் / 105. Don't be harsh with words and deeds.
106. வேண்டி வினை செயேல் / 106. Don't premeditate harm.
107. வைகறைத் துயில் எழு / 107. Be an early-riser.
108. ஒன்னாரைத் தேறேல் / 108. Never join your enemy.
109. ஓரம் சொல்லேல் / 109. Be impartial in judgement...

சகாயத்தை வம்பிழுத்து கேவலப்பட்டு நிற்கும் பாஜக எச். ராஜா சர்மா...


தமிழ்நாட்டின் தலைசிறந்த கோட்டை...


செஞ்சிக் கோட்டை விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள செஞ்சியில், மாநிலத் தலைநகரமான சென்னையில் இருந்து 160 கிமீ தொலைவில் அமைந்துள்ள இது ஒன்றியம் (Union) பிரதேசமான பாண்டிச்சேரிக்கு அண்மையில் உள்ளது. மராட்டிய மன்னரான சிவாசி(ஜி), "இது இந்தியாவிலுள்ள எவரும் உட்புகமுடியாத கோட்டைகளுள் சிறந்தது" எனக் கூறுமளவுக்கு அரண் செய்யப்பட்ட கோட்டையாக இது இருந்தது. பிரித்தானியர் இதனைக் "கிழக்கின் ட்ரோய்" என்றனர்.

முகலாயர்களால் பாதுசாபாத் என்றும் ,சோழர்களால் சிங்கபுர நாடு என்றும் அழைக்கப்பட்டது. இயற்கையோடு ஒன்றிய மூன்று பெரிய மலைகள், இரண்டு சிறிய குன்றுகள் 12 கி.மீ., நீளமுள்ள மதில் சுவர்களால் இணைத்தது செஞ்சிக்கோட்டை. பல போர்களை சந்தித்த பிறகும், இன்றும் கம்பீரமாக காட்சி தருகிறது. சோழர் காலத்தில் செஞ்சிக்கு பெயர் சிங்கபுரி, சிங்கபுரி கோட்டம் எனப்பட்டது. அதுவே பின்னாளில் செஞ்சி ஆகிவிட்டது. இப்பொழுதும் செஞ்சிக்கு அருகே சிங்கவரம் என்ற ஊர் உள்ளது, அது செஞ்சி அந்த காலத்தில் பெரிய நிலபரப்பு கொண்ட ஊராக இருந்திருக்கலாம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.

செஞ்சியின் வரலாறு பற்றி அதில் கிடைக்கும் கல்வெட்டுக்களின் அடிப்படையில் கி.மு. முதல் கி.பி 6 வரை இங்கு சை(ஜை)னர்கள் வாழ்ந்ததாகக் கூறப்படுகிறது.

பல்லவர் காலத்தில்(கிபி 600-900) சிங்கபுரதில் (சிங்கவரம்)ஒரு குகைகோவில் கட்டப்பட்டது, செஞ்சிக்குத் தெற்கே பனமலைப் பகுதியில் ஒரு கோயில் கட்டப்பட்டது. அதன் பின்னர் மண்டகப்பட்டு என்னுமிடத்தில் ஒரே கல்லில் குடைந்து செய்யப்பட்ட குகை கோயில் உருவாக்கப்பட்டது. இந்த இடம் செஞ்சியில் இருந்து பதினேழு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.

கி.பி.580-630 விசித்ரசித்தன் என அழைக்கப்பட்ட பல்லவ மன்னன் மகேந்திரவர்மனின் ஆளுகையில் செஞ்சி இருந்தது. மேலும் பல்லவர்களின் ஆளுகைக்கு உட்பட்ட சிங்கவரம் மற்றும் மேலச்சேரி பகுதிகளில் உள்ள பழங்கால கோயில் முலம் செஞ்சி பல்லவர்களின் ஆளுகையில் இருந்ததாக சொல்லப்படுகிறது .

செஞ்சி கிழக்கு பகுதியில் காணப்படும் கல்வெட்டுகள், செஞ்சி பல்லவர்களின் காலத்திற்கு பின் சோழர்கள் ஆண்டதாகச் சொல்கிறது.871 முதல் 907 இரண்டாம் ஆதித்ய சோழன் முறையே ஆட்சி செய்திருகின்றனர். அவன் தம்பி ராசராசன் சோழன் (987-1014) காலத்தில் சிங்கபுரம் என்று அழைக்கப்பட்டுள்ளது.

தொடக்கத்தில், சோழர் ஆட்சிக்காலத்தில் 9 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சிறிய கோட்டை ஒன்று இங்கே இருந்தது. 1014-1190 களின் செஞ்சி பாண்டியர்களின் கையில் இருந்தததாக கல்வெட்டுகள் கூறுகின்றன. இங்கிருந்த சிறிய நகரமான செஞ்சியைப் பாதுகாப்பதற்காக, விசயநகரப் பேரரசுக் காலத்தில், 13 ஆம் நூற்றாண்டில் விரிவாக்கப்பட்டது.

அடுத்து வந்த பல மன்னர்கள் செஞ்சிக் கோட்டையை வலிமை பொருந்திய கோட்டையாக மாற்றினர். 13 ஆம் நூற்றாண்டில் விசயநகரப் பெரரசுகளின் ஆளுகைக்கு உட்பட்டு இருந்தது. குறிப்பாக, விசயநகர மன்னர்களின் ஆளுகையில் செஞ்சிக்கோட்டை இருந்த போது, 1509ம் ஆண்டு முதல் 1529ம் ஆண்டு வரை, தொடர்ந்து 20 ஆண்டு கோட்டையை விரிவுபடுத்தினர். தமிழ் நாட்டில் நாயக்கர்களின் ஆட்சிக்காலத்தில் செஞ்சி நாயக்கர்களின் தலைமை இடமாகவும் இது விளங்கியது.

வெளியார் படையெடுப்பை முறியடிப்பதற்கு உகந்த இடமொன்றாகக் கருதியே இவ்விடத்தில் இக்கோட்டை கட்டப்பட்டது. மராட்டியர்களிடம் இருந்த இக் கோட்டையை பீச(ஜ)ப்பூர் சுல்தானின் படைகள் கைப்பற்றின. இக் கோட்டையை கி.பி 1677 இல் மீளக் கைப்பற்றிய(மீட்ட) மராட்டிய மன்னர் சிவாசி இதனை மேலும் பலப்படுத்தினார்.

ஔரங்கசீப்பின் தக்காணப் படையெடுப்பின் போது மராட்டிய மன்னனாக இருந்த, சிவாசியின் இரண்டாவது மகனான சத்ரபதி ராசாராம் தப்பிச் செஞ்சிக் கோட்டைக்கு வந்து அங்கிருந்து முகலாயர்களுடன் போரிட்டான். முகலாயர்கள் இக்கோட்டையைச் சுற்றி முற்றுகை இட்டிருந்தபோதும் ஏழு வருடங்களாக இதனைக் கைப்பற்ற முடியவில்லை.

இறுதியில் 1698 ஆம் ஆண்டில் இக்கோட்டை கைப்பற்றப்பட்டது. ஆனால் அதற்கு முன்னரே சத்ரபதி ராசாராம் அங்கிருந்து தப்பி விட்டான். பின்னர் இக் கோட்டை கர்நாடக நவாப்புக்களில் கைக்கு வந்தது. அவர்கள், 1750 இல் இதனை பிரெஞ்சுக்காரரிடம் தோற்றனர். இறுதியாக 1761 இல் பிரித்தானியர் இதனைக் கைப்பற்றிக் கொண்டனர். எனினும் சிறிதுகாலம் இதனை கை(ஹை)தர் அலியும் கைப்பற்றி வைத்திருந்தார்...

தமிழகம் கலப்படத்தில் களவாடப்படுகிறது...


உடல் எடையை குறைக்க...


Subscribe The Channel For More Tips...

தமிழகத்தில் வடவர் குடியேற்றம் மற்றும் ஆதிக்கம்...


எங்கெங்கு காணினும் இந்தி வாலாக்கள்...

என்ற தலைப்பில், குமுதம் ரிப்போர்ட்டர் பத்திரிக்கை தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் குவிந்து வருவதைப் பற்றிய கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அக்கட்டுரையில் தோழர் பெ. மணியரசன் அளித்துள்ள செவ்வியும் வெளியாகியுள்ளது.

அக்கட்டுரையின் முக்கிய கருத்துகள் கீழே...

கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலேயே "வெளிமாநிலத்தார் குடியேற்றத்தில்" தமிழகம் முதலிடம்...

2011 இல் மக்கட்தொகை கணக்கெடுப்பு படி தமிழகத்தில் 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்'  44 லட்சம்..

தற்போது 'வெளிமாநிலத்தில் பிறந்து தமிழகத்தில் குடியேறியோர்' எண்ணிக்கை ஒரு கோடி தாண்டும்..

கர்நாடகா, குஜராத், மேற்குவங்கம், சத்தீஸ்கர், மஹாராஷ்டிரா ஆகிய மாநிலங்கள் குடியேற்றம் தொடர்பாக கடுமையான சட்டம் வைத்துள்ளன..

நாகாலாந்து, மிசோரம், அருணாச்சலபிரதேசம் ஆகியவற்றில் வெளியார் குடியேற 'இன்னர்லைன் பெர்மிட்' எனும் மத்திய நடுவணரசு அனுமதி கட்டாயம்..

தமிழகத்தில் எந்த குடியேற்றக் கட்டுப்பாடும் இல்லை..

வடவர் குற்றச்செயல்கள் பெருகிவருகின்றன..

சென்னை பொருளாதாரம் பல ஆண்டுகளாக ராஜஸ்தானி மற்றும் குஜராத்தி பணக்காரர்கள் கைகளில்..

அம்பத்தூர் தொழிற்பேட்டை வேலை வாய்ப்பு 70% வந்தேறி வடவர்களால் ஆக்கிரமிப்பு...

சென்னை தகவல் தொழில்நுட்பம் சார்ந்த உயர்தர வேலைவாய்ப்பு 50% வடயிந்தியர் ஆக்கிரமிப்பு..

படம்: குமுதம் ரிப்போர்ட்டர் (23.10.2018)
தலைப்பு: எங்கெங்கு காணினும் இந்திவாலாக்கள்! - சிக்கலில் தமிழகத் தொழிலாளர்கள்...

உண்மை தானே தமிழா...


நாம் உண்ணும் உணவு சரியானது தானா ? - கண்டுபிடிக்க ஒரு எளிய வழி...


அதாவது எந்த உணவானாலும் உணவு உண்ணும்போதோ உண்ட பின்னோ உடனே தண்ணீர் தேவைப்பட்டால் அப்போது உண்ட உணவு உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு அல்ல என்றும் உடனே தண்ணீர் தேவைப்படவில்லை என்றால் அது உண்பதற்கு ஏற்ற நல்ல உணவு என்றும் அறிந்து கொள்ளலாம். .

ஒருவருக்குத் தண்ணீர்த் தாகம் எடுக்கிறது என்றால் அவர் உழைப்பின் காரணமாகவோ அல்லது வெய்யிலின் காரணமாகவோ அல்லது எதிர்பாராத செய்தியைக் கேட்டு நாக்கும் தொண்டையும் வரண்டு போனதாலோ அல்லது அதிகம் தொண்டை வரண்டுபோகுமளவு சப்தமாகப் பேசியதாலோ தான் இருக்கவேண்டும்.

விளையாடும்போதும் ஓடும்போதும் வேகமாக நடக்கும் போதுகூட தண்ணீர்த் தாகம் எடுக்கலாம். காரணம் அந்த நேரங்களில் நமது உடம்பில் உள்ள நீர்மட்டும் அதிகம் செலவாகிறது.

அப்படியல்லாமல் உண்ணும் உணவால் ஒருவருக்குத் தாகம் எடுக்கிறது என்றால் அந்த உணவை நமது உடம்பு சாதாரணமாக ஏற்றுக்கொள்வில்லை என்பது பொருள். அதன்காரணமாக தண்ணீரைக் குடித்து சரிசெய்து மேலும் அதே உணவை வயிற்றில் செலுத்துகிறோம்.

உடம்புக்குத் தண்ணீர் தேவை இல்லாதபோதும் உண்ட உணவு தண்ணீர் கேட்கிறது. அத்தகைய உணவு எதாகிலும் குறையவோ கூடவோ உடல் நலத்துக்குத் தீங்கு விளைவிக்கக் கூடியதே!

அடுப்பில் வைத்து எண்ணையின்றி வேகவைத்து சமைக்கப்படும் உணவுகள் குறைந்த தாகத்தையே உண்டுபண்ணும். அதாவது தாளிப்பின்றி குறைந்த உப்பு காரம் சேர்க்கப்படும் உணவுகள்.

எண்ணைகொண்டு தாளிக்கும் மற்றும் உப்பு காரம் நிறையச் சேர்க்கப்படும் உணவுகள் கூடுதல் தாகத்தை உண்டுபண்ணும்.

ஆனால் நெருப்பில் நேரடியாகவோ அல்லது காய்ச்சிய எண்ணையில் போட்டோ சுட்டெடுக்கப்படும் உணவு வகைகள் உடனே அதிகமான அளவு தண்ணீர் கேட்கும். காரணம் ஒவ்வொன்றும் அவற்றைச் சமைக்கும் முறைக்கேற்ப அதிகமான தண்ணீர் குடித்தால்தான் நமது செரிமான உறுப்புக்களால் செயல்பட முடிகிறது.

இந்த இருவகைகளையும் ஒப்பிட்டுப்பார்த்தால் தண்ணீர்த் தாகத்தை அதிகப்படுத்தும் உணவுகள் எல்லாம் குறைந்த அளவிலிருந்து அதிகமான அளவு வரை நோய்களுக்குக் காரணமாக இருப்பதும் அப்படித் தாகத்தை உண்டுபண்ணாத உணவுகள் எல்லாம் நோய்களை உருவாக்குவது இல்லை என்பதோடு அநேக நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுவது உறுதிப்படும்.

அதற்குக் காரணம் இயற்கை உணவுகள் அனைத்தும் எளிதில் செரிக்கப்படுவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேற்றப்படுகின்றன. அதேசமயம் சமைக்கப்படும் விதத்துக்கேற்ப சமையல் உணவுகள் எளிதில் செரிக்கப்படாமல் சிரமப்படுத்துவதோடு அவற்றின் கழிவுப்பொருட்களும் எளிதில் வெளியேறாமல் உடம்பிலேயே தங்கிப் பின் பல்வேறு நோய்கள் உருவாகக் காரணங்களாக மாறுகின்றன.

இயற்கை உணவுகள் தண்ணீரைச் சார்ந்து இருப்பது இல்லை

பச்சையாக உண்ணக்கூடிய காய்கறிகள், கனிவகைகள், முளைக்கட்டிய தானியங்கள், பழச்சாறுகள், மூலிகைச் சாறுகள், இளநீர் போன்ற இயற்கை உணவுகள் தாகத்தை அதிகமாகத் தூண்டுவது இல்லை.

இனியாவது இவற்றை அதிகம் எடுத்துக்கொள்வோம்.

ஆரோக்கிய வாழ்வு வாழ்வோம்...

எல்லாத்தையும் நான் வெளியவே தேடனும்னா அப்போ உள்ளூர் எதுக்கு இருக்கு...? உள்மாவட்டம் எதுக்கு இருக்கு...?


இது எனக்கான கேள்வி மட்டும் இல்ல... படிச்சு வேலையில்லாம வெளியூர்ல திரியுற அத்தனை பேருக்குமான கேள்வி...

How to increase Height naturally.... உயரமாக வளர்வது எப்படி.?



Subscribe the channel more tips...