16/02/2019

கப்பற்படையே வைத்து உலகையே ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப் பேரரசு...


கப்பலோட்டி உலகை வென்ற இராசராச சோழனின் கப்பற்படைப் பற்றிய அரிய தகவல்கள்...

இராசராச சோழன் என்றாலே காலாற்படை முதல் யானை படை வரை நடுநடுங்கிப் போகும். வானுயர் வெற்றிகளை முடிசூடிய மாமன்னன் என்றால் சாதாரணமா என்ன..

பண்டையக் காலத்திலேயே கப்பற்படை வைத்து உலகை ஆட்டம் காண வைத்த பேரரசு, சோழப்பேரரசு...

ஆயிரம் வருடம் ஒரு வருடம், இரண்டு வருடம் அல்ல, ஆயிரம் வருடங்களாக கப்பற்படையை வைத்து அரசு நடத்தியப் பெருமை உலகிலேயே சோழ பேரரசிற்கு மட்டும் தான் இருக்கிறது.

கனம்...

இந்த கப்பற்படையில் நிறைய போர் வீரர்களை கொண்ட குழு ஒன்று பிரிக்கப்பட்டிருக்கும், அவர்களை "கனம்" என்று குறிப்பிட்டிருக்கிறார்கள். அவர்களை தலைமை தாங்கி இருந்தவரை, "கனாதிபதி" என்று அழைக்கப்பட்டிருக்கிறார்.

கன்னி...

தமிழில் "கன்னி" என்பதற்கு இளம் மங்கை என்று மட்டும் பொருள் அல்ல, "பொறி" என்ற மற்றொரு பொருளும் இருக்கின்றது. எதிரிகளை பொறி வைத்துப் பிடிக்கும் கப்பற்படை வீரர்களை, "கன்னி" என்று அழைத்திருக்கின்றனர். இவர்கள் தான் சிறப்பு பணியில் நியமிக்கப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களை நிர்வாகிப்பவர், "கலபதி" என்று அழைக்கப்படுவார்.

ஜதளம் அல்லது தளம்...

கப்பற்படையில் சக்தி வாய்ந்த குழுவாக திகழ்பவர்களை, ஜதளம் என்பார்கள். சுருக்கமாக இவர்களை "தளம் என்றும் குறிப்பிடுகிறார்கள். இவர்களை நிர்வகிப்பவர், "ஜலதலதிபதி" என்னும் நபர் ஆவார்.

மண்டலம்...

கப்பற்படையின் பாதி நிரந்திர போர் குழுவை, மண்டலம் என்று குறிப்பிடுகிறார்கள். இவர்களை தலைமை வகிக்க மண்டலாதிபதி என்பவர் நியமிக்கப்பட்டிருப்பார். இந்த பிரிவிடம் 40 முதல் 50 கப்பல்கள் வரை இருக்கும். இவர்கள் தனி, தனியாகவும், குழுவாகவும் சென்று போர் புரிவதில் வல்லமைப் பெற்றவர்கள்.

நிரந்திர போர் பிரிவு நாம் முன்பு குறிப்பிட்டிருந்த, "கனம்" பிரிவை சேர்ந்தவர்கள் தான் நிரந்திர போர் பிரிவை சேர்ந்தவர்கள். இவர்களிடம் 100 இருந்து 150 கப்பல்கள் வரை இருக்கும். மூன்று "மண்டலம்" குழுவை உள்ளடக்கி இருக்கும் குழுவானது "கனம்" என்று கூறப்படுகிறது.

அணி...

பெரிய போர்களில் ஈடுபட மட்டுமே உபயோகப்படுத்தப்படும் குழுவை "அணி" என்று கூறுகின்றனர். ஒரு அணியில் மூன்று "கனம்" குழு உள்ளடங்கி இருக்கும். 300-500 கப்பல்கள் வரை இந்த குழுவில் இருக்கும். மாபெரும் அணியான இதை தலைமை தாங்குபவர், "அணிபதி" என்று அழைக்கப்படுவர்.

அதிபதி...

இதெல்லாம் போக இந்த அனைத்து குழுக்களையும் தலைமை தாங்கும் நபர் தான் "அதிபதி". இவரின் கட்டளைகளுக்கு இணங்க அனைத்து குழுக்களும் இயங்கும். இவர் இளவரசருக்கு கீழ் இருப்பவர்.

கைப்பற்றிய பகுதிகள்...

இந்த மாபெரும் கப்பற்படையை வைத்து தான், இந்தோனேசியா, யா(ஜா)வா, மாலத்தீவு, சிங்கப்பூர், இலங்கை, ஆங்கோர், கடாரம் போன்ற பல பகுதிகளை வென்றுள்ளது சோழப் பேரரசு.

"நாவாய்" பண்டைய தமிழர்களின் "நாவாய்" என்ற கப்பற்படையின் பெயர் தான் ஆங்கிலத்தில் "நேவி" (Navy) என்று அழைக்கப்படுகிறது...

நாடாளுமன்றம் தேர்தல் கூட்டணி....



அதிமுக - 24
பாஜக.   - 8
பாமக.    - 4
தேமுதிக - 4

என்று செய்தி வருகிறது...

ஒன்றுமே இல்லாத பாஜக விற்கு 8 தொகுதி...

தமிழகத்தில் பாமக முன்பை விட பல மடங்கு வளர்ந்துள்ளது... இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பும் உள்ளது...

இந்த சமயத்தில் மீண்டும் தமிழகமே எதிர்க்கும் பாஜக - அதிமுக கூட்டணியில் இனைந்து அனைவரின் நம்பிக்கையை இழக்க வேண்டுமா.?

அதுவும் 4 தொகுதிக்கு...

ஒன்றுமே இல்லாத நோட்டாவிற்கு போட்டியான பாஜக விற்கு 8 தொகுதி...

மக்கள் பிரச்சனைக்கு தலையீடாத தேமுதிக விற்கு 4 தொகுதி...

ஆனால் தமிழகத்தில் இளைஞர்களின் நம்பக்கையான அன்புமணி இராமதாஸ் அவர்களின் மூலம் பாமக மிக பலமாக வளர்ந்துள்ளது...

பாமக இருக்கும் கூட்டணியே வெல்லும் என்று உறுதியாகிவிட்ட நிலையில்... 4 தொகுதிக்கு தமிழகம் எதிர்க்கும் கட்சிகளிடம் கூட்டணி வைத்து நம்பிக்கையை இழக்க வேண்டுமா.?

பாமக கூட்டணிக்கு வந்து வெல்ல வேண்டும்.. அதே சமயம் பாமக வளர கூடாது என்பதற்காகவே... வளர்ச்சியை தடுப்பதற்காகவே இந்த 4 தொகுதி கொடுக்கிறது அதிமுக...

பாமக தனித்தோ அல்லது பாமக தலைமையில் கூட்டணியை உருவாக்கியோ தேர்தலை சந்தித்தால் நல்லது... அதுவே வரும் சட்டமன்றத் தேர்தலில் பாமக விற்கு பலம்...

இல்லை என்றால் சட்டமன்றத் தேர்தல் மிகச் சிக்கலாக மாறி விடும் என்பது என் கணிப்பு...

பொறுத்திருந்து பார்ப்போம்... பாமக தலைமை என்ன முடிவு செய்யப் போகிறது என்று...

வீரமரணமடைந்த தமிழக வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.20 இலட்சம்- முதல்வர் அறிவிப்பு...


காஷ்மீர் தாக்குதலில், தூத்துக்குடி மாவட்டம் சவலப்பேரியைச் சேர்ந்த கணபதி என்பவரின் மகன் சுப்ரமணியன் மற்றும் அரியலூர் மாவட்டம் கார்குடியைச் சேர்ந்த சின்னையன் என்பவரின் மகன் சிவசந்திரன் ஆகியோர் வீரமரணமடைந்துள்ளனர்.

இந்நிலையில் மரணமடைந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 20 லட்சம் உடனடியாக வழங்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.

மேலும் இறந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள அவர், இந்த தாக்குதலுக்கு எதிராக கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தனக்கு மிகுந்த மனவேதனையை அளித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்...

பல ஊழல்வாதிகளின் வழக்கறிஞர் பாஜக அருண் ஜெட்லி லட்சணம் இது தான்...


தேசத்துரோக பாஜக கட்சி நிர்வாகிகள் பாக்கிஸ்தானுக்கு துப்பு கொடுத்தது...


நல்லா கவணிங்க 35 வருடங்களுக்கு பிறகு நடந்த மிகப்பெரிய தீவிரவாத தாக்குதல் இது...

35 வருடங்களுக்கு முன்னர் இந்திய ராணுவத்தின் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது இப்போதைய தொழில்நுட்ப வளர்ச்சியை விட 10 மடங்கு குறைவு காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சியின் பரிணாமத்தின் விளைவாக கடந்த 35 ஆண்டுகளில் நம்தேசம் பெரிய தீவிரவாத தாக்குதல்களிலிருந்து காப்பாற்ற பட்டுள்ளது.

ஆனால் தொழில்நுட்பம் பெரியளவில் வளர்ந்து நிற்கும் இன்றைய நாளில் எப்படி இப்பேற்பட்ட தாக்குதல் நடத்தப்பட்டது?

இரண்டு நாட்களில் 350 கிலோ மதிப்புள்ள வெடிப்பொருட்கள் ஒரு காரில் நுழைந்துள்ளது.

எப்படி இந்த வெடிப்பொருட்கள் இவ்வளவு எளிதாக நுழைந்திருக்க இயலும்?

காஸ்மீரில் குடியரசுதலைவரின் ஆட்சி அமல்படுத்தப்பட்டு ஆறுமாதங்கள் கூட முடிவுறாத நிலையில் மாநில கட்சிகளில் ஏற்படாத இந்த நிர்வாக அலட்சியம் இந்த ஆட்சியில் எப்படி நிகழ்ந்தது?

தாக்குதல் நடத்தப்பட்ட இடம் ஒன்றும் காட்டுப்பகுதி அல்ல மக்கள் நடமாடும் பகுதி இந்த பகுதியினுள் தீவிரவாதிகள் நுழைய முடிகிறது எனில் அதற்கான வாய்ப்புகள் எப்படி சாத்தியம்?

பிப்.6 உளவுத்துறை தகவல் அளித்தும் எவ்வித முன்னேற்பாடுகளும் செய்யாதது ஏன்?

உ.பியின் பாஜக நிர்வாகி ஒருவன் தீவிரவாதிகளுக்கு தேசத்தை காட்டிக் கொடுக்கும் ஒரு ஈனச்செயலை செய்து கைது செய்யப்பட்ட இரண்டே தினங்களில் இந்த தாக்குதல் நிகழ்த்தப்பட்டுள்ளது.

எல்லையில் சிறு சந்தேகத்திற்குரிய நபர்கள் தென்பட்டாலும் கூட அவர்கள் சுட்டுவீழ்த்தப்படுவார்கள்.

ஆனால் இங்கே ஒரு முக்கியமான பகுதியுள்ளே மிக எதார்த்தமாக திட்டமிடுதலோடு ஒரு தாக்குதல் எப்படி சாத்தியமானது?

மத்தியரசுக்கு இதனுடைய எதிர்கால பாதிப்புகள் எச்சரிக்கையூட்டப்பட்டும் ஆக்கப்பூர்வமான எவ்வித நடவடிக்கையையும் இந்த மானங்கெட்ட அரசு அன்றே எடுத்திடாமல் அலட்சியம் செய்துள்ளது.

உண்மையாகவே இறந்த இராணுவ வீரர்கள் மீது மதிப்பு இருந்தால் இதற்குள்ளே செய்யப்பட்டு இருக்கும் அரசியலே சற்று சிந்தித்து பாருங்கள்.

"கோ" திரைப்படத்தின் சில காட்சிகளோடு இதனை தொடர்புபடுத்தி பாருங்கள்.

அரசியல்வாதிகளின் அற்ப அரசியலுக்காக 45 அப்பாவி இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என்பது தான் நிதர்சனம்.

கண்ணை மூடிக்கொண்டு இவர்கள் செய்வதையும் சொல்வதையும் மட்டுமே நம்பாமல் மேற்கூரிய சம்பவங்களோடு தேர்தலையும் இணைத்து சற்று சிந்தித்து பார்த்து முடிவெடுங்கள்...

காஷ்மீரில் அவந்திபோரா பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் 42 பேர் உயிரிழப்பு...


பறிபோன செங்கோட்டை காடு...


மொழிவாரி மாநிலங்கள் மாற்றியமைக்கப்பட்ட போது இரு மாநிலங்களுக்கு இடையே இயற்கையான எல்லையாக அமைந்துள்ள காடுகளைப் பங்கிடுவதில் சிக்கல் வந்தது.

அப்போது வகுத்த விதிப்படி ஒரு மாநிலத்தின் நிலப்பரப்பில் 30% காடுகளாக இருக்க வேண்டும்.

ஆனால் இதிலும் தமிழகம் வஞ்சிக்கப்பட்டது.

தமிழகத்தின் மேற்கும் வடக்கும் மலைகளாலும் காடுகளாலும் சூழப்பட்டு இருக்கிறது.

ஆனால் இந்த இயற்கையான எல்லையைத் தாண்டி மறுபக்கமும் தமிழர் வாழ்ந்தனர்.

அவை பறிபோனதுடன் காடுகளையும் கூட தமிழகத்துக்கு தராமல் ஆக்கிரமித்துக் கொண்டனர்.

இதில் கேரளா அளவுக்கதிகமான காடுகளை எடுத்துக் கொண்டது.

(அப்போது கேரளாவில் பாதிக்கு மேல் காடாக இருக்க, தமிழகத்தில் கால்பங்குகூட காடு இல்லை).

பறிகொடுத்த வரலாற்றில் சிறந்த எடுத்துக்காட்டு செங்கோட்டை தாலுகாவில் இருந்த (ஆரியங்காவு மற்றும் குளத்துப்புழா இருக்கும்) செங்குறிஞ்சி, பொன்முடி காடுகள்  பறிபோனது ஆகும்.

1931 மக்கட்தொகை கணக்கெடுப்பு செங்கோட்டை தாலுகா 100% தமிழர் வாழ்ந்த பகுதி்.

அன்றைய மலையாள இனவெறி திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கீழ் இருந்த தமிழர் பகுதிகளை மீட்க நேசமணி அவர்கள் நடத்திய போராட்டத்தின் விளைவாக அவர் கேட்டதில் பாதி கிடைத்தது.

இதில் கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் செங்கோட்டை அடங்கும்.

மீட்ட பகுதிகளை ஒரே மாவட்டமாக்கும் போது நேசமணியார் செங்கோட்டையை கன்னியாகுமரியின் ஒரு பகுதியாக வைத்திருப்பது மக்களுக்கு இடைஞ்சல் என்று அதை திருநெல்வேலிக்கே கொடுத்தார்.

இழந்த செங்கோட்டை வனப்பகுதி 1950களிலேயே ஆண்டுக்கு 5கோடி வருமானம் கொடுத்த வளமான பகுதியாகும்.

இதை நாம் இழந்தோம்.

வரைபடம்: அன்றைய செங்கோட்டை தாலுகா மீது இன்றைய எல்லை வரையப்பட்டுள்ளது...

தாமரை மொட்டு மலர்ந்தவுடன் இலங்கையில் தமிழினம் அழிக்கப்பட்டது (ராஜபக்சே கட்சி கொடி) தற்போது..?


அம்பானி மகனின் திருமண பத்திரிகையின் விலை எவ்வளவு தெரியுமா.. என்ன ஸ்பெஷல் இருக்கிறது...


முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானிக்கும், வைர வியாபாரி ரசல் மேத்தாவின் ஷ்லோகா மேத்தாவின் திருமணம் மார்ச் 10ம் தேதி நடைபெற உள்ளது. ஸ்லோகா ஆகாஷ் அம்பானியின் சிறுவயது தோழி ஆவார்.

இவர்களின் திருமணத்திற்கான அழைப்பிதழ் வெளியாகி அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது. இளஞ் சிவப்பு நிற பெட்டிக்குள் வைக்கப்பட்டுள்ளது. பெட்டகத்தின் மேற்புறத்தில்  சூரிய ஒளியில் தாமரை மலர்கள் மலர்ந்திருக்க, மயில்கள் நடனமாட, பசுக்கள் நடுவே ராதையும், கிருஷ்ணனும் இருக்கிறார்கள்.

அதனை திறந்த உடன் மேல் பகுதியில் வெள்ளி பிரேமில் ராதா-கிருஷ்ணன் படம் வைக்கப்பட்டுள்ளது. ஆரஞ்சு நிறத்தில் அழைப்பிதழ் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதனை திறந்த உடன் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஒவ்வொரு அழைப்பு என பக்ககங்கள் விரிகின்றன. ஒரு அழைப்பிதழின் மதிப்பு ரூ 1.5 லட்சம் ஆகும்.

அடுத்ததாக ரதத்தில் இருக்கும் வெண்ணிற விநாயகரின் உருவம் உள்ளது. இறுதியாக முகேஷ் அம்பானி-நீத்தா அம்பானி தம்பதியின் அழைப்பும் உள்ளது. இதற்கு நெட்டிசன்கள் கலவையான விமர்சனத்தை முன் வைத்து வருகின்றனர்...

Benefits & Uses Of Almonds / பாதாம் பருப்பின் உபயோகங்கள் & நன்மைகள்...


https://youtu.be/6APDmaL-vqU

Subscribe the channel for more tips...