26/02/2019

பாமக அன்புமணி ராமதாஸ் கேட்ட 6 கேள்வி நேரலையில் அவமான பட்ட அந்த கட்சி செய்தியாளர்...


மருத்துவர் அன்புமணி ராமதாஸ் இன்று செய்தியாளர்களை சந்தித்து தாங்கள் ஏன் கூட்டணி வைத்தோம் என்ற விளக்கத்தையும் அதற்கான காரணிகளையும் எடுத்து சொல்லிவந்தார்.

தமிழக மக்களின் நலன் குறித்தே கூட்டணி அமைத்ததாவும் எங்கள் கொள்கைகளில் எள்ளளவும் மாற்றம் இல்லை என்று விளக்கி விட்டு செய்தியாளர்களை கேள்விகள் கேட்க அறிவுறுத்தினார்.

அப்போது செய்தியாளர்களில் ஒருவர் நான் உங்கள் போட்டி ஊடகம் சன் நியூஸ் என்றும் நான் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்லுங்கள் என்று மிகவும் வீம்பாக பேசினார்.

கூட்டணி வைக்கவில்லை என்று சொன்ன நீங்கள் கூட்டணி வைக்கிறீர்களே இது உங்கள் கொள்கைக்கு ஏற்புடையதா என்றும் நீங்கள் கூட்டணி வைத்தது தமிழர் நலனுக்கா இல்லை உங்கள் நலனுக்காக என்பதுபோல் கேட்டார்.

இதற்கு சற்று கோபம் அடைந்த அன்புமணி நிதானமாக தனது பதிலை எடுத்து சொன்னார் அதில்...

1) திமுக என்ற கட்சியே முதலில் காங்கிரஸ் கட்சியை எதிர்த்து ஆரம்பித்ததுதான் தற்போது இவர்கள் எந்த அடிப்படையில் கூட்டு சேருகிறார்கள்?

2 ) கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சிகளும் காங்கிரஸ் கட்சியும் எதிர் எதிராக அடித்துக்கொண்டு நிற்கிறார்கள் இவர்கள் திமுக கூட்டணியில் ஒன்றாக இருப்பது எப்படி சாத்தியம் என்று கேட்டார்

3) கடந்த சட்டமன்ற தேர்தலின் போது திருமாவளவன் திமுக குறித்து ஊழல் கட்சியென்றும் இனி திமுக அதிமுக இரண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று சொன்னார் இப்போது என்ன ஆனது

4) எல்லாவற்றிற்கும் மேலாக திமுகவின் தற்போதைய தலைவர் ஸ்டாலின் இலங்கை தமிழர் பிரச்னையில் துரோகம் செய்த காங்கிரஸ் கட்சியினர் உடன் இனி கூட்டணி இல்லை என்று 2013 இல் சொன்னார் இப்போது எந்த அடிப்படையில் காங்கிரஸ் கட்சியிடம் துண்டை போட்டு காத்திருக்கிறார்.

5 ) இந்திரா காந்தி அம்மையார் தமிழகம் வந்த போது அவர்கள் மீது கல்லெறிந்து ரத்தம் வருகையில் மாதவிடாயா என்று கொச்சை படுத்திய திமுகவிடம் எப்படி காங்கிரஸ் கூட்டு சேர்ந்தது.

6 ) வைகோ பேசிய பேச்சிற்கு இன்று ஸ்டாலின் கூட்டணியில் சேர்க்கலாமா எதன் அடிப்படையில் இப்படி ஒரு கூட்டணி அமைந்தது?

இதற்கு விளக்கம் தாருங்கள் என்று கேட்க வாயடைத்து போய்விட்டார் அந்த கேள்வியை கேட்ட செய்தியாளர் மேலும் உங்களது நோக்கம் எங்களது கூட்டணிகுள் குழப்பம் விளைவித்து எப்படியாவது மீன் பிடிக்கலாம் என்று தானே இப்படி ஒரு கேள்வியை கேட்கிறீர்கள் என்னிடம் கேட்கும் இதே கேள்வியை நீங்கள் நான் சொன்ன அனைவரிடமும் ஒரு நாள் கேளுங்கள்.

ஸ்டாலினை பார்த்து உங்களது கூட்டணியில் உள்ள வைகோ மிக கேவலமாக தரம் தாழ்ந்த வார்த்தைகளால் விமர்ச்சித்தாரே எப்படி இணைந்தீர்கள் என்று தமிழகத்தை சேர்ந்த ஒரு ஊடகமாவது கேள்வி கேளுங்கள் என்று வெளுத்து வாங்கி விட்டார் மொத்தத்தில் அன்புமணியின் இன்றைய பேச்சு திமுகவிற்கும் அதன் பினாமி ஊடகங்களுக்கும் கொடுத்த சவுக்கடியாகத்தான் பார்க்கப்படுகிறது...

20 நாடாளுமன்ற தொகுதி , 12 சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டி - கிருஷ்னசாமி...


விசிக & மதிமுக வை நினைத்தால் தான் சிரிப்பு சிரிப்பா வருது...

எப்பவுமே அடுத்தவன் காலில் விழுந்து 1 சீட்.. 2 சீட்டுக்காக அடிமை வேலை செய்கிறது...

தெலுங்கர் வைகோ நாயுடுவின் திட்டம்...


தெலுங்கர்கள் கூட்டணிக்கு வந்துடு... தமிழர்கள் கூட்டணி வென்று விட்டால்..

பிறகு நாம் தமிழர்களை ஏமாற்றி பொழக்க முடியாது... என்று எடுத்துறைக்க...

தேமுதிக தெலுங்கர் விஜயகாந்தை... மதிமுக தெலுங்கர் சந்தித்து... திமுக தெலுங்கர் ஸ்டாலினுடன் கூட்டணிக்கு அழைக்க உள்ளார்...

அஇஅதிமுகவுடன் ஏன் கூட்டணி வைத்தோம்?: சென்னை தி.நகரில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி விளக்கம்...


கட்சியின் அடிமட்ட தொண்டன் முதல் நிர்வாகி வரையில் கலந்து பேசி எடுத்த முடிவு...

தமிழகத்தின் முக்கிய பிரச்சனைகளை தீர்க்கப்படும் என்ற கோரிக்கையை ஏற்றதால் இந்த கூட்டணி..

விவசாயி, கல்வி கடன் தள்ளுபடி செய்யப்படும் என உறுதியளித்ததால் கூட்டணி...

7 பேரை உடனடியாக விடுதலை  செய்ய வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு..

தமிழகத்திற்கு நீட் தேர்வு விலக்கு பெற்றுத்தர வேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு..

தமிழகத்தில் புதிய நீர்பாசன திட்டங்களை உடனடியாக செயல்படுத்த வேண்டும்..

மணல் குவாரிகளை மூடவேண்டும் என்ற கோரிக்கை ஏற்பு..

தமிழகத்தில் பூரண மதுவிலக்கு கோரிக்கை ஏற்பு..

7 வது ஊதிய உயர்வு அமல்படுத்துதல்..

உள்ளிட்ட கோரிக்கைகள் தமிழக மக்களுக்கு பயனளிக்கும் வகையிலும் தேர்தலில் வெற்றி பெறவும் இந்த கூட்டணி முடிவை கட்சியின் நிறுவனர் ராமதாஸ் எடுத்துள்ளார் என அன்புமணி ராமதாஸ் விளக்கம்...

அடைந்தால் திராவிட நாடு இல்லையேல் சுடுகாடு எனக்கூறிய திமுகவினர் எத்தனை பேர் இதற்க்கு சுடுகாட்டிற்கு சென்றனர்? - அன்புமணி கேள்வி...


திமுக : தம்பி உங்க கேள்வி என்ன செருப்பால அடிச்ச மாதிரி இருந்துச்சு...

பாமக : அடிச்ச மாதிரி இல்ல டா செருப்பால தான் அடிச்சேன்...

ஆசிரியரிடம் கூறி விடுவேன் என மிரட்டி பலாத்காரம்.. சின்மயி வெளியிட்ட அடுத்த உண்மை...


பாடகி சின்மயி பிரபல பாடலாசிரியர் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டை சில மாதங்களுக்கு முன் கூறியிருந்தார். இதற்கு பல தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் வந்தாலும் அவரது கணவரும் குடும்பமும் பக்க பலமாக இருந்து வருகின்றனர்.

இதனால் அவர் தனக்கு நேர்ந்த பாலியல் கொடுமைகளை மட்டுமல்லால் வெளியில் நடப்பதையும் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில், வாலிபர் ஒருவர், அவருடைய பள்ளி பருவத்தில் தன்னுடன் படித்த நண்பன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட விவரத்தை கூறி ஆண் குழந்தைகளுக்கும் பாலியல் தொல்லைகள் நடக்கிறது என கூறியுள்ளார்.

அந்த வாலிபர் குறித்து சின்மயி கூறுகையில், விளையாட்டாக ஆசிரியரை கிண்டல் செய்தவரை மிரட்டி தனக்காக பயன்படுத்தியுள்ளார் அவரது நண்பர். மற்ற விஷயத்திற்காக தொடங்கி கடைசியில் பாலியல் ரீதியில் வந்து முடிந்துள்ளது அந்த மிரட்டல். ஒருநாள் அந்த வாலிபரை அவரது நண்பர் தனது வீட்டிற்கு அழைத்து கற்பழித்துள்ளார்.

இதனை அந்த நபர் தனது தந்தையிடம் கூற அவர் அந்த நண்பனை ஓங்கி கன்னத்தில் அறைந்துள்ளார்...

மக்கள் நலன் கூட்டணி கலாட்டா...


உங்கள் பிள்ளைகளின் இன்றைய நிலைமை...


நீங்கள் அவர்களை பெற்றதால், வாழ்நாள் முழுவதும் அவர்கள் உங்கள் பேச்சை கேட்க வேண்டுமென்பது உங்களின் கருத்து என்றால், இந்த சமூகத்தில் உங்களை தாய்-தந்தை என்ற அங்கீகாரம் கொடுத்தவர்கள் அந்த குழந்தைகள் மட்டுமே..

ஆனால் அந்த குழந்தைகள உங்களிடம் எப்போதும் அவர்கள் சொல்படி இருக்க வேண்டுமென்று எப்போதும் கூறியதில்லை..

இங்கு எல்லாருக்கும் ஒரு அழகான வாழ்க்கை உண்டு.. அது நல்லதோ..? கெட்டதோ..? காலம் முடிவு செய்யும்..

நீங்கள் உங்கள் வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு செல்லுங்கள்...

கார்ப்பரேட்வாதிகளின் தேர்தல் நாடகம் தொடங்கியது..


தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மீகம்...


இயல், இசை, நாடகம் ஆகியவற்றை உள்ளடக்கியது தமிழ் மொழி. பண்டைய காலத்தில் மூன்று துறைகளுடன் ஆன்மிகமும் கலந்து தமிழ் மொழி வளர்க்கப்பட்டது. இலக்கியம், நாடகம் மூலமாக தமிழ் மொழி வளர்க்கப்பட்டாலும், பெரிய அளவில் ஆன்மிகம் தான், தமிழ் மொழி வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றி வருகிறது.

குறிப்பாக அப்பர், சம்பந்தர், சுந்தரர் பாடிய தேவராம், மாணிக்கவாசகர் பாடிய திருவாசகம், சேக்கிழார் எழுதிய பெரியபுராணம் போன்ற பன்னிரு திருமுறைகள், மற்றும் கம்பராமாயணம், திருவிளையாடல் புராணம், ஆகிய சைவ சமயத்தின் மூலமாக தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது.

அதே போல் பொய்கை ஆழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார், திருமழிசை ஆழ்வார், தொண்டரடிப்பொடி ஆழ்வார், திருப்பாணாழ்வார், பெரியாழ்வார், ஆண்டாள், நம்மாழ்வார், மதுரகவி ஆழ்வார், குலசேகர ஆழ்வார், திருமங்கை ஆழ்வார் ஆகிய 12 ஆழ்வார்கள் பாடிய நாலாயிர திவ்ய பிரபந்தம் ஆகிய வைணவ சமயத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சி அடைந்துள்ளது.

இவ்வாறு ஆன்மீகமும் தமிழ் மொழியும் பிரிக்க முடியாதவகையில் பின்னிப்பிணைந்திருக்கிறது. தமிழ் மொழி வளர்ச்சியில் ஆன்மிகத்தின் பங்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இன்றும் என்றும் இருந்து வருவது மறுக்க முடியாத உண்மையாகும்.

ஆன்மிகத்தின் மூலம் தமிழ் மொழி வளர்ச்சிக்காக பாடுபட்டவர்கள்:

பதினென் சித்தர்கள்...

அகத்தியர்,போகர், கோரக்கர், மச்சமுனி, சட்டைமுனி, திருமூலர், நந்தி, கொங்கணர், ராமதேவர், பதஞ்சலி, குதம்பை முனிவர், கரூவூரார், தன்வந்திரி, வாசமுனி, இடைக்காடர், கமலமுனி, சுந்தரானந்தர், பாம்பாட்டி சித்தர்.

மன்னர்கள்...

சேரன் செங்குட்டுவன், கரிகால் சோழன், ராஜசோழன், உக்கிர பாண்டின், அதிவீரராம பாண்டியன்.

புலவர்கள்...

நக்கீரர், அவ்வையார், காரைக்கால் அம்மையார், பாணபத்திரர், சீத்தலை சாத்தனார், கம்பர், பாரதியார், திரிகூட ராசப்பக்கவிராயர், இரட்டைப்புலவர்களான இளஞ்சூரியர், முதுசூரியர், இளங்கோவடிகள், திரு.வி.க.,

ஆன்மிக வாதிகள்...

பாம்பன் சுவாமிகள், முத்துக்குமார சுவாமிகள், குமரகுருபரர், சங்கரதாஸ் சுவாமிகள், வள்ளலார், கிருபானந்த வாரியார். இன்னும் நிறைய ஆன்மிக பெரியோர்கள் உள்ளனர்...