31/03/2019

மூட்டு வலிக்கு நாட்டு மருந்து...


மூட்டு வலி வரக் காரணம் மூட்டு தேய்மானமே. இந்தப் பிரச்சினை இல்லாத இடமே உலகத்தில் இல்லை. அப்படிப்பட்ட மூட்டு வலி வரக் காரணம் நாம் காலைக்கடன் கழிக்கும் முறையே என்கிறது மருத்துவம். அதனால் தான் நம் நாட்டில் கால் முட்டியிலும் வெளிநாட்டவருக்கு இடுப்பு மூட்டிலும் இந்த மூட்டு தேய்மானம் வருகிறது.

மூட்டுத் தேய்மானம் மூட்டழற்சி, முடக்குவாதம் என இரண்டு வகைப்படும்.

மூட்டழற்சி: இது பெரும்பாலும் வயதானவர்களுக்கே வரும் இது பொதுவாக இடுப்பு மூட்டு, கால் மூட்டு, தோள்பட்டை, கழுத்து போன்ற பகுதிகளில் ஏற்படும்.

முடக்குவாதம்: இது எந்த வயதினருக்கும் வரலாம். பெரும்பாலும் விரல்கள், மணிக்கட்டு, கால் போன்ற பகுதிகளையே தாக்கும்.

மூட்டழற்சியின் அறிகுறிகள்: நாள்பட்ட வலி, மூட்டு இறுக்கம், நடந்த பிறகோ வேலை செய்த பிறகோ வலி அதிகமாகும்.

முடக்குவாதத்தின் அறிகுறிகள்: இது ஆரம்பத்தில் தெரியாது நாள்பட்ட வலி மற்றும் பலமூட்டுகளில் வலி போன்றவை ஏற்படும். மொத்த உடம்பும் பாதிக்கப்பட்டிருக்கும். மேலும் இரத்தசோகை, குடல் அழற்சி, மலச்சிக்கல், தோற்றம் மாறிய கை மற்றும் பாதம் போன்றவை காணப்படும்.

காரணம்: முக்கிய காரணம் அதிக பளு தூக்குதலால் மூட்டின் உள் பகுதியில் ஏற்படும் மாற்றம். முடக்குவாதம் சில கிருமிகளினாலும், ஹார்மோன் எனப்படும் நாளமில்லா சுரப்பிகளின் ஒழுங்கற்ற பணியாலும் ஏற்படுகிறது. மேலும் மன அழுத்தம், சீரற்ற மனநிலை, நோய்த்தொற்று, அடிபடுதல் போன்றவையும் காரணமாகும். பரம்பரை ரீதியாகவும் மூட்டுத்தேய்மானம் ஏற்படலாம்.

கைவைத்தியம்...

1. நல்ல நடுத்தரமான உருளைக்கிழங்கு ஒன்றை மெல்லிய வில்லைகளாக வெட்டி ஒரு கோப்பை குளிர்ந்த நீரில் இரவு முழுதும் ஊறவைத்து பின் காலையில் அந்த நீரை வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். புதிதான உருளைகிழங்கு சாறையும் அருந்தலாம். இது மூட்டு வலிக்கு மிகச்சிறந்த மருந்தாகும்.

2. ஒரு தேக்கரண்டி கறுப்பு எள்ளை கால் கோப்பை தண்ணீரில் இரவு முழுதும் ஊறவைத்து பிறகு காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும்.

3. இரண்டு தேக்கரண்டி எலுமிச்சை சாற்றை ஒரு தேக்கரண்டி தேனுடன் ஒரு கோப்பை வெதுவெதுப்பான நீரில் பிழிந்து தினம் இருமுறை வெறும் வயிற்றில் சாப்பிடலாம்.

4. வெதுவெதுப்பான தேங்காய் அல்லது கடுகு எண்ணெயில் சிறிது கற்பூரத்தை போட்டு நன்கு மூட்டில் தேய்த்தால் வலி குறையும். இது மூட்டுவலிக்கு உடனடி தீர்வாகும்.

5. ஒரு தேக்கரண்டி குதிரைமசால்(இது ஒரு கால் நடை தீவனம்) விதைகளை ஒரு கோப்பை நீரில் கொதிக்க வைத்து தேநீர் போல ஒரு நாளைக்கு மூன்று-நான்கு முறை அருந்தலாம்.

6. இரண்டு டேபிள்ஸ்பூன் விளக்கெண்ணையை அடுப்பில் சூடேற்றி ஒரு கப் ஆரஞ்சு சாற்றில் விட்டு காலையில் உணவிற்கு முன் சாப்பிட வேண்டும். இதை நோய் தீரும் வரை செய்ய வேண்டும். மூன்று வாரங்கள் தொடர்ந்து செய்ய வேண்டும். பிறகு மூன்று வாரங்கள் விட்டு விட வேண்டும். மீண்டும் மூன்று வாரங்கள் செய்ய வேண்டும். இந்த மருந்தை சாப்பிடும் போது நாம் காரமான உணவு வகைகளை அதிகம் எடுத்துக் கொண்டு புளிப்பான உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் மருந்து பலன் தராது.

7. ஒரு டேபிள்ஸ்பூன் பச்சை அல்லது பாசிப்பருப்பை இரண்டு பூண்டு பற்களுடன் வேகவைத்து சூப்பாக நாளொன்றுக்கு இருமுறை சாப்பிட வேண்டும்...

நாடாளுமன்றம் தேர்தல்.. தமிழகத்தின் புதிய கருத்து கணிப்பு... திமுக கூட்டணி அதிர்ச்சி...


https://youtu.be/TGe5929STw4

Subscribe The Channel For More News...

கள்ளக்காதலனுடன் தகராறு, தீக்குளித்து இறந்த பெண்...


நாகை மாவட்டம், கொள்ளிடம் அருகே கொடியம்பாளையம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த கோதண்டபாணி மகள் சங்கீதா (வயது 40). இவர் கணவனை விவாகரத்து செய்து விட்டு தனியாக வசித்து வந்தார். இந்தநிலையில் கொள்ளிடம் அருகே சாமியம் கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த சங்கர் (36) என்பவருக்கும், சங்கீதாவுக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சங்கருக்கு திருமணமானது. அதன்பின்னரும் சங்கர், சங்கீதா ஆகிய 2 பேருக்கும் தொடர்பு இருந்து கொண்டே இருந்தது.

இந்தநிலையில் நேற்று முன்தினம் சங்கீதா வீட்டிற்கு சங்கர் சென்றார். அப்போது 2 பேருக்கும் திடீரென தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் மனமுடைந்த சங்கீதா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை தனது உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். இதில் பலத்த தீக்காயம் அடைந்த சங்கீதாவின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். ஆனால் அதற்குள் உடல்கருகி சம்பவ இடத்திலேயே சங்கீதா பரிதாபமாக இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த புதுப்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சங்கீதா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சீர்காழி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், சம்பவம் தொடர்பாக போலீசார் தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து சங்கரை கைது செய்தனர்...

டிடிவி தினகரன் எச்சரிக்கை.. தேர்தலுக்கு பிறகு திமுக பாஜகவுடன் இணைந்து விடும்...


https://youtu.be/GnORhqfZeIU

Subscribe The Channel For More News...

தேமலா கவலை வேண்டாம்.. எளிய வீட்டு வைத்தியம் இருக்கு...


1.கீழாநெல்லி இலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை பாலில் அரைத்து, முகத்தில் தேமல், கரும்புள்ளி உள்ள பகுதிகளில் பூசி முப்பது நிமிடங்கள் கழித்துக் குளித்து வந்தால் தேமல், கரும்புள்ளி ஆகியவைகள் குறையும்.

2.கமலா ஆரஞ்சு தோலை பொடி செய்து தினமும் தேயத்து குளித்து வந்தால் தேமல் குறையும்.

3.மலைவேம்பு இலைகளை அரைத்து அதன் சாறை தேமல் மீது பூசி வந்தால் தேமல் மற்றும் அரிப்பு குறையும்.

4.வெள்ளைப் பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய அரைத்துத் தினமும் தோலில் தேய்த்துக் குளித்துவர தேமல் குறையும்.

5.கருஞ்சீரகத்தை வறுத்து பொடி செய்து நல்லெண்ணெயில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் குளித்து வர தேமல் குறையும்.

6.முள்ளங்கிச் சாறு, எலுமிச்சைச் சாறு, தக்காளிச் சாறு மூன்றையும் கலந்து தேமல் உள்ள இடத்தில் தினமும் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வர தேமல் குறையும்.

7.சந்தனத்தை எலுமிச்சைச் சாற்றில் கலந்து தேமல் உள்ள இடத்தில் தடவி வர தேமல் குறையும்.

8.நாயுருவி இலை சாறை தேமல் உள்ள இடத்தில் தினமும் தட‌வி வ‌ர‌ தேமல் குறையும்.

9.ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்தி பொடி செய்து தினமும் தேய்த்து குளித்து வர தேமல் குறையும்...

செயற்கைக்கு மாற்று இயற்கை மட்டுமே...



இன்றைய ரீஃபைனுடு ஆயில் உணவு பழக்கத்தில் சிக்கி நோயுடன் வாழ்ந்து வந்தது போதும்...

தற்சார்பு உணவு சங்கிலிக்கு மாறுங்கள்...

தலை குளிர்ச்சி...


காய்ந்த மஞ்சள் சாமந்தி பூவை எடுக்கவும்.

3 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய் எடுக்கவும்.

மஞ்சள் சாமந்தி பூவை தேங்காய் எண்ணெயுடன் சேர்க்கவும்.

பின்பு அதை வடிகட்டவும்..

வடிக்கட்டின சாரை. 3 நாட்களுக்கு பிறகு தலையில் தடவி வந்தால் மூளை மற்றும் தலை குளிர்ச்சி பெறும்.

மூக்கடைப்பு தீர...

சிறிதளவு கடுக்காய் பொடி மற்றும் நெல்லிக்காய் பொடியை தினமும் காலை ஒரு வேளை தேனுடன் கலந்து சாப்பிடவும்...

பாஜக மோடியும் ஊழல்களும்...


ரஃபேல் வியாபம், சவப்பெட்டி ஊழல்களை தொடர்ந்து அடுத்த ஒரு ஊழல்...

இவனுங்கள ஊழல்இல்லாத கட்சினு பக்தாள் முட்டுக்கொடுத்துட்டு இருக்கானுங்க...

7 புள்ளி, 7 வரிசை கோலம் போடுவது எப்படி.? வீடியோ பாருங்க...


https://youtu.be/IntONJEiMJ0

Please Subscribe The Channel...

தென் கேரளாவில் தமிழர் பகுதிகள்...


ஆங்கிலேய ஆட்சியின் கீழிருந்த திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் மார்ஷல் நேசமணி கேட்டபகுதிகள் சிவப்பாக குறிக்கப்பட்டுள்ளன.

நெடுமங்காடு 60% தமிழர்கள் வாழ்ந்த பகுதி இதை புள்ளிவிபரங்களில் குறிப்பிட்ட நேசமணி பெரும்பான்மையாக இருந்தாலும் அதனை விட்டுக்கொடுத்தார்.

இதில் தற்போதைய கன்னியாகுமரி வட்டங்கள் மற்றும் திருநெல்வேலிக்கு உள்ளேயும் ஒட்டியும் இருந்த பகுதிகள் மட்டுமே கிடைத்தன.

முல்லைப் பெரியாறு அமைந்துள்ள இடுக்கி மாவட்டம்.

திருவனந்தபுரம் அமைந்துள்ள நெய்யாற்றின்கரை ஆகியன கிடைக்கவில்லை.

30 தமிழர்களுக்கும் மேல் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

3000 பேர் திருநெல்வேலிக்கு அகதிகளாக விரட்டப்பட்டனர்.

1948 முதல் 1956 வரை நேசமணி தலைமையில் நடந்த தீவிரமான அறப்போராட்டங்கள் மற்றும் அவரது தளபதி அப்துல் ரசாக் தமிழகத்து மக்களின் பேராதரவுடன் இராஜாஜி ஜீவானந்தம் ஆகியோரின் ஒத்துழைப்புடன்  விளைவாக எடுத்த முயற்சிகள் விளைவாக நியாயமாக கிடைக்க வேண்டிய நிலத்தில் பாதி பகுதிகளாவது தமிழகத்திற்கு கிடைத்தது...