05/04/2019
தேவரடியாரும் தேவதாசிகளும் சில கல்வெட்டுச் சான்றுகள் - ம.செந்தமிழன்...
இக்கட்டுரையில் திராவிடர் எனக் குறிப்பிடப்படுவோர், கர்நாடக, ஆந்திரப் பகுதிகளிலிருந்து தமிழகத்தின் மீது படையெடுத்த களப்பிர, பல்லவர்களை மட்டுமே. பிற்காலத்தில் தமிழகத்தை அடிமைப்படுத்தி ஆண்ட, விஜயநகர, நாயக்க மன்னர் குலங்களையும் ‘திராவிடர்’ எனும் சொல் குறிக்கிறது.
தமிழகத்தில் அக்கால திராவிட குலத்தவர் படையெடுப்பு நடத்தியபோது, பல்வேறு காரணங்களுக்காகக் ஆந்திர, கன்னடப் பகுதிகளில் இருந்து குடியமர்த்தப்பட்ட பொதுமக்களை இன்றைக்கும் திராவிடர்(வடுகர்) என வகைப்பிரிப்பது தவறு.
எந்தச் சமூகத்திலும் படையெடுப்பு நிகழும்போது இவ்வாறான குடியேற்றங்களும், இனக்கலப்பும் ஏற்படத்தான் செய்யும். ஆக, இக்கட்டுரை, ‘திராவிடர்; எனக் குறிப்பிடுவது, வரலாற்று நோக்கில், அவ்வரலாறு நிகழ்ந்த காலத்தைய அயல் குலத்தவரைத்தானே அன்றி, நிகழ்காலத்தவரை அல்ல.
தேவரடியாரும் தேவதாசிகளும்...
தேவரடியார், தேவதாசி ஆகிய சொற்களுக்கு இடையே, தமிழர் – திராவிடர்(வடுகர்) ஆகிய இனங்களுக்கு இடையிலான பண்பாட்டு வேறுபாடு உள்ளது. தேவரடியார் என்போர் தமிழரின் மதிப்பு மிக்க பெண்டிர். தேவதாசிகள் என்போர், திராவிடரின் பொதுமகளிர்.
இதற்கும் கல்வெட்டுச் சான்றுகளைக் காணலாம்.
’தேவதாசி என்ற சொல்லை முதன்முதலில் குறிப்பிடும் கல்வெட்டு கருநாடகத்தில் உள்ள அலனஹள்ளியில் காணப்படுகிறது. (கி.பி1113)’.
(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 16, 17).
தேவரடியார் எனப்பட்டோர், கோயில்களில் ஆடல், பாடல், பூசை, பராமரிப்பு மேற்கொள்வதற்காகத் தாமே முன்வந்த பெண்கள் ஆவர். இவர்களில் அரசர்குலப் பெண்களும் உண்டு. கோயில்களில் பெண்களுக்கு வழங்கப்பட்ட உயரிய அங்கீகாரமே தேவரடியார் முறை ஆகும். இவர்கள் பாலியல் பதுமைகள் அல்லர்.
சோழர்காலத்தில் தேவரடியாரின் கலைகள் போற்றி வளர்க்கப்பட்டன. பெருவுடையார் கோயிலின் உள்ளே மாடித் தளத்தில் அவர்களுக்கென இடம் ஒதுக்கப்பட்டது. கோயிலைச் சுற்றி இருந்த பெரு வீதியில் அவர்களுக்குத் தனி வீடுகள் வழங்கப்பட்டன. இந்தத் தேவரடியார்களில் அரச குலத்தவரும் இருந்தனர் என்பதைப் பல தேவரடியாரின் பெயர்களே பறைசாற்றுகின்றன.
சோழகுலசுந்தரி, இரவிகுல மாணிக்கம், வீரசோழி, சோழசூளாமணி, ராஜசூளாமணி, குந்தவை, சோழமாதேவி, சோழதேவி, வானவன்மாதேவி – ஆகியன சில சான்றுகள். பிற குலப் பெண்களுக்குச் சோழர் குலப் பட்டங்களும் வழங்கப்பட்டன. அந்தளவு சமூகத்தில் உயர் மரியாதையுடன் நடத்தப்பட்டவர்கள் தேவரடியார்கள்.
தேவதாசிகளோ, கோயிலுக்கு ‘நேர்ந்துவிடப்பட்ட பெண்கள்’ ஆவர். இவர்கள் கோயிலின் பேரால் விபசாரத்தில் ஈடுபடுத்தப்பட்டவர்கள். ’தாசி’ எனும் சொல், ’அடிமை’ என்ற பொருள் கொண்டது. ‘அடியார்’ என்பதோ, ’ஒரு கோட்பாட்டுக்குத் தம்மை ஒப்படைத்துக் கொண்டவர்’ என்ற பொருள் கொண்டது. சிவன் அடியார் என்றால், சிவனியத்துக்குத் தம்மை ஒப்படைத்தவர் என்றாகும். தாசி, தாசன் ஆகிய சொற்கள் தமிழர் மரபில் இல்லை. அவை திராவிடருடைய இழிந்த பண்பாட்டின் அடையாளங்கள். அதனால்தான், தேவதாசி என்ற சொல்லைக் கொண்ட முதல் கல்வெட்டு, கர்நாடகத்தில் உள்ளது.
தமிழகக் கோயில்களில் பெண்கள் தேவரடியார் என்றே மரியாதையுடன் அழைக்கப்பட்டனர்.
குந்தவை என்பது இராசராச சோழனின் மூத்த சகோதரியின் பெயர். அவர் மீது கொண்ட அன்பின் வெளிப்பாடாக, தம் மகளுக்கும் குந்தவை என்றே பெயரிட்டார் இராசராசன். பெருவுடையார் கோயிலில் இருந்த தேவரடியாரில் குந்தவை என்ற பெயருடைய தேவரடியாரும் இருந்ததைக் கவனித்தால், இராசராசன் காலத்தில், தேவரடியார் முறை எந்தளவு உயர் அதிகாரம் உடையதாக இருந்தது என்பதை உணரலாம்.
’தேவரடியார்கள் சிலர் திருமணம் செய்துகொண்டு குடும்பம் நடத்தி வந்தனர் என்பதற்கான கல்வெட்டுச் சான்றுகள் உள்ளன’என்கிறார் முனைவர் கே.கே.பிள்ளை (தமிழக வரலாறு மக்களும் பண்பாடும் / உலகத் தமிழாராய்ச்சிக் கழகம்/ 2000 /பக் 334).
பொட்டுக்கட்டும் முறையும் தேவரடியார் முறையும் ஒன்று எனச் சிலர் எழுதுகிறார்கள். இது முறையற்ற, முற்றிலும் தவறான பார்வை.
’கருநாடகத்தில், ஒரு பெண், அவள் வயதுக்கு வருவதற்கு முன்பாகத்தான் அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்ற வழக்கம் இருந்தது. ஆந்திரப் பிரதேசம் கிருக்ஷ்ணா மாவட்ட்த்தில் கண்ட கல்வெட்டு ஒன்று, நாகேஸ்வர சுவாமி கோயில் பணியில் எட்டு வயதே நிரம்பிய சிறுமிகள் இருந்த்தைக் குறிக்கிறது’.
(கர். கல் VAK 105).
(தேவதாசி மரபு/பி.எம்.சுந்தரம் / மருதம் 2002 / பக் 19).
இந்துத்துவவாதிகள், தேவதாசி முறையை தேவரடியார் முறையோடு இணைக்கின்றனர். வேண்டுமென்றே தமிழரை இழிவுசெய்வதற்காக அவர்கள் இவ்வாறு எழுதுகின்றனர். மேற்கண்ட நூலில்கூட, தேவதாசியரும் தேவரைடியாரும் ஒருவகையினரே என்று எழுதப்பட்டுள்ளது. அந்நூல் மிகத் தெளிவான இந்துத்துவப் பார்வையை வைக்கிறது. தேவலோக மங்கையர் என்று வேதங்கள் கூறும் ரம்பை,ஊர்வசி முதல் தேவதாசி மரபு உள்ளது என்கிறது அந்நூல்.
இவ்வாறெல்லாம் அவதூறு பரப்புவதன் வழி, தமிழ்க் கோயில்களில் தமிழ் மறை பாடிய பெண்களை இவர்கள் அவமதிக்கின்றனர்.
தேவதாசி, பொட்டுக் கட்டுதல் ஆகிய இரண்டும் வேறு வேறானவை. ஆயினும் இவ்விரண்டும் விபசாரம் மற்றும் பாலியல் வல்லுறவு ஆகியவற்றுடன் தொடர்புடையவை. தேவரடியார் முறை என்பது, அரசரால் நியமிக்கப்பட்ட கலை வளர்க்கும், கோயில் பராமரிக்கும் அதிகார முறை.
தமிழகத்தின் கல்வெட்டுகளில் பெண்களின் நிலைகுறித்து ஆய்ந்த லெஸ்லி சி. ஓர் எனும் பிரிட்டானிய பெண் ஆய்வாளர், தமது ஆய்வு முடிவுகளை நூலாக வெளியிட்டுள்ளார். (தமிழகக் கல்வெட்டுகளில் பெண்கள் / விடியல் / 2005) கி.பி.8 ஆம் நூற்றாண்டிலிருந்து 17 ஆம் நூற்றாண்டு வரையிலான கல்வெட்டுகளை ஆய்ந்துள்ளார் அவர்.
தேவரடியார் முறை பற்றி லெஸ்ஸி சி.ஓர் கூறும் முடிவைக் காணலாம்..
’கல்வெட்டுகளில் கோயிலுக்குச் சொந்தமானவராக விவரிக்கப்படும் பெண் கோயில் பெண் ஆவார். கடவுளுக்கு அர்ப்பணித்துக் கொண்டவர் என்ற அர்த்தத்தில் இப்பெண் தேவரடியாள் என்று அடிக்கடிக் குறிப்பிடப்படுகிறார்.....இவர்கள் நாட்டியக்காரிகள் என்பதைவிட, கொடைகளை வழங்கியவர்களாகவே இருந்திருக்கிறார்கள்’ (மேலது நூல் /பக் 22).
அதாவது, கோயிலுக்கே கொடைகள் வழங்கும் உயர்ந்த நிலையில் இருந்தோரே தேவரடியாரே தவிர, பொருளுக்காக விபசாரம் செய்தோர் அல்லர்.
பெண்களின் நிலை:
இராசராச சோழன், இராசேந்திர சோழன் ஆகியோரின் காலம் கி.பி 10 மற்றும் கி.பி 11 ஆம் நூற்றாண்டுகள் ஆகும். திராவிட விஜயநகர அரசுக் காலம் கி.பி.14 – 16 ஆம் நூற்றாண்டுகள். இந்த இரு காலகட்டங்களிலும் பெண்களின் நிலை எவ்வாறு இருந்தது எனக் காணலாம்.
கொடை அளிக்கும் பெண்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 145 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 69 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 2 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
சொந்தச் சொத்து உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 146 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 70 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 16 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 8 பெண்கள்
நிலம் உடையவர்கள்:
10 ஆம் நூற்றாண்டு – 46 பெண்கள்
11 ஆம் நூற்றாண்டு - 23 பெண்கள்
14 ஆம் நூற்றாண்டு – 4 பெண்கள்
15 ஆம் நூற்றாண்டு – 3 பெண்கள்
(மேலது நூல்)
மேற்கண்ட ஒப்பீட்டுப் பட்டியல் எதைக் காட்டுகிறது?
இராசராச சோழன், இராசேந்திர சோழன் காலத்தில் பெண்கள் நிலை மேம்பட்டிருந்த்து என்பதை அல்லவா! திராவிட விஜயநகர அரசர்கள் காலத்தில்தான் பெண்கள் மிகக் கடுமையாக ஒடுக்கப்பட்டார்கள் என்பதை விளக்க வேறு என்ன சான்று வேண்டும்?
லெஸ்லி.சி.ஓர் தனது நூலின் இறுதிப் பகுதியில் – அடிக்குறிப்புகளில் ஒன்றாக பின்வரும் முடிவை எழுதியுள்ளார்.
’கி.பி.985 – 1070 காலத்தில், குடந்தைச் சுற்றுவட்டப் பகுதிகளில் பரிமாற்றம் செய்யப்பட்ட மொத்த சொத்துகளில் 48% பெண்களால் செய்யப்பட்டன’ என்கிறார் அவர்.
கி.பி 985 ஆம் ஆண்டில்தான் இராசராசர் முடி சூடினார். அந்த ஆண்டிலிருந்தே பெண்களின் சொத்துடைமை உயர்ந்துள்ளது. பெண்களுக்குச் சொத்தில் பங்கு வேண்டும் என்று சட்டம் இயற்ற வேண்டிய காலத்தில் வாழும் நாம், ஆயிரம் ஆண்டுகளுக்கு முன், இராசராசச் சோழர் காலத்தில், ஏறத்தாழ சரிபாதிச் சொத்துரிமை பெண்களுக்கு இருந்தது குறித்துப் பெருமைப்பட வேண்டும்.
விஜய நகர – நாயக்கர் காலத்தில், தேவரடியார்கள் கோயில்களிலிருந்து துரத்தப்பட்டனர். அவர்கள் தேவதாசிகள் ஆக்கப்பட்டனர். இதற்காகவே, தெலுங்கு, கன்னடப் பெண்கள் தமிழகக் கோயில்களுக்கு வரவழைக்கப்பட்டனர். தேவரடியார் முறை ஒழிக்கப்பட்டு, தேவதாசி முறை தமிழகத்தில் புகுத்தப்பட்டது. கோயில்களில் தமிழ் வழிபாட்டு முறை ஒழிக்கப்பட்டு, சமக்கிருத மயமானது.
கோயில்களின் நிர்வாகம் முழுக்க பிராமணர்களிடம் ஒப்படைக்கப்பட்டது இத்திராவிடர் காலத்தில்தான். இன்று நாம் காணும் பிராமண ஆதிக்கத்தை கி.பி 250 முதல் உருவாக்கியவர்களும் களப்பிர, பல்லவ திராவிடர்களே, வளர்த்தெடுத்தவர்களும் விஜய நகர – நாயக்க திராவிடர்களே.
இடையில் மிகக் குறுகிய காலம் தமிழகத்தை ஆண்ட பிற்காலச் சோழர்கள் பிராமண ஆதிக்கத்தைக் கட்டுப்படுத்த முயன்றனர்.
இந்த வரலாற்றின் சிறு துளிக் காலமான 29 ஆண்டுகள் ஆட்சி செய்த இராசராசர், தன்னால் இயன்ற தமிழியப் பணிகளைச் செய்தார்...
உளுந்தங்கஞ்சி...
விளையாட்டு வீரர்கள். ஓயாமல் ஓடிக் கொண்டே இருக்கும் உழைப்பாளிகள் தினமும் இதனை எடுத்துக் கொள்ளலாம்.
முதுகு வலி, இடுப்புவலி இரண்டுமே இருக்காது.
மலையேற்றம் மேற்கொள்பவர்கள் இதனை உட்கொண்டால் உடல்சோர்வே இருக்காது.
பெண்களுக்கு கர்பப்பை மிகவும் வலுப்பெறும்.
உளுந்தங்கஞ்சி தேவையான பொருட்கள்...
1.உளுந்தம்பருப்பு ஒரு டம்ளர் (கருப்பு உளுந்து நல்லது).
2.பச்சரிசி அரை டம்ளர்.
3.வெந்தயம் ஒரு தேக்கரண்டி.
4.பூண்டு 20 பல்லு.
5.வெல்லம் அல்லது கருப்பட்டி இனிப்புக்கு ஏற்றது போல்.
6.தேங்காய் ஒரு மூடி.
செய்முறை...
உளுந்தம்பருப்பு, பச்சரிசி, வெந்தயம், உரித்த பூண்டு அனைத்தையும் போட்டு ஆறு டம்ளர் (பருப்பு அளந்த டம்ளரில்) தண்ணீர் ஊற்றி குக்கரில் வைத்து 8 விசில் வரும் வரை விட வேண்டும்.
(குக்கரின் உள்ளே பாத்திரம் வைத்து தான் வைக்க வேண்டும். அப்படியே வைத்தால் அடிப்பிடித்துவிட வாய்ப்பு அதிகம். மேலும் தண்ணீர் வெளியே வந்துவிடும்).
இது தயாராவதற்குள் வெல்லம் அல்லது கருப்பட்டியை சிறிதளவு தண்ணீர் ஊற்றி பாகு காய்ச்சி வைத்துக் கொள்ள வேண்டும். தேங்காய் அரைத்து பாலும் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
எட்டு விசில் வந்தவுடன் இறக்கி உள்ளே இருக்கும் பாத்திரத்தை வெளியே எடுத்து சூடாக இருக்கும் போதே நன்கு மசித்துவிட்டு வெல்லப்பாகு, தேங்காய்ப் பால் இரண்டையும் ஊற்றி சூடாக சாப்பிடவும். தேங்காய் துருவியும் போடலாம்.
(சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் வெல்லம் தேங்காய் இரண்டையும் தவிர்த்து விடலாம்,. செரிமானப் பிரச்சனை உள்ளவர்கள் தேங்காயை மட்டும் தவிர்த்து விடலாம்.)...
பெர்முடா முக்கோணம் போல பீதியை கிளப்பும் ஜப்பானில் பிசாசு கடல்...
பிசாசின் கடல்.. கேட்டாலே அதிர வைக்கும் பெயர். ஜப்பான் மக்களுக்கும் அப்படித்தான். உலக மேப்பில் இப்படியொரு கடல் உள்ளதா என்றால்.. இல்லை என்பது தான் உண்மை.
ஆனால் பசிபிக் கடலின் ஒரு பகுதியை தான் இப்படி அழைக்கிறார்கள். ஜப்பான்
கடற்கரை பகுதியில் உள்ள இந்த பிசாசின் கடலுக்கு இன்னொரு செல்லப் பெயரும் உண்டு. அது ‘டிராகன் டிரையாங்கிள்’. அதாவது டிராகன் முக்கோணம்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவுக்கு தெற்கே 100 கி.மீ. தொலைவில் உள்ளது மியாகே தீவு. இப் பகுதியில் இருக்கிறது பிசாசின் கடல்.
ஜப்பானிய மொழியில் ‘மா-நோ-உமி’ என்கிறார்கள். இதன் வழியாக சென்ற யாரும் உயிரோடு திரும்பியது இல்லையாம்.
இப்பகுதியை கடந்து சென்ற பல கப்பல்கள், படகுகள் மர்மமான முறையில் மாயமாகியிருக்கின்றன. அதில் சென்றவர்கள் என்ன ஆனார்கள் என்ற தகவலும் இல்லை.
இப்பகுதியில் திடீர் திடீரென தீவுகள் உருவாவதும், இருக்கும் தீவுகள் மறைவதும் பீதியை ஏற்படுத்துகிறது.
அட்லான்டிக் பெருங்கடலின் வடமேற்கு பகுதி மற்றும் கரீபியன் கடல் பகுதியில் உள்ள பிரபலமான மர்ம பகுதி ‘பெர்முடா டிரையாங்கிள்’. இந்த வழியாக சென்ற கப்பல்கள், இப்பகுதியை கடந்து சென்ற விமானங்கள் போன்றவை இப்பகுதியில் மர்மமான முறையில் மாயமானதாக கூறப்படுகிறது.
அமெரிக்காவின் புளோரிடா கடற்கரையை ஒட்டியுள்ள பெர்முடா முக்கோணத்துக்கு நேராக பூமிப் பந்தின் மறு புறத்தில்தான் ஜப்பானின் பிசாசு முக்கோண பகுதி இருப்பதால் மக்களை அதிகம் பீதிக்கு உள்ளாக்குகிறது ‘மா நோ-உமி’ முக்கோணம்.
பெர்முடா முக்கோணம் போல, மாநோஉமி வழியாக செல்லும் கப்பல்கள், விமானங்களும் அடிக்கடி மாயமாகி இருக்கின்றன.
1952 - 1954 காலகட்டத்தில் டிராகன் முக்கோண கடல் பகுதி வழியாக சென்ற ஜப்பானின் ராணுவ கப்பல்கள் நிலை என்னவானது என்பது இன்று வரை புரியாத புதிராகவே இருக்கிறது. அந்த கப்பல்களில் பயணித்த 700 பேரின் நிலை பற்றியும் தெரியவில்லை.
இதை பற்றி கண்டுபிடிக்க 31 விஞ்ஞானிகள் அடங்கிய குழு டிராகன் முக்கோணத்தின் முக்கிய பகுதிக்கு கப்பலில் சென்றுள்ளனர். அவர்களும் திரும்பி வரவில்லை.
அதற்கு பிறகு, ஜப்பான் அரசு சுதாரித்துக் கொண்டு அப்பகுதியை அபாயகரமான பகுதியாக அறிவித்தது என்கிறார்கள் டிராகன் முக்கோணம் பற்றி ஆராய்ச்சி செய்து வருபவர்கள்.
விஞ்ஞானிகளில் ஒரு தரப்பினர் வேறு மாதிரி சொல்கிறார்கள்.
ஜப்பானிலும் அதனை சுற்றியுள்ள
பகுதிகளிலும் எரிமலைகள் வெடிப்பது, நில அதிர்வு ஏற்படுவது அடிக்கடி நடப்பது தான்.
கடலுக்கு அடியில் இருக்கும் எரிமலைகள், நில அதிர்வுகள் காரணமாக கடலின் மேல் பகுதியில் திடீர் அலைகள் உருவாகின்றன. அதில் சிக்கும் கப்பல்கள் விபத்துக்குள்ளாகின்றன.
டிராகன் முக்கோண பகுதியில் சில தீவுகள் கூட திடீர் திடீரென மாயமாகின்றன. திடீரென புதிதாக தீவுகள் உருவாகின்றன.
இதற்கெல்லாம்கூட கடல் அடியில் ஏற்படும் நிலநடுக்கமும் எரிமலைகளும் தான் காரணம் என்கின்றனர். நெருப்பை கக்கும் டிராகன்கள் தான் இதற்கு காரணம் என்று நம்புபவர்களும் இருக்கிறார்கள். அவர்கள் ஜப்பானிய புராண கதைகளை உதாரணம் காட்டுகின்றனர்.
மியாகே தீவுப்பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஏராளமான டிராகன்கள் வாழ்ந்தன. அந்த இனம் அழிந்து விட்டாலும் அவற்றின் அமானுஷ்ய சக்தி இன்னமும் அப்பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கிறது. மியாகே தீவுப்பகுதியை தங்களது சாம்ராஜ்யமாக அவை கருதுகின்றன. தங்களது சாம்ராஜ்யத்துக்குள் வருபவர்களை டிராகன் சக்திகள் விடுவதில்லை. அந்த வழியாக வரும் கப்பல்கள், படகுகளை அழிக்கின்றன என்கின்றனர் அவர்கள்.
பெர்முடா முக்கோணம் போலவே.. இன்னமும் மர்மமாக இருக்கிறது பிசாசு கடல்...
சூரியனில் என்ன நடக்கிறது ?
மொத்த சூரிய குடும்பத்தின் நிறையில் 98.8 சதம் நிறை சூரியனின் நிறை தான்.
இந்த அபரிமிதமான நிறை காரணமாக ஏற்படும் ஈர்ப்பின் விளைவாக சூரியனுக்குள் இருக்கும் ஹைட்ரஜன் ஹீலியம் அணுக்கள் ஒன்றை ஒன்று இனைந்து புது புது கனமான தனிமங்களை உண்டாக்கி கொண்டு அணு கரு இணைவு காரணமாக ஏற்படும் பெரும் வெப்பத்தை வெளியிடுகின்றன.
சூரியன் ஒரு மெகா சைஸ் ஹைட்ரஜன் பாம்...
எதிர்மறை எண்ணங்களை களைவது எப்படி?
எவ்வளவு உத்வேகமான ஆளாக இருந்தாலும், எதிர்மறை எண்ணங்கள் அவர்களை புரட்டிப்போட்டுவிடும். எதிர்மறை எண்ணங்கள் நம் மனதிற்குள் ஒரு பயத்தைக்கூட்டும் திரைப்படம் போல ஓடிக் கொண்டிருக்கும். அதை நிறுத்துவது மிகவும் கடினம் போல நமக்கு தோன்றும். அவை நமக்கு விரைவில் கொடுப்பது வலியும் வேதனையும்தான். இதை நான் பலமுறை அனுபவித்திருக்கிறேன்.
எதிர்மறை எண்ணங்கள் நம்மை இந்த நொடியில் ஒட்டாமல் செய்துவிடும். அவற்றை நாம் நிறுத்தாவிடில் அவை மிகவும் வலிமை கொண்டதாக மாறிவிடும். அதன் சக்தியை இப்படியும் சொல்லலாம்.. ஒரு மேடான பகுதியிலிருந்து உருண்டோடி வருகின்ற பந்து உருள உருள பெரிதாகிக் கொண்டே வருவதைப் போன்றது.
நேர்மறை எண்ணங்களுக்கும் அதேபோன்ற சக்தி உண்டு...
எதிர்மறை எண்ணங்கள் பொங்கி வழியும்போது அதைப்போக்க சில வழிகள்..
1. தியானம்...
தியானமோ யோகாவோ எதுவாக இருந்தாலும் சரி அது இறைநம்பிக்கை கொண்டதாகவோ அல்லது சாதரணமானதாகவோ இருக்கலாம். ஆனால் என்ன நடக்கும் என்ற பயத்தை போக்கி உங்கள் வாழ்வின் இந்த நிமிடத்தில் உங்களை வாழவைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
2. புன்னகை...
கடினமான நொடிகளில் சிரிப்பது மிகவும் கடினமாக தோன்றும். ஒரு கண்ணாடியின் முன்பு உங்களை நிறுத்திக்கொள்ளுங்கள். உங்கள் முகத்தை பாருங்கள். கொஞ்சம் கொஞ்சமாக புன்னகையை வரவழையுங்கள். முடிந்தால் ஏதாவது காமெடி சேனல் போட்டு பாருங்கள். சிறிது நேரத்தில் உங்கள் இறுக்கம் குறைந்து தசைநார்கள் இலகுவாகிவிடும். சிரிப்பைவிட சிறந்த மருந்து உலகில் ஏதும் இருக்க வாய்ப்பில்லை.
3. நண்பர்கள்...
முடிந்தவரை நேர்மறையாக பேசும் நண்பர்கள் சூழ இருங்கள். உங்களை அறியாமலே அவர்கள் உங்கள் கவனத்தை மாற்றுவார்கள்.
4. எண்ணங்களை நேர்மறைக்கு மாற்றுதல்...
சிரமங்களை பற்றியும் கஷ்டங்களை பற்றியும் நினைப்பதை கொஞ்சம் மாற்றி, சவால் இருந்தாலும் சமாளிக்கலாம் என்று நினைத்துப்பாருங்கள்.
5. குறைகூறாதீர்கள்...
உங்களைப் பற்றியோ மற்றவர்களை பற்றியோ குறைகூறுவதை முதலில் நிறுத்துங்கள். அது எந்தவிதத்திலும் உங்களுக்கு உதவப்போவதில்லை. அப்படியே ஏதேனும் தவறு நடந்திருந்தால் அதை சரிசெய்ய உங்கள் பங்கு என்ன என்பதை நினைத்துப்பாருங்கள். நல்லதே நடக்கும்.
6. உதவுங்கள்...
எதிர்மறை எண்ணங்களின் கவனத்தை திசைதிருப்ப இதைவிட சரியான வழி இருப்பதாய் தோன்றவில்லை அடுத்தவருக்கு ஏதாவது ஒரு உதவி (அது சிறியதோ அல்லது பெரியதோ) செய்யும்போது உங்கள் மனதில் தானாகவே நேர்மறை எண்ணங்கள் முளைவிட துவங்கும்.
7. எது நடந்ததோ அது நன்றாகவே நடந்தது...
தவறுகள் அற்ற மிகவும் சரியான மனிதன் யாரும் கிடையாது. நடந்தது நல்லதற்கே என்று நினைத்து சம்பவங்களை நேர்மறையாக எதிர்கொள்ளும்போது, அதற்கு நிச்சயம் பலன் கிடைக்கும்.
8. பாடுங்கள்...
உங்களுக்கு தெரிந்த ஏதாவது பாடலை முனுமுனுக்க துவங்குங்கள் அது உங்கள் மனதின் சுமையை குறைத்து லேசாக்கும்.
9. நன்றி கூறுங்கள்...
நன்றி கூறுவதைவிட சிறந்த நேர்மறை உணர்வு இருக்கமுடியாது. ஏற்கெனவே நீங்கள் பெற்றிருக்கும் அனைத்திற்கும் நன்றி கூறுங்கள். அது மேலும் நல்ல சம்பவங்களையும் இன்னும் அதிக நேர்மறை எண்ணங்களையும் உங்களிடம் இழுத்து வரும்.
10. நல்லதை படியுங்கள்...
தினமும் காலையில் செய்தித்தாள் படிப்பவரா நீங்கள்? முடிந்தவரை அதில் உள்ள எதிர்மறை செய்திகளை படிக்காதீர்கள். அது மேலும் எதிர்மறை எண்ணங்களை உங்களிடம் தூண்டிவிடும். தூண்டப்பட்ட எதிர்மறை எண்ணங்கள் உங்களிடம் அதேபோன்ற கெட்ட சம்பவங்களை உங்களிடம் இழுத்துவரும். ஏனென்றால் நீங்கள் அதில் உங்கள் கவனத்தை செலுத்தினீர்கள் அல்லவா..? முடிந்தவரை நல்ல செய்திகளையும் நல்ல வாசகங்களையும் படியுங்கள். அது எப்போதுமே உங்களுக்கு நல்லது.
உங்கள் எண்ணங்களை கவனியுங்கள், அது சொல்லாக மாறக்கூடும்.
உங்கள் சொற்களை கவனியுங்கள், அது செயலாக மாறக்கூடும்.
உங்கள் செயல்களை கவனியுங்கள், அது பழக்கமாக மாறக்கூடும்.
உங்கள் பழக்கங்களை கவனியுங்கள், அது குணமாக மாறக்கூடும்.
உங்கள் குணத்தை கவனியுங்கள், அது தலைவிதியை மாற்றக்கூடும்...
Subscribe to:
Posts (Atom)









