28/04/2019

புதிய 20 ரூபாய் நோட்டை வெளியிடுகிறது ரிசர்வ் வங்கி...


பச்சையும்; மஞ்சளும் கலந்த நிறத்தில் புதிய 20 ரூபாய் நோட்டை ரிசர்வ் வங்கி வெளியிட உள்ளது.

இது குறித்த அதன் அறிக்கையில் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை விவரிக்கும் வகையில் பின்புறத்தில் எல்லோரா குகைகளின் உருவத்துடன் கூடிய புதிய 20 ரூபாய் நோட்டுகள் வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது..

இந்த புதிய ரூபாய் தாள் மஞ்சள் பச்சை நிறங்களில் உருவாக்கப்படுகிறது. ஏற்கனவே புழக்கத்தில் உள்ள அனைத்து 20 ரூபாய் நோட்டுகளும் செல்லுபடியாகும் என்றும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது...

மக்களை கொன்று வனங்களை கொள்ளையடிக்க பாஜக மோடியின் சதிகள்...


நர்சுகள் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்தது- உறவினர்கள் போராட்டம்...


திருவள்ளூரை அடுத்த பிச்சிவாக்கத்தை சேர்ந்தவர் ராஜேஷ். தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் அருகே உள்ள ஓரத்தூர் கிராமத்தை சேர்ந்த சினேகாவுக்கும் (வயது19) கடந்த ஆண்டு திருமணம் நடந்தது.

இந்தநிலையில் சினேகா கர்ப்பம் அடைந்தார். நிறை மாத கர்ப்பிணியாக இருந்த அவர் பிரசவத்திற்காக பட்டரை பெருமந்தூரை அடுத்த ராமஞ்சேரியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்தார். அங்கிருந்து பட்டரை பெரும்மந்தூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனை செய்து சிகிச்சை பெற்று வந்தார்.

நேற்று இரவு 7 மணி அளவில் சினேகாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அவரை பட்டரை பெரும்மந்தூரில் உள்ள அரசு ஆரம்பசுகாதார நிலையத்தில் சேர்த்தனர். அப்போது அங்கு டாக்டர் பணியில் இல்லை. இதனால் நர்சுகளே சினேகாவுக்கு பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.

சிறிதுநேரத்தில் சினேகாவுக்கு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் குழந்தை எந்தவித அசைவும் இன்றி இருந்தது. இதேபோல் சினேகாவுக்கும் அதிக அளவில் ரத்தப்போக்கு ஏற்பட்டது.

இதனால் அதிர்ச்சி அடைந்த நர்சுகள் உடனடியாக சினேகாவையும், குழந்தையையும் 108 ஆம்புலன்சு மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு பரிசோதித்த டாக்டர்கள் குழந்தை ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் சினேகாவின் நிலைமை மிகவும் மோசமாக இருந்ததால் அவருக்கு கர்ப்பப் பையை அகற்ற வேண்டும் என்றும் கூறினர்.

இதுபற்றி அறிந்ததும் சினேகாவின் உறவினர்கள் ஏராளமானோர் அங்கு திரண்டனர். அவர்கள் நர்சுகள் பிரசவம் பார்த்ததால் தான் இந்தநிலை ஏற்பட்டதாக குற்றம்சாட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பெரும்பரபரப்பு ஏற்பட்டது.

சுகாதாரத்துறை இயக்குனர் கிருஷ்ணராஜ். டி.எஸ்.பி. கங்காதரன், இன்ஸ்பெக்டர் சவுந்தரராஜன் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மருத்துவ குழுவினர் சினேகாவின் கர்ப்பப்பையை அகற்றினர். எனினும் அவரது நிலைமை மோசமாக இருந்ததால் மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சினேகாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே குழந்தையின் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதனை பார்த்து அவர்கள் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது.

சினேகா பட்டரை பெருமந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட போது அங்கு பணியில் இருக்கவேண்டிய டாக்டர் வேப்பம்பட்டில் தனியாக நடத்தும் தனது கிளினிக்கில் இருந்ததாக கூறப்படுகிறது.

அவர் சரியாக பணியில் இருந்திருந்தால் குழந்தையின் உயிரை காப்பாற்றி இருக்கலாம். சினேகாவுக்கும் இந்தநிலை ஏற்பட்டு இருக்காது என்று பொது மக்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

இதுதொடர்பாக சுகாதார அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள். பட்டரை பெருமந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

நர்சுகள் பிரசவம் பார்த்ததில் குழந்தை இறந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது...

தமிழகத்தில் தேர்தலுக்கு பிறகு யார் ஆட்சி தெரியுமா.? வெளியான பரபரப்பு தகவல்...


https://youtu.be/IYLRwTD2Iq8

Subscribe The Channel For More News...

உடல்சூடு தணிக்கும் நார்த்தம்பழம்...


நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும் குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது.

இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும். இவற்றில் நீர் நிரம்பியிருக்கும்.

புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும்கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது.

நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் பயன்கொண்டவை. செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்:

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள்,கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அசு(ஸ்)கார்பிக் அமிலம், அலனைன்,நியசின்,வைட்டமின் பி, அசு(ஸ்)பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது.

மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது.

நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம். ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசி தூண்டுவி, தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம்.

உடல் சூடு தணியும்...

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற...

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடு பட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம்பழச் சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்...

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச் சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு கரண்டி தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால் கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்

நார‌த்த‌ங்கா‌ய் இலைகைளை நர‌ம்பு ‌நீ‌க்‌கி ந‌ல்லெ‌ண்ணெ‌ய் ‌வி‌ட்டு வத‌க்‌கி, அதனுட‌ன் வெ‌ள்ளை உளு‌ந்த‌ம் பரு‌ப்பு, கடலை‌ப் பரு‌ப்பு, தே‌ங்கா‌ய் துருவ‌ல் வறு‌த்து சே‌ர்‌த்து ‌மிளகா‌ய், உ‌ப்பு, பு‌ளி, பெரு‌ங்காய‌ம், க‌றிவே‌ப்‌பிலையு‌ம் சே‌ர்‌த்து துவையலாக அரை‌த்து சாத‌த்துட‌ன் ‌பிசை‌ந்து சா‌ப்‌பிடலா‌ம்.

இ‌ப்படி சா‌ப்‌பி‌ட்டு வர ‌பி‌த்த‌ம் குறையு‌ம். க‌ர்‌ப்ப கால‌த்‌தி‌ல் ஏ‌ற்படு‌ம் நா சுவை‌யி‌ன்மை, கும‌ட்ட‌ல், வா‌ந்‌தி ‌நி‌ற்கு‌ம். ப‌யி‌‌ன்‌மை குறை‌ந்து ந‌ன்கு ப‌சி‌க்கு‌ம். பொதுவாக உணவுட‌ன் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் சே‌ர்‌த்து‌க் கொ‌ண்டா‌ல் செ‌ரியாமை ‌பிர‌‌ச்‌சினை வரவே வராது.

சா‌ப்‌பி‌ட்டது‌ம் ஏ‌ப்ப‌ம் வ‌ந்து கொ‌ண்டிரு‌ந்தாலு‌ம்,செரிமானம் நெடுநேர‌ம் ஆனாலு‌ம் நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகாயை சா‌ப்‌பி‌ட்டா‌ல் உடனடி பல‌ன் ‌கி‌ட்டு‌ம். வ‌யி‌ற்‌றி‌ல் வாயு‌ப் ‌பிர‌ச்‌சினை ஏ‌ற்படு‌ம் ‌நிலை‌யி‌ல் ஒரு ஊறுகா‌ய் து‌ண்டை எடு‌த்து வா‌யி‌ல் போ‌ட்டு மெ‌ன்று ‌தி‌‌ன்றால் வாயு‌க் கோளாறு ‌விரை‌வி‌ல் ‌நீ‌ங்கு‌ம்.

வ‌யி‌ற்‌றி‌ல் ஏ‌ற்ப‌ட்ட பு‌ண்‌ணி‌ற்கு நா‌ர்‌த்த‌ங்கா‌ய் ஊறுகா‌ய் ந‌ல்ல மரு‌ந்தாக அமை‌கிறது. நா‌ர‌த்த‌ங்காயை வ‌ட்ட வ‌ட்டமா‌ய் நறு‌க்‌கி உ‌ப்பு சே‌ர்‌த்து ஒரு ம‌ண் பானை‌யி‌ல் இ‌ட்டு வாயை து‌ணியா‌ல் மூடி ‌விடவு‌ம். இதனை அ‌வ்வ‌ப்போது வெ‌‌யி‌லி‌ல் உல‌ர்‌த்‌தி வரவு‌ம்.

இ‌ப்படி 40 நா‌ட்க‌ள் செ‌ய்து ‌பிறகு அ‌தி‌ல் இரு‌ந்து ‌தினமு‌ம் ஒரு து‌ண்டை எடு‌த்து காலை‌யிலு‌ம், மாலை‌யிலு‌ம் சா‌ப்‌பி‌ட்டு வர வ‌யி‌ற்று‌ப் பு‌ண் குணமாகு‌ம். நார‌த்த‌ங்காயை அ‌ல்லது பழ‌த்தை எ‌ந்த வடிவ‌த்‌திலாவது உண‌வி‌ல் சே‌ர்‌த்து வர ர‌த்த‌ம் சு‌த்தமடையு‌ம். வாத‌ம், கு‌ன்ம‌ம் (வ‌யி‌ற்று‌ப் பு‌ண்), வ‌யி‌ற்று‌ப் புழு இவை ‌நீ‌ங்கு‌ம்.

ப‌சியை அ‌திக‌ரி‌க்கு‌ம். நார‌த்தை பழ‌த்‌தி‌ன் மே‌ல் தோலை தே‌ன் அ‌ல்லது ச‌ர்‌க்கரை‌ப் பா‌கி‌ல் ஊற வை‌த்து ந‌ன்கு ஊ‌றிய ‌பி‌ன் ‌சீத‌க் க‌ழி‌ச்ச‌ல் உடையவ‌ர்களு‌க்கு கொடு‌க்க ந‌ல்ல பல‌ன் தரு‌ம். நார‌த்தை பழ‌த்தை சாறு ‌பி‌ழி‌ந்து குடி‌த்து வர உட‌ல் வெ‌ப்ப‌த்தை போ‌க்‌கி கு‌ளி‌ர்‌ச்‌சி தரு‌ம். வா‌ந்‌தியையு‌ம், தாக‌த்தையு‌ம் த‌ணி‌க்கு‌ம்...

ஒவ்வொரு மனிதனும் கேட்க வேண்டிய ஆன்மீக பாடல்...


https://youtu.be/z6R4lMzVJNI

Subscribe The Channel For More News...

செர்னோபில் அணுஉலை விபத்து நடந்து 33ஆம் ஆண்டு நினைவு அஞ்சலிகள்...


வல்லாதிக்கநாடு ரஷ்யாவால் கூட அந்த அணு உலை விபத்தில் இருந்து மக்களை மீட்க முடியவில்லை. மீட்க பயன்படுத்தப்பட்ட அனைத்து பொருட்களும் இன்னும் கதிர்வீச்சின் பாதிப்பால் ஒன்னும் செய்யமுடியாமல் அப்படியே உள்ளது.

வாலியால் எண்ணெய் அள்ளிய உங்களை நினைத்து தான் பயமாக உள்ளது.

குறிப்பு: செர்னோபில் அணுவுலையில் என்ன திட்டத்தில் செயல்படுகிறதோ அது போன்று தான் கூடங்குளம் அணுஉலை செயல்படுகிறது...

குழந்தைகளை கேன்சர் நோயிலிருந்து காப்பாற்றுவோம்...


ஆற்றுநீர் வாதம் போக்கும். அருவி நீர் பித்தம் போக்கும். சோற்று நீர் இரண்டையும் போக்கும்...


மனிதர்களுக்கு ஏற்படக் கூடிய அனைத்து நோய்களுக்கும் அடிப்படையாக விளங்குவது வாதம், பித்தம், கபம் என்ற மூன்றுமே ஆகும்.
இவற்றுள் வாதம், பித்தம் தொடர்பாக ஏற்படும்Vநோய்களைப் போக்கும் வழிமுறைகளை இப்பழமொழி விளக்குகின்றது.

ஆற்று நீரிலும், அருவி நீரிலும் உயர்ந்த தாதுப் பொருட்களும், மூலிகைச் சத்துக்களும், நிறைந்து காணப்படும். ஏனெனில், ஆற்றுப் படுகையிலும், அருவிக்கு நீர் வரும் மலைப் பகுதியிலும் மூலிகைச் செடிகள் நிறைந்து காணப்படும்.

மூலிகைகளின் மீது பட்டு இந்நீர் வருவதால் இத்தகைய குணமுடையதாக உள்ளது. வாதநோய் தொடர்பாக நரம்புக் கோளாறுகளும், பித்தநோய் தொடர்பாக
மூளைக் கோளாறும் ஏற்படுகின்றன.

இவற்றைக் குணப்படுத்த ஆற்று நீரும், அருவி நீரும் பயன்படுகின்றன. வாதம், பித்தம் இரண்டையும் சோற்று நீர் குணமாக்குகின்றது.

இத்தகைய மருத்துவகுணம் கருதியே
நாட்டுப்புற மக்கள் காலையில் எழுந்ததும் பழைய சோற்று நீரை அருந்துகின்றனர்.

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக்
கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி செய்தார்கள்...

அந்த ஆராய்ச்சி முடிந்து வந்த
ஆய்வறிக்கையை பார்த்து விட்டு அவர்கள் சொன்னது என்ன தெரியுமா?

தென்னிந்தியர்கள் மனிதர்கள் அல்ல... அவர்கள் கடவுள்களாகத் தான் இருக்க வேண்டும்....

அதாவது பழைய சோறு... அந்த உணவு,

1.உடலில் நோய் எதிர்ப்பு சக்தி
அதிகரிக்கிறது.
2.வெள்ளை அணுக்கள் அதிகரிக்கிறது.
3.உடல் சோர்வை போக்குகிறது.
4.உடலில் உள்ள அனுச்சிதைவுகளை
தடுக்கிறது.
5.உடல் சூட்டை தணிக்கிறது.
6.வயிற்றிலுள்ள பழைய கழிவுகளை
விரைந்து வெளியேற்றுகிறது.
7.உற்சாகமான மனநிலையைத் தருகிறது.
8.வெயில் காலங்களில் மட்டுமல்ல அனைத்து நாட்களிலும் சாப்பிடுவதற்கேற்ற அருமையான உணவு பழைய சோறு.

என்று பலவிதமான நன்மைகளைப்
பட்டியலிட்டனர்… இந்த ஆராய்ச்சி முடிவுகள் வெளி வந்ததும் HOW to MAKE PALAYA SORU?... என்று அமெரிக்கர்கள் இந்திய நண்பர்களிடமும் இணையத்திலும் கேள்வி கேட்க ஆரம்பித்து விட்டனர்….

ஆனால் நாம் தான் இதை திண்ணால் சளி பிடிக்கும், உடல் குண்டாகி விடும்
என்றெல்லாம் சொல்லி இன்றைக்கு
பழையதை பழித்து வருகிறோம். அது பெரிய தவறு…

சரி...பழைய சோற்றை எப்படி செய்வது?

1. நாம் சாப்பிட்டு மீதம் உள்ள சாதத்தில்
சுமார் ஒரு மணிநேரம் கழித்து தேவையான அளவு தண்ணீரை ஊற்றி மூடிவைத்து 6 முதல் 8 மணிநேரம் கழித்து திறந்து பார்த்தால் அமிர்த பானம் தயார்..

2. இதில் தேவையான அளவு சாதத்தை ஒரு மண்சட்டியில் எடுத்து அதனுடன் தயிர் கலந்து சின்னவெங்காயம், வெண்டைக்காய் ஆகிய வற்றையும் சிறிது சிறிதாக வெட்டிப்போட்டு, தேவைப்பட்டால் சிறுது உப்பையும் ஒரு பச்சை மிளகாவையும் கலந்து நன்றாக பிசைந்து சாப்பிட்டு பாருங்கள்….

ஆகா… இதுதான் தேவாமிர்தம் என்பதை
நீங்களே ஒப்புக்கொள்வீர்கள்….

இந்த உணவு முறையை வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமாவது கடைபிடியுங்கள்.

பாற்கடலை கடைந்து அமிர்தம் எடுத்தவர்கள் தேவர்கள்…….

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்..

இனியாவது குப்பை உணவான பர்கரையும், பீட்சாவையும், புரோட்டவையும் தேடி அலைவதை நிறுத்துவோம்... உடல் நலத்தை
பேணுவோம்...

7 குண்டலினி சக்கரா விழிப்படையச் செய்யும் தியான காணொளி...


 https://youtu.be/zduvjx47utg

Subscribe The Channel For More Videos...