17/07/2020

கோல்டன் ரேஷியோ... இயற்கையின் கணிதம்...



உங்களுக்கு golden ratio என்பதை பற்றி தெரியுமா?

Fibonacci number...?

இவை நம்மை சுற்றி இயற்கையில்.. இயற்கையாகவே அமைந்து உள்ள ஒரு அதிசய கணிதம்..

இவைகள் என்னவென்பதை பற்றி இன்று பார்ப்போம்..

உங்களுக்கு "pi " என்பதை பற்றி தெரிந்திருக்கும்.. அதாவது.. அந்த 3.14....
ஆனால் "phi" பற்றி தெரியுமா?

இது கிரேக்க எழுத்துக்களில் 21 வது எழுத்து. கணிதத்தில் இதுதான் " கோல்டன் ரேஷியோ" காண சிம்பல்.

ஒரு பெரிய கோட்டை இரண்டாக பிரிக்கிறீர்கள்.. சரிபாதியாக அல்ல ஒன்னு பெரிது ஒன்னு சின்னதாக... இப்போது அந்த பெரிய கோட்டை சின்ன கோட்டை கொண்டு வகுத்தால் வரும் என் இருக்கிறதே.. அது அந்த கோட்டின் மொத்த நீளத்தை பெரிய கோடை கொண்டு வகுத்தால் வரும் எண்ணுக்கு சமமாக இருப்பதை ... அந்த விகிதாசாரதைதான் Golden ratio  என்கிறார்கள்.

கோல்டன் ரேஸ்யோவை  குறிக்க phi யை பயன் படுத்த காரணம்.. முன்பு சொன்ன அந்த விகிதாச்சாரம் phi இன் மதிப்பாகிய 1.6 க்கு நெருக்கமாக இருப்பது தான்.

இந்த phi ஆர்வலர்கள் ஆய்வாளர்கள்
அந்த காலத்தில் கட்டபட்ட.. மர்மம் நிறைந்த கட்டிடமான  பிரமிட்.. இந்த கோல்டன் ரேஷியோ படி கட்ட பட்டுள்ளதை கவனித்தார்கள்.  க்ரேட் பிரமிடு கிசா இருக்கிறதே அதன் ஓவொரு பக்கத்திலும் அதன் நீளம் 786 அடி. மேலும் அதன் உயரம் 481 அடி.. அதாவது  இவை இரண்டுக்கும் உள்ள விகிதம் 1.57  .அதாவது phi யின் மதிப்புக்கு மிக நெருக்கமாய்.

இப்படி பிரமிடுகளில் மட்டும் அல்லாமல் பழைய கட்டிடங்கள் பல வற்றில் இந்த கோல்டன் ரேஸ்யோ பயன்படுத்த பட்டிருப்பதை கவனிதார்கள்.

பிபோனாச்சி நம்பர் என்பதை நீங்கள் கேள்வி பட்டிருப்பீர்கள்.

1200 களில் லியனார்டோ பிபோனச்சி
என்ற கனிதவியலாளரால் இது கண்டுபிடிக்க பட்டது.


அதாவது 0,1,1,2,3,5,8,13,21,34, இப்படி எழுதுவது தான் பிபோநாச்சி நம்பர்..

இதில் உள்ள சிறப்பு என்ன என்று கவனித்தால் எந்த ஒரு நம்பரும் அதற்கு முந்தய இரு நம்பர்களின் கூட்டு தொகையாக இருக்கும்.

இந்த எண்களின் மாறும் விகிதம் தான் கோல்டன் ரேஷியோ.... இது phi மதிப்பிற்கு நெருக்கமாக உள்ளது.. அதிலும் எண்கள் பெரிதாக பெரிதாக phi மதிப்பாகிய 1.618 ஐ அதிகம் நெருங்குகிறது.

உதாரணமாக 3 கும்5 கும் இடையிலான விகிதம் 1.666 ஆனால் 13 க்கும் 21 க்கும் இடையிலான விகிதம் 1.625... இன்னும் பெரிய என்னானால்... 144 கும் 233 கும் பார்த்தால் 1.618 இப்படி....

லியர்னடோ டாவின்ஸி தான் வரைந்த ஓவியங்களில் இந்த கோல்டன் ரேஷியோ சமாச்சாரத்தை பயன்படுத்தி இருக்கிறார்.

அவரது லாஸ்ட் சப்பர் ஓவியத்தில் இயேசு தனது சீடர்களுடன் உணவு உண்ணும் காட்சியில் உள்ள மேஜை மற்றும் சில பொருட்களில் இந்த விகிதாச்சாரத்தை பயன்படுத்தி வரையப்பட்டுள்ளது. அவரது மோனோலிசா ஓவியம் கூட இதை பயன் படுத்தி வரைய பட்டது தான்.

இதை மனிதன் பயன்படுத்தி இருக்கிறான் என்பதை இவ்வளவு நேரம் நான் சொன்னது இல்லை ஆச்சர்யம்..
இனி சொல்ல போவது தான் ஆச்சர்யம்..

 இயற்கை தனது படைப்பில் இதை தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது.
ஒரு சூரிய காந்தி பூவில் மையத்தில் சுருள் சுருளாக  இருக்கிறதே அந்த டிசைன் அதை உற்று கவனித்தால் கோல்டன் ரேஷ்யோ படி அமைந்துள்ளதை கவனிக்கலாம்..

ஒரு மரத்தில் கிளைகள் அதில் இலைகள் எப்படி எந்த எண்ணிக்கையில் படி படியாக வளர்கிறது என்று பார்த்தால் இந்த விகிதம் தான்.

தாவரத்தில் மட்டும் அல்ல ஒரு நத்தையின் ஓடு இந்த விகித அடிப்படையில் தான் சுருளாக இருக்கிறது.. விலங்குகளின் உடலமைப்பை கவனித்தால் இந்த விகிதம் இருக்கிறது.

அவ்வளவு ஏன் மனிதனின் கைகள் மற்றும் விரல்கள் இந்த விகிதத்தில் தான் அமைந்துள்ளது என்றால் பார்த்து கொள்ளலாம்.

இப்போது இனொன்று சொல்கிறேன் இயற்கை உயிரினங்களில் மட்டும் இல்லை .. பல இயற்கை ஆற்றல்களில்.. படைப்புகளில் இதை வெளிப்படுத்துகிறது.. என்பது இன்னும் ஆச்சரியமானது.

சூறாவளி ஏற்படும் போது அதன் சுழல் கவனித்தால் இந்த விகிதத்தை பார்க்கலாம்..

கடல் அலையை கவனித்தால் இந்த கோல்டன் ரேஷியோ சமாச்சாரத்தை பார்க்கலாம்.

இன்னும் எங்கெங்கே இயற்கை இதை பயன் படுத்துகிறது என்பதை ஆராய மனிதன் சிரிதினும் சிறிதான DNA சுருளை ஆராய்ந்து பார்க்க அந்த சுருளே இந்த விகிதத்தில் தான்  அமைந்துள்ளது என்பதை பார்த்து அதிசையித்தான்..

பிறகு பெரிதினும் பெரிதான கேலக்சிகளை அதன் சுருள் அமைப்பை ஆராய்ந்த மனிதன் இந்த பிரபஞ்சமே அந்த கோல்டன் ரேஷியோ வை பயன்படுத்தி அமைந்துள்ளதை கண்டு மேலும் அதிசயித்து போனான்..

இந்த பிரபஞ்சம் அறிவியலால் ஆனது என்று எப்போதும் சொல்லி வந்துள்ளோம்..

ஆனால் அது நாணயத்தின் ஒரு பக்கம் தான் அதன் அடுத்த பக்கத்தில் பிரபஞ்சம் முழுக்க.. முழுக்க கனிததால் ஆனது என்ற அதிசயத்தை வியந்து நோக்கி இன்றைய கட்டுரையை நிறைவு செய்கிறேன்...

தெலுங்கு திமுக ஸ்டாலின் பிராடு அரசியல்...



மறைந்த நாவலர் நெடுஞ்செழியனின் உடலை அண்ணா உடல் அருகே அடக்கம் செய்ய வேண்டும் என்ற அம்மாவின் வேண்டுகோளை ஏற்க மறுத்தது திமுக...

அப்போது சென்னை மேயரான ஸ்டாலின் நாவலருக்கு இரங்கல் கூட வாசிக்கவில்லை..

ஆனால் இப்போது அவர் பெயரை வைத்து அரசியல் செய்கிறார்...

நீங்க எப்படி வந்தாலும் நோட்டாவுக்கு மட்டும் தான் டா போட்டி...


சிபிஐ காவல் முடிவு.. 4 போலீசார் சிறையிலடைப்பு.. சரி பிரண்ஸ் ஆப் போலீஸ் எங்கே..?


காவலர் முத்துராஜுக்கு விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைவதால் அவரை, மீண்டும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவு

சாத்தான்குளம் இரட்டைக் கொலையில் தொடர்புடைய போலீஸ் கைதிகள் 5 பேர் 2 நாட்கள் சிபிஐ காவல் முடிந்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், காவலர் முத்துராஜ் நீங்கலாக  4 போலீசாரை ஜூலை 30 வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

'சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் இரட்டை கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்ட ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட 5 போலீசாரை, சிபிஐ அதிகாரிகள் 2 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்தனர்.

முதற்கட்டமாக தந்தை, மகனை கைது செய்த காவலர் முத்துராஜை சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரணை நடத்திய அதிகாரிகள், தொடர்ந்து புதன்கிழமை இரவு 5 பேரையுமே சாத்தான்குளத்தில் சம்பவ இடங்களுக்கு நேரில் அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது எழுத்தர் பியூலாவிடமும் விசாரணை நடத்தப்பட்டதோடு, வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் தலைமை காவலர் ரேவதியும் வாக்குமூலம் அளித்தார்.

இதையடுத்து போலீஸ் கைதிகளுடன் மதுரை திரும்பிய அதிகாரிகள், ஆத்திகுளம் சிபிஐ அலுவலகத்தில் 3வது நாளாக விசாரணை மேற்கொண்டனர்.

5 பேரிடமும் தனித்தனியாக வாக்குமூலம் பெறப்பட்டு வீடியோ பதிவு செய்யப்பட்டது. மேலும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு சேகரிக்கப்பட்ட தடயங்கள் ஆய்வு செய்யப்பட்டு ஆவணப்படுத்தப்பட்டன. இதையடுத்து 5 பேரையும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதனைக்கு உட்படுத்திய சிபிஐ அதிகாரிகள், பரிசோதனை முடிந்து மதுரை தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி ஹேமானந்த குமார் முன்பு ஆஜர்படுத்தினர்.

தொடர்ந்து காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன் ஆகிய 4 பேரையும் ஜூலை 30ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க உத்தரவிட்ட நீதிபதி, காவலர் முத்துராஜுக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட நீதிமன்ற காவல் நாளையுடன் முடிவடைவதால் அவரை, மீண்டும் நாளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டார். இதையடுத்து 5 போலீசாரும் மதுரை மத்திய சிறைக்கு அழைத்து செல்லப்பட்டு சிறையிலடைப்பட்டனர்...

குறிப்பு : பாஜக வின் சேவா பாரத் மூலம் நியமிக்கப்பட்ட பிரண்ஸ் ஆப் போலீஸ் சை இதுவரை கைது செய்யாமல்... அவர்களை தப்ப வைக்கிறது சிபிஐ...

மணிப்பூர் பாஜக முதல்வரின் மிரட்டலுக்கு அடிபணியாததற்கு பாராட்டுக்கள்...


இதுவல்லவோ மனிதாபிமானம்...



இந்திய தொழிலாளியின் 1.60 கோடி சிகிச்சை கட்டணத்தை தள்ளுபடி செய்த துபாய் மருத்துவமனை...

மருத்துவமனை கட்டணம் கட்டவில்லை என்றால் சடலத்தை தர மறுப்பதும், பணம் இல்லாத காரணத்தால் வயதான ஒருவரை மருத்துவமனை கட்டிலில் கயிறால் கட்டி வைப்பதும், என இரக்கமற்ற தனியார் மருத்துவமனைகளுக்கு மத்தியில்,
துபாயில் உள்ள ஒரு மருத்துவமனையானது அமீரகத்தில் பணிபுரிந்து வந்த இந்தியாவை சேர்ந்த ஒரு கட்டிட தொழிலாளியின் சிகிச்சை கட்டணமான 762,000 திர்ஹமுக்கும் அதிகமான தொகையை (இந்திய மதிப்பில் 1.6 ) கோடி தள்ளுபடி செய்த நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நடந்தேறியுள்ளது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த ராஜேஷ் லிங்கையா ஒட்னாலா என்ற 42 வயதுடைய நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு, கடந்த ஏப்ரல் மாதம் 23 அன்று துபாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு 80 நாட்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததன் பலனாக அவர் கொரோனாவிற்கான நெகடிவ் முடிவை பெற்றிருக்கிறார். அதனை தொடர்ந்து, அவரது குடும்பத்தினர் அவரை இந்தியாவிற்கு திரும்பி வருமாறு அழைத்துள்ளனர்.

இந்நிலையில், அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்காக 762,555 திர்ஹம் கட்டணம் செலுத்த வேண்டும் என மருத்துவமனை ரசீது வந்துள்ளது. ஆனால், ராஜேஷினால் அவ்வளவு பெரிய தொகையை மருத்துவமனைக்கு செலுத்தும் அளவிற்கு அவரது நிதி நிலைமை இல்லை.

ராஜேஷின் நிலைமையை அறிந்த வளைகுடா தொழிலாளர் பாதுகாப்பு சங்கத்தினர், அவரின் இக்கட்டான நிலைமையை துபாயில் இருக்கும் இந்திய துணை தூதரகத்திற்கு தெரியப்படுத்தியுள்ளனர். அதனை தொடர்ந்து, இந்திய துணைத்தூதரகம் இதில் தலையிட்டு ராஜேஷிற்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான கட்டணத்தை மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்யுமாறு மருத்துவமனைக்கு கடிதம் அனுப்பியுள்ளது.

அந்த கடிதத்தில் “சமீபத்திய மருத்துவ அறிக்கைகளின்படி, ராஜேஷ் கொரோனாவிற்கு எதிர்மறையாகவும், மருத்துவமனையில் இருந்து வெளியேறும் நிலையிலும் இருக்கிறார் என்பதை நாங்கள் புரிந்துகொள்கிறோம். அவரது குடும்பத்தினர் அவரை விரைவில் இந்தியாவுக்கு திருப்பி அனுப்புமாறு கோருகின்றனர். மேலும் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டதற்கான கட்டணத்தை செலுத்தும் அளவுக்கு அவர்களின் நிதி நிலைமை இல்லை, தாங்கள் இந்த உதவியை செய்தால் மிக்க பேருதவியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

கடிதம் அனுப்பப்பட்டதை தொடர்ந்து, ராஜேஷிற்கு சிகிச்சை அளித்த மருத்துவமனையானது தூதரகத்தின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு அவரின் சிகிச்சைக்கான மொத்த கட்டணத்தையும் தள்ளுபடி செய்துள்ளது.

இது குறித்து துபாயில் இருக்கும் இந்திய துணை தூதரக அதிகாரி நீரஜ் அகர்வால் “இந்த மாபெரும் தொகையை தள்ளுபடி செய்து அவரை மீண்டும் இந்தியாவுக்கு செல்ல அனுமதித்த மனிதாபிமான செயலுக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்” என்று தெரிவித்துள்ளார்.

அதனை தொடர்ந்து, தூதரகம் அவருக்கு ஏர் இந்தியா எக்ஸ்பிரஸில் செல்ல அசோக் கோடெச்சா என்ற நபர் துபாயில் இருந்து ஹைதராபாத்திற்கு ராஜேஷ் மற்றும் அவரது துணை தியாவரா கன்கையாவுக்கு இலவச விமான டிக்கெட்டுகளை வழங்கினார் மற்றும் அவர்களின் செலவுகளுக்கு மேலும் ரூ .10,000 செலுத்தி ஜூலை 14 ம் தேதி அவரை சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது...

கூட்டுறவு வங்கிகளில் எந்தவித கடனும் கிடையாது...


அமிதாபச்சன் கொரோனாவும் தடுப்பூசி அரசியலும்...


வேசி ஊடகங்கள் மறைக்கும் தூத்துக்குடி போராட்டம்...


அங்கிட்டு தேடி போங்கடா சங்கிகளா...🤣🤣🤣