09/03/2021

பேய்கள் பற்றிய பல உண்மைகள்...

 


மனிதனாகப் பிறந்தால் எல்லாருக்குமே பொதுவாக பேய்களை பற்றி ஒரு திகில் இருக்கும். பேய்களை பற்றி பேசினாலே கண்களை மூடிக் கொள்பவர்கள் நிறையப் பேர்.

பயமில்லாதது போல் காட்டிக் கொண்டு, பயந்தாங்கொள்ளியாக வீரவேஷம் போடுபவர்கள் பலபேர்.

எனவே பயப்படாமல், ஜாலியாக பேய்களை பற்றி சில சுவாரஸ்யமான தகவல்கள் தெரிஞ்சிக்கலாமா?

பேய்கள் உறங்குவதில்லை. தங்கள் சாவுக்கான நீதி கிடைக்கும் வரை அலைந்தபடியே இருக்குமாம்.

பேய்கள் அல்லது ஆவிகள் தங்களை வெளிக்காட்டிக் கொள்ளவே விரும்பும். எனவே தான் அறைகளில் நறுமணம் அல்லது வெளிர் நிற புகைகளை பனிமூட்டங்களை பரப்புகின்றன.

பூனைகளால் தெளிவாக பேய்கள் அல்லது ஆவிகளை காணமுடியும். உங்கள் வீட்டு பூனை வானத்தையே அசையாமல் பார்த்துக் கொண்டு இருந்தால் ஏதோ ஒரு ஆவியை காண்கிறது என்று அர்த்தம்.

பேய்கள் அல்லது ஆவிகள் கூடுமானவரை ஆபத்தானவை அல்ல. விபத்து அல்லது கொலைகளினால் உண்டான பேய்கள் அல்லது ஆவிகளின் தோற்றம் மட்டும் தான் பயங்கரமானதாக இருக்கும்.

பூமியை விட்டு உறவுகளை விட்டு செல்ல விரும்பாதவ்ரகள் தான் கூடுமானவரை பேய்கள் அல்லது ஆவிகளாக சுற்றுவார்களாம்.

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்துபோன உடல்களை சுற்றியோ அல்லது சுடுகாட்டிலோ இருக்காது. எப்பவுமே கோவில்கள், ஆலயங்கள் என வழிபாட்டுத் தலங்களை அண்டியே சுற்றிய படி இருக்குமாம். சிலநேரம் பாழடைந்த கட்டடங்களை அண்டியும் இருக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகளுக்கு உணர்ச்சிகள் (feelings) உண்டு. ஆனால் உணர (sense) முடியாது.

பேய்கள் அல்லது ஆவிகள் தனக்கு நெருக்கமானவர்களுக்கு அல்லது தன் சாவுக்கு காரணமானவர்களுக்கு மட்டுமே தன்னை வெளிக்காட்டிக் கொள்ள முயற்சிக்கும்.

பேய்கள் அல்லது ஆவிகளால் கொலை செய்ய முடியாது. ஆனால் ஒருவன் தன்னைத்தானே கொலை செய்யும் அளவுக்கு தூண்டி விடும் சக்தி உண்டு.

பேய்கள் அல்லது ஆவிகளால் ஒரு மனித உடலில் புகுந்து மற்றொருவருடன் தகவல் தொடர்பு கொள்ள முடியும்.

பேய்கள் அல்லது ஆவிகள் இறந்து போனவரின் உடலை அடக்கம் செய்யும் வரை அவர்களை பற்றி யார் பேசிக் கொண்டு இருந்தாலும் அருகில் நின்று கேட்கும் குணம் உண்டு.

பேய்கள் அல்லது ஆவிகளை சாதாரணமாக் காணக் கூடியவர்களின் இரத்த பிரிவு (Blood Group) ‘O’ (+) அல்லது O’ (–) ஆக இருக்கும். மற்றவகை இரத்த பிரிவு உள்ளவர்களின் கண்களுக்கு தெரிவது அபூர்வம்.

குழந்தைகளாக இறந்து போயிருந்தால் பேய்கள் அல்லது ஆவிகள் தேவதைகள் என அழைக்கப்படுவார்கள்.

பேய்கள் பல்வேறு விதங்களில் மனிதர்களுடன் தொடர்பு கொள்ளுகின்றன.. கனவுகள், மர்ம குறியீடுகள், தானாக எழுதுவது, சத்தம், புகை, போன்ற பல்வேறுவகையான தந்திரங்களை பயன்படுத்துகின்றன.

பேய்களுக்கு வாசனை மோப்பசக்தி அதிகம். சில வாசனைகளை அவைகள் நுகர்ந்த்து அது பிடித்துவிட்டால் அங்கே தன்னை இருக்க வைக்க முயற்சிக்கும். சில வகை பெர்ஃபியூம் வாசனைகளும் ரொம்ப பிடிக்குமாம்.

பேய்களுக்கு நேரம் காலம் தெரியாது என்றாலும், நள்ளிரவு நேரங்களில் பகலை விட கூடுதலாக அலையும். எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், சத்தங்கள் இருந்தால் பேய்கள் வராது என்று நினைப்பவர்களும் உண்டு. ஆனால், பேய்களால் எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் வேகத்தையும், அதன் இயக்கத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவரும் சக்தி நிச்சயமாக உண்டு.

அமைதியான இடம், நிசப்த்தமான இடங்கள், நேரங்களில் திடீரென சத்தத்தை உண்டாக்கி திகிலூட்டுவது பேய்களுக்கு பிடித்த விடயம்.

பேய்கள் ஒளிக்கீற்று, அமானுஷ்யக் கோடுகள், மூடுபனி, புகார், கருநிழல், நிழலுக்குள் நிழல், மங்கலான தெரிவது, கரு உருவம், காற்றுத் தூசிகள், காற்று போன்றவைகள் மூலம் தங்களை வெளிப்படுத்துகின்றன. முழு உருவத்தையும் எப்பொழுதும் வெளிப்படுத்துவது இல்லை. ஆனால் சாத்தியம் உண்டு. சலங்கை சத்தம், பெண்குரல் சிரிப்பு போன்ற சினிமாவில் காண்பிக்க படுபவை கூடுமானவரை கற்பனையே.

கூட்டமாக வருபவர்களுக்கு பேய்கள் தன்னை வெளிப்படுத்த விரும்புவதில்லை. அதில் ஒரு ஆளை தேர்ந்தெடுத்து அவரை மட்டுமே பின்தொடர்ந்து செல்லும்.

பேய்கள் குழந்தைகள், அல்லது பெண்கள், ஆண்கள் உடலுக்குள் நுழைய முடியும். பேய்களுக்கு நிறை அதிகம் என்பதால் அவைகளுக்கு நிறைய சக்தி தேவை என்பதால் பிடிக்கப்பட்டவர்கள் அதிகமாக சாப்பிடுவார்கள். நிறைய சக்தியை உறிஞசி விடுவதால் பிடிக்கப்பட்டவர்கள் நாளடைவில் மெலிந்து போவார்கள்.

பேய்களுக்கு ஞபாக சக்தி அதிகம். வாழும் காலத்தில் நடந்த உணர்வுப் பூர்வமான விடயங்களை , சம்பவங்களை அடிக்கடி நினைத்து பார்க்குமாம். ஆனால், சாவுக்கு காரணமான சம்பவம் தான் அதிகம் நினைவில் நிற்கும். பழிவாங்கும் எண்ணம் ஏற்பட அதுவே காரணமாகும்.

குழந்தைகள், மிருகங்களால் பேய்களை அடையாளம் காணமுடியும். மிருகங்களின் மீதும் பேய்கள் இறங்கி அவைகளை தாறுமாறாக செயல்பட வைக்க முடியும்.

பேய்களுக்கு உதவி செய்யும் குணம் உண்டு. பல சந்தர்ப்பங்களில், குழந்தைகள் முதல் பெரியவர்களை காப்பாற்றி இருப்பதை நீங்களே கேள்விப்பட்டிருப்பீர்கள். பேய் பிடித்தவருக்கே பல சமயங்களில் உதவி செய்த சம்பவங்களும் உண்டு. அவர் குடும்பத்தினரை கூட ஆபத்துகளில் காப்பாற்றியிருக்கிறது. புதையல்கள், கொலைகளில் துப்புகளை கூட காட்டிக் கொடுத்தும் இருக்கின்றனவாம்.

இருப்பிடத்தை விட்டு வெளியே வராத பேய்களும் உண்டு. ஆனால், அந்த வழியாக யார் வந்தாலும் அவர்களை மட்டும் பயமுறுத்தி வேடிக்கை காட்டும் பழக்கம் பேய்களுக்கு உண்டாம்.

பேய்கள் இடம் பெயரும் பொழுது பயங்கர காற்று, காற்றுச்சுழல், நீர்நிலைகள் அதிருதல், சுழிகள் உண்டாகுதல், மரங்களை முறித்தல், கதவுகள் தானாக அடிபடுதல் போன்றவை ஏற்படுகின்றன...

திருட்டு திமுக...

 


நண்பனும் நானும்...

நான் என்னோட பள்ளி கால நண்பனுக்கு போன் பண்ணியிருந்தேன்.. 

என்னடா வேலை பாக்குறன்னு கேட்டேன்.. 

அவன் சொன்னான்.. நான் இப்போ ஒரு ஸ்பெஷல் புராஜக்ட் ல இருக்கேன்.. 

பேரு  "Aqua Thermal treatment of Ceramics, Aluminium and Steel under a constrained environment". 

ரொம்ப ஆச்சரியமா இருந்திச்சு.. பேசிட்டு வச்சோம்..

பேசி முடிச்ச அப்புறம் அவன் சொன்னதை யோசிச்சப்போ தான் தெரிஞ்சது..

நாதாரி... அவன் பொண்டாட்டி  கண்காணிப்புல பாத்திரம் விளக்குறதை அவ்வளவு அழகாக ஆங்கிலத்தில் சொல்லிருக்கான், பயபுள்ள..

😁😁😁

ஆண்களுக்கான விழிப்புணர்வு பதிவு 😁

 


எண்ணமின் அலைகளின் பயணம்...

நம் மனம் மூளையை மையமாக வைத்து பிரபஞ்சம் முழுக்க வியாபித்துள்ளது...

எனவே பிரபஞ்சமே மனம் என்பதால் நமக்கு வேண்டிய தகவலை எத்தனை கோடி ஒளி ஆண்டுகள் தொலைவில் இருந்தாலும் அடுத்த கனமே பெற முடியும்.

அப்படி பெற்று அதை ஆழ்மனம் சீர்படுத்தி மூளையின் வழியாக பிரபஞ்சத்தில் எண்ணமின் அலைகளாக வெளிப்படுத்தும்.

அந்த அலைகளின் மின் ஆற்றலை பொருத்து அதன் தூரம் நிர்ணயிக்கபடும்.

அதற்கு தேவையான ஆற்றல் தான் நாம் மூச்சு பயிற்சியின் மூலமும் தியானத்தின் மூலமும் பெறும் பிராண சக்தி.

அபரிமிதமான பிராண சக்தி உடைய சித்தர்கள் எது நினைத்தாலும் நடப்பதற்கு இதுவே காரணம்.

எனவே நாம் செய்ய வேண்டியது நமக்கு தேவையானதை பற்றி ஆழமாக சிந்தித்து வலிமையான அலைகளை வெளிபடுத்த வேண்டும்.

அப்படி செய்யும் போது அந்த அலைகள் அதற்கு ஒத்தவற்றை ஈர்ப்பு விசையின் உதவியுடன் நம்மிடம் கொண்டு வந்து சேர்க்கும்...

திமுக வுக்கு ஓட்டு போடுங்க நண்பா...

 


குடும்ப தலைவிக்கு 1000 ஓவா எங்க தலைவர் தருவார்...

எனக்கு கல்யாணம் ஆகல... பொண்டாட்டி இல்லனு...

தைரியமா பிராடுத்தனம் பண்ணுறீங்களா அய்யோக்கிய பயலுங்களா...

சிங்கிள் என்றைக்குமே சிங்கம் டா... 

10,000 கொடுத்தாலும் திமுக வுக்கு ஓட்டு போட மாட்டோம் போடா...

😏😏😝

ஆரிய திராவிட கலாட்டா 😁

 


கணவன் Vs மனைவி...

புருசன் மொபைல நோண்டிக்கிட்டும் பொண்டாட்டி சீரியல் பாத்துக்கிட்டும் வீட்ல வெட்டியா பொழுபோக்கிட்டு இருக்காங்க...

திடீர்னு மனைவிக்கு பளீர்னு ஒரு ஐடியா..

ஏங்க எனக்கு போரடிக்குது அந்த மொபைல கொஞ்சம் கீழ வைங்க.....

ஏண்டி எனக்கும் போரடிக்கணுமா....

அதில்லீங்க.. போரடிக்காம இருக்கறதுக்கு நாம ஒரு கேம் வெளயாடலாமா?

ஹைய்யா...நான் ரெடி....என்னா கேமு சொல்லு.....

இந்தா, இந்த பேப்பர்ல நான் எனக்குப் புடிச்ச அஞ்சு ஆம்பளைங்க பேர எழுதுறேன். நீங்க உங்களுக்குப் புடிச்ச அஞ்சு பொம்பளைங்க பேர இன்னோரு பேப்பர்ல எழுதுங்க...

சரி...

இந்தாங்க என்னோட லிஸ்டு.... உங்கள்த காட்டுங்க...

மனைவி லிஸ்ட்...

1. ரஜினிகாந்த் 

2. கமல்ஹாசன் 

3. அஜீத் 

4. விஜய் 

5. சூர்யா    

புருசனோட லிஸ்ட்...

1. மல்லிகா (கொழுந்தியாள்).

2. கமலா (பக்கத்து வீட்டுக்காரி).

3. ஷாலினி (பொண்டாட்டியோட பிரெண்டு).

4. லீனா (பையனோட க்ளாஸ் டீச்சர்).

5. லலிதா (பழைய காலேஜ்மேட்).

நீதி : பெண்கள் கனவில் வாழ்கிறார்கள். ஆண்கள் யதார்த்த உலகில் இருக்கிறார்கள்..

அடுத்த ஒரு வாரத்துக்கு புருசனுக்கு ஓட்டல்ல சாப்பாடு, திண்ணைல பாய்😂

கருப்பை வீணாகி விட்டிருந்தால்....

கர்ப்பப்பை கட்டிகள் :  பொதுவாக நிறைய பெண்களுக்கு முப்பத்தைந்து வயதிற்கு மேல் கர்ப்பப்பையில் கட்டிகள் தோன்றுகின்றன. முப்பத்தைந்து வயதிற்கு மேல் உள்ள நாறு பெண்களைச் சோதனை செய்து பார்த்தால் அதில் எண்பது சதம் பெண்களுக்குக் கருப்பையில் கட்டிகள் இருக்கும். இக் கட்டிகளில் இரு வகை உண்டு. பெண்களுக்கு மாதவிடாய் நிற்கும் காலத்திற்கு அறிகுறியாகத் தோன்றும் கட்டிகள்.

அடுத்தது புற்றுநோய் கட்டிகள் (Cancer Tumors). முதலில் கர்பப்பையில் வரும் சாதாரணக் கட்டிகளைப் பற்றிப் பார்ப்போம். இந்தக் கர்பப்பைக் கட்டிகளால் உயிருக்கு ஏதும் ஆபத்து இல்லை. இந்தக் கட்டிகள் பிற்காலத்தில் புற்றுநோயாகவும் மாறாது என்பது மனத்திற்கு ஆறுதல் தான்.

இக்கட்டிகள் வந்ததற்கான அறிகுறிகள் என்னவென்றால் உடலும் முகமும் ஊதிவிடும். ஒரு சிலருக்கு இக்கட்டிகள் இருந்தாலும் இந்த பாதிப்புகள் எதுவும் ஏற்படாது. அவர்கள் கட்டியிருந்தாலும் எப்பொழுதும் போலவே இருப்பார்கள். ஆனால் மேற் சொன்ன அறிகுறிகள் இருப்பவர்களுக்கு அக்கட்டிகளை அறுவை சிகிட்சை செய்து அகற்றி விடவே மருத்துவர்கள் ஆலோசனைத் தருகிறார்கள்.

மற்றபடி அந்தக் கட்டிகளைப் போக்க எந்த மருந்தும் இல்லை. சாதாரண வலி நிவாரணி மருந்துக்களைத் தான் மருத்துவர்கள் கொடுக்கிறார்கள். அந்த மருந்துகளால் அந்த நேரத்தில் அறுதலே தவிர முழு நிவாரணம் கிடைக்காது. அப்படிக் கட்டியிருந்து அறுவை சிகிட்சை மேற்கொண்டு கட்டிகளை எடுத்துவிட முடிவு செய்தால் அவசியமாக கர்பப்பையை நுட்பமாய்ச் சோதித்து (scan) செய்து பார்த்துவிட்டு அறுவை சிகிட்சைக்கு ஒப்புக்கொள்வது நல்லது.

காரணம், கருப்பையில் உள்ள கட்டிகளை மட்டும் எடுத்துவிட்டு கருப்பையை எடுக்காமலேயும் விட்டுவிடலாம். ஆனால் சில நேரங்களில் கட்டிகளால் கருப்பையும் அழற்சிக்குள்ளாகி விடுகிறது. அப்படி கருப்பை வீணாகி விட்டிருந்தால் கருப்பையையும் எழுத்துவிடுவே நல்லது.

ஏன் நுட்பமாய்ச் சோதித்து பார்க்கவேண்டும் என்றால் சாதாரண எதிரொலி வரைபடம் (Echo grafik) கருபப்பை அழற்ச்சி தெரியாது. அப்படி கவனிக்காமல் கட்டியை மட்டும் எடுத்துவிட்டு கருப்பையை விட்டுவிட்டால் மீண்டும் கட்டிகள் தோன்ற வாய்ப்பும் உள்ளது. அழற்சியான கருபப்பையால் வலியும் முழுமையாகப் போகாது. நுட்பமாய்ச் சோதித்து பார்த்து கருப்பை நன்றாக இருக்கிறது என்று நிச்சயமாகத் தெரிந்தால் கட்டியை மட்டும் அறுவை சிகிட்சையின் மூலம் எடுத்துவிடலாம்.

தவிர... கருப்பையில் புற்றுநோய் கட்டிகள் இருந்தால் எந்த வித தாமதமும் இன்றி உடனடியாக அறுவைசிகிட்சை மூலம் கருபப்பையை எடுத்துவிடுவதே உயிருக்கு ஆபத்தில்லாம் இருக்கலாம். கருப்பப்பையில் மட்டுமல்லாமல் பெண்களின் வயிற்றில் மற்ற இடத்திலும் இக்கட்டிகள் தோன்றுகிறது. இதனால் பெரிய பாதிப்பு எதுவும் வருவதில்லை. இக்கட்டிகள் வரக்காரணம்... பெண்களுக்குப் பலமுறை கருச்சிதைவு செய்திருந்தால் இந்தப் பிரட்சனைகள் வரலாம்.

ஆனால் இதை மட்டும் காரணம் என்றும் சொல்ல முடியாது. கல்யாணமே செய்துக் கொள்ளாமல் தனிமையில் இருக்கும் சில பெண்களுக்கும் இந்தக் கருப்பைக் கட்டிகள் தோன்றியிருக்கிறது. அதனால் இக்கட்டிகள் வர சரியான காரணத்தைச் சொல்ல முடிவதில்லை. இந்தப் பிரட்சனைகளில் இருந்து தப்பிக்க பெண்கள் தங்களின் முப்பது வயதிற்கு மேல் ஆறு மாதத்திற்கு ஒரு முறை அவசியம் மருத்துவரிடம் சென்று தன்னைப் பரிசோதித்துக் கொள்வதே சாலச்சிறந்தது...

மது விற்பனைக்கு எதிராக போராடிய பெண்ணை அடித்த காவல்துறைக்கு பதவி உயர்வு கொடுத்த அதிமுக எடப்பாடி சொல்லும் மகளிர் தின வாழ்த்து 😁